Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைப்பூ வடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பூ வடை

  • தேவையானவை :

  • வாழைப்பூ - சிறியது ஒன்று

  • கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு

  • இஞ்சி - ஒரு சிறுத் துண்டு

  • பூண்டு - 3 பல்

  • பச்சை மிளகாய் - 2

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • உப்பு - தேவைக்கு

  • எண்ணெய் - பொரித்தெடுக

  • கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெயை வைத்து காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

இரு பக்கங்களும் சிவந்ததும் எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்

மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்.

வாழைப்பூவை மோரில் ஊற வைத்த பின் சமைத்தால் அதிலிருக்கும் சிறுங்கசப்பு நீங்கிவிடும். வாழைப்பூவின் வாசம் தான் இந்த வடையின் சிறப்பு.

http://www.arusuvai....amil/node/22527

அதுசரி தமிழரசு, நறுக்கிய வாழைப்பூவை என்ன செய்வது? :D:lol:

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

ஒரு முறை, இந்த வாழைப்பூ வடையை உறவினர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.

வித்தியாசமான சுவையாக இருந்தது. இப்ப... அதை நினைத்தாலும் வாயூறுது.

இப்போ... செய் முறை தெரியும் என்பதால், அடுத்த முரை தமிழ்க் கடைக்குப் போகும் போது... ஒரு பொத்தி வாழைப்பூ வாங்க வேண்டும்.

இணைப்பிற்கு நன்றி தமிழரசு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தமிழரசு, நறுக்கிய வாழைப்பூவை என்ன செய்வது? :D:lol:

அரைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து கொள்ளவும். :)

ஒரு முறை, இந்த வாழைப்பூ வடையை உறவினர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.

வித்தியாசமான சுவையாக இருந்தது. இப்ப... அதை நினைத்தாலும் வாயூறுது.

இப்போ... செய் முறை தெரியும் என்பதால், அடுத்த முரை தமிழ்க் கடைக்குப் போகும் போது... ஒரு பொத்தி வாழைப்பூ வாங்க வேண்டும்.

இணைப்பிற்கு நன்றி தமிழரசு. :)

அம்மாவின் வருகை காரணமாக வாழைப்பூ வறை சாப்பிடக்கிடைத்தது. பாவம் கனநேரம் மினக்கெட்டு வாழைப்பூவை கொத்தி வறை செய்தா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

ஒரு முறை, இந்த வாழைப்பூ வடையை உறவினர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.

வித்தியாசமான சுவையாக இருந்தது. இப்ப... அதை நினைத்தாலும் வாயூறுது.

இப்போ... செய் முறை தெரியும் என்பதால், அடுத்த முரை தமிழ்க் கடைக்குப் போகும் போது... ஒரு பொத்தி வாழைப்பூ வாங்க வேண்டும்.

இணைப்பிற்கு நன்றி தமிழரசு. :)

நன்றி தமிழ்சிறி

மாலையில் வடையும் தேனீரும் நல்ல சுவையாக இருக்கும்.

3.jpg

இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

வீடுகளில் சும்மா வடைகளையே சுடுகிறாளளில்லை ... உது வேற ... வாழைப்பூ வடை!!! ... உதுகளை வாசித்து விட்டு, வாயை ஒருக்கால் ஆவென்று திறந்து மூடத்தான் சரி ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வடை அவிக்கத் தெரியாத பெண்களைத் திருமணம் செய்தால் இந்தநிலைதான் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பூ வடை வாசத்திற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வடை அவிக்கத் தெரியாத பெண்களைத் திருமணம் செய்தால் இந்தநிலைதான் :lol: :lol: :lol:

வல்வை சகாறா, நீங்கள் வடையை அவிக்கிறனீங்களா? :o

நாங்கள் வடையை... பொரிக்கிறனாங்கள். மோதகம், கொழுக்கட்டையை மட்டும் தான் அவிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாறா, நீங்கள் வடையை அவிக்கிறனீங்களா? :o

நாங்கள் வடையை... பொரிக்கிறனாங்கள். மோதகம், கொழுக்கட்டையை மட்டும் தான் அவிப்போம்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு வித்து வந்தார் :D:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு வித்து வந்தார் :D:lol::)

நாங்கள் படிச்ச ஆரம்பத் தமிழே... பிழை போல இருக்குது, வாத்தியார். :rolleyes:

எண்ணையில் பொரிப்பது.

நெருப்பில் சுடுவது. (பனங்கிழங்கு,மரவள்ளிக் கிழங்கு)

ஆவியில் அவிப்பது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி காலத்தில் எண்ணெய் தட்டுப்பாடாக இருந்திருக்கலாம்.

அல்லது எண்ணெயே இல்லாமல் இருந்திருக்கலாம்.

அப்போது எங்கள் பரம்பரையினர் தங்கள் பாரம்பரிய

சிற்றுணவான வடையை நெருப்பிலே சுட்டே சாப்பிட்டிருக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் வடை அவிப்பதில்லையா? :icon_mrgreen:

ஐயோ...

வடை சுடுதல்

வடை பொரித்தல்

எது சரியானது? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் வடை அவிப்பதில்லையா? :icon_mrgreen:

ஐயோ...

வடை சுடுதல்

வடை பொரித்தல்

எது சரியானது? :blink:

பாட்டி சுட்ட வடையைக் காகம் கொண்டு போன கதையை ஒருமுறை திரும்பிப் படியுங்கள்வடை கிடைக்காது. விடை கிடைக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

தோசை சுட்டோம்....

வடை சுட்டோம்....

ஏன் தோசைக்குரிய பண்பை வடை எடுத்துக் கொண்டது வாத்தியார்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி காலத்தில் எண்ணெய் தட்டுப்பாடாக இருந்திருக்கலாம்.

அல்லது எண்ணெயே இல்லாமல் இருந்திருக்கலாம்.

அப்போது எங்கள் பரம்பரையினர் தங்கள் பாரம்பரிய

சிற்றுணவான வடையை நெருப்பிலே சுட்டே சாப்பிட்டிருக்கலாம் :D

அப்படியென்றால்.... எங்கள் பாட்டிமார், வடையை... கிறில் பண்ணியிருக்கிறார்கள்.grill-smiley.gif

  • கருத்துக்கள உறவுகள்

தோசை சுட்டோம்....

வடை சுட்டோம்....

ஏன் தோசைக்குரிய பண்பை வடை எடுத்துக் கொண்டது வாத்தியார்.... :lol:

முறுக்கு அவிப்பதில்லை. பொரிப்பதில்லை.முறுக்குச் சுடுவது.அரியதரம் அவிப்பதில்லை. பொரிப்பதில்லை.அரியதரம் செய்வது.லட்டு...சூசியம்..வாய்ப்பன்...இப்படி நம் முன்னோர் வழி நாம் படித்தோம்.புதுமை புகுத்தல் சுலபம்.மக்கள் ஏற்றுக் கொள்வதே மொழி.:D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இப்படித்தான் என் வீட்டில் பிள்ளைகள் கேள்வி கேட்டு வைக்கிறார்கள் பதில் சொல்லத் தெரியாமல் திக்கு முக்காடிப் போய்விடுகிறேன்... ஆக சில சமயங்களில் வெருட்டிவிடுவேன் அப்படித்தான் என்று முடித்துவிடுவேன் .. என்னோட பிள்ளைகள் ஆச்சே.. காத்திருந்து இன்னொரு சமயத்தில் என்னை மடக்கி கேள்வி கேட்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வடை அவிக்கத் தெரியாத பெண்களைத் திருமணம் செய்தால் இந்தநிலைதான் :lol: :lol: :lol:

வடை அவிக்கிறனீங்களா :lol::D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உந்த செய்முறைகள் எலடலாத்தையும் பிரஞ்சு மொழியில் தந்தால் கடையில வைச்சு என்ரை சரக்கெல்லாம் வித்துப்போடுவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே உந்த செய்முறைகள் எலடலாத்தையும் பிரஞ்சு மொழியில் தந்தால் கடையில வைச்சு என்ரை சரக்கெல்லாம் வித்துப்போடுவன்.

Boulettes Valaippu

Exigences:

Valaippu - Un Petit

Gram dal - pour une ala

Ginger - un petit morceau

L'ail - 3 multiples

Piments verts - 2

Feuilles de coriandre - un peu

Curry Tree - légèrement

Sel - comme l'exige

Huile - porittetuka

Gardez katalaipparuppai tremper deux heures. Valaippuvai propre coupé pour analyser la poudre.

Mettez de côté une lentille de mer cuillère à soupe, des lentilles au gingembre restant, l'ail et le sel et le moudre à korakorap. Piments verts, la coriandre en poudre et la coupe frite.

Katalaipparuppu sol, pleine katalaipparuppu, narukkiya piments, Arbre Curry, ajoutez les feuilles de coriandre à y assister. S'il vous plaît vérifiez le sel.

Chauffer l'huile dans une casserole et porter à ébullition. Boulettes de pâte secs boulette que peu d'huile, les faire frire dans la demande de pétrole dans kaynt.

Les deux côtés ont rougeâtre, la probabilité de papier de soie

Moruppana moru valaippu préparé côtelettes.

Parce qu'il est cuit dans du beurre, puis mettre valaippuvai cirunkacappu tremper loin. L'odeur spéciale de valaippu des côtelettes.

மொழிபெயர்த்தால் இப்படித்தான் வருகின்றது இது சரியான மொழிபெயர்ப்பா என்றெல்லாம் எனக்கு தெரியாது ...... மேலதிக Google Translate ஐ தொடர்பு கொள்ளவும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.