Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by குமாரசாமி

  1. வணக்கம் நொச்சியார்!உங்கள் எழுத்து நியாயபூர்வமானது. ஆனால்...... இந்த உலகு யதார்த்தம் இல்லாது வன்மம் நிறைந்த உலகு. அதை ஒவ்வொரு மூலை முடுக்களிலும் நேரடியாகவே காணலாம்.இப்படியிருக்கும் போது உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டம் எனும் ஆதிக்கவாதிகளிடம் இன்னும் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
  2. நடக்கிற விசயத்த கதையுங்கோ. அமெரிக்க உணவு முறைகளை இந்த உலகமே ஏற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற நிலையும் இருக்கின்றது. கூட்டி கழித்து பாருங்கள்.
  3. அதனால் தான் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கின்றார்கள். இல்லையேல் சோமாலியா எத்தியோப்பியா மாதிரி யாழ்ப்பாணிகளை எலும்பும் தோலுமாக ஆக்கியிருப்பார்கள்.
  4. கிருபன் இணைத்த இரு கட்டுரைகளும் பல தில்லாலங்கடி விடயங்களை விசமாக சொல்கின்றன. இரசாயன கலப்புகள் நிறைந்த மேலைத்தேய மதுபானங்கள் மீது ஒரு வித பரிதாபத்தை காட்டி இயற்கையாக உருவாகும் கள் மதுபானத்தை கலப்படம் அது இது என உப்புச்சப்பில்லாமல் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். கஞ்சாவை அளவோடு பாவிக்க மேலைத்தேய அரசுகள் பரிந்துரை செய்கின்றது என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அறிவியல் கட்டுரையாளர்களும் அறிந்து கொள்வார்களாக. வியாபார உலகம்.
  5. விசுகர்! மது என்பது அளவோடு இருந்தால் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கின்றேன். ஆயினும் இயற்கையாக உருவாகும் கள்ளுக்கும் தமிழ்நாட்டு மது தயாரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.தரமாக தயாரிக்கப்படாத மதுபானங்களே அங்கு மலிவு விலையில் விற்கப்படுகின்றது. அங்கு தயாரிக்கப்படும் மது பானங்கள் விசத்தை விட கொடியவை என கேள்விப்பட்டுளேன். மதுவை தடை செய்வது என்பது நடக்காத விடயம். மேல் நாடுகளில் வாழ்ந்து கொண்டு மது தடையை பற்றி கதைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது. புற்று நோய் கொடியதுதான். அதற்காக புகையிலை மீது மட்டும் எல்லா பழியையும் போடுவது கொஞ்சம் நகைப்பாக இருக்கின்றது. இன்றைய உலகில் எதனால் எல்லாம் புற்றுநோய்கள் வருகின்றது என்பதை கணக்கெடுத்து பாருங்கள். அதிகம் படித்த மேற்குலகில் புகைத்தலால் புற்று நோய் வருகின்றது என தெரிந்தும் அதை தடைசெய்ய எந்தவொரு அரசுகளும் சிந்தித்தது இல்லை. புகைப்பவர்களை விட அதாவது எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புற்றுநோய் தாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது இதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்வர். சாராயக்கடைகளை திறந்து வைச்சுக்கொண்டு கள்ளுக்கு தடை எண்டு புலம்பினால் கள்ளு உற்பத்தியை ஊக்குவிப்பதில் தப்பில்லை. கைத்தொலைபேசியை பாவிப்பதனாலும் உடலுக்கு ஏகப்பட்ட பக்க விளைவுகள் வருகின்றதாம். புற்றுநோய் உட்பட...... அதையும்..... தடை செய்வீர்களா? தடை செய்வீர்களா? தடை செய்வீர்களா? தடை செய்வீர்களா? தடை செய்வீர்களா? தடை செய்வீர்களா?
  6. புகையிலை உற்பத்தியால் உணவுப்பயிர் பயிருடுவதற்கு நில பற்றாக்குறை வருமென்பது பொய்க்கதை. ஏனெனில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தால் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு எல்லாம் தெரியும். இப்ப மட்டும் என்ன வாழுதாம்? உப்பிற்கும் வெங்காயத்திற்கும் வெளிநாட்டை நம்பித்தானே இருக்கின்றார்கள்.
  7. மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள்/அரச தலைவர்கள் எல்லோரும் என்ன செய்கின்றார்கள்? அவர்களும் ஆயுதத்தை தானே கையில் எடுக்கின்றார்கள்? அவர்களும் பதவிக்கு வந்த பின் தாம் நினைத்ததை தானே செய்கின்றார்கள். இதில் சர்வாதிகார அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகின்றது? ஜனநாயக நாடுகளான பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி எதை செய்கின்றனவோ அதையே நீங்கள் குறிப்பிட்டவர்களும் செய்கின்றார்கள். ஈரான் பலஸ்தீனத்தை ஆதரித்துத்தான் இஸ்ரேலுடன் போர் தொடுக்கின்றது என்பதை உங்கள் ஆருயிர் பிரான்ஸ் அண்ணனுக்கு தெரிவித்து விடுங்கள்.
  8. விலாசத்தை சொல்லவும். 😎 உக்ரேன் திரியா? 🤣 சோனியா திரியா? 😂 ஈரான் அன்ட் இஸ்ரேல் திரியா? 😁 சீமான் பனைமரம் ஏறின திரி எண்டாலும் ஓகே..😜
  9. என்றாலும்..... காந்தி எனும் மந்திர பெயரை வைத்து அறுவடை செய்பவர்கள்... காந்திக்கும் அவர் பெயருக்கும் சம்பந்தமே இல்லாத சோனியா பிரியங்கா ராகுல் இவர்கள் மட்டுமே. துன்பியல்கள் ஏன் என அரசியல் அனுபவஸ்தர்களுக்கு இன்னும் நிறைய நிறைய விளங்கும்.
  10. மிக தெளிவான கருத்துக்கள்.👍 தமிழ் அரசியல்வாதிகள் தம் பதவிக்காக எந்த சாக்கடையிலும் இறங்குவார்கள். சிங்கள அரசியல்வாதிகள் கட்சி பேதம் மறந்து தம் இனத்திற்காக தோழோடு தோழ் நிற்பார்கள்.
  11. தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் கள் உற்பத்திக்கு தடை இருக்கின்றதா தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சாராய கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளை ஏன் தடை செய்திருக்கின்றார்கள் என புரியவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் அயலக மாநிலமான கேரளத்தில் கள்ளு என்பது பாரம்பரியமான பானம். இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா? ஜேர்மனியில் மருத்துவ கடைகளில் மட்டும் எதுவுமே கலக்காத புகையிலையை வாங்க முடியும். விலை கொஞ்சம் அதிகம்.
  12. நாட்டை கட்டியெழுப்பதற்கல்ல.... புத்த விகாரைகளை கட்டியெழுப்புவதற்கு முன் வாருங்கள் என மாற்றுங்கள். இலங்கையில் தானாக விளையும் உப்பு காலநிலை கொண்ட நாடு. அதை இனவாத புத்தியில் ஒதுக்கி விட்டு இன்று நாடு நாடாக கையேந்திக்கொண்டு திரிகின்றார்கள். இனவாதத்தை தவிர... சூடு சுரணை இல்லை. வெட்கம் இல்லை.மனிதாபிமானம் இல்லை,உலக நியதி சட்ட திட்டங்கள் தெரியாத இனம் என்றால் அது சிங்களம்.
  13. அட நாசமறுப்பு இதுவே விசயம்.🤣 ஒரு சில பொது இணைய வெளிகளுக்கு போனால் வில்லங்கம் வில்லங்கமாக எழுதி தள்ளீனம்...ஏன்,என்னடா எண்டு யோசிச்சன்? 😂 எனக்குள் உறைந்த இரத்தம் உயிர்க்கின்றது. 😱
  14. எங்கடை ஆக்கள் 40,50 வருசத்துக்கு முதல் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை,உணவுகளை பார்த்து , அறிந்து வாழ்ந்தாலே டாக்குத்தர்மாரின்ர அறிவுரையும் தேவையில்ல.மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. இது எனது சொந்த அனுபவமும் சொந்த கருத்தும்.கண்ட கண்ட களிசறைகளை சாப்பிட்டு வருத்தங்களை தேடிக்கொண்டவன் எண்ட முறையில சொல்லுறன். 😎
  15. விபத்தில் காலமான அனைவருக்கும் அஞ்சலிகளும் அனுதாபங்களும் ......
  16. https://youtu.be/QSbpovUdcsI?si=6-mrx2SYSv8FZklf https://youtu.be/QSbpovUdcsI?si=uTHTxVtfNp4-pTF4 பேசப்பட வேண்டும்.
  17. அன்பே சிவம் திரைப்படம் இப்போது தான் கொண்டாடப்படுகின்றது. அதே போல் தக் லைஃப் படத்தையும் விளங்கிக்கொள்ள பல வருடங்கள் எடுக்கும். ஏனென்றால் தமிழ் ரசிகர்களின் நிலை அப்படி. 😎
  18. ஜேர்மன் இரும்புகள் கறள் புடிக்காது. 😎 made in Germany எண்டதுக்கு உலகிலேயே தனி மதிப்பிருக்கு.
  19. துருக்கியர்களும்,அரேபியர்களும் தடிப்பான கோப்பி குடித்த கப்பில் சாத்திரம் பார்ப்பார்கள். அவர்களது இன்றைய இளம் சமுதாயத்தில் கூட புனிதமாக பார்க்கப்படுகின்றது. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளிலும் தினசரி நாளிதழ்களில் இன்றைய நாள் பலன்கள் வரும்.
  20. கலவரங்களினால் உருவாக்கப்பட்ட மனித புதைகுழிகளை ஆராய இந்த அரசாங்கம் அனுமதிக்கின்றது என்றால்..... எம்மவரின் தலை ஒன்று உருளப்போகின்றது என்று அர்த்தம். அது மட்டுமில்லாமல் பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பது போல்......இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என ஆர்ப்பரித்தவரும் மாட்டிக்கொள்ளப்போகின்றார் போலுள்ளது.
  21. உலகில் ஒரு பெண் சட்டப்படி திருமணம் செய்தவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என சட்டங்கள் இருக்கின்றதா? இல்லையே.
  22. பெற்றோர்கள் வெளியே செல்லும் பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அன்று போல் இல்லாமல் இன்றைய காலத்து பிள்ளைகள் மொடேர்னாக,புத்திசாலிகளாக இருக்கின்றார்கள்.பிள்ளைகள் போதைப்பொருள் பாவிக்கின்றார்களா என்பதை கண்டு பிடிப்பது மிக மிக கடினம். அவர்கள் தங்கள் படுக்கை அறையிலும்,படிப்பு மேசையிலும் பாவிக்கக்கூடியதுதான் இன்றைய போதைப்பொருட்கள். புகையும் வராது போத்தில் சத்தமும் வராது.இனிப்பு வகைகள்,குளிசை வகைகளை போன்று போதை பொருட்கள் வந்து விட்டது.எவ்வித அசுமாத்தங்களும் இல்லாமல் போதை பாவிக்கலாம்.😂 ஜேர்மனியில் எனது நண்பனின் மகன் தன் படுக்கையறையில் அளவிற்கதிகமாக போதை பொருள் உட்கொண்டு......படுக்கையிலேயே வாந்தியெடுத்து காலமாகி விட்டார். அதன் பின்னர்தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளை போதை பாவிப்பது தெரிய வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பது கைத்தொலைபேசிகள். அதில் இரகசிய சைகள் மூலம் தங்கள் போதை பொருள் வியாபாரத்தை செவ்வனே செய்கின்றார்கள். இந்த போதை பொருள் விற்பனையை காவல் துறையால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.அவர்கள் நேர்மையாக இருந்து செயல்பட வேண்டும். மற்றும் படி இன்றைய இலங்கை அரசியல்வாதிகளுக்கும்/ அரசிற்கும் இதற்கெல்லாம் நேரமில்லை.☹️ உன்ரை வேலையை பாத்துக்கொண்டு போவியா எண்ட பீலிங்கில் இருக்கிறார்கள். 🤣
  23. எல்லோருக்கும் பிடித்த மாதிரி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் வந்ததில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.