Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள்பெயர் (------)கீறு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்போதும்செம்பாட்டுமண்ணின்வாசமும்-அதை

மூடிவளர்ந்த பயிர்களின்பசுமையும் -நிறைந்த

ஒரு சிறுகிராமமது.காசுவசதிகொண்ண்டவர்களை கொண்டிராத போதிலும் பாசவளர்ச்சிகொண்டிருந்தவர்களை

தன்னகத்தே கொண்டிருந்தது அக் கிராமம் .சின்னச்சின்ன

ஒழுங்கைகள் அறிமுகமிலாதவர்களுக்கு முழு கிராமத்தையும்

அறிமுகம் செய்துவைக்கும்.

அழகானசிறுகோவில்அதனருகே சிறுபடிப்பகம்.கோவில்திருவிழாக்காலங்களில் விதவிதமானபுத்தாடைகளுடன் உலகஅழகிகளின் செருக்குடன்

உள்ளூர்அழகிகள்சுற்றிவருவர்.

துவிச்சக்கரவண்டிகளின் சக்கரங்கள்தேயத்தேய கன்னிகளைச்சுற்றும்காளையர்கள்.உள்ளூர்பேட்டைகளை கண் வைக்கவரும் அயலூர் பெடியன்களுடன்புழுதிகிளம்ப நடக்கும்போரென ஊரேரணகளமாய் மாறியிருக்கும்.அந்த ஊரில்தான் இவனும்இருந்தான்.வீதியில்ஊற்றிவிட்டதாரைப்போன்ற அழகானநிறம்.ஊர்மரவள்ளித்தடிபோன்ற கட்டானஉடம்பு.

இன்னும்பலகவனிக்கப்படவிடயங்களைதன்னகத்தேகொண்டிருந்தவன்.மீசைமுளைக்கும்முதல்உதட்டில் அரும்பு முளைக்கும்வயது.படிப்பிலும்'வேலையிலும்அக்கறையுள்ளவன்.அப்படிப்பட்டஎன் கதையின்நாயகனுக்கு ஒருநாயகியும்கிடைக்கவில்லை.எந்தப்பெட்டையும்என்னைப்பார்க்கமாட்டாள் என்ற எண்ணத்தில் இன்னும் யாரையும் பார்ப்பது கிடையாது.ஆனாலும் அவனுக்கும்ஒரு நாயகி கிடைத்தாள்.அவள் பெயர்தான் கீறு (----).பக்கத்து வீடுதான் என்றாலும் கோட்டைச்சுவர்போல குருக்கறுத்திருந்தபனைஓலை வேலிக்கப்பால்இருந்து அவளின் சிரிப்பொலியும்பேச்சொலியும் ஊருக்கேகேட்கும் .இவனின்பேச்சொலிஇவனிற்கேகேட்காது.அன்றொருநாள் அயல்நாட்டிலிருந்து வந்திருந்த அரக்கர்கூட்டம் ஒன்று பின்னேரப்பொழுது ஊருக்குள்புகுந்தது.இக் கதையின் நாயகியின் விட்டிற்குள்புகுந்தபேயொன்று தன்கோரமுகத்தைகாட்டியவண்ணம் அவளைநெருங்கியது.

உடைந்தது கோட்டைச்சுவர்.பாதுகாப்புத்தேடி ஓடிவந்தவள் இவனின் முதுகுக்குப் பின்னே ஒளிந்துகொண்டாள்.விரட்டிவந்தஅரக்கன் இவனின் அகன்றமார்பையும் திரண்ட தோள்களையும் தீயுமிழும் கண்களையும்கண்டஞ்சி(இவ்விடத்தேவாசிப்பவர்களுக்குகொலைவேரிவராதிருக்க.)என்ன நினைத்தானோ அவ்விடம் விட்டகன்றான்.

முதுகுப்புறம் ஒருத்திஅணைத்தபடி நிற்கஇக் கதையின்நாயகன்

கதானாயகனானான்.முதல் முதலாகஅவளின்கண்களைப் பார்த்தான்.

அவளின்முகத்தில்அளவிடமுடியாதநாணமும் கண்களில்வார்த்தைகளால் எழுதமுடியாதவரிகளையும் கண்டான்.இவன் அவளிடமும் அவள் இவனிடமும்

வசப்பட்டனர்........................................................................................................ஒவ்வொரு இரவும் ஊரே நித்திரையில்இருக்க இங்கேயும் அந்கேயுமாய்நான்கு கண்கள் விழித்திருக்கும்.இவனின் காதலுக்குமுன்னர் அவனின் இரவுகள்மாலைஏழுமணிக்குமுன்னரேஆரம்பித்திருக்கும் ஆச்சி சொல்லிக் கேட்ட பேய்களின்கதைக்குப்பின்னால் ஒருகோடிதந்தாலும் ஒழுங்கையில் இறந்குவதில்லைஎன தனக்குள் சபதம்செய்திருந்தான்.ஆனாலும் ஒவொரு நாளும்அச்சபதத்தை உடைக்கவேண்டியசாபக்கேடு மண்ணெண்ணெய் ரூபத்தில்வரும் .அம்மாதம்பியென அழைக்க இப்போது தனுஷ் பாடிய அவன் அப்போதேபாடியிருக்கிறான்.மண்ணெண்ணெய் வாங்கும் போத்தலுடன் ஒழுங்கையிலிறங்கிஇருபுறமும்பார்க்க

ஆச்சி சொன்னபேய்கள்அனைத்தும் இருட்டிலிருந்தபடி இவனைப்பார்த்துப்பல்லிளிக்கும்.வகுப்பறையில்எழுந்துநின்றுபாடினாலும் நினைவில்வராததேவாரங்கள்எல்லாம் ஒருஎழுத்துக் கூடப்பிளைக்காமல் வரிசையாகவந்துநிற்கும்.ஒரு கட்டைக்கப்பால் உள்ளசண்முகம்கடையை நோக்கி ஓடத் தொடங்குவான்.இப்போது உலகத்தரத்தில் பதிவாகியுள்ள ஓட்டச்சாதனைகளை.அப்போதே சாதித்திருக்கிறான்.(இப்படியிருந்த அவனை அப்படியாக்கினாள்)

.................................................ஒவ்வொரு இரவும் அவனின் வளவுக்குப்பின்புறமிருந்த தண்ணீர்த்தொட்டியின் பின்புரமமர்ந்திருந்து காற்றுக்கே கேட்காதபடி பலகதைகள்

பேசினார்.தொட்டுவிடும் தூரத்தில் அவளிருந்தும்தொட்டுவிடவில்லை.ஒரேஒரு நாள் இரவுஅவள் இவன் தோள்சாய்ந்த போதுஅவளின் தலைகோதி கைகொண்டு தோளணைக்க தோன்றியது.ஆனால் செய்யவில்லை.அவள் சாய்ந்திருந்த தோள் எதுவரினும் தாங்கும் சக்தி பெற்றதாய் உணர்ந்தான்.இப்படியிவர்கள் கண்விழித்துக்காதல் பயிர் வளர்த்ததனை இன்னும் இரு கண்கள்கண்டுகொண்டன.

அம்மா............

விடிந்த பொழுது அனைத்தையும் புரட்டிப் போட்டிருந்தது.கல்வி மறுக்கப்பட்டு வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலைக்க்ச் சேர்க்கப்பட்டான் .(தமிழீழம் ஒரு மிகச்சிறந்த அரசியல் மேதை யை அன்று இழந்தது கொடுமை)அவனின் காதல்கோட்டை கல்விக்கொட்டை எல்லாம் அம்மியில்அரைத்த புளியன்கொட்டையானது.அம்மா பேச்சிற்கு மறுபேச்சுப் பேசாத அப்பாவும் அப்பா பார்வைக்கே தலைகுனியும் இவனுமாய் வேலை என்ற பெயரில் விலங்கிடப்பட்டான்.

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கிறது உங்கள் தமிழ்...சுவாரசியமாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை..ஆனால் எழுத்துப் பிழைகளை கவனித்துக் கொள்ளுங்கள்..இப்படி அழகான எழுத்து நடையைக் கொண்டிருக்கும் நீங்கள் எழுத்துப் பிழை விடுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுபேஷ் எழுதி வெட்டி ஓட்டும் பொழுது கவனத்தில் வரவில்லை.எனக்கே என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு எழுத்து பிழைத்தால் என் கருத்தே தவறிப்போகும்என்பது தெரியும்.மீண்டும்நன்றி சுபேஷ்

தீராநதி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்து நடை உங்களுக்கு உள்ளது, அன்னி லிங்கம்!

உங்கள் கதாநாயகனின் காதல்,ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் மலர்ந்து, ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் கருகுகின்றது!

என்னைக்கேட்டால், 'கோழைகள் காதலிக்கக் கூடாது' !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி புங்கையுரான் இது நாயகனின் கதையல்ல.நாயகியின்கதை .முடியவில்லை தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான கதை நடையுடன் யாழில் இன்னுமொருவர். :icon_idea: பராட்டுக்கள். உங்கள் கதையை சிறிய பந்தியாக பிரித்தால் படிக்க இலகுவாக இருக்கும் அதே நேரம். ஒரு கேள்வி கேவிக்க கூடாது ஊர்மரவள்ளித்தடிபோன்ற கட்டானஉடம்பு. :icon_mrgreen: நானும் கற்பனை பண்ணி பாக்கிறன். சரி வருதில்லை :( மற்றபடி கலக்குங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் மரவள்ளித்தடி (மிகவும் மெலிந்தஅல்லது நலிந்த தோற்றம் இதனைவிட மலிவாக ஒருத்தனை விமர்சனம் செய்யமுடியுமா?தெரியவில்லை )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி லிங்கம்! உங்களுக்கும் காவோலை வேலிக்கும் நிறைய தொடர்பு இருக்கெண்டு நினைக்கிறன். :D

(ஊர்மரவள்ளித்தடிபோன்ற கட்டானஉடம்பு) நான் அஞ்சாம் வகுப்பு படிக்கேக்கை.......சுகாதார ரீச்சர் என்ரை சேட்டைகழட்டிப்போட்டு........என்னைவைச்சுத்தான் மற்றவைக்கு சுகாதாரம் படிப்பிச்சவ.... ஏனெண்டால்.... விலாஎலும்பெல்லாம் எக்ஸ்றே படத்தை விட நல்லகிளியராய் தெரியும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் ஊரில குமர்பெட்டையள பாதுகாக்க காவோலை

வேலிகளைதானே நம்பினம்.சீனத்துப் பெருஞ்சுவர் தோத்துப் போகும் அளவுக்கு நீட்டி உயர்த்தி (வேலிக்குமேலாலை எம்பி எம்பிப் பார்த்தே கன பெடியள் ஆறடி தாண்டி வளர்ந்து இருக்கிறாங்கள் எண்டால் பாருங்கோவன் கு .சா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள் பெயர் .......(கீறு) (யாராவது ஒரு பெயர்வையுங்களேன்)

இவனின் விருப்புக்களைத் தவிர அனைத்தும்

நடந்தேறியது.அதில் ஒன்றுதான் வெளிநாடு.

அம்மாவுக்கு கிடைத்த சீதனக்காணிஒன்று

அடிமாட்டு விலைக்கு விற்கப்பட அந்தப்

பணம் இவன் கப்பல் ஏறப்பயன்படுத்தப்பட்டது.

அதற்கு முதல் யாரும் அறியாமல் ஓர் இரவில்

மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.அவள்

அனைத்து நம்பிக்கைகளும் தொலைந்து

போனவளாய்வெறுமை சுமந்த விழிகளால்

இவனைப் பார்த்தாள்.எல்லாம் கைவிட்டுப்

போன நிலையிலும் நம்பிக்கைநிறைந்த மனிதனாய்

அளவிட முடியாத காதல் வழியும் கண்களால்

அவளின் கண்களைத் தழுவினான்.தன்னிலை

இழந்து அவனின் நெஞ்சுக்குள் புகுந்தாள்.

கரங்களால் அவளின் தோள்தழுவி தலை கோதும்

போது'அவளின் இருதுளி கண்ணீர் நெஞ்சை சுட்டது.

அவளுக்கு நம்பிக்கை கூற நினைத்த போதும்

நெஞ்சில் வீழ்ந்த கண்ணீர்த் துளிகள் அவனை

துன்பக்கடலில் தூக்கி போட்டது.

`என்னை மறந்து விடுவியளே?உடைந்த குரலில்

அவள் கேட்க அவளின் கலங்கிய விழிகளைத்

துடைத்த வண்ணம்

:நீ என்னை மறந்துவிடாதே

என்மேலுள்ள சுமைகள் இறங்கும் போது என்

சிறகுகள் சுதந்திரமாய் பறக்கும்.ஆனால்

என் பறத்தலினதும்:இருத்தலினதும்

உயிர் மூச்சுநீதான்.

நான் என் சுமைகள் இறக்கிப்

பறக்கும் பொழுது என்னருகில்

பறப்பது நீ மட்டுமேயாக வேண்டும்.

நான் விழியுறக்கம்தவிர்த்து என் சுமைகளை

குறைப்பேன் .எனக்காக சில காலங்கள்

காத்திரு பெண்ணே

+++++++++++++++++++++++++++++++++++++++

விரைந்தோடும் வாகனங்கள் நின்று

உடன்புறப்படும்தொடருந்துகள் '

வெள்ளை மனிதர்கள் 'வேற்று மொழி

உண்ணவெறுக்கும் உணவு .அதிகமான

நிறவெறி' குறைவான அனுதாபம் என

எல்லாம் நிறைந்த நாட்டில்

இவன் எதிலியானான்.

இரவுத் தூக்கம் மெதுவாய் குறைய

காலையுணவு சுத்தமாய் மறக்க

இயந்திர வாழ்வில் முற்றாய் இணைந்தான்.

அவனிங்குவந்த முதல் வாரம் கிடைத்த

அகதிப்பணத்தில்வீட்டிற்கு ஒரு கடிதமும்

அவளிற்கு சில கடிதங்களும் அனுப்பியிருந்தான்.

முகாமிலிருந்த அந்த ஆறு மாதப் பொழுதுகளும்

மிகப்பெரும் பாரமாகிப்போனது.

எப்பொழுதும் மண்சுமந்த மேனியுடன்

தோட்டமும் வேலையுமே கதியென கிடந்தவன்

விலங்கிடப்பட்ட விலங்கானான்.

அக்காலகட்டத்தில் வீட்டிற்கு சிலதும்

அவளுக்கு பலதுமாய் கணக்கில்லாக்

கடிதங்களை அனுப்பியிருப்பான்.

வீட்டிலிருந்து எல்லாவற்றிற்கும் பதில் கிடைத்தது.

ஆனால் அவளிடமிருந்து?

காத்திருப்பேன் என்றவளே

என் காத்திருப்புப் புரிகிறதா?-நீ

வியர்த்துக் களைக்கும்ஒவொரு கணமும்

காற்றின் தொடுகையாய்-உன்

தலை கோதிவியர்வைத்

துழிகளை தொடைத்து விடுவேன் -என்றவளே

மூடியடைத்த முகாமில் புழுங்கிப்போய்

கிடக்கின்றேன்.உன்பதில் கிடைக்கவில்லையே'

என்ன நடந்தது.யாரிடமும் கேட்கமுடியாது'நண்பன்

சத்தியனைத்தவிர.அவன் கூடவீட்டிற்கு செல்வதில்லையாம் கடிதம் கூறியது.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நடையில் கதை...பாராட்டுக்கள்..தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுபேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சத்தியன் ஏமாற்றிவிட்டான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி நினைகேல்லை உடையார்

சத்தியன் நல்ல சிநேகிதன்.

வேற எதோ பிரச்சனை நடந்திருக்கலாம்

என நினைக்கிறேன்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள்--------

செம்பாட்டுத்தரையெங்கும் வெள்ளையடித்துக் களைத்துக்கொண்டிருந்த முழுப்பௌர்ணமியின் முன்னிரவுநேரம்.அவனும் அவளும்கண்டுகதைத்துக்கொண்ட அதேஇடத்தில் அவள்மட்டும் தனித்திருந்தாள்.

நிலவு தன் முழுமுகத்தையும் காட்டிதனிப்பயணம்செய்துகொண்டிருந்தது.

நிலாப்பெண்ணேஇன்று நீ எவ்வளவுஅழகாகஇருக்கிறாய்'என்னைப்போலவே.

எத்தனை இரவுகள் எங்கள்மனக்குரல் கேட்டுவெட்கம் கொண்டுமறைந்திருக்கிறாய்.சிலவேளைகளில் எம்

பேச்சொலிகேட்கமுகில்களுக்குள்மறைந்திருந்துமுக நெற்றிக்கண்களால் பார்த்திருக்கிறாய்..

இன்றுநான் தனித்துப்போய் இருக்கிறேன்.நீயோ முகில் பூக்களினால் முகம்துடைத்து வானக்காடெங்கும் கட்டற்றுத்திரிகிறாய்.

உன் அழகின் திமிரா?வெள்ளிகள் எல்லாம்உனைப்பார்த்துகண்களைச் சிமிட்டிக் காதலை

சொல்கின்றனவே கண்டுகொள்ளாமல் திரிகின்றாயே

நீயும் என்போலக்கையில் கிடைத்த காதலை தவறவிட்டுத்தனித்துப்போனாயா?முழு உலகையும் உன் வெளிச்சக்கைகளால்தடவும் என் தனிமைச்சிநேகிதியே 'முகமறியாத எதோ ஒரு நாட்டில் என் நினைவுகளை தூக்கிச்சுமந்தவண்ணம் கால்கள் தேயத்திரியும் என் காதலனைக்கண்டு என் நிலைமையை சொல்லிவிடேன்.கடுதாசியை தன மனதாய்விரித்து என் நினைவுகளை மையாய்தெளித்து அவன் அனுப்பிய அத்தனை கடிதங்களும் அவர்களிடமே சென்று சேர்ந்ததும் அதனால் உருவான சண்டையில் என் சுயமரியாதையும்௯எந் பெண்ணியத்தின் கண்ணியமும் என் குடும்பத்தவர்களின் வாழ்வியல்பும் பறிபோனதனையும் ஆனாலும் அவனின் முகவரியும் தகவல்களும் இன்றி அவனுக்காய் தவிக்கும் என் உயிர் வலியை உன்னைத்தவிர இனி யார் உரைப்பர் அவனிடம்.

போக்கிரித்தென்றலே நாங்கள் ஒன்றாக இருந்த நாட்களில் நகராது நின்று பொறாமையில் புழுங்கி சுட்டாய்.அவனில்லாத துணிவிலா என் கூந்தலில்ஏறி ஊன்சலாடவும் ஆடைதொட்டு வேடிக்கைகாட்டவும்

வருகிறாய்.உன்மீதுகோபம் வந்தாலும் நீயும் அவனைப்போல மேன்மையானவன்.தனக்காக எதனையும் வேண்டாதவன்.

அவனின் கண்களின் துளிகள் அவனை விடப் பிறருக்காகவே அதிக தடவைகள் கருத்தரித்தன.

அவளின் என்னப்பெருக்கில் எல்லை மீறிவழிந்த கண்ணிர்த்துளிகளை தென்றல் மௌனமாக ஏந்திச் சென்றது.கொண்டுசெல் எங்கெல்லாம் இருகியதரைகளாய் மனங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் தெளித்துவிடு.ஏதாவது துளிர்கிறதா பார்ப்போம்.

என்நண்பனே'காதலனே'நீ எனைப்பிரிந்த போது

உன் சிரிப்பில் நான் கண்ட வேதனை என்னைக்கொல்கிறதே எனை தொட்டு நீ அணைத்த தோழில்உன் கரம் பட்டஇடம்இன்னும் சுடுகிறதே.

நான் என்னடா செய்வேன்?நீவாழும் நாட்டின் பனிபடிந்த மலைகளின் அடிவாரப்பாதைகளிலும் '

பசுமைபோர்த்திய கிராமப்புற வீதிகளிலும் உன் கையணைத்து தோளில்தலைவைத்து நடக்க வேண்டுமென மனம் விரும்புகிறதே.என் விருப்புகள் 'கனவுகள் கொலைசெய்யப்பட்டு எரித்த சாம்பல் எங்கள் ஊர்ப்புழுதிக்காட்டில் வீசப்பட்டு விட்டது நண்பனே '

நீதடைதாண்டி வரும்வரை காத்திருப்பேனா தெரியவில்லை.அனால் தோற்றுவிடமாட்டேன்.என் கல்வியில் நான் வென்றாகவேண்டும்.தடைகளைத்தாண்டி வரும்போது நீயிருந்தால் நானும் உன் இறக்கைகளைத் துணைகொண்டு இறகு விரிப்பேன்.

  • 2 weeks later...

வாவ்...மனம் விட்டு ரசித்தேன்.....தென்றல்காற்று என்னைத்தழுவிச்சென்றது உம் தமிழில் தோழரே..இனிமை இனிமை....இன்னும் கண்களுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் தாலட்டுகிற்து உம் தமிழ்...எதையென்று நான் சொல்ல..உங்கள் வரிகள் எல்லாமே அழகாய் இருக்கின்றனவே...

மிக மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அண்ணா. இது கதையா நிஜமா? எனக்கென்னமோ நிஜம் போலிருக்கு. உங்கள் எழுத்துநடை எனக்கு பிடித்திருக்கிறது. வர்ணனைகளும் பிரமாதம். நிச்சயம் நானும் அப்பெண்ணின் முடிவு தெரியும் வரை இணைந்திருக்கிறேன். :)

எழுத்துப்பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்களிடம் எழுத்தாற்றல் உண்டு. எனவே இதனுடன் நின்று விடாமல் இன்னும் பல கதைகள் எழுதுங்கள். அதற்கு என் வாழ்த்துகள். :)

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுபேஸ் .நன்றி காதல்

நீங்கள் இருவரும் மிகவும் சிறந்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.என்னைப்பாராட்டியது ஆச்சரியமாகவுள்ளது.

நானும் கதை எழுதுகிறேன் பேர்வழியில்தொடங்கி விழி பிதுங்கி நிற்கிறேன்.முடித்தாகவேண்டும்.

Edited by anni lingam

நன்றி சுபேஸ் .நன்றி காதல்

நீங்கள் இருவரும் மிகவும் சிறந்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.என்னைப்பாராட்டியது ஆச்சரியமாகவுள்ளது.

காதலில் விற்றுத்தீர்ந்த காதல் கதை தொடர்ச்சியாக படித்திருக்கிறேன்.நன்றாகப்போகிறது.இவ்வளவு விரைவாக உங்களால் எப்படித்தான் எழுத முடிகிறதோ?

நானும் கதை எழுதுகிறேன் பேர்வழியில்தொடங்கி விழி பிதுங்கி நிற்கிறேன்.முடித்தாகவேண்டும்.

என்ன................. விற்றுத் தீர்த காதல் கதையின் கதாசிரியர்கள் இவர்களா ?? முருகா எங்கை போய் முட்டுவன் . ஐயோ கவிதை எங்கை ராசா போட்டியள் ? தாங்கேலாமல் கிடக்கு .....

Edited by கோமகன்

அன்னி லிங்கம், உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது.

சொந்தக்கதை தான் போல் இருக்கிறது - உணர்ச்சிகளின் வேகம் கதையில் தொனிக்கிறது.

சொந்தக்கதை இல்லாவிட்டால், எழுத்தாளராக, மேலும் வெற்றி தான்.

என்ன................. விற்றுத் தீர்த காதல் கதையின் கதாசிரியர்கள் இவர்களா ?? முருகா எங்கை போய் முட்டுவன் . ஐயோ கவிதை எங்கை ராசா போட்டியள் ? தாங்கேலாமல் கிடக்கு .....

அடிக்கடி முருகாவைக் கூப்பிட்டால் பாவம் அவர் என்ன செய்வார்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் கோமகன் மற்றும் கவிதை. நானும் சிலவேளைகளில் கீறில் இருந்ததால் வந்த தவறாக இருக்கலாம். மற்றப்படி கவிதை காதலாகியது.தவறுதான்.

இனிமேல் வாசிக்கும் போதுகவனமாக இருக்கிறேன்.(கீறுஇல்லாமல்) கவிதை மன்னித்துக்கொள்ளுங்கள்.

நன்றி ஈஸ் சொந்தக் கதை சோகக்கதை .அதுவல்ல இது

நன்றி சுபேஸ் .நன்றி காதல்

நீங்கள் இருவரும் மிகவும் சிறந்த எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.என்னைப்பாராட்டியது ஆச்சரியமாகவுள்ளது.

காதலில் விற்றுத்தீர்ந்த காதல் கதை தொடர்ச்சியாக படித்திருக்கிறேன்.நன்றாகப்போகிறது.இவ்வளவு விரைவாக உங்களால் எப்படித்தான் எழுத முடிகிறதோ?

நானும் கதை எழுதுகிறேன் பேர்வழியில்தொடங்கி விழி பிதுங்கி நிற்கிறேன்.முடித்தாகவேண்டும்.

:lol: :lol: :lol: :lol:

அண்ணா, எனக்கு கவிதை, கதை எழுத வராதென்று தான் பாட்டு திரியோட பொழுது போக்கிக்கொண்டிருக்கிறன். :lol: என்னைப்போய் கவிதை அண்ணா என்று நினைத்து விட்டீர்கள். :lol:

ஆனால் சுபேஸ் அண்ணா கவிதை, கதை எழுதுவதில் வல்லவர். :)

என்ன................. விற்றுத் தீர்த காதல் கதையின் கதாசிரியர்கள் இவர்களா ?? முருகா எங்கை போய் முட்டுவன் . ஐயோ கவிதை எங்கை ராசா போட்டியள் ? தாங்கேலாமல் கிடக்கு .....

நன்றி கோமகன் அண்ணா, அன்னி லிங்கம் அண்ணாவுக்கு சுட்டிக்காட்டியமைக்கு. :)

மன்னிக்க வேண்டும் கோமகன் மற்றும் கவிதை. நானும் சிலவேளைகளில் கீறில் இருந்ததால் வந்த தவறாக இருக்கலாம். மற்றப்படி கவிதை காதலாகியது.தவறுதான்.

இனிமேல் வாசிக்கும் போதுகவனமாக இருக்கிறேன்.(கீறுஇல்லாமல்) கவிதை மன்னித்துக்கொள்ளுங்கள்.

இப்பவாவது புரிந்து கொண்டீர்களே. நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன................. விற்றுத் தீர்த காதல் [size=6]கதையின் கதாசிரியர்கள் [/size]இவர்களா ?? முருகா எங்கை போய் முட்டுவன் . ஐயோ கவிதை எங்கை ராசா போட்டியள் ? தாங்கேலாமல் கிடக்கு .....

அண்ணை கதையின் கதாசிரியர்கள் எண்டுபோட்டதுகூடப் பறுவாயில்லை ஆனால் எடிற்பண்ண முன்னம் காலமை கதையின் காதாநாயகர்கள் எண்டு போட்டியளே...விடியக்காலமையே எனக்கு எலக்றிக்சாக் குடுத்திட்டியள்... :o:lol: :lol:

Edited by சுபேஸ்

அண்ணை கதையின் கதாசிரியர்கள் எண்டுபோட்டதுகூடப் பறுவாயில்லை ஆனால் எடிற்பண்ண முன்னம் காலமை கதையின் காதாநாயகர்கள் எண்டு போட்டியளே...விடியக்காலமையே எனக்கு எலக்றிக்சாக் குடுத்திட்டியள்... :o:lol: :lol:

:o :o :( :( :(

எல்லாரும் வேணுமென்று பிழை விடினம் அண்ணா. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் நான் வேணுமென்று பிழை விடவில்லை.

அது தவறுதலாக நடந்து விட்டது.

நீங்கள் இணைத்த நான் வாசித்த சிறு ஜோக்ஸ் பகுதியில்

நானும் எதோ இணைக்க உங்களிடம் இந்தமாதிரி ஜோக்ஸ் இங்கு வேண்டாம்.என வந்த விமர்சனத்தால் நான் என்னை திருத்திக் கொள்ள முடிந்தது.நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.