Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேரனின் காடாற்று.

Featured Replies

சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது.

அதிலிருந்து இரு கவிதைகள் .

நீரற்றது கடல்

நிலமற்றது தமிழ்

பேரற்றது உறவு

தற்கொலை.

காவற்பரணில்

ஒரு

கண்ணிழந்த போராளி.

'விசா அற்றது பாஸ்போர்ட்'

என்று நாட்டை விட்டு ஓடிவந்து கழிவிரக்க கவிதைகளும் படைப்புகளும் படைப்பதே தமிழர்களின் இலக்கியமாகிவிட்டது.

  • தொடங்கியவர்

புலியும் அவர்தம் தமிழிழமும் கனவாய் போனதன் விரக்கிதான் பலரை இப்படி பேசவைக்கின்றது.வாசிக்காமலே விமர்சனம் எப்படி வைக்க முடிகின்றது ?

புலியும் அவர்தம் தமிழிழமும் கனவாய் போனதன் விரக்கிதான் பலரை இப்படி பேசவைக்கின்றது.வாசிக்காமலே விமர்சனம் எப்படி வைக்க முடிகின்றது ?

நீங்க எல்லாம் தமிழ் ஈழத்துக்காக போராட போகேல்ல வேற எதுக்கோ போய் இருக்கீங்க புலிகள் மட்டும் தான் தமிழ் ஈழத்துக்காக போராட போனார்கள் அதை தானே சொல்ல வாறீங்க அர்ஜுன்

விரக்திய விரக்கி எண்ணுறீங்க ஆர் அந்த விரக்கி(அந்த கால நடிகைகள் ஆருமோ) :lol:

'விசா அற்றது பாஸ்போர்ட்'

என்று நாட்டை விட்டு ஓடிவந்து கழிவிரக்க கவிதைகளும் படைப்புகளும் படைப்பதே தமிழர்களின் இலக்கியமாகிவிட்டது.

புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர் இல(ள)க்கிய வாதிகள் இலக்கியம் படைப்பது மட்டுமா

மகிந்த கூட்டும் மாநாட்டுக்கு போறது அறிக்கை விடுறது திரும்ப அந்த அறிக்கைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை மறுப்பறிக்கை விடுறது இன்னும் எவ்வளவோ திருவிளையாடல்கள் இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

Wayanad%20Cave.jpg

தொடர் இணைப்புகள்:

ஊழிக்குக் கவிதை பின் - 1

ஊழிக்குக் கவிதை பின் - 2

சேரனின் 'காடாற்று' தொகுப்பின் கவிதைகள் பல, கச்சிதக் கதையாடல்களாக அமைந்தவை; சற்றே அவசரங் காட்டுபவை. பயங்கரத்தைக் கதைக்கிற, குறிக்கிற வகையில் தமக்கான சரளத்தின் அறங் கொண்டவை (representing the horrible imagery of an ethic of lucidity); இவற்றில் நுழைவோர், இங்கே அறிவிக்கும் தருணங்களைக் காட்டிலும் ஆற்றும் தருணங்களே அதிகம் என்பதை எளிதில் அறியலாம்.

2009-ஆம் ஆண்டு மே மாதப் பேரழிவு நிகழ்ந்தேறும் இதே காலகட்டத்தில் பௌல் ஸெலானின் ஜெர்மன் கவிதைகளையும் ஸில்வியா ப்ளாத்தின் பல ஆங்கிலக்கவிதைகளையும் ஓர் உத்வேகத்தில் தமிழாக்கினேன். இவற்றில் பல இடங்களிலும் இதே காடாற்றும் சடங்கு நவீனமாவதைக் காணலாம். எடுத்துக்காட்டாகநிலப்பரப்பு என்ற ஸெலானின் கவிதை:

தாழியுள் ஜீவிபல

தம்முடன் நிலப்பரப்பும்

புகைமுகம் முதல் புகைமுகம் வரை

உரையாடல் பலவும்.

பித்தப்பூஞ்சணமும்

புதைபடாக் கவித்துவப் பகுதியும்

கண்டெடுத்த நாக்கும் பல்லுமென

அவர் உண்ண உருண்டுறையும்

தன் கண்ணுள் கண்ணீரும்.

யாத்ரீகக் கூண்டின்

அனாதை இடப்பாகமதை

அவர் உமக்களித்துப் பின்

உம்மைத் தூக்கியெறிந்தார்.

அது வெளி ஓளிர்வித்துக் கேட்கும்

சாவெதிரே ஆட்டமும்

கிணுகிணுத்துத் தொடங்குவதை.

அதேபோல ஸில்வியா ப்ளாத்தின் இறந்தோர் என்ற கவிதை:

ஒளிஞாயிறதன் வேகத்தில்

நீள்வட்டமாய்ச் சுழலும் புனித ஆடை போல்

களிமண் சவ்வில் ஒளியும்

முழுதாய்க் கவிழ்ந்த புவியின்

கருவறை பெரிதின்

தாலாட்டில் அடங்கும்

இறந்த மனிதர்

காதலில், போரில் கவனம் செலுத்தார்.

ஆன்ம சீஸரும் அல்லரிவர்.

தந்தையரின் பெருமித நாடும் மீள வேண்டார். இறுதிக்கிடக்கைதனில் இடறிவிழும்

இவர் உலகுச்சேதம் கண்டு

தாம் மறந்துபட விழைவர்.

மிகுசெம்மண் சுற்றி

ஆழத் தாலாட்டுக் காணும்

எலும்புக்கட்டை இவை எழா,

நிர்மலமாய் எழா,

பேரழிவுபடும் நாளின்

அதிகாலை எக்காளத்தில்.

இவை அமிழும் பிரம்மாண்ட உறக்கத்தில்.

கடவுளின் கறார்-அதிர்ச்சிகொண்ட

தேவதை பலவும்

கதறி எழுப்பவும் முடியாது

இவரை

இவர் விழையும்

இறுதி இகழ்வான அழுகலினின்று.

இதைப் போல நிறைய ஆக்கங்கள்... தவிர, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் பெயர்பெற்ற வெளிச்சங்கள் தொகுப்பைத் தமிழில் நான் ஆக்கி வெளியிட்டதும் இதே கால கட்டத்தில்தான் - அதன் முதல் கவிதையான Après le Déluge என்பதை ஊழிக்குப் பின் என நூலுக்கே தலைப்பாக்கினேன். அதிலிருந்து முதல் சில வரிகள் மட்டும்:

ஊழி என்ற எண்ணம் அடங்கியவுடனே சிறுபுள்ளடிப் புல் மற்றும் அசையும் மணிமலரிடை முயலொன்று ஒடாநின்று பிறகு சிலந்திவலை வழியே பிரார்த்தித்து வானவில்லிடம். ஓ, மறையத்தொடங்கின மாணிக்கம் பல.

ஏற்கனவே மொட்டவிழ்ந்த மலர் தேட. அசுத்தத் தெருவில் எழும்பின கடை பல. பலதளப்பபடகு பல இழுக்கப்பெற்றதோ கடல்நோக்கி, பழம்நூல் பலதின் அச்சுப்படமதில் காண்பதைப் போல.

நீலவண்ணத் தாடிக்காரன் கடையில் பெருகியது குருதி - கசாப்புக்கடை, ஸர்க்கஸ் பல வழியே. அங்கு ஜன்னல் பலதில் வெந்த முத்திரையோ கடவுளினது. பெருகின குருதியும் பாலும்.

மேற்கண்ட வரிகளுடன் குருதி பெருகிய இடத்தில் பால் பெருகக் காடாற்றும் சேரனின் கவிதை வரிகள் பல, அமைப்பில் ஒப்புமையும் (homologous) ஒத்ததிர்வும் (resonance) கொண்டிருப்பது வாசகர் பலர்க்கும் வியப்பளிக்கலாம்; ஆனால் எனக்கு அப்படியில்லை. சேரனின் வரிகளும் உலகக்கவிதையைத் தமிழாக்கிய என் பிரச்னைப்பாடும் (problematic) அருகருகே வரும் நிலை என்றே இதைப் பொருள்கொள்வேன்.

மேற்கண்ட என் கூற்றை மேலும் நிறுவ, தத்தாரியர் (Vagabonds)என்ற ரைம்போவின் கவிதையிலிருந்து இன்னும் இரண்டு வரி:

ஒளிஞாயிறதன் மகனென்னும் ஆதிநிலைக்கு இவனை மீட்பேனென உறுதிகொண்டேன் நேர்மையாக. நிலவறை பலதின் திராட்சை ரஸமும் பயணியரின் மண்பொருக்கும் எமையோம்ப யாம் அலைந்தோம் இடமும் சாவியும் யான் பரபரத்துத் தேட.

இஃதொக்கும் சேரனின் வரி:

பித்தில் அலையும் தத்தாரியக் கவியாக மாறினான்

கைவிடப் பட்டவன்.

இது தவிர, சேரனின் வரிகள் பாரதியின் காணி நிலம் பாடலின் வரிகளை உரசி எதிர்-விதியாக்கும் இன்னொரு தருணமும் நூலில் நிகழ்கிறது:

...அங்கு கடல்கொண்ட பெருமரங்களின் வேரடி மண்

இப்போது வெளித் தெரிகிறது

கோடை காலத்திலும்

ஈர மனிதர் உலவித் திரிந்த நிலம்

ஒருசில நாட்களில்

மொழி பெயர் தேயமாக மாறுகிறது

இந்தக் காணிநிலத்தில் தென்னைகள் இல்லை குடிசைகள் இல்லை... பராசக்தியிடம் கவி கோரும் கனவுலகு (utopia) இங்கே எதிர்-கனவுலகின் (dystopia) விவரிப்பாய் மாறுகிறது; முதல் உலகப் போர்-ருஷ்யப்புரட்சி என்றான ஊழியை உள்நோக்கிக் கண்ட பாரதி, மாகாளியின் கடைக்கண் நோக்கி வேண்டிய dystopia அது. அதுபோல இங்கே வேண்ட ஏதுமில்லை; விவரணைதான் கச்சிதமாக வேண்டும், காடாற்ற. இதை இன்னும் சுருக்கமாய்ச் சொல்ல, மாண்டோரைக் காடாற்ற மூன்றே வரிகள் போதும், சேரனின் திணை மயக்கம் கவிதையில்:

...தலையற்ற மனிதரும் நிறமற்ற பறவைகளும் அலையற்ற கடலும்... இன்னும் மூன்று வரிகளை அடுக்கிப் பரிசோதிக்கும்போது தலைப்பும் வேண்டாம்: நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு இங்கே தமிழின் அலைவை வாசிப்போரின் அலைவாக மாற்றும் கன கச்சிதம் (minimalism) கைகூடிவிட்டது. ஆக, 2004-ஆம் ஆண்டின் கடற்கோள் போலவே 2009-ஆம் ஆண்டு மே மாதத்தின் முன்பும் ஊடும் பின்புமான ஊழியும் தமிழைப் பொறுத்தவரை ஒருதனி-நிகழ்வு (singular event). இவை, நவீனத்தமிழின் அறிவுணர்வில் தோற்றுவித்திருக்கும் உடைப்பாக (epistemological break) மேற்கண்ட கவிதையைக் கொள்ளலாம் (இந்தப் பிரயோகத்துக்கு எம்.டி. முத்துக்குமாரசாமிக்கு நன்றி). புதுக்கவிதை யுகத்தைத் தொடங்கிய பாரதியிடமிருந்து எத்தனையோ தூரம் வந்துவிட்ட வரிகள் இவை!

மேற்கண்ட கவிதையை ஆங்கிலத்திலோ ஃப்ரெஞ்சிலோ வேறெந்த மொழியிலோ ஆக்க வேண்டுமானால், ரைம்போவின் ஸெலானின் ப்ளாத்தின் வரிகளைத் தமிழில் நான் வளைத்தது போல அந்தந்த மொழிகளையும் எங்கோ ஓரிடத்தில் வளைக்க வேண்டியிருக்கும்!

ஆம், மேற்கண்ட கவிதையை ஆங்கிலத்தில் ஆக்கிய செல்வா கனகநாயகமும் இது ஒரு சவால் என விரிவாக எழுதியிருக்கிறார். இதன் ஒரு ஆக்கம்:

Parched ocea

Silent land

Nameless kin

என அமைகிறது. இது ஏதோ பொது விவரணை போலத் தோற்றங்கொண்டாலும் மேற்கண்ட ஊழிகளின் கொடூரத்தை உணர்ந்தோர்க்கு இதன் சிறப்புப்பொருளும் சட்டென விளங்கிவிடும். ஆனால் அதை வெளிப்படையாக உணர்த்தவென ஆங்கிலத்தைச் சற்று வளைக்கவும் வேண்டியிருக்கிறது. அதன்படி மேற்கண்ட கவிதையின் இன்னொரு ஆங்கில ஆக்கத்தைச் சுட்டுகிறார்:

the sea is without water

tamil is without land

kinship is without a name

மேற்கண்ட ஆங்கில ஆக்கம் நேரடி விளக்கம் போலத் தோன்றினாலும் இதில் மொழியை வளைத்திருப்பதற்கு ஆதாரமுண்டு: ஆங்கிலத்தின் நெடிய மரபில் வரும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் டங்க்கனைக் கொன்றவுடன் குற்றவுணர்வில் மாக்பெத் பேசும் ஒரு வரியைக் காட்டுகிறார், செல்வா கனகநாயகம்:

Will all great Neptune's ocean

wash this blood Clean from my hand?

No; this my hand will rather

The multitudinous seas incarnadine,

Making the green one red.

ஆம்; நீரற்ற, நீரின் ஒளிக்கசிவற்ற கடல், மாக்பெத்தின் மேற்கண்ட குறிப்பையொத்த அதிர்வை ஆங்கில வாசகர்க்குக் கொணர்கிறது. இப்போது மேற்கண்ட மாக்பெத் வரிகளைத் தமிழாக்கிக் காணலாம்:

என் கையினின்றும் இக்குருதியை நெப்த்யூன் மாக்கடல் நன்னீரும் நன்கு கழுவாதோ!

கழுவாது. என் இந்தக்கையினின்றும்

மிகப்பல கடலும் குருதியாக,

ஆங்கே பசுங்கடலும் சிவக்கும்.

இப்படியாக ஆங்கிலம் தனக்கான வழியில் சேரனின் கவிதையைப் பொருள் கொள்கிறது; தமிழ் தனக்கான வழியில் காலத்துக்குக் காலம் ஷேக்ஸ்பியரையும் ரைம்போவையும் ஸெலானையும் ப்ளாத்தையும் இன்ன பிறரையும் பொருள் கொள்கிறது. ஆக கலை, கவிதை என்ற அறிவுணர்வின் பொதுமையை வேறொரு மொழியில் ஆக்கும் செயல், அந்த மொழியையே மீள உருவாக்கும் செயல்தானே!

- வெளியாக இருக்கும் சேரனின் 'காடாற்று' கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய பின்னுரை (இன்னும் வரும்).

http://www.nagarjunan.net/node/2364

Edited by nunavilan

  • தொடங்கியவர்

எங்களுக்கு பிடித்ததுதான் நடக்கும் என்றில்லை ,

இம்வார குமுதம் ரிப்போட்டரில் "சீனப் பூச்சாண்டி இனி எடுபடாது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பொயட் எழுதி வந்திருக்கின்றது .

அடுத்த வாரம் ஊரான ஊர் என்ற ஆங்கில விபரண படம் ஒன்று வெளிவருகின்றது ,அதைவிட

Thursday




  • 6:30pm until 8:30pm


  • OISE – Room 5230 252 Bloor Street West – (St. George Subway)


  • (Research Fellow/Lecturer at Trinity College, Dublin)
    (Dr Jude Lal Fernando is from Southern Sri Lanka; one of the founding members of the ‘IRISH PEACE FORUM FOR SRI LANKA’. The ‘DUBLIN PEOPLES TRIBUNAL ON WAR CRIMES IN SRI LANKA’ is the result of Dr Jude’s commitment an...d dedication for justice)


    Organized by: Canadian Forum for Justice and Peace in Sri Lanka
    Co-sponsors: University of Toronto Student Union; Canadian Peace Alliance; Canadian Tamil Congress; Centre for War Victims and Human Rights; Coalition Against Israeli Apartheid (CAIA); National Council of Canadian Tamils; Philippine Solidarity Network; Socialist Project.; Tamil Resource Centre; and Tamil Workers Alliance.

இதுவும் நடை பெறுகின்றது .

இனியாவது மற்றவர்களையும் புரிந்து கொஞ்சம் வெளியில் வர முயற்சியுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பிடித்ததுதான் நடக்கும் என்றில்லை

புலியும் அவர்தம் தமிழிழமும் கனவாய் போனதன் விரக்கிதான் பலரை இப்படி பேசவைக்கின்றது.வாசிக்காமலே விமர்சனம் எப்படி வைக்க முடிகின்றது ?

அது நீங்கள் பதிந்த முதல் மூன்று வரிகளுக்குமானது. 'விசா அற்றது பாஸ்போர்ட்' என ஒடி வந்தால் அந்த மூன்று வரிகளும் அடுத்து வருவது தவிர்க்க முடியாதது.

சுஜாதா ஒருமுறை, புலம்பெயர்ந்த பெரும்பான்மையான ஈழத்துப் படைப்பாளிகள், இழந்தவைகளைப் பற்றியே இலக்கியங்கள் படைக்கிறார்கள் என பொருள்பட கூறினார்.

எனது பாமரத் தமிழில் 'கழிவிரக்க இலக்கியங்கள்' என்று கூறினேன்.

அன்ரன் பாலசிங்கம் மறைந்த பின் சேரனும் அவரின் பதவிக்கு முயன்றதாக எங்கோ வாசித்த ஞாபகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.