Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவில் வந்தது நிஜத்தில் தோன்றியது.. நிஜக் கதை..!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிவுக்கு எட்டாத பல இருக்கு, பல நாட்களுக்கு முன் இந்த விண்கலத்திற்கு ஓய்வு கொடுக்கப் போவதாக செய்திகள் வந்தது, அது உங்கள் அடி மனதில் பதிந்து இப்ப வந்திருக்க சந்தர்ப்பம் இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

இந்த விண்ணோடம் ஓய்வு பெறப் போகிறது என்பது தெரியும். ஆனால் அதை பல மாதங்களுக்கு முன்னர் தான் அறிந்திருந்தேன். அதனைக் காவிக் கொண்டு விமானம் ஒன்று பறக்கும் என்பதும் தெரியும். ஆனால்.. இப்படித்தான் பறக்கும் என்பதும் அதன் பறப்பு வடிவங்களும் பார்த்ததில்லை. ஆனால் கனவில் வந்தது.. போல.. அப்படியே நேற்று பிபிசியிலும் வருகுதே.. அதுதான்.. ஆச்சரியமாக இருந்தது..! அதுவும் பிபிசியில் செய்தி படிப்போம்.. காணொளிகளை தினமும் பார்ப்பதில்லை. ஆனால் நேற்றுப் பார்த்தேன்..! எப்படி இந்த correlations ஏற்பட்டது என்பது தான் வியப்பு.. உடையார்..! எல்லாமே coincidences ஆ..??! :):icon_idea:

எனக்கு இப்படியான எதிலுமே நம்பிக்கை இல்லை ,அதனால் தானோ என்னவோ ஒன்றும் நடக்குதில்லை.மனைவியும் அவர்கள் வீட்டாரும் எதிர்மாறு ,அவர்கள் அம்மா இலங்கை போய் இறந்த அன்று இங்கிருக்கும் மற்ற சிஸ்டர் கனவுகண்டாவாம் அதை சிலருக்கு சொல்லி வேறு இருக்கின்றார் ,அம்மாவிற்கு எதுவும் நடந்துவிடுமோ என நினைத்துக்கொண்டு படுத்திருக்கலாம்.

அப்படி ஒன்று நடந்திருக்காவிடில் அந்த கனவும் மறைக்கப்பட்டிருக்கும் அப்படிதான் பலர் கனவுகள் .

நன்றி அர்ஜீன் அண்ணா. உங்கள் குடும்பத்திலும் நிகழ்ந்த கனவு நிஜமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு..! :)

சரி தந்தையே.. :lol::D:icon_idea:

இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். ஒரு ஆணின் உச்ச மகிழ்ச்சியே அவன் தந்தை என்று அழைக்கப்படுவதுதான் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படி எல்லாம் உச்ச மகிழ்ச்சியாக இல்லாவிடினும்.. சும்மா இருந்த என்னை கடவுள் ஸ்தானத்திற்கு உயர்த்தி அழைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..! :):lol:

எனக்கும் உதே விஷயம் நடந்திருக்கு. உயர் தரத்தில் ஒருமுறை சோதினை செய்யும் போது பல கேள்விகளை எங்கோ பாத்த மாதிரி இருந்தது, பின்னர் நண்பர்களுடன் இது பற்றி கதைக்கும் போது அவர்களில் இரண்டு பேருக்கும் உதே மாதிரியான உணர்வு வந்திருக்காம்.ஏதாவது பழைய சோதனைப் பேப்பர்களில் கண்டிருப்போம் எண்டு யோசித்துப் பார்த்தால் அந்தக் கேள்விகள் முன்பு ஒரு போதும் வராதவை. வீதியில் வாகனம் ஓட்டும் போதும் இந்த இடத்திற்கு முன்பு வந்திருக்கிரனே எண்டு யோசிப்பேன் ஆனால் புத்தம் புதிய இடம். பிரச்சனை என்ன எண்டால் அப்பிடியான சந்தர்ப்பம் நிஜத்தில் வரும் போதே பழைய கனவு ஞாபகம் வரும். இல்லாவிட்டால் எதுவுமே ஞாபகம் வருவதில்லை. முன்பு ஏதாவது கனவு கண்டு நித்திரையால எழும்பிய பின்னர் அந்த ஞாபகம் இருந்தால் அதை எழுதி வைக்க வேண்டும் என யோசிப்பேன். ஆனால் ஒரு போதும் செய்தது இல்லை. அவ்வாறு திகதி நேரத்துடன் எழுதி வைத்து பிறகு அது சரி வந்தால் அவற்றுக்கு இடையில இருக்கும் தொடர்புகள் பற்றி சிந்திக்கலாம் என யோசித்ததுண்டு.

விடை காண முடியாத சில கேள்விகளுக்கும்.. பரிசோதனைகளுக்கும் கனவில் விடை கண்ட அனுபவம் எனக்கும் உண்டு..! அதேபோல்.. கனவில் கண்ட சில வினாக்களை ஒத்த வினாக்கள்.. கேள்விப் தாளிலும் இருக்கக் கண்டு வியந்திருக்கிறேன். எல்லா வேளையிலும் அல்ல.. ஒரு சில சந்தர்ப்பங்களில் அமையும் கனவுகளே நிஜமாகி பிரதிபலித்துள்ளன..! அதுதான் ஆச்சரியமான விடயமாக இருக்கிறது. :):icon_idea:

  • Replies 60
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் ஒருநாள் இரவு திடீரென நித்திரையில் புலிகளின் தாகம் தமிழீழத் தாயம் என திரும்ப திரும்ப கத்திக்கொண்டேயிருந்தான். நானும் திடுக்கிட்டு விழித்து அவனது அறையை திறந்து போய் அவனை உலுப்பி என்ன நடந்தது என கேட்டால். தான் தள்ளாடி இராணுவ முகாமை தகர்த்து விட்டதாகவும் தலைவர் மாமா தான் துவக்கு தந்ததாகவும் சொன்னான். அவனிற்கு பால் மாவை கரைத்து போத்தலில் ஊற்றி வாயில் செருகிவிட்டு திரும்பவும் வந்து கணவரை அணைத்தபடி படுத்துவிட்டேன். இத்தனைக்கும் நீங்க நம்பவே மாட்டிங்க அவனிற்கு ஒண்ணரை வயதுதான்

அக்காவின் தற்பேபாதைய நோக்கமே சுதந்திரமல்ல சோறுதானே?

அதை தங்களள் பிள்ளையில் தொடங்குவதை வரவேற்கின்றேன். ஆனால் அது மீண்டும் மீண்டும் எழுந்து அழும். ஏனெனில் அதை அடக்கமுடியாது.

அக்கா எனக்கு பதில் எழுதணும் என்ற ஆர்வத்தில் தன்னை தன் பிள்ளையை தனது கணவரை ஏன் தனது படுக்கைவரை களங்கப்படுத்தியுள்ளார்.

இதற்கு மேல் எழுத விரும்பவில்லை.

நான ஆயிரம் வழிகளில் நாம் சென்றாலும் ஒரு நாள் ஒரு புள்ளியில் இணைந்தே ஆகவேண்டும் என்ற பொறுப்புடன் இருக்கின்றேன்.

அக்கா தன் தலவர் வழிக்கு எம்மைக்கொண்டுவர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதுகின்றார். பொறுப்புடன் நான் நிறுத்திக்கொள்கின்றேன்.

திரியில் நெடுக்கு எதை எம்மிடம் எதிர்பார்த்து அதை இங்கு பதிந்துள்ளார் என்பதை புரிந்து எழுதினால் எல்லோரும் பயன்பெறலாம்.

'பென்சீன்' (C6H6 ) இற்கான குறியீட்டு வடிவை எப்படி அமைப்பது என்று ஒரு இரசாயணவியல் ஆராய்ச்சியாளர் நீண்ட காலம் யோசித்தும் அதற்கான வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஒருநாள் அவரது கனவில் ஒரு பாம்பு வந்து அறுகோண வடிவில் நின்றதாம். அந்த வடிவத்தைப் பார்த்தே அவர் 'பென்சீன்' இன் குறியீட்டு வடிவை அமைத்தவர் என்று இரசாயணவியல் ஆசிரியர் ஒரு முறை கூறினார்.

இது ஒரு விடயத்தைப் பற்றியே தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டிருப்பதால், ஆள் மனதில் அது படிந்திருக்கலாம்.

திருத்தியதற்கான காரணம்: தடித்த எழுத்தில் உள்ள வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஞ்ஞானி பாம்பு வாலை கடிப்பது போல கனவு கண்ட பின்புதான் பென்சினின் கட்டமைப்பை ...சூத்திரம்...கண்டுபிடிச்சவராம் என படிச்ச ஞாபகம்.....நெடுக்ஸ் நீங்களும் ஒரு விஞ்ஞானியாக வாய்புண்டு.....வாழ்த்துக்கள்

snake.gif

ஆம் அவர் வேறு யாருமல்ல.. பென்சீனின் தனித்துவக் கட்டமைப்பைப் பற்றிய ஆரம்பக் கண்டுபிடிப்பைச் செய்த.. ஜேர்மனிய விஞ்ஞானி Kekule (கெக்குலே). இன்றும் அவரின் கண்டுபிடிப்பு மதிக்கப்படுகிறது. அவரின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் இருந்து இன்று வேறு சிறந்த விளக்கங்களும் பென்சீனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவ உலகில் பென்சீனின் கண்டுபிடிப்பே.. நாங்கள் பாவிக்கும் அநேக மருத்துகளுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.. இருக்கிறது.

கெக்குலேயை ஞாபகப்படுத்திய.. உங்களுக்கும்.. புத்துவுக்கும் நன்றிகள். ஆனால் கெக்குலே அளவிற்கு எங்களை எல்லாம் விஞ்ஞானியாக்கி கனவு காண்கிறது.. ரெம்ப ஓவர்..! நாங்க சாதாரண அறிவியலாளர்களாக இருப்பம்.. என்ற நம்பிக்கை மட்டுமே உண்டு..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்களின் பகிர்விற்கு நன்றி அபராஜிதன். :)

இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். ஒரு ஆணின் உச்ச மகிழ்ச்சியே அவன் தந்தை என்று அழைக்கப்படுவதுதான் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படி எல்லாம் உச்ச மகிழ்ச்சியாக இல்லாவிடினும்.. சும்மா இருந்த என்னை கடவுள் ஸ்தானத்திற்கு உயர்த்தி அழைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..! :):lol:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தான்... நீங்கள் தான் என்னை பெறவில்லையே.... எனவே இது உங்களுக்கு பொருத்தமில்லை... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு தான்... நீங்கள் தான் என்னை பெறவில்லையே.... எனவே இது உங்களுக்கு பொருத்தமில்லை... :lol::D

கடவுளை தொழுபவர்களும்.. கடவுளை.. தந்தையே.. தாயே என்றெல்லாம் அழைக்கின்றனர். அந்த வகையில் நான் உங்களுக்கு தெய்வம் போல..! அந்த வகையில்.. நீங்கள் தந்தை என்று அழைக்கலாம். இப்படி அழைக்க நான் சொல்லவில்லை.. நீங்களாகவே அழைத்துக் கொண்டதால்.. உங்களை தேடி வந்த வினையிது. அந்த வகையில்.. இந்த உடன்பாட்டை எட்ட முடிகிறது. அவ்வளவும் தான். :lol::D

Edited by nedukkalapoovan

ஆனா என்னக்கு முன்பு எல்லாம் வேற மாதிரி கனவுகள் வரும் அதாவது மாசக் கனக்கில் கை கழுவவிலை என்றால் இரவில் யாரோடு ஏதோ செய்வது போல் இருக்கும்...........................

பார்த்து சசி - உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்.

இப்படி முன்னரும் பல முறை நடந்துள்ளது. ஒரு முறை கனவில் கடற்புலியாகி நான் கடலில் சண்டை இட்டு.. சிங்கள எதிரிப் படகுகளை அடித்து விரட்டுகிறேன். அதில் ஒன்று மூழ்கிப் போகிறது. என்ன ஆச்சரியம்.. கடற்புலியாகி.. கடலில் சண்டை போட்டேனா.. என்ற ஆர்வத்தில்.. வியப்பில்.. எண்ணம் ஓட.. கனவு கலைகிறது.

காலை எழுந்து இணையத்தில் செய்தியை படிக்கிறேன்.. மன்னார் கடலில் கடற்புலிகளால் டோரா மூழ்கடிப்பு என்ற செய்தி பளிச்சிடுகிறது.

நீங்கள் கண்ட பல கனவுகளும் பலிக்காமல் இருந்திருக்கும் தானே. இது ஒரு coincidence தான் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கண்ட பல கனவுகளும் பலிக்காமல் இருந்திருக்கும் தானே. இது ஒரு coincidence தான் !

கனவுகள் எல்லாம் பலிக்க வெளிக்கிட்டால்.. கனவில பல முறை இறந்து போன நான் இப்ப இறந்தெல்லோ இருக்க வேண்டும். இது coincidence ஆகவும் இருக்கலாம்.. அதையும் தாண்டியதாகவும் இருக்கலாம்..! இது தான் காரணம் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.. என்பதும் உண்மை தானே..! :) :icon_idea:

:lol::D

எனது வாழ்க்கையில் நடக்க போகும் பல சம்பவங்களை, கனவுகள் மூலமாக முதலே அறிந்திருக்கிறேன் . அனாலும் சில கனவுகள் திரும்ப திரும்ப வருவதின் காரணமும் தெரியவில்லை . சில வாரங்களுக்கு முன் ஒரு நபருடன் மனம் சங்கடபடுவதாக கனவு கண்டேன் . ஆனால் நான் அந்த நபருடன் பேசியது கூட இல்லை . ஆனால் அன்று காலையிலே அப்படியே நடந்தது . ஆனால் பல விடயங்களை குதர்க்க வாதிகளுடன் விவாதிக்க இயலாது .

நெடுக்ஸ் கருத்துக்களுக்கும் கருத்து எழுத யோசிக்க தான் வேணும் .

நாங்கள் ஏதோ எழுத மரபணு , ஜீன் என்று பின்னால வந்து வெடியை கொழுத்தி போடுவார். பிராயிடின் கருத்துக்களிலும் எனக்கு பெரிசா உடன்பாடு இல்லை .

Edited by sudalai maadan

உங்கள் அனுபவப் பகிர்விற்கும் நன்றி சுடலை. :)

பயப்பிடாதேங்கோ.. சும்மா சும்மா எல்லாம் மரபணு வெடி கொழுத்திப் போடமாட்டம். துணிஞ்சு எழுதலாம்.. உங்கள் கருத்தை..! (ஜோக்ஸ்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் தெரியுது நம்ம மாதிரி கனக்க பேர் இருக்கினம்.

நானும் ஏதோ எனக்கு மட்டும்தான் இப்படி முன் கூட்டியே தெரியும் வல்லமையை ஆண்டவன் தந்திருக்கிறார். ஒரு கோவிலைக்கட்டி அங்கு உட்காரலாமா என்று யோசித்தேன்...... :lol::D :D

நான் சிலவேளை ஒருநாள் காணும் கனவின் தொடர்ச்சியை இன்னொரு நாள் காண்பதுண்டு... ஆனால் கனவில் வரும் இடங்களையோ நபர்களையோ பார்த்ததில்லை...

அதே போல் சில இடங்களையோ சில நபர்களையோ நேரில் பார்க்கும் போது ஏற்கனவே தெரிந்த மாதிரி உணர்வு ஏற்படுவதுண்டு... ஆனால் உண்மையில் பார்த்ததில்லை...

சில இடங்களை பார்க்கும் போது நான் ஏற்கனவே அங்கு வந்து போனது போல், அங்கு உள்ள சில பொருட்கள் என் கண்ணில் பட்டால் எனக்கு ஏதோ ஒரு சம்பவம் நினைவுக்கு வருவது போல் இருக்கும்... ஆனால் "வார்த்தைகள் தொண்டை வரை வந்து வெளியில் வராததது போல்" அதுவும் கண நேரத்திற்குள் மறைந்து விடும்... :(

எனக்கும் உதே விஷயம் நடந்திருக்கு. உயர் தரத்தில் ஒருமுறை சோதினை செய்யும் போது பல கேள்விகளை எங்கோ பாத்த மாதிரி இருந்தது,

தும்பு,

எனக்கும் இது நடந்துள்ளது.

பக்கத்தில் இருந்த மாணவனின் விடையைப் பார்ப்பதற்குப் பதிலாய் வினாவைப் பார்த்து விட்டேன். :lol:

தும்பு,

எனக்கும் இது நடந்துள்ளது.

பக்கத்தில் இருந்த மாணவனின் விடையைப் பார்ப்பதற்குப் பதிலாய் வினாவைப் பார்த்து விட்டேன். :lol:

ஐயையோ, தப்பிலி அண்ணா... இந்த இரவு நேரத்தில.... உங்கட பதிலை வாசிச்சிட்டு பிலத்து வாய் விட்டு சிரிச்சிட்டன்... இப்பவும் சிரிச்சு முடியேல்லை... :D :D :D :D :D

வீட்டில இருக்கிற ஆக்கள் என்ன இந்த பிள்ளைக்கு விசர் பிடிச்சிட்டுதோ என்று யோசிக்க போயினம்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்.. இருக்கும்.. பென்னம் பெரிய அணைக்கட்டு.. பென்னம் பெரிய நீர்த்தேக்கம்! :icon_mrgreen:

பல்லு விழுவது, தலைமுடி உதிர்வது, மொட்டைத் தலை இப்படியான கனவுகள் வந்தால் அவை சிலவேளை அவமானத்திற்குரிய அறிகுறிகள் என்று எனது அம்மம்மா ஒரு தடவை சொன்னது ஞாபகம் இருக்கிறது... இதில் எவ்வளவு உண்மை இருக்கெனத் தெரியவில்லை.

சில நேரங்களில் சுகவீனமாக இருக்கும் நாட்களில் அதிகநேரம் விடிந்த பின்பும் காலையில் நித்திரை கொள்வேன், ஒரு கனவு கண்டு பாதியில் அல்லது அது முடிந்த பின்பு வேறு கனவு சம்பந்தமே இல்லாமல் வரும்... எழும்பி தேநீர் ஒன்று போட்டுக் குடித்து விட்டு மீண்டும் நித்திரையானால், அதன் தொடர்ச்சி வரும்... சில நேரங்களில் நானே அதை எனது கட்டுபாடுக்குள் கொண்டு போவது போல் தோன்றும்... சில நேரங்களில் background-ல் அட்டகாசம் நடக்கும் ஆனால் எம்மால் எழும்பி எதுவுமே செய்யமுடியாத ஓர் பலவீனமான உணர்வை கொண்டதாக இருக்கும்...

ஊரில் அம்மாவிடம் கதைக்கும் போது சொன்னால், எல்லாத்தையும் கேட்டுப் போட்டு கடைசியில அது வேற ஒன்றும் இல்லை என்று தொடங்குவா... நானும் எனவோ சொல்லப் போறா என்று ஆர்வமாக கேட்பேன்... கடைசியில சோம்பேறித்தனம் சாத்தானின் குடித்தனம் என்று சொல்லுவா... :lol: :lol: :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்.. இருக்கும்.. பென்னம் பெரிய அணைக்கட்டு.. பென்னம் பெரிய நீர்த்தேக்கம்! :icon_mrgreen:

ஆகா.. கிருபண்ணாட கனவில.. உடையப் போறதாக சொல்லப்படும்... உலகின் மிகப் பெரிய சீன நீர்த்தேக்கம் வந்திருக்குது..! :):lol:

வீட்டில இருக்கிற ஆக்கள் என்ன இந்த பிள்ளைக்கு விசர் பிடிச்சிட்டுதோ என்று யோசிக்க போயினம்... :icon_idea:

அப்ப இன்னும் அவையள் கண்டுபிடிக்கல்லையா...! (ஜோக்ஸ்) :lol::D

தப்பிலி, பரீட்சைக் காலத்தில் அல்லது மறுமொழி வரும் காலத்தில் exam hall ல இருந்து பேப்பர் பேப்பராக எழுதுவம், ஆனால் எக்ஸாம் எழுதி முடிக்காமலே பேப்பரை வாங்கிக் கொண்டு போவது போல கனவு வந்ததுண்டா? :blink: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டியருக்கு நல்ல நித்திரை அடிச்சுக் பழக்கம் போல. ஒரே கனவு கனவா வருகுது..! நாங்கள் எல்லாம் கனவு காண்பதே அபூர்வமாப் போச்சு இப்ப. ஏன்னா நித்திரை கொள்ள முதல் விடிஞ்சிடுது..! :lol::D

குட்டியருக்கு நல்ல நித்திரை அடிச்சுக் பழக்கம் போல. ஒரே கனவு கனவா வருகுது..! நாங்கள் எல்லாம் கனவு காண்பதே அபூர்வமாப் போச்சு இப்ப. ஏன்னா நித்திரை கொள்ள முதல் விடிஞ்சிடுது..! :lol::D

சுகவீனமா இருக்கும் நாட்களில் தான் அப்படி நித்திரை கொள்வது... மற்றைய நாட்களில் எவ்வளவு தான் பிந்தி நித்திரை கொண்டாலும், வெள்ளன எழும்பிடுவமில்ல... ^_^

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.