ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்-
Posts
1604 -
Joined
-
Last visited
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரசோதரன்
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
ரசோதரன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
உங்களின் குரல் எங்களின் ஜீயின் காதுகளில் விழுந்துவிட்டது..........ஜம்மு காஷ்மீரில் ஜீ சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா செய்தார்.... -
இந்த நிவாரணம் வழங்கும் செய்தியை எப்படி எடுப்பது என்றே தெரியவில்லை. அழுது தவிக்கும் குடும்ப உறுப்பினர்ளை, சிறு பிள்ளைகள் உட்பட, பார்க்கும் போது, மனம் பரிதாப்படுகின்றது. ஆனால், பொங்கி வரும் உணர்வுகளை ஒதுக்கி விட்டு, நிதானமாக யோசித்தால், இதில் ஒரு பெரும் தவறு நடந்து கொண்டிருப்பதும் தெரிகின்றது. அடிக்கடி நிகழும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இறப்பவர்களுக்கே அரசு இந்த அளவு நிவாரணங்கள் வழங்குவதில்லை. ஒரு இலட்சம் கொடுத்தாலே அது பெரிய விசயம். குடித்து அழிந்து கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இப்படி கொடுக்க வேண்டும் என்பதும், இது என்ன முன்னுதாரணம் என்பதும் சரியான கேள்வியே. எவருமே அவர்கள் கள்ளச்சாராயம் (என்று நினைத்து விஷச்சாராயம்) குடிப்பதை ஒரு தவிர்க்க வேண்டிய செயலாக சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட. மருந்தென்று நினைத்து மாறிக் குடித்து விட்டார்கள், உடம்பு நோவுக்கு குடிப்பார்கள் என்பது போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு விதமான நியாயப்படுத்தல் போன்றே இருக்கின்றன. இங்கிருக்கும் இரண்டு உண்மைகளில் முதலாவது: இவை, கள்ளச்சாரயமோ அல்லது விஷச்சாராயமோ அல்லது பொறுப்பற்ற எந்த வகை குடியுமே, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது. இரண்டாவது உண்மை: இந்த கள்ளச்சாராய தொழிலுக்கு இருக்கும் அரசின் ஆதரவும், நடவடிக்கைகளும். தினமும் அங்கிருக்கும் மலையடிவாரத்தில் காய்ச்சிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். இந்த வியாபாரிகள் கொடுக்கும் மாமூலை வாங்கிக் கொண்டு அரச நிர்வாகமும், காவல்துறையும் எதையும் கண்டும் காணாமலும் இருந்திருக்கின்றனர். ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 60 ரூபா என்றும், அதற்கு இணையானது டாஸ்மாக்கில் 250 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றும் குடிப்பவர்கள் சொல்லியிருக்கின்றனர்....... ஆகவே அரசின் டாஸ்மாக் தொழிலும் ஒரு காரணம் ஆகின்றது. செந்தில் பாலாஜியை வெளியே வர முடியாதபடி உள்ளேயே பாஜக அரசு அடைத்து வைத்திருப்பதற்கு பிரதான காரணம் டாஸ்மாக் மூலம் இவர் புரட்டிக் கொடுக்கும் பெரும் தொகையான பணத்தை தடுப்பதற்காகவே என்று ஒரு செய்தியில் இருந்தது. அந்தப் பணம் இல்லாவிட்டால் திமுக தேர்தல் செலவிற்கு திக்குமுக்காடும் என்று பாஜக கணக்குப் போட்டிருந்தது. டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழ்நாடே இயங்காது போலிருக்குதே....... என்ன ஒரு இழிநிலை... அந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் 10 இலட்சம், 5 இலட்சம் என்று ஆளுக்கு ஆள் கொடுக்கின்றார்களா....... கடந்த வருடத்தை விட இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 1734 கோடி ரூபாய்கள் அதிகரித்திருக்கின்றது.... இந்த வருட மொத்த வருமானம் 45, 855 கோடி ரூபாய்கள்.........!!
-
இந்த உலக கோப்பையில் இப்படித்தான் அவர்களின் ஒவ்வொரு போட்டியிலும் நடக்கின்றது.......... Chokers என்ற அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.........👍
-
தென் ஆபிரிக்கா கடைசியில் வென்றிடுவார்கள் போலவும் தெரியுது.......
-
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
ரசோதரன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நீங்கள் சொல்வதும் சரி. இந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு, இந்தியாவுடனான போட்டியின் முதல் நாள், ஹலால் உணவு கிடைக்கவில்லை என்று ஆப்கான் வீரர்களே சமைத்ததாக செய்திகளில் இருந்தது. அதனால் அவர்களால் போட்டிக்கு சரியாக தயாராக முடியவில்லையாம்..........😶.......... இனி ஒரு சமையல்காரரையும் கூட்டிக் கொண்டே போக வேண்டியது தான்......... இது இந்தியாவின் கைப்பாவை என்று சொல்லப்படும் ஐசிசியின் சதியாக இருக்குமோ........🤣. -
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
ரசோதரன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
யோக நிலை என்பது இறைவனுடன் ஒன்றாதல், உருவ வழிப்பாட்டின் சில சாயல்கள், இறைவனையே பிரதி எடுத்தல்........இப்படி பல காரணங்களைச் சொல்லி, இவை அவர்களின் இறைவன் சொல்லியவற்றுக்கு எதிரானவை என்று அவர்கள் யோகாசனத்தை நிராகரிக்கின்றனர். 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் 60 மீட்டர் இடைவெளியில் கடைசியாக வருபவர்களும் இருக்கின்றனர்..... பார்த்தும் இருப்போம்.......... ஆறுதலாக வந்து சேரட்டும். -
கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு
ரசோதரன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
யோகா அவர்களது மார்க்கத்திற்கு எதிரானது, ஆதலால் அது அவர்களிடையே தடைசெய்யப்பட்ட ஒன்று என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்........... -
தென் ஆபிரிக்கா 6 ஒவர்களில் 63/0....... இரண்டு அணிகளின் தலைவர்களும் தாங்கள் நாணயச் சுழற்சியில் வென்றால் பந்து வீச்சை தான் தெரிவு செய்வோம் என்றனர். Swing, bounce, moisture.............. என்றனர். அப்புறமாக அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.............. ஒரு குத்து மதிப்பா தான் சொல்லியினமோ..........
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ரசோதரன் replied to பிழம்பு's topic in உலக நடப்பு
பல வருடங்களின் முன் ஒரு படம் பார்த்திருக்கின்றேன். பிரெஞ்ச் படம் என்று ஞாபகம், ஏதோ ஒரு ஃபிலிம் பெஸ்டிவலில். ஒரு தந்தையும், மகனும் இந்தக் கடமைக்காக பிரான்சில் இருந்து மெக்கா போகின்றனர். இருவருக்கும் சுத்தமாக ஆகாது. குடும்பத்தின் வற்புறுத்தலில் வழித் துணையாக மகன் போகின்றார். வழியில் இன்னும் பிரிவினை அதிகமாகின்றது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில், ஞாபகமில்லை, மகன் தந்தையை புரிந்து கொள்கின்றார். தந்தை மெக்காவில் இறந்து போகின்றார். இறந்த உடல்களை ஒரு நிலவறையில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கின்றனர். அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யும் வசதிகளும் இருந்ததாகவும் ஒரு ஞாபகம்....... -
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
ரசோதரன் replied to பிழம்பு's topic in உலக நடப்பு
🤣......... தலை பத்திரம்............... ஒரு விலை வைத்து விடுவார்கள்.........🤣. -
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
ரசோதரன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நல்ல தகவல்கள். இல்லை, எனக்கு இதில் அனுபவம் இல்லை. Gatorade பற்றி வந்த சில கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். மற்றும் அப்பப்ப வரும் செய்திகள். லயனல் மெஸ்ஸியின் புதிய தொழில் பற்றிய செய்தி போன வாரம் இங்கே வந்திருந்தது. -
🤣......... சென்னை, திருச்சிக்கும் சேர்த்தே சோதனை வந்திருக்குது............
-
தென் ஆபிரிக்கா எப்பவோ தோற்றிருக்க வேண்டும். நாளைக்கு மட்டும் என்ன புதுசாக நடக்கப் போகுது.... தோற்கும் நிலையில் இருந்து பின்னர் வென்றாலும் வென்று விடுவார்கள்................. நானும் நேற்று நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டேன்.........🤣.
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
ரசோதரன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இவை இரண்டும் தான் என்று நானும் நினைக்கின்றேன். எந்த புதிய நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் வெற்றிகரமாக வந்தாலும், இவர்கள் இருவரில் ஒருவர் அதை வாங்கி, தங்களுடையதாக மாற்றிக் கொள்வார்கள். இங்கு கிட்டத்தட்ட எல்லா தொழில்களுமே அப்படித்தான்......... உங்கள் ஆராய்ச்சி அனுபவத்தை, நேரமிருந்தால், சுருக்கமாகவேனும் எழுதுங்கள். நாங்களும் இதன் பின்னால் இருக்கும் விடயங்களை அறிந்து கொள்கின்றோம். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், விளையாட்டுகள் மற்றும் இங்கு காஸ்ட்கோவில் எதை பெட்டி பெட்டியாக விற்கின்றார்கள் என்ற அளவில் தான் இருக்கின்றது எங்களின் தெரிவிற்கான காரணங்கள்....... -
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
ரசோதரன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
👍.... இதில் எதுவும் சட்ட விரோதமானது இல்லை. அவருடைய மனைவியின் சொத்தையே இந்த தொழிலில் முதலிடுகின்றார் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் மிகவும் செல்வாக்கானவர் என்றே சொல்ல வந்தேன். முதலீட்டாளார்களை கவர்ந்திழுப்பதற்கு இது அவருக்கு உதவும். முரளியின் சொத்து மதிப்பு 9 மில்லியன் டாலர்கள் தான் என்றால், இந்திய ரூபாயில் 70 அல்லது 75 கோடிகள், அது ஒன்றுமேயில்லை. டாக்டர் ராமமூர்த்தியின் சொத்து மதிப்பு எனக்குத் தெரியாது. சில நூறு கோடிகளாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் தான் இங்கு தேவை. Sports Drinks இன்று உலகெங்கும் கடகடவென்று வளரும் ஒரு பெரிய தொழில். இங்கு அமெரிக்காவில் லயனல் மெஸ்ஸி ஒன்றை ஆரம்பிக்கின்றார். Kobe Bryant இறப்பதற்கு முன் இதில் இருந்தார். கடந்த வருடம் அவருடைய நிறுவனத்தை கோக் வாங்கியது என்று நினைக்கின்றேன், அல்லது பெப்ஸி, இரண்டில் ஒன்று. கோபேயின் பங்காக 600 அல்லது 700 மில்லியன் டாலர்கள் வந்தது. இன்னும் சில பிரபல வீரர்களும் இதில் இருக்கின்றனர். Electrolytes, Alkaline Water, ..... இப்படி ஏதாவது சொல்லி, அவர்களும் நண்பர்களும் விளம்பரத்தில் வந்து, அவர்களின் ஒவ்வொரு சதங்களையும் பல டாலர்களாக மாற்றி விடுகின்றனர். அதே பழைய குளிர் தண்ணீருக்குள் ஒரு எலுமிச்சையையும், கொஞ்ச உப்பையும் போடுவதற்கு இன்னும் எதுவும் ஈடாகவில்லை, ஆனாலும் மார்க்கெட்டிங் என்று ஒன்று இருக்குதல்லவா......... -
👍... சமீப தேர்தல் தோல்வியால் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விட்டார்கள். அத்துடன் மாம்பழமும் போய் விட்டது. ஆனாலும் பாஜகவின் பங்காளிகள் என்றபடியால், மாழ்பழத்தை திரும்பவும் கொடுப்பார்கள். வாசனுக்கு சைக்கிள் சின்னத்தை உடனேயே கொடுத்தது போல. இடைத்தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையங்களாலேயே நடத்தப்படுகின்றது என்கின்றனர். சத்ய பிரதா சாகு தான் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி, முடிவுகளை எடுப்பவர். அவருக்கு தான் மத்தியிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படும்.
-
அவர் மட்டும் என்றில்லை, அண்ணை......... முக்கியமாக இன்னும் பலரையும் காணவில்லை. திமுக அரசு என்றவுடன் ஒரு அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே இருக்கின்றார்களே......உதயநிதிக்கும், அவரின் ரெட் ஜயண்ட்ஸ்ஸிக்கும் அவ்வளவு பயம்.........ஜி வி பிரகாஷ் பரவாயில்லை போல, இது அரசின் தவறு என்று ஒரு அறிக்கையாவது விட்டுள்ளாரே..... ரஜனி எல்லாம்.........செருப்பால் என்னை நானே அடிச்சாலும் மனம் ஆறாது. ஏழு பேர்கள் விடுதலை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, யார் அந்த ஏழு பேர்கள் என்று கேட்டவர் தானே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றும் சொன்னவர். இப்ப, அம்பானி வீட்டு கல்யாண வீட்டில், அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார் என்றவர்....... இந்த மனிதனைப் பற்றி எழுதுவதை விட, குப்புறப் படுத்துக் கிடக்கலாம்...........
-
உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ. அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது.
-
அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார். எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.
-
🤣....... அப்படிச் சொல்லுங்க ஐயா..........மச்சம் மட்டுமே சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது எல்லே....... இப்ப அடுத்த இரண்டு புள்ளிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன......🤣
-
அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்......... நம்ம அணிக்கு பந்துவீச்சில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து விட்டு இப்ப வந்து விடுவார்.......... முன்னமே சொல்லியிருக்கின்றேன்........ யானை சரிந்தால் குதிரை.....இது ஒரு சின்ன சரிவு தான், யானையாக இருந்த அண்ணன் இப்பொழுது குதிரையாகி இருக்கின்றார்........😜.