நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,130
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. ஆறுவயது சிறுவனை எண்ணிக் கவலையாக உள்ளது . உறவினர் அன்பும் ஆதரவும் கொடுத்து வளர்ப்பார்களென எண்ணுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.
 2. அவர்கள் வாழட்டும் கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம் குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார். உறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர தேவைகள் அதிகரிக்க வே வீட்டு வேலையுடன் சிறார்களை பராமரிக்கும் பகுதி நேர முயற்சியிலும் மனைவி ஈடு பட்டு வாழ்க்கைச் செலவைப் பகிர்ந்து கொண்டாள் குழந்தைகளும் கல் வியில்சிறந்து வளர்ந்து மூத்தவன் இன்ஜினியராகவும். இரண்டாவது பையன் சத்திர சிகிச்சை உதவியாளராகவும் மூன்றாவது கட்டிடநிர்மாணிப்பாளர்களாவும் ஆயினர். காலப்போக்கில் ..பருவத்துக்குரிய ஆசை கள் வரவே மூத்தவன் ஒரு இந்துப்பெண்ணை காதலித்தார் . இப்போது அவர்கள் வீட்டில் புயல் வீசத்தொடங்கியது ...தாயின் வளர்ப்பு என தந்தையும் தாயும் மோதிக் கொண்டு ஆளை ஆள் குறை கூறிக் கொண்டு இருந்தனர். பாக்கிய ராஜுக்கு கால ஓட்ட்த்தின் வேகம் நடைமுறை விளங்க வில்லை...மனைவி எவ்வளவோ எடுத்துசொல்லிப் பார்த்தார். மக்கள் மூவரும் தாயின் மீது மிகவும் நேசமும் கரிசனையும் உள்ளவர்கள். பிள்ளைகள் நண்பர்களை அழை த்து வந்தால் அவர்களுக்கு சலிக்காது உபசரிப்பார். கணவனின் போக்கு மாறத்தொடங்கியது. குடியில் ஆரம்பித்து ...இவர்களை ப்பிரியும் நிலை ஆகியது ...மனைவியோ யாரைக் க ட்டினாலும் என் பிள்ளைகள் சந்தோஷமாய் வாழட்டும் என்னும் நிலையில் இருந்தாள். தந்தை யோ ..குல ம் கோத்திரம் சாதி சம்பிரதாயம் என் இன்னும் மாறாத மனம் உள்ளவராயிருந்தார். ஒரு கோடை விடுமுறையில் கணவன் தாயகம் சென்று ..தனது பழைய காணிகளை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். .. மூத்தவனோ தாயுடனும் வருங்கால மனைவியின் பெற்றவர்களுடனும் கலந்து ஆலோசித்து ...திருமண நாள் குறித்து விட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து தாயின் ஒன்றுவிட்ட் அண்ணரின் துணையுடன் திருமணம் நடக்க இருக்கிறது .. திருமண நாளுக்கு சற்று முன்பாக தந்தைக்கு அறிவிக்க இருக்கிறார்கள். திருமணம் சுபமே நடக்க நீங்களும் நாங்களும் வாழ்த்துவோம். தந்தை வருவாரா ...கலகம் நடக்குமா பொறுத்து இருந்து பார்க்கலாம் . வருங்கால இளையோரின் வாழ்வு அவர்கள் முடிவுப்படியே நடக்கும் நாம் வெறும் பார்வையாளர் ...எங்கள் காலத்தில் நடைபெற்றது போல ஊர் கூட்டி ...உறவுகள் கூடி பெற்ற்வரின் எண்ணப்படி நடக்கும் என எண்ண முடியாது .கால ஒடடத்துக்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும். இது உங்கள் வீட்டின் கதையாகவும் இருக்கலாம். .இது என் நண்பியின் வீட்டுக் கதை ...உங்கள் வீடுகளில் இப்படி இருந்தால் எப்படி சமாளிப்பீர்கள்...?
 3. அநியாயாமாய் கொல்லப்படட தூத் த்துக் குடி உறவு களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
 4. உன்னை அறிவேன் மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள் மாமியாரை நினைத்து, கொஞ்சம் பயம் இருக்கவே செய்தது. வீட்டு நிர்வாகம் எல்லாம் மாமியார் தான். 'கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்; உன் மாமியார் நல்லவங்களா தான் தெரியறாங்க. அவங்க மனசு கோணாம நடந்துக்க வித்யா...' என்று அறிவுரை கூறியிருந்தாள், அம்மா. தேவையான குளியல் சோப்புகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''ஹேய் வித்யா... எப்படி இருக்கே... உன் கல்யாணத்துக்கு என்னை, 'இன்வைட்' பண்ணலயே...'' என்ற குரல் கேட்டு திரும்பியவள், அதிர்ச்சியின் உச்சத்துக்கு போனாள். 'பிரபு... இவன் எங்கே, இங்கே...' மனம் படபடக்க, அவனையே பார்த்தாள். ''என்ன வித்யா... காதலிக்கிறது ஒருத்தனை... கல்யாணம் பண்ணிக்கிறது இன்னொருத்தனையா... பணக்கார இடம் கிடைச்சதும், என்னை கழட்டி விட்டுட்டே அப்படித்தானே...'' என்றான், ஏளனமாக! ''இல்ல பிரபு... காதல் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராதுன்னு எங்கம்மாப்பா மறுத்துட்டாங்க... அவங்களுக்கு நான் ஒரே பெண்; எதிர்த்து எதுவும் செய்ய முடியல. தயவுசெய்து, என்னை மறந்துடுன்னு சொன்னேனே... நீ இன்னுமா பழைய விஷயங்கள ஞாபகம் வச்சுருக்கே...'' என்றாள், சங்கடத்துடன்! ''எப்படி வித்யா மறக்க முடியும்... காலேஜில் படிக்கும்போது, சிரிச்சு பேச வேண்டியது... படிப்பு முடிஞ்சதும், பெத்தவங்க பாத்த பையன கல்யாணம் பண்ணிகிட்டு, 'செட்டில்' ஆக வேண்டியது... நடந்தது எதையும் நான், மறக்கல; உனக்கு பாடம் புகட்டணும்ன்னு தான் அமைதியாக இருந்தேன். நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்திடறேன்னு பாக்கிறேன்,'' என்றான், குரூரமாக! ''அய்யோ... அப்படியெல்லாம் எதுவும் செய்திடாதே... உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்,'' என்று அவள் கெஞ்ச, அதற்குள் அங்கு வந்த சாரதா, யாரோ ஒரு இளைஞன், வித்யாவிடம் பேசுவதைப் பார்த்து,''யாருப்பா நீ?'' என்று கேட்டாள். ''வணக்கம் ஆன்ட்டி... நான் வித்யாவோட காலேஜில் ஒன்னா படிச்சவன். வித்யா, என்னை, கல்யாணத்துக்கு, 'இன்வைட்' பண்ணல... அதான் விசாரிச்சுட்டு இருந்தேன்,'' ஓரக்கண்ணால் வித்யாவை பார்த்தபடி சொன்னான். ''அதனாலென்னப்பா... கல்யாணத்துக்கு வரலைன்னா என்ன... நாளைக்கு வீட்டுக்கு வாயேன்... என் மகனும் வீட்டில் தான் இருப்பான்; 'லஞ்ச்' சாப்பிட்டு போகலாம்.'' ''கட்டாயம் வரேன் ஆன்ட்டி; வித்யா கூப்பிடாட்டியும் நீங்க அன்பாக கூப்பிடறீங்களே...'' என்றான். அவனிடம் அட்ரஸ் கொடுத்த சாரதா. ''போகலாம் வித்யா,'' என்றாள். 'கடவுளே... என்ன நடக்கப் போகிறதோ தெரியலயே...' என்று அவள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, அவனுக்காக, வடை, பாயசத்துடன் சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள், சாரதா. அவள் கணவன், 'உனக்கு ரொம்ப, க்ளோஸ் பிரெண்டா... கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு சண்டைக்கு வந்தானா'ன்னு கேட்கறார். மனசு, 'படபட'வென்று அடித்தது. என் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடப் போகிறான். எதுவுமே செய்யத் தோன்றாமல், முகம் வெளிறி உட்கார்ந்திருந்தாள், வித்யா. ''வித்யா... நீ இன்னும் குளிக்கலயா... போய் குளிச்சுட்டு, நீட்டா டிரஸ் பண்ணிட்டு வா... உன் பிரெண்டு விருந்துக்கு வரப் போறான் இல்லயா... நல்லவிதமா கவனிச்சு அனுப்புவோம்,'' சாரதா சொல்ல, மவுனமாக எழுந்து போனாள். பெரிய பார்சலுடன் வந்தவன், அதை வித்யாவின் கணவனிடம் கொடுத்து, நீண்ட நாள் பழகியவன் போல் சிரித்து சிரித்து பேசினான். விருந்து உபசரிப்பு முடிந்து, ஹாலில் வந்து உட்கார்ந்தான், பிரபு. நிலை கொள்ளாமல் தவித்தாள், வித்யா. வித்யாவை பார்த்து சிரித்தவன், ''மாதவன்... உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். அதை, நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல... இருந்தாலும், அதை மறைப்பது தப்புன்னு என் மனசுக்கு படுது,'' என்றான் பிரபு. தலையில் இடி விழப் போகிறது என்பது புரிய, வரும் கண்ணீரை அடக்கினாள், வித்யா. ''தம்பி... நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியல... அதுக்கு முன், நாங்க சொல்ல வந்ததை கேளுங்க...'' என்ற சாரதா, மகனை பார்த்து, ''நீ சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள். ''நீங்களே சொல்லுங்கம்மா...'' ''பிரபு... உங்கள பத்தி, வித்யா எங்ககிட்ட சொல்லியிருக்கா... காலேஜில் படிக்கும்போது, நீங்க இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் விரும்புனீங்களாம்... ஆனா, அதுக்கு வித்யாவின் அப்பா உடன்படலயாம்... ''யோசிச்சு பாத்தபோது, பெத்தவங்க சொல்றபடி நடப்பதுதான் நல்லதுன்னு அவளுக்கு தோணுச்சாம்... உங்கள நேரில் பாத்து மறந்துட சொல்லி, மன்னிப்பு கேட்டாளாம்... நீங்களும் மறப்பதாக சொன்னீங்களாம்... இது, ஏதோ இமாலய தப்பு போல கல்யாணம் ஆனதும் எங்ககிட்ட சொன்னா... ''இதெல்லாம் சகஜம் வித்யா... பருவ வயதில், ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடியிறதில்ல. கல்யாணத்துக்கு முன் நடந்தத, கனவா மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்ன்னு சொன்னேன். ''என்னப்பா நான் சொல்றது சரிதானே... நீயும் ஒரு நல்ல பெண்ணாக பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப்பாரு. நீ என்னமோ சொல்லணும்ன்னு சொன்னியே... இந்த விஷயமா... இல்ல வேறு ஏதாவதா?'' சாரதா, அவனை தீர்க்கமாக பார்க்க, அவனோ, உட்காரவே சங்கடப்பட்டவனாக, ''இல்ல ஆன்ட்டி... இந்த விஷயம் உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சு, மன்னிப்பு கேட்கலாம்ன்னு...'' அவன் குரல் உள்ளே போனது. ''பரவாயில்லப்பா... நீ கிளம்பு... நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம்.'' அவன் வெளியேற, கண்ணீரை அடக்க முடியாதவளாய், சாரதாவை கட்டிக் கொண்டு அழுதாள், வித்யா. ''இங்கே பாரு... எதுக்கு இந்த அழுகை... நீ எந்த தப்பும் செய்யல. அவன்கிட்ட சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். கல்யாணத்துக்கு முன் நடந்தத மறந்துட்டு, இனி, உன் கணவனுக்கு மட்டும் மனசில் இடம் கொடுத்து, வாழ்ந்தால் போதும்; புரியுதா...'' என்றவள், ''கடைசியா அவன் உன்கிட்டே பேசினத கேட்டேன்... அவன் மனநிலை புரிந்துதான் வரச்சொன்னேன்... ''சரி சரி... போய் முகத்தை அலம்பிட்டு, மாதவனுடன் எங்காவது வெளியே போயிட்டு வா... நான் கொஞ்சம், 'ரெஸ்ட்' எடுக்கறேன்... ஆனா, ஐந்து மணிக்கு வந்துடணும் சரியா... உன் கையாலதான் நான் காபி குடிக்கணும். புரியுதா...'' அத்தையின் குரலில் கண்டிப்பை தாண்டி தெரியும் அன்பு புரிய, அவளை பார்த்து, மனம் நிறைய சிரித்தாள், வித்யா. நன்றி தினமலர் .. பரிமளா ராஜேந்திரன்
 5. இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வலிகள் வார்த்தைகளாக கவிதை யாய் உயிர் கொடுத்துள்ளது . பகிர்வுக்கு நன்றி .
 6. பெண்கள் தனியே புறப்படடலும் அவர்களது சிந்தனை வீடு கணவர் பிள்ளைகள் என கூடு திரும்பும் பறவைகள் போல சென்ற இடத்திலும் நிலைகொள்ளாது எப்போது வீடு சேர்வோம் என அங்கலாய்த்துகொன்டு இருக்கும். குறுகிய கால சந்திப்பாக பள்ளித் தோழிகள் சென்று வரலாம். நம் ஊர் பெண்கள் சில வரையறைகளைக் கொண்டு ஒரு வட்ட்த்துக்குள்ளே வாழ பழகி விட்ட்னர். என்பது தான் உண்மை
 7. ஆற்றுப்படுத்தல் ( கவுன்சிலிங் ) எல்லோருக்கும் எதோ ஒரு கால கட்ட்த்தில் தேவையான ஒன்று ... சிலர் தாமாகவே மீண்டு விடுவார்கள். சிலருக்கு கவுன்சிலிங் தேவை . பகிர்வுக்கு நன்றி
 8. சுவியண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 9. பூமழையே உன்னை புதுக்கவிதையில் சுவாசித்தேன். நானும் ரசித்து வாசித்தேன்
 10. காலத்தால் அழியாத பாடல்களைத்தந்த இவருக்கு அஞ்சலி
 11. பிடி கயிறு அழகான கதை . கிராமத்து தமிழ் வழக்கு கொஞ்சம் வாசிக்க சிரமம் . புரிந்து கொள்ள முடிகிறது
 12. வணக்கம் அருள் மொழி வர்மன் ...உங்கள் ஆக்கம் கவிதைப் பூங்காடு பகுதியில் பதிவது பொருத்தமானது . அல்லது நிர்வாகத்திடம் உரிய பகுதிக்கு மாற்றும் படி கேட்கலாம். அரிச்சுவடிப்பகுதியுள் பதிந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்களாக்கங்கள் வரவேண்டும்
 13. இழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது யாரும் பேச விரும்புவதில்லை. . அது வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால் எப்படி தாங்கி கொள்வது ...?
 14. இழப்பு கணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் ? https://www.youtube.com/watch?v=_BgJoaS04qU
 15. செய்திக்குப்பஞ்சம் தமிழர்களை ஈர்க்கும் தந்திரமாக இருக்கலாம்