Everything posted by நிலாமதி
-
இலை என்றால் உதிரும்
இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்றுதினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும்விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும்என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாயமனமும் சாய இனிஇன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.
-
இலை என்றால் உதிரும்
அன்றாட நிகழ்வை , கால மாற்றத்தை கவி வரியாக சொல்ல முயன்று இருக்கிறீர்கள் .இடை வெளியை சற்று கவனியுங்கள். முயற்சிக்கு பாராட்டு .
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
இதை பார்த்த எனக்கு ஒரு கணம் ....பின்னோக்கி என் மனம் சென்றது .கெலியின் சத்தம்கேட்டாலே இதயம் பலமுறை துடிக்கும். பிஞ்சுகளுக்கு எங்கே தெரியப்போகிறது . வலிகளும் அதன் வடுக்களும். தமிழரும் சிங்களரும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள் உங்களுக்கு ஏன் .தமிழ் ஈழம். சிங்களருக்கு வால்பிடிக்கும் நம்மவர்கள் செய்யும் கூத்து .யாழ் மண்ணுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டுக்கு காசு சிங்களர் வேடிக்கை காட்டி அள்ளிக் கொண்டு போகிறார்கள். இளம் சமுதாயம் உடல் உழைப்புக்கு தயாரில்லை.
-
முடிவிலி
படத்தை பார்த்தால் தானே தெரிகிறது அட ஏன் இதை பார்த்தோமென்று ....பட்டுத் தெளிவது அறிவு.
- மயிலம்மா.
-
என்ன பார்ட்டி இது??
என்ன இருந்தாலும் பாட்டிமாரை அழைக்காதது பெரும் பிழை. அவர்களுக்கும் ஒரு அவுட்டிங் போல இருக்கும் .சில பாட்டிமார் வைன் அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் இந்த பாகுபாடு அடுத்த முறை பாட்டிமாருக்கும் அழைப்பு வேண்டும். பார்ட்டியில் தாத்தாமார் "ஏத்திக்" கொண்டு வீட்டில் வந்து என்ன அலடடலோ?(கூத்தோ ) அதை யாரு சகித்து கொள்வது .
-
இந்தின் இளம்பிறை
உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கும் போல. ஆர்வமுடன் பகிருங்கள் வாசித்து பாராடட நாங்கள் இருக்கிறோம்.
-
ஒரு கோப்பை தேநீர்
வாழ்க்கையின் தேவைகள் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். களைத்த மனிதருக்கு ஒரு கோப்பை தேநீர் மிகவும் இதமாக இருக்கும். நல்ல உபசரிப்புள்ள குடும்பத்தவர் போல , பொறுப்பான குடும்பஸ்தர்
-
ஒரு வழிச் சாலை
- பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
கலிபோர்னியாவில் இருக்கிற யாழ் உறவுகள் அவதானமாக இருங்கோ .இங்கு டொரோண்டோவில் தலைகீழாக ஒரு நாளைக்கு+ 13 மறு நாள் -3 இனி ஒரு வாரத்துக்கு + 8 +9 +11 +7 +7 ...+5- பூச்சியமான நேரம்
வணக்கம் ரசோ..(தமிழ் பெயர் மாதிரி இல்லையே ) கவி வரிகளோடு வந்திருக்கிறீர்கள் தொடர்ந்து இணைந்து இருங்கள்.- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள் ...கோபம்தான் வருகிறது கால இழுத்தடிப்பினால் என்னத்தை கண்டார்கள். ஏழைத் தாயினதும் தமிழ் மக்களின் சாப மும் அந்த மண்ணின் மீது இருக்கும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணா காலடியில் என்று எழுத வேண்டாம் சிலை யடியில் என எழுதுங்க. காலடியில் கருத்து வேறு படும் அந்தளவுக்கு நீங்கள் தாழ்ந்தவர் அல்ல- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
காலம் கலி காலம். கனடாவின் கள நிலை : எலும்பை ஊடுருவும் குளிர் நிலை காணும் மாசி மாதத்தில் இன்று இடியுடன் கூடிய பெரு மழை பொழிகிறது . காலம் மாறிப் போச்சுடா... 😃- சிரிக்கவும் சிந்திக்கவும் .
உண்மைக் காதலுக்கும் அப்படியே- நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
வம்பனுக்கும் அதை இங்கு ஒட்டிய வருக்கும் ஒரு சில வார்த்தைகள்...... . நாங்கள் தமிழர் கனடாவில் வாழ்கிறோம். ஆனால் எமது வருகையின் ஆரம்பம் நாற்பது ஐம்பது,ருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தது; செல்லடியிலும் உயிரிழப்பிலும் உயிர் காக்க ஓடிவந்த கதை தெரியுமா ? கடலிலும் அலையிலும் கடுங்குளிரிலும் உயிரை பயணம் வைத்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி அச்சத்துடனும் நடுங்கிய படி பசிக்களையில் கப்பலில் வந்த கதை தெரியுமா ? விமானப்பயணத்துக்காக ஏஜென்சிக்காறனுக்கு காணிபூமி விற்று ஏமாந்த கதை தெரியுமா? நாட்டுக்கு அண்மையில் வந்து (deport ) திரும்பி அனுப்பிய கதை தெரியுமா ? ஏஜென்சி காரனுடன் "மனைவி "என்ற பெயரில் இம்சைகளை தாண்டி நாடு நாடாய் அலைந்து உயிரை கையில் பிடித்து,வந்து சேர்ந்த இளம் பெண்களின் கதை தெரியுமா? வந்து அசைலம் அடித்து அப்ளை பண்ணி லாயருக்கு (கேஸ்)க்கு வட்டிக்கு, கடன் எடுத்து கட்டிய பணம் எவ்வ்ளவு தெரியுமா? எட்டுமணி நேரம் நின்ற நிலையில் இயந்திரத்தோடு இயந்திரமாய் மாறி களைத்து வீடுவந்து உண்டு உறங்கிய கதை தெரியுமா? மனைவி பகல் வேலையிலும் கணவன் இரவு வேலையிலும் கஷ்ட பட்டு வாழ்ந்த வாழ்க்கை தெரியுமா ? பெற்ற குழந்தை யை பால் மறக்கடித்து பால்வாடி (டே கேர் )அனுப்பிய கதை தெரியுமா? லீவு கேடடால் முதலாளியின் கடின வார்த்தைகள் வேலையை விட்டுப்போ என்றகண்டிப்பு கேட்டு கலங்கி அழுத கதை தெரியுமா? கொட்டுகின்ற பனி யில் விறைக்க குளிர் (-30) எலும்பை ஊடுருவ பஸ் தரிப்பில் நின்ற கதை தெரியுமா ? வந்த கடன், கடனுக்கு வட்டி ,வீட்டாருக்கு செலவுக்கு காசு என ஓடி ஓடி வேலை செய்து இளமையை துறந்தது நாற்பதுக்கு அன்மித்த வயதில் துணையை தேடிய கதை தெரியுமா? எத்தனை குமரிகள் கரைசேரவேண்டுமென அண்ணா தம்பி யாய் பிறந்த குற்றத்துக்காக தும்படி அடித்த கதை தெரியுமா ? ஒரு அறை கொண்ட மாடிக் கட்டிடத்தில் பகலில் நால்வர் தூங்க அவர் இரவு வேலைக்கு செல்ல இரவில் நால்வர் தூங்கி படாத பாடெல்லாம் படட கதை தெரியுமா ? வாருங்கள் ...வாருங்கள் இதை எல்லாம் பட்டு தெளிய ரெடியா ? வெளிநாட்டு காசு ஊருக்கு என்ன துயரப்பட்டு அனுப் பினார்கள் தெரியுமா? கடன் மடடையில் காசு எடுத்து அங்கு வந்து செலவழிக்கிறார்கள் அதைக் கட்டிட என்ன பாடு படவேண்டும் தெரியுமா ? எல்லாம் படங் காடடல், வேஷம்.. இழந்ததை பார்த்து விட வேண்டும் இன சனத்தை பார்க்க வேண்டும் என்ற ( தாகம்) ஆவல் மட்டுமே. தற்போது ...கோடிக் கணக்கில் கொடுத்து வருகிறார்கள் தெரியுமா ? வந்து எயர் போட்டில் திருப்பி அனுப்பிய கதை தெரியுமா ? விசிட் விசாவில் வந்து வந்தவர்களை கேளாமல் அசைலம் அடித்து ..கணவன் மனைவி பிரிந்து விவாக ரத்து வரை போனகதை தெரியுமா ? வேலை தேடி அலையும் வலி புரியுமா ? அங்கு ஏ சி யில் வேலைபார்த்து இங்கு கோப்பை கழுவ மனம் வருமா ? மருத்துவ காப்புறுதியின்றி ..வந்த பின் நோய் நொடி வந்தால் ? என்ன கதை தெரியுமா ? லாயரை பிடித்து அவருக்கும் காசாக இறைக்க தென்பு இருக்கா ? ஒரு காலம் இருந்தது .."அகதி " என யுத்தம் காரணமாக அனுமதிக்க ..இப்பொது எதை சொல்லி அகதி கேட்பீர் ? இதை எல்லாம் எதிர் நோக்க ரெடியா ? படட துன்பத்தின் ரணம் இன்னும் மறக்க வில்லை . வாங்கோ ...வாங்கோ.. வந்து பட்டுத்தெளிவீர். வந்த கடனுக்கு வட்டி கட்டிட ரெடியா ? என்ன வளம் இல்லை என் நாட்டில் ? தற்போது யுத்தமும் இல்லை ..வெளி நாட்டு காசு தாராளமா அங்கு வருகிறது . காணி நிலம் உண்டு அபி விருத்தி உண்டு அங்கு உடல் வருத்தி உழைக்காத காளை இங்கு வந்து உழுமா ? இக்கரைகள் பச்சை இல்லை .சொன்னாலும் புரியாது . புரிய வைக்க முடியாது.- ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்?
போனை தண்ணீர் படாமல் பாதுகாப்பது தான் சிறந்த வழி .... ( என் போன் தண்ணீர்பட்டு தொடர்பு எண்களை இழந்து படட துன்பம் வேறு கதை ) 😃- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர்.......!- இலங்கையில் குட்டி யானைகளை பலி கொள்ளும் 'அவுட்டுக்காய்' - 10 ஆண்டுகளில் 587 யானைகள் உயிரிழப்பு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுனாவிலானுக்கு என் வாழ்த்துக்கள். வளமோடும் மகிழ்வோடும் வாழ்க- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
அந்தப் பிஞ்சுக்கு என் அஞ்சலி . போதை காட்டிய பாதை. குழந்தைகள் எவ்வ்ளவு பாதுகாப்போடு வளர்க்க வேண்டுமென சொல்லி நிற்கிறது. எவனையும் நம்ப முடியாது.குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி இந்த சமூகத்தை பார்த்து பயப்பிட வேண்டி இருக்கிறது.- மரணம்
பொறுமையாக உங்கள் மன ஒடடத்தை உடனுக்குடன் கள உறவுகளுடன் பகிர்ந்தமைக்கு நனறி. உங்கள் மனச்சுமை சற்று இறங்கியிருக்கும். வாசிக்கும் போது இறுதிக் கட்ட்த்தை நெருங்க கண்கள் அந்த ஒரு இதயத்துக்காக பனித்தன. palliative care இந்த சொல்லை சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன். பலியாக போகும் களமா என்று எண்ணத்தோன்றியது .மரணம் கொடிது ..எல்லோரும் சந்திக்க வேண்டிய ஒன்று. யார் தடுத்தாலும் அழுதுபுலம்பினாலும் வந்தே தீரும். இளம் வயது பாவம் .அவனைப்பற்றிய உங்கள் ஆரம்ப கால மன நிலையை மாற்றிய பதிவு. அவனுக்காக பிராத்தியுங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் நலனைப்பார்த்துக் கொள்ளுங்கள். கள உறவுகளின் அஞ்சலி அவரை சேரும்.- மரணம்
மன்னிப்பெல்லாம் எதற்கு தொடருங்கள் என்பது ஆர்வமாக இருக்கிறேன் என்று அர்த்தம் உங்கள் வசதிப்படி தொடரலாமே.....உடனுக்குடன் எழுதுங்கள் என்று அர்த்தமல்ல .உங்கள் எழுதும் ஆற்றல் நிறையவே நல்ல மாற்றமடைந்துள்ளது. பாராட்டுக்கள்.- மரணம்
தொடருங்கள் வாசிக்கும் ஆவலுடன். ....நாடு விட்டு நாடு வந்து நம்மவர்கள் ஏராளம் பிரச்சினைகள் வேலையிடங்களில்.சந்தித் தார்கள். இன்னும் நடக்கிறது. அவனிடம் எதோ ஒன்று ...இருக்கலாமோ ?- தொப்பையைக் குறைக்கும் வழிகள்....Dr. சிவன் சுதன் .
- பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.