Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு கியூபாவிலா விசாரணை நடக்கும் என்று நக்கலாகச் சொன்னவர் சுமத்திரன்.மக்கள் எல்லோரும் மறதியானவர்கள் என்ற நினைப்பில் எழுதக்கூடாது.அதற்கும் ஒருபடி மேலே போய் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று சொன்னவரும் இதே சுமத்திரன்தான்.
  2. பையன் வந்தாச்சு திரி கலகலப்பாகப் போகுது.
  3. பையன் இல்லாத இந்தத்திரி கலகலப்பாக இல்லை. பையன் எங்கிருந்தாலும் உடன் களத்துக்கு வந்து கருத்துகளளைப் பதிவிட்டு களத்தைக் கலகலப்பாக்கவும்.யாழ்களத்தில் முகம்தெரியாத உறவுகள் ஏதாவது எழுதிவிட்டார்கள் என்பதற்காக சின்னப்பிள்ளை போல் கொவித்துக்கொண்டு போகவேண்டாம். எங்களையெல்லாம் போட்டியில்கலந்து கொள்ள உற்சாகம் கொடுத்து வி;டு பையன் ஒதுங்கி இருக்கக்கூடாது. யார்என்ன சொன்னால் நாம் கேபகும் பாதை தெளிவாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மீண்டும் களத்திற்கு வந்து கருத்து எழுத இந்த அன்பு அண்ணனின் அன்பு வேண்டுகொள்.
  4. 40 ஏம்பிக்களை வென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் பாராளுமன்ற கன்ரீனில் மலிவு விலையில் சாப்பாடு சாட்டதைத் தவிர வேறு ஓரு பிரயோசனமும் இல்லாத மாதிரி இந்த 5 பேருக்கும் புள்ளிகள் கிடைத்து இருக்குது.
  5. மறுபடியும் கூட்டா?இன்று இந்த குழு வெற்றி பெற்றால் சுவியர் நந்தனும்உச்சிக்குப் போய் விடுவார்கள்
  6. இதெனனப்பா இந்தக் குறூப்பில இருக்கிற 3 பேர் எப்பவும் ஒரே மாதிரி சிந்திக்கினம்?
  7. முதல்வர் சுவி ஐயாவுக்கு வாழ்த்துகள்.விடாது புள்ளிகளிளைப் பெற்றுக்கொண்டிருக்கும் செம்பாட்டானுக்கும் நந்தனுக்கும் வாழ்த்துகள். ஈயடிச்சான் கொப்பி அடிக்கக்கூடாது இடைக்கிடை சில மாற்றங்களையும் செய்ய வேண்டும்.கோஷானும்தான் கொப்பியடிச்சவர். அவருடைய நிலமையைப்பாருங்கள் . அவர் பழைய போட்டியைப் பார்த்துக் கொப்படிச்சிருப்பாரோ??
  8. மகஜர் கொடுக்கப்பட்ட எம்பிக்கள் எல்லோரும் இந்திய விசூசிகள். அதிலும் இந்த அடைக்கலநாதன் சிறிதரன் இரண்டுபேரும் மினவும்விசுவாசிகள். மற்றையவர்கள் புதியவர்கள் என்பதால் இனிமேல்தான் அவர்களின் விசுவாசததைப்பற்றி அறிந்து கொள்ள முடியும்.மோடி சம்பூரை பறித்தெடுக்கவே வருகிறார்.திருடனிடம் கோரிக்கை வைத்து என்ன பயன்?
  9. முதல்வர் அல்வாயனுக்கு வாழ்த்துகள் கூடவே செமபாட்டகனுக்கும்.சத்தமில்லாமல் முன்னேறிவரும் நந்தனுக்கும் வாழ்த்துகள்
  10. சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு நாளை திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருக்கின்றார் சம்பூரில் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 603 ஏக்கர் நிலபரப்பில் இது நிறுவப்பட இருக்கின்றது ஆரம்பத்தில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த இவ் திட்டம் மக்கள் எதிர்ப்பையடுத்து இது சூரிய மின் உற்பத்தி திட்டமாக மாற்றப்பட்டிருந்தது அதன் பிரகாரம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அதாவது முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக செயற்படுத்த இருக்கின்றார்கள் உண்மையில் அபிவிருத்தி மற்றும் முதலீடு தொடர்பிலான செயற்திட்டங்களை அரசியலை முன்னிறுத்தி எதிர்க்க வேண்டியதில்லை ஆனால் அபிவிருத்தி என்கின்ற பேரில் வேறு தரப்பின் நலன்களை மையப்படுத்தியதாக இருக்கும் போது பேச வேண்டி இருக்கின்றது சம்பூரில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில் 308 ஏக்கர் மிகவும் வளமான விவசாய நிலமாகும். அதே போல விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்படுகின்ற 5 நீர் நிலைகள் இங்கு இருக்கின்றது. அதே போல கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் அங்கிருக்கின்றன இவ்வாறு வளமான வயல், குளங்கள் , பசுமையான காடு என பரந்த நிலத்தில் ஒரு பகுதியை மின் உற்பத்தி திட்டம் என்கின்ற பெயரில் இந்தியாவிற்கு தாரை வார்கின்றார்கள் அந்த பகுதியில் தான் மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டுமென்றால் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமற்ற குளங்கள் அற்ற பெருங்காடுகளற்ற விலங்குகளின் வாழ்வை அச்சுறுத்தாத சூரியொளி அதிகம் கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பெற்றிருக்க முடியும் . அதே போல சம்பூருக்கு மேலதிகமாக இலங்கை பூராகவும் தரிசு நிலங்கள் பரந்து விரிந்து இருக்கின்றன ஆனால் அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு வாழ்வாதாரத்திற்கு உதவும், அதிகாரமற்ற மக்களின் உறுதிக் காணிகளில் இந்த நிலையத்தை அமைக்க துணை போய் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் இந்த நிலத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஜேவிபி ஆளும் கட்சியாக இதற்கு துணை போகின்றது என்பது தான் அதியுச்ச துன்பமான நிகழ்வாகும் குறிப்பாக மக்களின் ஜீவனோபாயத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எத் திட்டங்களையும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என பேசிய ஜேவிபியின் பிரதி அமைச்சர் திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அமைதியாக இருக்கின்றார் சம்பூர் மக்களின் காணிகள் அவர்களிடம் சேர்க்கப்படும் வரையில், போராடுவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழு முதல் நீதிமன்றங்கள் வரை சென்ற திரு அருண் ஹேமச்சந்திரா தற்போது அதிகாரத்திலிருந்தும் வேடிக்கை பார்க்கின்றார் சூரிய உற்பத்தி திட்டத்தை நடை முறைப்படுத்தினால் வருடந்தோறும் பெரும்போகத்தில் மட்டும் 112,000 புசல் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் என சொல்லுகின்றார்கள் ஆனால் அதிகாரமற்ற மக்கள் என்ன செய்ய முடியும் ? யாரிடம் முறையிட முடியும் ? அந்த மக்களோடு இருந்து அவர்களுக்காக பேசிய ஜேவிபி யே தடம்மாறி அவர்களை கைவிட்ட பின்னர் என்ன செய்ய முடியும் ? 2005 ஆம் ஆண்டு விபு கட்டுப்பாட்டின் கீழ் சம்பூர் இருந்த நேரமே இந்தியா இலங்கையிடம் அங்கு அனல் மின் நிலையமொன்றை அமைக்க கோரிக்கை வைத்திருந்தது நுரைச்சோலை மின் உற்பத்தி சீனாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் திருகோணமலை துறைமுகத்திற்கு நெருக்கமான சம்பூரில் தனக்கு மின் உற்பத்தி நிலையம் வேண்டும் என இந்திய நிர்பந்திக்கின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள், திருகோணமலை துறைமுகம் என தொடங்கி யாழ்ப்பாண தீவுகள் வரை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றது இதற்காக ஜேவிபி யை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் செப்டம்பர் 12, 1989 அன்று மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவராகப் பணியாற்றிய Dr. Gladys Jayawardene அவர்களை இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய எடுத்த தீர்மானித்தமைக்காக ஜேவிபி கொ*லை செய்தது இவ்வாறு இந்திய எதிர்ப்பை மையப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய அதே ஜேவிபி இன்று ஆளும் கட்சியாக இந்தியாவிற்கு துணை போகின்றது அண்மைய காலத்தில் இலங்கை பொருத்தமற்ற வேறு தரப்புகளின் விருப்பங்களை மையப்படுத்திய அபிவிருத்தி முயற்சிகளால் தான் Debt Trap யில் சிக்கி கொண்டது இந்த தடவை மக்களை அகதிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து விட்டு முதலீட்டு திட்டங்களை கட்டியெழுப்ப முடியாது என்பதை தெரிந்து கொள்ளும் இனமொன்றின் குரல்
  11. நாளைக்கு மும்பை வென்றால் செம்பாட்டான் எட்டாத உயரத்திற்குப் போய் விடுவார். மும்பை தோற்றால் அல்வாயானும் நந்தனும் முதல்வர்பதவிக்கு செம்பாட்டானோடு மல்லுக்கு நிற்பார்கள்.
  12. பெரிய Home work எல்லாம் செய்துதான் கேள்விக்கு விடை எழுதியிருக்கிறீர்கள்.நமக்கு இதுக்கெல்லாம் பொறுமையில்லை.தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் வீற்றிருக்கும் செம்பாட்டானுக்கு வாழ்த்துகள்.
  13. https://www.facebook.com/share/12MY5UExwoQ/?mibextid=wwXIfr உண்மைதான் இதுவும் ஒருவகை சூதாட்டம்தான்.பந்து போடுபவர்களும் வேண்டுமென்றே ஓனிக்கு சிக்ஸர் அடிக்கக் கூடிந்தாக இலகுவான பந்துகளைப் போடுவதும் சிக்ஸர் அடிக்க முடிநாத பந்துகளுக்கு ஓட ரண்ஸ் எடுக்காமல் இருப்பதுவும் ஒலு வியாபாரத்தந்திரந்தான்.
  14. வாழ்த்துகள் செம்பாட்டான். இனி செம்பாட்டானை நெருங்க முடியாது. செம்பாட்டான் துல்லியமான கணிப்புக்ளைச் செய்திருக்கிறார்.துணைமுதல்வர் சுவி ஐயாவுக்கும் வாழ்த்துகள்.நம்ம அன்புத்தம்பி பையனை நினைத்தால் ரொம்ப பரிதாபக இருக்கிறது. அவரைப்பார்த்து கொப்பியடித்து இடைக்கிடை மாற்றங்களைச் செயதவர்கள் நான் உட்பட பாஸ்மார்க் எடுக்கப் பையன் பெயில் மார்க் எடுத்திருப்பது மிகவும் சோகம். இந்த நிலைமையிலும் களத்தைக் கலகலப்பாக வைத்திருக்க எங்கள் பையனால்தான் முடியும்.
  15. என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.
  16. முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துகள்.;
  17. என்னுடைய வாலிப வயதில் அப்போது ஏஎல் படிக்கும் போது வந்த படம் பாடல்கள் எல்லாம் அருமை. இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தல் தனியாக நின்று அந்தப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியதற்கு அர்த்தம் பொதிந்த வரிகளே காரணம். அருமையான படம்.ராஜேந்தர் பாடல்களுக்கு ம்டமு; தனித்தனிக் கசட்டுக்கள் வைத்திருந்தேன். என்னதான் இளையாராஜா இசை மனதை வருடினாலும் ராஜேந்தரின் வரிகள் அந்த வரிகளை மூழ்கடிக்காத இசை கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.