Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் !

சிங்களத்தின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த மேற்குலக ஆவணப்படங்களைத் தோற்கடிக்கவும், சிங்களத்துடன் தான் வன்னியில் அரங்கேற்றிய இனப்படுகொலைய முற்றாக மறைக்கவுமென இந்திய வெளியுறவுத்துறை தனது பாணியில் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதுக்கென இந்தியாவின் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தியா,மிந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நீண்ட பேட்டியொன்றைப் பதிவுசெய்யவிருப்பதோடு, வன்னியில் இன்னும் நடைபெற்றுவருவதாகச் சிங்களம் கூறும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய கண்ணிவெடியகற்றும் நிபுணர் குழு பற்றியும் அலசவிருக்கிறதாம். அத்துடன் தமிழர் தாயகத்தில் இந்தியா செய்துவரும் " நல்ல வேலைத்திட்டங்களை" தமிழர்கள் ஆகா ஓகோ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பது தொடர்பான காட்சிகளும் இடம்பெறவிருப்பதாக கொழும்பிலிருந்து வரும் செய்தியொன்றினை ஆதாரம் காட்டித் தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க "ஜாப்னா (Jaffna)" என்கிற பெயரில் தீவிர அரசியல் ரீதியான வர்த்தகப் படமொன்றினை உருவாக்கும் வேலைகள் மும்பாய் பொலிவூட்டில் நடந்து வருகின்றன. சூஜிட் சிர்கார் எனும் இயக்குனரால் உருவாக்கப்படும் இத்திரைப்படம், முன்னர் வந்த "காஷ்மீர்" எனும் திரைப்படத்தைக் காட்டிலும் இத்திரைப்படம் தீவிரவாதத்தினைக் கடுமையாக விமர்சிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்தின் குறிப்பின்படி இத்திரைப்படத்தின் நாயகனான ஜான் ஏப்ரகாம் இத்திரைப்படத்தின் தேவை கருதி விபரம் சேகரிக்கும் பணியில் இலங்கைக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட ஆவணப்படத்தினை இந்திய வெளியுறவுத்துறை தயாரிப்பதோடு, இந்த ஆவணப்படத்திற்கான மொத்தச் செலவினையும் கொழுமபிலிருக்கும் இந்தியத் தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆவணப் படக்குழுவினர் அண்மையில் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா உற்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். இக்குழுவினருக்கு போர்பற்றிய எந்தக் கேள்விகளையும் மக்களிடம் கேட்க வேண்டாம் என்று கண்டிப்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. "இந்திய உதவியின் மூலம் தமிழர் அடைந்துவரும் பயன்கள்", மற்றும் "போருக்குப் பிந்திய புணர்வாழ்வு" பற்றி மட்டுமே அவர்கள் ஒளிப்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆவணப்படக் குழுவிற்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்திய உதவியுடன் இடம்பெறும் கட்டுமானங்கள், இந்திய கண்ணிவெடியகற்றும் குழுக்களினதும், மருத்துவக் குழுக்களினது செயற்பாடுகளால் தமிழர் அடைந்துவரும் பயன்கள், மற்றும் ஜெய்ப்பூர் செயற்கைக் கால்களின் உதவியுடன் வாழ்ந்துவரும் தமிழர்கள் என்று இந்திய அர்சின் செயற்பாடுகளை பாராட்டும் ஒளிப்பதிவுகளை இக்குழுவினர் பதிவுசெய்தனர்.

பெருமளவு மக்கள் இந்தக்குழுவினரை வரவேற்காத போதும் கூட, இவர்கள் தமக்குத் தேவையான செய்திகளை ஒருவாறு பதிவு செய்து முடித்துள்ளனர்.

மீண்டும் இந்தியா சென்றடைந்திருக்கும் இக்குழுவினர் தமது ஆவணப்படத் தாயரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர். மகிந்தவின் பேட்டியானது இதுவரையில் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை.

இலங்கைப் போர்க்குற்ற ஆவணப்படங்களைப் பார்த்து வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த ஆவணப்படம் முதன் முதலில் திரையிடப்படப் போவதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தமிழர்கள் இந்தியா செய்துவரும் உதவியினால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், அவர்கள் அபிவிருத்தி, புணர்நிர்மாணம் ஆகியவற்றில் மட்டுமே இப்போது நாட்டம் கொண்டிருப்பதாகவும் காட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியப் பாராளுமறத்திலும், அதற்கு வெளியேயும் அண்மைக்காலமாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரனை ஒன்று தேவை என்கிற எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளையும், தமிழர்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்று விடுக்கப்படும் அறைகூவல்களையும் முறியடிக்கும் நோக்கில் இந்த ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது.

ஜெனீவாவில் சிங்கலம் அடைந்த தோல்வி, மற்றும் சனல் 4 இன் புதிய போர்க்குற்ற ஆதாரங்களால் ஏற்பட்டிருக்கும் பாரிய பாதிப்பினைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

நன்றி உங்கள் பதிவுக்கும் மொழிபெயர்ப்புக்கும்.

இவ்வாறான இந்திய அணுகுமுறையை சிங்களமும் சனல் நாலின் ஒளிப்பதிவின் ஒன்றும் மற்றும் இரண்டின் பின்னரும் செய்தது. முதலாவது சிங்கள தயாரிப்பை கொஞ்சம் சலசலப்பு இருந்தது ஆனால், இரண்டாவது பற்றி அதிகம் இல்லை. அத்துடன் சனல் நாலின் இரண்டாவது பதிப்பில் சிங்களத்தின் முதலாவது பற்றி கூறப்பட்டு இருந்தது.

எனவே இவ்வாறான பிரச்சார அணுகுமுறை எமது பக்க நியாயங்களை கூறவும் மேலாக எமது உணர்வுகளை தக்கவைக்கவும் பெரிதாக உதவுகின்றன. இந்திய ஆவண படத்திற்கு எதிராக தமிழகத்திலும் சர்வதேச அளவிலும் கருத்து வேறுபாடுகளும் அதற்கு எதிராக வேறு ஆவணப்படங்களும் வெளிவரும் சாத்தியம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இக்குழுவினருக்கு போர்பற்றிய எந்தக் கேள்விகளையும் மக்களிடம் கேட்க வேண்டாம் என்று கண்டிப்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இவர்களின் தமிழ் மக்கள் மீதான விளையாட்டுக்கு அமெரிக்காவின் சற்றலைட படங்கள் சரியான பதிலை வழங்கும்.

ரகுவின் மொழிபெயர்ப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அசின் கீரோயினோ...அப்பதான் ...பக்ச குடும்பம் சந்தோசப்படும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஊகங்களின் அடிபடையில் அரசியலில் கருத்துக் கூறுவது எப்பவும் தவிர்க்கபடவேண்டியது.

India to wage documentary war countering West’s exposure of Sri Lanka crimes

The Ministry of External Affairs in New Delhi has embarked on deploying India’s expertise in cinematography to campaign against recent exposures of Sri Lanka’s war crimes by Western documentaries and to defend the partnership efforts of the two Establishments in the island. Leading film makers in India have been hired by the ministry to produce a documentary that will be showing an interview with Rajapaksa, de-mining work by Indian teams and footages of Tamils ‘praising’ India, news sources in Colombo told TamilNet on Tuesday. Meanwhile, India’s Bollywood is set to produce a ‘politically charged’ commercial film, “Jaffna,” directed by Shoojit Sircar carrying the theme of ‘extremism’ to another level compared to his earlier film on Kashmir, and the actor John Abraham is going to visit the island often to get a hang of the milieu, IANS reported early this month.

Indian Public Diplomacy, a wing of India’s Ministry of External Affairs (MEA) is engaged in producing the documentary.

The decision was taken a year ago. The Indian High Commission in Colombo has provided the funds and logistical support to the team from the production house.

The team visited Jaffna, Ki’linochchi, Vavuniyaa and Trincomalee among other places in the Tamil homeland of the North and East.

The team was instructed to avoid asking anything about the war.

They were to record interviews with ‘Tamil beneficiaries of Indian help’ and to cover only post-war ‘rehabilitation’.

The brief for the team was to film homes, infrastructure projects made through Indian assistance, the work done by Indian de-mining and medical teams and show how these were helping the Tamil population. They also shot extensively with people who were using the Indian designed and manufactured prosthetic devices called the "Jaipur foot".

Not many people were willing to speak with the team. The team has however managed to get the kind of sound bites it was looking for, informed sources said.

The team has since gone to Delhi and has started post-production.

The Rajapaksa interview part planned for the documentary is yet to be accomplished.

The MEA plans to show the documentary initially to ‘educate’ the Indian parliamentarians and diplomats.

The picture they want to paint through this short film is that of a Tamil population that is 'happy with the assistance offered by the Indian government’ and ‘focused on rebuilding their life’.

Debates and deliberation in the Indian Parliament on the situation of Eezham Tamils lately have seen calls for international investigations into war crimes in Sri Lanka and criticism of the continued denial of political and fundamental rights as well as basic freedom to them.

The short film is an attempt at countering some of the criticism.

New Delhi needs ‘damage control’ after the Geneva vote and Channel 4 documentary, the informed sources in Colombo further said.

Contrary to ‘praises’ by a section of Eezham Tamil activists lured by the agendas set by competing USA and India, both were not genuine at Geneva, political observers opined.

While the US-resolution confined solutions to Sri Lanka’s LLRC recommendations, bailing out the Rajapaksa regime from international investigations and the Sri Lankan state from any constitutional obligations, the Indian ‘amendment’ has not only freed the genocidal state from UN interventions but has even paved way for possible stalemate in acting on the resolution.

The Indo-US competition always proves a bane to Eezham Tamils and a boon to the genocidal state in Colombo, Tamil political circles in the island commented.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35040

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரைப்படம் தமிழகத்தில் வெளிவரும் போது அண்ணன் சீமான், வை.கோ, நெடுமாறன், சத்தியராஜ் போன்றவர்கள் இப்படத்துக்கு சாணி தெளிப்பார்கள். முன்பு பிரபாகரன் என்ற சிங்கள படத்தினை எடுத்த இயக்குனருக்கு தமிழகத்தில் தர்ம அடி விழுந்தது, முல்லைப்பெரியார் அணையினை கொச்சைப் படுத்தி வெளிவந்த மலையாளப்படம் போன்றவற்றுக்கு நிகழ்ந்த கதியே இப்படத்துக்கும் நிகழும்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஊகங்களுக்குப் பதிலளிப்பதும் அரசியலில் கருத்துக் கூறுவதும் எப்பவும் தவிர்க்கபடவேண்டியது.

  • 0

poet

ஊகங்களுக்குப் பதிலளிப்பதும் அரசியலில் கருத்துக் கூறுவதும் எப்பவும் தவிர்க்கபடவேண்டியது.

poet

வணக்கம்,

மேலே இணைக்கப்பட்டுள்ள செய்தி ஊகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என சொல்லுகிறீர்களா? நன்றி

சிங்கள அரச போர் குற்றவாளிகளுடன் இந்திய இணைந்து நடாத்திய தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங்களும் எதிர்காலத்தில் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படத்தை எடுப்பதன் மூலம் உண்மையைத்தான் கொண்டுவரமுடியும்.

பொய் உரைக்கப்பட்டால் அதுவும் உண்மையை வெளிக்கொணரவே உதவும். வரட்டும். உரசலில் வெளிச்சம் வரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊகங்களுக்குப் பதிலளிப்பதும் அரசியலில் கருத்துக் கூறுவதும் எப்பவும் தவிர்க்கபடவேண்டியது.

  • 0

poet

உங்களது பிரச்சினைதான் என்ன??? இந்தியாவில் இருக்கிறீர்கள் என்பதாலோ அல்லது பிரபலமாகிவிட்டீர்கள் என்பதாலோ இந்தியா செய்வதை மறைக்க வேண்டும் என்று நினைத்துவிடுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஊகங்கள் என்று சொல்லும் நீங்கள் ஊடகங்களைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. ஜாப்னா என்கிற படம் பற்றி நீங்கள் இதுவரை அறிந்ததில்லை என்றால் நீங்கள் இந்தியாவில் என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன். மற்றையது இந்திய வெளியுறவுத்துறை எடுக்கும் ஆவணப்படம், இதுபற்றி எங்களை விட உங்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஊகங்கள் என்று பூசி மெழுகுகிறீர்கள். சரி, ஊகங்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த ஊகம் உண்மையாகிவிட்டால் என்ன செய்வதாக உத்தேசம்??? அப்போது என்ன சொல்லுவீர்கள்?? உங்களுக்கு அப்போதும் ஒரு காரணம் கிடைக்காதா என்ன??

அரசியலில் கருத்துக்குறுவதைத் தவிர்க்க வேண்டுமா?? நீங்கள் கூறும் அதே அரசியல்தான் எம்மக்களில் 160,000 பேரை வன்னியில் கொன்று குவித்தது என்பதை மறந்து விட்டீர்களா??? ஒரு இனம் அழியும்போது கூட அரசியலைத் தவிருங்கள் நஎன்று நீங்கள் கோருவது நகைப்பிற்கிடமானது. உங்களைப்பொறுத்தவரை அரசியலும் கலையும் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் எமது கலைகளும் வாழ்வும் அரசியலுடன் பிண்ணிப் பிணைந்தது. எமது கலைகள் அரசியலால் எழுதப்பட்டவை. அரசியலைல் வழியும் இரத்தத்தால் எழுதப்பட்டவை. ரோம் நகர் எரியும்போது சந்தோஷமாக ஏதோ வாசித்த அரசனின் நினைவு ஏனோ இதை எழுதும்போது வந்து தொலைக்கிறது. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.