Everything posted by நிலாமதி
-
சிரிக்கலாம் வாங்க
பசிதீரப் பத்தும் (கோபம் வேலை களைப்பு சோர்வு சமைக்கும் போதே )பறந்திடும்
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
அவரவர் தங்கள் காரியத்தை சாதித்து கொண்டனர் . உலகிற்கு படங் காட்டினார் . இவளவு செலவும் யாருடைய ...பணம் ? வருந்தி உழைக்கும் ஒருவரின் வரிப்பணம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் நலமோடும் மகிழ்வோடும் செல்வ வளமோடும் ......வாழ வாழ்த்துகிறேன்
-
சிரிக்கலாம் வாங்க
https://www.facebook.com/reel/1068324721492941 சடடென யாழ் கள நண்பர் ஒருவர் நினைவு வந்தார்.. யாராக இருக்கும் ? ஈழத்தின் மீது பிரியமானவராக இருக்குமோ? 😃
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அந்த பையன் பார்த்த பார்வை இருக்கே நீயுமா அப்பா ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இவ்வளவு புத்தகங்களையும் எழுதியவர்கள், சேகரித்தவர். பாதுகாப்பவர்,போற்றப்படவேண்டியவர்கள்.அழியாதசெல்வம் கல்வி. நூலகம் ஒரு அறிவுப்பெட்டகம்- உன்னால் முடியும் தம்பி
பலி கொடுக்க அழைத்துபோகும் ஆட்டுக்குட்டியை போல( சும்மா சிரிக்க மட்டும் ) ...கனடா அமெரிக்க பக்கத்தில சில மணி நேரங்களென்றபடியால் சமாளித்து விடடீர்கள் . முதல் வேலையாக மகன்கள் சொல்லியிருப்பார்கள் இனிமேல் இப்படி புக் பண்ணாதீங்க அப்பா ...மலிவு பார்க்கப்போனால் இப்படித்தான் இசகு பிசகாக மட்டுப் படுவோம்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்- உணவு செய்முறையை ரசிப்போம் !
சென்ற பிக் பாஸ் காலங்களில் "சம்மந்தி" என்று இதற்கு பெரிய மவுசு ...எல்லோர் வாயிலும் பேச்சிலும்" சம்மந்தியா "அது என்ன சதா தேங்காய் துவையல் தான் ...- யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது
அவசரம் அவசரம் எதிலும் அவசரம்.அறியாத வயது ...சந்தில சிந்து பாடிய வரை யும் உள்ளே தள்ளனும். தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது .- குட்டிக் கதைகள்.
சண்டையில்லாத குடும்பம் எது ? ஆனால் குடும்ப கூடு மட்டும் கலையக் கூடாது .பெற்ற பிள்ளைகளுக்காக தியாகத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களேத் தனை பேர் சண்டை என்பது கருத்து வேறுபாடு சற்று நேர உணர்ச்சி கொந்தளிப்பு .- குட்டிக் கதைகள்.
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு தம்பதியினரில்... மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள் ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்... எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான். படித்ததில் பகிர்ந்தது- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சேர்ந்து சிரிப்போம்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சாதரண மக்களின் வாழ்க்கையை விட நடிகர் நடிகைகளின் வாழ்க்கை மிகவும் துன்பமானது . எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாமல் ஏமாந்து போவார்கள். சொத்து ஏமாற்றி பறிக்கப்படும் நடிகர்கள் குடி போதையில் தள்ளாடுவார்கள் வேறு கெடடவை எல்லாம் தொற்றிக் கொள்ளும். இறுதிக் காலம் மிக கஷ்ட்டப்பட்டு போவார்கள். எல்லாருக்கும் ஒரு சீசனுக்கு தான் வருமானம். புத்தியாக முதலிட தப்பிக்க கொள்ள லாம் காலத்தால் அழியாத இன்னிசைப்பாடலகளில். இதுவும் ஒன்று ! என்ன வரிகள், என்ன குரல் இனிமை. இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு விட்டு , இன்று எதையோ இழந்து நிற்பது போல் உணர்வு.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
யார் வரவை தேடுது ?- சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம்.
சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தில்லை தாய்வீடு சென்றாலும் அங்கு " அழைக்கும் பேர்வழி" என அவளை விட்டு வைக்க வில்லை .போய் நச்சரித்தார்கள் .பாவம் நொந்து போன maனம் என்ன செய்யும். . மிகவும் மன வேதனைப்படடாள் ஆறுதல்கூற எவரும் இல்லை ..ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என ஊருக்கா வாழ்ந்தீர்கள்?. வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியவில்லை. தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். எங்கே அந்த ஊரவர்கள் எங்கே அந்த உறவுகள் மாண்ட உயிரை மீண்டும் தர முடியுமா ? தாய் தந்தை சகோதரனுக்கு மாறாத துயரம்.சமூக வலைத்தளங்கள் கூவி கூவி செய்தி போடடன தங்களுக்கு "வியூஸ்" வர வேண்டும் என முக புத்தகம் யூயூ டுயூப் இன்ஸ்டா என்று அத்தனை வகைக்கும் மெல்ல அவல் கிடைத்தது போல, எல்லோர் வாயிலும் நுழைந்தது காற்றை பறக்கிறது. போதும் நிறுத்துங்கள் சட்ட்ம் தான் கடமையை செய்யுங்கள் அவர்கள் கர்மாவாழ்வு முழுதும் துரத்தட்டும் .ஆயிரம் காலத்துப்பயிர் என்பர் எவ்வ்ளவு தூரம் விசாரித்தார்கள்? .அவன் சைக்கோவாம் வேலையற்றவனாம் பூட்டிய அறைக்குள் இருபவனாம் ஆனால் தாய் தந்தைக்கு தெரியாதாம். என்ன பிள்ளை பெத்தது வளர்த்து வைத்திருக்கிறார்கள். அப்பாவியின் உயிரை எடுக்கவா அதுவும் இக்காலத்தில் இப்படி படட பிற போக்குத் தனமா ? தயவு செய்து மீண்டும் பெற்றவர்களைக் பேசி பேசியே காயப் படுத்தாதீர்கள்.மீடியாவுக்கு முகம் காட்டுவதை பேட்டி எடுப்பதை குறையுங்கள்.காலத்துக்கு காலம் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சடடமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றபடடால் நாடு சிறக்கும். தேவை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. பிரச்சினைகளுக்கு மரணம் தீர்வல்ல- உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
பாரைக் கருவாடு "வாசம்" வீசாதா? முழு சாப் பாட்டுச் சாமான்களையும் கட்டிக் கொண்டு வந்து விட் டீர்கள்.( எக்ஸ்ட்ரா லக்கேஜை )😃- இரசித்த.... புகைப்படங்கள்.
நம்ப முடிய வில்லை. மரத்தில் ஒடடப்படட மாங்கனியா ? ஒரு இலை கூடவா இருக்கவில்லை- கனடா தின வாழ்த்துக்கள்.
அகதியாக வந்தவர்களுக்கு உணவு உடை தந்து படிப்படியாக முன்னேற வைத்து வாழ வகை காட்டிய என் கனேடிய நாட்டுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், நேர்மையாக வாழ்ந்து , நாட்டுக்கு உண்மையாக இருப்போம். கலாச்சாரத்தை பேணுவோம். யாரும் வரலாம் கல்வித் திறமையோடு நேர்மையான வழியில் புலம் பெயருங்கள். என்றும் வாழிய வாழியவே ... (நேற்று கொலிடே பிசி )- இரசித்த.... புகைப்படங்கள்.
உனக்கு என்ன பேரம்மா ? அல்லதுAI விளையாட்டா ? 😃- 'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி எல்லோர் வாழ்விலும் இதை நினைவில் கொள்ளுங்கள். உனக்காக நீ போராடு ....மிகவும் விருப்பமான ஒரு சொற் பதம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது போராடி எடுத்த ஒரு விடயம்.- 'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
பிள்ளை முறையிடும் போது "நம்ம வீட்டுக்கு வாம்மா" நான் பார்த்து கொள்வேன் என தைரியம் கொடுத்திருக்கலாம் தானே ..அல்லது போய் என்ன எது என்று பார்த்திருக்கலாம் தானே மணப்பெண் வீட்டுக்கு வந்தால் ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என்று...படித்த பிள்ளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருப்பார் . கடைசியில் ....இப்படி போய்விட்டாயே அம்மா ? கண்டறியாத ஒருவனுக்கு ஒருத்தி ...அது உண்மையான பாசமுள்ள கணவனாய் இருந்தால் மட்டும். இவ்வ்ளவும் செலவு செய்து கட்டி கொடுத்த மனுஷன் உன்னை பார்க்கமலா விட்டு விடுவார்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கணக்குபோடுவோம். நீயும் நானும் கணக்குபோடுவோம் வாழ்க்கையை இப்படி வாழனும் அப்படி வாழணும் என்று ஆனால் வாழ்க்கை அது பாட்டுக்கு ஒரு கணக்கைப்போட்டு நம்கையில் கொடுக்கும் பாருங்க அப்போது தான் புரியும் இயற்கையையும் கடவுளையும் யாரும் ஏமாற்ற முடியாது. என்று - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.