Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. இது பல இடங்களிற்கும் ஒரு பொதுவான பண்பு போல, வில்லவன்....... எனக்கும் இதே தெருவில் ஆரம்பத்தில் இதே அனுபவம் தான். இங்கிருந்த மற்றவர்கள் எல்லோரும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அப்ப 25 வருடங்களின் முன்னரேயே 50 வயதுகளை தாண்டியவர்கள். மிகவும் வசதியானவர்களும் கூட. 'யார் இவன் ஒரு சின்னப் பொடியன் இங்கே.......' என்ற பார்வையிலேயே ஆரம்ப காலங்கள் கடந்து கொண்டிருந்தது. உரையாடல்கள் இல்லாமல், ஒற்றை வரி அல்லது சில வரிகள் என்றும் பின்னர் மாறியது. வலியதும், கொடியதும் விதி என்பார்கள். காலம் என்றும் சொல்லலாம். சில வருடங்களின் பின்னர், தொடர்ச்சியாக ஓரிரு நாட்களுக்கு என்னைக் காணாவிட்டால், 'சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டாய்.................' என்று உரிமையாக கோபப்படுவார்கள்................... அவர்களின் பேச்சு துணை நான் தான்................. தெருவில் 12 வீடுகள், எழுதினால் சுராவின் 'ஒரு புளியமரத்தின் கதை' போல ஒரு பெரும் நாவலே எழுதலாம்...................... அவ்வளவு கதைகள் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும். அதுவே தான் சுவி ஐயா........🙏. பலதும் பொருளற்றவை போல என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாமே கடகவென்று நடந்து முடிந்து, கொஞ்சம் வேகமாகவே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேனோ என்றும் தோன்றுகின்றது............🤣
  2. இது நாள் வரை பலரும் கேட்கும் ஒரு கேள்வி ஏன் அமெரிக்கா உலகம் முழுவதும் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிடுகின்றது. இந்த வாரம் வந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தின் படைபலம், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் பற்றிய கட்டுரைகள் ஒரு தெளிவைக் கொடுத்தன. உண்மையிலேயே ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்தும் வெறும் வெற்றுக் கோதுகள் தான். அவர்கள் இன்றிருக்கும் நிலையில் அவர்களால் எவரையும் எதிர்க்கமுடியாது. அமெரிக்காவின் பின்னால் பதுங்கி நிற்பது தான் அவர்களால் செய்யமுடிந்தது. இனிமேலாவது வேறு திசையில், சொந்தக் கால்களில் செல்ல முயற்சி செய்யலாம். கடந்த வாரம் ஜே டி வான்ஸ் இதையே தான் இப்படிச் சொன்னார், 'பெரியவர்களின் மேசையில் சிறியவர்களுக்கு இடமில்லை......'
  3. இங்கிலாந்து மட்டும் இன்றைக்கு தோற்றது என்றால், அப்படியே அவர்கள் எல்லோரையும் கீரைச் சந்தைக்கு அனுப்பி விடுவார் பையன் சார்............
  4. திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல். இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார். சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............
  5. உயிர்களுக்கு பொதுவாகவே வயதானால் ஒரு அனுபவமும், பக்குவமும் வரும் போல.............. ஆனால் மனிதர்களுக்கு மருத்துவர்கள் சொல்ல வேண்டும், இன்னும் இத்தனை நாட்கள் தான் இருக்கின்றது என்று............ அதன் பின் தான் வரும் ஞானம்........ வயதாகிப் போனது அண்ணா....... பாய முடியாது............. நாங்களும் அப்படித்தானே.... எல்லாமே ஆடி அடங்கத்தான் வேண்டும்....................
  6. சில வேளைகளில் இப்படியான ஒரு மனநிலை ஒரு முழுப் பைத்தியக்காரத்தனமோ என்றும் தோன்றும்............... ஆனால் ஒரே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் நான், இந்த தெருவில் இருக்கும் பலர் முடிந்து போனதை பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும் அவர்கள் எதிர்பார்த்தது சக மனிதர்களின் ஆதரவையும், அன்பையும் அன்றி வேறெதுவுமே இல்லை..........
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணா!
  8. 🤣................... பையன் சார், உங்களின் இந்த ஒரு வரியால், எனக்கு எதிர்காலமே பிரகாசமாக தெரியுது.............😜.
  9. மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன. இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.
  10. அதுவே தான். சீன வாகன இறக்குமதிக்கு எக்கச்சக்கமான வரி விதிப்பு மற்றும் சீனப் பொருட்களின் தரங்களைப் பற்றிய பொதுவான குறைந்த அபிப்பிராயம் என்பன சீன வாகனங்களை இங்கே வரவிடாமல் தடுக்கின்றன.
  11. ஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த ஒரு நேர பூனை உணவிற்கு பின்னர் ஒரு நாளில் இருந்து அது வரவே போவதில்லை அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை.
  12. ஏழைகளின் டெஸ்லாவே இந்த விலையா இலங்கையில்.............. இங்கு அமெரிக்காவில் நான் பார்க்கவில்லை, ஆனால் எங்கேயாவது இருக்கலாம்....
  13. அப்படி நடந்தால், அப்படியே முக்காடு போட்டுக் கொண்டே, 'எட்டு நாடும் என் நாடே...... எல்லா நட்பும் என் நட்பே.........' என்று சமரசம் உலாவும் இடமாக மாறிவிடுவேன்.....................🤣.
  14. 🤣................ என்னுடைய இறுதி இலக்கு தான் எல்லோருடைய இறுதி இலக்குகளாகவும் இருக்கின்றது.........🤣.
  15. இன்றைய முதல்வரை நாளைக்கு கவிழ்த்து, அல்வாயனை புது முதல்வர் ஆக்குகின்றோம்.......
  16. 👍......... மேலும் மேலும் அதிகமாக வாசிப்பதும், எங்களை நாங்களே கேள்விக்குள்ளாக்குவதும், இப்படியான ஒரு புரிதலை, வாழ்வை அடையவே. எவ்வளவு தூரம் இந்தப் பாதையில் போக இயலும் என்று தெரியவில்லை, ஆனால் ஆரம்பித்ததில் இருந்து பார்த்தால், ஏராளமான தூரத்தை கடந்து வந்து விட்டது தெரிகின்றது. சுற்றி வர எதுவும் மாறாவிட்டாலும் கூட, அப்படியே தேங்கிய குட்டையாக அது நின்றாலும் கூட, அதிலிருந்து எங்களால் ஓரளவாவது வெளியேற முடிந்தது என்பதே ஒரு வாழ்நாள் சாதனை..............
  17. ஒரு கதைக்கு இல்லை பையன் சார்................ இனி வர இருக்கும் பல போட்டிகளில் இப்படித்தான் நடக்கப் போகுது.............😜.
  18. அதுவே தான் காரணம் என்றும் இருந்தது.............. ஒதுங்கி வாழப் போகின்றார்கள் என்று. இரண்டாவது குழந்தை லண்டனில் தான் பிறந்தது என்றும் இருந்தது.......
  19. 300 வீதம் என்பது சரியாகத்தான் இருக்கும், ஏராளன். இது மிக அதிகம்.......🫢.
  20. 👍................ சரியாகவே சொல்லியிருக்கின்றார்.......... ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்..... நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............
  21. கோலி இந்தியாவில் இருந்து இங்கிலாத்துக்கு நிரந்தரமாக குடிபெயர்கின்றார் என்ற ஒரு செய்தியைப் பார்த்தேன். அதனால், அவருக்கு எவ்வளவு வேலைகளும், யோசனைகளும் இருக்கும்..... இந்த நேரத்தில் அவரை மைதானத்தில் ஒரு மணித்தியாலம் நில் என்று கேட்பது அவ்வளவு சரியில்லை.....................
  22. கோலி சரியாகத்தானே விளையாடுகின்றார்.................🤣.
  23. எக்கச்சக்கமான விலையாகவே இருக்குது......... வரி நூறு வீதம் போட்டிருப்பார்கள் போல...... இவை எல்லாம் ஆடம்பர வாகனங்கள். அடிப்படை வாகனங்கள் மலிவாக வரும் போல.........
  24. 🤣.............. ருத்ர தாண்டவம் என்று சொல்லி விட்டு, கமல் கிணத்துக்கு மேல நின்று ஆடின மாதிரி ஆடக்கூடிய அணி இந்திய அணி என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.........😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.