குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Everything posted by குமாரசாமி
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அப்பிடியெல்லாம் அரைகுறையில விட்டுட்டு போகேலாது.🤣 ஈரான் அடிச்ச அடியில இஸ்ரேலின் நாடி நரம்பெல்லாம் கதி கலங்கிப்போச்சுதாம். மேற்குலக ஊதுகுழல் ஊடகங்கள் இப்ப அடக்கி வாசிக்க வெளிக்கிட்டினம் கண்டியளோ.. 😂 நானும் நாட்டை விட்டு ஓடி வந்த ரானியர்களுடன் வேலை செய்கின்றேன். அவர்கள் ஈரான் அரசியல் பற்றி நிறைய சொல்வார்கள்.அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு சொல்கின்றேன். ஈரானில் ஆட்சி மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றார்கள். மீதியை நீங்களே கூட்டிக்கழித்து பெருக்கி விடையை கண்டு பிடியுங்கள்.🙂
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
இன்றைய அரசு செம்மணி புதைகுழிகளையாவது தோண்டுவதற்கு அனுமதியளித்திருக்கிறது என பலர் பேசிக்கொள்கின்றார்கள். கோத்தபாய,மகிந்த ஆட்சியில் இருந்தால் இதெல்லாம் நடக்கக்கூடிய சம்பவங்களா என கேள்விமேல் கேள்வி கேட்கின்றார்கள்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
அமைதி பேச்சுவார்த்தை மூலம் பலஸ்தீனத்தை அமைதிப் பூங்காவாக்கிய பில் கிளின்டனுக்கு நோபல் பரிசு கிடைத்தது( பலஸ்தீனம் இன்று சாம்பல் பூங்கா என்பது வேறு விடயம்) ஆட்சிக்கு வந்து இருண்ட விடிஞ்ச நிலை தெரியாமல் இருந்த ஒபாமாவிற்கு நோபல் பரிசு( அந்த நோபல் பரிசு எதற்கு என்று ஓபாமாவிற்கே தெரியாது என்கிறார்கள்) இப்படியான அதிசய நோபல் பரிசுகள் கிடைக்கும் போது சிங்கத்தலைவன் டொனால்ட் ரம்ப் நோபல் பரிசிற்கு ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது. கவனிக்க👉 டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஈரானால் இஸ்ரேலின் கொட்டம் அடக்கப்பட்டது.
-
செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது போர் தொடுப்பதை விட அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்.மக்கள் அவதிப்படுகின்றார்கள் தனிமனித சுதந்திரம் இல்லை எனவும் ஊடகங்கள் இரண்டாம் செய்தியாக பிரசுரிக்கின்றன. அதற்காகத்தான் நான் எழுதினேன் அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு சுதந்திரம் உள்ளது என... 👉 விட்டுட்டு ஓடி வந்தவர்களினால் தான் இன்றும் இன விடுதலை எனும் மரம் விருட்சமாக மாறி நிற்கின்றது. 👈
-
சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!
இப்ப இருக்கிற இளம் வையாபுரிகள் எதுக்கெடுத்தாலும் ,எந்த விசயம் அறியோணும் எண்டாலும் உடனை கூகிள் சாமிட்டத்தான் கேப்பினம்.சாடையாய் தலையிடிச்சாலும் உடனை கூகுள்.வயித்தாலை போகாட்டிலும் கூகிள். சோறு சமைக்கவும் கூகிள்.றோட்டாலை நடந்து போகவும் கூகிள்.போற போக்கிலை வாத்திமாருக்கே வேலையில்லாமல் போகும் போலை கிடக்கு.🤣 கேட்டால் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி என்கிறார்கள்.அந்த தொழில்நுட்ப அறிவை வைச்சு உலகம் முழுக்க போரும் இரத்த சகதியும் தானே இப்ப நடக்குது? மனிதன் பேசாமல் ஆட்டுமந்தைகளாகவே இருந்து விட்டு போயிருக்கலாம் என்றே தோன்றுகிறது.☹️ விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர வளர போரும்,பஞ்சமும்,சீரற்ற காலநிலைகளுமே எஞ்சி நிற்கின்றன.😎
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது? மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்? மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே? அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣
-
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
வீட்டிலை ஏசி இல்லாட்டி என்ன செய்யிறது?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இதுதான் என் கருத்தும் விசுகர்.
-
சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!
இன்றைய கால தொழில் நுட்பங்களை நம்பி எதிலும் எங்கும் பயணிக்கவே பயமாக உள்ளது. அது சரி மனித வலுவிற்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதா? அல்லது மனித வலுவிற்கான ஊதியம் கட்ட முடியவில்லையா? எனது பார்வையில் விஞ்ஞான வளர்ச்சி தேவைதான். ஆனால் அது மனிதனை மழுங்கடிப்பதாக இருக்கக்கூடாது.
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
இதே போல் புலம்பெயர் நாடுகளிலும் ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?
-
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
அமெரிக்காவில் இருக்கும் எனது உறவினருடன் தொடர்பு கொண்ட போது பகலில் தாங்கள் கார்களில் ஏசியை போட்டுவிட்டு அதில் இருப்பதாக சொன்னார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
டொனால்ட் ரம்ப் அவர்களின் ஈரான் மீதான தாக்குதலை அடுத்து.....ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ரம்ப் மீதான வரி வன்மத்தை குறைத்து அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர்.😋 தம்பி உக்ரேன் இன்னும் உயிரோடுதான் இருக்கியா?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்.... இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
fake news 😎
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
திமுக,அதிமுக பிரபாகரன் படத்தை தூக்கினால் பரவாயில்லையா?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இப்போது மேற்கத்தைய ஊடகங்களில் ஈரானும் ரஷ்யாவும் மட்டுமே உலக அமைதியை கெடுத்துக்கொண்டிருக்கின்றன என்றொரு பிரமாண்டத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் இந்த மேற்குலகு தாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என திரும்பியும் பார்ப்பதில்லை.முன்னோக்கியும் பார்ப்பதில்லை.
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
மக்களால் ஒட்டு மொத்தமாக நிகாரிக்கப்பட்ட நபரான சுமந்திரன் அவர்கள் எந்த உரிமையில் பிரித்தானிய தூதுவரை சந்தித்தார்? அதிலும் சுமந்திரன் ஒரு பொய்யன். தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுபவர்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கு பேதி மருந்து ஈரானிட்ட தான் இருக்கு போல....
-
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
கள்ளு குடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர். உந்த வெள்ளைக்காரர் கள்ளடித்து கள்ளுக்கு விளம்பரம் செய்யிறார்.வன்மையாக கண்டிக்க வேண்டும். கள் என்பது மது.மது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். கெட்ட கெட்ட வருத்தங்கள் எல்லாம் வரும்.இதை சமூக சீர்கேடாக நான் பார்க்கின்றேன்.😂 வன்மையான கண்டனங்கள்.😎
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
காஸாவிலும் அயல்நாடுகளிலும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்கும் போது எங்கு போனது தர்ம புத்தி?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கு யார் ஆயுதம் குடுத்தாலும் குடுக்காட்டிலும்...... ஈரானுக்கு சீனா இருக்க பயமேன்? 😂
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
தமிழ்நாட்டில் சட்டபூர்வமான மது விற்பனையிலும் மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றார்கள். அதனால் அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு மானியம் என வழங்குகின்றது. எனவே அதுவும் ஒருவகை ஊக்கிவிப்பு.😎 வரும் காலத்தில் டாஸ்மாஸ்க்கில் மது அருந்தி உயிரிழப்பவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.😋
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் செய்த தவறு என்ன? யாராவது தகவல் தர முடியுமா? 🙏