Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவன் யார் ?

Featured Replies

அடுத்த பகுதியை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

  • Replies 64
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நிறுத்தாதீர்கள் கோ அண்ணா........காத்திருந்து தொடராக வாசிப்பதற்கு மனம் பொறுமைக்கு இடம் கொடுக்குதில்ல..............அந்தளவிற்கு ஆர்வமாக இருக்கிறது.உங்கள் உண்மைக்கதை. ஏனனில் புலம்பெயர் வாழ் எமது வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளின் வடிவங்களில் ஒன்றாக உங்கள் அனுபவக்கதையும் அமைந்திருப்பதால் ஆர்வமாக வாசித்து முடிக்கவேணும் போல் தோன்றுகிறது.

கை வலிக்கிறது என்று எழுதியிருந்தீர்கள்.உண்மைதான் புரிகிறது. இந்த இடத்தில் எமக்கு ஒரு தொழில்நுட்பம் உண்மையாக தேவைப்படுகிறது. நாம் வாயால் பேசினால் மட்டும் போதும் அந்த வார்த்தைகளை கணணி எழுத்தாக[ஆங்கிலத்தில்] எழுதிவிடும். அந்த வசதி கொண்ட கணணி என்னிடம் இல்லை ஆனால் நான் பார்த்திருக்கிறேன்.இப்படிப்பட்ட கணணியை அதாவது நாம் பேசினால் எமது தமிழ் எழுதுருபை கொடுக்கும் கணணியை பயன்படுத்துவதே இதற்கு ஒரு வழி என்று நான் நினைக்கிறேன்.அப்படி வசதி கொண்ட கணணி இருக்கிறதா??? தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே ......

உங்கள் நீண்ட கருத்துப் பகிர்வுகளுக்கு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவன் . ஒருருடைய ஆக்கத்திலுள்ள நடைமுறை வலிகள் , உங்களைப் போன்றோர்களது கருத்துக்கள் ஊக்கங்களினால் பஞ்சாகிப் போய்விடும் . இது என்னைப் போல பலரது அனுபவம் . ஆக ஒரு ஆக்கம் வெளிவந்தபின் அதனது பாதையைத் தீர்மானிப்பவர்கள் நீங்களே !! . மேலும் நீங்கள் சொன்ன தொழில் நுட்பம் மனிதனது நுண் உணர்வுகளைச் சிதைக்கவல்லது . எப்படியென்றால் , இணையப் பயன்பாட்டிற்கு முதல் எமக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது . வாசிப்பினால் உள்ளமும் , எழுதும் ஆற்றலும் இருந்தது . இப்பொழுது இவை படிப்படியாக இளையோரிடம் விடைபெறுகின்றன . தொடுகையினாலும் , பேசுவதினாலும் கணணி இயங்கும் பொழுது விசைப்பலகையை பாவிக்கும் பழக்கம் ( ரைப்பிங் ) விடைபெறும் . இளையோரிடம் சோம்பல் அதிகரிக்கும் . இது ஆரோக்கியமான வளர்ச்சி என்று கருதுகின்றீர்களா தமிழ்சூரியன் ?

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி விடாமல் எழுதுங்கோ கோ அப்படித்தான் கூட‌ நன்றாக இருக்கும் :D

நிச்சயம் அது ஆரோக்கியமான வளர்ச்சியாகாது . உங்கள் கருத்துடன் 100 வீதம் உடன் படுகிறேன் கோ.அண்ணா..... பல தொழில் நுட்பங்கள் தான் இன்றைய மனிதனின் அழிவிற்கு காரணியாகின்றது. அத்தோடு இன்று உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும்,வேலையில்லாப்பிரச்சனைகளுக்கும்,சில தொழில் நுட்பங்கள் துணை போகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது.ஒட்டுமொத்தத்தில் மனத இனத்தை நோய்ப்படுத்தி,வறுமைப்படுத்தி,நொந்து நூலாக ஆக்கி அழிவுக்குள் தள்ளுகிறது என்பது தான் உண்மை. இங்கே கொடுமை என்னவென்றால் மனிதன் தனக்குத்தானே அழிவை ஏற்படுத்திக்கொண்டு, இன்னும் சில காலத்தில் உலகம் அழியப்போகுது ,அழிக்கப்போகிறார் என்று இறைவன் மேலும்,இயற்கையின் மேலும் பழி போடுவதுதான் கொடுமையிலும் கொடுமை. அது போதாமல் அழிந்து போன மாயா என்னும் இனத்தின் ..................... :D

  • தொடங்கியவர்

அடுத்த பகுதியை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

இயன்றவரையில் இடைவெளியைக் குறைக்கின்றேன் . மிக்க நன்றிகள் குளக்காட்டான் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு .

  • தொடங்கியவர்

இடைவெளி விடாமல் எழுதுங்கோ கோ அப்படித்தான் கூட‌ நன்றாக இருக்கும் :D

சரி சொல்லீட்டிங்கள் எல்லோ , எழுதறன் அக்கை . உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

வேலைப்பளுவும் நேரமின்மையும் ஒன்றுசேர்வதல் கதையைத் தொடரமுடியவில்லை ; வெகுவிரைவில் தொடர்கன்றேன் ; உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் கள உறவுகளே ;

  • தொடங்கியவர்

அந்த புகையிரதம் இப்போதைய நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத சாதராண புகையிரதம் தான் . யாழ்தேவி போல " தடக் தடக் " என்று தாலாட்டியபடியே விரைந்தது . என் மனமோ பலவிதமான உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்தது . குகனுக்கு அந்தரத்தில் உதவி செய்தாலும் , நான் அண்ணையின் பேச்சை கேட்டு இடம்தெரியாத இடத்திற்கு , அகரத்தில் இருந்து என்னைப் புதிப்பிக்க வெளிக்கிட்டதில் ஒருவித தடுமாற்றத்தினை உணர்ந்தேன் .என்னை விட்டு பல கிராமங்கள் நீங்கிக்கொண்டிருந்தன . புகையிரதம் சில மணிநேர ஓட்டத்திற்குப்n பின்பு றோம் புகையிரத நிலையத்தினுள் நுளைந்து கொண்டிருந்தது . எனது ஏஜன்சியின் கையாள் அங்கை என்னைக் கூட்டிக்கொண்டு போக வந்திருந்தான் .

றோம் " பிளமிங்கோ " சர்வதேசவிமான நிலையம் அந்த இரவில் தூங்கிவழிந்துகொண்டிருந்தது . நான் அமெரிக்கா செல்லும் அலித்தாலியா விமானத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் . ஏஜன்சி எனது படத்தை திறமாகவே வேறுஒரு புத்தகத்தில் மாற்றியிருந்தான் . அந்தநேரத்தில் இப்போது உள்ள மாதிரி பாதுகாப்புக்கெடுபிடிகள் இல்லை . என்னால் ஒவ்வொரு கட்டத்தையும் சுலபமாகவே கடக்கமுடிந்தது . நான் வெளிக்கிடுவதற்கு முதலே எனது மட்டையை " டி எச் எல் " இல் குகனின் முகவரிக்குப் போட்டுவிட்டே வந்தேன் .

2010 கியுபெக்கில் உள்ள புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு , மைனஸ் 25 குளிரை சூடாக்கப் போராடி சிமினியால் புகையைத் துப்பிக்கொண்டிருந்தது . எனது காரை கறாஜ் சில் விட்டுவிட்டு சோர்வாக வீட்டிறகுள் மெதுவாக நுளைந்தேன் . இரவு ஒரு மணியைத்தாண்டிவிட்டிருந்தது . மனைவி பிள்ளைகள் நித்திரையாகிவிட்டிருந்தார்கள் . ஒரு சிகறட் ஐ எடுத்துக் கொண்டு விசாலமான " பக் யார்ட் " ற்கு கபேயும் ஜக்கற்றுடன் வந்தேன் . எனக்கு அந்த அமைதியும் வெண்பனியும் நன்றாகவே பிடித்திருந்தது . சூடான கபே தொண்டைக்குள் எரித்துக்கொண்டு போய் தசைகளை சூடாக்கியது . எனது வாய்ப்புகையுடன் சிகரட் புகையும் எனது அன்றைய வேலைக்களைப்பைப் பஞ்சாக்கின .

ஒரு சிலநாட்களாகவே குகனின் நினைவுகள் என்னை வாட்டி எடுத்தன . நான் வந்த புதிதில் ஓரிருமுறை குகன் என்னுடன் தொடர்பு கொண்டான் . எனதுமட்டை கிடைத்ததைப்பற்றி சொல்லியிருந்தான் . பின்பு அவனது தொடர்புகள் முற்றாகவே விடுபட்டது . எனக்கு அவனின் திடீர் மாற்றங்கள் பெரும்மன உளைச்சலைக் கொடுத்தன .

ஆரம்பத்தில் அண்ணையுடன் இருந்த நான் ஒரு சில மாதங்களிலேயே கனடாவின் நெளிவு சுளிவுகளைப் பிடித்துக்கொண்டேன் . மெதுவாக அண்ணையிடம் எனது திட்டங்களைச் சொன்னேன் . என்னைப் படிப்பிற்க கியுபெக்கிற்கு அனுப்பினார் . அங்கு எனது திறமைகள் மீண்டும் உயிர்பெற்றன . பல்கலைக்கழகத்திலேயே அதிக சம்பளத்துடன் எனது திறமையை அங்கீகரித்து விரிவுரையாளராக வேலைதந்தார்கள் . எனது கலியாண விடையத்தில் கூட எனது முடிவுகளே வென்றது . வறுமையான குடும்பத்தில் பிறந்த மாதுமை எனக்கு மனைவியானாள் .

சிகரட்டின் அடிக்கட்டை சுட்டு எனது சிந்தனைகளைக் கலைத்தது. நான் வீட்டினுள் போய் மனைவி எடுத்து வைத்திருந்த சாப்பாடுகளைச் சூடாக்கி சாப்பிட்டு விட்டு படுக்கையறையினுள் வந்தேன் . மாதுமை எனது இடத்தில் கையைவைத்தபடியே நித்திரையாகிப் போயிருந்தாள் . நான் அவளது கையை மெதுவாக எடுத்துவிட்டு அவளருகே படுத்துக்கொண்டேன் . அவளது கை மீண்டும் சூடு தேடி என்னை அணைத்துக்கொண்டது .

லீவு நாட்களிலேயே மாதுமையுடன் முகம் பார்த்து கதைக்கும் இந்த வாழ்க்கை முறை எனக்கு அருவருப்பாகவே இருந்தது . பிள்ளைகள் பிறந்தவுடன் வளமையான உடன்பாடுகளால் என்னால் உடன்பாடுகளில் இருந்து வெளியேற முடியாது போய்விட்டது . குகனை நான் பிரிந்து பல வருடங்கள் போனாலும் , அவனது பழயநினைவுகள் மட்டும் பசுமயாக எனது நடைமுறை மனவெக்கைகளுக்கு மருந்தாக இருந்தன . மாதுமையும் பாவம் வேலையுடன் பிள்ளைகளைப் பராமரிப்பதில் மிகவும் சோரந்து போயிருந்தாள் . எங்கள் எல்லோருக்குமே ஒரு இடமாற்றம் தேவைப்பட்டிருந்தது . மாதுமையுடன் கதைத்து அவளது விடுமுறையையும் சரியாக்கி , நீண்டகாலத்திற்குப் பிறகு குகனை சந்திக்கும் ஆவலில் பிரான்ஸ் போகத்தயாரானேன் .

நான் வெளிக்கிடமுதல் முகநூலில் எனது பழைய கூட்டான சிறியால் குகனின் ரெலிபோன் நம்பர் எடுத்துக் குகனுக்கு போன் பண்ணினேன் . ரிங் போய்க்கொண்டிருந்தது . சிறிது நேரத்தின் பின்பு குகன் லைனில் கலோ என்றான் .

" மச்சான் நான் உங்கை வாறன் . என்னம் ரெண்டு நாளில பாரிஸ் இல வந்தாப்பிறகு உனக்கு திருப்பி போன் பண்ணிறன் "

என்றேன் . அவனது குரல் எனது வருகையின் சந்தோசத்தை எனக்குக் காட்டியது .

இரண்டு நாட்ளுக்குப் பின்பு ஒரு காலையில் எங்களைச் சுமந்து கொண்டு ஏயார் கனடா வானத்திலே எம்பிப் பாய்ந்தது . எனது நினைவுகள் பாரிசின் பளைய நினைவுகளுலேயே அலை பாய்ந்தன . மாதுமை இயல்பாக எனது தோளில் சாய்ந்து கொண்டு , கீழே தெரியும் வெண்பஞ்சு மேகக்குவியல்களை சிறு பிள்ளை போல வேடிகை பார்த்தாள் . பத்து மணித்தியால பறப்பின் பின்னால் எயார் கனடா சால்ஸ்துக்கோல் சர்வதேச விமான நிலையத்தில் தனது கால்களை அகலப் பரத்தியது .

தொடரும்..........

பகுதி ஒன்று ஊதா நிறத்திலும் , பகுதி இரண்டு இள நீல நிறத்திலும் , மூன்றாம் பகுதி கறுப்பு நிறத்திலும் வேறுபடுத்தியுள்ளேன் .

Edited by கோமகன்

எதோ ஓர் மர்மத்தை நோக்கி கதை நகர்வது போல் உள்ளது அண்ணா ,,,,,,,,,,,,,தொடருங்கள் ...மிக ஆர்வமாக உள்ளது...

கருப்பு நிறம் என்றதும் கொஞ்ச்சம் மனம் சலனப்படுகிறது , சோகமான நிகழ்வுகளில்லாமல் சுபமாக முடிய வேணும் என்பதே என் ஆவல்.

கோமகன் அண்ணா, உங்கள் கதை (அனுபவம்) வாசிக்க மிக ஆர்வமாக இருக்கிறது.

உங்களுக்கும் மனைவிக்குமான உறவு பற்றி சில வரிகளை தவிர்த்திருக்கலாம்.

எனினும் உங்கள் உண்மை கதை விறுவிறுப்பாக செல்வதால் நானும் தொடர்ந்து இணைந்திருக்கிறேன். என்ன நடக்கப்போகிறது என்று அறிய ஆவலாக இருக்கிறது. (குகன் என்ற நபர் வில்லனாக மாறி விடுவாரோ? :unsure:)

இக்கதை குகன் என்ற நபர் உட்பட எவரையும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

வேளைக்கு அடுத்த பகுதியை போடுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நீங்கள் எழுதிய கதைகளிலிருந்து இக்கதை வே(மா)றுபட்டும் தொடர்கிது. கதைக்கான சகல அம்சங்களும் கதையோடு வாசகரை வைத்திருக்கிற பாங்கும் இக்கதையில் அதிகம் செறிந்துள்ளது. நட்பு அதன் நினைவுகள் என கதையின் நீளம் ஒரு சமூகத்தின் இடப்பெயர்வின் அல்லது புலப்பெயர்வின் வலிகளை அப்படியே ஒளிவில்லாமல் எடுத்துச் செல்கிறது.

கோவுக்கு ஒரு பச்சை.+

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]நன்றாக இருக்கிறது .[/size][size=1]

[size="4"]விரைவில் தொடருங்கள் [/size][/size]

  • தொடங்கியவர்

எதோ ஓர் மர்மத்தை நோக்கி கதை நகர்வது போல் உள்ளது அண்ணா ,,,,,,,,,,,,,தொடருங்கள் ...மிக ஆர்வமாக உள்ளது...

கருப்பு நிறம் என்றதும் கொஞ்ச்சம் மனம் சலனப்படுகிறது , சோகமான நிகழ்வுகளில்லாமல் சுபமாக முடிய வேணும் என்பதே என் ஆவல்.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தமிழ்சூரியன் . நான் நிறங்களால் வேறுபடுத்தியது வாசகர்கள் வாசிப்பதற்கு இலகுபடுத்தவே . இப்படியும் ஒரு பொருள்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அவன் யார்?

நிச்சயமாக கோ இல்லை. :D :D :D

அவனவன் பஸ் பாஸை கொடுக்கவே யோசிப்பான் நீங்கள் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கின்றிர்கள் ,நண்பேண்டா .கதை விறுவிறுப்பாக போகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

திரிலிங்காக போகிறது தொடருங்கள் கோமகன் :lol:

நன்றாக போகிறது, கோ!

காதல் - இது உண்மைக் கதையை தழுவி எழுதப்பட்டது போல் இருக்கிறது. எனவே, பெயர்களும், சம்பவங்களும் தொடர்பு படுத்தப்படாது என்று நம்புகிறேன். கோமகன் தான் விளக்கம் தர வேண்டும்.

நான் என்று எழுதுவது, தன்னை அல்ல என்று, நாம் இதுவரை அறிந்த கோமகனை வைத்து ஊகிக்க முடிகிறது. விசுகு அண்ணா கூட அதைத் தான் சொல்கிறார்.

ஒருவேளை கோமகன் தான் குகனாக இருக்குமோ? <_<

நன்றாக போகிறது, கோ!

காதல் - இது உண்மைக் கதையை தழுவி எழுதப்பட்டது போல் இருக்கிறது. எனவே, பெயர்களும், சம்பவங்களும் தொடர்பு படுத்தப்படாது என்று நம்புகிறேன். கோமகன் தான் விளக்கம் தர வேண்டும்.

நன்றி ஈஸ் அண்ணா. எனக்கு தெரியவில்லை, அவர் lawyer இன் பெயர், சம்பவம் நடைபெற்ற இடங்கள் என்று கூறுவதெல்லாம் உண்மை என்று நினைக்கிறேன். அந்த நபரின் பெயர் கற்பனையாக இருந்தாலும் அவருக்கு தெரிந்தவர்களால் ஊகிக்க கூடியதாக இருந்தாலும் என்று நினைத்து சொன்னனான். :)

நான் என்று எழுதுவது, தன்னை அல்ல என்று, நாம் இதுவரை அறிந்த கோமகனை வைத்து ஊகிக்க முடிகிறது. விசுகு அண்ணா கூட அதைத் தான் சொல்கிறார்.

ஒருவேளை கோமகன் தான் குகனாக இருக்குமோ? <_<

:o :o :oஎனக்கென்னமோ குகன் என்பவர் வேறு நபர் எண்டு தான் தோணுது. :unsure:

ஐயையோ கோமகன் அண்ணா வந்து பதில் சொல்லுங்கோ. :lol: இல்லாட்டால் கதை முடிவிலாவது அது நீங்களா இல்லையா எண்டு சொல்லுங்கோ. :D

  • தொடங்கியவர்

கோமகன் அண்ணா, உங்கள் கதை (அனுபவம்) வாசிக்க மிக ஆர்வமாக இருக்கிறது.

உங்களுக்கும் மனைவிக்குமான உறவு பற்றி சில வரிகளை தவிர்த்திருக்கலாம்.

எனினும் உங்கள் உண்மை கதை விறுவிறுப்பாக செல்வதால் நானும் தொடர்ந்து இணைந்திருக்கிறேன். என்ன நடக்கப்போகிறது என்று அறிய ஆவலாக இருக்கிறது. (குகன் என்ற நபர் வில்லனாக மாறி விடுவாரோ? :unsure:)

இக்கதை குகன் என்ற நபர் உட்பட எவரையும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

வேளைக்கு அடுத்த பகுதியை போடுங்கோ. :)

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் காதல் . உங்கள் எல்லோரது நம்பிக்கைகளையும் , எதிர்பார்புகளையும் வீணடிக்கமாட்டேன் .

ஏற்கனவே நீங்கள் எழுதிய கதைகளிலிருந்து இக்கதை வே(மா)றுபட்டும் தொடர்கிது. கதைக்கான சகல அம்சங்களும் கதையோடு வாசகரை வைத்திருக்கிற பாங்கும் இக்கதையில் அதிகம் செறிந்துள்ளது. நட்பு அதன் நினைவுகள் என கதையின் நீளம் ஒரு சமூகத்தின் இடப்பெயர்வின் அல்லது புலப்பெயர்வின் வலிகளை அப்படியே ஒளிவில்லாமல் எடுத்துச் செல்கிறது.

கோவுக்கு ஒரு பச்சை.+

உங்கள் போன்றோர்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் கடினம் . இப்பொழுதுதான் எனக்கு உண்மையாகவே பயம் பிடித்துள்ளது . உங்கள் விமர்சனத்திற்கும் , ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

[size=4]நன்றாக இருக்கிறது .[/size]

[size=1][size=4]விரைவில் தொடருங்கள் [/size][/size]

மிக்க நன்றிகள் லியோ உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் .

அவன் யார்?

நிச்சயமாக கோ இல்லை. :D :D :D

உங்கள் கருத்தின் செய்திகளை நான் உணருகின்றேன் . முடிவுவரை அமைதி காக்கவேண்டியது அவசியம் . மிக்க நன்றிகள் விசுகர் .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன்

அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • தொடங்கியவர்

அவனவன் பஸ் பாஸை கொடுக்கவே யோசிப்பான் நீங்கள் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கின்றிர்கள் ,நண்பேண்டா .கதை விறுவிறுப்பாக போகின்றது .

மிக்கநன்றிகள் அர்ஜுன் உங்கள் கருத்துக்களுக்கு . நான் எனது நிரந்தரவதிவிட உரிமை அட்டையையே குகனுக்கு கொடுத்து விட்டு விமானம் ஏறினேன் .

திரிலிங்காக போகிறது தொடருங்கள் கோமகன் :lol:

என்னைவைச்சு பகிடி ஒண்டும் விடேலைத்தானே அக்கை ?

  • தொடங்கியவர்

நன்றாக போகிறது, கோ!

காதல் - இது உண்மைக் கதையை தழுவி எழுதப்பட்டது போல் இருக்கிறது. எனவே, பெயர்களும், சம்பவங்களும் தொடர்பு படுத்தப்படாது என்று நம்புகிறேன். கோமகன் தான் விளக்கம் தர வேண்டும்.

நான் என்று எழுதுவது, தன்னை அல்ல என்று, நாம் இதுவரை அறிந்த கோமகனை வைத்து ஊகிக்க முடிகிறது. விசுகு அண்ணா கூட அதைத் தான் சொல்கிறார்.

ஒருவேளை கோமகன் தான் குகனாக இருக்குமோ? <_<

இந்தக்கதை உண்மைச் சம்பவமே . விளக்கங்கள் முடிவில் தருகின்றேன் . நீங்கள் கூறியது உண்மைதான் , எனது கதைகளில் எனக்கு முழுத்திருப்தியில்லை . இருவரும் முடிவுவரை பொறுங்கள் , விளக்கமாகத் தருகின்றேன் .

இந்தக்கதை உண்மைச் சம்பவமே . விளக்கங்கள் முடிவில் தருகின்றேன் . நீங்கள் கூறியது உண்மைதான் , எனது கதைகளில் எனக்கு முழுத்திருப்தியில்லை . இருவரும் முடிவுவரை பொறுங்கள் , விளக்கமாகத் தருகின்றேன் .

அடுத்த பகுதி போட்டுட்டியளோ என்று ஓடி வந்து பார்த்தால் கருத்து எழுதியிருக்கிறியள். :rolleyes: அடுத்த பகுதிக்காக waiting... :rolleyes:

  • தொடங்கியவர்

அடுத்த பகுதி போட்டுட்டியளோ என்று ஓடி வந்து பார்த்தால் கருத்து எழுதியிருக்கிறியள். :rolleyes: அடுத்த பகுதிக்காக waiting... :rolleyes:

நடந்துகொண்டு இருக்கிது . அனேகமாய் நாளை வரும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.