Everything posted by நிலாமதி
-
சிரிக்க மட்டும் வாங்க
ஆங்கில மீடியம் இல் படிக்கும் ஒரு கல்லூரியில் எல்லோரையும் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார் ஆசிரியர் .பத்து வயதானமானவன் ஜோசப் .அவனது முறை வந்தது ரீச்சர் : ஜோசப் how old are யு ? ஜோசப் ": 10 years old ரீச்சர் : who is your family ? ஜோசப் : My wife and My children . ரீச்சர் : ????? 😄 பையன் வருங்காலத்தை யோசித்து விடடான் போல
-
உடல் எனும் இயந்திரம்.
உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.இல்லையேல் தனக்கும் கேடு அவரை நம்பி உடனிருந்து வாழ்பவர்களுக்கும் சிரமத்தை கொடுக்கும். தன் உடல் நிலையின் அலட்சியத்தால் சிரம படும் ஒருவரின் கதை . படித்து பாருங்கள். பாலகுமார் ஒரு ஐம்பது வயது ஆண்மகன் குடும்பம் அழகான இரு பெண் குழந்தைகள் என கனடாவுக்கு வந்து ஆரம்ப காலத்தில் மிக மிக கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்து தன் வாழ்வை ஓடிக் கொண்டிருந்தான் . குழந்தைகள் நாளும் பொழுதும் வளர்ந்து பாடசாலை முடித்து பல்கலை படிப்புக்கு அனுமதி பெற்று இருந்தாள் மூத்தவள். மற்றையவள் பாடசாலை இறுதி வருட மாணவியாக கற்றுக் கொண்டிருந்தாள் . மனைவியும் அவர்களின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வேலையில் இருந்தாள். தன் கடின முயற்சியில் தன்னிடம் இருந்த பொருட்களை விற்று (நகைகளை விற்று) முதலீடு செய்து நண்பரிடம் பணம் வாங்கியும் வங்கியில் லோன் பெற்று ஒரு தொழில் அதிபரானார் அவரிடம் இருபது பேர் வேலை செய்யும் அளவுக்கு நான்கு வருடங்களில் நிறுவனம் நல்ல நிலையில் வைத்திருந்தார் . மனைவியும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க கணவனுக்கு துணையாக இருந்தாள். இப்படி அமைதியாக காலம் சென்று கொண்டிருந்தது . கடந்த சில நாட்களாக தனக்கு காலில் ஒரு வித வலி ஏற்படுவதாக முறையிட்டுக் கொண்டு இருந்தான். வேலை கடுமையாக இருக்கும் ஓய்வெடுத்தால் சரியாகும் என எண்ணிக் கொண்டு இருந்தான். ஒரு தடவை ஒரு பேச்சு வார்த்தையின் போது மருத்துவர் சித்தப்பாவிடம் கால் வலி பற்றி முறையிட்டான். அவரும் முழு உடல் பரிசோதனை செய்யும் படி அறிவுறுத்தினார். அவர் கவனிக்காது வேலையும் வீடும் என இருந்து விட்டார். ஒரு வார தொடக்க நாளில் காலையில் துயில் எழுந்து கழிவறை சென்ற போது லேசான மயக்கம் போல உணர்ந்து நிதானிக்க முன் சரிந்து விழுந்தார் . மனைவி சத்தம் கேட்டு வந்து ஆம்புலன்ஸ் அழைத்து வைத்தியசாலைக்கு சென்று உரிய பரிசோதனைகள் செய்து இதய வழிப்பாதையில் இரத்த அடைபட்டு ஏற்பட்டு இருந்தது . உடல் பலவீனமாக இருந்தால் இரண்டு நாட்களில் சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடானது . அன்று இரவு மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படவே மறு நாள் அவசரமாக சத்திர சிகிச்சை செய்தார்கள் .சத்திர சிகிச்சை முடிந்து சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கி வீடு சென்றார். ஓரளவு உடல்நிலை தேறி வரும் நாட்களில் அவரது மனநிலை , தன் நிறுவனம், வேலை ஆட்கள், புது ஆடர்கள் என்ற சிந்தனையில் இருந்தார். மேலும் ஒரு வாரம் சென்றது. மறுநாள் காலை காப்பி கப்பை கையில் எடுத்தவர் தடுமாறி போட்டுவிட்டார் கை நடுங்க தொடங்கிவிட்டது .மீண்டும் என்ன சோதனையா வாழ்க்கை என்று எண்ணி வைத்தியசாலையில் அனுமதித்த போது அவருக்கு "ஸ்ட்ரோக் " ஏற்பட்டு வலது கையும் காலும் தாக்கப்பட்டு மூளை செயலிழப்பு ஏற்பட்டது . அவரது நிலை எதிர்பாராமல் முடங்க வேண்டி ஏற்பட்டது . இளம் வயது தானே என அலட்சியம் இருந்து விட்டால் விளைவுகள் பாரதூரமாக விடும். இனி அவர்கள் எதிர்காலம் ....? இந்த இயந்திர உலகம் நம்மை இயந்திரமய வாழ்க்கை வாழ வைக்கிறது. நின்று நிதானித்து நம்மையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இளம் வயது தானே என அலட்சியப்படுத்தினால் கவலைப்பட வேண்டும். இதை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ளுங்கள்
-
ஊதாரி ஊடகங்கள்!
தினம் தினம் பார்த்து.... நல்லதை எடுத்து பொருத்தமற்றதை விலக்குவோம்😄
-
ஊதாரி ஊடகங்கள்!
உண்மையை உரத்துச்சொல்லி உள்ளீர்கள். இவர்களின் தமிழ் எழுத்து பிழைகள் அர்த்தங்களை தவறாக சித்தரிக்கின்றன. நன்றி
-
காட்டுப்பன்றி கடித்த இளைஞருக்கு என்ன நடந்தது?
விசர் நாய் கடித்தால் ஏற்படும் விளைவுகள் போல (ரேபிஸ் )இவருக்கும் வைத்திய பரிசோதனைகள் (கவனிப்பு )தேவை . குறிப்பு இவர் இறந்து விடடாரம் என்று தளத்தில் சொல்லப்படுகிறது .வைத்திய சேவையை பாதியில் நிறுத்தி விட்டாராம் இவர் யாரைக் கடித்தாரோ அவர்களுக்கும் சிகிச்சை தேவை. மிருகங்கள் கடித்தால் (அவற்றின் உமிழ் நீர் படடால் ) ஒரு வருடம் பத்தியமும் சரியான மருத்துவ உதவிகளும் தேவையாம்
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
மூனா எனும் யாழ் கள கவி அருணாசலம் என்பவரை பற்றிய பதிவை மேலே கொண்டு வந்த மோகன் மற்றும் தமிழ்சிறீ, குசா,ரசோதரன் ஆகியோருக்கு நன்றி .ஒரு கலைஞனை திறமைசாலியை, அருகி வரும் ஓவியத்தில் புலமை மிக்கவரை, சிறந்தவரை யாழ் களம் உறுப்பினராக கொண்டதில் பெருமை படுகிறது. என் இளைய சகோதரனின் இழப்பின் போது அவரை படமாக வரைந்திருந்தார் . இவரது ஓவியத்திறமையை நம் இளம் சமுதாயம் கற்க வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக் களும் உரித்தாகுக .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
-
பீர் பாட்டிலும் கண்ணாடியும்
நண்பன் 1 : ஹை மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2 : நுளம்பு அடிக்கிறேண்டா நண்பன் 1 : எத்தனைடா அடிச்சாய் ? நண்பன் 2 : 3 பெண் நுளம்பு 2 ஆண் நுளம்பு நண்பன் 1 : எப்புடிடா கரெக்ட்டா சொல்கிறாய் ? நண்பன் 2 : 3 கண்ணடி அருகே இருந்துச்சு 2 பீர் பாட்டில் அருகே இருந்துச்சு நண்பன் 1 : 😄😄😄 ....
-
கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்
சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு ஒருகிழமையா கழுத்து சுளுக்கு ஏற்பட்டு இருக்கு ..டாகடர் x ரே எல்லாம் எடுத்து வித்தியாசம் ஒன்றுமில்லை என்று.. சொல்லி விடடா...இவர் நண்பருக்கு சொல்கிறார் இவ நாளும்பொழுதும் கம்ப்யூட்டறில் இருக்கிறது .அது தான் இந்த சுளுக்கு..என்று .உங்களுக்கு ஏதும் கைவைத்தியம்( கிராமத்து வைத்தியம்) தெரியுமா? பகிடி இல்லை நிஜமாக ... எழுதுங்கள்.
-
சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
வைத்திய தொழில் கடவுளுக்கு சமம் . ஓர் உயிரைக் காக்க போராடியவர் தன்னுடைய குழந்தையின் உயிரைக் காக்க முடியவில்லை. விதி வலியது. கதை உண்மை என்றால் மிகவும் சோகமானது . பகிர்வுக்கு நன்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழை ஒழுங்கா" படிடா படிடா "என்று சொன்னேன் கேட்டியா? இப்ப டீ கடை வைக்க தன்னும் லாயக்கில்லை
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அதிக சலுகை கொடுத்தால் இப்படித்தான் ."மதங்" கொண்டவர்களுக்கு மதம் ஒரு கேடு
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பாட்டி இருந்தாலும் எங்கே பேச வருகிறார்கள் ஒரு Hi ஒரு Bye...அவ்வளவே தான் அவர்களுக்கு அவர்களது பிராக்கு.
-
குட்டிக் கதைகள்.
விவேகசிந்தாமணி ஆவீன VivegaSindamani 77 ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே. (77) ஒரு மனிதன் துயரின் எல்லைக்கே சென்ற ஒரு நிலையில் இருந்தாலும் கொண்ட கொள்கையில் நிலை தடுமாறாமல் இருப்பான் எனில் வெற்றி அவன்பக்கம்
- நடனங்கள்.
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
தேவையான நேரத்தில் செய்யும் உதவி மிகவும் பாராடட படத்தக்கது .உதவி செய்ய பணம் அனுப்பி உதவி செய்த்தவர்களுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் மிக்க நன்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ? தடுமாறுதோ? என்று சும்மா பகிடிக்கு 😄😄
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். அந்த மூதாட்டியை புறக்கணித்தது குழுவுக்கு கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடாக இருக்கலாம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லை பொதி செய்து கலிபோர்னியாவுக்கு கொண்டு வரலாம்😄
- இன்று மாவீரர் தினம்!
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
மன நோய்வாய்ப்படடவர்கள் ,ஒழுங்காக மருந்து எடுக்காவிட்டால் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.(தினமும் மருந்தா என சலிப்பு நிலை வரும் சில சமயம் அதைக் குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் ) மிகவும் உக்கிரமான நிலைக்கு வரும் .பெண்கள் எனில் அழுகையும் தூய்மை அற்ற்வர்களாயும் இருப்பர். ஆண் களில் எதோ ஒரு திருப்தியின்மையை நினைத்து வஞ்சம் தீர்க்க முற்படுவர். மூளை தாறுமாறாக யோசிக்கும்.வயது வந்தவர்களாய் இருப்பினும் ஒழுங்காக மருந்து எடுத்தாரா எனக் கவனிக்க வேண்டும். யோசிக்க விடாது வேறு திசையில் முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் நித்திரை அவசியம். படுக்கையில் இருந்தாலும் மூளை உறங்காது கிரமமாக குறித்த காலஎல்லையில் வைத்தியரிடம் போக வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரிடமிருந்து அறிந்து கொண்டவை. இவை யாருக்கும் பயன்படக் கூடும் எனும் நல்லெண்ணத்தில் பகிர்கின்றேன். .
-
கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!
பாதுகாப்பில்லாத பாலத்தில் யார் போக சொன்னது? அதுவும் வெளிச்சம் குறைந்த நேரத்தில் ....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சகல செல்வங்களும் பெற்று நலமாக வாழ்க
-
கிறீன் டி
விருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
மன அழுத்தம் காரணமாக கஷடபடட மகனைக்கவனித்து உரியசிகிச்சை கொடுத்து அவதானமாக இருந்திருக்க வேண்டும். வீண் பழியை சுமந்து காவலில் வாழப்போகிறார். தந்தைக்கு அஞ்சலிகள்.