Everything posted by ரசோதரன்
- பேச்சுவார்த்தை.jpg
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
🤣........ ஒரேடியாக 24 மணிநேரமும் நகுக வேண்டும்.................. அவ்வளவு இடுக்கண்கள் இவர்களால்............. இவர்களைக் கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்குப் பதிலாக, என்னைக் கொண்டு போய் சேர்த்துவிடுவார்கள்.......................🤣.
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
மற்ற நாட்டவர்கள் இப்படியான ஒரு நாளை கரிநாள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.............. நாங்கள் ஒவ்வொரு நாளிலும் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, ஒரு கரித்துண்டாகவே நிற்கின்றோம்......................☹️. ஆனால் இப்படியானவைக்கும் இங்கு இந்த நாட்டில் வரவேற்புகள் இருக்கின்றன...............🫣. இன்று நடந்த நிகழ்வில் இருந்து இந்த வரி தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும் போல.............😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பொதுவாக மேட்ச் ஃபிக்சிங் என்று அங்கே சிலர் குற்றம் சொல்லுவார்கள்.............. இந்த தடவை வித்தியாசமாக மாயம், மந்திரம் என்று சொல்லுகின்றார்கள் போல............. அவர்களில் ஒரு வீரரும் காசு கொடுத்து ஃபிக்ஸ் செய்யும் அளவுக்கு வேர்த் இல்லையும் போல..............😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தங்களின் தோல்வி, அங்கு பெய்யும் மழை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று பாகிஸ்தான் கண்டுபிடித்துவிட்டது....................
-
பாட்டுக் கதைகள்
அவரே தான்...................👍. அவருடைய மகன் ஒருவரும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பு, ஆனால் வெவ்வேறு டிவிசன். பரஞ்சோதி மாஸ்டர் நல்லாத்தான் படிப்பித்தார் என்று நினைக்கின்றேன்........... எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை.................🤣. இப்பவும் இங்கே இராணுவ ஹெலிகாப்டர்கள் தாழப் பறந்து போகும் போது, பழைய ஞாபகங்கள் வரும்..................
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
🤣..................... அவர் அங்கே கை வைத்தார், இவர்கள் இங்கே கை வைக்கின்றார்கள்................. என்று தானே சொல்லுகின்றீர்கள். எனக்கென்னவோ சேதாரம் ஒரு பக்கம் மட்டும் தான் என்று தெரிகின்றது......
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
🤣.................. அங்கே எந்த அரசியல்வாதியின் பாதையிலும் பல நடிகைகள் வந்து போயிருப்பார்கள் தானே, விசுகு ஐயா....... சிலர் பகிரங்கமாகக் கூட இருப்பார்கள்................. இப்ப விஜய்க்கு கூட சொல்லுகின்றார்களே.................. கருணாநிதிக்கு, கமலுக்கு இருக்காதவர்களா......... பையன் சார், யுவர் ஆனர் என்று சொல்லிக் கொண்டே, நீதிமன்றில் (களத்தில்) கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கின்றீர்கள்............ வரப் போகின்றார்கள் காவலர்கள்.........🤣. 'விஜயலட்சுமி சரிதம்.......' முழுக்க வாசித்தேன். இதற்கு முன்னர் ஶ்ரீவித்யாவின் கதையைக் கூட வாசித்திருக்கின்றேன். கௌதமியின் கதை,........ இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. சீமான் மட்டும் தான் இப்படி இந்த விடயத்தில் மாட்டுப்பட்டு நிற்கின்றார்.
-
பாட்டுக் கதைகள்
அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
கார்த்திக் கதையோட கதையாக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்றும் சொல்லிவிட்டார்..................🤣. இந்திய அரசியலில் ஒரே ஒரு நடிகையால் இப்படி ஒரு தலைவரும் 15 வருடமாக இழுபட்டது கிடையாது......................... தினமும் இதே வேலையாகவே கிடக்குது..........
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
அடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 டிரில்லியன் டாலர்கள் வரிக் குறைப்பிற்கு திட்டம் போட்டுள்ளனர். செலவில் 2.0 டிரில்லியன் குறைக்கும் திட்டமும் இருக்கின்றது. சரி, இவர்களால் செலவில் இரண்டு டிரில்லியனைக் குறைக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தக் கணக்கில் மட்டும் துண்டு விழும் 2.5 டிரில்லியன் டாலர்களுக்கு எங்கே போவது........... இன்னும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள், லலிதா ஜூவலரி விளம்பரங்கள் போல, வரும் போல....... நான் முதலில் தலைப்பை மட்டும் வேறொரு இடத்தில் பார்த்து விட்டு, ஏதோ ஒரு புதுவகை கிரெடிட் கார்ட் போல என்று போக, பிறகு தான் தெரிந்தது இது அமெரிக்கக் குடியுரிமை என்று....... எங்களின் பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. எப்பவும் ஒரு சிறியளவு காசையாவது மாதம் மாதம் எடுத்து, காசாகவே சேர்த்து வைத்துக்கொள்வார்கள். அது அவர்களின் ஒரு திருப்தி என்று விட்டுவிட வேண்டியது தான்............... நாடு போகிற போக்கில், இங்கு ஒவ்வோரு வீடாக போய், இந்த அரசாங்கம் அதையும் கேட்டு வாங்குவார்கள் போல......
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், அன்றைக்கும் இந்த ஆச்சருக்கு எதிராகத்தானே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.................... ஆச்சர் காட்சை விட்டிடுவார், ஆனால் எங்களை விடமாட்டார் போல............🤣. எப்போதும் தமிழனா அடுத்த முக்கிய அமைச்சர்.........👍.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
அதுவே தான் நிழலி..................... இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன். 🤣.............. அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம். நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
🤣.................. எங்களின் நட்புகளுக்கும், எங்களுக்கும் இருக்கும் பொருத்தம் தான் உள்ளதிலேயே சிறப்பான பொருத்தம்..................🤣. 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்......' கதைகளில் வருவது போல பல கதைகள் அன்று ஊரில் நடந்திருக்கின்றது. ஆனால் என்னுடைய வட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது....... வெறும் பார்வையாளர்கள் தான்..............
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
தலைப்பு மட்டும் தான் இன்னமும் மிஞ்சி இருக்குது..................... இந்தக் கதை நான் எழுதினது இல்லை............ 🤣.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
இதற்காகத்தான் கோழிக்குஞ்ச கோழிக்குஞ்சு என்று ஒரே சொல்லாகவே சேர்த்து எழுதியிருந்தனான். அப்படி இருந்தும் நந்தன் அதைப் பிரித்து விட்டார்..........🤣.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கமலுக்கு தனக்கு எவை தெரியாது என்றே தெரியாது................🤣. நேற்று இங்கு Warren Buffett அவருடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வருட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கடைசியில் இப்படி ஒன்றைச் சொல்லியிருந்தார்: என்னிடம் நல்ல விளையாட்டுத் திறமைகள் இல்லை. நல்ல குரல் எனக்கில்லை. மருத்துவம் சுத்தமாகத் தெரியாது. இப்படி எந்த விதமான தனித் திறமைகளும் என்னிடம் கிடையாது. அதனால் தான் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன்..........................
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
நான் எழுதவில்லை, அல்வாயன்................... வேறு யாரும் எழுதியிருந்தார்களோ தெரியவில்லை. உங்களுக்கும் இந்த பஸ்களை தெரிந்திருக்கும் தானே..................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
நல்ல பகிடி, விசுகு ஐயா.................... கமலின் மநீம அழிந்தது பற்றி ஒரு எள்ளளவு கவலை வருகின்றது தான்................ அது அழியும் என்றே தெரிந்திருந்தாலும்.....................
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
எங்களை ஒன்றாகவே சேர்ந்து படிக்க விட்டிருக்கலாம் என்று தான் தோன்றுகின்றது, சுவி ஐயா...... அப்பொழுது 'பெண்கள் மட்டும்' என்று சில பஸ்கள் போய்வரும். மெதடிஸ் பெண்கள் பாடசாலைகள் போன்றவற்றுக்காக ஓடியவை. மெதடிஸ் பெண்கள் பாடசாலை 3:20 க்கும், ஹாட்லி 3:30 க்கும் முடியும். ஒரு நாள், ஆறாம் வகுப்பில் என்று நினைக்கின்றேன், எங்களுக்கும் 3:20 பாடசாலை முடிந்தது. பஸ் நிலையத்திற்கு ஓடிப் போனால், 'பெண்கள் மட்டும்' பஸ் வந்தது. சின்னப் பொடியள் தானே என்று எஙகளில் சிலரையும் அதில் ஏற்றினார்கள். அங்கிருந்த சில அக்காமார்கள் சுற்றிவர வந்துவிட்டார்கள். அவரைத் தெரியுமா, இவரைத் தெரியுமா என்று சில அண்ணன்மார்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்டார்கள். ஹாட்லி என்றால் நீங்கள் என்ன பெரிய இதுவா, அதுவா...... என்றும் சிலர் பொய்க்கோபங்களும் காட்டினார்கள். இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இருந்தால் நல்லாக இருக்குமே என்று அன்றே தோன்றியிருக்குது போல.................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பல வருடங்களின் முன், இங்கு ஒரு வீடில்லாமல் வாழ்ந்த (homeless and then foster homes) பிள்ளை ஒன்று Princeton பல்கலைக்கு தெரிவானது. இங்கு Princeton போன்ற சில பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விசயம். ஆனால் இந்தப் பிள்ளைக்கு கிடைத்தது. உங்களின் அப்பா, அம்மா மேல் எந்தக் கோபமும் இல்லையா என்பது போல ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் இடையில் பிரிந்து போக, இந்தப் பிள்ளை தெருவிற்கு வந்திருந்தது. 'அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள்.......' என்று சுருக்கமான ஒரு பதிலை இந்தப் பிள்ளை சொன்னது. நாங்கள் ஊரில் வளர்ந்த காலகட்டமும் ஒரு நிலையில்லாத காலம் தானே....... எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் சிரமப்பட்டுப் போனார்கள் பல பெற்றோர்கள். பல விடயங்களில் எங்களை அப்படியே விட்டுவிட்டார்கள்...................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
செய்திகளில் காட்டினார்கள். நல்ல கூட்டம்.............. 'இது வெறும் டிரெய்லர், மே 11 இல் இருக்குது மெயின் பிக்சர்........' என்று அன்புமணி பேசினார். ஒரே அதிமுக ஆதரவுப் பேச்சாகவும் இருந்தது. கூட்டணிகள் மெதுவாக துலங்க ஆரம்பிக்கின்றன.......
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் களமே 12 - 12 ஆகப் பிரிந்து நின்றபடியால், கலவரம் வந்தாலும் வரலாம் என்று மழை அதுவாக வந்துவிட்டது......................🤣.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
உண்மையில் இது தான் நாதகவை அழிக்கப் போகின்றது. எந்த பதவியிலும் இல்லாத, சாதாரண இளைஞர்களை இழப்பது. அதிமுகவின் வாக்கு வங்கி 20 வீதங்கள் ஆகிவிட்டது என்ற அறிக்கை, இது பொய்யாகக் கூட இருக்கலாம், இதையே சொல்லுகின்றது. சாதாரண தொண்டர்கள் கட்சியின் மேல் நம்பிக்கை இழப்பது எந்தக் கட்சியையும் மூழ்கடிக்கும். 'எங்கேயய்யா எங்களின் ஆட்கள்...........' என்பது போல ராமதாஸ் சமீபத்தில் ஒரு பாமக செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டிருந்தார். அவர்கள் போய் விட்டார்கள்........................
-
விதியற்றவர்
நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்................. 'என்னுடைய வாழ்க்கையின் சாயலும் இதில் இருக்குதே.............' என்று ஏராளமான புலம்பெயர்ந்த நம்மவர்கள் சொல்லக்கூடிய நிகழ்வுகள்..............👍.