Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்கற்களில் பிளாட்டினத்தை வெட்டியெடுக்க திட்டம்: அட்வைஸர் ஜேம்ஸ் கேமரூன்!, நிஜமாகும் 'அவதார்'!!

Featured Replies

'பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை.

இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது.

பிளாட்டினம் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை வெட்டி எடுத்து வர விண்கற்களுக்கு (asteroids) 'புல்டோசர்களை' அனுப்பப் போகிறது Planetary Resources Inc என்ற அமெரிக்க நிறுவனம்.

இந்தத் திட்டமே சயின்ஸ் பிக்சன் சினிமா மாதிரி இருந்தாலும், இதற்கு நிதியுதவி செய்ய கூகுள் நிறுவன அதிபர்களான லேரி பேஜ், எரிக் ஸுமிட் உள்ளிட்ட பல பெரும் தலைகள் முன் வந்துள்ளனர்.

முதல்கட்டமாக பூமிக்கு அருகாமையில் சுற்றி வரும் எரிகற்களை (near-Earth asteroids) இந்த நிறுவனம் குறி வைக்கப் போகிறது. சுமார் 1,500 எரிகற்கள் பூமியை மிக நெருக்கமாகவே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நாஸாவின் ஒரு செயற்கைக் கோள் ஒரு எரிகல்லில் லேண்ட் ஆகி, அதில் சில ரசாயன சோதனைகளையும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எரிகற்களில் தரையிறங்குவது கொஞ்சம் ஈசியான விஷயம் தான். நிலவிலோ அல்லது வேறு கோள்களிலோ நுழைந்து தரையிறங்க அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளும், பாராசூட்களும், பெரும் கவசங்கள் கொண்ட விண் கலன்களும் தேவை.

ஆனால், எரிகற்களில் ஈர்ப்பு விசையும், அழுத்தமும் மிக மிகக் குறைவு. சுமார் 20 சதவீத எரிகற்கள் பனிகட்டிகளால் ஆனவை தான். மற்றவை கல்- கனிமங்களால் ஆனவை. இதனால், அங்கு ஒரு ரோபா போன்ற கருவியை தரையிறக்குவது கொஞ்சம் எளிதான விஷயம் தான்.

இங்கு சுரங்கம் தோண்டும் ரோபாக்களை அனுப்பி, தேவையான கனிமத்தை வெட்டி எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிடலாம் என்கிறார் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆண்டர்ஸன்.

ஒரு அவுன்ஸ் பிளாட்டினம் 1,500 டாலர்கள் விலை போகும் நிலையில், எரிகற்களுக்கு ரோபோவை அனுப்பி அங்கிருந்து பிளாட்டினத்தை வெட்டி எடுத்து வருவது நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும் என்கிறார்.

இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனரான பீட்டர் டையமன்டிஸ் ஏற்கனவே 'விண்வெளி டூர்' நிறுவனத்தை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 8 பெரும் பில்லியனர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு இவர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பு மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளார். இதில், நாஸாவும் ரஷ்யாவுக்கும் பெரும் லாபம் கூடவே டையமன்டிசும் பெரும் பணத்தைப் பார்த்துவிட்டார்.

இதையடுத்தே எரிகற்களை தோண்டி பிளாட்டினம் எடுக்கும் ஆசை இவருக்கு வந்துள்ளது. தனது நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைப் பொறியாளராகவும் நாஸாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் லெவிக்கியை நியமித்துள்ளார். இவர் நாஸாவின் மார்ஸ் (செவ்வாய்) கிரகத்துக்கு செயற்கைக் கோள்களை அனுப்பும் திட்டத்துக்கான மேலாளராக இருந்தவர்.

மேலும் எரிகற்களைத் தோண்ட லேசர்களை பயன்படுத்தும் முடிவில் இருக்கும் இந்த நிறுவனம் சுமார் 25 லேசர் தொழில்நுட்ப வல்லுனர்களையும் வேலைக்குச் சேர்த்துக் கொண்டுள்ளனர். வாஷிங்டனின் பெல்வியூ பகுதியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.

கூகுள் நிறுவனர்கள் தவிர பேரோட் சிஸ்ட்ம்ஸ் நிறுவன அதிபரான ரோஸ் பெரோட், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்டான சார்லஸ் சிமோன்யி (இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு டூர் போய் வந்தவர்) ஆகியோரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

நாஸாவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்கல வீரரான (பலமுறை விண்வெளிக்குப் போய் வந்தவர்) தாமஸ் ஜோன்ஸ் மற்றும் அவதார்- டைடானிக் படங்களின் இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் அட்வைசர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக ஒரு அதிக சக்தி கொண்ட டெலஸ்கோப் மற்றும் லேசர் ஆய்வுக் கருவிகள் அடங்கிய ஒரு சிறிய செயற்கைக் கோளை பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் விண் கல்லுக்கு அனுப்பவுள்ளது இந்த நிறுவனம். அடுத்து சில கனிமவியல் விஞ்ஞானிகளை நேரடியாக விண் கற்களுக்கு அனுப்பி சோதனை நடத்திவிட்டு, அடுத்த கட்டமாக கனிமங்களை தோண்டும் வேலையை ஆரம்பிக்கவுள்ளது.

பூமிக்குள் வந்து விழுந்த விண்கற்களில் சிலவற்றில் மிக அதிகளவிலான பிளாட்டினம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் திட்டங்களில் ஒன்று... கால்பந்தாட்ட மைதான அளவுள்ள ஒரு விண் கல்லை ராக்கெட்டுகள் மூலம் பூமிக்கு அருகே நகர்த்தி வந்து, அதில் கனிமங்களை அள்ளுவது!

http://tamil.oneindia.in/editor-speaks/2012/04/mining-the-asteroids-platinum-rush-in-final-frontier-aid0090.html?utm_source=facebook&utm_medium=tamilfb&utm_campaign=asteroidmining

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளுங்கோ அள்ளுங்கோ எல்லாத்தையும் நீங்களே அள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு இனி நல்ல வேலை போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதற்காகவும் ஒரு யத்தம் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு இனி நல்ல வேலை போல கிடக்கு

எங்கடை கனிமளத்து ஆக்கள் உதில சம்பந்தப்படாமல் இருக்கிறது நல்லம்.. :D முப்பதாண்டு பழமையான தொழில்நுட்பத்தை வச்சு இப்பவும் ஓட்டிக்கொண்டிருக்கினம்.. :lol:

இஞ்ச இருக்கிற குப்பை கானதேண்டு அங்க்கேயிருந்தும் கொண்டுவாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

platinum.jpg

அதுக்குப் பிறகாவது, பிளாட்டின நகைகளின் விலை குறைந்தால் நல்லதே. :)

விண்வெளியில் உள்ள ’பறக்கும் மலைகள் ‘ யாருக்குச் சொந்தம்?

பூமியும் சந்திரனும் இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி ‘பறக்கும் மலைகள்’ என்று சொல்லத்தக்க பெரும் பாறைகள் அவ்வப்போது ‘சர், சர்’ என்று வேகமாக வரும். ஆனால் அவை பூமியின் மீது அல்லது சந்திரன் மீது மோதாமல் தமது சுற்றுப் பாதையில் வேகமாகச் சென்று விடும். இவற்றுக்கு ‘ஆபத்தை உணடாக்கக்கூடிய் அஸ்டிராய்டுகள்’ என்று பெயர். உதாரணமாக மே 19 ஆம் தேதியன்று 31 மீட்டர் நீளம் கொண்ட அஸ்டிராய்ட் சுமார் 9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியிலான நிலவரப்படி இப்படியான அஸ்டிராய்டுகள் மொத்தம் 1287 உள்ளன. இந்த அஸ்டிராய்டுகள் காலம் காலமாக வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பூமியுடன் மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா பல்வேறு வழிகளில் இவற்றைக் கண்காணித்து வருகிறது.

asteroid+Ida.jpg

அஸ்டிராய்ட் ஐடா

நாம் இந்த அஸ்டிராய்டுகள் குறித்து கவலைப்படுவதற்குப் பதில் இந்த அஸ்டிராய்டுகள் இனி மனிதனைக் கண்டு பயப்படலாம் .காரணம். அமெரிக்காவின் கோடீஸ்வர முதலாளிகள் இந்த அஸ்டிராய்டுகள் மீது கண் வைத்து விட்டனர்.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் போன்ற அரிய உலோகங்களை வெட்டி எடுத்து வரும் நோக்கில் இப்போது அமெரிக்காவில் தனி கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜேம்ஸ் கேமரான், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் முதலானோர் முதலீடு செய்து Planetary Resources என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அஸ்டிராய்டுகளில் நிறைய உலோகம் அடங்கிய அஸ்டிராய்ட், பெரிதும் பாறையால் ஆன அஸ்டிராய்ட் என பல வகைகள் உண்டு. பெரிதும் உலோகத்தால் ஆன அஸ்டிராய்டில் பிளாட்டினம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கியிருக்கும்.

asteroids_3554_Amun_.jpg

பிளாட்டினமும் தங்கமும் நிறைய உள்ளதாகக் கூறப்படும் அஸ்டிராய்ட் 3554 அமுன்

இரண்டு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட 3554 அமுன் எனப்படும் அஸ்டிராய்டில் இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்கள் 8 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உள்ளன. கோபால்ட் எனப்படும் உலோகம் 6 லட்சம் கோடி டாலர். பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோகங்களின் மதிப்பு மேலும் 6 லட்சம் கோடி டாலர் என்று ஜான் லூயிஸ் என்ற நிபுணர் கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தினர் அஸ்டிராய்டுகளிலிருந்து தண்ணீரையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இத்தண்ணீரிலிருந்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியே பிரித்து அவற்றைத் திரவமாக்கி விண்வெளியிலிலேயே பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கவும் திட்டம் உள்ளது. உயரே செல்கின்ற ராக்கெட்டுகளுக்கு அவற்றை எரிபொருட்களாக விலைக்கு விற்க முடியும்.

அஸ்டிராய்டுகளிலிருந்து உலோகங்களை எடுப்பது என்பது ஏதோ புதிதாகத் தோன்றிய கருத்து அல்ல. விண்வெளி ராக்கெட் இயலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ரஷிய மேதை கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டிலேயே இது பற்றிய கருத்தை வெளியிட்டார்.

asteroid+belt+nasa+image.jpg

சூரிய குடும்பத்தில் அஸ்டிராய்ட் மண்டலம்

சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அஸ்டிராய்ட் மண்டலம் உள்ளது. அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன. குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் போல இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

இந்த அஸ்டிராய்ட் மணடலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு ச்கதி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

asteroid+vesta+26000miles+from+Dawn+2011july.jpg

அஸ்டிராய்ட் வெஸ்டா

பூமியில் பல நூறு டன் எடை கொண்ட ஒரு பொருளின் எடை அஸ்டிராய்ட் ஒன்றில் மிக அற்ப அளவில் இருக்கும். ஆகவே அங்கிருந்து அரிய உலோகங்கள் அடங்கிய பாறையை எடுத்துக் கொண்டு உய்ரே கிளம்புவது எளிது. சொல்லப் போனால் அவற்றை பூமியில் கொண்டு வந்து இறக்குவது தான் மிகக் கடினமான வேலையாக இருக்கும்.

இத்திட்டத்தை மேற்கொள்வோர் முதலில் தகுந்த அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்க பூமிக்கு மேலே பல டெலஸ்கோப்புகளைப் பறக்க விடுவர். இது இரண்டு ஆண்டுகளில் சாத்தியமாகி விடும் என்று கருதப்படுகிறது. அடுத்த கட்டப் பணி அஸ்டிராய்டுகளுக்கு அனுப்புவதற்காகத் தானியங்கி ரோபாட்டுகளை உருவாக்குவதாகும். மூன்றாவது கட்டத்தில் தான் அஸ்டிராய்டுகளில் ரோபாட்டுகளை இறக்கி அரிய உலோகங்கள் அடங்கிய பாறைகள் வெட்டி எடுக்கப்படும்.

புதிய நிறுவனம் ஏற்கெனவே 25 எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் அமெரிக்க நாஸா அமைப்பில் வேலை பார்த்தவர்கள்.

எடுத்த எடுப்பில் இவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். சந்திரன், கிரகங்கள், விண்வெளி பற்றி 1967 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி எந்த நாடும் விண்வெளியில் உள்ள சந்திரன் மற்றும் கிரகங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது. இதில் அஸ்டிராய்டுகளும் அடங்கும். சர்வதேச சட்டத்தில் அரசுகள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் கம்பெனிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று வாதிக்கப்படுகிறது.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களை எடுத்து வருவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் இப்படி அஸ்டிராய்டுகளிலிருந்து ஏராளமான அளவில் பிளாட்டினம், தங்கம் ஆகியவை பூமிக்கு வரும் போது உலக மார்க்கெட்டில் இவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்து போக வாய்ப்புள்ளது.உதாரணமாக தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்?

http://www.ariviyal....0&max-results=1

http://www.yarl.com/...pic=96935&st=40

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.