Everything posted by நிலாமதி
-
"கல்லூரிக் காதல்"
பள்ளிக் காலங்களில் எத்தனையோ இளசுகளின் மனத்தில் ஆயிரம் காதல் பூத்திருக்கும் . போராடி வென்றதென்னவோ ஒரு சில தான். யாழ்ப்பாண கட்டுப்பாடான சமுதாய அமைப்பு , அந்தஸ்த்து வேற்றுமை என்பன மிக இறுக்கமாக இருந்த காலம் சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க படடது .
-
புது வரவு.
வணக்கம் வாருங்கோ ...தொடர்ந்து இருங்கள்.
-
வரும்"காலத்தை"வரவேற்போம்!
எல்லோருடைய நம்பிக்கையும் அதுவே . நன்றி
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
எங்கே சிலநாட்கள் காணவில்லை ...தாயகப்பயணம் போல ...
-
யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!
"சமூர்த்தி" கொடுப்பனவு எனும் பெயரில் மாத மதம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். விபரம் ஏராளனிடம் அறியலாம்.
-
யாரைத்தான் நம்புவதோ?
யாரைத்தான் நம்புவதோ ? நம்பி ஏமாந்த இனம் ...இனியாவது விடிவு பிறந்தால் நன்று .சமுக அக்கறையும் , இன விடுதலையும் கொண்ட ஒருவனை எங்கே காணப்போம்? நடைமுறை வாழ்வை எடுத்து சொன்ன கோபி அவர்களுக்கு நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கும், நந்தனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக…!
-
உருவப்படுமா?
எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு............ பிறந்த மண்ணில் வாழும் கொடுப்பினை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. வெளிநாடு வந்தோர் எதோ ஒன்றை இழந்தது போன்ற நினைவுகளுடன் தான் வாழ்கிறார்கள். தங்கள் மண்பற்று மனஉறுதி பாராடட படவேண்டியது. தொடர்ந்தும் அடிக்க கடி கிறுக்குங்கள். நன்றி
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அமெரிக்க நோக்கிப் பறந்தார் பஸ்ஸில் .............என்று வாசிச்சுபோடாதேங்கோ .... 😄😆😄
-
வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ??????
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
சற்று காற்று வாங்க வந்தேன் இந்தப்பக்கம். திருவாளர் பூட்டினர் மனநல வைத்ய சாலையில் அனுமதியாம். உண்மைத்தன்மை கண்டு செயலில் இறங்கவும்.😃 பாவம் தற்போதைய குழந்தை குஞ்சுகள்.
-
ஏறேறு சங்கிலி - T. கோபிசங்கர்
கள்ளுக்கு குடிப்பதற்கென்றே ஊருக்கு போகிற ஆட்களும் இருக்கினம்.😄 சுவாரசியமான நல்ல கதை. நல்ல அவதானம் .
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்
-
நமச்சிவாய வாழ்க
நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)
-
கருத்து படங்கள்
உடனுக்குடன் அன்றைய அரசியல் கண்ணோடட கருத்துப்படங்களை தரும் சிறீ ...பாராடட படத்தக்கவர் . நானும் சில சமயங்களில் தென்பட்டால் புள்ளடி ( விருப்பு குறி )போடுவதுண்டு .உண்மைதான் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட படங்கள் உடனே மனதில் பதிந்து விடும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று. இங்கு கனடாவுக்கு உண்மையான தாயக போர் சூழலில் அகப்பட்டு தப்பி வந்தவர்கள் பலருக்கு மனத்தாக்கம் இருந்தது பின் புறச்சூழல் மாற காலம் வலியை ஆற்றியது . தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பார்கள். கத்துவார்கள் பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும் எண்ணமே மனதை ஆற்றியது. பலர் மருத்துவ உதவியை நாடியது கேள்விப்பட்டு இருக்கிறேன். விமானத்தில் ஏறபயந்தவர்கள்பலர். .
-
பெண்ணாய் பிறந்து விடடால்....
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .
-
பஸ் பயணம்!
கவி வரிகள் மிக்க நன்று . மீண்டும் பள்ளிக்கு சென்ற நினைவுகள் இரைமீட்டிக் கொண்டன. தொடருங்கள். நன்றி
-
மனிதம் இன்னும் .....
அந்தளவுக்கு " ஷோ " கா ட்டும் பழக்கம் என்னிடம் இல்லை. இருப்பதில் பிடித்ததை கட்டிக்க கொள்வேன். வருடத்தில் ஒன்று ரெண்டு தடவைகள்தானே கலியாணங்கள் வரும். நெருங்கிய உறவினர் என்றால் மட்டும் புதிது எடுத்துக் கொள்வேன்.
-
இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம்
அட காலம் தான் எவ்வ்ளவு வேகமாக செல்கிறது .... நடந்தது நேற்று போல இருக்கிறது.
-
நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
அவர் வீட்டு (மன)நிலைமை கொதிநிலை போலும்......எங்கே தீர்ப்பது....?
-
மனிதம் இன்னும் .....
சாறி கசங்கி விடும் என்ற சுய நலம் தான். 😄
-
மனிதம் இன்னும் .....
மனிதம் இன்னும் ..... அண்மையில் சென்ற வெள்ளிக் கிழமை சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை கவனமாக நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு அவர் கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். மனைவி கைத்தடியுடன் நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட போது வயதான மனைவி என்னை ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார் . பெண்மணியும் வாருங்கள் உள்ளே செல்வோம் என அழைத்து, உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென்று பாதணியைக் கழற்ற வேண்டும் உதவி செய்கிறேன் என்றார் . அவரை இருத்தி (buckle )கழற்ற முற்படும்போது தனக்கு வெறுங் காலோடு நடக்கமுடியாது . காலுறைபோடவேண்டும் என்று கூறி கைப்பையில் இருந்த புதிய காலுறையை எடுத்தார். பரவாயில்லை தாருங்கள் என்று கூறி முழந்தாளிட்டு மெதுவாக காலுறையை மாட்டி விடடார். வயதானவர் நன்றி சொல்லி நிமிர்ந்த வேளை , ஒருவாறு தேடி காரை தரிப்பிடத்தில் விட்டு பதறியவாறு (மனைவி எங்கே என்று ) .வந்தவருக்கு அவருக்கு உதவி செய்யும் பெண்மணியை கண்டதும் திரும்ப திரும்ப நன்றி சொன்னார்.அவரும் பரவாயில்லை. பெரியவிடயமல்ல. என் தாய்க்கு செய்வதுண்டு என்றார் . தூரத்தே பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு, முன் பின் தெரியாத ஒருவருக்கு , பளபளக்கும் பட்டுச்சாரி கசங்கும் என எண்ணாது உதவி செய்தமை , " இன்னும் மனிதம் வாழ்கிறது "என எண்ணிக் கொண்டேன். .அந்த பெண்மணி நல்ல, பண்புள்ள உதவும் மனப்பான்மையுள்ள பெற்றவர்களால் வளர்க்க பட்டுள்ளார் என மனதார வாழ்த்திக்கொண்டேன். பெரியவர்களின் ஆசி என்றும் வாழவைக்கும். .
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நம்மள பார்த்து கற்றுக் கொள்ளனும்
-
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
ஏனோ திரைத்துறையினரின் குடும்ப வாழ்க்கை நிலைப்பதில்லை. குடும்பத்துக்காக நேரம் செலவிடாதது காரணமோ ?