Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன் அவர்கள் தெரிவாகியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan.jpg

தமிழரசு கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது. தமிழரசு கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் இதர தலைவர்களுக்கான தெரிவு நடைபெற்றிருந்தது.

இதில் தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக மாவை சேனாதிராசாவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு செய்தியாளர்

http://www.eeladhesa...chten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருமாற்றம் தமிழருக்கு சரியில்லை போல ........ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இனி ரொம்ப நாகரீகமாக கருத்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன் .. வேணாம்.. பெட்டி எவ்வளவு கைமாறியது என விளக்க வேண்டும்... :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் உள்ளவரை தலைமைப்பதவி ஒருவருக்கே கிடைப்பது தமிழரின் சாபக்கேடு.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காத்து தமிழர்பக்கம் எப்பதான் வீசப்போகுதோ???? யாரறிவார் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹீந்தியன் அசோக் காந்தா மட்டக்களப்பு விடையம் வேலை செய்யுது போல கிடக்கு......பம்மந்துவும்..சுமந்திரவும்...அன்னியோன்னியமாக சிரிச்சு கதைச்சவை....

ஜனநாயகம் பேசும் போக்கிரி சம்பந்தன் கும்பல் - இந்தத் தெரிவு எப்படி செய்யப்பட்டது என்பதை பகிரங்கமாக சொல்வார்களா? யாரால் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதையும் சொல்வார்களா? தாமும், தமது கைகூலிகளும் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக விரோத முறையில் அரசியல் யாப்பை இந்த பழமையான கட்சிகள் கொண்டுள்ளன.

அரைவேக்காட்டு சட்டத்தரணிகள் அரசியலில் இருக்கும் வரை - இந்த இழுபறி ஏமாற்று வேலைகள் தொடரும். முன்னர் கடைந்தெடுத்த மடையர்களே சட்டத்தரணிகள் ஆக வருவது வழக்கம். தமிழர் விடுதலைக் கூட்டணியும் கடைந்தெடுத்த மடைச் சட்டத்தரணிகளின் கட்சி.

உறுதியுடன் செயல்படும் உறுப்பினர்களை வைத்து ஒரு கட்சி தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

தமிழரசுக் கட்சியை தூக்கி வீசவேண்டிய காலம் வந்துவிட்டது!

ஏற்கெனவே தமிழர்களிடையே கட்சிகள் நிறையவேயுண்டு. இதற்குள் இன்னொரு கட்சியா? அப்படி அவர்கள் என்னதான் செய்துவிடுவார்கள்.?

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி மற்றும் சுவரொட்டிகள்

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில இடங்களில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததுடன் சில பிரதேங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

நேற்று முதல் மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இதேவெளை, மட்டு. நகரின் சில பகுதிகளிலும் கறுத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாநாடு நடைபெறும் மண்டபம் வரையிலான பகுதி வரையில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் மாநாடு நடத்தி, மாவட்ட மக்களை புதைகுழியில் தள்ளும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் தாம் இடமளிக்கப்போவதில்லையென்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

batti_poster_againt_001.jpg

batti_poster_againt_002.jpg

batti_poster_againt_003.jpg

batti_poster_againt_004.jpg

batti_poster_againt_005.jpg

batti_poster_againt_006.jpg

batti_poster_againt_007.jpg

batti_poster_againt_008.jpg

batti_poster_againt_009.jpg

batti_poster_againt_010.jpg

batti_poster_againt_011.jpg

batti_poster_againt_012.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.