Everything posted by நிலாமதி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.............. இதை வாசித்து நான் சிரி சிரி ....என்று சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள ஜாம்பவான்களின் பகிடிகளில், இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )
-
குறுங்கதை 17 -- நளபாகம்
என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.😄 எனக்கும் தான் புரியவில்லை கோவாவில் குழம்பா ? என் நண்பி ஒருவர், இரண்டு ஆண்மக்கள் தோளுக்கு மேலே வளர்ந்து விடடார்கள் . நான் பெட்டிக்குள் போனாலும் " அப்பனும் மக்களும் சமைத்து வைத்துவிட்டு போ " என்று தான் சொல்வார்கள் என்று சலித்து கொள்வார்
-
குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
எங்கேயோ இதன் சாயலில் வாசித்ததாக ஞாபகம். இருப்பினும் தொடருங்கள். 😄
-
குறுங்கதை 15 -- ஏமாற்றம்
அறியாத தெரியாத இடங்களுக்கு போகும் போது ஒரு விழிப்புணர்வு alert இருக்க வேண்டியது கடடாயம் தானே . நல்ல சேவை கிடைக்கும்போது அமையறியாமலே கொடுக்கும் உணர்வு வரும். சின்ன வயதில் படித்த ஈசாப் நீதிக்கதைகள் நினைவுக்கு வருகிறது. வரும் காலத்தில் உங்கள் குறுங்கதைகளைத் தொகுத்து ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ என யாராவது வெளியிட வாய்ப்பிருக்கிறது. (ஏமாந்திட்டீங்களா?)... Kavi arunasalam ‘ரசோதரன் நீதிக்கதைகள்’ தொகுப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
ரசோதரன் உங்கள் குறுங்கதைகள் மிகவும் அருமை.மீண்டும் தாயக இளமைக் கால நினைவுகளை இரைமீட்பதுபோல இருக்கின்றன. இவவளவு காலமும் இந்த நகைச்சுவைப்பட எழுதும் திறமை எங்கே ஒளிந்திருந்தன என எண்ணுவதுண்டு. ஒரு பாரபட்ஷம் என்னவெனில் பெண் குட்டிகளுக்கு பத்து வயதுக்கு முன்பு என்றாலும் நீச்சல் பகற்கனவு. சில வன்னிப்பகுதிகளில் பெண்கள் கூட்டமாக சென்று வாய்க் கால் ஓடும் நீரில் நீந்தி இருக்கிறார்கள்.தொடரட்டும் குறுங்கதைகள் பாராட்டுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
சம்பந்தர் காலமானார்
உலகில் மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல் அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே . "இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டுப் போட்டி என்றாலே முன்னின்று நடத்தி வேலைப்பளு மத்தியில் நேரம் ஒதுக்கி தரப்படுத்தி சிறப்பாக பதிவேற்றும் கிருபனுக்கு யாழ் களம் சார்பாக என் பாராட்டுக்களும் நன்றிகளும். போட்டிக் களத்தை உற்சாகமாக நேரலை வர்ணனை போல் தகவல் தரும் வீரப்பையன், பிரியன் ...ரசோதரன் ...குறும்பு கதை சொல்லும்குமார் சாமியார் ..மற்றும் கூட்டாளிகளுக்கு என் நனறிகளும் பாராட்டுக்களும் . வீரப்பையனின்..ஆடுகளத்தை சிறப்பிக்க அழைப்பு விடுவதும் கிருபனுக்கு அடுத்ததாக கவனமெடுப்பதும் சிறப்பானது. இனி வரும் காலங்களிலும் யாழ் களத்துக்கு போட்டிப் பதிவுகள் மூலம் உயிர்ப்பாக வைக்க வேணுமென பங்குபற்றியவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். முதலிடத்தில் நிற்கும் USA பிரபாவுக்கு என் பாராட்டுக்கள். .
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
இங்கு நாய்க்கு என்று ஸ்பெஷல் சாப்பாடு சீரியல் மாதிரி உண்டு ( ஒவ்வொரு வயதுக்குஒவ்வொரு மாதிரி) ...அதை விட காய்ந்த ஈரல் ஸ்நாக் என்று வித விதமாய் உண்டு . அவையெல்லாம். வாங்கி கொடுப்பான் என் மகன் . தகப்பனுக்கு விருப்பமில்லை கெஞ்சி கூத்தாடிதான் குட்டியாக கொண்டுவந்தான். இப்பொது அவர் ஒரு நாள் பார்க்கவிடாலும் கவலைப்பட்டு போய்விடுவார் பார்க்க .மகனுக்கு தெரியாம இறைச்சி துண்டை கழுவிப்போட்டு கொடுப்பார். இவர் சாப்பிட போனால் பக்கத்தில் வந்து இருக்கும். மகனின் கட்டிலுக்கு பக்கத்தில் மெத்தை போன்ற ஸ்பெஷல்படுக்கையில் தான் உறக்கம். மகன் இருந்தால் எங்களைத் தேடாது அவன் காலடியிலேயே . வாழ்க்கையின்பாதி மகிழ்ச்சியை இழந்துவிடீர்கள். எவ்வ்ளவு சோர்ந்து வேலையால் வந்தாலும் அதை கட்டி தழுவ களைப்பெல்லாம் போய் விடும். சாமத்தில் வேலையால் வர விழித்திருந்து வாசலில் வாலாட்டி வரவேற்கும். மன இறுக்கம் குறையும். பந்தை தூக்கிப்போட கவ்வும் லாவகமே தனி மகிழ்ச்சி. இங்கு வெள்ளைக்களின் குழந்தைகளுக்கு காவல். ஒருத்தரும் அண்ட விடாது. பக்கத்திலே இருக்கும். பழக்குவதில் இருக்கிறது பண்பு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிரியன்.
-
குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
எங்கள் வீட்டிலும் ஒரு நாலுகால் ஜீவன் லூனா எனும் பெண் நாய் .....பதினோரு வருடங்களாக எங்க ளுடன் வாழ்கிறது . வீட்டிற்கு வருவோரை முதல் ஆளாகி வரவேற்கும். கீழ் தளத்தில் நின்றாலும் மகனின் கார் சத்தம் தெருமுனையில் வரும்போது மேலே ஓடிச்சென்று வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும். எந்த சாமத்தில் வந்தாலும் . ஒரு குண்டூசி சத்தம் கேடடாலும் அலெர்ட் ஆகி விடும். தெரியாதவர்களையும் கண்டு வாலாட்டும் தபாற்காரன் . ups காரன் என்பவர்களையும் கண்டு வரவேற்கும் ( கள்ளன் வந்தாலும் வரவேற்கும்) பிழை செய்தால்பம்மி கொண்டு நிற்கும். பேரப்பிள்ளைகள் வாலைப்பிடித்து இழுத்து என்ன சித்ரவதை செய்தலும் சகித்து கொள்ளும். பேத்தி சிறுவயதில் சிலசமயம் அதைக் கட்டிபிடித்துஉறங்கி விடுவாள் ...பாவம் தற்போதுகண் தெரியாமல் போய் விட்ட்து ஒருமாற்றுவழியும் இல்லையாம். சிலர் கருணைக் கொலைக்கு அனுப்ப சொன்னார்கள். மகன் அடிக்காத குறை அது தன்னுடனே இருக்கட்டும் என்பான் நடக்க முடியாவிலும் தூக்கி கொண்டு மேல் தளத்துக்கு வருவான். . குளிப்பாட்டி தனித் துவாய் வைத்து துடைத்து விடுவான். வித விதமாய் ஷாம்போ கால நகம் வெட்டிட கத்தரிகோல் மாதாந்த வருடாந்த check up எல்லாம் செய்வான். தட்டித்தடுமாறி நடக்கிறது ஆனால் உணவு வைக்கும் இடம் தண்ணீர்வைக்கும் இடம் மல ஜலத்துக்கு "சிக்னல்" என்பன மாறவில்லை. படியில் இறங்க ஸ்டெப்ஸ் என்று சொன்னால் நிதானமாக கால்வைக்கும். வாழும் வரை வாழட்டும். நன்றி உள்ள பாசக்கார ஜீவன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூட்டாளி முன்னுக்குபோய்க் கொண்டிருக்கிறார். கலைச்சு பிடியுங்கோவன் 😁
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் "சுண்டலோடு " வந்திருக்கிறீர்கள். நல்வரவு ...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா ...பொதுவெளியில் பேச்சுத்தமிழ்( மூதேவியல் ) நாகரீகமற்றது
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை செய்வதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைந்த செலவில் சென்றால் ....கஷ்ட நிலயை சந்திக்க தானே வேண்டும் .பரலோகம் போக வேணும் என்று போனால் ....நடப்பதைக்கண்டு கொள்ள வேண்டும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிரியனின் பேத்தி நலம் பெற வேண்டுகிறோம். எத்தனை வயது ? அண்மையில் பிறந்தவரா ? கால நிலைமாற்றத்தை கவனிக்க வேண்டும் இங்கு கடும் வெயில் நிலவுகிறது.
-
இது மாலை நேரத்து மயக்கம் ....
இது மாலை நேரத்து மயக்கம் .... முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடி பார்க்கும்போது தேடும் பாதை தானே பாயில்படுத்து நோயில்வீழந்தால் காதல் கானல் நீரே இது மேடுபள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத் தேரே இல்லம் கேடடால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சுவி ஐயா அமெரிக்கன்ஸ் உடன் இணைந்து விடடார். அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லமாடீங்களோ ?😄😄😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கவனிக்கவும் தலைவரே !..... நிரந்தர முதல்வர் பதவிக்காக பேரம் பேசுகிறார் 😄
-
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே இன்று கனடாவில் தந்தையர் தினம் கொண்டாடும் ஒரு நாள்
-
"சமாதானம்"
"இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!" கவிதையிலே எழுதி இன்பம் கொள்ளலாம் ...இது பகற்கனவு . இன்னும் நில ஆக்கிரமிப்பு, புத்தரின் சிலைகளை நாட்டி விகாரைகள் உருவாக்கமும் புது புது குடியேற்றமும் .. .கிடைக்குமா ஒற்றுமை சமாதானம் ?
-
அதிசயக்குதிரை
போகிறார்களென எண்ணுகிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோஷான் சே38 அட! பட பஸ்சில் ( படம் பார்த்துவிட்டு படடணத்திலிருந்து ஊருக்கு வரும் கடைசி பஸ்)வந்தாலும் முன்னுக்கு வரலாமா ? அதிஷ்டமா ? கணிப்பா ?
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து ! ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்! ஏதோ மர்மத்தை எதிர் பார்த்து நின்றேன்!" பணிந்து 'நானும்' மெல்ல ஒதுங்கினேன்!" செய்யாமல் பின் வாங்கி அமைதி நிலைநாட்டினேன்!" நன்றாக நிலைமையை விளங்கி கொண்டு, அனுசரித்து போகும் நல்ல கணவனாய் இருந்தீர்கள் என்பதில் பெருமைப்படுங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Too...............latemma