Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 – ஒரு முடிவும் மற்றொரு ஆரம்பமும்

Featured Replies

2002ல் பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், அவரது ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு அவர் செய்தது எல்லாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தை அவரது காலத்திலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகள்தான் 'புதினப்பலகை'க்காக - யதீந்திரா.

மே-18 என்பது தமிழ் அரசியல் சூழலில் புதியதொரு அத்தியாயத்தின் குறியீடாகும். ஏவ்வாறு செப்டம்பர்-11 என்பது உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறதோ அவ்வாறே மே-18என்பது தமிழர் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கின்றது. எனவே இந்த பின்புலத்தில் மே-18என்பது வெறுமனே ஒரு நினைவு நாளல்ல, அது ஒரு வராலாற்றுப் படிப்பினைக்கான அரசியல் சான்றாகும்.

மே-18ம் நாளுக்கும் செப்டம்பர்-11ம் நாளுக்கும் அடிப்படையில் ஒரு ஒற்றுமை உண்டு. செப்டம்பர்-11 என்பது. தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் அணிசேரக் காரணமாகியதொரு அரசியல் சம்பவம் ஆகும். ஓன்றில் நீங்கள் அவர்களுடான அல்லது எங்களுடனா, என்னும் அமெரிக்க பிரகடனம் தீவிரவாதத்திற்கான சாவு மணி ஓசையை எட்டுத்திக்கும் பரப்பியது.

ஆனால் மே-18, இன்றைய உலக ஒழுங்கில் ஆயுதரீதியான செயலில் மட்டும் நம்பிக்கை கொண்டிருக்கும் அமைப்புக்களின் முடிவை முரசறைந்தது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் தெளிவாக நோக்கினால்; ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அது – பிரபாகரனுக்காகவோ அல்லது யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்காகவோ உலகத்தில் எவரும் கவலைப்படவில்லை. கவலைப்படவும் மாட்டார்கள். ஏன் அவ்வாறு என்று கேட்பீர்களானால் - அதுதான் உலகம்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரையும், தமிழ் நாட்டில் உள்ள ஆதரவாளர்களையும் தவிர்த்து நோக்கினால் வேறு எவருக்கும் விடுதலைப் புலிகளின் அழிவு ஒரு விடயமல்ல. உலகத்தை பொறுத்தவரையில் தங்களது பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரு மிக முக்கியமான அமைப்பு இல்லாமல் போய்விட்டது.

இலங்கைக்கான ஜ.நாவின் பேச்சாளராக இருந்த, கோர்டன் வைசின் வார்த்தையில் சொல்வதானால் சந்தேகம் இல்லாமல் புலிகள் இல்லாத உலகம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. [undoubtedly, the world is a better place without the Tamil Tigers] இவ்வளவுதான் உலகத்தின் பார்வையில் புலிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம்.

ஆனால் உலகம் இத்தகையொரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கு பல வாய்ப்புக்களையும், மறைமுக செய்திகளையும் வழங்கியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தகைய செய்திகளையும் வாய்ப்புக்களையும் பிரபாகரன் பொருட்படுத்தியிருக்கவில்லை. விளைவு, அவரது முடிவு அவராலேயே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்காக தமிழ் சமூகம் கொடுத்த விலை அளவிட முடியாதது. உலகம் பற்றிய தெளிவான பார்வை இருந்திருக்குமானால், இ;த்தகையதொரு முடிவு தவிர்த்திருக்க முடியாத ஒன்றாக இருந்திருக்காது. அதனை நாம் இந்த சந்தர்பத்திலாவது விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம்.

2001ம் ஆண்டிற்கு பின்னரான உலகம் பற்றி, பாலசிங்கத்திடம் ஒரு தெளிவான புரிதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் தனது இறுதி நாட்களில் - மீண்டும் ஆயுதம் தூக்கினால் - உலகம் எங்கள் அனைவரையும் கொன்று அடுக்கிவிட்டுத்தான் அடுத்த அலுவலை பார்க்கும் என்று கூறியதாக தகவலுண்டு. உண்மையில் மே-18 அத்தகையதொரு காட்சியைத்தான் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது.

உண்மையில் 2002ல் பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், அவரது ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு அவர் செய்தது எல்லாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தை அவரது காலத்திலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகள்தான்.

இன்று பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிவுற்று முன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது தமிழர்களின் முன் முற்றிலும் புதியதொரு அரசியல் சூழல் விரிந்து கிடக்கின்றது. இது முற்றிலும் கடந்த கால நம்பிக்கைகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் எதிரான சூழல் ஆகும். மே-18 என்பது இன்றைய புதிய சூழலை கையாளுவதற்கான ஒரு நடுகல் சாட்சி மட்டுமே.

மே-18 குறித்து சிந்திக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை இந்தக் கட்டுரை நினைவு படுத்த முயல்கிறது. சாதாரணமாக பார்த்தால் இது, சில சம்பவங்களின் நினைவுபடுத்தல் ஆனால் ஆழ்ந்து நோக்கினால் இது ஒரு தாண்டிச் செல்ல முடியாத அரசியல் உண்மை. இலங்கையில் ஜே.வி.பி 1971 மற்றும் 1989ல் அரச கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இரண்டு தடைவைகளும் அதன் தோல்வில் முற்றுப்பெற்றது. இறுதியில் அதன் தலைவர் விஐயவீர உட்பட அதன் முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டனர்.

1972ல் தோற்றம் பெற்ற தமிழர் ஆயுத விடுதலை இயக்கங்கள் ஒன்று, இரண்டு என விரிவு கொண்டு ஐந்து பிரதான இயங்கங்களாக போராடின. அன்றைய சூழலில் சிறிதும் பெரிதுமான 32 இயக்கங்கள் இருந்ததாக பதிவுகள் உண்டு. இந்திய ஆதரவுடன் அப்போதைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு தாக்குதல்களில் மேற்படி இயக்கங்கள் ஈடுபட்டன.

இங்கு குறித்துக் கொள்ள வேண்டிய விடயம் என்வென்றால் - இந்தியாவின் நோக்கம் அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தை பலவீனப்படுத்துதல் என்பதே அன்றி கவிழ்ப்பதல்ல. புளொட் இயக்கம் தவிர்ந்த அனைத்து பிரதான இயக்கங்களும் இந்திய உளவுத் துறையால் நெறிப்படுத்தப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மையும் கூட.

சமீபத்தில் வெளிவந்த கோத்தவின் யுத்தம் [Gota’s War] என்னும் நூலிலும் இந்த விடயம் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது – "இந்தியாவின் உதவி இல்லாமால் இருந்திருந்தால், தீவிரவாதத்திற்கு இடம்மாறிய உள்ளுர் அரசியலானது, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாக விரிவு பெற்றிருக்காது".

90ம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஏனைய பிரதான இயக்கங்கள் ஆயுதப் போராட்ட அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள. பிரபாகரன் தனித்து போராட்டத்தைத் தொடர்ந்தார். இறுதியில் அவரது போராட்டம் தற்போது தமிழர் அரசியலுக்கு மே-18 என்னும் புதியதொரு அரசியல் நிகழ்வொன்றை வழங்குவதில் நிறைவு பெற்றிருக்கிறது.

90ம் ஆண்டுகளுக்கு பின்னரான பிரபாகரனின் அயுதப் போராட்டத்திற்கு மேற்குலகம் மறைமுகமான ஆதரவை வழங்கியிருந்தது. மேற்குலகின் ஆதரவில்லாமல் பிரபாகரனால் இத்தகையதொரு வலுவான இராணுவ கட்டமைப்பை உருவாக்கியிருக்க முடியாது. இங்கு மேற்கின் ஆதரவு என்பது புலிகளின் நடவடிக்ககைளை கண்டும் காணாது விடுதல் என்னும் அடிப்படையில் இருந்தது.

எவ்வாறு இந்தியாவின் ஆதரவு அன்றைய ஜே.ஆர் அரசாங்கத்தை வழிக்கு கொண்டுவருவதற்காக, தங்களால் பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர் குழுக்களை பயன்படுத்துவதாக இருந்ததோ, அப்படியே விடுதலைப்புலிகளை கண்டும் காணாது விடுவதன் மூலம் பிரபாகரனின் வளர்ச்சிக்கு மேற்குலகம் உதவியது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் தலையீடு செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டது. புலிகளுக்கு மட்டுமல்ல பல்வேறு ஆயுத அமைப்புகளுக்கும் மேற்குலகு கண்டும் காணாது விடுவதன் மூலம் பல்வேறு வழிகளிலும் உதவி வந்திருக்கிறது.

செப்டம்பர்-11 வரை மேற்குலம் ஆயுதக் கிளர்ச்சி குழுக்களுக்கு உதவுவதை ஒரு இராணுவ மூலோபாயமாகவே கடைப்பிடித்து வந்திருக்கிறது. அத்தகைய நோக்கம் மேற்கிற்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு இல்லாதிருந்தால் இது போன்ற ஆயுத அமைப்புக்களை தனது நாட்டுக்குள் அனுமதித்திருக்காது. ஒருகட்டம் வரை இத்தகைய அமைப்புக்களை குறிப்பிட்ட நாட்டில் ஓரளவு பலம்பெறச் செய்வதற்கு அமெரிக்கா உட்பட்ட மேற்குலகும் ஆதரிக்கின்றது. ஆனால் அந்த ஆதரவிற்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக் கட்டுப்பாடு உண்டு. இந்த பின்புலத்தில்தான் புலிகளுக்கு மேற்குலகு கொடுத்த வாயப்புக்களையும் நாம் பார்க்க வேண்டும்.

மேற்குலகும் இலங்கை அரசை கவிழ்க்கும் பிரபாகரனின் நிகழ்சிநிரலை ஒரு போதும் அனுமதித்திருக்கவில்லை. இதன் காரணமாகவே பிரபாரகரனுக்கு மேற்குலகம் ஒரு இறுதி சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. தான் கண்டும் காணாது விட்டதால் வளர்ச்சியடைந்த பிரபாகரனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்த்தது. இந்த இறுதி சந்தர்ப்பம் என்பது, பிரபாகரன் தனது அரசியல் இலக்கை மறுவரையறை செய்;து கொள்வதற்கு கொடுக்கப்பட்ட இறுதி வாய்ப்பாகும். இதனை பிறிதொரு வகையில் சொல்வதானால். மேற்குலகம் நோர்வேயின் தலைமையில் பிரபாகரனுக்கு ஒரு இறுதி பரீட்சையை வைத்துப் பார்த்தது, ஆனால் அதில் பிரபாகரன் தேர்ச்சியடையவில்லை. அதன் பெறுபேறே மே-18.

நான் மேலே குறிப்பிட்ட அரசியல் உண்மை என்வென்றால் - இலங்கையில் ஜே.வி.பியால் மேற்கொள்ளப்பட்ட, மற்றும் பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட அரச கவிழ்ப்பு முயற்சிகள் அனைத்தும் படுமோசமாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசியலில் இது ஒரு முக்கிய படிப்பினையாகும்.

மே-18 குறித்து சிந்திப்போர் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் - இலங்கையில் ஆயுதரீதியான செயற்பாடுகள் ஒரு போதுமே வெற்றியளிக்காது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். இது இலங்கைக்கு மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆயுதங்களை நம்பி அரசியல் செய்யும் விடுதலை விரும்பிகளுக்கும், அரச எதிர்ப்பு குழுக்களுக்கும் பொருந்தும்.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை அடையாளப்படுத்தும் மே-18 என்பது, தீவிரவாதம் எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி அழித்தொழிக்கப்படும் என்பதற்கான ஒரு உலகளாவிய செய்தியாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20120522106248

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் இயக்கம் தவிர்ந்த அனைத்து பிரதான இயக்கங்களும் இந்திய உளவுத் துறையால் நெறிப்படுத்தப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மையும் கூட.

அப்ப மாலைதீவு புளோட் செய்யவில்லையே...முழுபூசனிக்கயை சோத்துக்குள்ள .......

இலங்கையில் ஜே.வி.பி 1971 மற்றும் 1989ல் அரச கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இரண்டு தடைவைகளும் அதன் தோல்வில் முற்றுப்பெற்றது

இதிலும் இந்தியாவின் பெரியபங்கு உண்டு....என்பதை கட்டுரையாளர் குறிப்பிட மறந்துவிட்டார் போல....

  • கருத்துக்கள உறவுகள்

மே-18 குறித்து சிந்திப்போர் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் - இலங்கையில் ஆயுதரீதியான செயற்பாடுகள் ஒரு போதுமே வெற்றியளிக்காது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். இது இலங்கைக்கு மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் ஆயுதங்களை நம்பி அரசியல் செய்யும் விடுதலை விரும்பிகளுக்கும், அரச எதிர்ப்பு குழுக்களுக்கும் பொருந்தும்.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியை அடையாளப்படுத்தும் மே-18 என்பது, தீவிரவாதம் எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி அழித்தொழிக்கப்படும் என்பதற்கான ஒரு உலகளாவிய செய்தியாகும்.

பெரிய கண்டுபிடிப்பு..........

நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஓட ரெடியாவது மட்டும்.. தீவிரவாதம் தடுமாறியதன் விளைவோ..??!

வந்திட்டாங்கையா.. ஆளாளுக்கு அறிக்கை எழுத..!

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடு என்பது.. சர்வதேச உதவிகள் சார்ந்து நின்றதல்ல. அது சொந்த மக்களின் தியாகத்தில் உதவியில் நின்ற அமைப்பு. அதன் செயற்பாடு என்பது ஒரு குட்டித் தீவில்.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்தமையானது.. சர்வதேச படைக்கல.. புலனாய்வு தொழில்நுட்பங்களால் இலகுவாக கையாளப்படக் கூடிய ஒன்றாக இருந்தது. அந்த உதவிகளோடு புலிகளை அழிப்பது என்பது ஒன்றும் பெரிய விடயமுல் அல்ல. வெற்றியும் அல்ல. சுற்றிவர வேலி போட்ட.. ஒரு சின்ன தோட்டத்தில் நின்று மேஞ்ச.. நோஞ்சல் மாட்டை 20 சிங்கங்கள் நின்று அடிச்சு விழுத்தின வீரம் தான் இங்கு.

ஆனால்.. உலகின் இதர தீவிரவாதங்கள் எல்லாம் இப்படியானவை அல்ல..! விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சி என்பது அவர்களின் பலவீனம் அல்ல. பூகோள நலன்கள் மாறி அமைந்து கொண்டதன் விளைவு..!

அமெரிக்கா இல்லாத உலகமும்... சீனா இல்லாத உலகமும்.. ரஷ்சியா இல்லாத உலகமும்.. இந்தியா இல்லாத உலகமும்.. சிங்களம் இல்லாத உலகமும்.. இன்னும் அழகாத்தான் இருக்கும். அதற்காக இவர்களின் இருப்பை எல்லாம் மக்கள் சகித்துக் கொண்டு வாழவில்லையா..??!

ஏதோ.. விடுதலைப்புலிகள் செய்த ஆயுதப் போராட்டம் தான் கொடுமையானது.. அதை உலகம் அங்கீகரிக்கவில்லை என்பது போல எழுதிறவை.. 1983 இல் இருந்து 1987 வரை மற்றவை நடத்தினதை எல்லாம் உலகம் ஏன் இந்தியாவும் அங்கீகரித்து நின்ற கணக்கா எல்லா கதை விடுகினம்..???!

உலகத்தின் பார்வையில்.. அதன் சொந்த நலனுக்கு கட்டுப்படாத அனைத்தும் பயங்கரவாதமாகும். கடாபி என்ன.. அமெரிக்கா மீது படையெடுத்தா அழிஞ்சார். சதாம் என்ன.. அணு குண்டோடு.. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியா அழிஞ்சார். இப்ப சிரியா என்ன.. உலக ஜனநாயக எதிர்ப்பு போராட்டம் நடத்தியா அடி வாங்குது..???!

எல்லாம் வலுவுள்ளவன் தன் வளத்தைப் பெருக்க நடத்திற கொடுமைகள். அதில் வலுவுள்ளவனே இலகுவாக வென்றுவிடுகிறான். வீரனும் ஆகிடுறான். வலுவற்றவன் தோற்று பயங்கரவாதி ஆகிடுறான். ஆனால் எங்கும் விதிவிலக்குகள் உண்டு..!

நாமளும் நம்மள ஆராய்ச்சிகளும்.. நம்மளையே குறை பிடிச்சிட்டு இருக்கிறதை செய்யுறதே தவிர.. எங்களை கட்டி ஆள நினைக்கிறவனிட்ட இருந்து நாங்க எப்படி தப்பிக்கிறது என்ற வழியில சிந்திக்கிறதா இல்லை. இதுவே அடிமைகளின் சிந்தனைக்கு எடுத்துக்காட்டு..! இதனால் தான் ஆயுத பலத்தால்.. பொருண்மிய பலத்தால்.. அடிமைப்படுத்துபவர்கள்.. பெரியாக்களாகவும்.. நாங்கள் அங்கலாய்ப்பவர்களாகவும் உலகில் வாழ்கிறோம். :icon_idea:

Edited by nedukkalapoovan

பௌத்த-சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழினப் படுகொலைகளுக்கு நீண்டகாலம் ஒத்துதவிய இந்திய அரச கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதில் ஒருசில இணையத்தளங்களும், ஒருசில கைக்கூலிகளும் மிக நாசூக்காக செயற்பட்டு வருகின்றனர்.

ஜனநாயக வேடம் தரித்து இனப்படுகொலைகளை செய்த சிங்கள மற்றும் இந்திய அரச பயங்கரவாதிகளின் சுயரூபங்களை புத்தி - விவேகம் - அனுபவம் உடைய நேர்மையான ஈழத்தமிழர் அறிவர்.

வெட்கம் - மனம் - ரோஷம் அற்ற ஒருசில ஒட்டுண்ணிகள, கைகூலிகள், எலும்புத்துண்டு நக்கிகள் இவர்கள் அவ்வப்போதுஉண்மைகளை திரித்து கொலைகார ஓநாய்களுக்கு பசுத்தோல் போர்த்த முயற்சிக்கின்றனர்.

இத்தகைய கைக்கூலிகளுக்கு தமிழின விரோதிகளுக்கு மீண்டும், மீண்டும் சிங்கள மற்றும் இந்திய அரச பயங்கரவாதிகளின் படுகொலைகளை நினைவுபடுத்தினால் அலுப்படிக்குமாம்.

தற்கால இந்தியக் காட்டுமிராண்டிகளால் ஒன்றை அழிக்கத்தான் முடியும் - ஆக்கசக்தி கிடையாது.

இந்திராகாந்தி அம்மையாருடன் கிடைத்த நல்ல சந்தர்ப்பமும், அவர் குடும்பத்துக்கு கிடைத்த விபச்சரியாலும், முட்டாள் மகனாலும் (ஒரு பயங்கரவாதி), - நெறிபிறழ்ந்த இதுகளின் வாரிசுக் காடையர்களாலும் இந்தியக் காட்டுமிராண்டி நாடு அழிவை நோக்கிச் செல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ;

மே 18 முடிவல்ல ஒரு தொடக்கம் என்பதிலும் பார்க்க ..இந்த தலையங்கம் பிடித்திருக்கு ஒரு முடிவும் ஒரு ஆரம்பமும்....அதே போல ஆரம்பம் ஆரம்பம் என்று நிற்காமல் அடுத்த அடி எடுத்து வைக்கிற வேலையப்பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் தூற்றுதல் கட்டுரை

பிரபபாகரனைப்பற்றி எழுதமுன்

சர்வதேசத்திடம் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை சிங்களத்திடமிருந்து பெற்றுக்கெகாடுக்கவேண்டும் என்ற தர்மமாவது இருந்ததா??? என்றால் பூச்சியமே பதில்.

தீர்வு இல்லாத எந்த ஆய்வும் பிரபாகரனின் தூசுக்கும் வராது. இதில்அவரது ஆளுமை மற்றும் அவரது இயக்க போராளிகள் மீதான அவரதுது கரிசனை பற்றி ஆயய்வு வேறு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.