Everything posted by குமாரசாமி
-
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!
மீண்டும் உணர்ச்சி அரசியல் தொடரக் கூடாது என்பது என் கருத்து.
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
அறிவார்ந்தவர்களும்,அறிஞர்களும், எல்லாம் தெரிந்தவர்களும்,விஞ்ஞானிகளும் ஒழுங்காக இருந்திருந்தால் உலகில் பிரிவினைகளும்,சண்டைகளும்,யுத்தங்களும் வந்திருக்கவே கூடாது அல்லவா? மனிதன் மனிதனை மதித்து நடந்திருந்தால் பாபாக்களும் கடவுளும் தோன்றியிருக்க மாட்டார்கள். அப்படி தோன்றியிருந்தாலும் மனித பாபாக்களையும் கடவுள்களையும் நம்பியிருக்க மாட்டார்கள். உள்ள நரக வேலைகளை செய்வது மனிதம். இதில் குறை சொல்வது இயற்கையை.....😎
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
உங்களுக்கு குடிக்கிற ஆக்களை கண்ணிலை காட்டக்கூடாது போல கிடக்கு....😂
- இன்று மாவீரர் தினம்!
-
பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
இன்றும் புட்டின் அவர்கள் உலகை ஆளும் சக்தி கொண்டவர்தான். மேற்குலக ஊடகங்கள் தான் அதை மூடி மறைக்கின்றன.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா அவதாரம் எடுத்திருக்கும் சிறித்தம்பிக்கு என் வாழ்த்துகள்.☘ தாயும் சேயும் நலமுடன் வாழ அன்போடு வாழ்த்துகின்றேன். 💐
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
எதிரியும் போற்றும் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துகள்.
-
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
இளையராஜா பாடல்களை யாரும் கேட்பதற்கு தடையில்லை என நினைக்கின்றேன். அவர் புகைப்படத்தை வைத்து தேவையில்லாமல் கதை கட்டுரைகள் கூடாத விமர்சனங்கள் எழுதி பிழைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். அவர் இசையமைத்த பாடல்களை வைத்து பிழைப்பவர்களும் அதிகமாகி விட்டார்கள். அதாவது இலவச பொது ஊடகங்கள் மூலம் இளையராஜாவை விமர்சனம் பண்ணி பிழைப்பவர்கள் அதிகம். இளையராஜாவை பிடிக்கவில்லை என்பவர்கள் ஏன் அவர் இசையமைத்த பாடல்களை உங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு பயன்படுத்துகின்றீர்கள்? ஒலிபரப்புகின்றீர்கள்? குத்தி முறிகின்றீர்கள்? வேறு இசையமைப்பாளர்களின் தாராளமாகவே இருக்கின்றது அல்லவா? பயன்படுத்துங்கள். பாடலுக்கு வரிகள் மட்டும் முக்கியமென்றால்.....கவிஞர்களே மெட்டமைத்து பாடிக்காட்டட்டும் பார்க்கலாம். இளையராஜாவால் அதுவும் முடியும். ஏனைய இசையமைப்பாளர்களால்....?????
-
இலங்கையில் சீன மின்சார பேருந்து திட்டம்
இலங்கையில அடிக்கிற வெய்யிலுக்கு நாடு முழுக்க மின்சார வாகனங்களை ஓட வைக்கலாம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் சீனாவை தம் நலனுக்காக பயன்படுத்தும் நிலைமையில் இருக்கும் போது சீன சார்பு நாடான இலங்கை சீனாவை நன்கு பயன்படுத்த வேண்டும்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்! வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு
சென்ற வருடம் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு இந்த முறையை பரிசோதித்து பார்த்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.எவ்வித தடங்களும் ஏற்படவில்லையாம்.
-
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
நாடு முன்னேற வேண்டுமாயின் மீனவர்களுக்கும்,விவசாயிகளுக்கும் ஓய்வூதிய திட்டங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். அரச தொழிலாளர்களுக்கான பிரத்தியேக வசதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
மணமக்களுக்கு என் வாழ்த்துகள்.🎉 ஜீவன் தொண்டமான் சினிமா சம்பந்தப்பட்டவர்களைத்தான் திருமணம் செய்வார் என நினைத்திருந்தேன்.😎
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
நீங்கள் number one பேய்க்காய் எண்டு எனக்கு தெரியும். 🤣
-
அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அமெரிக்கா முன்மொழியும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருந்தால்..... அமெரிக்கா உக்ரேன் பிரச்சனையிலிருந்து வெளியேறலாம். அதன் பின் புட்டின் சொன்னதே நடக்கும். ரஷ்யாவை எதிர்க்கும் சக்தி ஐரோப்பாவிடம் அறவே இல்லை. இப்போதும் ரஷ்ய எரிசக்தியை மறைமுகமாக வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறு இருக்க.... உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.😂
-
இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்
நல்ல விடயம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இனிமேல் தான் தலையிடிகள் இருக்கின்றது. அமெரிக்காவின் பரம எதிரியான ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சம் தலையில் பல தேசிக்காய்கள் உக்ரேன் பிரச்சனை மூலம் அரைக்கப்படும் என நினைக்கின்றேன்.😂
-
துபை விமானக் கண்காட்சியில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் போர் விமானம் - என்ன நடந்தது?
கிந்தியர்கள் தம் திறமை,சித்திரங்கள்,வீர தீரங்களை காட்ட ஏற்ற நாடுகள். இலங்கை மாலைதீவு பங்களாதேஷ் கச்சதீவு நேபாளம் மட்டுமே. துபாய் சம்பவத்தை கூட கூட அந்த நாடு வீர தீர செயலாகத்தான் பார்க்கும்..🤣
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?
அண்மைக்காலங்களில் சிங்களம் தமிழர்களை கடற்தொழில் அமைச்சர்களாக நியமிக்கும் போதே பல சூட்சுமங்கள் விளங்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீதி அமைச்சராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டார்.அப்போதுதான் தமிழருக்கெதிரான பல அநியாயங்கள் நடந்தன. தமிழர் பதவிகளை முன்னணியாக வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களம் வலு கில்லாடிகள்..சேர் பொன் இராமநாதன் தொடக்கம் கதிர்காமர் ஊடாக இன்றைய கருணா,சம்பந்தன்,சுமந்திரன் வரை அந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
70 வருடத்திற்கு மேலாக அந்த இரு பெரும்பான்மை சிங்கள கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.அதற்கு வாக்களித்த தமிழர்களும் இருக்கின்றார்கள். தமிழ்கட்சிகளும் எதிர்க்கட்சி கதிரையில் அமர்ந்திருந்தார்கள்.தமிழர்களின் பெரும் ஆதரவுடன் முக்கிய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து சுக போகங்களை அனுபவித்தார்களே ஒழிய..... எதற்காக தம்மை பாராளுமன்றம் மக்கள் அனுப்பினார்கள் என்பதை வெற்றி பெற்ற அடுத்த கணமே மறந்து விட்டார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அவர்களுக்கு பல அதிகாரங்கள் இருந்தது. அதையெல்லாம் பிரயோகிக்கவே இல்லை. வீர வசனங்கள் பேசியதை தவிர..... இதைத்தான் உங்கள் சுமனும் செய்தார்.செய்கின்றார். செய்யப்போகின்றார். இன்று வேறு ஒரு முகத்துடன் சிங்களம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.பலவற்றை செய்ய துணிந்துள்ளர்கள் போல் தெரிகின்றது.செய்கிறார்களோ இல்லையோ தமிழர் தரப்பு இந்த சந்தர்ப்பத்தை பேசு பொருளாக்கி அரசியல் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் பொன்னம்பலம் பொருத்தமானவர் என நான் நினைக்கின்றேன்.சுமந்திரன் அல்ல. செம்மணி புதைகுழி அகழ்வு இடத்திற்கு தேடி வந்த அமைச்சர் சந்திரசேகரை திருப்பி அனுப்பியதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இனவாத சிங்களம் தமிழர்களுக்கு எதுவுமே தராது என்பது 70வருட வரலாறு சொல்லி நிற்கும் பாடம். இருந்தாலும் சிங்களத்திற்கு தமிழர்களுக்கு வேண்டியதை கொடுக்குமாறு சர்வதேசம் பரிந்துரை செய்யுமே தவிர வற்புறுத்தாது. இது 2009க்கு பின்னர் கண்டு களித்த அனுபவங்கள். எனவே.... இன்றைய ஆட்சியாளர்களுடன் சமரச பேச்சுக்கள் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சண்டித்தனங்கள் எக்காலத்திலும் எடுபடாது. ****
-
ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி
தமிழர் தரப்பு அரசியல்வாத்திகள் 50,60 வருட காலமாக தமிழர் யாப்பு போல் எழுதி வைத்திருக்கும் வசனங்கள் இவை. சந்தர்ப்பங்களை தவற விட்டது மட்டுமல்லாமல்....பேரம் பேசும் அரசியல் ஒரு துளி கூட இல்லாதவர்கள். போகத்திற்கு போகம் வரும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களை ஆதரிப்பதே இவர்கள் பிழைப்பு.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
கந்தையர்! ஐ போனில் கலக்கிறார்🤣. ஆனால் அடிக்கடி முற்றுப்புள்ளி போடாமல் விட்டால் அழகு.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
யாழ்கள அனுர காவடிகளுக்கான பதிலா அது?👆 அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் தம் நலனுக்காக காவடி எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நேர்த்தி நிறைவேறும் வரை.... நான் கருத்து வெற்றிக்காக கருத்து எழுதுபவனல்ல. இன்றைய யதார்த்தம் எதுவோ அதுவே தகும்.
-
இந்திய துணைத் தூதுவர் - மஹிந்த ராஜபக்ஷ இடையில் சந்திப்பு
இலங்கையின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கமானவர்கள் என்றால் இந்த கிந்தியர்கள் தான். இது எனது வன்மம் அல்ல. வரலாற்று சம்பவங்களை பார்த்த அளவில்....
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
இது பொய்யான செய்தியாக இருக்கும். யூதர்கள் அந்தளவிற்கு மோசமானவர்கள் இல்லை.