Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. @nochchi அவர்கள் இதை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் களத்தில் போட்டிருந்தார் என்று ஞாபகம்.
  2. படம் இல்லாத இலங்கைப் பயணம் - எட்டு - அவசரப் பயணம் ---------------------------------------------------------------------------------------------- இன்னும் மூன்று நாட்களே பிள்ளைகளுக்கு இருக்கின்றது என்ற நிலையில், அங்கே போகலாமா அல்லது இங்கே போகலாமா என்று எந்தக் குழப்பமும் நாங்கள் படாமல், வாகனக்காரர்களையே கேட்டு விடுவோம் என்று கேட்டோம். இந்த இரண்டு வாரங்களில் அவர்களுடன் நல்ல பழக்கம் வந்துவிட்டது. எங்களுக்கு மட்டும் இல்லாமல், வேறு சில உறவினர்களுக்கும் அவர்களை பயன்படுத்தி இருந்தோம். ஊரில் இருந்து நேரே திருகோணமலை, பின்னர் அங்கிருந்து அப்படியே கண்டி, இரவு கண்டியில் தங்கி, அடுத்த நாள் அங்கே சுற்றிப் பார்த்து விட்டு, மதிய நேரத்தின் பின் பின்னவல யானைகள் மற்றும் ஆயுர்வேத தோட்டங்கள், அதன் பின்னர் அப்படியே கொழும்பு என்று ஒரு அவசர தேர்தல் பிரச்சாரப் பயணம் போன்ற ஒன்றை அவர்கள் திட்டமிட்டுத் தந்தனர். ஆயுர்வேத தோட்டம் என்னத்துக்கு என்று கேட்டோம். வெளிநாட்டவர்கள் எல்லோரும் அங்கே போவார்கள் என்றனர். போய்........என்று இழுத்தோம். போய், நிறைய வாங்குவார்கள் என்றனர். எந்த நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கின்றோம் என்று சொல்கின்றோமே, ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வாகன ஓட்டுநர்கள் வந்து சேர்ந்தது ஆச்சரியம். கொழும்பில் கூட இதே ஆட்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள். ஒரு தடவை அவர்களின் வாகனங்கள் எல்லாம் வெளியில் போய் விட்டன, ஆனாலும் இன்னொரு ஆட்களிடம் இருந்து வாகனத்தை சரியான நேரத்திற்கு எடுத்து வந்திருந்தனர். கன்னியா வெந்நீருற்றில் நீர் இன்னும் அதிகமாகச் சுட்டது. சில கிணறுகள் கொதித்தது. இது இயற்கை என்று நம்ப முடியவில்லை. முன்னரும் போய் இருக்கின்றேன், அப்பொழுது இவ்வளவு சுட்டதாக ஞாபகம் இல்லை. முன்பு இந்தப் பகுதியை சிங்களமயப் படுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனிமேல் அந்தக் குற்றச்சாட்டுக்கு தேவை எதுவும் இல்லை. முழுவதும் செய்து விட்டார்கள். அங்கே மாற்றுவதற்கு இனி ஒன்றும் இல்லை. இராவணன் அவரின் தாயாரின் ஈமச்சடங்கிற்கு இந்தக் கிணறுகளை உண்டாக்கினார் என்று சொல்கின்றது புராணம் என்று பிள்ளைகளுக்கு சொன்னேன். இந்தப் பகுதியில் எல்லாமே இராவணன் தான் என்றும் சொன்னேன். பிள்ளைகள் சுற்று முற்றும் பார்த்தனர். கொஞ்சம் மேலே ஒரு பெரிய புத்த பகவான் கண் மூடி அமர்ந்திருந்தார். அடுத்தது கோணேஸ்வரர் கோயில். நாங்கள் அங்கே போன நேரம் இராவணன் வெட்டு முன் நின்று ஒரு யூடியூப்பர் அவரின் நிகழ்வை பதிந்து கொண்டிருந்தார். நன்றாகவே செய்தார். நான் பிள்ளைகளுக்கு கதை சொல்லாமல், அவர் சொல்வதைக் கேளுங்கள் என்றேன். ராவணன் ஒரு நாயகனா அல்லது பாதகனா என்று பிள்ளைகள் குழம்பி நின்றனர். நான் முன்னரும் அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன், எங்கள் நாட்டில் அவர் ஒரு பேரரசன் என்று. காப்பியம் சொல்வது போல அவரை நாங்கள் ஒரு மோசமானவராக பார்ப்பதில்லை என்று. ஆனாலும், ராமன் ராவணனை கொன்ற நாளே தீபாவளி என்று எங்கோ புத்தகம் ஒன்றில் பிள்ளைகள் படித்து வைத்திருந்தனர். இனி முடிவு அவர்களின் கைகளில். கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் குடுகுடுப்பை மூலமும் இவர்கள் சாஸ்திரம் சொல்வார்கள். மிகவும் பேச்சு திறமையுள்ளவர்கள். மனிதர்களின் உளவியல் நன்கு அறிந்தவர்கள். கணவனும் மனைவியுமாக இருவர் அகப்பட்டால் மனைவியிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் சேர்ந்து போனால், பிள்ளைகளிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். 'நல்லது ஒன்று நடக்கப் போகுது.......' என்று தொடங்குவார்கள். இவர்களை கம்பளக்காரர்கள் அல்லது நாயக்கர்கள் என்றும் சொல்வார்கள். ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினர். பின்னர் இவர்களில் சிலர் இலங்கைக்கும் வந்து குடியேறினார்கள் என்று நினைக்கின்றேன். வீரபாண்டிய கட்ட பொம்மன் இவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரே. எங்களுக்கு நேரம் அதிகம் இல்லாததால், அவர்கள் சொல்லப் போகும் நடக்கப் போகின்ற அந்த நல்ல விடயம் என்னவென்று நின்று கேட்க முடியவில்லை. தேர்தல் சுற்றுப் பயணம் நிற்காமல் ஓடியது. அடுத்தது மார்பிள் பீச். வீடு இருக்கும் அமெரிக்க மேற்கு கரையில் கலிஃபோர்னியாவில் இருக்கும் கடல், பசிபிக் சமுத்திரம், எப்போதும் குளிர்ந்தே இருக்கும். கடும் கோடையில் கூட கடல் நீர் சரியான குளிராக இருக்கும். அத்தோடு பசிபிக் சமுத்திரத்தின் அலைகள் உயர்ந்தவை, விடாமல் கரையை அடித்துக் கொண்டே இருக்கும். அதிகமாக நீரில் தொங்கி நிற்கும் மணல் துகள்கள். ஆனால் நீண்ட, அழகான கடற்கரைகள். மார்பிள் பீச்சில் கடற்கரை மிகவும் சின்னது. ஆனால் கடல் நீர் சுத்தமாக, அலைகள் அற்று இருந்தது, வெதுவெதுப்பாகவும் இருந்தது. பலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடற்கரையில் கழட்டி விட்டிருந்த செருப்பில் ஒன்றை ஒரு நாய்க் குட்டி தூக்கிக் கொண்டு ஓடினது. அதை சிலர் கலைத்துக் கொண்டு ஓடினர். அந்த நாய்க் குட்டிக்கு வெளிநாட்டவர்களுடன் இது ஒரு விளையாட்டு போல. திருகோணமலையை இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு, கண்டி நோக்கி புறப்பட்டது வாகனம். தம்பலகாமம், தம்புள்ள, மாத்தளை, கண்டி என்று சாரதி சொன்னார். தம்புள்ள போகும் முன் வரும் இரு பக்கங்களிலும் காடு நிறைந்த வீதியில் வெளிநாட்டவர்கள் திறந்த வாகனங்களில் போய்க் கொண்டிருந்தனர். யானை மற்றும் காட்டு விலங்குகளை அவைகளின் இயற்கையான இடங்களிலேயே பார்ப்பதற்கு. வழி வழியே யானைகளும், இலங்கைக்கு பயணம் வந்தவர்களை ஏமாற்றாமல், வீதிக்கு வந்து போயின. தம்புள்ள மொத்த சந்தையின் பிரமாண்டம் வியக்க வைத்தது. கண்டிக்கு போக முன் அக்குரணை நகர் வந்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இடம் இது. அக்குரணை நகரின் வளர்ச்சி மிகப் பெரிதாக இருந்தது. மிகப் பெரியதொரு நகராக மாறியிருந்தது. இலங்கையில் எந்த நகரம் மாறினாலும், எவ்வளவு தான் வளர்ந்தாலும், கண்டி நகரம் மட்டும் மாறவே முடியாது. அதன் தரைத் தோற்றம் அப்படி. கண்டியில் எதையும் மாற்றவோ, புதிதாகக் கட்டவோ முடியாது. நகரப் பகுதியே பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. புனித நகர் என்னும் சிறப்பு வேற இந்த நகரை வளர விட மாட்டாது. கண்டியில் நண்பன் வீட்டை போய்ச் சேர்ந்தோம். நண்பன் என்னை விட பல வயதுகள் குறைந்தவன். இப்பொழுது பேராதெனிய பல்கலையில் வேலை செய்கின்றான். இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. பயணக் கட்டுரையில் இல்லாமல், தனியாக அதை எழுதவேண்டும். அங்கு நண்பனின் வீட்டில் நின்ற ஒரு பொழுதில் அவனுடன் நிறையக் கதைக்க கூடியதாக இருந்தது. அடுத்த நாள் காலை. நண்பனை பல்கலைக்கு போகச் சொல்லி விட்டு, நாங்கள் தலதா மாளிகைக்கு போய் விட்டு, பின்னர் அங்கிருந்து பல்கலை போவதாக திட்டம் போட்டோம். திட்டப் பிரகாரம் மாளிகை வாசலில் இறங்கி உள்ளே போக, தலதா மாளிகையின் வாசலில் இருந்த போலீஸ்காரர்கள் நாங்கள் உள்ளே போக முடியாது என்றனர்........ (தொடரும்...........)
  3. எவ்வளவு கிறுக்கர்களாக இருக்கின்றார்கள் இவர்கள்....... இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இவர் தான் எங்கள் தலைவரென்றும் சொல்லுகின்றார்கள் என்றால், மனித மூளை வர வர சின்னதாகப் போகின்றது என்ற அந்தஆராய்ச்சி முடிவில் ஏதோ பிழை இருக்க வேண்டும்.....மூளையே வெறும் கபாலம் ஆகுது போல.
  4. நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்… MAY 22, 2024 டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான், ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவையை அமைப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசார பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கிடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடி வருகின்றன. இநத் நிலையில், தனியார் ஊடகத்துறையினருடன், நாட்டின் தற்போதைய நிலைமை, பாஜகவின் வளர்ச்சி, அரசியல் மற்றும் ஆன்மிகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, நான் பயாலிஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பராம்த்மாதான் என்றவர், அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்யவே நான் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அல்லாத மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பாஜகவின் செயல்பாடு குறித்து பேசியதுடன், தென் மாநிலங்களில் ஊழல் மற்றும் வம்ச அரசியலை விமர்சிக்கிறார், மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, என் தாயார் உயிரோடு இருந்தவரை, இந்த உலகிற்கு நாள் என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந் தேன். ஆனால், என் தாயின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன், அதில் கிடைத்த தெளிவுகளைத் தொடர்ந்து, இப்போது நான் பலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் என்றார். சிலர் எனது கருத்துக்கு எதிராக பேசலாம், ஆனால், நான் இதை முழு மனதாக நம்புகிறேன், என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றவர், நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றார். எந்தவொரு விஷயத்தையும் நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருப்பதாகவும், நான் என்ன செய்தாலும் தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியுள்ளார், நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/prime-minister-modi-said-am-not-human-being-not-born-biologycally/ https://patrikai.com/god-sent-me-to-this-world-prime-minister-modi-sensational-information/
  5. 👍.... எனக்கு இந்தச் சொற்கள் முற்றிலும் புதியவை, ஆனால் வாசிப்பின் போது இந்த சொற்களின் இதே அர்த்தங்கள் புரிந்தது போலவே இருந்தது. கதையின் ஒவ்வொரு வரிகளிலும் ஒரு நிதானம் இருந்தது.
  6. ரணில், சஜித், நாமல் (?), சரத், பொது தமிழ் வேட்பாளர்.... இப்படி எல்லோருமே களத்தில் இறங்கினால், அநுர குமார திசாநாயாக்கவிற்கு அது ஆதாயமாகப் போகலாம்.
  7. இதை முந்தாநாள் அகழில் வாசித்து விட்டு அப்படியே மனம் கலங்கி இருந்தேன். இரண்டு கதைகளுமே குத்தி தைத்திருந்தன மனதை..........
  8. இன்று புதிது புதிதாக வரும் கம்யூட்டர் processor எல்லாம் முன்னிருந்தவையை விட சின்னதாகவும், ஆனால் வினைத்திறன் அதிகமாக இருப்பவையாகவும் வருகின்றன. அப்படித் தான் மனித மூளைக்கும் நடந்து கொண்டிருக்குதோ என்று நினைத்த படியே கட்டுரையை வாசித்தால்.......... மூளையின் அளவு மட்டும் குறையவில்லை, மூளையின் வினைத்திறனும் குறைந்து கொண்டே வருகின்றது என்றும் சில ஆராய்ச்சிளார்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது..... மூளையின் அளவு சிறிதாவற்கு Climate Change ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனாலும் எல்லாவற்றுக்கும் அதையே ஒரு காரணமாக சொல்வது சில வேளைகளில் ஒரு பகிடியாகவும் தெரிகின்றது.....😀
  9. மோடி ஐயா இன்னும் மணிப்பூர் போகவில்லை........ அது சம்பந்தமாக ஒரு பத்திரிகை மாநாடு கூட இன்னும் நடத்தவில்லை. இவரின் தீவிர முஸ்லிம் எதிர் நிலைப்பாட்டால் தான், இலங்கையிலிருந்தே நான்கு பேர்கள் அங்கு போய் பிடிபட்டு இருக்கின்றார்கள் போல. இந்த வாரம் ஒடிசாவில் ஒரு மேடைப் பேச்சில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் கொழுவியிருக்கின்றார். குஜராத் கலவரத்தில் இருந்து ஆரம்பித்தவர், அப்படியே ஒரே ஏறு முகம் தான்.... இவரால் தெற்குமே, அமைதியில், தேய்ந்து விடும் போல கிடக்குது.
  10. இரவில் அந்தப் பகுதியில் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் ஒன்றாகச் சேருவார்கள் என்று சொன்னார்கள். இடைக்கிடை போலீஸ் அங்கு போய் தேடுதல் நடத்துவார்களாம். அந்த இடத்தின் அமைப்பு, ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு வயல் வெளி, அதன் பின்னால் பனங்கூடல் என்று இதற்கு வசதியாகவே இருக்கின்றது.
  11. எழுத்தாளர் சாரு ஒரு தடவை ஒரு படத்தை விமர்சித்து விட்டார், ஏதோ அஜித் அல்லது விஜய் படம் என்று நினைக்கின்றேன். சாரு 'இது என்ன கொடுமை, இந்தப் படங்களை எல்லாம் எப்படி ஒரு மனிதன் பார்க்கிறது, நான் மாடியிலிருந்தே குதித்து இருப்பேன்....' என்று அந்தப் படத்தை கறாராக கடுமையாக விமர்சித்து விட்டார். விட்டார்களா அந்த கதாநாயகனின் ரசிகர்கள்........ 'யாரடா சாரு, அவன் என்ன பெரிய இவனா...' என்று கேட்டு, சாரு வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப் போவதாக வெருட்டினார்கள். அதற்குப் பிறகு சாரு சினிமா விமர்சனமே இனி வேண்டாம் என்று ஓடி விட்டார். இங்கே யாழ் களத்திலும் சில விடயங்களில் ஒரு ரசிகர் மனநிலை இருக்கின்றது போல........என்னவோ போங்கள், பொழுது போகுது தானே........😀
  12. ❤️....... மோகன் அண்ணா அப்பொழுது ஊரில் பெரும் பிரபலம். அவர் கடைகளின் வாசல்களில் எழுதும் பெயர்களையே நாங்கள் ரசிகர்களாகப் பார்ப்போம். அந்தப் படங்களை கட் அவுட் என்று சொல்வோம். இன்றும் அது இருக்கின்றது, இந்த தடவையும் இருந்தது. ஆனால் கட் அவுட்டுகள் முன்னர் மிகச் சிறப்பாக இருந்தன என்று மனம் சொல்கின்றது. மோகன் அண்ணாவின் கட் அவுட் ஒவ்வொரு வருடமும் வங்கிக்கு அருகில் இருந்தது என்று நினைக்கின்றேன். பாலா மாஸ்டர் அவர்களின் கட் அவுட் அதற்கு அடுத்ததாக அரியோட்டி பள்ளிக் கூடத்திற்கு அருகில். ஒவ்வொரு கட் அவுட்டும் எவ்வளவு பெரிய முயற்சியும், பலரது உழைப்பும். இவர்கள் பெரும் கலைஞர்கள். 'அம்மன்...' என்றே வீட்டில் இன்றும் சொல்கின்றோம்/கூப்பிடுகின்றோம், ஏழு கடல் மலை தாண்டியும் விட்டுப் போகாத ஒரு பழக்கம்........🤣. நகை விவகாரம் உண்மையே. ஆனால் இன்று திருடர் பயம் காரணமாக கவரிங் நகையாக மாறிவிட்டது. அதையும் கழுத்து மூடும் வரை இன்றும் போடுகின்றனர்........😀
  13. நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல இருக்கின்றது ஈரான் மற்றும் சில நாடுகளின் நடவடிக்கைகள். எல்லாமே வெறும் பூச்சாண்டி ஆகத் தெரிகின்றது கடைசியில். ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?
  14. 👍.... இருக்கைப் பட்டியை (நல்ல தமிழ்.....) எப்போதும் போட்டிருப்பது நல்லதே...
  15. 👍..... அதிகமான இளைஞர்கள் ஊர் விட்டு ஊர் வந்து இப்படிச் செய்வதனால், அவர்களுக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் என்று இவ்விடங்களில் இல்லை. அதனாலேயே பயம் அல்லது தயக்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு வீட்டிற்கு போய் விட்டு திரும்பி வரும் போது நன்றாக இருட்டிவிட்டது. தீருவிலில் பகுதியில் இருக்கும் தூபி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தோம். குமரப்பா, புலேந்திரன் மற்றும் அவர்களுடன் மாவீரர்களானவர்களின் ஞாபகார்த்தமாக கட்டிய தூபி. தூபியின் அடையாளமே இன்று அங்கு இல்லை. இராணுவம் எப்போதோ அதை அழித்துவிட்டது. அந்தப் பகுதி முழுவதும் கும்மென்ற இருட்டு. தூபி வீதியில் இருந்த எல்லா மின்விளக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன. திடீரென்று பார்த்தால் இருட்டில் தனியே ஒருவர் நின்றிருந்தார். கையில் புகைத்துக் கொண்டிருந்தது. மனைவி பயந்துவிட்டார். ஒரு பத்து அடிகளில் இன்னொருவர் அதே போல. பின்னர் இருவர். அந்தப் பகுதியை கடகடவென்று தாண்டிய பின்னரே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எஙகள் வீட்டில் இருந்தவர்கள் மிகவும் கடிந்து கொண்டனர். அந்தப் பகுதியால் இரவில் எவருமே போவதில்லை என்றனர். எப்படியான ஒரு நிலைமை.........😌
  16. விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது செங்குத்தாக மேலெழும்பி, அப்படியே ஒரெயடியாக பல ஆயிரம் அடிகள் கீழே வந்திருக்கின்றது. அந்தக் கணத்தில் சீட் பெல்ட் போட்டிருக்காத பயணிகள் மேலே பறந்து, தலைக்கு மேலே இருக்கும் பெட்டிகளில் மிகப் பலமாக இடிபட்டிருக்கின்றார்கள். கடும் கொந்தளிப்பு பகுதிகளை முன்னரே கண்டு அறிவித்திருக்கா விட்டால், அது FAA இன் தவறு என்கின்றனர். அப்படி அறிவித்திருந்தாலும், கொந்தளிப்பின் ஊடே செல்லும் விமானங்களும் இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். கொந்தளிப்பை சுற்றிப் போனால் எரிபொருள் அதிகம் தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக.
  17. ஒரு பாடம் 'படிப்பிக்க' வந்திருந்தார்கள் என்று தலைப்பில் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகாவும், பொருத்தமாகவும் இருந்திருக்கும்........😀. ஒருவரும் ஒருவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள்........
  18. 🙏..... எப்பவும் அதே ஆச்சரியம் தான் - என்ன செய்தாலும் எப்படியும் கண்டு பிடித்து விடுகிறார்களே..........🤣.
  19. 🤣........ என் வீட்டைச் சுற்றியும் ஒரு நாலு பூனைகள் திரிகின்றன. உண்மையிலேயே. அதில் ஒன்று படுக்கும் நேரத்தை விட மற்றைய நேரம் முழுவதும் வீட்டிலும், கூரை ஓட்டிலுமே நிற்கின்றது. என் வீட்டில் நிற்காமல் நாலும் போய், அக்கம் பக்கம் இருக்கும் பல்கலைகளில் நின்றிருந்தால், இன்னும் நாலு பிஎச்டி கூடி இருக்கும் இந்த நாட்டில்... 'பூனை நாவல்' என்று ஒன்று எழுதும் அளவிற்கு பூனைகளுடன் சிநேகிதம் வளர்ந்து விட்டது............
  20. நன்றிகள் அல்வாயன். இன்னும் ஒரு பகுதி எழுதினால் இந்தப் பயணம் முடிந்துவிடும். உங்களின் சிரிக்க வைக்கும் கவிதைகளை கொஞ்ச நாட்களாக காணவில்லை.......
  21. 🤣......... தென் பகுதியுடன் ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இடைக்கிடை வாறதுக்கும் இது தான் காரணம் என்று கண்டு பிடித்தும் விடுவா....😀
  22. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)
  23. அப்படியும் நடந்தும் இருக்கலாம்.......👍 இவர் தான் அடுத்த 'சுப்ரீம் லீடர்' என்று கருதப்பட்டவர் என்றும், மிகவும் தீவிரமானவர், இரக்கமற்றவர் என்றும் சில ஆங்கில ஊடகங்களில் இருக்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.