Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11188
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன். வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வயது 8 அல்லது 9 இருக்கக்கூடும். அவனுக்கும் இலைப் போட்டு பரிமாறத் தொடங்கினார்கள். சாப்பிடத் தொடங்கினான். .எங்கள் இலைகளில் மைசூர்பாக்கு வைத்தார்கள். "வீடியோ எடுக்க கத்துக்கொடுங்க அண்ணானு கேட்டுட்டே இருந்தான். சரிடா தம்பி எங்க கூட வந்து வேடிக்கை பாத்து கத்துக்கோடானு கூட்டிட்டு வந்துட்டோம். எங்க ஸ்டூடியோ பக்கத்துல தான் பையன் வீடு " சிறுவன் ஆமோதிப்பது போல் தலை ஆட்டினான்."நல்லா கத்துக்கிட்டியா " என்றேன். மீண்டும் தலை ஆட்டினான்."உன் பேர் என்ன ?""சதீஷ் ""எந்த க்ளாஸ் படிக்கிற ""4 " சாப்பிட்டு முடித்து இருந்தான்."சாப்பாடு வைக்கவா """போதும் அண்ணா " அவன் இலையில் மைசூர்பாக்கு மட்டும் சாப்பிடாமல் வைத்து இருந்தான். தன் சட்டைப்பையில் ஒரு செய்தித்தாள் பகுதி எடுத்து கிழித்து வைத்திருந்தான்.அதில் மைசூர்பாக்கை மடித்தான்."இங்க சாப்பிட மாட்டியா ""தம்பிக்குணா . நான் தான் இங்கே நிறைய சாப்ட்டுட்டேனே " கேட்டரிங் நபர் இன்னொரு மைசூர்பாக்கை அவன் இலையில் வைத்தார்."அதை தம்பிக்கு கொடு . இதை நீ சாப்பிடு " என்றார்.அவன் அதையும் பேப்பரில் மடித்தான் ,"தம்பிக்கு ஒன்னு கொடுத்துடுவேன் , இதை புட்டு நானும் அம்மாவும் சாப்பிடுவோம் "அவன் அப்பாவை பற்றி கேட்க நினைத்தேன். அநாகரீகம் என்று எண்ணியதால் கேட்கவில்லை.விருப்பம் இருந்தால் அவன் சொல்லட்டும். கேட்டரிங் நபர் இன்னும் ஒரு மைசூர் பாக்கு வைத்தார் ."அம்மாக்கு ஒன்னு ,தம்பிக்கு ஒன்னு கொடு . இதை நீ இங்க சாப்பிடு ""வீட்டுக்கு போயி மூணு பேரும் சேர்ந்து சாப்பிடறோம் அண்ணா. நான் ரெண்டு எடுத்துட்டு போனா அம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்க.நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கனு எங்க கிட்டயே கொடுத்துடுவாங்க. கல்யாண மண்டபத்துல கொடுத்தாங்க னு சொன்னா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க "அவன் மூன்றையும் பேப்பரில் மடித்தான்.கேட்டரிங் நபர் மேலும் ஒன்றை வைத்தார். "நான் எப்படி 2 சாப்பிடுவேன் . இதை நாளைக்கு காத்தால ஸ்கூல் போறதுக்கு முன்னாடி நானும் தம்பியும் பாதி பாதி சாப்பிடுகிறோம் அண்ணா "நான்கையும் பேப்பரில் மடித்தான். கேட்டரிங் நபர் ஒரு மைசூர்பாக்கை எடுத்தார். இரண்டாக உடைத்தார். "இது என்னோடதுடா, இது தான் லாஸ்ட் . பாதி நான் சாப்பிடறேன் .நீ பாதி மைசூர்பாக்கை இங்கேயே என்னோட கண்ணு முன்னாடி சாப்பிடுடா "சதீஷ் பாதி மைசூர்பாக்கை சாப்பிட்டான் . "ரொம்ப டேஸ்ட்டா ,சூப்பரா இருக்குணா "இன்னொரு பாதி எடுத்து அவனிடம் கொடுத்தார். "இந்த பீஸ் கூட நீயே சாப்பிடுடா . ம்ம்ம் சும்மா சாப்பிடுடா "சாப்பிட்டான். முகத்தை மூடி வேறு பக்கம் திருப்பி கண்களை துடைத்தான். "அழுவறியா சதீஸு ""இல்லேண்ணா ,கண்ல ஏதோ தூசி விழுந்துடுச்சுணா " என்றான். முக புத்தகத்தில் இருந்து ...மனசை தொட்டவை
  2. தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர மிகவும் ஆர்வ மாக உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில் உள்ளபடி தான் நடக்க வேண்டும். பின் வரும் விபரங்கள் உதவ கூடும். இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது . விரும்பினால் விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக எதாவது எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE. Personal support worker .... How do I get a PSW certificate in Ontario? To become a PSW, you'll need a college certificate in personal support work (or health care assistant in Western and Maritime provinces). These certificates typically take 8-12 months to complete, but colleges in Ontario have introduced an accelerated PSW training program that only lasts 6 months! How long does it take to get a PSW certificate in Ontario? Full-time accelerated and standard programs can be completed in anywhere from six months to one year and part-time programs in up to two years. That means there are many ways to learn and train at a pace that works for you. How long does it take to get PSW? How long does it take to get a decision? Once you have applied and submitted your documents and proved your identity, it takes 8 weeks to get a decision. What are the requirements to apply for a Graduate Route Visa: The following are the main requirements to be able to apply for the Graduate Route Visa. What is the highest PSW salary in Ontario? Personal Support Worker (PSW) Permanent Part-time PSW for Long Term Care and Retirement Home. 22.5 hours plus call in per week. Weekends: Two on, One off. Salary: $24.74-$26.21 per hour. In order to enrol in this course, the following documents are required by an international student: High School Certificate/ Diploma if any. Statement of Purpose. Letter of Recommendation. A Letter of Acceptance. Language Test Scores: IELTS, TOEFL, PTE. Proof of Financial Evidence. Passport. Visa. How much does a PSW course cost in Ontario for international students? The average cost of tuition for the entire course varies and can typically range from $3000 to as high as $14000. Can I get a PSW for free in Ontario? There still remains a severe shortage of PSWs, especially in long-term care homes. In order to address this problem, some Ontario colleges are offering free PSW programs. Each organization that provides such courses has its own eligibility criteria. Additionally, there may also be an entrance test for some programs. எண்ணித்துணிக கருமம் . துணிந்த பின் எண்ணுவது இழுக்கு . கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு .கடின உழைப்பும் கால நிலையை சமாளிக்கும் துணிவும் பொறுமையும் உள்ளவருக்கு இது பொருந்தும். ஒவ்வொரு அகதியாக வந்து இப்பொது நல்ல நிலையில் இருப்பவர்களுக்குப் பின்னால் உள்ள வலி அனுபவ பாடம் கடந்து வந்தவர்களுக்கு தான் புரியும் . கனடாவில் உங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களை உறவினராக கொண்டவர்கள் துனிந்து இறங்கலாம் ( உணவு உடை உறையுள் ). இல்லையேல் கண்ணைக் கட்டி பைன் மர காட்டில் விட்ட்துபோல் இருக்கும். இவை கனடாவுக்கு வர ஆரவமுள்ளோருக்கு உதவுமெனும் நல்நோக்கத்துக்காக சில தகவல்கள் பதியப்படுகிறது.
  3. சில வருடங்களுக்குமுன் சிகிரியா குன்றுகளில் பெயரெழுதிய ஒரு மாணவியை கைது செய்ததாக நினைவிருக்கிறது.
  4. குறிப்பு : வெண்டிக் காயை கழுவி துடைத்தபின் (ஈரம் போக ) சிறிது சிறிதாக வெட்டவும். இன்று வெள்ளிக்கு கிழமை சமைத்து ருசித்து சாப்பிடவும்.😀
  5. ஆப்பிரிக்காவில் எங்கே வடலி ....பத்தை (காடு) ...
  6. "எண்ணித் துணிக கருமம்." இக்காலத்தில் யாரை நம்புவது என்பதே தெரியவில்லை. வாயால் கவர்ச்சிகரமாக பேசுபவர்களை, என்ன செய்வது.? அனுப்பிய காசுக்கு "stop payment" செய்யமுடியாதா ? விபரம் தெரியாத இளைஞனாய் இருக்கிறானே. 😟
  7. பணக்கார விளையாட்டு என்ற படியால்…. காணாமல் போனால்… பனையால் விழுந்தவனை பனையடியில் தேடலாம் (காணலாம் ) ஆகாய வெளியில் தொலைந்துபோனால் எங்கே தேடுவேன் ? 😃 சாகத் துணிந்தவர்கள் மட்டும் போகலாம்.
  8. கீர்த்தி என்றால் புகழ் என்று அர்த்தம் என்று எழுதினேன் அல்லவா
  9. இவர் போன்றவர்கள் இருப்பதால் தான் மனிதம் இன்னும் வாழ்கிறது. உண்மை தான் நடபு மட்டுமல்ல மனிதநேயமும் உள்ள மனிதர்.
  10. தமிழ் சிறீ ..யாழ் களத்தில் பெரிய புள்ளி. தமிழ் சிங்களம் என்று நில்லாமல் ...கீர்த்தி சிறீ (புகழ்) என இனிமேல் அழைக்கப்படுவர் ...😃. .
  11. எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உங்களை சேரட்டும். நோய் நொடியின்றி நூறாண்டுகாலம் வாழ்க !
  12. காதல் கேட்பதும் பொய்யாகலாம் தீர விசாரித்து ஆராய்ந்து உணர்க.
  13. அழகு தமிழ் அன்னையாம் தமிழுக்கு ஆயிரமாயிரம் பேர்சொல்வர் அழகு செந்தமிழ் ,இன்பத்தமிழ் குழந்தையின் நாவில் தவழும் மழலைத்தமிழ், அமுதம் சொட்டும் தேன் தமிழ் இன்பத்தமிழ் அகிலம் எங்கும் காண்போம். அழுகின்ற குழந்தை கூட"அம்மா " என அழைத்தால் உருகாதார் நெஞ்சம் உருகாதோ? செந்தமிழால் இன்னிசையால் பாடடெழுதி கவி எழுதிய கண்ணதாசனுக்கும் எண்ணத்திலே சிந்தையிலே முந்தி வந்த தமிழ் என் உயிரான தமிழ் என் முதல் மொழி என் இனிய மொழி. தமிழ் என் உயிர். கரை காணாத கடல். சுடடால் மிளிரும் பொன் போல அதைக் கற்றால் புரியும் உலகம். வளரும் உலக அறிவும் . தமிழுக்கு நிலவென்று பேர் வளர்ந்து கொண்டே இருப்பதால். பழக பழக பண்பை சொல்லி வாழ வைக்கும் தமிழ் . தமிழ்மொழிபோல் இனிதான மொழி எங்கும் காணோம் வாழ்க தமிழ் வளர்க வானமெங்கும்.
  14. ஏமாற்றாதே ஏமாறாதே ? ரிங் ...டிங் டிங் .......ஹலோ....தம்பி மணியோ பேசுறது ...ஓம் அக்கா ...அங்க எத்தனை மணி ? ....விடியபுரம் 3.00 சொல்லக்கா என்ன விஷயம். அக்கா : நித்திரையை குழப்புகிறேன் என்று குறை நினைக்கதை . இவள் கடைக்குட்டி நிலாக்கு இரண்டு பிள்ளைகளாச்சு ரெண்டும் பெடடக் குட்டிகள். மருமோனுக்கும் முன்தினமாதிரி ..கமத்தில் வருமானம் இல்லை மழையும் பொய்த்து போயிற்று ...அது தான் மருமகனை ஒருக்கா கனடாவுக்கு எடுத்து விடுறியே ? மணி ..: அக்கா இப்ப முந் தினமாதிரி இல்லையக்கா சரியான காசு செலவு .எழுபது எண்பது கேட்க்கிறாங்கள். அதுவும் வந்து சேர்ந்தால் தான் சரி இல்லையேல் உல்ளதும்போச்சு. கப்பலில் தாண்ட கதை தெரியும் தானே. .அக்கா : எட தம்பி உனக்கு விஷயம் தெரியாதே ..இவள் கமலம் நேற்று கொழும்புக்குப்போய் வந்தவள் சொன்னாள். (Tourist work permit ) )குடுக்கிறாங்களாம். ஒரு நல்ல ஏஜெண்டை பிடிச்சு விபரங்கள் எல்லாம் கொடுத்து பின் கொஞ்சம் காசு ஒரு பத்து ஐஞ்சு ஆயிரம் டொலர் ) அக்காவுக்கு ஆயிரம் டொலர் கொஞ்சக் காசு 😟.(mind voice).. யார் வியர்வை சிந்தி உழைத்ததோ? கொடுத்து விடடால் அவங்கள் கை அடையாளம் எடுக்க கூப்பிடு வாங்கலாம். எதோ bio metic என்னவோ சொன்னாள். பிறகு எல்லா அலுவல் முடிய மறுமொழி வருமாம். மணி : விசாரிச்சுப்பார்க்கிறேன் அக்கா. ( மனுஷன் நித்திரையும் போச்சு, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஏழு மணிக்கு எழும்ப வேணும். ) முருகா !. அக்கா : மணி ...காசுக்கு பிரச்சினையில்ல அவற்ர ஒன்று விடட மாமா சுவிஸில் இருக்கிறார் இது தான் விஷயம் இப்படி என்று சொன்னால் அனுப்புவார்.( ?) சரி அக்கா பை .... மணி : கடவுளே ..இண்டைக்கு ரெஸ்டாரண்ட் காரன் பர்தேர்ஸ் டே ( Fathers day )எண்டு முறி முறி என்று முறிச்சுப்போட டான் . இப்பதான் ரெண்டுமணிக்கு வந்துபடுத்தேன். ம் ம்ம்ம் ...ஊரார் பேச்சைக்கேட்டு இதுகள் நின்று ஆடுதுகள். ( மறுநாள் மாணிக்கம் ஐயா போய் பார்த்தான் . இவர் லோயருக்கு உதவியாக பகுதி நேர வேலைசெய்யும் அனுபவம் வாய்ந்த வர். ஊரில் ஹெட்மாஸ்டர் ) மாணிக்கம் ஐயா : தம்பி மணி என்ன விஷயம் ? இந்தப் பக்கம் கண்டு கன காலம் மணி : இரவு வேலை ஐயா ஓழுங்க நித்திரையிம் இல்லை. நேரம் காலம் தெரியாம அடிச்சு எழுப்பி கேட்க்கினம். விடயத்தை சொன்னார். மாணிக்கம் : தம்பி மணி சொல்லுறன் எனறு குறை விளங்காத ....க னடா வர்த்த மானி யில் ஒன்றுமே போடவில்லை அறிவிக்க வில்லை . உனக்கு தெரியும் தானே ஏஜென்ட் என்றால் மறுபெயர் ஏமாற்றுக் காரன்.நம்பி ஏமாறாதேங்கோ . இன்னும் தான் ஜனங்கள் திருந்தவே இல்லை காசுகட்டி ஏமாறுகிறேன் என்று அலையுது .விதி யாரை விட்ட்து. கனடா என்றால் சொர்க்கமாம் அதுகளை சொல்லி குற்றமில்லை நம் இனம் அங்கு கொலிடே சென்று காட்டும் " படங் கள் " பகட்டுகள் இருக்கே. போன தடவை நண்பன் போய் வந்து சொன்னான் அக்கா சொன்னவாம் நீ கனடாவிலிருந்து வந்தவன் மாதிரி இல்லயாம். சந்தையில சாரத்தோடு நிண்டனியாம். .கொடிய வெயிலுக்கு கண்ணுல சண் கிளாஸ் கூட இல்லையாம். நம் இனம் பட்டும் பட்டும் திருந்தாதது .visit டு work என்று ஒரு விஷயம் இருக்குது தான். அதை பிழையாக விளங்கி ....அதுக்கு ஒரு தொழில் துறை சிறந்த திறமை, சித்தியடைந்த பத்திரம் ,வேலை அனுபவங்கள். வங்கியில் "இருப்பு" ... அனுபவம் இங்கு தொழில் கொடுப்போரின் உண்மை ...விபரம். தொழில் நிலையம் பதிவு செய்யப்படட ஆவணங்களும் வரவேற்கும் கடிதம் ( invitation letter ) இப்படி ...சகலதும் கொடுத்து அதிஷ்டமும் கை கொடுத்தால் தான் பயணம் சத்தியம். ஏஜென்ட் தேவையில்லை கணனியில் விண்ணப்ப படிவம் நிரப்பி இங்கிருந்து அனுப்பும் திறமையுள்ளவர் கிடைத்தால் , விமான டிக்கட்டுடன் பிளேன் ஏறலாம். என் இனமே தமிழ் ஜனங்களே ஏமாறாதீர்கள் . சட்ட்படி நேர்மையாக வரும் வழி வகை தெரிந்தால் துணிந்து இறங்குங்கள் . மீண்டும் மீண்டும் சேற்றில் , முக நூல் , புளுகு பேப்பர் ..என்பவற்றி நம்பி ஏமாறாதீர்கள். ஏமாற்றப் படுவோம் எனதெரிந்தும் ஏமாறலாமா? பட்டுத் தெளிய (தெரிய) வேண்டுமா ? உறவுகளுக்கு சொல்லுங்கள். சடடப்படி நேர்மையாக செய்யுங்கள் எதுவும் சாத்தியமே. அண்மையில் ஒரு அழைப்பு வந்த போது ....ஏற்படட அனுபவம் தற்போது இலங்கையில் உள்ள தமிழ்ஸ் இக்கு நடக்கும் கனடாக் காய்ச்சல் விழிப்பாய் (அவதானமாக ) இருங்கள் காசு கட்டி ஏமாறாதீர்கள் எனும் நல்ல நோக்கத்துக்காக எழுதப்பட்ட்து. ஏதும் பிழை இருப்பின் மன்னிக்கவும், தெரியப்படுத்தவும். என் அனுபவ பதிவு. .
  15. மிக்க மகிழ்ச்சி.பொறுப்பான அப்பாக்கள் பிள்ளைகளுக்கு ஒரு தூண்போல .
  16. வேதனை கண்டதும் காத்திடும் மெளனம் ஏன் இறைவா ? உன்னோடு நான் இருப்பேன்அஞ்சாதே கலங்காதே!
  17. இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை அந்நியப்படுத்தாதீங்க . நாம ஒரே கூட்டாளிகள் (நண்பர்கள்) தானே நானும் வேடிக்கையாக தான் எழுதினேன். மாலதி அக்காவும் நன்றாக தான் இருக்கிறது. .
  18. தவறுதலாக பதியப்பட்டு விடடது. மன்னிக்கவும்.
  19. கந்தையா அண்ணோய்! எனக்குப்புது பெயர் சூட்டியிருக்கிறீர்களா ? நன்றி நிலாமதி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.