Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. இதில் இரண்டு சிறு பிள்ளைகளின் கழுத்தை நெருத்து சங்கிலியை திருடியிருப்பதாக தந்தை பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.ஜேர்மனை சேர்ந்த 3 பெண்கள் இதில் சம்பந்த பட்டிருக்கிறார்கள்..
  2. புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு – தீவிர விசாரணை written by admin August 9, 2025 யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/219042/
  3. கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.
  4. ஒலிபெருக்கி பாவனைக்கு தடை written by admin August 8, 2025 கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் பத்திரிகைக்கு வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ். மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ என்ற தலைப்பில் 2016ம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒலிபெருக்கிப் பாவனை சம்பந்தமான விடயம் முக்கியமான இடத்தைப் பெற்றது. மாநாட்டின் தீர்மான இலக்கம் 4 கூறுவதாவது: ஆலய வழிபாடுகளின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி சாதனங்களினால் ஆலய சுற்றாடலில் வாழும் மாணவர்கள். பாடசாலைகள், நோயாளர்கள், வயோதிபர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க பின்வரும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட் திருப்பலிகள், ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மட்டும் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குட்பட்டதாகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும். இம்மாநாட்டின் இத்தீர்மானத்தைத் தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தில் பல ஆலயங்களில் இந் நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சில ஆலயங்களில் இக்கட்டுப்பாடானது உதாசீனப்படுத்தப்பட்டமையால், இன்று இது ஓர் சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது. பலர் இதுபற்றி தமது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்கள். யாழ். அரச அதிபர் கூட ஒலிபெருக்கிப் பயன்பாட்டில் கோவில்கள். ஆலயங்களில் கட்டுப்பாட்டினைப் பேணுமாறு வலியுறுத்தியுள்ளார். தற்போது ஒலிபெருக்கிப் பாவனை யாழ் திருஅவையினுடைய பிரச்சினையாக மட்டுமல்லாது ஒலியால் சூழல் மாசடைதல் எனும் சமூக தீமையாக மாறிவிட்டதால், இச் சமூக சீர்திருத்தச் செயலைச் செய்வதற்கு அனைத்துக் குருக்களும், துறவிகளும், பொது நிலையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறும், மேற்படி மாநாட்டுத் தீர்மானத்தை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அவர்கள் வேண்டியுள்ளார். https://globaltamilnews.net/2025/218987/
  5. அனேகமாக பிச்சுமணி, அக்குட்டியிடம் அடி வாங்கும் காட்சிதானே..இனிமேல் ஒழுங்காக பார்க்கிறோம்.நாமள் யாழில் அவர்கள் ஊரில் அவ்வளவு தான்.🤭
  6. மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா. written by admin August 3, 2025 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும். நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவர்களாக கருதுகின்றனர். அவர்களின் அழகு முறைகள் பெரும்பாலும் இயற்கையோடு நெருங்கியதாகவும் எளிமையானதாகவும் இருந்தன. அவர்கள் வாழும் சூழலில் கிடைக்கும் மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், மண், நீர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தங்கள் சருமன், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணினார்கள். தங்கள் முகத்தின் அழகுக்காக இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினார்கள். சந்தனம், மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், எலுமிச்சை போன்றவற்றை முகத்தின் பளபளப்பு தன்மைக்காக பயன்படுத்தினார்கள். அங்கு அழகு என்பதை தாண்டி ஆரோக்கியம் பேணப்பட்டது. தலையில் வைக்கும் எண்ணெய் முறைகள் என்ற ரீதியில் எங்கள் வீட்டில் என் அம்மா தேங்காய் எண்ணெய்க்குள் முருங்கை இலை. கருவேப்பிலை, நொச்சி, செவ்வரத்தை (காய வைத்தது) கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவற்றை விட்டு நன்றாக முறுகக் காய்ச்சி, அதன் பின்னர் சூடார வைத்து தலையில் வைத்து விடுவார். “அந்த காலத்தில நாங்க இப்படித்தான் குளிச்சம் இப்ப அப்படி ஒன்றும் இல்லை எல்லாம் மாறிவிட்டது” என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மூலிகை வகைகளை சேர்த்து கொதிக்க வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி மெல்லிய சூட்டில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதனை பூசி மசாஜ் செய்து அதன் பின்னரே குளிப்பம் என்று சொல்லுவார்கள். உணவு பழக்க வழக்கங்களில் என் அத்தைமார்கள் ஆரம்ப காலத்தில் வேறுபட்டு காணப்பட்டனர். அரிசி, ஓடியல் போன்ற அனைத்து பொருட்களையும் கையினால் உரல் உலக்கையை பயன்படுத்தி இடித்துத் தான் சமைப்பார்கள். உணவில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி உட்கொண்டார்கள். பாரம்பரியமாக காணப்பட்ட இவ்வாறான அனைத்து பழக்கவழக்கங்களும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியின் அர்த்தமே இன்று மாறிவிட்டது. இம்மாற்றத்தினை எடுத்துரைக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது ஆசானான சி.ஜெயசங்கர் அவர்கள் பெற்றுத் தந்த வாய்ப்பிலும், வழிகாட்டலிலும் மருத்துவ பீடம் (MEDICAL FAUCITY) நடாத்திய “Holistic health camp” நிகழ்ச்சிக்காக “அழகினையும் உடல் ஆரோக்கியத்தையும் வைத்து” இன்றைய காலத்தில் அது இவ்வாறு மாறமடைந்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு காரணமாகின்றது” என்பதை பாடல் ஒன்றின் மூலம் அபிநயத்து அதற்கு இடையில் அது சார்ந்த உரையாடல்கள் மூலமும் ஆற்றுகை செய்திருந்தோம். பாடல் நிறம் மாற வேண்டுமா சொல் வெள்ளையாக வேண்டுமா சொல் வெளிறிடக் கிறீம் இருக்கு – உன்னை மாற்றிடக் கிறீம் இருக்கு நிறம் மாற மாட்டோம் நாங்கள் நோயில் விழவும் மாட்டோம் நாங்கள் ஏமாற மாட்டோம் நாங்கள் – இனியும் ஏமாற மாட்டோம் நாங்கள் கருப்பு நிறமே காப்பாத்தும் வெயிலில் வந்து எமை மூடும் அதனை அழிக்க மாட்டோம் நாங்கள் அழிந்து போக மாட்டோம் இயற்கை தந்த நிறம் இதுவே கடவுள் தந்த நிறம் இதுவே மாற்றிட மாட்டோம் நாமே இயற்கையை மாற்றிட மாட்டோம் தானே திரிசா போல மாறனுமா ஐஸ்வரியாராய் போல் ஆகணுமா உங்களுக்காய் கொண்டு வந்தோம் – கிறீம்கள் உங்களுக்காய் கொண்டு வந்தோம் அவர்கள் அழகு வேறு வேறு எங்கள் அழகு வேறு வேறு ஒன்றாக ஆக்க வேண்டாம் – எங்கள் இயற்கை அழகு காப்போம் ஒருவர் மாதிரி ஒருவர் மாறும் – அழகுப் பொருள் விற்போர் உங்கள் தந்திரம் புரியும் தானே – உங்கள் வியாபாரம் தெரியும் தானே வாயில் போட குலுசை உண்டு வாங்கிக் கொள்ள கடைகள் உண்டு தோலில் போட ஊசி உண்டு போட்டுக் கொள்ள இடங்கள் உண்டு வாங்க வெள்ளையாக்கலாம் – தோலை வெள்ளை அழகு ஆக்கலாம் எங்கள் பிறப்பே எம் அழகு எம் உடலே எமக்கு நலம் – ஏமாற்ற வேண்டாம் எம்மை நாங்கள் ஏமாற மாட்டோம் தானே (பாடலாசியரியர் :- கமலா வாசுகி) இந்தப் பாடல் மூலம் இன்றைய காலத்தில் பாவனையில் உள்ள அழக சாதன பொருட்களின் பாதிப்பினை உரையாடல் பாங்கில் எடுத்துரைத்தோம். நம் தோலை புற ஊதா (UV) கதிர்வீச்சு போன்று தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கருப்பொருள் மெலனின் (Melanin) ஆகும். மெலனின் என்பது நம் தோலில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறமி (pigment) ஆகும். இது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பொருள். நமது தோல், முடி மற்றும் கண்களின் நிறத்திற்கு மெலனின் தான் முக்கிய காரணம். மெலனின் குறைவாக இருக்கும்போது தோல் வெளுப்பாகவும், அதிகமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கும். மெலனின் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் UV கதிர்வீச்சு தோலின் செல்களுக்குள் ஊடுருவி, அவற்றின் DNA-it சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. இன்றைய நவ நாகரிக உலகில் அழகிற்காக (வெளிறல் நிறம்) ஊசிகள், மருந்துக்களின் பாவனை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளலாமல் வெளிறல் நிறமாக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டும் இவை உடம்பில் ஏற்றப்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மென்மையாக்க “குளுட்டாதயோன் ஊசிகள்” (Glutathione Injections) பாவிக்கப்படுகின்றன. குளூாட்டாதயோன் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கருமையான நிறத்தைத் தரும் ஈயூமெலனின் (Eumelanin) உற்பத்தியைக் குறைத்து, வெளிர் நிறத்தைத் தரும் பியோமெலனின் (Pheomelanin) உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்பாடு, சருமத்தை வெளிர் நிறமாக்கி. ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் இது நமது தோலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் சில முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குஞாட்டாதயோன் ஊசிகளைப் பயன்படுத்தும் நபர்கள் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அடிக்கடி சூரியக் கதிர் படுவதால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான அறிகுறி, தோல் புற்று நோய் அபாயம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு. தோல் நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே வகையினை சார்ந்த இன்னும் சில ஊசி வகைகள் சந்தையில் காணப்படுகின்றன. தோலின் நிறத்தினை மென்மையாக்குவதற்காக மருந்து பாவனையும் அதிகரித்தே வருகின்றது. அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் மருந்துக்கள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி அதனை பாவித்து அநேகமான பக்க விளைவுகளுக்குள்ளாகின்றனர். பல ஹெமிக்கல் (Chemical) கலந்த கிறீம்களை பாவித்து தோல் அதிகம் மென்மையாகி கிழிந்து வரும் நிலை சமூகத்தில் அதிகம் நிலவிவருகின்றது. இயற்கையின் எளிய பரிசுகளைப் பயன்படுத்திய பாரம்பரிய முறைகளில் தொடங்கி, இன்றைய அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் மருத்துவ சிகிச்சைகள் வரை ஒரு நீண்ட மோசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவையாகக் கருதினர். மஞ்சள். சந்தனம். மூலிகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற தீர்வுகளாக இருந்தன. ஆனால், வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தைப்படுத்தல், மற்றும் சமூகத்தின் மாறிவரும் அழகு குறித்த வரையறைகள் போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டன. உடனடி முடிவுகளையும், குறிப்பிட்ட அழகியல் இலக்குகளையும் நோக்கிய தேடல், இரசாயனக் கலவைகள், லேசர் சிகிச்சை, ஊசி முறைகள் போன்ற நவீன அனுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்கள், மற்றும் குளூாட்டாதயோன் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் சில சமயங்களில் உடனடி மற்றும் வியத்தகு மாற்றங்களை வழங்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவை குறிப்பாக, சரும நிறத்தை வெண்மையாக்கும் குளூட்டாதயோன் ஊசிகள், தோலின் இயற்கைப் பாதுகாப்பான மெலனின் உற்பத்தியில் தலையிட்டு, தோல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்க முடியாதவை. அழகுப் சந்தனத்தின் வாசனையிலும், மஞ்சள் பூகம் குளுமையிலும் இருந்த நிதானமான பராமரிப்பிலிருந்து, லேசரின் துல்லியத்திற்கும், ஊசிகளின் வேகத்திற்கும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது: அழகு என்பது வெளிப்புற பூச்சுகளையும், செயற்கையான மாற்றங்களையும் மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எந்தவொரு அழகு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் நன்மைகள், அபாயங்கள், மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது இன்றியமையாதது. “அழகு என்பது வெளிறல் நிறத்தில் மட்டுமல்ல. உடல் நலத்தில் உண்டு.” கோபிகா நடராசா, கிழக்குப் பல்கலைக்கழகம், நுண்கலைத்துறை. https://globaltamilnews.net/2025/218764/
  7. தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக விமர்சனம் படிக்க முடிந்தது.இந்த திரைப்படம் சம்பந்தமாக ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை சீமானின் ஆதரவாளர்கள் நீக்கும் காட்சியை இன்று ஒரு லிங்கில் பார்க்கவும் முடிந்தது.மேலேயுள்ளதிலும் அப்படித் தான் இருக்கிறது.வழமையாக சொல்வது போல் கண்டும் காணமல் போவதே மேல்.🖐
  8. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது. என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம். ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும். இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது. காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள். இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள். ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது. தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர். அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள். தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள். மன்மதன் : நான் அலரி மலர் கணைதொடுப்பனடி – என் ரதியே மானே ரதியே தேனே சிவன் தவசை நான் அழிப்பனடி. ரதி : அலரி மலர் கணை தொடுத்து மன்னா மன்னா சிவன் தபசை நீயழிக்க வேணா வேணா.. ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார். பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும். இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை. சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் . இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது. பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது. கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது. இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது. காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை. காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது. இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை Global Tamil Newsமலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டி...மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப்…
  9. செம்மணியில் ஸ்கான் written by admin August 4, 2025 செம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை . அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Global Tamil Newsசெம்மணியில் ஸ்கான் - Global Tamil Newsசெம்மணி பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு…
  10. இந்த உலகத்துல எதுவும் சும்மா கிடைக்காது. அதனால நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும். அப்படி உழைப்பதையே ரசனையோட செஞ்சோம்னா, வெற்றியும் சீக்கிரம் கிடைக்கும்; இரட்டிப்பு பலன் தர்றதாகவும் இருக்கும்!'' இப்படி விகடன் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் மதன் பாப். மதன் பாப் இற்குப் பிடிச்ச துறை இசை, அற்புதமான கிட்டார் வாத்திக்காரர், அவரின் தம்பி பாபு தான் ட்ரம்ஸ் வாத்தியக்காரர். தம்பி பாபுவின் பெயரைத் தன் பெயரோடு ஒட்டியதாலோ என்னவோ நீங்கள் கேட்டவை படத்தின் “அடியே மனம் நில்லுனா” பாடலில் ட்ரம்ஸ் வாத்தியக்காரராகவே தோன்றுவார். முறையான அறிமுகம் வானமே எல்லையில் கிட்டினாலும் என்போன்றவர்களுக்கு ஜாதி மல்லி வழியாகத் தான் இன்னும் நெருக்கம். ஆனால் அதை தமிழ் விக்கிப்பீடியாவும் மறந்து விட்டது. இவர் நடுவராக இயங்கிய அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியையும் விட்டுவைப்பதில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இவருடன் இயங்கி இருக்கிறார். எஸ்பிபி போன்றோரை வைத்து இசைக் கச்சேரி நடத்தியிருக்கிறார், இவரின் மகள் “ஆலப்போல் வேலப் போல்” பாடும் போது திடுதிப்பாக “வேலங்குச்சி நானெடுத்து” என்று எஸ்பிபி வருவாரே அந்த ஸ்வர்க்க நிமிடம் ❤️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> “நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும்” என்ற அவரின் கருத்தோடு இன்னொன்றையும் சேர்க்க வேண்டும் “நம்மைப் பிடிச்ச துறைக்கும்” அதுவே அவரும் செய்தார். வெறும் அந்த மரங்கொத்திப் பறவைச் சிரிப்பை மட்டும் மூலதனமாக வைக்காமல் தன் பாத்திரங்களை இயல்பாக்கிக் கொண்டவர். நகைச்சுவைக் கலைஞனுக்கும் இசைக்கும் ஏதோ ஆன்ம பந்தம் போல உங்களைப் போலவே திடீரென்று மறைந்து விட்ட விவேக் ஐயும் நினைக்க முடிகிறது. இவ்வளவு விரைவாகவா? என்று கேட்க வைத்த பட்டியலில் நீங்களும் இணைந்து விட்டீர்கள். கானா பிரபா ஒளிப்படம் நன்றி : விகடன்
  11. இவர் பற்றிய அதிக விமர்சனங்களை பார்த்தனான் என்ற வகையில்..இவரின் மேல் மக்கள் பொறாமை, எரிச்சலில் விமர்சனத்தை வைக்கவில்லை.எதனால் நம்வர்கள் சீ தமிழ் போனால் ஒரே காட்சியை எப்போதும் போட்டுக் காட்டி தாயக மக்களை மிகவும் வேதனைக்குள் தள்கிறார்கள் என்று தான் பலரும் எழுதியிருந்ததை பார்த்தேன்..அது மட்டுமல்ல இந்தப் பிள்ளை ஏயார் போட் போகும் மட்டும் சங்கிலி போன்ற நகைகள் போட்டிருந்ததாகவும் பின் எல்லாமே களற்றபட்டு தான் மேடைக்கு அவர்களால் கொடுக்கபட்ட ஆடையோடு பாட விடப்பட்டு இருக்கிறார். குறிப்பாக சொல்லப் போனால் ஒருவரது அறிமுகத்தில் அகதியாக போவதை கஸ்ரப்படுவதை காட்டினால் போதுமானதாக இருக்காதா....இந்தப் பெண்ணிற்கும் அகதியாக பெட்டி, படுக்கையோடு செல்பவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..அல்லது உண்மையாக எதனால் இவர் விலத்தப்பட்டுள்ளார் என்பது யாருக்காவது தெரியுமா..என்னைப் பொறுத்த மட்டில் சீ தமிழ் எப்போதுமே ஏதோ ஒரு கட்டத்தில் நம்மவர்களை தொடர்ந்து பங்கு கொள்ள விடாது தட்டி விடுவது வழமையாக நடப்பதுவே.. நான் எழுதுவதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ எனக்கு தெரியாது.ஊரிலிருந்து சீ தமிழ் செல்லும் நமது நாட்டு பிள்ளைகளை எப்படி கேவலமாக காட்டினாலும் ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் தான் நாம் இருக்கிறோமா என்பது அவரவர் மனோ நிலையைை பொறுத்தது.
  12. யுத்த காலத்தின் பின் இருப்பவர்களில் அனேகருக்கு இந்த பாரம்பரியங்களைப் பற்றி தெரிய வாய்ப்பும் இல்லை அவற்றை பின்பற்றுவார்கள் என்றும் இல்லை.இப்போ இறப்பு வீடுகளில் அழுவது கூட மெல்ல, மெல்ல இல்லாமல் போய் விட்டது என்று அண்மையில் ஒருவரது பதில் படித்தேன்.அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் வருகையின் பின் வந்த மாற்றங்கள் என்ற பொருள் பட எழுதப்பட்டு இருந்தது.
  13. ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை.?
  14. நான் சில திரிகளுக்குள் வர விருப்படுவதில்லை..ஆனாலும் சில கருத்துக்களை பார்க்கும் போது அதுவும் பெண் பிள்ளைகளை வைத்திருப்போரோ இப்படி எழுதும் போது என்ன செய்வது.. சில செய்திகளை கண்டும் காணாதது போல் போவதே மேல் இது அனைவருக்கும்.. .காரணம்..யாருடைய பிள்ளையாக இருந்தாலும் வாழ வேண்டிய பெண் பிள்ளை..மற்றையது முழுப் பிழைளயும் பெற்றோரில் தான் இருக்கிறது..ஓரளவுக்கு வந்து போகும் உறவுகளை பற்றி கொஞ்சமாவது புரிந்து இருக்க வேணும்.ஏன் இவர் அடிக்கடி வாறார்....இவரது நோக்கம் என்ன...வீட்டிலிருக்கும் பிள்ளைகளோடு எப்படி பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேணும்.இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.அதை விடுத்து.....
  15. இதை எவ்வளவு பேர் ஆமோதிக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லத் தெரியாது...ஆனால் இது தான் உண்மை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்...கடந்த பல ஆண்டுகளாக வடக்கு மாகாணம் ஓப்பீட்டு அளவில் ஒரு ஐந்துகுள்ளயாவது வந்தது..இந்த தடவை கடசி நிலைக்கு சென்றிருப்பது புலம் பெயர் மக்களால் என்ற ஒரு குற்றச் சாட்டையும் சில இடங்களில் ஊரிலிருப்வர்கள் எழுதியிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது..எல்லாவற்றுக்கும் புலம் பெயர் சமுகம் தான் காரணம் என்றால் ஊரிலிருக்கும் பெற்றோர் என்ன தான் செய்கிறார்கள்...? எமது பெற்றோர் காலம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளவர்களின் வீடுகளில் பார்க்கப் போனால் எங்காவது ஒரு வீட்டில் தான் பல்கலைக்கழகம் போனவர்களோ அல்லது அரச உத்தியோகம் பார்த்தவர்களோ இருந்திருக்கிறார்கள்..வளம் குறைந்த காலத்தில் கூட படிக்க வேணும் என்ற ஒரு கோட்பாடோடு இருந்திருக்கிறார்கள் அந்த மக்கள்...அப்படி இல்லாது விட்டாலும் பெற்றோர் அவர்களை கல்வி என்ற ஒன்றுக்கு போக வைக்க வேணும் என்பற்காகவது 'டேய் படிக்காட்டி பிற்காலத்தில் ஆடு மாடு தான் மேய்ப்பாய் என்று பேசியாவது படிக்க வைத்த பெற்றோரும் உண்டு. இப்போ படிக்க முடியாதவர்கள் என்று ஊரில் இருப்பவர்களை சொல்ல இயலாது....காரணம்.அனேகமான வீடுகளில் பல்கலைகழகம் போனவர்களோ அல்லது அரச வேலை செய்வோரோ தாரளாக இருக்கிறார்கள்.அப்படி இருக்கையில் ஏன் கல்வி நிலையில் பின் தங்கிப் போகிறார்கள்...உண்மையாக படிக்க வேணும் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்ய வேணும் என்ற நிலை அனேகருக்கு இல்லை..வெளியிலிருப்பவர்களை வெருட்டி,உருட்டியாவது பணத்திலிருந்து தேவைப்பட்ட எல்லாவற்றையும் பெற்று கொள்கிறார்கள்..18, 20 வயதுக்குள்ளயே தேவை அற்ற விடையங்களுக்கு அடிமையாகும் இளையவர்கள்..எல்லாவகையான மதுப்பாவனையும் கடந்த கிழமை கூட செய்திகளில் வந்த செய்தி மது அருந்தி விட்டு வாகன விபத்தில் இறந்த முவர்.... இந்த புலம் பெயர்ந்தவர்களும் இல்லாது விட்டால் உங்களுக்கு கேட்டதும் பணம், ஆடம்பர பொருட்கள் என்று வந்து சேராது..சிலருக்கு அலட்டல் எழுத்தாக கூட இருக்கலாம்.வெளி நாடுகளிலிருந்து பகிரப்படும் ஆலயங்களின் நேரடி அஞ்சல் பகுதிகளில் கூட ஊருலிருக்கும் சிலர் வந்து யாராவது எங்களை கூப்பிட்டு விட மாட்டீர்களா...?.ஐ போண் வேணும் வாங்கி அனுப்பி விட மாட்டீர்களா.....?இப்படி கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறார்கள்.. இந்த ஆண்டு வடக்கு மாகாணம் 69-70.அடுத்து வரும் ஆண்டுகளில் எழுதக் கூடடியமாதிரியிருந்தால் ... எழுதுகிறேன்.நன்றி.✍🙏
  16. வவுனியா 1 மணி நேரம் முன் வவுனியாவில் பொலிஸின் கோரம் - குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர். இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தினர். இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். பொலிஸாரின் இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், "நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்." என்று தெரிவித்தனர். இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. மக்களின் கொதிப்பால் தடுமாறிய பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், "பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்' என்று விடாப்பிடியாக நின்றனர் . இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது. அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர். https://newuthayan.com/article/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!
  17. இந்த விடையம் வீடியோவாக முகப் புத்தக பக்கம் பார்க்க முடிந்தது..உயிராபத்தான கட்டத்திலும் அனேகமானவர்களின் போண்கள் வீடியோ எடுத்தபடி தான் இருக்கிறது..நாகரீகம் கூடிய மக்கள்.🤨
  18. யாழில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! written by admin July 12, 2025 பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217784/
  19. இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐
  20. இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭
  21. Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை. மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான். ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே… சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது. கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை. அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை. ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை. இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா? பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது. மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல வருவான். யார் அவன்? அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள். ************* எழுதியவர் : ✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர் 75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி ஆண்டிபட்டி- அஞ்சல் 625512 தேனி- மாவட்டம் https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/
  22. சிறப்புக்கட்டுரைகள் ’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’ இரா. தமிழ்க்கனல் Published on: 21 Jun 2025, 2:30 pm Share நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து... பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம் யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே? உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள். இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை. நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள். வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள். இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன். சமாதி என்றால் இறந்துவிடுவார்களா? இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா. சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது? யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன. திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன. திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார். கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள். சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை. உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார். இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்... கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள். புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது! எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது? தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும். யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே... இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும். கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை. Andhimazhai’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த
  23. ரெக்சாஸ் பக்கம் யாராவது யாழ் உறவுகள் இருக்கிறீர்களா.?.மழைக்கு பத்திரமாக இருங்கள்.✍👋
  24. கண்ணுரறு படுத்தக் கூடாது..லக்கேஜ் நிரம்பத் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் சிறியண்ண..🤭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.