Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக தயா மாஸ்டர்?

Featured Replies

வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தயா மாஸ்டர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் உயர் பதவி வகிப்பதுடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த ஊடக நண்பர்கள், வடமாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இல்லையெனப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்தையும், சம்மதத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் தான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பதில் சிக்கல் நிலை உள்ளதாக ஊடக நண்பர்களிடம் தெரிவித்த அவர் தற்போது தான் சகலராலும் நேசிக்கப்படும் ஒருவராக உள்ளதாகவும் அதனால் மக்களின் விருப்பமே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளதுடன், புலிகள் அமைப்பிலிருந்த போதும் தான் மக்களுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு அவர்கள் கேட்டால் தங்களது முடிவு எவ்வாறு அமையும்? என ஊடக நண்பர் ஒருவர் கேட்டதற்கு மெளனத்தை பதிலாகத் தந்து சம்மதத்தை நாசூக்காகத் தெரிவித்துக் கொண்டார்.

http://news.lankasri.com/show-RUmqyETVPdet1.html

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் புலிகளால்த்தான் பிழைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் எதிரிகள் எல்லோரும் எமக்குத் தரும் சன்மானம்.. ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்வது தான். ஆனால் அதனைக் கூட எமது இலக்கு நோக்கிய பயணத்திற்கு.. பயன்படுத்த முடியாத அளவிற்கு நாம் ஒற்றுமையின்றி இருப்பதுதான் அவர்கள் அதனை சன்மானமாகத் தரவும் அவர்களை தூண்டுகிறது..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

... நல்ல காலம் தமிழ்ச்செல்வன் இப்போது இல்லை ...! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு டக்ள்சோ அன்றேல் கருணாவோ உருவாக்க்கப்படுகிறார்

தயா மாஸ்டர் புத்திசாலி என்றால் தாழும் கப்பலில் ஏறமாட்டார்.

அப்படியும் அவர் போட்டியிட்டால் அவருக்கு விழும் வாக்குகள் எமக்கு பல செய்திகளை சொல்லல்லாம் (கள்ள வாக்குகளை குறிப்பிடவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பவாதி,

இவரைக் காப்பாற்ற சமாதான காலத்தில் சிறைக் கைதிகளாக இருந்த சிறிலங்கா இராணுவத்தை விடுதலை புலிகள் விடிவித்திருந்தார்கள் பின்பு இவரை கொழும்பு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி காப்பாற்றினார்கள்.

அவர் பதிலுக்கு செய்தது சிங்கள அரசிடம் சரண் அடைந்து விடுதலை புலிகளை காட்டி கொடுத்தது ......

இவருக்குதான் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டி இடும் தகுதி உண்டு ........ :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைத் தேர்தல் நாடகம் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நடிப்பதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.நாடகத்திற்காக அவர் தன்னைத் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்னாள் புலி உறுப்பினர்கள் யாரையும் கிந்தியாக்காரன் சந்தித்து பேசமாட்டான்(கருணா, பிள்ளையான்)ஆயிரம் மனு போட்டாலும் சரி விண்ணப்பம் கொடுத்திருந்தாலும் சரி .. மற்ற ஒட்டு குழுக்கள் கொலையே செய்திருந்தாலும் பேசுவான்( டகலஸ்..) இங்க புலி எனறால் கிலி.. இவனுங்க சந்தித்து பேசி அப்படியே ஒன்றும் ஆக போவதில்லை என்றாலும் இதில் (யாழ்பாணம் டக்லஸ் கன்றோலில் இருக்கும் போது) உள்ளடி வேலை இருப்பதாக எனக்கு படுகிறது. இதை அவன் (கிந்தியன்) செய்கிறான அல்லது இவன்(சிங்களன்) செய்கிறான என்பது தான் தெரியவில்லை..!!

அடுத்த நாளுக்காக…

1 04 2012

sardar4.jpg?w=510

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.

பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,

சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..

கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,

அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,

என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்.

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார், அடுத்த நாளுக்காக ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.