Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11188
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. சிந்திக்க சிறு தொழில் முயற்சி
  2. பலாச்சுளை எப்படி இருக்கும் ? இனிப்பு சுவை உள்ளதா ? ஏன் உரிமையாளர் முகத்தில் மகிழ்ச்சியைக் காணோம் 😀
  3. "பிள்ளையை அடித்து (கண்டித்து ) வளர் முருங்கையை முறித்து வளர் " என்பார்கள் . அதிக கிளை விடும் எனும் காரணமாக இருக்கலாம். முருங்கையும் பப்பாசி யும் இலகுவில் ஓடியும் ( முறியும்) மரங்கள்.
  4. வெள்ளிக் கிழமைகளில் மரக்கறி சாப்பாட்டுடன் ஊற்றி குழைத்து உண்ண சொர்க்கம் தெரியும் 😀
  5. தற்போது உள்ள காலம் நாம் வாழ்ந்த காலம் இல்லை. எல்லாமே மாறிவிடட து .ஊரோடு ஒத்து ஓடவேண்டியதாயிருக்கிறது. தொடடதற்கும் வாளும் பொல்லும் கத்தியும்பேசுகிற காலம். போதை யால் சீரழிகிறார்கள்.
  6. இளமைக்கால அனுபவங்களை நகைச்சுவையோடு தரும் கோபி சங்கருக்கு பாராட்டுக்கள் .பதிவிடுவதற்கு நன்றி
  7. மனைவிக்கு தெரியாமல் குடிப்பவர் அமசடக்கு குடியர் சிறு பிள்ளைகளுக்கு தெரியாமல் குடிப்பவர் அலுமாரிக் குடியர். கோக் கானுக்குள் மதுவை ஊற்றிவைத்து வெளிப்படையாக குடிப்பவர் யூஸ் குடியர் (எதோ நம்மால முடிஞ்சது கண்டதும் கேட்ட்தும் )😃
  8. சுவி அண்ணருக்கும் ஏராளனுக்கும் வாழ்த்துக்கள்.
  9. போட்டியின் வர்ணனையாளர் இல்லாமல் யாழ்கள் போட்டி உற்சாகமின்றி இருக்கிறது விரைந்து நலம் பெற்று யாழுக்கு வரவும். பையனின் நிலையை "பட்டினி " ஞானக் கண்ணால் பார்த்தீர்களா ? பாவம் தலையிடி உண்ணவுமில்லை உறங்கவும் இல்லையாம் காய்ச்சலில். 😥
  10. எப்படியோ ஒருநாள் தான் பிடிபடப்போவது தெரிந்து பாவத்தை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.
  11. இவ கொழுந்து பறித்த மாதிரித் தான் . விரித்த தலையும் காலில் காலணியும் குனிஞ்சு வளைஞ்சு வேலை செய்யமாடடா " படம் காட்டுறா " 😃
  12. சிறீ ...இது அண்ணளவாக எத்தனையாம் ஆண்டாக இருக்கும்.? சுவி அண்ணாவின் காசுக்குற்றிகள் பாவித்த ஞாபகம் சாதுவாக இருக்கு .
  13. வணக்கம் வாங்கோ நல்லதம்பி ! எல்லோரும் நல்ல தம்பியாய் தான் வாறது பின் போகப்போக ....😀
  14. தலையில் விழாது சரிந்து உரசிச் சென்று இருக்கும். 😃
  15. நாங்களும் உங்களுடன் பக்கத்தில் இருந்து கேட்பதுபோல இருக்கிறது . தொடருங்கள் உங்களனுபவம் பலருக்கு அனுபவ பாடமாக இருக்கும்.
  16. ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம். பட்ஜெட் அனுமதித்தால். அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.
  17. யாழில் கருத்துப் படங்களை ஆர்வத்துடன் பதியும் தமிழ் சிறீக்கு என் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
  18. இலங்கையில் குழந்தைகளைக் கைவிடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம், குழந்தைப் பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க முடியாத அல்லது அந்த குழந்தைகளில் விருப்பமில்லாத பெற்றோர்கள், குழந்தைகளை அரசின் பொறுப்பில் விட்டுச்செல்லும் நோக்கியிலேயே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மைய வருடங்களில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தமது குழந்தைகளை வீதியில் கைவிட்டச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குழந்தை பெட்டிகள் அத்துடன் கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்தது 80 சிறுவர்கள் அவநம்பிக்கையான பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்தே குழந்தை பெட்டிகளை அறிமுகப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் என்.ஐ லியனகே தெரிவித்தார். இந்த நிலையில் கைக்குழந்தைகளை 'குழந்தை பெட்டிகளில்' விட்டுச் செல்ல விரும்பும் பெற்றோருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ஆணையாளர் கூறியுள்ளார். நாடு இந்தளவுக்கு சென்று விடடதா ? ஒரு வேளை ஆதாரமற்ற செய்தியாக இருக்குமோ ? தகவல் : லஙகஸ்ரீ
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.