Everything posted by நிலாமதி
-
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
நானும் கிரகணம் வெளிய போக கூடாது என்று இவருடன் வீட்டுக்குள் இருந்தோம். மணி மூன்ரே கால் ஆகியதும் மழை இருட்டுபோல தொடங்கியது சற்று நேரத்தில் வீதி விளக்கெல்லாம் ஒளிரத்தொடங்கியது ஜன்னலால் எட்டிப்பார்க்க ஒருத்தி போன் மூலம் படம் எடுகிறர் ".உம்மையெல்லோ வெளியில பார்க்க வேண்டாம்" என்று சொன்னனான் என்று ஏச்சு வாங்கினேன். சிலநிமிடங்கள் செல்ல மீண்டும் லைட் அணைந்து வெளிச்சமாகியது.
-
ஏப்ரல் 18ஆம் திகதி இலங்கையில் ‘முருங்கை தினம்’!
அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் முருங்கை செடியை நாட்டுமாறு அழைப்பு விடுக்கிறோம் , இது மிகவும் சத்தானது மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது என குறிப்பிட்டுள்ளார். முருங்கை எப்படி வளர்ப்பது? விதை போட்டு செடியாகவா அல்லது கிளை வைத்து தானே ? (பிள்ளையை அடித்து வளர்முருங்கையை ஒடித்து வளர்)ஒடித்து விடடால் அதிக கிளைவைக்கும் என எண்ணுகிறேன்.
-
மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும்.
-
சிரிக்கலாம் வாங்க
சிறு பிள்ளை வேளாண்மை போல
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நன்றாக இருக்கிறது பள்ளிக்கூட யூனிபோம் போல
-
சிறிய விடயம் தான் ஆனால்....?
எனது நண்பியொருவர் சென்ற வருடம் தாயகம் சென்று இருந்தார். அவரும் அவரது சகோதரியும் நெடுந்தீவுக்கு சென்ற பொது கடலில் கால் நனைத்து இருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின் காலில் சிறு தழும்பு ..அத்துடன் காய்ச்சலும் ஒருவாறு சமாளித்து கனடா வந்து விடடார். கால் வீங்க தொடக்கி விட்ட்து . வைத்திய சாலைக்கு சென்று போது டாக்டரின் முதல் கேள்வி கடலில் குளித்தீரா? என்பது .இவரும் ஆமென சொல்லவே ஒருவகை விஷ பூச்சி கடித்திருக்கிறது என்று சொல்ல ஆன்டி பயாடிக் பூச்சு மருந்து எல்லாம் கொடுக்க இரண்டு இடங்களில் தேசிக்காயளவு புண் ..கால் வீங்கி பாதம் வரை நடக்க முடியாமல் இருந்தார் .இரு நாட்களுக்கு ஒரு முறை வைத்ய சாலையில் மருந்து கட்டி மூன்று மாதங்கள் சென்றது குணமாக இன்றும் பெரிய தழும்பு குழி போன்று இருக்கிறது.
-
கொஞ்சம் ரசிக்க
அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படிபூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது. 👍👍
-
உலகின் மிக வயதான மனிதர் மரணம்
சாதனை மனிதர் ஆன்மா சாந்தியடையட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்தில் "சுமேரியர் "என அழைக்கப்படும் நிவேதா உதயன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று நீண்ட காலம் வாழ்க .
-
வெளிநாட்டுக்காரன்..!!!
வெளிநாட்டுக்காரன்..!!! இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு.. ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று படித்தது இங்கேதான். நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவிவைக்கவேண்டும் என படித்ததும்இங்கேதான். எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை சுவையில்லை என குறை சொல்லகூடாது என்றும் படித்ததும்இங்குதான். வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்துஎழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சதுஇங்கேதான். சத்தம் இல்லாமல் கதவை மூடவும் திறக்கவும் படித்தது இங்கேதான். தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான். பொறுமை என்ற 3 எழுத்திற்குஅர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான். நூறு கிடைத்தாலும் 10ரூ கடன்வாங்கி 110ஆக நாட்டுக்கு அனுப்ப படிச்சதும் இங்கேதான். மின்சாரத்தையும், தண்ணீரையும் சோப்பையும்,பற்பசையையும் சிக்கனமாக உயயோகிக்க படித்ததும் இங்கேதான். பள்ளிக்கூடத்தில் 10அல்லது 15வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான். வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகிபடிச்சதும் இங்கேதான். உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான். தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி, வெள்ளைபூண்டு,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி மல்லி பொடி ஆகியவைகளை சூடாக்கிய எண்ணெயில் போட்டுவதக்கி, மீன் போட்டால் மீன்குழம்பும் சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும் மட்டன் போட்டால் மட்டன் குழம்பும் மோர் ஊற்றினால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டியிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா?? வெளிநாட்டு வாழ்க்கை அது ஒரு கதை,யாரும் சொல்லாத கதை. சொல்ல மறந்த கதை..!! வெளிநாடு வாழ் தமிழர் பதிவிட்ட பதிவு இது.. படித்து,பிடித்து,பகிர்கிறேன் உங்களிடம்..
-
பேப்பர் மாதிரி ....
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
ஒரு கிலோ விளாம்பழம்
நீண்ட கால வாசகனுக்கு இதுவரை ஏன் எழுத முடியவில்லையோ தெரியாது. முழு வீச்சில் இறங்கி விடீர்கள் . தொடருங்கோ நாங்களும் தொடர்ந்து ரசித்து வாசிக்கிறோம். ஊரில் இருந் போது விளம்பழத்தை வழித்துபோட்டு பால் விட்டு கரைத்து சீனியும் கொஞ்ச சோறும்போட்டு அம்மா செய்து தருவார் அமிர்தம் போல இருக்கும். நல்ல விருப்பம்.
-
முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில்
இந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும் முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு விடடார்கள் ). விளையாட்டு வேடிக்கை கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது ஒரு இனிய கனாக்காலம்.
-
மது அருந்தும் போட்டியில் முதலிடம் பிடித்தவர் சில மணி நேரத்தில் மரணம்!
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு ....
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை மரங்கள்.
-
எனது அறிமுகம்
இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே . நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல ஒவ்வொன்றுக்கும் அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும் தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம் தந்தால் அங்கும் சென்று பார்ப்பார்கள்.
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
நீண்ட நாட்கள் உங்களை காணவில்லை என எண்ணியிருந்தேன். அழகான காடசிப் படங்களுடன் வந்துள்ளீர்கள் மிக்க நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும் வாழ்க
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இயற்கை வரைந்த ஓவியம் அழகு
-
அது இப்போது எஃகு நதி
பெயர் பெற்ற ஒருபாலம் கண நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்தது பேரிழப்பு. ஏன் வரிகளுக்கிடையே அகலமான இடை வெளி ? அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்.
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁 வேடிக்கையாக சொன்னாலும் உண்மை அது தான். இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை . நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள் வரவேண்டும்.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இரசித்த.... புகைப்படங்கள்.
உழுது களைத்த உழவன்
-
பிஞ்சுக் காதல்…
அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள்.