Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட யாழ் கள உறவுகள் உங்கள் அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். :)

  • Replies 224
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட

அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆர்ப்பாட்டம் மகிந்தருக்கு.. பிரித்தானிய அரசுக்கு மட்டுமல்ல.. புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க போடு என்றவைக்கும்.. சரியான பதிலை தந்துள்ளது. எமது தேசியக் கொடியை எவராலும் அவமதிக்கவோ.. புறக்கணிக்கவோ சொல்ல முடியாது. அது எமது உயிரினும் மேலான எம் மாவீரர்களும் மாண்ட மக்களும் அளித்த சொத்து..!

2008 லண்டன் பொங்கு தமிழில் பயந்து பயந்து பிடித்த புலிக்கொடி.. இன்று.. சர்வ சாதாரணமாகப் பறந்தது. அதுவும் பிபிசி செய்தி ஊடக காணொளியிலும் அது பறந்தது..!

தேசியக் கொடியாம்.. புலிக்கொடி தாங்கிய மக்களுக்கு மிக்க நன்றி..! :icon_idea:

புலிகளின் அழிவு எனக்கு மட்டுமல்ல எத்தனோயோ தமிழர்களுக்கு மகிழ்சியையே தந்தது . புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் புலிகள் தான் தமிழர்,புலிகள் தான் உலகமாகவும் தெரியும் .

நாங்கள் தேடுவது எமது இனத்திற்கான இருப்பு .நீங்கள் தேடுவது புலிகளுக்கான அங்கீகாரம் .சர்வதேசம் புலிகளை எப்போ தடை செய்ய தொடங்கியதோ அப்போதே புலிகளின் கதை முடிந்துவிட்டது .

வேறு எங்கும் போகவேண்டாம்.மனித உரிமைகள் அமைப்பு அறிக்கைகள். U.N.அறிக்கைகளை வாசியுங்கள்(விளங்கினால் ) நாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று விளங்கும் .

புலிகள் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் யாழ்பாணம் ஒன்றும் அழிந்து போகவுமில்லை அங்கிருக்கும் மக்கள் அதுபற்றி பெரிதாக கவலைபடவுமில்லை .

புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று வெளியில் வராமல் தமிழனுக்கு விடிவு இல்லை என்று தேசிய கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும் .

புலிகள் போராடினதும் உண்மை ,உயிர் தியாகம் செய்ததும் உண்மை உலக அரசியல் தெரியாததும் உண்மை.

அதையெல்லாம் கடந்து எமக்கான தீர்வு அவசியம் ,அங்கேயே நின்று அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது .

ஊர்வலம் போனது ,கொடி பிடித்தது 80 களிலேயே நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம் .எத்தனை ஊர்வலம் HYDE PARK ,LANGASTER GATE இல் செய்தோம்.தனிய எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல P.L.O, A.N.C ஊர்வலங்களும் போன ஆட்கள் நாங்கள் .

போதையில்.............

நெடுக்ஸ் அண்ணா நீங்களும் சென்றிருந்தீர்களா? :)

கிட்டத்தட்ட எத்தனை பேர் வந்திருப்பார்கள்? ஏனென்றால் ILC வானொலிக்கு பொது மக்களில் ஒரு சிலர் கூறியதை கொண்டு தான் இங்கு எண்ணிக்கை போட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் கணிப்பு சரியா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. பிழை என்றால் மாற்றிவிடுவதற்காக. :)

Edited by காதல்

எல்லாரும் இதை பாருங்களன். பெருமளவு மக்கள் போன பிறகும் bbc இல் வெறும் 500 பேர் என்று போட்டிருக்கிறார்கள்... :( :(

In London more than 500 Tamil protesters jeered the Sri Lankan president, as he arrived at a Jubilee lunch for commonwealth leaders.

http://www.bbc.co.uk/news/uk-18342967

நாளைக்கு சரியான தொகையை போடுவார்களா? :unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போகக் கிடைத்த நேரத்திற்குத் தான் போனேன். மக்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். மைதானமாக இல்லாமல் வீதிகள் என்பதால்.. மக்கள் எண்ணிக்கையை கணிப்பதில் சிரமம் இருந்தது..! மக்கள் வீதிகள் எங்கனும் நிறைந்திருந்தனர். பங்கு பற்றிய மக்களுக்கு நன்றிகள்..! :icon_idea:

எல்லாரும் இதை பாருங்களன். பெருமளவு மக்கள் போன பிறகும் bbc இல் வெறும் 500 பேர் என்று போட்டிருக்கிறார்கள்... :( :(

In London more than 500 Tamil protesters jeered the Sri Lankan president, as he arrived at a Jubilee lunch for commonwealth leaders.

http://www.bbc.co.uk/news/uk-18342967

நாளைக்கு சரியான தொகையை போடுவார்களா? :unsure: :unsure:

காணொளியில் சொல்கிறார்கள் தானே.. மக்கள் இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. ஆரம்பத்தில் கண்ட தொகையை வைத்து அப்படி எழுதப்பட்டிருக்கக் கூடும்..! :icon_idea:

அதுமட்டுமன்றி இப்போது தலைப்பும் விபரமும் திருத்தப்பட்டுள்ளது...

Tamil protest at Royal lunch for Commonwealth leaders

Hundreds of Tamil and human rights campaigners gathered outside Marlborough House in central London in opposition to Sri Lankan President Mahinda Rajapaksa's presence at a lunch for Commonwealth heads of state attended by the Queen.

Mr Rajapakse was jeered as he arrived through the main gate, his car not carrying a flag because of security concerns.

http://www.bbc.co.uk/news/uk-18337972

Edited by nedukkalapoovan

எனக்கு போகக் கிடைத்த நேரத்திற்குத் தான் போனேன். மக்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். மைதானமாக இல்லாமல் வீதிகள் என்பதால்.. மக்கள் எண்ணைக்கையை கணிப்பதில் சிரமம் இருந்தது..! :icon_idea:

நன்றி.

8000 தொடக்கம் 10,000 வரை மக்கள் வந்திருந்ததாக முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் ILC வானொலிக்கு சொன்ன சிலர் 15,000 என்றும் பின்னர் 25,000 ஆக அதிகரித்தது என்றும் கூறினார்கள். உணர்ச்சி பெருக்கில் அவ்வாறு கூறினார்களோ அல்லது கணிக்க தெரியாமல் அவ்வாறு கூறினார்களோ தெரியவில்லை.

அவ்வளவு மக்கள் வந்திருப்பதாக வேறொரு செய்திகளிலும் காண முடியவில்லை.

எதற்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்று போட்டு விடுகிறேன். :)

காணொளியில் சொல்கிறார்கள் தானே.. மக்கள் இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. ஆரம்பத்தில் கண்ட தொகையை வைத்து அப்படி எழுதப்பட்டிருக்கக் கூடும்..! :icon_idea:

6 June 2012Last updated at 14:02 GMT :)

Edited by காதல்

காதல், நான் செல்லவில்லை (காரணம் எனக்கு முடக்குவாத நோயால்) என் சகோதரன் சென்றிருந்தான்.. 25.000 மேற்படோர் கலந்து கொண்டதாய் சொன்னான்.

காதல், நான் செல்லவில்லை (காரணம் எனக்கு முடக்குவாத நோயால்) என் சகோதரன் சென்றிருந்தான்.. 25.000 மேற்படோர் கலந்து கொண்டதாய் சொன்னான்.

நன்றி அண்ணா, அப்படியென்றால் அவர்கள் கூறியது சரியாக இருக்கலாம். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

Around 8,000 protestors were seen at the Marlborough House and earlier at the Mansion House, which was hired by Commonwealth Business Council (CBC) for Commonwealth Economic Forum.

இப்படி தான் தமிழ்நெட் சொல்கிறது. ஆனால் மேலும் மேலும் வந்து குவித்த மக்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அந்தத் தொகை.. இதை விடக் கூட என்றே நான் கணிக்கிறேன்..!

http://www.tamilnet....=79&artid=35260

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர்கள் சென்றவர்கள் எல்லாத்தையும் சேர்த்து பத்தாயிரம் பேரளவில் இருக்கலாமென அங்கு நிகழ்வினை நடத்திய நண்பர் ஒருத்தர் சொல்லியிருந்தார். பிரித்தானியாவில் எம்மவர் தொகையில் இது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். காரணம் சில ஊடகங்கள் வேணுமெண்டே குழப்பியதாகவும். அதே நேரம் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையின்னை போட்டிகளால் சனம் வெறுப்படைந்து போயுள்ளமையும் இதற்கு ஒரு காரணம். இனிமேலாவது அனைத்துலக செயலகம். தலைமை செயலகம். நாடுகடந்த அரசு ..தமிழர் பேரவை. ஒண்டு தனித்தனியாக போட்டிக்கு நிகழ்வுகள் செய்யாமல் ஒற்றுமையாக செய்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் மக்கள் இன்னமும் அதிகமாக பங்களிப்பார்கள்.அதே நேரம் இன்னமும் தங்களை தேசிய உடகம் என்று மக்களை ஏமாற்றாமால் தங்கள் கடைமையை அவர்களும் உணர்ந்து செயற்படவேண்டும்.

Around 8,000 protestors were seen at the Marlborough House and earlier at the Mansion House, which was hired by Commonwealth Business Council (CBC) for Commonwealth Economic Forum.

இப்படி தான் தமிழ்நெட் சொல்கிறது. ஆனால் மேலும் மேலும் வந்து குவித்த மக்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் அந்தத் தொகை.. இதை விடக் கூட என்றே நான் கணிக்கிறேன்..!

http://www.tamilnet....=79&artid=35260

நன்றி அண்ணா. வந்தவர்கள் பலர் களைத்தவுடன் இடையில் சென்றிருக்க கூடும். புதிதாக பலர் கலந்து கொண்டிருக்க கூடும். சரியான தொகையை கணிப்பது கடினம் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

எதுஎப்படியே.. இந்த ஆர்ப்பாட்டம் முன்னையவற்றை விட.. பிரித்தானிய ஆளும் வர்க்கத்திற்கும் உலகிற்கும்.. எமது செய்தியை ஆணித்தரமாக காவிச் சென்றிருக்கிறது என்பது மட்டும் கள யதார்த்தமாகும்...! :icon_idea:

இக்குளறுபடிகள் நேற்றைiய பிற்பகலில் GTV இனால் சிறப்பாக/வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ... நிர்வாகத்தை சேர்ந்த முக்கியஸ்தகர் ஒருவர் கூறினாராம், இதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும்!!!

இக்குளறுபடிகள் ... "நா.க.த.அ இன் வெளிவிவகார அமைச்சர் மேன்மைமிகு தயாபரனினால்" திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாம். ... இது தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றனவாம், விபரங்களாக ஓசிப்பத்திரிகையிலோ அல்லது யாழிலோ வெலியிடப்படலாம் என்கிறார்கள் ...

... தயாபரன் யார் ஏவலில் இக்கூத்தை ஆடினார்???????????

Edited by Nellaiyan

வந்தவர்கள் சென்றவர்கள் எல்லாத்தையும் சேர்த்து பத்தாயிரம் பேரளவில் இருக்கலாமென அங்கு நிகழ்வினை நடத்திய நண்பர் ஒருத்தர் சொல்லியிருந்தார்.

நன்றி.

பிரித்தானியாவில் எம்மவர் தொகையில் இது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

காரணம் சில ஊடகங்கள் வேணுமெண்டே குழப்பியதாகவும். அதே நேரம் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையின்னை போட்டிகளால் சனம் வெறுப்படைந்து போயுள்ளமையும் இதற்கு ஒரு காரணம். இனிமேலாவது அனைத்துலக செயலகம். தலைமை செயலகம். நாடுகடந்த அரசு ..தமிழர் பேரவை. ஒண்டு தனித்தனியாக போட்டிக்கு நிகழ்வுகள் செய்யாமல் ஒற்றுமையாக செய்தால் இதுபோன்ற நிகழ்வுகளில் மக்கள் இன்னமும் அதிகமாக பங்களிப்பார்கள்.அதே நேரம் இன்னமும் தங்களை தேசிய உடகம் என்று மக்களை ஏமாற்றாமால் தங்கள் கடைமையை அவர்களும் உணர்ந்து செயற்படவேண்டும்

ஆனால் எமக்கு கிடைத்த தகவல் படி இவ்வளவு நாள் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று தான் அதிகளவு மக்கள் கூடியுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். காரணம் இம்முறை தான் குழப்பமில்லாமல் எந்தவொரு பிரிவுமில்லாமல் மீண்டும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தொகையினர் என்றாலும் மக்கள் தங்களால் முடிந்த மட்டுக்கு பேரணிக்கு சென்று பங்களிப்பு செய்திருக்கிறார்கள் தானே அவ்வளவும் போதும்..நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து உறவுகளுக்கும் உளம் நிறைந்த நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெல்லையன்.. இந்த சந்தியில் சீண்டு முடியிற வேலையை விட்டிட்டு.. வேற வேலை இருந்தாப் பாருங்க சார். நாடு கடந்த தமிழீழ அரச ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை நான் என் கண்ணால் கண்டேன். சும்மா.. வந்து குழப்பகரமான வதந்திகளைப் பரப்புவதை தயவுசெய்து கைவிடுங்கோ. சும்மா வந்ததி பரப்பிக்கிட்டு திரியுற.. உங்களைப் போல ஆக்களுக்கு ஊரில என்றால் கம்பத்தில கட்டி பச்சை மட்டை அடிதான் விழுந்திருக்கும்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

war criminal in London

tamil.jpg

மகிந்தவின் முகத்தில், எண்ணை வடிகின்றது :D:icon_idea:

_60726280_014960291-1.jpg

தமிழினப் படு கொலையாளி மகிந்த ராஜபக்சவின், இங்கிலாந்துப் பிரயாணத்தை...

இரண்டாவது முறையும்..., மூக்கில் கரி பூச வைத்த உலகத் தமிழர்க்கும்.

ILC வானொலியின் இணைப்பைத் தந்த குயீனுக்கும்,

அந்த இணைப்பை.. அழகிய எழுத்துமுறையில்... யாழ் கருத்துக்கள உறவுகளுடன் பகிர்ந்து கொண்ட காதலுக்கும்,

சுடச், சுட.... படங்களை இணைத்த சுபேஸ் தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வது என்று, தெரியவில்லை.

நன்றி சகோதரங்களே....

Edited by தமிழ் சிறி

எவ்வளவு தொகையினர் என்றாலும் மக்கள் தங்களால் முடிந்த மட்டுக்கு பேரணிக்கு சென்று பங்களிப்பு செய்திருக்கிறார்கள் தானே அவ்வளவும் போதும்..நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து உறவுகளுக்கும் உளம் நிறைந்த நன்றிகள்....

ஆம் அக்கா, ஆனால் பிழையாக இருந்தால் யாழில் வழங்கப்பட்ட செய்தி பிழை என்று நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கேட்டேன். :)

இந்த செய்திக்கும் யாழுக்கும் தொடர்பில்லை. ILC வானொலிக்கு மக்கள் வழங்கிய செய்தியை தான் எழுதியுள்ளோம். வாசகர்கள் புரிந்துகொள்ளுங்கப்பா. :)

Edited by காதல்

இக்குளறுபடிகள் நேற்றைiய பிற்பகலில் GTV இனால் சிறப்பாக/வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ... நிர்வாகத்தை சேர்ந்த முக்கியஸ்தகர் ஒருவர் கூறினாராம், இதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும்!!!

இக்குளறுபடிகள் ... "நா.க.த.அ இன் வெளிவிவகார அமைச்சர் மேன்மைமிகு தயாபரனினால்" திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாம். ... இது தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றனவாம், விபரங்களாக ஓசிப்பத்திரிகையிலோ அல்லது யாழிலோ வெலியிடப்படலாம் என்கிறார்கள் ...

... தயாபரன் யார் ஏவலில் இக்கூத்தை ஆடினார்???????????

30ec5d65-5d09-4dd1-a625-87b996b475ca1.jpg

... நேற்றைய தினம் GTV இல் இடம்பெற்றதை பார்த்தோர் ... அறிவர்! ...

அண்ணா நீங்கள் பார்க்க விரும்பி கேட்ட படம். :lol: உங்களை நினைத்து சுபேஸ் அண்ணா இணைத்துள்ளார். :lol:

தமிழ் சிறி அண்ணாவின் ஆசை நிறைவேற்றப்பட்டது....

389340_477921342234458_159866785_n.jpg

ஐயா நெல்லையன்.. இந்த சந்தியில் சீண்டு முடியிற வேலையை விட்டிட்டு.. வேற வேலை இருந்தாப் பாருங்க சார். நாடு கடந்த தமிழீழ அரச ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை நான் என் கண்ணால் கண்டேன். சும்மா.. வந்து குழப்பகரமான வதந்திகளைப் பரப்புவதை தயவுசெய்து கைவிடுங்கோ. சும்மா வந்ததி பரப்பிக்கிட்டு திரியுற.. உங்களைப் போல ஆக்களுக்கு ஊரில என்றால் கம்பத்தில கட்டி பச்சை மட்டை அடிதான் விழுந்திருக்கும்..! :lol::icon_idea:

இந்த தயாபரன் எனும் ஜனகன் வாத்தியை சிலர் அறிந்திருக்க வைய்ய்பில்லை ... விபரமாக தேவையாயின் இங்கே எழுதலாம்! .. பச்சை மட்டையென்ன ... புலிக்காசை சுற்றியதற்கு ஜீப்பே கொழுத்துப்பட்டதாம் ... இப்போ வெளிவிவகார அமைச்சர்வாழ்!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் இங்கு என்ன கிரிக்கெட் மட்ச்சா நடந்தது :unsure: வர்ணணை அந்த மாதிரி இருக்குது :mellow:^_^

இந்த, நேரடி வர்ணனையை... கேட்க முடியாதவர்களுக்காக,

நான் தான் காலையில்.... சுபேஸிடமும், காதலிடமும் தொடர்ந்து இணைக்கும் படி கேட்டிருந்தேன்.

அதில், என்ன தவறை கண்டு கொண்டீர்கள் ரதி. :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் போட்டோக்கள்...

------

481313_2832743916012_326323998_n.jpg

380304_2825841223449_1860882589_n.jpg

576796_2825848223624_547334225_n.jpg

அருமையான.... படப்பிடிப்பு.

மீண்டும் நன்றி, சுபேஸ். :rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.