Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

Featured Replies

இனம் என்பதை உலகம் இப்படி பொதுவாக வரையறுக்கிறது: ஒரு தனித்துவமான மொழியை பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட, தனித்துவமான ஒரு மக்கள் கூட்டத்தை "இனம்" என்று சொல்கின்றது.

குறிப்பிட்ட இனம் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியமான நிலப் பரப்பையும் கொண்டிருந்தால், அது ஒரு தேசிய இனம் என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகமைகளை கொண்டிருக்கும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியை பேசாது, பல மொழிகளைப் பேசுகின்ற தேசியங்களும் உலகில் இருக்கின்றன. இவர்களை ஒரே விதமான பிரச்சனையும், ஒன்றாய் கூடியதன் பயனாய் உருவாகும் தனித்துவம் மிக்க பண்பாடும் ஓரே தேசியமாக மிளிரச் செய்யும். உ-ம்: அமெரிக்க தேசியம்.

  • Replies 153
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அதே போன்று ஒரு மொழியைப் பேசுகின்ற ஒரு இனம் வௌ;வேறு பண்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வௌ;வேறு பிரச்சனைகளைக் கொண்டிருப்பதாலும் தனித் தனித் தேசியங்களாக பிரிந்து செல்லும்.

அரேபிய மொழியைப் பேசுவதோடு, தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டிருந்தும், ஒரு அரேபிய தேசியம் உருவாக முடியவில்லை. இருபதிற்கும் மேற்பட்ட தேசியங்களாக அந்த இனம் திகழ்கின்றது.

ஜேர்மனியில் வாழ்கின்ற ஜேர்மன் மொழிபேசுபவனே தன்னை ஒரு ஜேர்மனியன் என்று அறிமுகம் செய்கின்றான். அவன் சுவிஸில் வாழ்ந்தாலோ, அல்லது அவுஸ்ரியாவில் வாழ்ந்தாலோ தன்னை தனித்துவமான தேசியமாகவே உணர்கின்றான்.

வரலாறும், பிரச்சனைகளும், பண்பாடுகளும் ஒரு மக்கள் கூட்டத்தை அதே மொழியைப் பேசுகின்ற மக்கள் கூட்டத்தில் இருந்து தனித்துவமாக பிரித்துக் காட்டுகின்றன.

  • தொடங்கியவர்

அதே போன்று ஈழத்தில் வாழுகின்ற தமிழ் மொழியைப் பேசுகின்ற முஸ்லீம்களும் தனித்துவமான பண்பாட்டையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கின்றார்கள்.

அதை விட மிக முக்கியாமாக தமது நிலப்பரப்பின் அயலில் வாழ்கின்ற தமிழர்கள் பற்றிய அச்சத்தையும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களும் முஸ்லீம்கள் பற்றிய தவறான எண்ணங்களையும், அச்சங்களையும் அத்தோடு அவர்கள் தமக்கு கீழ் வாழ வேண்டும் என்கின்ற மேலாதிக்க மனப்பாங்கையும் கொண்டிருக்கின்றனர்.

இது தமிழீழத்தில் முஸ்லீம்கள் தனியான அலகைப் பெற்று தம்மைத் தாமே நிர்வாகிப்பதற்கான தகமைகளை தானாகவே வழங்கி விடுகின்றது.

ஐக்கிய இலங்கையில் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைய முடியாது ஒரு நிலையையும் ஏற்படுத்தி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் சபேசன் ....சிறிலங்கா முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று சொல்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தேசிய இனமென்றால் தமிழ்பேசும் கிறீஸ்துவர்களும் ஒரு தேசிய இனம்.. எனென்றால் அவர்களும் பல இடங்களில் பல்லாண்டுகளாக பூர்வகுடிகளாக வாழ்கிறார்கள்.. :rolleyes:

அடுத்ததாக, வெள்ளாளர்கள் ஒரு தேசிய இனம்.. அவர்களும் ஒரு நிலப்பரப்பில், மொழி அலகைக்கொண்டு பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார்கள்.. :lol:

  • தொடங்கியவர்

ஒரு தேசியமாக உருவாக முடியாத அளவிற்கு அவர்களுக்கு நிலப்பரப்புச் சார்ந்த சிக்கல் இருக்கின்றது. கிழக்கில் ஒரு கிராமத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தால், அடுத்த கிராமத்தில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதற்கு அடுத்த கிராமத்தில் முஸ்லீம்கள். இதைத்தான் தேங்காய்ப்பூவும், பிட்டும் போல என்று சொல்வார்கள்.

ஆயினும் இலங்கைத் தேசியத்திலோ, அல்லது தமிழீழத் தேசியத்திலோ வாழக்கூடிய ஒரு தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்களால் தமது கிராமங்களை நிர்வாகிக்கின்ற ஒரு அலகினை பெறுவதற்கான தேவை அவர்களுக்கு இருப்பதாக அவர்கள் கருதினால், அதை அடக்கப்படும் இனத்தை சேர்ந்த ஒருவனான என்னால் புரிந்து கொள்ளவும், ஆதரிக்கவும் முடியும்.

  • தொடங்கியவர்

தனித்துவமான பண்பாடுகளையும் நிலப்பரப்புக்களையும் கொண்டிருக்கும் இனங்களும், சமூகங்களும் இணைந்து ஒரு தேசியமாக திகழ்வதை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

தனித்துவமான பண்பாடும், தொடர்ச்சியான பாரம்பரிய நிலப்பரப்பு இருப்பதனாலோ அந்த மக்கள் கூட்டம் ஒரு தேசியமாக உருவெடுக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

அந்த மக்கள் கூட்டம் தற்போது உள்ளடக்கப்பட்டிருக்கும் தேசியத்தில் பாதுகாப்பாக உணர்கின்றதா என்பது இங்கே முக்கியம்.

இலங்கைத் தேசியத்தில் தமிழினம் பாதுகாப்பாக உணரவில்லை. அது தனித் தேசியமாக உருவாவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்கள் அங்கே தம்மை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்கள் அதற்காக தனி அலகு போன்ற ஏற்பாடுகளை கோருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தனித்துவமாக வாழும் நிலப்பரப்பை சிங்களத்துடன் இணைத்துவிடுவதுதான் தமிழீழத்திற்கான சரியான தீர்வாக அமையமுடியும்..

தமிழர் போராட்டத்தில் அவர்கள் அரசியல்ரீதியில் சிங்களத்துடனேயே தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.. பிற்பாடு சிங்களுத்துடன் பேசி அவர்கள் தமக்கான தீர்வைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்..

  • தொடங்கியவர்

தமிழீழம் உருவாகக்கூடிய நேரத்தில், முஸ்லீம்கள் தாம் பாரம்பரியமாகவும், பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற நிலப்பரபு;புக்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டே ஆக வேண்டும். எமது முடிவை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் என்ன முஸ்லிம்களின் பிரதிநிதியா ? :rolleyes:

  • தொடங்கியவர்

அது எப்படி நான் அவர்களின் பிரதிநிதயாக முடியும்? ஆனால் என்னுடைய இனத்திற்கு உரிமைகள் வேண்டும் என்று கேட்கின்ற நான், இன்னொரு சமூகமும் அப்படிக் கேட்பதை புரிந்து கொள்வது இயல்பான ஒன்று அல்லவா?

அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் உருவாகக்கூடிய நேரத்தில், முஸ்லீம்கள் தாம் பாரம்பரியமாகவும், பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற நிலப்பரபு;புக்கள் தொடர்ந்தும் சிறிலங்காவுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்பினால், அது சிக்கல் மிகுந்ததாக இருந்தாலும் கூட, அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டே ஆக வேண்டும். எமது முடிவை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.

தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கம் அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நீக்கி, நட்பும், சகோதரத்துவமும் மிக்க மக்களாக அவர்களை மாற்றுவதே சிறந்த மாற்றுவழியாக இருக்க முடியும். அதற்கான காலமும் சந்தர்ப்பமும் இன்னமும் இருக்கின்றதா என்பதே என்னுடைய அச்சம் மிகுந்த கேள்வியாகும்.

தமிழீழம் அமைந்தால் அவர்கள் எங்களுடன் இருக்க முடியுமா என்பதற்கான விடை அவர்களிடம் இல்லை.. அது எங்களிடமே உண்டு..

போராட்டகாலத்தில் எங்கே அவர்களின் ஆதரவு இருந்தது என்பதைப் போறுத்ததே அவர்களது உரிமைக்கான அளவுகோலும் ஆகும்.. சிங்களத்துடன் இணைந்து நின்றவர்கள் தமிழீழம் அமையும் பட்சத்தில் எங்கே சேருவது என்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கமுடியாது..

அவர்கள் ஏற்கனவே தமது முடிவை எடுத்து சிங்களத்துடன் இணைந்து நிற்கிறார்கள்.. முள்ளிவாய்க்கால் அவலத்தை ஐநாவில் இல்லையென்று சாதித்தவர்கள் முஸ்லிம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்.. அவர்கள் தம் முடிவை எடுத்துவிட்டார்கள்.. உங்களுக்கு மட்டுமே குழப்பமாக இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு பிரச்சனை என்று முஸ்லிம்கள் கவலை கொள்வதுண்டா ? தமிழர்கள்தான் ஓடியோடி அவர்களுக்கு உதவுகின்றார்கள் . :(

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

:lol: :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

எனக்கு குழப்பம் இல்லை. அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இங்கும் நீங்களோ நானோ உத்தரவு போட முடியாது.

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

ஆழமான பார்வை. நன்றி

.

அதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும். மன்னாரை கத்தோலிக்கர்களும், மற்றும் யாழ்ப்பாண / மட்டக்களப்பு நகரப் பகுதியை மெத்தடிஷ் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பிரித்துத் தர வேண்டும்.

சைவ சமய உறவுகளின் கோரிக்கைகளைப் பற்றி, அவர்கள்தான் கருத்துக் கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குழப்பம் இல்லை. அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இங்கும் நீங்களோ நானோ உத்தரவு போட முடியாது.

தவறு.. அவர்கள் தம் நிலப்பரப்பை சிங்களத்துடன் இணைத்தோ, தனிநாடாகவோ கொண்டு இயங்கவேண்டியதுதான்.. இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.. உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்..

அரசியல் ரீதியாக சிங்களத்தின்பக்கம் அவர்கள் நிற்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா? பிறகெப்படி எங்களுடன் இருக்க முடியும்?

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

அதுசரி.. எங்கள் மொழியைப் பேசிக்கொண்டு சிங்களத்துடன் இணைந்து செயற்படுவது எந்த வகையில் சேர்த்தி..? இதற்கென ஒரு சிறப்புச்சொல் உண்டு.. ஆனால் அது தற்போது தடைசெய்யப்பட்ட சொற்றொடர் ஆகும்.. :D

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

அவர்களின் அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளாதது வேதனை.. பலமுள்ளவர் பக்கம் என் அரசியல் என்பது அவர்களது அரசியல்.. நீங்கள் என்னதான் அரவணைத்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

தமிழர்களுக்கு எந்தக்காலத்தில் பலம் இருந்திருக்கிறது எதையாவது செய்வதற்கு? பலமென்பது ஆயுத பலமல்ல.. அரச பரிபாலனம்.. சிங்களவன் வைத்திருக்கிறான். அதனால் அங்கே ஒட்டிக்கொண்டுள்ளார்கள்.

நாளை தமிழர்களுக்கு ஒரு தேசம் விடியுமாயின், இவர்களது அரசியலும் மாறும் என்பதை விளங்கிக் கொண்டுள்ளேன்.. ஆனால் அந்த மாற்றத்தை வரவேற்பது நல்லதல்ல..

இன்று அவர்கள் மாறிக் காண்பிக்கட்டும்.. எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

நாம் யார்?

எமக்கு ஏதாவது பிரச்சினைகள் உண்டா?

அதற்கு தீர்வு என்ன?

அதற்கு பின்னர்தான்

பக்கத்து அப்துல்லாவுக்கு என்ன பிரச்சினை?

அவன் எனக்கு ஏன் வணக்கம் சொல்வதில்லை?

அது பற்றி ஏன் அவர் என்னுடன் பேசாமல் இருக்கிறார்?

அவர் என்னுடன் பேசவேண்டுமென்றால் எதை எதை நான் அவருக்கு விட்டுக்கொடுக்கணும்?

அடிபட்டாலும் குத்துப்பட்டாலும் அடுத்தவீட்டு வீரசிங்கவுடன் எப்படி சிரித்து சிரித்து பழகி மகிழ்கிறார்?

என்பதெல்லாம்??????

வந்திட்டினம்

ஏதோ நாங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது போல்???

தலைவர் எத்தனை முறை கூப்பிட்டார்?

எத்தனை வி;டுக்கொடுப்புக்களைச்செய்தார்?

எத்தனை ஒப்பந்தங்களைளப்போட்டார்???????????

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் போகவில்லை போலக் கிடக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்களை விட ஏனைய மாகாணங்களில் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.அத்தோடு அவர்களுக்கு தமிழர்களுடன் சேர்ந்து வாழ விருப்பமும் இல்லை. சிங்களவர்கள் அடித்தாலும் அவர்கள் நல்லவர்கள் என்கிறார்கள்.தமிழர்கள் அடித்தால் தமிழர்கள் கிராமத்தையே இல்லாமல் செய்து விடுகிறார்கள்.

அவர்களுக்கு என சரியான தலைமை இல்லை.அவர்களுக்கு என்ன தேவை என்று சொல்ல கூட அவர்களுக்கு சரியான தலைமை இல்லை.அவர்களுக்கான தனி அலகோ,மாகாண சுயாட்சியோ எதுவோ சிங்களவர்களுடன் தான் என்பது நடைமுறை சாத்தியமானது.

அவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழகளுடன் இணைய வேண்டுமென்பதில்லை.

ஆழமான பார்வை. நன்றி

.

அதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும். மன்னாரை கத்தோலிக்கர்களும், மற்றும் யாழ்ப்பாண / மட்டக்களப்பு நகரப் பகுதியை மெத்தடிஷ் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் பிரித்துத் தர வேண்டும்.

சைவ சமய உறவுகளின் கோரிக்கைகளைப் பற்றி, அவர்கள்தான் கருத்துக் கூறவேண்டும்.

:D

அப்படி பார்த்தால் சைவ சமயத்தவர் எங்களுக்கும் தனிநாடு வேணும் தப்பிலி அண்ணா. ஆனால் கிடைத்த பிறகு நாங்களும் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்திருப்போம். ஏனென்றால் எங்கள தலைவன் ஒன்று. அவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் நாம் ஒற்றுமையாக உள்ளோம். :)

தனி நாடு தமிழர்களுக்கு கிடைச்சிட்டுது இனி மேல் முஸ்லீம்களுக்காக போராடுவோம்

:lol: :lol:

தன்னுடைய மொழியைப் பேசுகின்ற ஒரு மக்கள் கூட்டத்தையும், அவர்கள் சார்ந்த நிலப்பரப்பையும், பொருளாதார வளத்தையும் இழப்பது தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் தோல்வி.

இன்று இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் எம்மொழியை மறந்து சிங்களத்தை தான் பேசுகிறார்கள். அதாவது பெற்றோர் தமிழ் பேசும் முஸ்லிம், பிள்ளைகள் சிங்களம் பேசும் முஸ்லிம்.

அந்த மக்களை வென்றெடுக்க முடியாமல் போனது எமது அரசியல் வங்குரோத்துத்தனம். முஸ்லீம்கள் பற்றிய விரோத எண்ணங்களை வளர்க்கின்ற அரசியலையும், ஊடகங்களையும் ஆதரிப்பதன் ஊடாக தமிழர்கள் தமது தோல்வியை தேடிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் கடந்து நூறு ஆண்டுகளாக முஸ்லீம்கள் பற்றி இதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இன்றைக்கு இன்னும் மோசம் அடைந்திருக்கிறது. இது அவர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவையை இன்னும் அதிகப்படுத்துகிறது.

தமிழர்களுடன் பிரச்சினையை வளர்த்துக்கொள்வதற்கு மூலகாரணமாக அமைந்தது முஸ்லிம்களின் செயற்பாடுகள் தான். ஆனால் அதன் பின்னும் தலைவர் அவர்களை எம்முடன் சேர்க்கும் பணியை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் தான் எமக்கு விரோதமாக நடக்கிறார்கள்.

எம்மக்களாவது வார்த்தையால் மட்டும் தான் எம் விரோதம் பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு, மக்களை அடித்தல், காட்டிக்கொடுத்தல் போன்று செயல்முறை மூலம் தம் விரோதத்தை இன்னும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Edited by காதல்

இலங்கைத் தேசியத்தில் தமிழினம் பாதுகாப்பாக உணரவில்லை. அது தனித் தேசியமாக உருவாவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகமான முஸ்லீம்கள் அங்கே தம்மை பாதுகாப்பாக உணரவில்லை. அவர்கள் அதற்காக தனி அலகு போன்ற ஏற்பாடுகளை கோருகின்றார்கள்.

தமிழர்களுக்கு தனிநாடு கிடைக்க வேண்டுமென்று தமிழர்கள் போராடுகிறார்கள். அத்தேசியத்தில் முஸ்லிம்களும் இருக்க வேண்டுமென்றால் எமது போராட்டத்தில் அவர்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். அவர்கள் பங்களிப்பு எமக்காக இல்லாமல் சிங்களவர்களுக்காக உள்ள போது அவர்களை எப்படி தமிழ் தேசியத்தில் உள்ள தனித்துவம் மிக்க சமூகம் என்று கூறுவது? அவர்கள் எப்படி தமக்கான தனி அலகை எம்மிடம் கேட்க முடியும்? சிங்களவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வளவு நாள் (ஆயுத போராட்ட காலத்தில்) தான் எம்முடன் சேராமல் கிழக்கில் எம்மக்களை காட்டிக்கொடுத்தார்கள். (ஒரு சிலர் இணைந்திருந்தால் அவர்களை குற்றம் சாட்டவில்லை). இனி எம் போராட்டத்தில் உயிரைகொடுக்கும் படி யாரும் கேட்க மாட்டார்கள். இப்பொழுது நடப்பது அகிம்சை வழி போராட்டம். இனியாவது தமது பிழைகளை உணர்ந்து சிங்களவர்களை கைவிட்டு தமிழர்களுக்காக குரல் கொடுப்பார்களா? கொடுப்பார்கள் என்றால் தமிழ் முஸ்லிம் சமூகம் இணைந்தே இருக்கும். ஆனால் இப்பொழுது சிங்களவர்களுக்கு ஆதரவளித்து விட்டு தமிழீழம் கிடைத்த பின் தமக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டால் முடிவு அவர்கள் கையில் இல்லை.

எமக்கே இன்னும் நாடு கிடைக்கவில்லை. முதலில் எமக்கு நாடு கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.

மூஞ்சூறு தான் போக வழியைக்காணவில்லை, துடைப்பங்கட்டையையும் தூக்கிகொண்டு போனது என்பதுபோல் உள்ளது.

யதார்த்தத்தில் பார்க்கும்போது காலங்காலமாக முஸ்லீம்களில் நிலைப்பாடு என்ன என்றால், தமிழர்களுக்கு தனி அலகு என்றால் தமக்கும் தனி அலகு வேண்டும், தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழச்சம்மதம் என்றால் தமக்கும் ஐக்கிய இலங்கையே போதும் என்பதாகும்.

அதாவது, முஸ்லீம்களின் தூரநோக்கு அரசியல் தமிழர்கள் சார்ந்தநிலையில் தமிழருக்கு போட்டியானதான ஒன்றாக உள்ளதொழிய பெருன்பான்மை இனமான சிங்களவரின் தான்தோன்றித்தனமான போக்குபற்றி அலட்டிக்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது.

அடிப்படையில் சிறீ லங்காவில் பிரச்சனை தோன்றியதன் பிரதான காரணம் மொழிப்பிரச்சனையே. ஒன்று தமிழ், மற்றையது சிங்களம். முக்கியமாக தனிச்சிங்கள மொழி அமுலாக்கமே ஐக்கிய இலங்கையை கூறுபோட்டது. ஆனால், மூஸ்லீம்களுக்கு மொழி எந்தக்காலத்திலும் ஒரு பிரச்சனையாக அமையவில்லை.

அடிப்படையில் குறிப்பாக மொழியின் பின்னாலேயே பிரச்சனைகள் தோன்றின, தோன்றுகின்றன. தமிழருக்கு தமிழர் தாயகம் வேண்டும் என்றால் அங்கு பிரதான மொழியாக தமிழ் உள்ளது. இதேபோல் சிங்களருக்கு சிங்களம் உள்ளது.

சபேசனின் அணுகுமுறை முற்றிலும் தவறானது. தப்பிலி சொல்வதுபோல் சபேசனின் அணுகுமுறைப்படி பார்த்தால் கிறீஸ்தவர்களுக்கும் தனி அலகு வேண்டும் என்பதே நியாயமானது. தவிர, பிரதேசவாத அடிப்படையில் உதாரணமாக வலிகாமம், வடமாராட்சி, தென்மாராட்சி, தீவுப்பகுதி, வன்னிப்பகுதி என வெவ்வேறு தனி அலகுகள் உருவாக்கப்படவேண்டிய தேவையும் ஏற்படும். ஏனென்றால் ஒவ்வொரு பிரதேச மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், மற்றும் இன்னோரன்ன அம்சங்களில் வேறுபாடுகள் உள்ளன.

  • தொடங்கியவர்

முஸ்லீம்களையும் கிறிஸ்தவத் தமிழர்களையும் ஒப்பிடுவது அர்த்தமற்றது. வரலாறு, பண்பாடு, அரசியல் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேசுகின்ற குழந்தைத்தனமான வாதம்.

இங்கே தெளிவாக ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். ஒரு மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்படுதாகவும், தமது உரிமைகள் பறிபோவதாகும், பாதுகாப்பு அற்ற சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் உணர்கின்ற நிலை வருகின்ற போது, அந்த மக்கள் கூட்டத்திற்கு தன்னை பாதுகாப்பதற்கான அலகுகளை (தனி நாடு, தனி மாகாணம், தனி அலகு) உருவாக்கும் தேவை உருவாகும்.

சைவத் தமிழர்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவத் தமிழர்களுடன் நட்புறவை வரலாற்றுரீதியாக பேணி வந்திருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுடன் அரச உத்தியோகத்தில் வீற்றிருந்த சைவ வேளாளத் தமிழர்கள் கிறிஸ்தவ சமயத்துடன் மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பின்பு போராட்ட காலத்திலும கிறிஸ்தவ மதகுருமாருடனும் சிறந்த உறவை போராட்டத் தலைமை பேணி வந்தது.

ஆனால் துன்பியல் நிகழ்வாக முஸ்லீம்களுடம் தமிழர்கள் அப்படியான ஒரு உறவை பேணவில்லை. விரோதமான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்கள்

  • தொடங்கியவர்

கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை முஸ்லீம்களும் தமிழர்கள் மீது வைக்கின்றார்கள். இவற்றை மாறி மாறி சொல்லிக் கொண்டிருப்பது இன்றைக்கு பிரயோசனம் அற்றது.

சிங்களவர்கள் தமிழர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழர்கள் முஸ்லீம்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியே மாறி மாறி எதிர்பார்க்க வேண்டியதுதான்.

யதார்த்தத்தை உணர்ந்து அதற்கு ஊடாக எப்படி பயணிப்பது என்பதை தமிழினம் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.