Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்பவாருதியின் நவீன ரெண்ட்.. எப்படி இருந்தனான் இப்படி ஆகிட்டனே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் விழா, ரவூப் ஹக்கீம்: புறக்கணியுங்கள்! - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்.

rauf-hakeem.jpg

‘அமைச்சர் ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!’ என தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

‘கம்பன் விழாவினர் ஜெனிவாவில் அய்.நா மனித உரிமை அவையில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அவரை அழைத்த கம்பதாசர்களுக்கு குறிப்பாக கம்பவாரி ஜெயாஜ் அவர்களுக்கு சூடு, சொரணை இல்லாமல் இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல.

போரில் தமிழர்கள் கொல்லப்படவில்லை, தமிழிச்சிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படவில்லை, கிழக்கில் உதயம், வடக்கில் வசந்தம், தமிழர்கள் பத்துவித கறியோடு பால்சோறு சாப்பிட்டு பாலும் பழமும் அருந்தி பன்னீரில் கொப்பளித்து பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்குகிறார்கள், சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறார்கள், இன்பமே ஒழிய துன்பம் இல்லை எல்லோரும் சிங்கள இராணுவ ஆட்சியில் மாலோகமாக வாழ்கிறார்கள் என்று சிறிலங்கா செய்யும் பரப்புரைக்கு கம்பன் கழகமும் கம்பதாசர்களும் துணை போகிறார்கள்.

கம்பர் எழுதிய இராமாயணம் ஆகும் நூலா ஆகாத நூலா என்பது பற்றி நடந்த விவாதங்களில் கம்பர் கல்வியில் பெரும் புலவர் அவர் எழுதிய காப்பியம் இலக்கிய நயம் படைத்தது எனினும் மொத்தத்தில் அந்தக் காப்பியம் மரத்தின் பின் ஒளித்திருந்து அம்புவிட்டு வாலியைக் கொன்ற இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிப்பதையும் இலங்கையை ஆண்ட மறத்தமிழன் அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தவனை இரக்கமில்லாத அரக்கன் எனத் தூற்றுவதையும் தன்மானத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வால்மீகி “சீதையைப் பிரிந்த சோகத்தால் மது, மாமிசம் அருந்துவதை விட்டுவிட்டார். வானப்பிரஸ்தருக்கு உகந்த பழம், கிழங்குகளையே சாயங்காலத்தில் புசிக்கிறார்” என இராமனை ஒரு குடிகாரனாகச் சித்திரிக்கிறது.

மேலும் கம்பரது இராமகாதையில் காணப்படும் காமரசம் ததும்பும் பாடல்கள் அதன் தெய்வீகத்தை கேள்விக் குறியாக்குகிறது. அதன் காரணமாகவே கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைத் தீக்கிரையாக்க வேண்டுமென அறிஞர் அண்ணா வாதிட்டார். தெய்வமாக் கதையில் காமரசம் வேண்டுமா என்று கேட்டார்.

ஜெனிவாவில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேரணி, உண்ணாநோன்பு, நடைபயணம் என ஆர்ப்பரித்து எழுந்தார்கள்.

அதே தீர்மானத்தை சிங்கள ஆட்சியாளர்களோடு கைகோர்த்து எதிர்த்துப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்றுவது முழுத் தமிழினத்தையும் அவமதிப்பதாகும்.

எனவே தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கம்பதாசர்களால் நடத்தப்படும் இந்தக் கம்பன் விழாவைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரரையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். ‘ என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: முழக்கம்.கொம்

IMG_1982.JPG

வைச்சா குடுமி.. சிரச்சா மொட்டை என்று நிற்கிறாரே அவர் தான் தன்னைத் தானே கம்பரின் வாரிசு என்று அழைத்துக் கொள்ளும்.. யாழ்ப்பாணத்து தமிழ் வியாபாரிகளின் கம்பவாருதி..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஹக்கீமை அழைப்பது மூலம் இந்த விழா தனது இறுதி அத்தியாயங்களை எழுதியுள்ளது.

நேற்று ஹக்கீம் சிங்களவர்கள் முஸ்லீம்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை எனக்கவலைப்பட்டு இருந்தார். அதேவேளை முஸ்லீம்கள் தமிழர்களையும் புரிந்தது நடந்தது இல்லை. பிரச்சனை யாரில் என்பது தெளிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமாயணம் பெண்ணடிமை போதிக்கும் ஒரு வடக்கு பிரச்சார கட்டுகதை. 

ராமனின் குரங்குக்கே மலையை தூக்கி பறக்கும் சக்தி உண்டு ஆனால் மனுசி உதவி வரும் வரை காவல் இருப்பா? 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சிங்கள அரசுடனான முஸ்லிம் தலைவர்களது உறவாடல்களை மையமாக வைத்து முஸ்லிம் மக்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பது பிழையான அரசியலாகும். சர்வதேச நாடுகள் முழுவதிலும் மூன்றாவது சிற்றினம்/மூன்றாவது சிறுபாண்மை இனம் இப்படித்தான் செயல்படுகிறது. அவர்கள் நிலையில் இருந்தால் நாமும் அப்படித்தான் செயல்பட்டிருப்போம். நம்மீது ஆழ்ந்த கரிசனை உள்ள மலையக தமிழர் அரசியலும் ஏறக்குறைய அப்படித்தான் செயல் படுகிறது. ஆனாலும் நாம் மலையகத் தமிழரை வெறுக்காமல் புரிந்து கொள்கிறோம். அமரர் தொண்டமானுடன் செல்வநாயகத்தில் இருந்து சம்பந்தர்வரை நல்லுறவைப் பேணினர்.

அரசியல் நிலமையைப் புரிந்துகொண்டு நண்பர் ரவ்கக்கீம் அவர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் ஒப்பந்தம் செய்துகொண்டதுடன் நல்லுறவையும் பேணியது.அதே நோக்குஇன்று டன் நண்பர் ரவ்கக்கீமுடன் கூட்டமைப்பின் தலைமையும் நல்லுறவைப் பேணுகிறது .

ஆனால் ஈழத்தில் நம்மோடு காலம் காலமாக வாழ்கிறவர்கள் வாழப்போகிறவர்கள் என்கிற வகையில் முஸ்லிம் மக்கள் ஈழத்தின் சுபீட்சத்துக்கும் நமக்கும் மிகவும் முக்கியமானவர்கள். நாங்கள் அவர்ளை மலையக அரசியலை புரிந்துகொண்டதைவிடச் சிறப்பாகப் புரிந்துகொள்ளவ்வேண்டும். புரிந்துகொண்டு நட்புடன் செயல் படுவது அவசியம். ஈழத்தில் நாம் பலப்படும்போது அவர்கள் எங்கள்மீது நம்பிக்கைவைத்து எங்களோடு இணைந்து செயல்படுவார்கள். மூன்றாவது சிற்றி/சிறுபாண்மை இமாக உள்ள முஸ்லிம்களின் இக்காட்டுக்கலையும் அதன் அரசியலையும் புரிந்துகொள்ளாமல் நாம் ஈழத்தை வென்றெடுக்கும் இராசதந்திர அணுகுமுறையை வளர்த்தெடுக்க முடியாது.

நண்பர் ரவ் கக்கீம் அவர்களைப் புறக்கணிப்பது ஈழ விடுதலையை விட முக்கியமென்று நம்மில் யாரும் கருதமாட்டார்கள் என்று நம்புகிறேன். அதனால் நமது குறுங்கால அரசியல் நிலைகளை ஈழவிடுதலையின் நீண்டகால நனன்களுக்கு கீழ்படுத்திச் செயல்படுவது அவசியம். ஈழ விடுதலையின் நீண்டகால நலன்களை முதன்மைப் படுத்தி மேற்படி பகிஸ்கரிப்பை கைவிடும்படி பணிவன்புடன் கோருகிறேன்.

இன்று இலங்கைத் தீவில் வாழும் தலைசிறந்த தமிழ் பேச்சாளரான நண்பர் ரவ்கக்கீம் அவர்கள் கம்பன்விழாவில் கலந்துகொள்வதை வரவேற்று மேற்படி இலக்கிய விழா வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

ஈழமக்களின் நீண்டகால நலன்களைவிட வேறெதுவும் முக்கியமானதல்ல.

ஈழத்து முஸ்லிம்களின் தலைவரான நண்பர் ரவ்கக்கீம் அவர்களின் முகத்துக்கு மேல் இடப்பட்டிருக்கும் புள்ளடியை நீக்கிவிடுமாறு நட்ப்புக்குரிய நெடுக்ஸ்சிடமும் யாழ் வட்டத்தினரிடமும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழ் அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சிங்கள அரசுடனான முஸ்லிம் தலைவர்களது உறவாடல்களை மையமாக வைத்து முஸ்லிம் மக்கள் தொடர்பான முடிவுகளை எடுப்பது பிழையான அரசியலாகும். சர்வதேச நாடுகள் முழுவதிலும் மூன்றாவது சிற்றினம்/மூன்றாவது சிறுபாண்மை இனம் இப்படித்தான் செயல்படுகிறது. அவர்கள் நிலையில் இருந்தால் நாமும் அப்படித்தான் செயல்பட்டிருப்போம். நம்மீது ஆழ்ந்த கரிசனை உள்ள மலையக தமிழர் அரசியலும் ஏறக்குறைய அப்படித்தான் செயல் படுகிறது. ஆனாலும் நாம் மலையகத் தமிழரை வெறுக்காமல் புரிந்து கொள்கிறோம். அமரர் தொண்டமானுடன் செல்வநாயகத்தில் இருந்து சம்பந்தர்வரை நல்லுறவைப் பேணினர்.

அரசியல் நிலமையைப் புரிந்துகொண்டு நண்பர் ரவ்கக்கீம் அவர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் ஒப்பந்தம் செய்துகொண்டதுடன் நல்லுறவையும் பேணியது.அதே நோக்குஇன்று டன் நண்பர் ரவ்கக்கீமுடன் கூட்டமைப்பின் தலைமையும் நல்லுறவைப் பேணுகிறது .

ஆனால் ஈழத்தில் நம்மோடு காலம் காலமாக வாழ்கிறவர்கள் வாழப்போகிறவர்கள் என்கிற வகையில் முஸ்லிம் மக்கள் ஈழத்தின் சுபீட்சத்துக்கும் நமக்கும் மிகவும் முக்கியமானவர்கள். நாங்கள் அவர்ளை மலையக அரசியலை புரிந்துகொண்டதைவிடச் சிறப்பாகப் புரிந்துகொள்ளவ்வேண்டும். புரிந்துகொண்டு நட்புடன் செயல் படுவது அவசியம். ஈழத்தில் நாம் பலப்படும்போது அவர்கள் எங்கள்மீது நம்பிக்கைவைத்து எங்களோடு இணைந்து செயல்படுவார்கள். மூன்றாவது சிற்றி/சிறுபாண்மை இமாக உள்ள முஸ்லிம்களின் இக்காட்டுக்கலையும் அதன் அரசியலையும் புரிந்துகொள்ளாமல் நாம் ஈழத்தை வென்றெடுக்கும் இராசதந்திர அணுகுமுறையை வளர்த்தெடுக்க முடியாது.

நண்பர் ரவ் கக்கீம் அவர்களைப் புறக்கணிப்பது ஈழ விடுதலையை விட முக்கியமென்று நம்மில் யாரும் கருதமாட்டார்கள் என்று நம்புகிறேன். அதனால் நமது குறுங்கால அரசியல் நிலைகளை ஈழவிடுதலையின் நீண்டகால நனன்களுக்கு கீழ்படுத்திச் செயல்படுவது அவசியம். ஈழ விடுதலையின் நீண்டகால நலன்களை முதன்மைப் படுத்தி மேற்படி பகிஸ்கரிப்பை கைவிடும்படி பணிவன்புடன் கோருகிறேன்.

இன்று இலங்கைத் தீவில் வாழும் தலைசிறந்த தமிழ் பேச்சாளரான நண்பர் ரவ்கக்கீம் அவர்கள் கம்பன்விழாவில் கலந்துகொள்வதை வரவேற்று மேற்படி இலக்கிய விழா வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

ஈழமக்களின் நீண்டகால நலன்களைவிட வேறெதுவும் முக்கியமானதல்ல.

ஈழத்து முஸ்லிம்களின் தலைவரான நண்பர் ரவ்கக்கீம் அவர்களின் முகத்துக்கு மேல் இடப்பட்டிருக்கும் புள்ளடியை நீக்கிவிடுமாறு நட்ப்புக்குரிய நெடுக்ஸ்சிடமும் யாழ் வட்டத்தினரிடமும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

பொயட், நீங்கள் ஒரு சூப்பர் டிப்ளோமேட்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்களின் நீண்டகால நலன்களைவிட வேறெதுவும் முக்கியமானதல்ல.

ஈழத்து முஸ்லிம்களின் தலைவரான நண்பர் ரவ்கக்கீம் அவர்களின் முகத்துக்கு மேல் இடப்பட்டிருக்கும் புள்ளடியை நீக்கிவிடுமாறு நட்ப்புக்குரிய நெடுக்ஸ்சிடமும் யாழ் வட்டத்தினரிடமும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

பொயட் இப்படி ஒரு பகிரங்க அறிவிப்பை.. ரவுவ் கக்கீமை நோக்கி.. ஜெனீவாவில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் அரசபடைகளின் மனித உரிமை மீறல்களை இனங்காட்டி கொண்டு வரப்பட்ட அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் தீர்மானத்தை ஆதரிக்க முஸ்லீம் நாடுகளைக் கோரச்சொல்லி நீங்கள் ஒரு பதிவிட்டிருந்தால்.. அதை உங்கள் நண்பர் ரவுவ் கக்கீம் செவிமடுத்து அல்லது படித்துச் செயற்பட்டிருந்தால்.. இன்று தமிழ் படைப்பாளிகள் சங்கம் விட்டிருக்கும்.. இந்த அறிக்கைக்கு தேவை வந்திருக்காதே.

மேலும்.. இது என்னுடைய வேண்டுகோள் அல்ல. தமிழ் படைப்பாளிகள் சங்கத்தினது. அவர்களின் அறிக்கையை அப்படியே பிரசுரிப்பதுதான் உண்மையில் சரியான நடவடிக்கை ஆகும்.

ஈழத்தமிழ் அன்பர்களுக்கு எழுதப்பட்டுள்ள தங்களின் வேண்டுகோளை.. ஈழத்து தமிழ் பேசும் அன்பர்களுக்கும் சேர்த்து எழுதி இருப்பின் நிச்சயம்.. வரவேற்றிருக்கலாம். ரவ்வு கக்கீம்.. தமிழ் மக்களை மன்னிக்க வேண்டாம்.. முஸ்லீம் என்பதற்கு அப்பால் சராசரி மனிதனாக நின்று.. மனித உரிமைகள் தன் கண் முன்னே பறிக்கப்படுவதை தடுக்கவாவது முயலலாமே..!

புலிகள் தீவிரவாதிகள்.. முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டார்கள்.. அப்படி என்று நம்பிறவர்கள் நம்பட்டும். ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் ரவ்வு கக்கீமுக்கு என்ன செய்தார்கள்..???! அவர்கள் மீதான படுகொலையை நியாயப்படுத்தி.. முஸ்லீம் (இஸ்லாம்) மதவாதத்தை முன்னிலைப்படுத்தி.. அமெரிக்க எதிர்ப்பைக் காட்ட.. சிங்கள அரசின் மனிதப் படுகொலைகளை அங்கீகரிக்கும்... ரவ்வு கக்கீம்.. உங்களின் நண்பர் என்பது வியப்பளிக்கிறது..!

ரவ்வு கக்கீமின் மனித நேயமற்ற செயலுக்கு ஒரு சிறிய எதிர்ப்பைக் காட்ட இதனை பயன்படுத்துவதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. பொயட்..! ரவ்வு கக்கீம் மட்டுமல்ல.. முஸ்லீம் நாடுகளே.. நிறைய மனித உரிமைகள் காப்புப் பற்றி அறிந்து கொண்டு செயற்பட வேண்டும்..! மத அடிப்படைவாதத்தை.. மதத்தை முன்னிலைப்படுத்தி.. அமெரிக்க எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி..செயற்படுவதை.. அவை கைவிட்டு மனித உரிமைகள்.. மனித குல மேம்பாடு குறித்து சிந்திப்பதும் நியாயங்களை உள்வாங்கி கொண்டு தீர்மானம் எடுத்து செயற்படுவதும் அவசியம்..! இது 21ம் நூற்றாண்டு..! அல்லா தான் உலகம் என்று சொல்ல அதை அப்படியே.. உலக மக்கள் நம்ப தயார் இல்லை..! மக்கள் இன்று விடயங்களை நன்கு அலசி ஆராய தெளிந்து கொள்ள கற்றுக் கொண்டுள்ளனர்..பொயட்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நெடுக்ஸ், முஸ்லிம்களின் தலைவரும் நண்பருமான ரவ்கக்கீம் அவர்கள் இத்தகைய நிலைபாட்டுடன் இருந்தபோதுதான் தலைவர் பிரபாகரன் அவரை வன்னிக்கு அழைத்து ஒப்பந்தம் செய்துகொண்டார்.

கூட்டமைப்பும் அத்தகைய மார்க்கத்தையே பின்பற்றுகிறது.

விவாதிப்பதென்றால் எங்களுக்கு எதிராக முன்வைக்க அவர்களுக்கும் 1990 நிகழ்வுகள்போல நிறைய காரனங்கள் உண்டு. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

தமிழ் படைப்பாளிகள் களகம் என்ற பெயரில் எழுதும்போது எங்களைப் போன்ற பலரை அவர்கள் படைப்பாளிகளாக அஞ்கீகரிக்காவிட்டாலும் நாமும் பதில் சொல்லவும் பங்காளியாகவும் நேரிடுகிறதல்லவா?

நாங்கள் எங்களை சிங்கள ஆழும் சக்திகள் புரிந்துகொண்டதுபோலத்தான் முஸ்லிம்களையும் நாம் புரிந்து கொள்வது என்று தீர்மானித்தால்.நமக்கு விடிவில்லை. முதல் எதிரியைத் தவிர ஏனையவர்களை குற்றம் பார்த்து ஒதுக்கப் போகிறோமா? சுற்றம் பார்த்து வாசல் கதவுகளைத் திறந்து வைக்கப் போகிறோமா? த.ப.க நிலைபாடு எடுத்தால் ஒருவேளை அட்வகேட் பாணி விவாதத்துக்கு ஒருவேழை சரியாக இருக்கலாம். ஆனால் ஈழக் கனவை குழி தோண்டி புதைத்து விடுவோம். நண்பா எது சரியான ராசதந்திரம் என்பதை தயவு செய்து புரிந்கொள்ளுங்கள். தயவு செய்து முகத்தில் உள்ள புள்ளடியை அகற்றி விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

IMG_1982.JPG

கம்பன் கோஸ்டி டமார் ஆனால் அடுத்து உமர்கைய்ய கழகம் வீரமாமுனிவர். தமிழ் வளர்த்த இஸ்லாமியர் கழகம் என்று சொல்லி போடுவார்கள்.. அந்த பட்டைஎடுத்துட்டு குல்லாவை போட்டால் சரியாகிடும்.

டிஸ்கி:

ஒட்டகம் மேய்கிற கோஸ்டியெல்லாம் அங்கையே திரும்பி போகணும். இங்க எதுக்கு வரணும். சரி வந்தாச்சு ஏதாவது வியாபரம் பண்ணால் சரி.. குல்மா வேலைகள்.. நோர்வே கிட்ட ஏதோ இடைக்கால அரசு நிர்வாகம் எனும் பேசும் போதே இவனுங்களுக்கு அதில் கிந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசம் போல.. மட்டகளப்பு வேண்டுமாம்.அம்பாறை வேணுமாம். இருக்க இடம் கொடுத்த படுக்க பஞ்சணை கேட்டானாம் பரதேசி..

பாகிஸ்தான் ஜர்தாரியிடம் சொல்லி வேகமா குண்டை கிண்டை ரெடி பண்ணுங்கப்பா.. முதல்ல ஏதாவது செய்யுங்கோ . அப்புறம் பேசலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மொழியை அடிப்படையாக வைத்தே தமது அரசியலை நடாத்துகிறார்கள். ஆனால் முஸ்லீம்களோ மதத்தையும் இனத்தையும் அடிப்படையாக வைத்துத் தமது அரசியலைச் செய்கிறார்கள். அரேபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் இஸ்லாம் தெற்காசியாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்திலிருந்தே இந்த மத இன ரீதியான பிரிவினை தொடங்கிவிட்டது. இனி இதனை மாற்றவே முடியாது. இதில் எது சரியான பாதை என்பதை எதிர்கால இஸ்லாமிய புத்திஜீவிச் சமூகம் உணர்ந்து அதற்கேற்ப தமது பாதையை வகுத்துக்கொள்ளும்வரை உலகத்தில; இஸ்லாமிய மக்களால் சமாதானத்திற்குத் தடங்கல் இருந்து கொண்டேயிருக்கும். மத்திய கிழக்கில் யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் காணப்படும் மதவழிப்பட்ட இன முரண்பாடுகளால் உலக சமாதானம் நெருக்கடிக்குள்ளாகிறது. இந்தியாவில் இந்துக்களும் சளைத்தவர்களல்ல அவர்களது மதவெறியும் சமாதானத்தைச் சீர்குலைக்கின்றது. கத்தோலிக்க புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களிடையேயும் மதவெறியுண்டு இருப்பினும் மதத்தை முன்வைத்து பலகையிலும் உலக அமைதிக்குப் பங்கத்தை ஏற்படுத்துபவர்கள் முஸ்லீம்களாகவே இருக்கிறார்கள். இலங்கையிலும் ஏற்படக்கூடிய அரசியல் தீர்வைத் தமது முஸ்லீம் இனவாதத்தினால் குழப்பியடிக்க சந்தர்ப்பம் பார்த்திருப்பவர்களாகவே இஸ்லாமியர்கள் காணப்படுகிறார்கள் இதனால் புரிதல் என்பது அவர்களிடமிருந்தே உருவாகவேண்டியிருக்கிறது. சிங்களவர்களுடன் சேர்ந்தியங்கி அநீதிக்குத் துணைபோவதை முஸ்லீம் தலைவர்கள் சமாதானத்திற்கான தங்களின் ஒத்துழைப்பு என்று கூறுவதை சிங்களவர்கள் வேண்டுமானால் ஏற்கலாம் ஆனால் தமிழர்கள் அதனை நயவஞ்சகமாகவே பார்ப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நெடுக்ஸ், முஸ்லிம்களின் தலைவரும் நண்பருமான ரவ்கக்கீம் அவர்கள் இத்தகைய நிலைபாட்டுடன் இருந்தபோதுதான் தலைவர் பிரபாகரன் அவரை வன்னிக்கு அழைத்து ஒப்பந்தம் செய்துகொண்டார்.

கூட்டமைப்பும் அத்தகைய மார்க்கத்தையே பின்பற்றுகிறது.

விவாதிப்பதென்றால் எங்களுக்கு எதிராக முன்வைக்க அவர்களுக்கும் 1990 நிகழ்வுகள்போல நிறைய காரனங்கள் உண்டு. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

தமிழ் படைப்பாளிகள் களகம் என்ற பெயரில் எழுதும்போது எங்களைப் போன்ற பலரை அவர்கள் படைப்பாளிகளாக அஞ்கீகரிக்காவிட்டாலும் நாமும் பதில் சொல்லவும் பங்காளியாகவும் நேரிடுகிறதல்லவா?

நாங்கள் எங்களை சிங்கள ஆழும் சக்திகள் புரிந்துகொண்டது போலத்தான் முஸ்லிம்களையும் நாம் புரிந்து கொள்வது என்று தீர்மானித்தால்.நமக்கு விடிவில்லை. முதல் எதிரியைத் தவிர ஏனையவர்களை குற்றம் பார்த்து ஒதுக்கப் போகிறோமா? சுற்றம் பார்த்து வாசல் கதவுகளைத் திறந்து வைக்கப் போகிறோமா? த.ப.க நிலைபாடு எடுத்தால் ஒருவேளை அட்வகேட் பாணி விவாதத்துக்கு ஒருவேழை சரியாக இருக்கலாம். ஆனால் ஈழக் கனவை குழி தோண்டி புதைத்து விடுவோம். நண்பா எது சரியான ராசதந்திரம் என்பதை தயவு செய்து புரிந்கொள்ளுங்கள். தயவு செய்து முகத்தில் உள்ள புள்ளடியை அகற்றி விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய தலைவர் புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தங்களை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையில் செய்யவில்லை. வடக்குக் கிழக்கு முஸ்லீம்கள் அநேகரின் பிரதிநிதித்துவம் முஸ்லீம் காங்கிரஸிற்கு இருந்தது என்ற அடிப்படையில் அதன் தலைவராக கக்கீம் இருந்த போது செய்யப்பட்டது.

ஆனால் கக்கீம்.. அந்த உடன்படிக்கைக்கு அமைவாக இன்று கூட நடந்து கொள்ளவில்லையே. புரிந்துணர்வை அவர் தமிழ் மக்களோடு ஏற்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே..!!

இதே MoU க்கள் மலைய கட்சிகளோடும் செய்யப்பட்டன. மனோ கணேசனோடும் செய்யப்பட்டன. மனோ கணேசன்.. இன்று வரையும்.. மற்றும் இறக்கும் வரை மலையக மக்கள் முன்னணி சந்திரசேகரனும் அதனை மதித்துத் தான் நடந்து வந்திருக்கின்றனர். மனோ கணேசன் போன்றவர்கள் இன்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் தானே. அது ஏன்.. கக்கீமால் முடியாது..???!

எனக்கு தமிழ் மக்களிடையே விளங்கும் "படைப்பாளிகள்" என்பதற்கான வரைவிலக்கணம்.. வரம்பு.. இவை பற்றி தெரியாது. நீங்கள் ஒரு கவிஞர் என்று உங்கள் பெயரில் இருந்தும்.. ஒரு துணை அல்லது உதவி நடிகர் என்று தனுஷின் படத்தில் நடித்தவர் என்ற வகையிலும் தெரியும்..!

ஆனால் ஒரு அமைப்பு.. தன்னை அவ்வாறு இனங்காட்டி அறிக்கை இடுகிறது எனும் போது.. அறிக்கையின் கனதியை தான் உடனடியாகப் பார்க்க வேண்டி உள்ளதே தவிர.. அமைப்பின் பின்னணி குறித்து ஆராய கால அவகாசம் அவசியம். மேலும் மேற்படி அமைப்பின் அறிக்கையில்.. பாரதூரமான தவறுகள் இருப்பதாக இனங்காண முடியாத நிலையிலும்.. ஒரு தவறை உணர்த்த மேற்கொள்ளப்படும் அடையாள நடவடிக்கையாக.. இதனை பாவிக்க முற்படுகின்ற வகையிலும்... குறித்த அறிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முஸ்லீம்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையைப் போல.. முஸ்லீம்களிடம் இருந்து தமிழ் மக்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வர வேண்டும். முஸ்லீம்கள்.. வெறும் மத அடிப்படையில் பிரச்சனைகளை நோக்கின்... உலகில் எவருமே அவர்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் தோன்றும். அதைத்தான் இன்று உலகம் பூராவுமே காண்கிறோம்..! நீங்கள் தமிழ் மக்களை நோக்கி.. புரிந்துணர்விற்கு.. அழைப்பு விடுவதால் மட்டும்.. புரிந்துணர்வு வந்திவிடப் போவதில்லை என்பதற்கு.. கக்கீம்.. தேசிய தலைவரோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்காமல் நடந்து கொண்டதில் இருந்து தெளிவாகிறது. இந்த நிலையில்.. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை நோக்கி.. புரிந்துணர்வு வை விடிவில்லை என்பது.. வெறும் வெற்று கோசங்களே..!

சிங்களவர்களோடு புரிந்துணர்வு கொண்டு.. நாங்கள்..சாதித்து என்ன..??! முஸ்லீம்களோடு.. புரிந்துணர்வு கொண்டு சாதித்தது என்ன..??! சிங்களர்வகளோடு புரிந்துணர்வு வைத்து கண்டது இனப்படுகொலை. முஸ்லீம்களோடு கண்டது.. அந்த இனப்படுகொலைக்கு அங்கீகாரம் வழங்குதல்..! இப்போ.. சிங்களவர்கள் தங்களைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்ற கூப்பாடு.. முஸ்லீம்களிடம் இருந்தும் வருகிறது. இதைத்தான் தமிழர்கள்.. 1972 இல் இருந்தும்.. அதற்கு முதலும் சொல்லி வந்திருக்கிறார். இவற்றை முஸ்லீம் தலைமைகள் புரிந்து கொள்ளாமல் விட்டதுமின்றி.. தமிழ் மக்களின் விடுதலையோடு ஒரு சக சிறுபான்மைச் சமூகமாக தமது உரிமைக்காக சிங்களத்திடம் போராடி இருக்க வேண்டிய முஸ்லீம்கள்.. மத அடிப்படைவாத ஜிகாத் நிலைப்பாட்டில் நின்று கொண்டு.. எவரோடும் புரிந்துணர்வை எட்டாமல் விட்டதற்கு தமிழ் மக்கள் காரணமாக முடியாது.

சொந்த அயலவன் சாக இரங்காதவர்கள்.. எங்கேயோ.. சொந்த மதத்தை பின்பற்றும் வேற்று மொழி.. நிறத்தான்.. அதுவும் அப்பட்டமான பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளவர்கள்.. சாக.. முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த நிலையை நிச்சயம் சிங்களவர்கள் மட்டுமல்ல.. உலகில் எவருமே சகித்துக் கொள்ளமாட்டார்கள். தமிழ் மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

எதற்கு எடுத்தாலும்.. தமிழ் மக்கள் பணிந்து போக வேண்டும்.. இன்றேல் விடிவில்லை என்ற வெருட்டல் உங்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்துக்களோடு வெளி வருகின்றன. நிச்சயம்.. நீங்கள்.. பிராந்திய.. சக்திகளின் நிலைப்பாடுகளோடு.. இணங்கி அதைச் செய்ய முனைவது தெரிகிறது. காந்தி.. முஸ்லீம்களுக்கு பயந்து பாகிஸ்தானை உருவாக்கி என்னத்தைக் கண்டார்..???! இந்திரா காந்தி என்னத்தைக் கண்டார்..???! எங்கள் தேசிய தலைவர் புரிந்துணர்வு உடன்படிக்கை போட்டு என்னத்தைக் கண்டார்..????! இந்த நிலையில்.. மீண்டும் மீண்டும்.. தமிழ் மக்களைப் பார்த்து.. புரிந்து போ.. பணிந்து போ.. என்று சிலாகித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

தமிழ் மக்கள்.. தங்களின் சொந்த வேலைத்திட்டத்தோடு.. நடக்கின்ற அதேவேளை.. முஸ்லீம்கள்.. தமிழ் மக்களைப் புரிந்து கொண்டு நடக்க முன் வர வேண்டி உள்ள அவசியத்தை அவர்களுக்கு இன்னும் இன்னும் இனங்காட்ட வேண்டும். சிங்களவர்களைப் பொறுத்த வரை.. தமிழர்களை விட முஸ்லீம்களை அவர்கள் ஆபத்தானவர்களாகவே நோக்குகின்றனர். தமிழர்கள் ஆயுதம் தாங்குவதை கூட சிங்களவர்கள் ஒருவேளை சகித்துக் கொண்டாலும்.. முஸ்லீம்கள் அப்படிச் செய்ய அனுமதிக்கமாட்டார்கள்.

முஸ்லிம் காங்கிரஸை.. புளொட்.. ஈபிடிபி.. கருணா குழு.. போன்று ஆயுத அரசியல் குழுக்களாக செயற்பட சிங்களம் அனுமதிக்குமா..??! நிச்சயமாக இல்லை..! உண்மையில்.. தமிழ் மக்களை விட.. முஸ்லீம்கள் தான் தமிழ் மக்களையும் அவர்களோடு தமக்கு அமையக் கூடிய நீடித்த.. வசதியான.. உறவையும் மீளமைத்துக் கொள்வதில் உள்ள நன்மை பற்றி புரிந்து கொண்டு தமிழ் மக்களை நோக்கி நேசக்கரம் நீட்ட வேண்டுமே தவிர.. தமிழ் மக்களே எல்லாரோடும்.. பணிந்து போக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்கக் கூடியதல்ல..! அது தமிழ் மக்களை பலவீனமானவர்களாகவே காட்டி.. மற்றவர்கள் அவர்களைப் புறக்கணிக்க வகை செய்யும்.

தேசிய தலைவரையும்.... MoU வை இணங்காட்டி.. பேரியல் அஸ்ரப்புடனான தனது தனிப்பட்ட அரசியல் போட்டியை முன்னிலைப்படுத்தி.. தன்னை முஸ்லீம்களின் ஏகபிரதிநிதியாக அங்கீகரிக்க கேட்டவர் தான் இந்த கக்கீம்..! அதுதான் அவருக்கு முஸ்லீம்கள் தொடர்பான அன்றைய தேவையாக இருந்தது. ஆனால் தேசிய தலைவர் அவருக்குச் சொன்னது.. நீங்கள்.. போட்டி அரசியலை விட்டிட்டு.. எல்லோரும் ஒரு பொது இணக்கப்பட்டோடு.. வாருங்கள்.. நாங்கள் உங்களுக்கு அந்த நிலையை தருகிறோம் என்று..! முஸ்லீம்களை ஒன்றிணைப்பதன் மூலமே.. சாத்தியமான அரசியல் வெற்றியை பெற முடியும் என்று நம்பிய தேசிய தலைவருக்கும்.. அவர் வழி நின்ற மக்களுக்கும் கக்கீம் தந்த பரிசு என்ன.. ஐநா மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்கள் சார்ப்பாக கொண்டு வரப்பட்ட மனித உரிமைகள் தீர்மானத்தை எதிர்க்க.. முஸ்லீம் நாடுகளிடையே பிரச்சாரம் செய்தது..!

இந்த நிலையில்.. இவர் மூலம்.. எப்படி முஸ்லீம்கள்.. தமிழ் மக்களைப் புரிந்து கொண்டு.. தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள்.????! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸின் அரசியல் எப்படி பழுதுபார்க்கப்பட முடியாததோ அப்படியேதான் இந்த கக்கீமின் அரசியலும் பழுதுபார்க்கப்பட முடியாதது! இருவர் அரசியலுக்கும் ஒரு வித்தியாசம் சொல்ல முடியும். அது தான் சார்ந்த மக்களாதரவு இல்லாமல் எதிரியிடம் காட்டும் அடிமை விசுவாசத்தில் டக்ளஸின் அரசியல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனால் கக்கீமின் அரசியல் ஓரளவு தான் சார்ந்த மக்களின் ஆதரவையும் கொண்டு விளங்குகின்றது. ஆனாலும் அதுவும் சிங்கள விசுவாசத்தின் அச்சிலேயே ஓடிக் கொண்டிருக்கின்றது.

டக்ளஸை எம்பக்கம் இழுக்கலாம் என்ற நம்பிக்கை வேறு, கக்கீமை எமபக்கம் இழுக்கலாம் என்ற நம்பிக்கை வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். காரணம் துரோகத்தின் எல்லையைத் தொட்டவன் தன் சுயநலத்தின் மீதான பற்றுதலின் அளவை பச்சையாய்க் காட்டியவனாவான். எனவே அதன் பலாபலனை நாம் காட்ட வேண்டியவர்களே, அதுவே எங்களுக்கும் இருக்கும் ஒரேபாதையுமாகும்!

தமிழன் இரத்தத்தில் குளித்த அரக்கன் மகிந்தாவிற்கு காவடி எடுக்கும் இந்த கயவனை தமிழனின் வாசல் செருப்பால் கௌரவிக்கவில்லை என்றால் 'மானம்' தமிழனை மன்னிக்காது!

ஒரு மேற்குலக வரையறைக்குள் இல்லை ஐ.நா. அனுமதியுடன் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும்பொழுது இவர்கள், முஸ்லீம் சகோதரர்கள், குழப்புவதை குறைப்பதில் எமது அரசியல் இருக்கவேண்டும். காரணம் அவர்கள் நிச்சயம் தமக்கும் 'உறுதிமொழிகளை' 'உரிமைகளை' கேட்பார்கள். இங்கே இவர்களை அணைத்து எமது தீர்வை பெறுவதில் நாம் பயணம் செய்வதே முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்" என்ற கண்ணதாஸன் வரிகள் அன்று மேடைகளில் கம்பவாரிதியின் வழியும் வார்த்தைகளே அதன் பொருளை மெய்ப்பிக்கும்!

காவிய நாயகனான இராமபிரான் ஆத்மாக்களுக்கு ஆத்மாவான ஷாஷாத் பரந்தாமனின் மறு அவதாரம். ஜெகம் புகழும் புண்ணியகதையான ஸ்ரீ ராமனின் கதை கம்பநாட்டாள்வாரால் "கம்ப ராமாயணம்" ஆக பாடப்பெற்று, சிவன் தாண்டவமாடும் திரு தில்லைசிற்றம்பலம் தோதல்லவென்று வெங்கடேஸ்வரன் வாழும் திருவரங்கத்தில் அரகேற்றம் பெற்ற புண்ணிய ஸ்தோதிர நூல் .

பரதநாட்டியம் ஆடுவது முகமதியத்தில் தெய்வநிந்தனை(belphemy).

இந்த மனநிலையில் அங்கு போய் ரவூப் கக்கீம் தமிழ் மக்களின் தெய்வீக நூலை முள்ளி வாய்காலில் சிதையுண்ட பெண்களை ஆமிநடத்தியது போலன்றி. மனமடங்கி ஒருதடை தன்னும் ஓதிவிட்டு போகட்டும். இந்த இணப்பை ரவுப்பின் நண்பர்களை அவருக்கு கட்டயமாக அனுப்பிவைக்கும்படி தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://ww.smashits.com/audio/player/free-music.cfm?SongIds=68238,68239,68240,68241,68242

கம்பன் கழக ஜெயராஜ் போன்ற எட்டப்பர் கும்பலின் பின்னால் இலக்கிய ரசனை, இசை ரசனை என்று ஒருசில தமிழ் மக்கள் புத்தி மங்கி அலையும் வரை அந்தாள் தமிழின விரோதிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பான்.

தமிழினப் படுகொலையில் நீண்டகாலம் குறிப்பாக 1977 இனக்கலவரம் முதல் குளிர்காயும் ஈனப் பிறவிகளான தொப்பி பிரட்டி முஸ்லிம்களை உரிய இடத்தில் வைக்காவிட்டால் தமிழர் எந்த உரிமைகளையும் வெல்ல முடியாது.

ஒருசில சந்தர்ப்பவாதிகள் இந்த ஈனர்கள் கூட்டத்துக்கு நீண்டகாலம் வக்காலத்து வாங்கி வருவதை தமிழ் மக்கள் அறிவர்.

எது எவ்வாறோ இருக்கட்டும், இப்போதுள்ள நிலையில் நாம் அனைவரையும் அனைத்து நம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும்,

அது களத்தின்தேவையும் கூட

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன பொருத்தமோ....

அதே போல் தான்.... கம்பன் விழாவில், ரவூப் ஹக்கீம்

ஜெயராஜுக்கு வேறை ஆள் கிடைக்கலையா?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கோபமில்லை நெடுக்ஸ், நான் பின்வாங்கிக்கொள்கிறேன்

எங்கள் தோழர் தோழிகலான பாசன சுணிலா நிமால்கா போன்ற சிங்களவர்களது பங்களிப்பில்லாமல் சர்வதேசம் போர்க்குற்றம் சுமத்துவதற்கான ஆதாரங்களை வீடியோ படங்களை திரட்டி இருக்க முடியாது. முதல் எதிரியைத் தனிமைப் படுத்தும் அடிப்படையிலான புரிந்துணர்வு விடுதலைக்கான அரசியலினதும் ராசதந்திரத்தினதும் போராட்டத்தினதும் அடிப்படையாகும். இந்த இடத்தில்தான் நாம் காலம் காலமாகச் சறுக்கி வருகிறோம். தொடர்ந்தும் சறுக்க வேண்டும் என்று நீன்கள் கருதுகிறீங்களா?

தனிமைப்படுதலுக்கும் தோல்விக்கும் வழிகாட்டுவதுதான் போர்க்குணம் என்றும் விடுதலைக்கான அரசியலும் ராஜதந்திரமும் என்று நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் கூற்றை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது வேதனை தருகிறது. ஆனால் கலத்தில் வாழும் மக்களின் மனநிலை அப்படி இல்லை.

போராட்டத்தை தோல்விக்கு இட்டுச்சென்ற நந்தவனத்தின மூல

/தந்திர உபாயங்களை வன்னியிலேயே எதிர்த்துக் உயிரைப் பணயம்வைத்து போராடி படு தோல்வி அடைந்தவன் நான். அந்த விரக்தியில் இருந்து இன்னும் விடுபடவில்லை. நான் ஈழ விடுதலைக்கு சத்துராதியான குறுந்தேசியவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்பதை மட்டும் பதிவி செய்கிறேன்.

வீராப்பு பேசுவதல்ல வெற்றி அடைவது மட்டுமே முக்கியம்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் பிரித்தாளும் தந்திரத்தை மிகவும் நேர்த்தியாகச் செய்கிறதென்பதை ஏனோ பலரும் அவ்வப்போது மறந்துவிடுகிறோம். தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான பிணக்குகளைப் பற்றிப் பேசும்போது சிங்களப் பேரினவாதத்தின் பங்களிப்பு அந்தப் பிண்க்குகளில் எவ்வளவு பங்களிப்பினை வழங்குகிறதென்பதை இப்படிப் பேசுபவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. அது ஏதோ இரு சிறுபான்மைச் சமூகங்களுக்கிடையிலான பிணக்கேயன்றி வெளித்தலையீடுகள் எதுவும் அங்கேயில்லை என்றே எண்ணிக்கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழ் சமூகம் விடுதலை வேண்டி போராடத் தொடங்கிய காலம் முதல் முஸ்லீம சமூகத்தை சிங்களம் தனது செல்லப்பிள்ளையாகவே கருதிவருகிறது. இதுவொன்றும் அச்சமூகத்தின்மேல் சிங்களம் கொண்ட பாசம் என்றில்லாமல் தமிழ் பேசும் சமூகத்தின பலத்தைச் சிதைத்தல் என்கிற நோக்கில் செய்யப்பட்டதென்பதை பலரும் உணர்ந்துகொள்வதில்லை. கூட்டணியிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ் பிரிந்து சென்றதிலிருந்து இன்றுவரை முஸ்லீம் சமூகம் தமிழினப் போராட்டாத்திற்கு முற்றான எதிர்ப்பையே காட்டி வருகிறது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்ச் சமூகத்திற்கும் முஸ்லீம் சமூகத்திற்குமிடையிலான கலவரங்களுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இங்கு பேசும் பலருக்கு இருக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். முஸ்லீம் ஊர்காவல் படை, முஸ்லீம் பொலீஸ் உயரதிகாரிஅௐல் என்று திட்டமிட்டே இப்பிரதேசம் தமிழர் விரோதப் போக்குடன் சிங்களத்தால் கட்டியமைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பழிக்குப் பழி நடவடிக்கைகள் இரு சமூகத்தாலும் மேற்கொள்ளப்பட்டதற்கு முஸ்லீம் சமூக அரசியல் வாதிகள் செய்த பங்களிப்பை பலரும் மறந்து விடுகிறார்கள்.

அஷ்ரப் முதல் இன்றிருக்கும் ரவூப்ஹக்கீம், ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் வரை எவருமே தமிழ் சமூகத்துடன் நட்புப் பாராட்டியது கிடையாது. வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும் என்று கோருவதுமுதல், தமிழருக்கான தீர்வொன்று வருமிடத்து முஸ்லீம்களுக்கான தனியலகு ஒன்று வரவேண்டும்ஏன்று கோருவது வரை அவர்கள் தம்மை தமிழர்களிடமிருந்து பிரித்து தனியான சமூகமாகவே பார்க்க நினைக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. இன்னும் கூட நாமிரு சமூகங்களும் ஒன்றாக போராட வேண்டுமென்று அறைகூவல் விடுவது அவ்வளவு புத்தி சாதுரியத்துடன் எடுக்கப்படும் முடிவாகத் தெரியவில்லை.

இங்கு முஸ்லீம்களுக்கு நடந்த அநியாயங்கள் என்று யாழ்ப்பாண வெளியேற்றத்தையும் காத்தான்குடி ஏறாவூர் பள்ளீவாசல் படுகொலைகளையும்ஏப்போதுமே தூக்கிப்பிடித்து நியாயம் கேட்கும் பலர், தமிழ்ச் சமூகம் அதே காலத்தில் சிங்கள அடக்குமுறையாள்ர்களுடன் சேர்ந்து முஸ்லீம் சமூகம் தமிழர்க்குச் செய்த அநியாயங்களை எதோ தேவைக்காக வசதியாக மறந்து பேசுவது வேடிக்கை. இதே காலப்பகுதியில் கிழக்கின் காரைதீவு, வந்தாரமூலை, கருவப்பங்கேணி என்று முஸ்லீம் ஊர்காவல் படையும் சிங்கள அதிரடிப்படையும் சேர்ந்தே செய்த பாரிய தமிழினப் படுகொலைகளை ஏன் எவருமே பேசுவதில்லை. எதற்காக இவ்வளவு அழிவுகளை தமிழினம் சந்தித்த பின்னரும் கூட முஸ்லீம் சமூகத்திற்கெதிராக நடந்த அநியாய்ங்களை மட்டுமே தூக்கிப் பிடிக்கிறீர்கள்??

முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது, அங்கிருந்த 330,000 பொதுமக்களுக்கும் அனுப்பவேண்டிய உணவை வெறும் 5,000 பேருக்கான இரு நாள் உணவாக சுருக்க திட்டமிட்டதுமுதல் இன்றுவரை முல்லைத்தீவில் மீள்குடியேறிய தமிழருக்கெதிராகச் செய்துவரும் அட்டூழியங்கள் வரை சிங்களத்தின் ஆசீர்வாதத்துடன் செய்துவரும் ரிஷாத் பதியுதீன் போன்ற முஸ்லீம் அமைச்சர் ஒருவரை எப்படி நீங்கள் சிங்களத்துக்கெதிரான போராட்டத்தில் தமிழருடன் கை கோர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்ட்டு இன்று சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று நிருபிக்கப்பட்டு வரும் சிங்களத்தின் போர்க்குற்ற விசாரணைகளுக்கான தீர்மானத்தை எதிர்க்கவென சிங்களம் களமிறக்கிய தனிநபர்களைப்பார்ர்தீர்களென்றால், முதலாவது நீதியமைச்சரான ரவூப் ஹக்கீம், மற்றையவர், புணர்வாழ்வு அமைச்சரான ரிஷாத் பதியுதீன். இவர்களிருவரும் ஜெனீவாவில் என்ன செய்துகொண்டிருந்தார்களென்பதை இங்கு ஒன்றுபட்டுப் போராட அறைகூவல் விடும் எவரும் கூறுங்கள் பார்க்கலாம். தமிழர்கள் மேல் இனக்கொலை நடக்கவேயில்லை, அப்படிக் கொலை செய்தவர்கள் புலிகள்தான். தமிழர்களுக்கு எதுவும் இப்போது தேவையில்லை, அவர்களுக்குத் தேவையானதை அரசாங்கம் அளவிற்கதிகமாகவே செய்துவருகிறது என்று கூறிவிட்டுத்தானே வந்தார்கள். இவர்களை எப்படி சிங்களத்துக்கெதிரான போராட்டத்தில் ஒன்றிணைக்கப் போகிறீர்கள்??? இந்தத் தீர்மானத்திற்கெதிராகவும் அமெரிக்காவுக்கெதிராகவும் கொழும்பில் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் வெள்ளிகிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தினைப் பார்த்தீர்களென்றால் முஸ்லீம் சமூகம் எங்கே நிற்கின்றது என்பதினையும், நீங்கள் ஒன்றுபட்டுப் போராட அழைக்கும் சமூகம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறதென்பதையும் நன்கே அறிந்துகொள்ளலாம்.

நாங்கள்தான் தமிழ்பேசும் சிறுபான்மை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் தங்களை அப்படிப் பார்ப்பதில்லை. தமிழைப் பேசினாலும், தாங்கள் தமிழ்க் கலாச்சாரத்துக்குச் சஅம்பதமில்லாத அரேபிய கலாச்சாரத்தையும் மதவழக்கையும் கொண்ட ஒரு தனியான மக்கள் கூட்டமாகத்தான் பார்க்கிறார்கள். ஆகவே இனியாவது இந்த் ஒன்றுபட்டுப் போராடுவோம், தமிழ்பேசும் சிறுபான்மை என்கிற வழக்கிலில்லாத பதங்களை விட்டெறிந்துவிட்டு நிஜ வாழ்க்கைக்கும் யதார்த்தத்திற்கும் வாருங்கள். அவர்கள் தங்களின் பாட்டைப் பார்த்துக்கொள்ளட்டும், நாம் எமது பாட்டைப் பார்த்துக்கொள்ளுவோம்.

போராட்டக் காலத்தில் தமிழினம் கொடுத்த விலையில் தனக்கும் பங்கு கேட்கவே மட்டும் இனப்பிரச்சினை பற்றிப் பேசும் ஒரு சமூகத்தினை எப்படி ஒன்றுபட்டுப் போர்டஆட வருமறு அழைக்கப்போகிறீர்கள் கவிஞர் அவர்களே???

நீங்கள் அண்மையில் எழுதிய இரு கருத்துக்களைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் இந்தக் கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. நீங்களிருப்பது இன்னும் 80 களின் நடுப்பகுதியில் என்றுதான் நான் நினைக்கிறேன். முடிந்தால் வெளியே வரப்பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபமில்லை நெடுக்ஸ், நான் பின்வாங்கிக்கொள்கிறேன்

எங்கள் தோழர் தோழிகலான பாசன சுணிலா நிமால்கா போன்ற சிங்களவர்களது பங்களிப்பில்லாமல் சர்வதேசம் போர்க்குற்றம் சுமத்துவதற்கான ஆதாரங்களை வீடியோ படங்களை திரட்டி இருக்க முடியாது. முதல் எதிரியைத் தனிமைப் படுத்தும் அடிப்படையிலான புரிந்துணர்வு விடுதலைக்கான அரசியலினதும் ராசதந்திரத்தினதும் போராட்டத்தினதும் அடிப்படையாகும். இந்த இடத்தில்தான் நாம் காலம் காலமாகச் சறுக்கி வருகிறோம். தொடர்ந்தும் சறுக்க வேண்டும் என்று நீன்கள் கருதுகிறீங்களா?

தனிமைப்படுதலுக்கும் தோல்விக்கும் வழிகாட்டுவதுதான் போர்க்குணம் என்றும் விடுதலைக்கான அரசியலும் ராஜதந்திரமும் என்று நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் கூற்றை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது வேதனை தருகிறது. ஆனால் கலத்தில் வாழும் மக்களின் மனநிலை அப்படி இல்லை.

போராட்டத்தை தோல்விக்கு இட்டுச்சென்ற கஸ்ற்றோவின் நந்தவனத்தின மூல

/தந்திர உபாயங்களை வன்னியிலேயே எதிர்த்துக் உயிரைப் பணயம்வைத்து போராடி படு தோல்வி அடைந்தவன் நான். அந்த விரக்தியில் இருந்து இன்னும் விடுபடவில்லை. நான் ஈழ விடுதலைக்கு சத்துராதியான குறுந்தேசியவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்பதை மட்டும் பதிவி செய்கிறேன்.

வீராப்பு பேசுவதல்ல வெற்றி அடைவது மட்டுமே முக்கியம்.

சிங்கள தேசிய களத்தில் விக்கிரமபாகு.. செனீவரட்ன.. குமார ரணதுங்க.. (ஜே வி பி யால் கொல்லப்பட்டவர்).. அபய குலசேகர (குண்டு வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டவர்) என்று பலர்...தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். மேலும் நீங்கள் சொன்ன நிமால்கா.. போன்ற நடுநிலையான மனித உரிமையாளர்கள்.. மனோ கணேசன் போன்றவர்களும் உதவி செய்துள்ளனர். எத்தனை முஸ்லீம்கள்.. இதே மனித உரிமை உதவியை எமக்கு அளித்தனர்..??! பகைமை வளர்ப்பு.. கருணா பிளவை ஆழப்படுத்தி.. பகை மூட்டி விட்டு அதில் குளிர்காய்ந்தது இதுபோன்ற விடயங்களை விட முஸ்லீம் காங்கிரஸ்.. மற்றும் இதர முஸ்லீம் தலைமைகள்.. எதனை தமிழ் மக்களோடு இணைந்து செய்ய முன் வந்தனர்..??????????!

பிரச்சனை தமிழ் மக்களை நோக்கி புரிந்துணர்விற்கு போ.. அரவணை என்பது அல்ல. அதனை தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். போதாக் குறைக்கு ஒரு இனம் ஐ.நா வரம்புக்குள் தனது தேசிய இன நிலைப்பாட்டை வலியுறுத்துவதைக் கூட.. உங்களைப் போன்ற சிலர் குறுந்தேசியம் என்று வரையறுக்கின்றீர்கள். உங்கள் வரைவிலக்கணங்கள்.. உங்களின் சில அடாத்தான கொள்கை வெளிப்பாடுகளே தவிர.. தமிழ் மக்களின் தேசிய நிலைப்பாடு என்பது குறுகியதோ.. நீண்டதோ அல்ல.. அதன் நியாய இருப்பின் நிமிர்த்தம் எழுந்தது என்ற அடிப்படையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல்.. நீங்கள் எப்படி தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்ல முடிகிறதோ எனக்குப் புரியவில்லை..???! அந்தளவுக்கு மட்டபாப் போச்சு தமிழ் மக்களின் நிலை..!

முஸ்லீம்களின் மத அடிப்படை இனவாதத்தை ஏற்றுக் கொள்ளும் உங்களில் பலர்.. தமிழ் மக்களின் தேசிய இன நிலைப்பாட்டை குறுந்தேசியம்.. என்று வரையறுப்பது வெட்கத்துக்கு இடமானது மட்டுமன்றி.. தங்களைத் தாங்களே தாழ்த்தி நோக்கும் பிற்போக்குத் தனத்தின் முதன்மை நிலை என்றே சொல்ல முடியும்.

எந்த ஒரு மனிதக் கூட்டமும்.. இனம் என்ற அடையாளம் இன்றி.. விடுதலை என்ற எல்லையை தொட்டதாக சமீபத்திய அரசியல் வழிமுறைகளில் இடம் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில்.. ஆண்ட இனத்தின்.. தேசிய நிலை இருப்பை குறுந்தேசியம் என்று வரையறுத்து கருத்துரைப்பதை வன்மையாக எதிர்க்கிறேன். அது தமிழ் மக்களுக்கு ஐநா வரம்புக்குள் உள்ள இன அடையாளத்தை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்..!

அதுபோக..

இன்று எம்முன் உள்ள பிரச்சனை.. தேசியம் அல்ல. நிலப் பங்கீடு..! முஸ்லீம்கள்.. எம்மோடு ஒரே பிராந்தியத்தை பகிர்ந்து வாழ்வதால் அவர்களை வெறுமனவே அரவணைப்பதன் மூலம்.. சாந்தப்படுத்தி எமது அரசியல் வேலைத்திட்டத்திற்குள் அவர்களை கொண்டு வரலாம் என்று நீங்கள் இன்னும் அதே அமிர்தலிங்கம் தலமையிலான கூட்டணியின் கொள்கை நிலைப்பாட்டோடு இருப்பீர்கள் என்றால்.. அது உங்களின் அரசியல் முதிர்ச்சியற்ற கொள்கையின் விளைவு என்றே கூறலாம். முஸ்லீம்களைப் பொறுத்தவரை.. வடக்குக் கிழக்கிற்கு வெளியில் அவர்கள் அதிகம் வாழ்கின்ற போதும்... அங்கெல்லாம் தனி அலகு கேட்கவில்லை..! முஸ்லீம் சமூக நிலைப்பாடு கடந்து.. இன நிலைப்பாட்டைச் சொல்லி நிற்கவில்லை. முஸ்லீம்களை சிங்களவர்கள் தாக்காத.. வன்முறைகளை பிரயோகிக்காத நேரமே இல்லை. ஆனால் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு.. பெரும் சிங்கள அரசியல் சக்திகளின் துணையோடு.. தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்கள்.. வடக்குக் கிழக்கில் மட்டும் உரிமை உரிமை.. என்று கத்துவதற்கும்.. அதே சிங்களப் பேரின அரசியல் சக்திகளின் தூண்டுதலின் பின்னணி உள்ளது என்பதை நீங்கள் இனங்காட்டாமல்.. கருத்து எழுதி வருகிறீர்கள்..! இதன் நோக்கம்..???!

அந்த வகையில்.. வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லீம்களோடு.. எவ்வளவு தான் தமிழ் மக்கள் புரிந்துணர்வு என்று சொல்லி விட்டுக்கொடுப்புக்களை செய்ய முன் வந்தாலும்.. முஸ்லீம்கள் அதனை.. சிங்களத் தேசியத்தினுடனான தங்களின் உறவின் சேதப்படுத்தலோடு... காத்திரமான ஒன்றாக எடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..???!

கக்கீம்.. மீதான இந்த எதிர்ப்புக் கூட.. அவர் மனித உரிமைகள் விடயத்தில் கூட (அரசியல் நிலைப்பாடு சார்ந்தல்ல) தமிழ் மக்களின் நியாயமான புரிதலுக்கு இடமளிக்காமல் செயற்படுத்துவதை கண்டிக்கிறதே தவிர.. இது முஸ்லீம்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதைச் சொல்லவில்லை. அந்த வகையில்.. இந்த பகிஸ்கரிப்புக் கோரிக்கை என்பது தமிழ் மக்கள் சார்ப்பில் கக்கீம் என்பவர் மீதான அவரின் மனித உரிமைகள் மீதாக அக்கறையற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்.. ஒரு நடவடிக்கையாகவே நோக்க வேண்டும்.

மேலும்..........

புரிந்துணர்வு என்பது வெறுமனவே தமிழ் மக்களிடம் இருந்து மட்டும் வெளிப்பட்டு எந்தப் பயனும் இல்லை. இது தான் கடந்த கால வரலாறு..!

1998 இல்.. அஸ்ரப் - நீலன் - சந்திர்க்கா புரிந்துணர்வு தீர்வுப் பொதி சமைச்சது எதனை..??! அதனை.. தீயீட்டுக் கொழுத்தியவர்களில் ஐ.தே.க அஸ்வர் போன்றவர்களும் அடங்குவர்..!

பொயட் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லீம்களை விட அவர்களின் தலைமை என்பது வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லீம்களிடமே இன்று அதிகம் பொருந்திக் கிடக்கிறது. இவர்கள் அனைவரும் சிங்கள பெளத்த தேசியத்திற்கு எதிராக தமிழ் மக்களை நம்பி ஒருபோதும்.. செயற்பட மாட்டார்கள். அந்த வகையில்.. தமிழ் மக்கள்.. இந்தச் சாவாலை தாண்டித்தான் பயணித்தாக வேண்டும். இந்த நிலைப்பாட்டை விடுதலைப்புலிகளுடனான பேச்சு மேடைகளிலும் 2002- 2006 வரை கற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்.. விடுதலைப் புலிகள் ஒன்றை குறிப்பிட மறக்கவில்லை. முஸ்லீம் மக்களும் தமிழ் மக்களுக்கு நிகராக உரிமை பெற்றவர்களாக தமிழ் மக்கள் விடுதலை அடையும் போது வாழ்வார்கள் என்ற அந்தக் கூற்று. அந்தக் கூற்றுக்கு கக்கீம் போன்றவர்கள் காட்டும் புரிந்துணர்வு என்பது.. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை கண்டிக்கும் ஐநா தீர்மானத்தை எதிர்த்து ஜும்மா தொழுகையின் பின்.. ஆர்ப்பாட்டங்களும்.. முஸ்லீம் நாடுகளின் ஆதரவைத் திரட்டி தமிழ் மக்கள் மீது படுகொலையை செய்தவன் மீது.. செய்து கொண்டிருப்பவன் மீது.. அதற்கு அங்கீகாரம் அளிக்கக் கேட்பதும். இது எந்தளவிற்கு தமிழ் மக்கள் முஸ்லீம்களைப் புரிந்து கொள்ள இடமளிக்கும் என்று சொல்வீர்களா..?????????????!

இதன் அடிப்படையில்.. நின்று கொண்டு.. நீங்கள்.. என்ன புரிந்துணர்வை.. விட்டுக்கொடுப்பை தமிழ் மக்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். தமிழ் மக்களே.. முஸ்லீம்கள் உங்கள் சகோதரம்.. நீங்கள் செத்துத் தொலைஞ்சால்.. அந்த சகோதரங்களாவது நிம்மதியாக வாழுங்கள் என்றா..???!

உங்களின்.. இராஜதந்திரம் என்ற சொல்லுக்குள் இருக்கும் இராஜதந்திரத்தை ஒருக்கா வெளிப்படையா சொன்னீங்கன்னா.. நல்லா இருக்கும் பொயட். எனக்கு அதற்குள் இராஜதந்திரம் அல்ல.. தந்திரமே மிஞ்சி உள்ளதாகத் தெரிகிறது.

மற்றும் படி.. அரசியலுக்கு அப்பால்.. ஒரு இனப்படுகொலையை.. மனித பேரழிவை கண்டிக்கத்தவறிய.. அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த முயன்ற ஒரு மனிதனாக கக்கீம் மீது இந்த எதிர்ப்புக் காட்டுதலை என்னால் வரவேற்காமல் இருக்க முடியாது.

இந்த இடத்தில் கக்கீம் அல்ல.. எவர் இருந்தாலும்.. இந்த எதிர்ப்பு வந்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நான் எடுத்திருப்பேன். எமக்கு அரசியலுக்கு மேலால்.. எம் அடிப்படை மனித உரிமைகளும் வாழ்வுரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை உள்ளதே அன்றி... மத அடிப்படை வாதம்.. மனிதத்தை தொலைத்து வாழ வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு எம்மை இட்டுச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதனை எம் சாவுக்கு பயந்து அங்கீகரிக்க வேண்டும் என்பதையோ ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை. அது இராஜதந்திரம் கடந்த ஒன்றாக இருந்தாலும்.. மனிதம் சார்ந்து எழுந்து நிற்கவே செய்யும். செய்ய வேண்டும்..!

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட இனத்தின்.. தேசிய நிலை இருப்பை குறுந்தேசியம் என்று வரையறுத்து கருத்துரைப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் - ஈழத்தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்கும் கவிஞன் நான். ஈழத்தின் உள்வாரியாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கைத்தான் குறுந்தேசியவாதம் என்கிறேன். இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்ட இனத்தின்.. தேசிய நிலை இருப்பை குறுந்தேசியம் என்று வரையறுத்து கருத்துரைப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் - ஈழத்தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்கும் கவிஞன் நான். ஈழத்தின் உள்வாரியாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கைத்தான் குறுந்தேசியவாதம் என்கிறேன். இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா

கழுத்தறுத்தவனுக்கு கைகொடுக்கச் சொல்வது: எதிர்காலம் அவன் பாதையை மாற்றும் என்பது உங்கள் கணக்காக இருக்கலாம்! ஆனால் இந்த மன்னிப்பு அவன் பாதைக்கு புதியவர்க்களை அழைத்து வரலாம் என்பதே எமது கவலையாகின்றது!

இதை முஸ்லிம் அரசியலாக நாம் பார்க்கவில்லை, கக்கீம் அரசியலாகவே பார்க்கின்றோம்! எப்படி டக்ளஸ் அரசியல் தமிழர் அரசியலாவது இல்லையோ அப்படியே!

எதிரியின் கூலி என்ற 'பதவி' அது எமக்கும் பயன் தரும் என்று கனவு காணல் வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட இனத்தின்.. தேசிய நிலை இருப்பை குறுந்தேசியம் என்று வரையறுத்து கருத்துரைப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் - ஈழத்தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்கும் கவிஞன் நான். ஈழத்தின் உள்வாரியாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கைத்தான் குறுந்தேசியவாதம் என்கிறேன். இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா

பொயட் கேட்பது என்று குறை நினைக்காதேங்கோ.. கவிஞன் நான் என்றீங்களே.. அந்தக் கவிஞன் என்ற அடைமொழியை யார் தந்தது.. அதை நீங்கள் பெற ஈழத்தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய கவிச் சேவைகள் என்ன..??! உங்களின் கவிதைகள் தொடர்பில் செய்யப்பட்ட திறனாய்வுகள் எவை.. யாரால்..அவை செய்யப்பட்டன என்று சொல்ல முடியுமா..??! (வைரமுத்துவால் என்று சொல்லாதீர்கள்.. வைரமுத்து காசுக்கு தமிழை விற்கின்றது மட்டுமல்ல.. கொலையும் செய்யுற ஒருவர்..! தமிழிற்கு என்று ஆற்றும் அவரின் பணியை விட.. மற்றதே அதிகம்.)

கவிஞர் காசியானந்தன் இருக்கிறார்.. அவரை ஈழத்தமிழ் தேசியக் கவிஞன் என்று சொல்வதில் அர்த்தமிருக்குது. ஏனெனில் அந்தளவுக்கு அவர் பற்றி சாதாரண மக்கள் அறிந்துள்ளனர். ஆனால் உங்களைப் பற்றிய அறிதல் ஒரு குறுகிய வட்டம் சார்ந்து தானே இருக்குது..???! அதுதான் இந்தக் கேள்வியை முன் வைக்கிறேன்..??!

மேலும்..

முஸ்லீம்களுக்கு எதிராக முளைத்தது அல்ல தமிழ் தேசியம்.. என்ற அடிப்படையையே உணராமல்.. உணர்த்தாமல்.. நீங்கள் எப்படி.. ஈழத்தேசிய கவிஞனாக இருக்க முடியும்.

என்னுடைய நிலைப்பாடு இங்கு கக்கீம் மனித உரிமை மீறல்களுக்கு ஒத்தூதுவதை கண்டிப்பதாக இருப்பதோடு.. முஸ்லீம் சமூகத்தில் சிலரின் தூண்டுதலின் பெயரில் மிக மோசமான மனித இனப்படுகொலைக்கு சார்ப்பாக முஸ்லீம்கள் அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி குரல் கொடுப்பதை கண்டிப்பதாகவுமே உள்ளது.

முஸ்லீம்கள் தொடர்பில் உலகின் பார்வையே இன்று மாறியுள்ளது. அதற்கு காரணம்.. அவர்களின் மனிதாபிமானமற்ற மதவாத.. அல்லது மதவெறிச் செயற்பாடுகளே அன்றி வேறில்லை. இவற்றை கண்டிப்பது.. முஸ்லீம்களுக்கு எதிரான செயல் என்று நீங்கள் கருதுவீர்களாக இருந்தால்.. நீங்களும் மனிதப்படுகொலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு நபர் என்ற கருதுகோளுக்கு இலகுவாக வர முடியும்..! இதன் அடிப்படையில்.. குறுந்தேசியம் என்ற உங்களின் தன்னிலை விளக்கம்.. அர்த்தமற்றதாகிறது..!

மனிதாபிமானச் சிந்தனையற்ற... எவரினதும் செயற்பாடுகள் கண்டிக்கப்படுவது.. அவர்களுக்கு எதிரான செயல் அல்ல. அவர்களின் குறித்த செயற்பாட்டுக்கு எதிரானது மட்டும் ஆகும்..! முஸ்லீம்கள் ஏதாவது தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்து செய்திருந்தால்.. அதனை பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.. நாங்கள் அவர்களின் செயல்களை தெரிந்து வரவேற்க. நான்.. இதுவரை கடந்த 20 ஆண்டுகளில் அப்படி எதனையும் இலங்கைத் தீவில் காணவில்லையே. இது முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தல்ல.. முஸ்லீம்களின் நிலைப்பாடுகளுக்கு எதிரான கருத்தே ஆகும்..!

முஸ்லீம்களும் தமிழீழமும் தொடர்பில் விடுதலைப்புலிகள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதனை விட எவரும் தெளிவாகச் சொல்ல முடியும் என்று நினைக்கவில்லை. தமிழர்களும் முஸ்லீம்களும் புட்டும் தேங்காய்ப் பூவும் போல. தமிழீழ விடுதலை என்பது முஸ்லீம்களுக்கானதும் ஆகும். தமிழீழம்.. மத.. இனச் சார்பற்ற ஒரு தேசமாக இருக்கும்..! தமிழ் மக்களைப் போலவே முஸ்லீம்களும் சகல உரிமைகளையும் தமிழீழத்தில் அனுபவிப்பர்..! இப்படியான நிலைப்பாட்டை முஸ்லீம்கள் தமிழ் மக்களை நோக்கி வைத்ததாக நான் இதுவரை அறியவில்லை. ஒருவேளை பொயட் நீங்கள் அறிந்திருந்தால்.. அதை தெளிவு படுத்துங்கள்.

எங்கள் நிலைப்பாடு.. புட்டுக்குள் பூஞ்சணம் கட்டிய தேங்காய் பூவாக அன்றி.. நல்ல ஆரோக்கியமான தேங்காய்ப்பூக்களாக முஸ்லீம் அமைவதே புட்டுக்கு நல்லது..! அதுதான் மாவுக்கும்.. தேங்காய் பூவிற்கும்.. நல்லது..! இதைச் சொல்வது குறுந்தேசியம் என்று உங்களால் வரையறுக்கப்படுவது.. அவ்வளவு அறிவுபூர்வமான ஒன்றாகத் தெரியவில்லை. இதற்குள் எங்கே குறுந்தேசியம்.. ஒளிந்திருக்கிறது.. என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அதனை இங்கு முன்னுறுத்திய உங்கள் பொறுப்பும் ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்ட இனத்தின்.. தேசிய நிலை இருப்பை குறுந்தேசியம் என்று வரையறுத்து கருத்துரைப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் - ஈழத்தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுக்கும் கவிஞன் நான். ஈழத்தின் உள்வாரியாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கைத்தான் குறுந்தேசியவாதம் என்கிறேன். இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா

கவிஞன் அவர்களே! என்னுடைய பார்வையில் தங்கள் கருத்தியல்பின் பாதை ஒரு சில இடங்களில் நெளிந்து வளைந்தாலும் ஒட்டு மொத்தமாக அங்கே கிடக்கும் விடயங்களில் அறிவுபூர்வமான பெறுமதியை நுகர்கின்றேன்!

ஒருவரின் கருத்துப் படைப்பு, அது கொண்டிருக்கும் பெறுமதியே கருத்தாளனின் முகவரியாகவேண்டும். உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை சிலவேளைகளில் இணைப்பதை தவிர்பது உங்கள் படைப்பிற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும் என்பது எனது அவா.

ரவுப் தமிழரின் பெரும்பான்மை வைக்கும் கூட்டங்களுக்கு வரமாட்டார். வந்தால் திரும்பி போய் மகிந்தாவிடம் பதில் சொல்ல இயலாது. ஆனால் இப்படி யாராவது துரோகிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் வலிய கேட்டு வருவார்.

தமிழர் தமக்கான தீர்வை அமெரிக்காவை ஆக்கினைப்படுத்தி பெற முயல்வதால் முஸ்லீம் தமிழருடன் சேர விரும்பமாட்டார்கள். தமிழர் விரும்புவது அமெரிக்கா குறைந்தது தங்களுடன் 50 வருடங்களாவது உள்ளே இருக்க வேண்டும் என்று. சிலர் யாழில் அமெரிக்கா ஈழத்தை ஒரு மானிலமாக இணைக்க வேண்டும் என்று கூட யாழில் எழுதியிருந்தார்கள். இது ராவூப்பை தூர கலத்துவிடும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.