Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளின் தற்கொலைகள் எதனால்?

Featured Replies

கொடுமையான முறையில் நடத்தப்பட்ட போர் ஏற்படுத்திய ஆறாதவடு நம்முடைய சமூகத்தை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து நடக்கின்றன.

போரால் ஏற்பட்ட வறுமை மாத்திரம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணமா? என்பது முக்கிய கேள்வியாக இங்கு எழுகிறது. அதனைத் தாண்டியும் போர் ஏற்படுத்திய வடுக்கள் பல்வேறு நிலையில் தற்கொலை செய்யத் தூண்டுவதை கண்கூடாக காண முடிகின்றது.

Thatkolai_CI-300x225.jpgஅண்மையில் வடமராட்சி கிழக்கில் சுகந்தி சிவலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனைப்போலவே அண்மையில் யாழ் பல்லைக்கழக மாணவி பவுசியா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். போர் தந்த ஆறாதவடுவும் போருக்குப் பிந்தைய வாழ்வுக் கட்டமைப்புமே இந்தக் தற்கொலைகளின் அடிப்படையான காரணங்களாக அமைகின்றன என்றே பெரும்பாலான தற்கொலைகளிலிருந்து தெரியவருகின்றன.

பவுசியாவைப் பொறுத்தவரையில் அவர் இருப்பதற்கு இடமும், அன்புக்கு ஆதரவும் தேடியிருக்கிறார் என்று அவரது நண்பர்கள் சொல்லுகிறார்கள். அன்பைக் கொடுக்க முடியாத சமூகம் அவர் விரும்பும் ஆறுதலான இடத்தையும் கொடுக்க மறுத்திருக்கிறது. போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அன்பையும், ஆறுதலையும் சுமையற்ற கல்வியையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ் பல்கைலக்கழகத்தைப் பொறுத்தவரை பவுசியாவின் தற்கொலை வரையில் அண்மைக் காலமாக பல்வேறு தற்கொலைகள் நடந்தேறியிருக்கின்றன. இவை போரின் காரணமாகவும் நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினாலும் நிகழ்ந்துள்ளன. இந்த தற்கொலைகள் தொடர்பில் அவற்றை தடுத்து நிறுத்தும் பொறிமுறை எதனையும் பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் கொண்டு வரவில்லை என்பதையே தொடர் தற்கொலைகள் உணர்த்துகின்றன.

போர் தமிழ் மக்களின் சொத்துக்களையும் வளங்களையும் தொழிலையும் அழித்துவிட்டது. முன்னாள் போராளிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் பல பத்தாண்டுகளாக ஆயுதப் போராட்டத்துடன் இருந்தவர்கள். ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமது வாழ்வை தனித்தனியாக ஆரம்பிக்கையில் அவர்களுக்கு சொத்தில்லை. அவர்களுக்கு கல்வியில்லை. அவர்களுக்கு உழைப்பில்லை. அவர்களது கல்வி போராவும், சொத்து துப்பாக்கிகளாகவும் இருந்துள்ளன. தனிமையும், வெறுமையும், அடிப்படையின்மையும் தங்களை மிகவும் பாதிப்பதாக முன்னாள் போராளிகள் சொல்லுகின்றனர்.

தற்கொலைகளுக்கு வறுமை மட்டும் காரணம் என்று சொல்லிவிட இயலாது. அநீதிக்கு எதிராக போராடிய, தமது சமூகத்திற்காக போராடிய போராளிகள் இன்று இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்தேறும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கையறு அரசியல் சூழ்நிலையும் மனதை மிகவும் பாதிக்கிறது. போருக்குப் பிந்தைய ஈழத்தில் இனப்பிரச்சினை தொடர்ந்து அடங்காத வகையில் கொந்தளித்தக் கொண்டிருக்கிறது. பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளாக உருப்பெறுகின்றன.

போரால் ஏற்பட்ட காயங்களை இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று வெளிக்காயம். மற்றையது உள்காயம். முன்னாள் போராளிகளில் பலர் கால்களை, கைகளை, கண்களை இழந்து உடலெங்கும் காயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டம் இருந்த வரையில் விடுதலைப் புலிகள் இருந்த வரையில் இவை போராட்டத்தின் அடையாளங்களாகவும் வீரத் தழும்புகளாகவும் இருந்தன. இப்பொழுது இவை ஆபத்தை தரும் காயங்களாகிவிட்ட சூழலில் வாழ்கின்றனர்.

உள் காயங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் மேலும் மேலும் கிளறிவிடப்படுகின்றன. குறிப்பாக முன்னாள் போராளிகளை ஆபத்து பொருந்தியவர்களாக பார்ப்பதனாலும், மக்களுக்காக போராடி ஏதுவுமற்று தனித்துப் போன நிலையில் இந்தக் காயங்கள் இன்னும் இன்னும் சிதலூறும் காயமாகிறது. அழுத்தத்தால் காயம்பட்ட மனம் வீங்குகிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திருவிழியும், விக்டரும் தமது உடலில் ஏற்பட்ட யுத்தக் காயம் காரணமாக இனி வாழமுடியாது என்ற மனக்காயத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்தார்கள்.

போர் ஏற்படுத்தும் இந்தக் காரணிகள் எல்லாமே முக்கியமாக பெண் போராளிகளை அதிகமாக பாதிக்கின்றது. போராளிகள் என்ற அடையாளத்தை விடுத்து சமூகத்திற்குள் நுழையும் பொழுது தொழில், திருமணம் முதலிய தேவைகள் அல்லது செயற்பாடுகள் பெண் போராளிகளின் வாழ்க்கையை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நாற்பது வயதை அடைந்த முன்னாள் பெண் போராளியின் எதிர்காலம் என்ன? தொழில் என்ன? இன்றைய கால கட்டத்தில் வாழும் பொழுது இந்தக் காரணங்கள் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன. எனவே தற்கொலை செய்யத் தூண்டும் இந்தக் காரணிகளை யார் தீர்பபது? எப்படி சரி செய்வது?

முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளையும் போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பிரச்சினைகளையும் பெண்களின் பிரச்சினைகளையும் கணவனை இழந்த பெண்களின் பிரச்சினைகளையும் கவனிப்பதைவிடவும் தமது அரசியல் மற்றும் கட்சி விடயங்களில் அதிக கவனத்தை செல்லும் நிலையில் எம்முடைய பிரதிநிதிகள் உள்ளனர். கட்சிக்காகவும் அரசியலுக்காகவும் சில இடங்களில் செய்யும் சிறிய உதவிகளை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்தப் பிரச்சினையும் தீர்ந்து விட்டதாக ஊடககங்களில் காட்டுகின்றனர்.

வன்னி மக்களோ போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடற்று, உறவற்று, தொழிலற்று, பாதுகாப்பற்று வாழ்க்கையில் மக்களை அரசியலுக்காக பாவிப்பவர்களோ அணி அணியாகக் குவிந்து விட்டனர். நாமல் ராஜபக்சவிலிருந்து சிறிரங்கா வரை வன்னிக்கு வந்து விட்டார்கள். எல்லோரிடமும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை கொள்ளையடிக்கும் ஒரே ஒரு நிகழ்ச்சித் திட்டம் மட்டுமே உள்ளது. இதனால் போருக்குப் பிந்தைய மக்களின் மனத் தேற்றுதல்களுக்கு சந்தர்ப்பமே இல்லாமல் வன்னிப் பெருநிலமோ அரசியல் ஆடுகளமாகியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் மீள உயிர்த்தெழுவதற்கு ஆற்றுப்படுத்தல்களும் நலன் உதவிகளுமே தேவைப்படுகின்றன. இதற்காக பேரினவாத அரசியல் செய்து தொடர்ந்தும் தமிழ் மக்களை கொந்தளிப்புக்குள் தள்ளும் ராஜபக்சேவை எதிர்பார்க்க முடியாது. புலம்பெயர்ந்த உறவுகளும் தொண்டு நிறுவனங்களும் போரல் பாதிக்கப்பட்ட மக்களினதும் மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகளினதும் காயங்களை ஆற்றினால்தான் போர் நோவடித்த மக்கள் துளரிக்க முடியும்.

முக்கியமாக வறுமை மட்டுமே காரணம் என்று குறிப்பிடும் நிலையை மாற்றி போரால் பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளையும் பெண்களையும் கணவனை இழந்தவர்களையும் சிறுவர்களையும் புரிந்து கொண்டு ஆற்றுப்படுத்துவது ஒவ்வொரு ஈழத் தமிழரினதும் மாபெரும் கடமையாகிறது. தமிழ் இனத்தின் உயிர்பலியைத் தடுத்து இனத்தை காக்கக் கூடிய முக்கிய வழிமுறையுமாகிறது.

நன்றி- குளோபல் தமிழ்ச் செய்தி. திருவிழி

http://www.ilankathir.com/?p=6846

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமுதாயம் அவர்களை ஒதுக்கி வைத்ததனால்,அன்பும்,ஆதரவும் கிடைக்காததால்,தகுந்த பொருளாதார உதவிகள் தகுதியானவருக்கு,சரியான நேரத்தில் கிடைக்காததால் தான் தற்கொலைகள் நிகழுகின்றன.

ஆயுதம் தூக்கியதால் படிப்பறிவு, தொழிலறிவு அவர்களுக்கு தெரியாது. போராளிகளின் புனர்வாழ்வு பற்றி பாராமுகமாக இருக்கும் (முக்கியமாக புலம்பெயர்ந்த - காசு சேர்த்த கள்ளர்களால்) இந்த இனத்தின் விடுதலைக்காய், இன்னுமொருத்தி / ஒருவன் தன் வாழ்வை இழக்க முன் வரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வித்தியாசமான சூழல்

எல்லாமே அந்நியம்

எமது மண் இல்லை

எமது தலைமை இல்லை

எமது பாதுகாப்பு இல்லை

எமது கலாச்சாரம் இல்லை

எமது மொழி இல்லை

நாம்பார்த்த வளர்த்த வாழழ்ந்த எதுவுமே இன்றில்லைல.

ஆனால்

நாம் எதிர்த்தவை எம்முன்

நாம் போரிட்டவன் வழிகாட்டியாய் எம்முன்

நமக்கு ஏற்காத பழக்கவளக்கங்களுடன் எம்மக்கள் எம்முன்

எம்மை விரும்பாத எம்மைக்கண்டால் பயப்படும் சமூகம் எம்முன்...........??????

இந்த நிலையில் ஊரில் இருந்திருந்தால் நானும் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்

(முள்ளிவாக்காலுக்குப்பின் பலமுறை விபத்துக்ளிலிருந்தும் மன ஊளைச்சலல்களளீலிருந்தும் தப்பி நான் இங்கு வாழ்வதே ஆண்டவன் கிருபையால்தான்)

இப்போ நிலைமை வெகு மோசமாக இருந்தாலும் காலம் காலமாக எங்களுக்குள் அடக்குமுறை என்பது நன்கு வேரூன்றி புரையோடிப்போய் இருந்தது ,நாங்கள் சிறுவயதில் நாட்டை விட்டு வெளிக்கிட்டு விட்டோம் ஆனால் இப்போ சில நினைவுகள் மீட்கையில் ,கதைகள் வாசிக்கையில் எல்லாம் அப்படமாக விளங்குகின்றது ,

அடிக்கடி யாழ் சென்றுவரும் நண்பர் சொன்னார் வன்னியால் வந்தவர்களை யாழ்ப்பாணத்தான் சேர்க்கவே இல்லை என்று ,கேட்டால் இவர்களால் ஆமி தங்களுக்கும் பிரச்சனை தருவான் என்கின்றார்களாம்.

எல்லாம் கதையளவிலும்,எழுத்திலும்,பேச்சிலும் மட்டும்தான் நடைமுறையில் இல்லை .

முள்ளிவாய்காலுக்கு பின்னர் கூட ஒன்று சேராத இந்த இனம் ,அதை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் இனம் ,அவர்களுக்கு பின் இன்னமும் அள்ளுப்பட நினைக்கும் மொக்குகளும் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமற்றது போல் தான் தெரிகின்றது .

போரினால் உறவுகளின் இழப்பு, உடல் உறுப்புக்களின் இழப்பு, வாழ்வாதாரங்களின் இழப்பு.. இவை எல்லாத்தையும் இழந்தும் ஒரு விடிவு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் போராடிய எம் உறவுகள் போரின் பின்னால் சிங்களக் காடையரிடம் பிடிபட்டதனால் உடல் ரீதியான பாலியல் வதைகள், மானம் இழப்பு, வதை முகாமை விட்டு வெளியேறிய பின்பு இருக்கும் உறவுகளின், அயலவரின் பாராமுகம், தூற்றுதல்களால் தன்னம்பிக்கை இழப்பு.. போரின் போது இருந்த தாக்கத்தை விட போரின் பின்னல் உள்ள தாக்கமே கொடியது!

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகளுக்கு உதவுபவர்கள்,உதவி செய்ய எத்தனிப்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகள் வைத்திருப்பவர்களை இராணுவ புலனாய்வு பின் தொடர்கிறது என்ற பயப்பீதி மக்களிடம் பரவலாக நிகழ்கிறது.தொலைபேசி இங்கிருந்து எடுத்து பேசும்போதே மக்கள் இதைப்பற்றி பேச பயப்படுகிறார்கள்.இதனால் போராளிகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

reason for edit : spelling

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு பிடித்த விடுதலைக்கான வழி நம்பிக்கையான தலைமை ஒரே இலட்சியம் கொண்டமக்கள் ஒருவரைஒருவர் புரிந்துகொண்ட வாழ்க்கை எல்லாவற்றுடன் இருந்த முன்னாள் போராளிகளுக்கு இப்பொழுது எஞ்சியுள்ளது வெறும் ஏமாற்றமே ! அவர்கள் உயிரிலும் மேலாக நேசித்த விடுதலை அதனை பெறுவதற்கான எந்த வழிகளும் அற்ற நிலை,

வித்தியாசமான சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் இவைகளே அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டு சென்றது இதற்க்கு மேல் நீங்கள் குறிப்பிடும் காரணங்களான வாழ்வாதார பிரச்சனைகள் இவையே அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றது.

என்னும் சொல்லப்போனால் மனம் திறந்து பேசக்கூட நம்பிக்கையானவர்கள் யாரும் அற்ற நிலை இவைகளும் உள்ளடக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நிலைமை வெகு மோசமாக இருந்தாலும் காலம் காலமாக எங்களுக்குள் அடக்குமுறை என்பது நன்கு வேரூன்றி புரையோடிப்போய் இருந்தது ,நாங்கள் சிறுவயதில் நாட்டை விட்டு வெளிக்கிட்டு விட்டோம் ஆனால் இப்போ சில நினைவுகள் மீட்கையில் ,கதைகள் வாசிக்கையில் எல்லாம் அப்படமாக விளங்குகின்றது ,

அடிக்கடி யாழ் சென்றுவரும் நண்பர் சொன்னார் வன்னியால் வந்தவர்களை யாழ்ப்பாணத்தான் சேர்க்கவே இல்லை என்று ,கேட்டால் இவர்களால் ஆமி தங்களுக்கும் பிரச்சனை தருவான் என்கின்றார்களாம்.

எல்லாம் கதையளவிலும்,எழுத்திலும்,பேச்சிலும் மட்டும்தான் நடைமுறையில் இல்லை .

முள்ளிவாய்காலுக்கு பின்னர் கூட ஒன்று சேராத இந்த இனம் ,அதை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் இனம் ,அவர்களுக்கு பின் இன்னமும் அள்ளுப்பட நினைக்கும் மொக்குகளும் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமற்றது போல் தான் தெரிகின்றது .

யாழ்ப்பாணத்தானுக்கு முள்ளிவாய்க்கால் உண்மைச்சம்பவங்கள் புலம்பெயர்ந்தவன் சொல்லித்தான் தெரியவேண்டியுள்ளது? நிலைமை இப்படியிருக்க.....

புலம்பெயர்ந்த தமிழன்..............புலன் இழந்து மொக்குத்தனமாக வார்த்தைகளை வாரி வழங்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.