-
Posts
11188 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்
நிலாமதி replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய....... கணவர் 2019 ...2023 டுபாயில் ...எனவே அவர் காதலை தேடி குழந்தைகளுடன் வந்துள்ளார். 😃😃 -
கோவளம் வெளிச்ச வீடு (கோபுரம்)
-
இப்படி ஒரு காவடி தேவையா? இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது வலியால் துடிக்கும்போது பாடடைபோடு என்று கத்துவது கேட்க்கிறது.அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது. (பதிந்தவர்கள் கருத்திலிருந்து) பக்தி என்பது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வேண்டுவது .மற்றவர்களுக்கு நல்லதையே செய்வது. நேர்த்தி வைப்பது கடவுளுக்கு செய்வது, கொடுக்கல், வாங்கல்பிசினஸா?ஆண்டவன் ஆ டம்பரங்களைக் கேட்கவில்லை. மனிதனை மனித தன்மையோடு வாழு என்றுதான் கேட்க்கிறான் .ஊரிலொருகாலத்தில் நடந்தது நேர்த்தி வைத்தவர்களுக்கு மன வலைமை இருந்தது. காலம் மாறுகிறது .இது ஒருவகை மனித வதையாக தான் பார்க்கிறேன்(.எனதுகண்ணோட்ட்ம் மட்டுமே).
-
மனிதர் செய்வாய் வெள்ளிகளில் விரதம் இருப்பதில்லையா😃 அதுபோலத்தான்இதுவும்.விரதம் உடல் நலத்துக்கு தேவை.
- 1 reply
-
- 1
-
மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. இதன் இலை வெல்வெட் போன்று மிருதுவாகவும், நீர்ச்சத்து நிறைந்தும், தடிமனாகவும் காணப்படும். அரை அடி நீளமுள்ள, கனமான தண்டை நட்டு வைத்தாலே கற்பூரவல்லி எளிதாக வளர்ந்துவிடும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம், குறைவான தண்ணீர், சாதாரண தோட்ட மண்ணே போதுமானது. செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள் கற்பூரவல்லி இலையை சாதாரணமாக அப்படியே மென்று சாப்பிடலாம். இந்த இலையுடன் கல் உப்பு சேர்த்து கசக்கி சாறு பிழிந்து குடிக்கலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கியும் பருகலாம். தேனீக்களை தோட்டத்துக்கு வரவழைக்கும் செடிகள் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களையும், அதைச் சுற்றி ரீங்காரமிடும் தேனீ, பட்டுப்பூச்சிகளையும் பார்ப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த சூழலை உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் உண்டாக்கலாம். சூரியகாந்தி, டேலியா, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செம்பருத்தி, உன்னி செடி, நீல சம்பங்கி, பவளமல்லி, சிறுபுனைக்காலி, காசி தும்பை, அரளி, துலுக்க செவ்வந்தி, நீல முல்லி, பன்னீர் பூ, சீமையல்லி மற்றும் லாவண்டர் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றின் மணமும், இதில் உருவாகும் தேனும், தேனீ மற்றும் பட்டுப்பூச்சியை ஈர்க்கும் தன்மை கொண்டவை. நன்றி : தினத்தந்தி
- 1 reply
-
- 1
-
மிகவும் பயனுள்ள மருத்துவ பதிவுகளைத் தரும் கள உறவு ஜஸ்டின்க்கு பராட்டுக்களும் நன்றியும் உரித்தாகுக.
-
கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்.
-
மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். (கருத்துக் சொன்னவர்.) கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே! ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு.
-
திறமை எங்கிருப்பினும் பாரடட படவேண்டும்.
-
எழுத்துப் பிழை இளநீர் /செவ்விளநீர்😃
-
வயதான காலத்தில் பேச்சு துணைக்குதவும் பிள்ளைகள் .
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நிலாமதி replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
மனதை தொடட பதிவு. தாய் எந்த மன நிலையில் இருந்தாலும் பார்த்துக் கொள்ளும் பண்பான மகன். -
வேடிக்கைக்கு சொன்னேன். எனக்கும் சின்னவயதில் வால் பொரிச்ச மீன் இருந்தால் தான் சாப்பாடு இறங்கும்.
-
தாயகத்தில் தொடங்கிய பங்கு இறைச்சி புலத்திலும் தொடருது. அதிகமான ஊர்களில் இப்படித்தான் ஆட்டிறைச்சி பிரபலமானது பின்பு விலை அதிகரிக்க மாட்டிறைச்சியும்போட தொடங்கினார்கள். இதை வாங்கினால் ஆண்கள் இன்னொன்றும் வாங்குவார்களே நினைவிருக்கா? கொண்டாடுவதற்கு ... 😃
-
பிரியன் பொரித்த மீன் பிரியர் போல 😃
-
கந்தையா ஊரில் இருப்பவர்களுக்கு சொன்னாலும் விளங்காது அங்கேயுள்ள அனுபவம் படிப்பு இங்கு செல்லாது என்று எப்படி எடுத்துரைப்பது? எதோ எரிச்சலில் (தாங்களும்) வந்து விடுவோம் என்று எங்களை நினைக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் அங்கு குளிர் வெக்கை என்று நிராகரித்தவர் எல்லாம் இப்பொது வர நினைக்கிறார்கள். இங்கு பட்டுத் தெளிந்த அனுபவத்தை ,அறிவை எப்படி அவர்களுக்கு புரியவைப்பது. வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கம் என்று அல்லவா நினைக்கிறர்கள். வீணாக ஏஜெண்ட்க்கு காசு கட்டி ஏமாற்று படப் போகிறார்களே என் கவலையாக இருக்கு. கனடாவில் வேலைக்கு என் முக புத்தக விளம்பரம். ஏன் ஏஜென்ட்?ஒன்லைன் மூலம் தேடி விண்ணப்பியுங்களேன் .ஊரிலகடன்படடு முதல்போட்டு கஷ்டப்பட்டு , தொழில்பழகி வியாபாரம் செய்ய வழி தெரியவில்லை . கடன்பட்டு ஏஜென்ட் க்கு கடட விரும்புகிறார்கள்.இங்கு உள்ளவர்கள் தாண்டி வந்த கஷ்டம் புரிவதில்லை. இவர்களும் எல்லாம் சொல்வதில்லை.இதனால் ஏதும் சொல்லப்போனால் வீண் வம்பு வழக்குவரும் என்று "தெரியாது " இப்போது கடினம் .என்று ஒற்றை சொல்லில் சம்பாஷணையை முடிக்கிறார்கள்.
-
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கும் கலவரத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் என் அஞ்சலிகள். காலத்தால் மறக்க முடியாத "ஆடிக் கலவரம் " எனும் இந்நாளை மறக்க முடியாது.ஈழத்தமிழ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் என்பதை எல்லோர் மனங்களிலும் விதைத்த நாள்.
-
செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீ வந்து பாயுது காதினிலே – அங்கு எம் தமிழ் பாடையில் ஏறியுலால் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம்கோடிக்கணக்கில்சுருட்டிஅடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ் பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பல புரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள்பணத்தினைக்கொள்ளையடித்துத் தம்மக்கள்மருமக்கள்வாழ்வுபெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய்ஆங்கில மோகம்தனிலுழன்று முன்னைப்பெருமைகள்யாவுமழிந்து தன்மூப்பைத்தொலைத்த தமிழ் நாடு எம்தமிழ்நாட்டினைக்காத்திடுவோம்– அடஇன்னும்தயக்கமெதற்குஎன்றே முந்தைப் பெருமைகள் மீட்டெடுப்போமென முன்வருவோர் தமை ஆதரிப்போம். S. K. RAJAH வணக்கம் ஐயா தங்களின் நியாயமான கோபமும் புது யுகம் படைப்போம் என அழைக்கும் பாங்கும் மிகவும் பாராட்டத் தக்கது. மேலுள்ள வாறு எழுத்தின் அளவைக் குறைத்தால் வாசகருக்கு, படிக்க அழகாய் இருக்கும் என்பது என் பணிவான வேண்டுகோள் .
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நிலாமதி replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
அறுவடையைக் கண்ட போலித்தனமில்லாத மகிழ்ச்சி 😃 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிலாமதி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
எப்ப பார் ஒரே நித்தி (ரை) நினைப்புத்தான். 😃 -
ஒரு கோடி கொடுத்து பிரான்ஸ் வந்திறங்கிய தம்பி | நீங்களே பாருங்கோ **பிரான்ஸ்! மட்டுமல்ல எந்த நாட்டுக்கு தற்ச்சமயம் போனால் இதுதான் கதி கடுகதியாக மலையைபிரட்ட நினைத்தால்.... **இது உண்மை முந்தி வந்தவர்கள் பிளைச்சிட்டினம் இப்ப வருபவர்கள் பாவங்கள சொல்லி யாருக்கு விழங்கப்போகுது செவிடன் காதில ஊதிய சங்குதான் வந்து பட்ட்டும் **இந்த ஒரு கோடியை வைத்துக் கொண்டு ஊரில் ஒரு சுப்பர் மார்க்கட் போட்டு முதலாளி மாதிரி வாழ்ந்திருக்கலாம். ? ***உன்மைய்,சொன்னால் விலங்காது, வந்து அனுபவித்தால் தெரியும். பெண்களும் (அக்கா மாதிரி)" எங்கிருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் ...இவை காணொளி பார்த்தவர்கள் பதிந்தவை. இது சம்பந்த படடவர்கள் யாழ் களத்தில் உறுப்பினராக இருந்தால் என்னுடன் சண்டைக்குவரவேண்டாம். . குறிப்பு : இதிலுள்ளவை ஏனையோருக்கும் பயன்படக் கூடும் எனும் நல் நோக்கத்துக்காக பகிரப்படுகிறது. ஒருவருடைய தனிப்படட விடயம் அனுமதியின்றி பகிரப்படுவது தப்பு.இதை உரிமம் (லைசன்ஸ் ) இல்லாத "மீடியாக் காரர் " உணரவேண்டும்
-
முதலை மனிதரை விழுங்கிய து அந்தக் காலம். மனிதர் முதலையை பிடித்துஉணவாக்குவது இந்தக்காலம் கணக்கு சரி தானே ? 😀
-
நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இருக்கிறாயா? என்றார். திருமண வீடொன்றில் அண்ணா என் இலையி லும் பரிமாறினான். என் கணவன் என் மீது மிகுந்த கரிசனையோடு எல்லாமுமாய் இருந்தார். அறிவித்து விட்டு வீடுக்குக் குழந்தையை கொண்டு சென்றேன். அம்மா என் "செல்லம்" என்று கொஞ்சினார். அப்பா வந்து எட்டிப் பார்த்தார். அண்ணா ஓடிச்சென்று (கிலு கிலுப்பை ) பரிசுப்பொருள் வாங்கி வந்தான். பல வருடங்கள் கழிந்தன . இன்று ...அம்மாவை தொடர்ந்து அப்பவும்காலமாகி விட்டார். .அண்ணா திருமணமாகி அண்ணி குழந்தைகளோடு படடணம் போய் குடியமர்ந்து. விடடான். இன்று என்னுடன் எனக்கே எனக்காய் இருப்பவன் என் காதல் கணவனும் என் குழந்தைகளும். என்றும் நிலைத்து நிற்பது மாறாத காதல் (அன்பு) மட்டுமே.