Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று இரசித்த சாந்தி அக்காவின் பழைய கவிதைகள் சில...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சாந்தி அக்காவின் பழைய புளொக் ஒன்றைப் பார்த்தேன்...2006 ஆம் ஆண்டின் பின்னர் எந்த அப்டேற்றும் அங்கு இல்லை...சாந்தி அக்காவுக்கே இந்த புளொக் நினைவு இருக்கோ தெரியலை...ஆனால் அழகான கவிதைகள் பலவற்றை அங்கு கண்டெடுத்தேன்....இவை சாதாரணமாக எழுதப்பட்டவையாக தெரியலை..ஏதோ ஒரு வலியை எழுதித் தீர்க்க எழுதப்பட்டவையாக தெரிகின்றன....அவற்றில் இருந்து எனக்கு மிகப் பிடித்த சில கவிதைகளை உங்களுக்காக இணைக்கிறேன்....

இப்படியே !

உன்னை மறந்து

நெடுநாளாயிற்று.

என் நினைவுகளிலிருந்து - நீ

இன்னமும் விடுபடாமல்.....!

உன் பெயரைக்க கேட்டால்

அல்லது யாராவது

உன் பெயரில் இருந்தால்

நான் நானாயில்லை.....

உன்னை உடன் பார்க்க

வேண்டும் போல்....

பேசவேண்டும் போல்.....,

ஆயிரம் அதிர்வுகள்

மனசை அலைக்கழித்து

எதிலும் ஒட்டாத உணர்வுகள்

உயிரெங்கும் அலையடிக்கும்....

ஏன் நாம் பிரிந்தோம்....?

எதற்காய் எம்மை மறப்பதாய்

எமக்குள் சுவர் எழுப்பினோம்.....?

இன்றுவரை

கேள்விகளாயே தொடர்கிறது.

மௌனமாய்

மனசைக் கொன்று விட்டு

புனிதம் அது இது வென்று

புதுக்கதைகள்.

எதுவாயினும் நாங்கள்

இழந்து விட்டோம்.

இணைவோம் என்பது பொய்.

இனிமேலும் அப்படியே.....

என்ன செய்வோம்.....?

இப்படியே இருப்பதே

இருவருக்கும் சுபமாகும்.

இல்லையேல்

என் வீடும் உன் வீடும்

இழவு வீடாய் ஆகிவிடும்

எப்படித்தான்...?

நீண்ட நாளின் பின்னான

இந்த இரவு

எங்களுக்காய்

தனிமையில் காய்கிறது.

வழமைபோல் இந்த இரவும்

அரசியல்,சமூகம், ஆணாதிக்கம்;...

பெண்ணியம்...,

அப்படித்தானே ஆரம்பித்தோம்.

யாருக்காகவோ நாங்களே

எங்கள் மனங்களை

சுட்டுக் கொள்ளும் வழமை

இன்றும் என்றையும் போல....

எத்தனையோ கவனமாய்

எடுத்து வந்த வார்த்தைகள்...

எப்படித்தான்....?

'மௌனக்கண்ணீர்" வடித்து

எங்கள் மனங்களைச்

சிதைக்கும் மகத்துவம் கற்றதோ....?

27.08.04.

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்

ஒரு மாலைநேர

ஈரக்காற்றின் உவர்ப்போடு

அழுததாய் ஞாபகம்.

தாஜ்மகால் பற்றியும்

தலைசிறந்த

காதல் இலக்கியம் தந்த

ஜிப்ரான் பற்றியும்

நிறையவே பகிர்தல்கள்.

ஒரு தாஜ்மகால்

ஒரு முறிந்த சிறகு

எங்களுக்காயும் எழுதப்படுமெனும்

எண்ணமேயில்லை

கௌரவப் பிரிதலாய் அது

நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது.

என்றாவது நினைவு வரும்

சிறுவயது ஞாபகம் போல்

எப்போதாவது வந்துபோகும்

ஞாபகங்களுடன் இன்றும்....

காதலென்ற சொல்லுக்காய்

செய்து கொண்ட சத்தியங்கள்

நினைவு இடுக்குகளிலிருந்து

கழன்று விழுகிறது.

சத்தியம் சபதம்

சாத்தியமில்லாக் கனவுகள்

எல்லா மனசிலும்

காதலின் வலி உணர்வாயும்

நினைவாயும் நிசம் உணர

மனம் மறுத்து

நடிப்புகள் மேலாக....

12.03.05

எதிர்காலக்கனவுகளில்....!

எனக்காய் உனக்காய்

எங்களது மண் ஒழுங்கைகள்

மரத்தடி நிழல்கள்

கோவில் வீதிகள்

எங்கள் வீட்டு வாசல்கள்

எங்கும் நானுமாய் நீயுமாய்....

14 வருடங்கள் பறந்து போயிற்று....

அம்மா என்றென் மடியில்

ஆணுமாய்...பெண்ணுமாய்....

அழகான சித்திரங்கள்....

அதுபோல் உனக்கும்

அடுத்தடுத்து மூன்று

அழகான ஓவியங்கள்.....

அடியே என்னவளே !

அடிக்கடி உயிர் வருடும்

என்னவனின் மூச்சுக்குள்

சுவாசமாய் நிறைந்திருக்கும்

என் உயிருக்குள் கலந்திருக்கும் - உன்

நினைவை மறக்கவா முடியும்....?

கடந்து போன நாளிகைகள்

நினைவுகளில் நனைந்தபடி....

இழந்து போன வசந்தங்களில்

இதயத்தைத் தொலைத்தபடி....

இருவருக்குள்ளும் ஒருகோடி

எண்ணச் சிதறல்கள்.

இருவரையும் சுமந்தோடிய

எனது லுமாலாவும்

உனது ஏசியாவும்....

உன் வீட்டு மரநிழலிலும்

என் வீட்டு வேலியோரத்திலும்

எத்தனை பொழுதுகள்....!

ஒழிக்க மறைக்க

எதுவும் இருந்ததில்லை.

இருவருக்குள்ளும் இருந்த

எங்கள் உயிர் வேரின்

நேசத்து வாசமாய்....

நானும் நீயும் கொண்ட

நட்பின் ஆழம் யாரறிவார்....?

ஊர் கண்ணில் நானும் நீயும்

உறுத்தல்களாய் போனபோது

உனக்கு நானும் எனக்கு நீயுமே

ஒத்தடங்களாயிருந்தோம்....

உன் அம்மா...

சொல்லத் தேவையில்லை

உன் மீதீருந்த நம்பிக்கையில்

எதுவுமே கதைக்கமாட்டார்.

என் வீடு எல்லாவற்றிற்கும் எதிர்மாறு

அந்தக் கணங்களிலெல்லாம் - என்

ஆன்மத் துடிப்பாயிருந்தவள் நீ.

பருவ வயதடைந்த எங்களுக்கு

பட்டுடுத்திச் சடங்குசெய்த

பெற்றவர்கள் பூரிப்பில்

பலியாகிப் போய்விடுவோம்

என்றா அறிந்திருந்தோம்....?

பழகிப்போன விழிகளுக்குள்

நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?

பருவத்துக் கிறுக்கில் - எம்

பின்னால் அலைந்த சைக்கிள்களை

யார் அழைத்தோம் வாவென்று.....?

நீயுமில்லை....நானுமில்லை....

நம்மைப் பெரிதாக்கி நடந்த சடங்கென்று

இன்று சொன்னாலும்

ஒருவரும் நம்பமாட்டார்....!

பின்னலைந்த விழிப்பார்வைகட்கு

பெரும் தேவதைகள் நாங்களாய்

ஏன் தெரிந்து தொலைந்தோமோ....?

என்னும் தான் புரியவில்லை....

காதல் சொல்லி வந்தவரின்

கண்களையே மறந்து விட்டோம்.

பின் அவர் காதலியர் நாமாக

எப்படி இடம் பிடித்தோம்....?

எங்களுக்குள் ஒவ்வொருவர்

இருந்தார்கள் மறுக்கவில்லை - பின்

இவர்களை யார் நினைத்திருந்தோம்....?

என்னையும் உன்னையும் பிரித்துப்போட்ட

கொடுவிழிகள் பார்வையிலே இடிவீழ....

விதியென்று சொல்லிவிட்டு

விலகிப் போனோம் - நம்

வாழ்வென்ன நீளமென்று

திரும்பிப் பார்க்க மறந்து போனோம்.

தொலைந்தது கல்வி

கலைந்தது நம் நிம்மதி

காலம் இட்ட கட்டளையை

ஏற்கக்கூட மறந்து போய்

நான் புலம் பெயர

நீ ஊரோடு அழிந்து போனோம்

எங்கள் ஆசைக் கனவெல்லாம்

உடைந்து போக

பொசுங்கிப் போகிறது நினைவுகள்....

வருடங்களை விழுங்கிய

காலம் விரைகிறது தன் வழியில்....

நாங்கள் தவறவிட்ட காலம்

இறந்த காலமாய் எழுதப்பட்டாயிற்று....

தொலைந்த எங்கள் நாட்களின் நினைவுகள்

நெஞ்சின் அடிவேரில்....

நீயும் நானும் வாலிபம் கருகி

எங்கள் வாரிசுகளின்

எதிர்காலக் கனவுகளில்....

18.08.04.

http://uyirvaasam.blogspot.com

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் நினைவுகளோடு.....!

என் சுவாச அறைகளின்

சுழற்சியாய் இருந்தவளே !

காதல் வார்த்தையையே

கௌரவப்படுத்திய கற்பூரமே.

கடைசியாய் நீ தந்த கடிதம்

என்றோ நீ சொன்னது போல

கைகூடாத காதலின் சாட்சியாக....

உனது கண்ணீர் முழுவதையும்

கட்டியனுப்பிய கடலது.

கட்டுநாயக்கா நான் தாண்ட

நஞ்சு தின்ற என் காதலியே !

எங்கேயடி இருக்கிறாய் ?

கசங்கிய உன்

கடைசிக் கடிதத்துடன்....

கண்ணீரைத் துடைத்தபடி நான்....

முதற் காதல் - நீ

தந்த முத்து(த)க்

கையெழுத்துக்கள்

இன்னும் விரல்களில்....

வாசமடிக்கிறது.

கூடப்பிறந்தவர்க்கும் ,

உன்னைக் காதலிக்க

உயிர் தந்தவர்க்கும்

அர்ப்பணமாய் என் காதல்.

அம்மாவிடம் உன்னைப்பற்றி விசாரித்தேன்.

நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.

கனவெல்லாம் என்னை நிரப்பி

உன் வாழ்வையே தறித்து

எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த

ஒவ்வொரு கணங்களும்

நினைவுக் காப்பகத்தில்

கௌரவமாக - நான்

இன்னொருத்தியின் கணவனாக.....

உன் நினைவுகளோடு.....!

http://uyirvaasam.blogspot.com

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பழையவற்றைத் தேடித் தரும், சுபேசுக்கு நன்றிகள்!

இந்தக் கவிதைகளில் இருந்து, ஒரு உண்மை தெரிகின்றது!

ஒரு கவிஞனின் (கவிதாயினியின்) கவிதைகள், அவனது (அவளது) அந்த நேரத்து உணர்வுகளின் காலக் கண்ணாடிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் இருந்து சாந்தி அக்காவின் கவிதைகள்.. ரெம்பப் பிடிக்கும். நல்ல அக்காவும் கூட..!

ஆனால் இப்ப எல்லாம்... முள்ளிவாய்க்காலோடு.. பேயடிச்ச மாதிரி.. ஆகிட்டா...! ஒரே இரத்தக் கொதிப்போட இருக்கிறா..! கதைக்க ஏலாது.. கருத்துக்கு முதல் கோபம் தான் சுர் என்று முன்னுக்கு வருது..! இருந்தாலும் பழைய காலம்.. இனிமையானது என்பதற்கு இந்த கவிதைகள் சான்று.

நன்றி சுபேஸ்... பகிர்ந்து கொண்டமைக்கு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை அண்ணா,நெடுக்ஸ்... :) அது ஒரு அழகிய காலம்தான் நெடுக்ஸ், அப்பெல்லாம் நான் யாழில் எழுதுவதில்லை வாசிப்புடன் நின்றுவிடுவேன்... அப்பொழுதெல்லாம் யாழில் கவிதை எழுதுபவர்களில் சாகாறா அக்காவும்,சாந்தி அக்காவும் போட்டி போட்டு அழகாக எழுதுவார்கள்....சகாறா அக்கா,சாந்தி அக்காவின் கவிதைகளை யாழில் வாசித்தபின்தான் கவிதைகளின் மேல் ஏற்பட்ட காதலால் நானும் யாழில் எழுதத்தொடங்கினேன்....

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு கவிதையொன்று தேடிக்கொண்டு போக சுபேஸ் பகிர்ந்த எனது கவிதைகள் காணக்கிடைத்தது. மறந்து போன கவிதையை தேடித்தந்த சுபேசுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி எப்பவும் பாசாங்கில்லாத ஆழுமை. அது அவரது அழகிய தன்னுணர்வுக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. 

எங்கள் இளமையை மீண்டும் வாழ ஒரு வெளி அவரது கவிதைகளுக்குள் விரிகிறது. அவரது கவிதைதொகுதியை வெளியிடும் பணிக்கு என் ஆதரவும்

விதியென்று சொல்லிவிட்டு
விலகிப் போனோம் - நம்
வாழ்வென்ன நீளமென்று
திரும்பிப் பார்க்க மறந்து போனோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் ஆளுமை கதை பேசிச் செல்கிறது.மிக அருமை சாந்தி.

 ஆளுமைக்கவிதை (சாந்தி அக்கா)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை எழுதிய சாந்தி அவர்களுக்கும்
அவற்றைத் தேடி இணைத்த சுபேஸிற்கும் நன்றிகள்
அருமையான கவிதைகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்காவின் சிறுகதைகள் மற்றும் யாழில் எழுதும் விடையங்களை பார்த்திருக்கிறன்..இன்று தான் கவிதையைக் கண்டேன்...அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்கி தொடர்ந்து எழுதலாம் தானே சாந்தியக்கா..என் அன்பு வேண்டுகோள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.