Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை பாஜக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

Featured Replies

மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாஜகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து

கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட பாஜகவின் தேசிய செயலர் முரளிதரராவ், இலங்கை தமிழர் விவகாரம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜும் விளக்கிக் கூறவுள்ளனர் என்று தெரிவித்தார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கட்சியின் மூத்ததலைவர் அத்வானி ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், பாஜகவின் நிலை குறித்தும் எடுத்துக் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் தேசிய செயலர் முரளிதரராவ் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9865%3A2012-05-10-04-42-15&catid=99%3Aindian-news&Itemid=462

என்ன முக்கிய தீர்மானங்கள்?

(1) இலங்கை முழுவதும் தமிழருக்கு சொந்தமானது - வந்தேறு குடிகளான சிங்களவர்கள் ஆட்சியுரிமை அற்றவர்கள்

(2) தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களக் காட்டுமிராண்டி அரசை - உடனடியாக பயங்கரவாத அரசு என்றழைக்க வேண்டும்!

(3) கனடாவை விட அதிகமான சமஸ்டி உரிமைகள் அடங்கிய தீர்வை 3 மாதங்களில் வழங்காவிட்டால் - 3 மாதங்களின் முடிவில் சர்வதேச ராணுவத்தை அனுப்பி தமிழீழம் பிரகடனப் படுத்த வேண்டும்.

(4) அனைத்து பௌத்த விகாரைகளும் இடிக்கப்பட்டு சிவாலயங்களும், சர்ச்சுக்களும் மட்டும் நிர்மாணிக்க வேண்டும்.

(5) ஈழத்தமிழரை படுகொலை செய்ய உதவிய காரணத்துக்காக - பாதிக்கபட்ட ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் ஹிந்தியா நட்டஈடு வழங்க வேண்டும்

இவ்வாறான உருப்படியான தீர்மானங்களை எடுக்கவில்லை என்றால் இவர்களும் தமிழகத்திலிருந்து முற்றாக துரத்தியடிக்கப்பட வேண்டியவர்களே!

இலங்கைக்கு சுற்றுலா சென்று, தமிழினப் படுகொலைகளை செய்த சிங்களப் பயங்கரவாதி மகிந்தவிடம் கைநிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்த சுஷ்மா மதுரையில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஊது குழலாக செயற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சிங்களப் பயங்கரவாதிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் ஒருசில தமிழ் மக்களையும், இந்திய - சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகளான டக்லஸ் - சம்பந்தன் - சுமந்திரன் போன்றவர்களை சந்தித்த சுஷ்மா தமிழ் மக்கள் தனிஈழம் கேட்கவேயில்லை என்று வாய் கூசாமல் பச்சைப் பொய் கூறி தனது தமிழின விரோத ஹிந்தி வெறியைக் காட்டியுள்ளார்.

மதுரையில் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கிய சுஷ்மா - தமிழர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையைக் கூட உருப்படியாக கோடிட்டுக் காட்டவில்லை எனத் தெரிகிறது.

ஜனநாயக வேடம் போட்டு உலகை ஏமாற்றும் இந்திய அரச காட்டுமிரண்டிகளும் சுஷ்மா போன்ற ஹிந்தி வெறியர்களும், தைரியம் இருந்தால் சிங்கள ராணுவ - அரச பயங்கரவாதிகளை வட - கிழக்கிலிருந்து முற்றாக அகற்றிவிட்டு, முழுமையான சுதந்திர சூழலில், அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் இணைத்து தமிழ் ஈழம் வேண்டுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடாத்தட்டும். அப்போது உண்மை தெரியும்!

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லையாம் – மதுரை மாநாட்டில் சுஸ்மா சுவராஜ்

தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, சிறிலங்காவைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியுமான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜகவின் மாநில மாநாட்டில் உரையாற்றிய அவர், தனது சிறிலங்கா பயணம் குறித்து விளக்கமளித்தார்.

“சமீபத்தில் எனது தலைமையில் சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் நிலை குறித்து அறிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் குழு ஒன்று சென்றது.

சிறிலங்கா செல்வதற்கு முன்பே, நாங்கள் சொல்லும் இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம்.

அங்கு முகாம்களிலுள்ள தமிழர்கள் எங்களிடம் தங்களது துன்பங்களை எடுத்துக் கூறினர்.

சிறிலங்கா தமிழர்கள் உணர்வுகள், தமிழ்நாட்டினது உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வு என்று நாம் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடம் தெரிவித்தோம்.

தமிழர் சகோதரர்களுக்கு சிறிலங்காவில் உண்மையான அரசியல்தீர்வு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

சிறிலங்காவில் போர் குறித்து ஆய்வு செய்ய சிறிலங்கா அரசு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்க மறுப்பது ஏன் என ராஜபக்சவிடம் கேட்டோம்.

சிறிலங்கா நாடாளுமன்றக் குழு அமைத்து, ஏன் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடாது என அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

இந்த முறையிலான தீர்வுக்கு ஏன் முயற்சிக்கக் கூடாது என தமிழர் பிரதிநிதிகளிடமும் தெரிவித்தோம்.

தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, சிறிலங்காவில் பிளவை உண்டாக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை.

ஒன்றுபட்ட சிறிலங்காவில் தமிழர்களுக்கு தனியான அரசியல் தீர்வு வேண்டும் என்றே கேட்கின்றனர்.

நாங்கள் சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்றதாகவும், சிறிலங்கா அதிபரிடம் கைநிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்ததாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அது எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் சொல்வது தவறானது.

நான் இந்திய அரசு சார்பில் சென்றதால், மரியாதை நிமித்தமாக ராஜபக்ச பரிசளித்தார்.

அந்தப் பரிசை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை.

இந்திய அரசு சார்பில் சென்றதால், எனக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசை, நாடாளுமன்ற கருவூலத்தில் ஒப்படைத்து விட்டேன்.

சிறிலங்காவுக்கு நான் சென்ற பயணத்தின் நோக்கத்தை உண்மையாக நிறைவேற்றி விட்டேன்“ என்று சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.

இவர் தனியே சிறிலங்கா பயணம் குறித்தே உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஈழம் பிரஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உவை எல்லாம் இப்ப முக்கிய உரை என்று.. ஏன் முக்கினம்.. என்றால்.. தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டில் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தவே.

ஈழத்தில்.. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த போதும்.. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்ட போதும்.. இன்று சிங்கள பெளத்த மயமாக்கம் நடக்கின்ற போதும்.. இவர்கள் ஒன்றுமே முக்கல்லையே.. ஏன்..???! :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

<p>

உவை எல்லாம் இப்ப முக்கிய உரை என்று.. ஏன் முக்கினம்.. என்றால்.. தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு நிலைபாட்டில் தங்கள் வாக்கு வங்கியை உயர்த்தவே.

ஈழத்தில்.. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த போதும்.. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்ட போதும்.. இன்று சிங்கள பெளத்த மயமாக்கம் நடக்கின்ற போதும்.. இவர்கள் ஒன்றுமே முக்கல்லையே.. ஏன்..???! :rolleyes::icon_idea:

ஒன்றுபட்ட சிறிலங்காவில் தமிழர்களுக்கு தனியான அரசியல் தீர்வு வேண்டும் என்றே கேட்கின்றனர்.இப்படி முக்கியாவது இவர்கள் இதை எடுத்து கொடுக்கினமோ பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.