Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு: அரபு நாடுகள் கடும் விசனம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

flag_iran001.jpg

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன், குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத் தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலான முழு விவரங்களையும் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.

இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

முஸ்லிம் அமைச்சர்களுடனும், முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடனும் இது தொடர்பில் அரபு நாடுகளின் தூதுவர்கள் தனித்தனி சந்திப்புகளை மேற் கொண்டு விவரங்களைப் பெற்றுவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு இலங்கையிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் கடும் கண்டனமும் விசனமும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டே தமது கண்டனத்தை இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசல் தாக்கப்படுவது அபூர்வமான நிகழ்வென சுட்டிக்காட்டியிருக்கும் தூதுவர்கள், இலங்கையில் இவ்வாறான இதையொத்த சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது தம்மைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களின் கலாசார விழுமியங்கள், இஸ்லாமியக் கடமைகளைச் சரிவர மேற்கொள்வதில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடல்ல என்றும் அத்தூதுவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தம்புள்ளை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டும் உரிய பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாமையானது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்றும் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஈரானியத் தூதுவர் அவசர கடிதமொன்றை பிரதமர் தி.மு. ஜயரத்னவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், இலங்கை முஸ்லிம்களின் கலாசாரம் மற்றும் வழிபாட்டு விழுமியங்களுக்குத் தனித்துவமும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென ஈரான் தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முஸ்லிம்களின் கலாசார, வணக்க வழிபாடுகள் தனித்துவம் மிக்கவை. இதனை உறுதிசெய்து பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பும் கடமையுமாகும் என்றும் அக்கடிதத்தில் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் தூதுவரால் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தின் பகுதிகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர் அலவி மௌலானா மற்றும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai...newsite/?p=8386

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகள், ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விடயங்களில்... தலையிடுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

- தமிழ்சிறி மகாநாயக்க தேரர் -

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க நாடுகள் இருக்கு ........ எங்களுக்கு யார் இருக்கின்றார்கள் ? :rolleyes:

அதனாலேயே எமக்கு ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது ........... இதை புரியாது முஸ்லிம்கள் தனி அலகு கேட்டுக்கொண்டு ........ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து..............

எண்ணெய் ஊத்தங்களப்பா..

கணக்கு சரியா வருகுது போல...

அடுத்த முறை ஐ.நாவில் நாம் பேசவேண்டியதில்லை. அவர்கள் பேசுவார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்பான இஸ்லாமியச் சகோதரர்கட்கு, வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து, தெருவில்வந்து, தமிழர்க்கெதிராக இல்லை இல்லை நீதிக்கெதிராக ஆர்ப்பாட்டம் எனும்பெயரில் விசுவாச வாந்தியெடுத்தீர்கள், என்ன! மல்லாக்காம் படுத்துக்கொண்டு கொஞ்சம் ஓவராகத்தான் எடுத்திட்டியள் அதுதான் உங்களின் முகத்தையே, உங்களையே அடையாளம் காண்முடியாதபடிக்கு நாஸ்தி பண்ணிட்டுது. இது சாம்பிள்தான் இன்னும் இருக்கு பெரும் ஆப்புக்கள். ஆயத்தமாக இருங்கோ. உங்கள நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு கலைத்தது தவறுதான் ஆனால் உங்களது சொத்துக்கள் வீடுவாசல்கள் எவற்றிலையும் புலிகள் கைவைக்க அந்தநேரம் விடவில்லை. களவாக உங்கள் பகுதிக்குள் நுழைய முற்பட்டவர்களை குமரப்பா வங்கருக்குள்ள போட்டவையள். யாழ் நகரை அண்டிய இஸ்லாமியர்களது குடியிருப்பை சவூதி என்றுதான் அழைப்பது வழக்கம் காரணம், அது உங்கள் பகுதி மற்றது அங்கு போய் மாட்டுப்பட்டால் வாழ்க்கை பாலைவனம்தான் என்பதற்காக.

இது ஒரு சாம்பிள் மாத்திரம் தான் இன்னும் இருக்கு.

இதுக்கே முனா தேசங்கள் எல்லாம் குளம்பினா எப்பிடி? சிங்களவங்களைப் பற்றி படிச்சு PHD பட்டம் பெற்றவர்கள் நாங்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள அரச பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் பள்ளிவாசல் இடிப்பு போன்ற மனிதாபிமான செயல்களை கண்டிக்கும் இஸ்லாமிய வெறியர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டும்.

அரபு நாடுகள், ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விடயங்களில்... தலையிடுவதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

- தமிழ்சிறி மகாநாயக்க தேரர் -

அரபு நாடுகள் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தமிழ்சிறி மகாநாயக்க தேரருடன் சேர்ந்து நானும் வன்மையாக கண்டிப்பதுடன் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கான பொருளாதார உதவிகள்.சலுகைகள்.ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றை நிறுத்தும் நோக்கங்கள் ஏதாவது அரபுநாடுகளுக்கு இருந்தால் அப்படியான முடிவுகளை முடிந்தால் எடுத்துப்பாருங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் சிறிலங்காவா கொக்கா என்று மார்பு தட்டி சவால் விடுகிறேன் ...............

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள அரச பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் பள்ளிவாசல் இடிப்பு போன்ற மனிதாபிமான செயல்களை கண்டிக்கும் இஸ்லாமிய வெறியர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டும்.

அதை நானும் ஆமோதிக்கிறேன் ............

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இலங்கை முஸ்லீம்களின் உணர்வுகளை மதித்து

அவர்களுக்கு நடந்த அநீதிக்காகக் குரல் கொடுக்காத மேற்குலகும்

கண்டிக்கப்பட வேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு பாதிப்பு என்று எந்த முஸ்லீம் நாடும் படையெடுப்பது இல்லை ..! கர்ணன் கவசகுண்டலதோடு பிறந்து போல இவன் எங்கிட்டாவது குண்டு வைப்பான்.. வச்சிகிட்டே இருப்பான்.. வெடித்த பிறகு போன் போட்டு சொல்லுவான் நாங்கதான் வச்சம் என... இனி வரும் காலத்தில் ஈழதோழர்கள் பழகடைகள் ஓட்டல்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் உசாராக இருக்க வேண்டும்...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.