Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் ஆவணம் – தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 1

Featured Replies

30 வருட தமிழர் போராட்டம் ஓய்விற்குக் கொண்டுவரப்பட்ட போது அதை தடுக்கக்கூடிய சக்தி தமிழகத்திற்கிருந்தும் திராவிடக் கட்சிகளால் ஏன் அதைச் செய்யமுடியாமற் போனது ?

ஓய்வு? கேட்க நல்லா இருக்கு.

எவரின் சொல்லும் கேட்டாமல் நாங்கள் அடிப்பம் பிடிப்பம் என்று போட்டு பிறகு அவன் தடுக்கேல இவன் பிடிக்கேல என்று நல்லா இருக்கு நியாயம்.

திராவிடம் என்ன அமெரிக்காவைவிட பலமானதா?

தூரதிஸ்டவசமாக "அழிக்கப்பட்டது" என்ற சொல்லைப் பாவிக்க முடியாமல் இருக்கிறது.

திராவிடம் பலமானதோ இல்லையோ.. இந்தியா பலமானது. அதனால் தான் சீமான் இந்திய யூனியனை ஆதரிக்கிறார் போலும்.

அமெரிக்கா ஒன்றை அழிக்க நினைச்சா கட்டாயம் அது அழிய வேண்டும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிகிறது. இது மாக்ஸிய சிந்தனைக்கு முரணாச்சே..

  • Replies 73
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி கீற்று இதழுக்கு என்ன ஆனது...?? மூண்று வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆசிரியர் இண்டைக்கு இல்லையா...?? ஏன் இந்த மாற்றம்...!

கேட்க்கிறது புரியாவிட்டால் மூண்று வருடங்களுக்கு முன்னர் இதே கொள்கையை பாராட்டிய கீற்று இண்று எதிர்ப்பதின் காரணம்...??

எனக்கு புரிய சீமான் மாறவில்லை கீற்று தான்...

3 வருஷத்துக்கு முன்னர் இருந்த நமது தலைவர் இண்டைக்கு இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூரதிஸ்டவசமாக "அழிக்கப்பட்டது" என்ற சொல்லைப் பாவிக்க முடியாமல் இருக்கிறது.

திராவிடம் பலமானதோ இல்லையோ.. இந்தியா பலமானது. அதனால் தான் சீமான் இந்திய யூனியனை ஆதரிக்கிறார் போலும்.

அமெரிக்கா ஒன்றை அழிக்க நினைச்சா கட்டாயம் அது அழிய வேண்டும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிகிறது. இது மாக்ஸிய சிந்தனைக்கு முரணாச்சே..

என்ன அண்ணா.. பழைய புளொட்காரனைப் பற்றி எழுதும்போது, மாலதீவு புளட்டை அல்லோ இழுக்க வேணும்... நீங்கள் தேசிய விரோதியா? இவங்கள் ஆரும் எங்கட ஜனநாயகத்தில் கதைக்க கூடாது. யாரங்கே.. இந்த ஆள் துரோகி.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 வருட தமிழர் போராட்டம் ஓய்விற்குக் கொண்டுவரப்பட்ட போது அதை தடுக்கக்கூடிய சக்தி தமிழகத்திற்கிருந்தும் திராவிடக் கட்சிகளால் ஏன் அதைச் செய்யமுடியாமற் போனது ?

ஓய்வு? கேட்க நல்லா இருக்கு.

எவரின் சொல்லும் கேட்டாமல் நாங்கள் அடிப்பம் பிடிப்பம் என்று போட்டு பிறகு அவன் தடுக்கேல இவன் பிடிக்கேல என்று நல்லா இருக்கு நியாயம்.

திராவிடம் என்ன அமெரிக்காவைவிட பலமானதா?

நீங்கள் என்னதான் சொல்லுங்கோ.. உதெல்லாம் நீங்கள் கதைக்கேலாது. நாங்கள் பெரும்பான்மை. மத்தவன் வாயை அடைச்சு நாங்கள் செய்த சாதனை இண்டைக்கும் சொல்லப்படுது.

  • தொடங்கியவர்

நாற்பது கொலை வளக்கில் கைது செய்யப்பட வேண்டியவன் மக்களின் பிரச்சினைக்கு கையைத் தூக்க முடியுமா? தமிழ் மானிலக் கட்சிகளின் மக்கள்பிரச்சினைகள் தொடர்பாக அவர்களது கையறு நிலைமையும் இதனால்த்தான் தமது சொந்த வீட்டிற்காக ஊளல் பெருச்சாளியாய் மாறியவர்கள் மக்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தால் மத்தியிடம் இவர்களை அடக்க வசதியான கடிவாளங்கள் உண்டு. இந்த நிலையை மறைக்கவே பார்ப்பான், பார்பான் என்று கத்துவது!

ஊழல் பெருச்சாளிகளுக்கும் பேசப்படும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.தி மு க என்பதில் திராவிடம் இருப்பதால் அவர்களிடம் பெரியாரின் கொள்கைகள் இருக்குமானால், மக்கள் விடுதலைப் புலிகளிடம், புலிகளின் கொள்கைகள் இருப்பதாக நாங்கள் ஏற்க்க வேண்டும். தனது சுய நலத்திற்காக கொள்கைகளை விற்பவர் புலிகளாகவும் இருந்தனர், திராவிட இயக்கங்களிலும் இருந்தனர்.

  • தொடங்கியவர்

.

30 வருட தமிழர் போராட்டம் ஓய்விற்குக் கொண்டுவரப்பட்ட போது அதை தடுக்கக்கூடிய சக்தி தமிழகத்திற்கிருந்தும் திராவிடக் கட்சிகளால் ஏன் அதைச் செய்யமுடியாமற் போனது ?

அவர்களது கொள்கையிற் பிழையா ? //ஆமாம் அவர்களிடம் கொள்கைகள் இருக்கவில்லை.//

அவர்களது செயற்பாடுகளில் பிழையா ?// செயற்பாடுகள் தமது ஆட்ச்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதாக மட்டுமே இருந்தது.//

ஏன் ?// சுய நலம்.//

*******************

இந்தியாவின் அனேக‌ மானிலங்களிலும் சாதிய அடக்குமுறை ஒருகாலத்தில் தீவிரமாக இருந்தது. இங்கெல்லாம் திராவிடமா சாதீயத்திற்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்தது ?

//இப்போதும் சாதியத்திற்க்கு எதிரான போராட்டங்கள் நடக்கிறது.வட நாட்டில் இத் தகைய இயக்கங்கள் தலித் இயக்கங்கள் என்று அறியப்படுவன.மானிலத்துக்கு மானிலம் வெவ்வேறு கட்ச்சிகள் இருக்கின்றன.

தமிழ் நாட்டில் பெரியாரும் திராவிட இயக்கங்களும் அதே வேலையைச் செய்தன.மற்ற மானிலங்களை விட தமிழ் நாட்டில் பல நலத் திட்டங்களால், பல கோடிப் பேர் பயன் பெற்றனர்.இதனால் வட மானிலங்களை விட தமிழ் நாட்டில் நலைவ்டைந்தோர் அதிக பயன் பெற்றனர்.வட மானிலங்களில் மிக மோசமான அடக்குமுறைகளும் அவற்றிற்க்கு எதிரான நக்சல் தலித்திய இயக்கங்களும் இருக்கின்றன.//

********************

ஒரு ஜனனாயக தமிழ் நாட்டில் மிகச் சிறுபான்மையான பிராமணர்கள் மிகப்பெரும்பான்மையான திராவிடர்களை அடக்குகிறார்கள் என்றால்... எங்கேயோ இடிக்கிறதே ! ஜனனாயகத்தில் பெரும்பான்மை சிறுபான்மையை அடக்குவது தானே முறை. அப்படியானால் திராவிடக் கட்சிகளின் 60+ வருடப் பார்பனியப் பூச்சாண்டி நெசந்தானா ?

//ஏன் மிகச் சிறிய தொகை அய்ரோப்பியர் பல் ஆயிரம் பேரை அடக்கி ஆளவில்லையா? தென் ஆபிரிக்காவில் ஆளவில்லையா? மிகவும் ஊறிப் போன கடவுள் பயமும் இந்து மத பக்தியும் சாதியமும் ,பிராமணர்களுக்கு வசதியான கருவிகளாக அன்றும் இன்றும் இருக்கின்றன.//

*********************

ஒரு இனம் தன் இனத்தவரே தமக்குத் தலமை தாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி பகுத்தறிவிற்கு விரோதமாகும் ?

//எவரும் இதனைத் தவறு என்று சொல்லவில்லையே? யார் தமிழர் என்பதை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி நீங்கள் சொன்னால், இது பற்றி மேலும் பேசலாம். தூய இனம் என்று உலகில் ஒன்றும் இல்லை. //

**********************

சாதீயத்திற்கு எதிரான கொள்கையும் சாதீயத்தையே மையப்படுத்தியது.

சாதிப்பிரிவுகளைக் கடந்த முழு இனத்தையும் மையப் படுத்திய கொள்கை சாதிகளை ஆதரிக்கின்றது எனப் புள‌ம்புவது எப்படிப் பகுத்தறிவாகும் ?

//முழு இனத்தையும் மைய்யப்படுத்த வேண்டும், சாதிப் பிரிவினைகள் அழிய வேண்டும்.எவரும் எந்தத் தொழிலையும் செய்ய வேண்டும் என்பது தானே பகுத்தறிவாளரின் விருப்பம்.அதனை உச்ச நீதிமன்று வரை சென்று தடுப்பது பகுத்தறிவாளர்கள் அல்லவே?//

**********************

60 வருடங்களிற்கு முற்பட்ட சாதி ஒடுக்குமுறைகள் உச்சமாயிருந்த காலத்திற்குத் தேவைப்பட்ட கொள்கைகளிலேயே தமிழினம் இன்னும் காலத்தை ஓட்ட வேண்டுமா ?

//இன்றும் சாதியக் கொடுமை இருக்கும் இடத்தில் அதற்க்கு எதிரான போராட்டமும் அவசியம் தானே? மிக அண்மைய கணெக்கெடுப்பு ஒன்றில் தமிழ் நாட்டின் அனேகம் கிராமக்கள் நகரங்களில் இரட்டைக் குவளை முறமை இருப்பதாகத் தானே செய்திகள் சொல்கின்றன.அந்த மக்கள் தானே இது பற்றித் தீர்மானிக்க முடியும்? அவர்கள் சார்பாக நீங்கள் எப்படித் தீர்மானிப்பீர்கள்?//

**********************

இந்திய யூனியனில் ஒருங்கிணைந்து செயற்படுவது, செயற்பாடுகள் சிலவற்றை காலம் தான் தீர்மானிக்கும் என்பது, கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவது போன்றன (கருத்து புரட்சி) நாம் தமிழரின் நடைமுறை யதார்த்தத்துடன் கூடிய அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

வாழ்த்துக்கள் சீமான்.

எந்த ஒரு உலக மொழியும் தனது சொந்த மண்ணிலேயே மிகக் கேவலமாக மதிக்கப்படும் நிலை தமிழ் நாட்டில் தமிழ் மொழுக்கு கிடைக்கப் பட்டமையைப் போல் தாழ்வு வேறு எந்த மொழிக்கும் கிடைக்க வில்லை! அப்படி ஒரு நிலையை மாற்ற நினைக்கும் ஒரு முயற்சியை மொழி வெறி என்று அழைப்பதானது எத்தகைய வக்கிரமான புத்தி! அடுத்தவன் மண்ணிலா இதை செய்ய நினைக்கின்றார்கள்?

யார் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைத் தடுத்தார்கள்? அதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய தலைவருக்கு உபதேசம் செய்கிறோம் என்ற போர்வையில்.. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதே திராவிட பாசிசவாதிகளே.. இப்போ.. நாம் தமிழர் கட்சிக்கு.. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர்..!

மேற்கோள் காட்டப்பட்ட உங்களின் கருத்தே இங்கோ கொளத்தூர் மணியை கொண்டுவருவதற்குக் காரணம். சீமானின் நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருபர்கள் அவரும் அவரின் பெரியார் தி.கவினரும்தான்.

தீவிரமாக எதிர்ப்பவர்கள் அவர்கள்தான். அதனாலேயே அதனை உங்களின் கருத்தை நாம் எதிர்த்து எழுதியிருந்தோம்.

இவர்களைக் குறிப்பிட்டு எழுதவில்லையென்று கூறிவிட்டு பிறகு இவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த திராவிடக் கட்சிகளிற்கு வால்பிடித்ததாகவும் எழுதிக் கொண்டீர்கள்.

அதற்காகவே தொடர்ந்து எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தோம். அதைவிடுத்து திரி திசைதிருப்ப முயற்படவில்லை

[size=5]யார் தமிழின விரோதி, யாழ் தமிழ் மக்களின் உரிமைக்காக மகா தியாகம் செய்த மாபெரும் வீரர் என்பது கூடத் தெரியாமல் கேள்வி கேட்குமளவுக்கு புத்தி பேதலித்துவிட்டது விளங்குகிறது.[/size]

ஈழவிடுதலைக்காக பெரும் உதவியைச் செய்த ஒருவர் தொடர்ந்தும் ஈழத்தமிழினத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் ஒருவரை தமிழின விரோதியாகவும், அற்புதன் போன்ற தேசத் துரோகிகளை சத்தியமூர்த்தி, தவபாலன் ஆகியோருடன் ஒப்பிட்டு சிறந்த ஊடகவியலாளராகப் பார்க்கும் உங்கள் புத்தி தெளிவாக இருக்கும்போது எனது புத்தி பேதலித்துத்தான் இருக்கும்.

Edited by நீதி

3 வருஷத்துக்கு முன்னர் இருந்த நமது தலைவர் இண்டைக்கு இல்லையா?

அதை நீங்கள் தான் சொல்ல வேணும்...??

காரணம் நான் சொல்வது உண்மை எண்று என்னால் நிரூபிக்க முடியும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடத்தை எதிர்க்கும் தமிழர்களே..குறிப்பாக ஈழத்துத் தமிழர்களே... திராவிட உணர்வுள்ள தமிழகத் தமிழன் கேட்கிறேன்..

சிங்களத்தின் அடக்குமுறை மொழிரீதியிலானது....அதனால் நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுகிறீர்கள்..அது தான் சரி என்கிறீர்கள்.....ஆனால், எங்களின் மீதான அடக்குமுறை இன ரீதியிலானது..அதை எதிர் கொள்ள நாங்கள் திராவிடத்தைக் கையிலெடுத்தோம்...அது தான் எங்களை இன்று வரை காப்பாற்றுகிறது..எங்களுக்கு இது தான் சரி...

சிறிலங்காவில் சிங்களம் செய்த அடக்குமுறைகள் ..என்று எதையெல்லாம் ஈழத் தமிழர்கள் காரணம் காட்டுகிறார்களோ... அதை விட பன்மடங்காக பார்ப்பனியம் எங்களுக்கு செய்த அடக்குமுறைகளின் அழுத்தத்தினாலேயே...திராவிடம் வெடித்தெழுந்தது...அது தான் எம்மை மீட்டது...

ஆனால்..தமிழ்த் தேசியத்தின் பெயராலேயே நீங்கள் ...அரசியல் வகுத்துக் கொண்டீர்கள்...படை கண்டீர்கள்...உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்...காட்டிக் கொடுத்துக் கொண்டீர்கள்...கடைசியில் ?>”+%&...

35 ஆண்டு காலமாக போராட்டத்திற்கு திராவிடம் செய்த உதவிகளை எல்லாம் மறந்து விட்டு... சுயநலப் பிண்டங்களாக...இப்போது எங்களை மீண்டும் பார்ப்பன அடிமையாகச் சொல்கிறீர்கள்..அதற்கான காரணமாக திராவிடத்தைக் கை காட்டுகிறீர்கள்..

திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட சமச்கிருதக் குடுமிகளை கையிலேந்தி.....தமிழ்க் குலத்தின் தொப்புள் கொடி அறுக்கப்பட்டதே என நீங்கள் ஒப்பாரி வைப்பீர்கள் என்றால்… ..[ தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதிகள் அன்று தொட்டு இன்றுவரை இதைத் தான் செய்து வருகிறார்கள்]

[size=5].[size=4]நீங்கள் ஏன் சிங்களத்தோடு இணக்க அரசியல் செய்யக் கூடாது....????[/size][/size]

ஐயா! இந்த யாழ்களத்தில் இதுவரை எத்தனையோ துன்ப, துயர சுனாமி அலைகள் பெருகி வடிந்தோடி இருக்கின்றது. ஆனால் அந்த துயர துக்கங்களால் எல்லாம் தட்டி திறக்க முடியாத அந்த மனக்கதவின் இதயங்களை இந்த திராவிட தேசியம் அதை திறந்து இந்தக் களம் அனுப்பி வைத்திருக்கின்றதே என்று எண்ணும் போது, இந்த திராவிடதேசத்தை சுமந்து வைத்திருக்கும் இந்த இதயங்கள் பொதுநலங்களா? இல்லை சுயநலங்களா? என எமது அடிநெஞ்சை அரிக்க வைக்கின்றது.

இல்லை கலைஞரை இதுவரை சுமந்த அந்தக் காவுதடிகளால் பெரியாரிசத்திற்கு செய்யும் சிறப்பு பயன் தராது என்ற உண்மையின் பொருட்டா ஐயா!

பிரபாகரனிசம் என்பது பிரபாகரனுக்கு கோயில் கட்டும் தொண்டு அல்ல. அது தமிழீழம் என்ற கனவை நினைவு ஆக்குகின்ற பணி!

அதுபோன்றதே பெரியாரிசமும் அவருக்கு எவன் பெரிய பக்தன் என்று காண்பிப்பது அல்ல. அவர் வான்னாளில் கொண்ட விருப்பத்தை நினைவாக்கும் முயற்சியே!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைத் தடுத்தார்கள்? அதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?

ஒரு நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் நிலையை அந்த மொழியால் ஆளப்படாத பல நாடுகளிலும் பார்க்கின்றோம், அப்படி அந்த மொழியால் ஆளப்படும் நாடு ஆகிய தமிழ்நாட்டையும் பார்க்கின்றோம். அப்படி தமிழ் நாட்டில் பேசப்படும் அந்த மொழியில் ஒரு வரியை எடுத்து ஆராந்தோமேயானால் அது ஒரு பல மொழிக்கலவையால் ஆனது முதலாவது ஆய்வு. இரண்டாவது ஆய்வு மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கும் மெழியே தமிழ் என்பது. அப்படி மிகக் குறைந்த விகித்தில் இருக்கும் மொழியை அந்த மொழியின் பேராய் சூடி இருப்பது மிகப்பெரிய வேடிக்கை!

இந்த நிலை பல ஆண்டுகளாக நிலவிவந்த மொழியியல் நாகரீகத்தால் சாதிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி அந்த மொழியியல் நாகரீகத்தைப் படைக்கின்ற பொறுப்பு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு விளங்கும் அந்தன் கைகளிலேயே உள்ளது.

இதுவரை காலமும் திராவிடம் பேசும் முத்துக்களே இந்த ஆட்சியையும் அலங்கரித்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆக இதுவரை அவர்கள் சாதித்திருபது என்ன? தமிழ் மொழிக்கு அழிவு துவங்கும் போது அதற்கு முதலிடமாக தமிழ்நாடே விளங்கப்போவதான நிலை ஒன்றுதானே!

நான் தமிழ் பேசும் பல நாடுகளில் பல வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கின்றேன்!

எனது பேச்சில் வெளிப்படும் தமிழைக் கண்டு அவர்தம் முகங்களில் புது நேசம் மலர்வதைப் பார்த்து மனம் கழித்திருக்கின்றேன்!

ஆனால் அது தமிழ்நாட்டில் வாழ்கைத் தோல்வியின் ஒரு அடையாளமாக தமிழ் மொழி நோக்கப்படுவதே உண்மையான நிலையாகும்!

தமிழ் மொழி ஒரு மிகச்சிறிய அள்வில் வாழும் எந்த ஒரு நாட்டில் சென்றாலும் ஒருவன் தனித் தமிழ் அறிவோடு மட்டும் தனது தேவைகளை கௌரவமாகச் செய்து முடிக்க இயலும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது விதிவிலக்கு! ஏன் இந்த நிலை?

ஒரு உதாரணம்: 'Skywalk' என்பது சென்னையில் உள்ள பிரமாண்டமான விற்றனைத் தொகுதி. இங்கே உயர்த்தி வேலையாளி யில் இருந்து பெரும்பான்மை வேலையாளர்களாய் இருப்பவர்கள் தமிழ் நாடு அல்லாதவர்கள். அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது இங்கே நுளையும் ஒரு தமிழ் மொழி மட்டும் தெரிந்தவன் நிலை எப்படி இருக்கும்? இந்த நிலமையினவே ஒவ்வொன்றிற்கும் அங்கே!

இந்த நிலை யாரால் படைக்கப்பட்டது?

சு. சுவாமியின் அருள்பாலிப்பிற்காக தமிழ் வளக்கறிஞரின் மண்டை உடைக்கப்பட்ட அந்த திராவிடத் தேசியம் உண்மையில் உழைப்பது தமிழருக்கு எதிராகவே!

வெறும் வார்த்தையை மென்று தின்னும் அந்த பார்ப்பான் துவேசம் இனியும் மக்களிடம் வேசம் போட முடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அண்ணா.. பழைய புளொட்காரனைப் பற்றி எழுதும்போது, மாலதீவு புளட்டை அல்லோ இழுக்க வேணும்... நீங்கள் தேசிய விரோதியா? இவங்கள் ஆரும் எங்கட ஜனநாயகத்தில் கதைக்க கூடாது. யாரங்கே.. இந்த ஆள் துரோகி.

திராவிடத் தேசியத்தை அர்சிப்பதற்காக மட்டும் மலந்து மலரே! உன் நிறங்கள் பலதென்பதை உன் புதுமை அறிவிக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! இந்த யாழ்களத்தில் இதுவரை எத்தனையோ துன்ப, துயர சுனாமி அலைகள் பெருகி வடிந்தோடி இருக்கின்றது. ஆனால் அந்த துயர துக்கங்களால் எல்லாம் தட்டி திறக்க முடியாத அந்த மனக்கதவின் இதயங்களை இந்த திராவிட தேசியம் அதை திறந்து இந்தக் களம் அனுப்பி வைத்திருக்கின்றதே என்று எண்ணும் போது, இந்த திராவிடதேசத்தை சுமந்து வைத்திருக்கும் இந்த இதயங்கள் பொதுநலங்களா? இல்லை சுயநலங்களா? என எமது அடிநெஞ்சை அரிக்க வைக்கின்றது.

அதையே தான் நானும் கேட்கிறேன்... ஆயிரமாண்டுகள் காலம் எம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்ததைப் பற்றிக் கவலைப் படாத ..தமிழ்த் தேசியம்... பார்ப்பனியத்தை உடைத்தெரியும் போதும்...அதை ஓரளவேணும் அகற்றிவிட்ட பின்னர் ..ஏன் ஒப்பாரி வைக்கிறது..இதன் பின்னால் இருப்பது எந்த இனத்தின் சுயநலம் சார்ந்த செயல்பாடு...எம் மீது பார்ப்பனிய மேலாதிக்கத்தை மீண்டும் திணித்து...நாங்கள் அடிமைப்பட்டாலும் பரவாயில்லை.. அதன் வழி ஈழம் அடைந்தால் போதும் என்ற ரீதியில் பதியப் படும் கருத்துகள்.... தமிழன் என்ற பொது நோக்கிலா..அல்லது ஈழத் தமிழன் என்ற சுயநல நோக்கிலா...இந்தக் கேள்வியும் எம்மைக் குடைகிறது

இல்லை கலைஞரை இதுவரை சுமந்த அந்தக் காவுதடிகளால் பெரியாரிசத்திற்கு செய்யும் சிறப்பு பயன் தராது என்ற உண்மையின் பொருட்டா ஐயா!

திராவிடம் என்றாலே கலைஞர் மட்டுமே என்றெண்ணிலால்...

தமிழீழத்தில் சிங்களத்துக்குக்காக விநாயக மூர்த்தி முரளிதரவை உருவாக்கிய தமிழ்த் தேசிய காவுதடிகள்...தமிழகத்தில் பார்ப்பனியத்துக்காக சீமானின் சில்லறைகளை உருவாக்குகின்றனவோ.. என்ற அய்யப்பாடு எங்களுக்கு எழுவதும் சரிதானே அய்யா...

பிரபாகரனிசம் என்பது பிரபாகரனுக்கு கோயில் கட்டும் தொண்டு அல்ல. அது தமிழீழம் என்ற கனவை நினைவு ஆக்குகின்ற பணி!

அதுபோன்றதே பெரியாரிசமும் அவருக்கு எவன் பெரிய பக்தன் என்று காண்பிப்பது அல்ல. அவர் வான்னாளில் கொண்ட விருப்பத்தை நினைவாக்கும் முயற்சியே!

மூன்று பேர் தூக்கு வழக்கில்... இணைந்து போராடிக் கொண்டிருக்கையில்... முதல் பிணம் எனக்கு என்று வேலூர் சென்று முன்பதிவு செய்த சீமானின் சில்லறைகள்...தமிழீழக் கனவை மெய்யாக்குவார்களா..அல்லது பிரபாகரனுக்கு கோவில் கட்டி கல்லா கட்டுவார்களா...

Edited by புலேந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் மாயை என்று சொல்லிக் கொண்டு சீமான் முதலமைச்சர் ஆனாலும், சீமானாலும் ` நாம் தமிழராலும்` எதனையும் செய்து விட முடியாது.ஏனெனில் அவர்களின் கட்ச்சி ஆவணமே சொல்கிறது வெளியுறவுக் கொள்கை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுவது என.

மத்தியில் இருக்கும் பார்ப்பனிய ஆளும் கும்பலும் இந்திய தேசியக் கட்சிகளும் அழிக்கப்படும் வரை `சீமானலோ` நாம் தமிழராலோ `இந்தியாவில்` எதனையுமே செய்து விட முடியாது.

அடுத்த தேர்தலுடன் எல்லாம் சந்தைக்கு வந்து விடும்./////////////////////////////////////////////////

ஆமாம். மற்றும்படி இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பெரியாரிலிஸ்ட்டுக்களும், திராடக்கும்பல்களும் தானே தீர்மானிக்கின்றார்கள். இந்திய தேசியத்துக்கு முரணாகத வகையில் என்று சீமான் கொண்டிருக்கின்ற கொள்கையில் எந்தத் தவறுமே இல்லை. தமிழகம் கஸ்மீராகும் என்று மேடைகளில் முழங்கி விட்டு, ஒரு தீக்குச்சி கூடப் பற்ற வைக்க முடியாத நிலையில் இருப்பதை எல்லோரும் அறிவார்கள்.

இன்றைய ஈழப்போராட்டத்தில் இந்தியா தமிழீழத்துக்கு எதிராக இருப்பதற்குச் சொல்லிக் கொண்டிருந்த காரணம், ராஜிவ் என்பதை விட, தமிழகமும் பிரிந்து போய் விடும் என்ற காரணமும் ஆகும். தமிழீழத்துக்கான ஆதரவு என்பது, தமிழகத்தைப் பிரிக்கின்ற செயல் இல்லை என்பதை வெளிப்படையாகவும், உண்மையாகவும் முதலே தெரிவித்து விடுதலே சரியானது. தவிரவு;, ஏதோ தமிழகத்தை, இந்திய அரசில் இருந்து பிரிக்க முயற்சிப்பது போலப் படம் காட்டுபவர்களின் முகம் என்பது எங்களுக்கு மட்டுமே ஆனது.. அவர்கள் அதற்காக எந்தச் சந்தர்ப்பத்திலும், தாங்கள் இந்தியவில் இருந்து பிரியப் போவதாகச் செயற்படுத்தியது கிடையாது...(கொளத்துார் மணி மட்டும் சிறையில் இருந்தார்)

மத்தியில் இருக்கும் பார்ப்பாக்கும்பல் என்பதினூடாக தன்னுடைய திராவிட க் கொள்கையையே இந்தக் கருத்தாளர் காட்ட முயலுகின்றாரே தவிர, காங்கிரஸ் ஆட்சியில் ஆதிக்க க்திகளிலலில் அவர்களை விட, மதச்சார்பின்மை கொண்டவர்களும், கருணாநிதி போன்ற திராவிடக்கும்பல்களின் ஆதரவுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. கருணாநிதி 6 அமைச்சரவையைத் தன் வசம் கொண்டிருந்தார்.

சிதம்பரம்: செட்டியார் எனச் சாதியை விக்கிபீடியா சொல்கின்றது. அவரே உள்துறை அமைச்சர்.

அ, அன்ரனி : பாதுகாப்பு அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இவர்கள். வாஜ்பாய் ஒருவர் மட்டுமே பார்பானியாக இருக்கலாம்.

இதில் எங்கே பார்பானிய ஆதிக்கசக்தி இருக்கின்றது? உண்மையில் இத்தலைப்பினையும் தங்களையும் வலுப்படுத்திக்காட்ட இடைச்செருகலாகவே இது இருக்கின்றது.

இப்படிச் சொன்னவுடன், இவர்கள் இந்திய கொள்கைகளைத் தீர்மானிப்பதில்லை என்று ஒரு போடு போட்டு, கண்ணுத் தெரியாத கண்டு பிடிக்கமுடியாத எதிரிகளை இனம் காட்டுவார்கள் பாருங்கள்.

கருத்து எழுதும் போது பின்வரும் தந்திரம் பாவிக்கப்படும்.

இந்திய ஆதிக்க சக்திகளும், பார்ப்பான சக்திகளும்,

பாசிசவாதிகளும் பார்ப்பானிகளும் சேர்ந்து.....

இந்துத்துவ ஆரியவெறியர்களான.....

இதே தந்திரமே மத்திய அரசினால் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது, நச்சலைட்டுக்களோடு புலிகளுக்குத் தொடர்பு, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பு என பிடிக்காத எதிரியோடு இணைத்துப்பேசுவதன் ஊடாக இவர்களையும் எதிரியாக்குதல்...

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நானும் கேட்கிறேன்... ஆயிரமாண்டுகள் காலம் எம்மை அடிமைப் படுத்தி வைத்திருந்ததைப் பற்றிக் கவலைப் படாத ..தமிழ்த் தேசியம்... பார்ப்பனியத்தை உடைத்தெரியும் போதும்...அதை ஓரளவேணும் அகற்றிவிட்ட பின்னர் ..ஏன் ஒப்பாரி வைக்கிறது..இதன் பின்னால் இருப்பது எந்த இனத்தின் சுயநலம் சார்ந்த செயல்பாடு...எம் மீது பார்ப்பனிய மேலாதிக்கத்தை மீண்டும் திணித்து...நாங்கள் அடிமைப்பட்டாலும் பரவாயில்லை.. அதன் வழி ஈழம் அடைந்தால் போதும் என்ற ரீதியில் பதியப் படும் கருத்துகள்.... தமிழன் என்ற பொது நோக்கிலா..அல்லது ஈழத் தமிழன் என்ற சுயநல நோக்கிலா...இந்தக் கேள்வியும் எம்மைக் குடைகிறது/////

சரி. திராவிடக் கொள்கை தமிழனுக்கு என்ன பெற்றுத் தந்தது என நன்மைகளைச் சொல்ல முடியுமா? அது செய்த தீமைகளை நான் பட்டியலிடுகின்றேன்.

1. அது என்றைக்குமே தமிழுக்கு எதிராகவே இருந்தது. அனைத்து இலக்கியங்களையும் அது அழிப்பதற்கே முயன்றது. அது தான் தமிழரது வரலாற்று ஆவணங்கள் என்பதை மறைத்து இல்லாதொழிக்கவே முயன்றது.

2. தமிழ்நாட்டைத் தமிழர்களுக்குச் சாதகமாக அமைத்துத் தரவில்லை. தமிழருக்குச் சொந்தமான இடங்களை அது கோட்டை விட்டது. இன்றுவரை அதற்காகத் தமிழகம் போராடவேண்டியுள்ளது.

3. பார்ப்பான எதிர்ப்பு என்று ஒரு விடயத்தைத் தொடங்கி, தமிழருக்குள் சாதிச் சண்டைகளைத் துாபம் போட்டுக் கொண்டிருந்ததே தவிர, சாதி அழிய எந்தச் செயலையும் அது செய்யவில்லை. தானும் ஒரு சாதிவெறியை ஊக்குவிக்கின்ற அமைப்பாகவே அடையாளம் செய்கின்றது. இங்கே நீங்கள் உமிழும் பார்ப்பான எதிர்ப்பு என்பது, கூட ஒரு சாதிவெறியாகும்.

ஈழப்போராட்டத்தையும். தமிழகத்தையும் பிரித்துப் பேசுகின்ற போக்குத் தான் உங்களிடம் காணப்படுகின்றது. யாரும் அப்படிப் பிரித்துப் பேசியதில்லை என்பதையும் உங்களிடம் குறிப்பிட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டில் பேசப்படும் தமிழ் மொழியின் நிலையை அந்த மொழியால் ஆளப்படாத பல நாடுகளிலும் பார்க்கின்றோம், அப்படி அந்த மொழியால் ஆளப்படும் நாடு ஆகிய தமிழ்நாட்டையும் பார்க்கின்றோம். அப்படி தமிழ் நாட்டில் பேசப்படும் அந்த மொழியில் ஒரு வரியை எடுத்து ஆராந்தோமேயானால் அது ஒரு பல மொழிக்கலவையால் ஆனது முதலாவது ஆய்வு. இரண்டாவது ஆய்வு மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கும் மெழியே தமிழ் என்பது. அப்படி மிகக் குறைந்த விகித்தில் இருக்கும் மொழியை அந்த மொழியின் பேராய் சூடி இருப்பது மிகப்பெரிய வேடிக்கை!

இந்த நிலை பல ஆண்டுகளாக நிலவிவந்த மொழியியல் நாகரீகத்தால் சாதிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி அந்த மொழியியல் நாகரீகத்தைப் படைக்கின்ற பொறுப்பு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு விளங்கும் அந்தன் கைகளிலேயே உள்ளது.

இதுவரை காலமும் திராவிடம் பேசும் முத்துக்களே இந்த ஆட்சியையும் அலங்கரித்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆக இதுவரை அவர்கள் சாதித்திருபது என்ன? தமிழ் மொழிக்கு அழிவு துவங்கும் போது அதற்கு முதலிடமாக தமிழ்நாடே விளங்கப்போவதான நிலை ஒன்றுதானே!

திராவிடம் தான் என்னவோ தமிழ் மொழியை சிதைதுக் கொண்டிருப்பது போன்ற சித்திரம் இங்கே உருவாக்கப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

தமிழை ஒழித்தே தீர வேண்டும் என்ற சதியி பகுதியாக...தமிழில் சமசுகிருதம் கலந்து எழுதப்பட்ட உரைநடையான பார்ப்பன மணிப்பிரவாள நடையை மாற்றி...தனித் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தியதில்... பழந் தமிழ்ச் சொற்களை புகுத்தியதில்..திராவிட இயக்கத்தின் பங்கை மறுப்பவர்கள்...ஒன்று பார்ப்பன அடிமையாக இருக்க வேண்டும் அல்லது மன நோயாளியாக இருக்க வேண்டும்...

பெரியாரின் எழுத்து சீர் திருத்தத்தை எதிர்ப்பது ..பார்ப்பானா... திராவிடனா...

வழக்கொழிந்த வடமொழி கிரந்த எழுத்துகளை மீண்டும் கணித் தமிழில் [ Unicode]புகுத்த சதி வேலை செய்து கொண்டு இருப்பது..பார்ப்பானா...அல்லது...திராவிடனா..

திராவிட இயக்கம் கொண்டு வந்த கட்டாயத் தமிழ்ப் பாடம் என்ற ஆணையை எதிர்[ப்பது ...பார்ப்பானா அல்லது திராவிடனா...

கோவிலிலே தமிழில் அர்ச்ச்னை செய்தால்..அது தீட்டு..என்ற நிலையை மாற்றியது...திராவிடனா..பார்ப்பானா..

அப்படியும் சிதம்பரம் கோவிலில் திருவாசகம் பாட ...எல்லா எதிர்ப்பு வேலைகளையும் செய்து கொண்டிருப்பது பார்ப்பானா ...திராவிடனா..

அனைத்துச் சாதியினரும் அர்ச்ச்கர் ஆகலாம்...பிறப்பினால் ஏற்ற தாழ்வு இல்லை..என்ற நிலையை உருவாக்க...திராவிடம் கொண்டு வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்ச்கர் திட்டத்தை..முடக்கி வைத்திருப்பது பார்ப்பானா...திராவிடனா...

புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ்க் குழந்தைகள் ..தங்கள் தாய்மொழியை மறந்து வரும் சூழ்நிலையை...உள்ளதே...இதற்குக் காரணம்....யார்...? தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்களா...

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேர் தூக்கு வழக்கில்... இணைந்து போராடிக் கொண்டிருக்கையில்... முதல் பிணம் எனக்கு என்று வேலூர் சென்று முன்பதிவு செய்த சீமானின் சில்லறைகள்...தமிழீழக் கனவை மெய்யாக்குவார்களா..அல்லது பிரபாகரனுக்கு கோவில் கட்டி கல்லா கட்டுவார்களா... ஃஃஷஷ

ஒருவர் எதிரியாகும்போது மட்டுமே இதைத் தெரிவிக்கின்ற உங்களின் உண்மைத்தன்மை இதில் இருந்து நன்றாகவே தெரிகின்றது. மூவருடைய போராட்டங்களும் நடந்து ஒரு வருடம் ஆகின்றது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடம் என்றாலே கலைஞர் மட்டுமே என்றெண்ணிலால்...

தமிழீழத்தில் சிங்களத்துக்குக்காக விநாயக மூர்த்தி முரளிதரவை உருவாக்கிய தமிழ்த் தேசிய காவுதடிகள்...தமிழகத்தில் பார்ப்பனியத்துக்காக சீமானின் சில்லறைகளை உருவாக்குகின்றனவோ.. என்ற அய்யப்பாடு எங்களுக்கு எழுவதும் சரிதானே அய்யா...

...

தங்கள் உதாரணங்களில் செலவிடப்பட்ட தங்கள் அறிவின் தரம் ஆராய்வதனூடு உங்கள் பெரியாரிசத்தின் பற்றுதலுக்கான தரம் வெளிச்சத்திற்கு வரும்!

எனது மேற்கோளின் பொருள்; இந்தக் களத்தில் திமுகவிற்கு சார்பாக கருத்தை எழுதிவந்த ஒரு நபர் அவர் இந்தக் களம் சார்பாக கொள்கைரீதியான அரசியல் செய்பவர்ராக பார்க்கப்படாமல் தொழில்ரீதியான அரசியல் செய்பவராகவே பார்க்கபப்டும் என்பது வெளிச்சம். எனவே அந்த தரத்தை பெறாமல் இருபப்தற்காகவே நீங்கள் புது பேரில் பெரியாரிசம் பேச வந்திருக்கலாம் என்பதே எனது வாதமாய் இருந்தது.

அடுத்து.

புலிகளில் ஒரு சில எலிகள் உருவாவது புலியின் பேரையோ, அதன் கொள்கையினையோ மாற்றப் போவதுகிடையாது. ஆனால் நீங்கள் கூறும் பெரியாரிசத்தின் பெரும் பாகங்கள் மக்கள் ஆணை பெறப்பட்டவர்கள் அவர்கள் தான் எலியாய் மாறிவர்கள். அப்படி அல்லாமல் ஒரு சிலரை இப்பவும் சுத்தமானவர்கள் என்று காட்ட முயன்றால். உடன்படுகின்றோம். ஆனால் அவர்கள் மக்கள் செல்வாக்கில் அபரிதமாக வளராதவர்கள். அபரிதமான செயல்பாடுகளையும் செய்து காட்டாதவர்கள்! ஓரு வேளை அவர்களும் ஆட்சி அதிகாரம் என்று வந்துவிட்டால் என்ன செய்வார்களோ என்ற முடிவும் தெரியாது.

அப்படி இருக்க இந்த நிலமையை புலியோடு ஒப்பீடு செய்வதானது அறியாமையா? இல்லை வீம்பானதா?

சுனாமிக்கு சுவர்கட்ட நினைப்பதே முட்டாள்த்தனம்! ஏன் என்றால் அந்த நீர் சுவர் நான்கடி உயரமாயும் இருக்கலாம், இல்லை நான்காயிரம் அடி உயரமானதாயும் இருக்கலாம். அதனால் வரும் அழிவிற்கு மனித பலத்தை குறைகாணும் அறிவு அறியாமையின் உடமையே!

இது போன்றதே ஒரு போராடத்தின் வெற்றி என்பதும்!

எதிரியின் பலம் எல்லை மீறுகின்ற போது வெற்றி இடம் மாறலாம்!

போராட்டத்தின் வீரம் என்பது சாவு என்ற வாசல் வரும்வரை அதன் கொள்கை தடம் புரளாமல் இருபதே!

ஆனால் முன்னால் புலி ஆதரவு வேசம் போட்ட உங்களால் அதைத் தொட்டு பரிகாசம் செய்யும் உங்கள் அந்தரங்கத்தை அறியும் போது. உங்களால் பேசபப்டும் பெரியாரிசம் பார்பனியத்தைவிடக் கேவலமானது என்று அறிய முடிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி. திராவிடக் கொள்கை தமிழனுக்கு என்ன பெற்றுத் தந்தது என நன்மைகளைச் சொல்ல முடியுமா? அது செய்த தீமைகளை நான் பட்டியலிடுகின்றேன்.

இது தனியாக விவாதிக்கப் படவேண்டியது...தனி திரி துவங்குங்கள்...

1. அது என்றைக்குமே தமிழுக்கு எதிராகவே இருந்தது. அனைத்து இலக்கியங்களையும் அது அழிப்பதற்கே முயன்றது. அது தான் தமிழரது வரலாற்று ஆவணங்கள் என்பதை மறைத்து இல்லாதொழிக்கவே முயன்றது.

அபாண்டமான குற்றச்சாட்டு... திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்பதை எப்படியாவது எல்லவிதங்களிலும் கூற வேண்டும் என்பதற்காக...சொல்ல்கிறீர்கள்..இப்படி ஒரு குற்றச்சாட்டை திராவிடத்தின் மீது இதுவரை யாரும் சொன்னது கிடையாது...புதிதாக தமிழ்த் தேசியம் பேசிக் கிளம்பி இருக்கும் சீமானின் சில்லறைகள் உட்பட்...திராவிடம் த்மிழ இலக்கிய வரலாற்று ஆவணங்களை போற்றிப் பாதுகாத்திடவே செய்கிறது...தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்...உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்... போன்ற நிறுவனங்கள் யார் அமைத்தது...

2. தமிழ்நாட்டைத் தமிழர்களுக்குச் சாதகமாக அமைத்துத் தரவில்லை. தமிழருக்குச் சொந்தமான இடங்களை அது கோட்டை விட்டது. இன்றுவரை அதற்காகத் தமிழகம் போராடவேண்டியுள்ளது.

இதை ஓரளவே ஒப்புக் கொள்ள முடியும்...இந்திய ஒன்றியத்திலும் தமிழகத்திலும் அன்ரைக்கு பலமாக இருந்த் தமிழக காங்கிரஸ்காரர்களும் இதற்குக் காரணம்...ஆனால்...ஒட்டு மொத்த நாட்டையும் கோட்டை விட்டு விட்டு....மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து என்ற நிலைக்கும் திராவிடம் இட்டுச் செல்லவில்லை என்பதையும் ...நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்...

தமிழ்ப் பல்கலைக் கழகம்...உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்... போன்ற நிறுவனங்கள் யார் அமைத்தது...

3. பார்ப்பான எதிர்ப்பு என்று ஒரு விடயத்தைத் தொடங்கி, தமிழருக்குள் சாதிச் சண்டைகளைத் துாபம் போட்டுக் கொண்டிருந்ததே தவிர, சாதி அழிய எந்தச் செயலையும் அது செய்யவில்லை. தானும் ஒரு சாதிவெறியை ஊக்குவிக்கின்ற அமைப்பாகவே அடையாளம் செய்கின்றது. இங்கே நீங்கள் உமிழும் பார்ப்பான எதிர்ப்பு என்பது, கூட ஒரு சாதிவெறியாகும்.

பார்ப்பான் என்பது சாதி என்று நிரூபித்து விட்டு... அப்புறம் நான் உமிழும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாதிய வெறி என்று என்னை..சாதி வெறியாளனாக அடையாளப்படுத்துங்கள்..

இட ஒதுக்கீட்டிலிருந்து... வன்கொடுமைச் சட்டத்திலிருந்து...அனைத்துச் சாதியினரும் அர்ச்ச்கர் திட்டம் வரை...திராவிடம் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கவே முயன்ரு வருகிறது...அதற்கு முட்டுக்கட்டை போடும் ...சமூக நீதியை எதிர்க்கும்...பார்ப்பனியத்தை நான் விமர்சித்தால்...நான் சாதி வெறியாளனா...ச்பாஷ்..

ஈழப்போராட்டத்தையும். தமிழகத்தையும் பிரித்துப் பேசுகின்ற போக்குத் தான் உங்களிடம் காணப்படுகின்றது. யாரும் அப்படிப் பிரித்துப் பேசியதில்லை என்பதையும் உங்களிடம் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஈழத் தமிழனையும்..தமிழகத் தமிழனையும் பிரித்துப் பார்க்கக் கூடாதே தவிர...

. ஈழத்தையும் ...தமிழகத்தையும்,,,சமூக ,அரசியல் அக புறச் சூழ்நிலைக் காரணிகளின் படி பிரித்தே பார்க்க வேண்டும்...அது தான் சரி... ஏனென்றால்..

ஈழத்தில் சிங்களத்தின் அடக்குமுறை மொழிரீதியிலானது....ஆனால், எங்களின் மீதான அடக்குமுறை இன ரீதியிலானது..அதை எதிர் கொள்ள நாங்கள் திராவிடத்தைக் கையிலெடுத்தோம்...

நிலைமை இப்படி இருக்கையில்....ஈழத்தின் சமூக அரசியல் அக புறச் சூழல் காரணிகளை தமிழகத்துக்குள் பொருத்தி ..அது சார்ந்த தமிழ்த் தேசியம் என்பது எவ்வளவு அபத்தம்...அந்தநந்த மண்ணுக்கேற்ற தத்துவமே...மானுட வாழ்வுரிமைக்கு உத்திரவாதம் தருமே ஒழிய..வெளியில் இருந்து திணிக்கப்படுபவை அல்ல...அதனல தான்...தமிழகத்தில் தமிழ்த் தேசியம் பேசும் இயக்கங்களை விமர்சிக்கும் ...தமிழக திராவிட இயக்கங்கள்..அதே சமயம் ஈழத்தில் தமிழ்த் தேசியம் பேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்தன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மேற்கோளின் பொருள்; இந்தக் களத்தில் திமுகவிற்கு சார்பாக கருத்தை எழுதிவந்த ஒரு நபர் அவர் இந்தக் களம் சார்பாக கொள்கைரீதியான அரசியல் செய்பவர்ராக பார்க்கப்படாமல் தொழில்ரீதியான அரசியல் செய்பவராகவே பார்க்கபப்டும் என்பது வெளிச்சம்.

ஓஹோ...துரோகிப் பட்டம் போய் இப்போது இந்த மாதிரி பட்டங்கள் கொடுப்பது தான் லேட்டஸ்ட் ஃபேஷனா..பலே....தொடருங்கள் உங்கள் தமிழ்த் தேசியப் பணியை...

புலிகளில் ஒரு சில எலிகள் உருவாவது புலியின் பேரையோ, அதன் கொள்கையினையோ மாற்றப் போவதுகிடையாது. ஆனால் நீங்கள் கூறும் பெரியாரிசத்தின் பெரும் பாகங்கள் மக்கள் ஆணை பெறப்பட்டவர்கள் அவர்கள் தான் எலியாய் மாறிவர்கள். அப்படி அல்லாமல் ஒரு சிலரை இப்பவும் சுத்தமானவர்கள் என்று காட்ட முயன்றால். உடன்படுகின்றோம். ஆனால் அவர்கள் மக்கள் செல்வாக்கில் அபரிதமாக வளராதவர்கள். அபரிதமான செயல்பாடுகளையும் செய்து காட்டாதவர்கள்! ஓரு வேளை அவர்களும் ஆட்சி அதிகாரம் என்று வந்துவிட்டால் என்ன செய்வார்களோ என்ற முடிவும் தெரியாது.

அப்படி இருக்க இந்த நிலமையை புலியோடு ஒப்பீடு செய்வதானது அறியாமையா? இல்லை வீம்பானதா?

சுனாமிக்கு சுவர்கட்ட நினைப்பதே முட்டாள்த்தனம்! ஏன் என்றால் அந்த நீர் சுவர் நான்கடி உயரமாயும் இருக்கலாம், இல்லை நான்காயிரம் அடி உயரமானதாயும் இருக்கலாம். அதனால் வரும் அழிவிற்கு மனித பலத்தை குறைகாணும் அறிவு அறியாமையின் உடமையே!

இது போன்றதே ஒரு போராடத்தின் வெற்றி என்பதும்!

எதிரியின் பலம் எல்லை மீறுகின்ற போது வெற்றி இடம் மாறலாம்!

போராட்டத்தின் வீரம் என்பது சாவு என்ற வாசல் வரும்வரை அதன் கொள்கை தடம் புரளாமல் இருபதே!

ஆனால் முன்னால் புலி ஆதரவு வேசம் போட்ட உங்களால் அதைத் தொட்டு பரிகாசம் செய்யும் உங்கள் அந்தரங்கத்தை அறியும் போது. உங்களால் பேசபப்டும் பெரியாரிசம் பார்பனியத்தைவிடக் கேவலமானது என்று அறிய முடிகின்றது.

சும்மா புலி எலின்னு எகனை மொகனை எல்லாம் வேண்டாம்....நேரடி கேள்வி ..நேரடி பதில்...நான் உங்களுக்குச் சொல்ல வந்தது... ஒரு தனி நபரின் தோல்வியை...துரோகத்தசி ஒரு சித்தாந்தஹ்டின் தோல்வியாக கருதினால்...அது எல்லோருக்கும் பொருந்த வேண்டுமே ஒழிய...எதிர்க் கருத்தாளர்களுக்கு மட்டுமேயல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் தான் என்னவோ தமிழ் மொழியை சிதைதுக் கொண்டிருப்பது போன்ற சித்திரம் இங்கே உருவாக்கப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்...

தமிழை ஒழித்தே தீர வேண்டும் என்ற சதியி பகுதியாக...தமிழில் சமசுகிருதம் கலந்து எழுதப்பட்ட உரைநடையான பார்ப்பன மணிப்பிரவாள நடையை மாற்றி...தனித் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தியதில்... பழந் தமிழ்ச் சொற்களை புகுத்தியதில்..திராவிட இயக்கத்தின் பங்கை மறுப்பவர்கள்...ஒன்று பார்ப்பன அடிமையாக இருக்க வேண்டும் அல்லது மன நோயாளியாக இருக்க வேண்டும்...

பெரியாரின் எழுத்து சீர் திருத்தத்தை எதிர்ப்பது ..பார்ப்பானா... திராவிடனா...

----------------------------------------------------------------

பெரியார் செய்த தமிழ் எழுத்துத் திருத்தம் என்ன? முன்பு எழுதப்பட்ட,லு,மு, போன்றவற்றின் பழைய வடிவங்களை மாற்றத் துணை போனார் என்றும், ஐ என்பதை அய் என்று எழுத வேண்டும் என்ற கண்டு பிடிப்புக்களைச் செய்த விஞ்ஞானி என்றும் இவர்கள் பேசிக் கொள்கின்றார்கள். அத்தோடு தமிழின் எழுத்து வடிவங்களை 247 இல் இருந்து குறைக்க வேண்டும் என்றும் சொன்னாராம். இது தான் அவர் செய்த எழுத்துச் சீர்திருத்தம்.

தமிழில் உள்ள 247 எழுத்துக்களும் உயிர்-மெய் இணைப்பினால் தான் வந்ததே தவிர, அது தனித்து உருவாகவில்லை. எனவே தான் 247 எழுத்துக்களும் எம்மிடம் இருக்கின்றன. ஒன்றை உடைத்து மற்றொன்றை வைத்திருக்க முடியாது உதாரணத்துக்கு ங் என்ற எழுத்தில் அது மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். மிகுதி அந்த ஓசையைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டவை.(ங் போல் வளை என்பார் ஔவையார்). எனவே தமிழ் எழுத்துக்களைக் குறை என்பது ஒரு வித முட்டாள்தனமான கருத்து. இரண்டாவது அவ்வாறு தமிழ்ச் சொல்கள் குலைக்கப்பட்டால் எம்மால் பழைய நுால்களைப் படிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, அதை உரிமையும் கோர முடியாது. இதை்த தானே பெரியாரும் விரும்பினார்.

மற்றது எழுத்துச்சீர்திருத்தம் என்பது எல்லாம் இமாலய சாதனை இவர்கள் புகழ்வது தான் அதிகமாக இருக்கின்றது. ஒவ்வொருகாலத்திலும் தமிழின் வரிவடிவம் மாறியே வந்திருக்கின்றது. ஆனால் எழுத்துக்களின் அளவு மாறவில்லை. ஓசையும் மாறவில்லை.அதனால் தான் இன்றுவரை நாம் தமிழராகப் பெருமை கொள்ள முடிகின்றது.

800px-History_of_Tamil_script.jpg

மற்றும்படி தொல்காப்பியத்தையும், ஆரியக்கலப்பு என்றார். சிலப்பதிகாரத்தையும் திட்டினார். மற்றய இதரநுால்களையும் திட்டீத் தீர்த்து எம்மிடம் இருந்து ஒதுக்க வைத்தார். நாம் அம்மணமாகி நிற்கின்றோம்..

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கொழிந்த வடமொழி கிரந்த எழுத்துகளை மீண்டும் கணித் தமிழில் [ Unicode]புகுத்த சதி வேலை செய்து கொண்டு இருப்பது..பார்ப்பானா...அல்லது...திராவிடனா..

திராவிட இயக்கம் கொண்டு வந்த கட்டாயத் தமிழ்ப் பாடம் என்ற ஆணையை எதிர்[ப்பது ...பார்ப்பானா அல்லது திராவிடனா...

கோவிலிலே தமிழில் அர்ச்ச்னை செய்தால்..அது தீட்டு..என்ற நிலையை மாற்றியது...திராவிடனா..பார்ப்பானா..

அப்படியும் சிதம்பரம் கோவிலில் திருவாசகம் பாட ...எல்லா எதிர்ப்பு வேலைகளையும் செய்து கொண்டிருப்பது பார்ப்பானா ...திராவிடனா..

அனைத்துச் சாதியினரும் அர்ச்ச்கர் ஆகலாம்...பிறப்பினால் ஏற்ற தாழ்வு இல்லை..என்ற நிலையை உருவாக்க...திராவிடம் கொண்டு வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்ச்கர் திட்டத்தை..முடக்கி வைத்திருப்பது பார்ப்பானா...திராவிடனா...

-----------------------------------------------ஏன் பார்ப்பானர்களுக்கும் உங்களுக்கும் முடிச்சுப் போடுகின்றீர்கள். தமிழனா, திராவிடனா என்று கேளுங்கள்.

பிராமணி தமிழ்ப்பாடத்திட்டத்தை எதிரிக்கின்றான் என்று ஒட்டுமொத்த முடிச்சுப் போடாதீர்கள். நிறையப் பிராமணிகளை என்னால் தமிழுக்காகச் செய்த சேவைகளைக் காட்ட முடியும்...

பெரியார் புகழ்ச்சி தவிர, எத்தனை தமிழ் நுால்களையும், தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் நீங்கள் உருவாக்கியிருக்கின்றீர்கள் எனச் சொல்ல முடியுமா?

தமிழைக் காட்டுமிராண்டி என்றார் அந்தக் கன்னடர். ஆனால் சென்ற நுாற்றாண்டில் அதிகமான ஞானபீட இலக்கியவிருதுகள் பெற்ற மொழி கன்னடம். ஆனால் தமிழ்.... இத்தனைக்கும் கன்னடம் எழுத்துக்கள் தெலுங்கினையும், உச்சரிப்புக்கள், கொச்சைத்தமிழ், மற்றும் சமஸ்கிருத உச்சரிப்புக் கொண்டவை. தமிழைக்காட்டுமிராண்டி என்று சொன்னபோது அதில் விஞ்ஞானம் இல்லை என்றார். சரி தான் நீங்கள் சென்ற நுாற்றாண்டில் தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.... எத்தனை அறிவாளிகளையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கியுள்ளீர்கள். உடனே அப்துல் காலம், விஞ்ஞானி சிதம்பரம் எல்லாம் உங்களின் சொந்த்த தயாரிப்பு என எழுதிவிடாதீர்கள்.

பிரதேசத் தமிழை ஊக்குவித்தார். இது தான் தமிழுக்குச் செய்த பெரிய துரோகம். இருவர் பேசுகின்ற மொழி ஒரே உச்சரிப்பு, ஒரே எழுத்தாக இருந்தால் தானே, அது ஒரே இனத்தவர் ஆவார். இல்லாவிடின், அது என்னுமொரு மொழியாக உருவாகும். அவனும் தண்ணீர் தரமாட்டான்.

இன்று இணையங்களிலோ, நுால்களிலோ வருகின்ற கொச்சைத் தமிழ் ஆக்கங்களை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஒருகாலத்தில் தமிழ் அழிந்து போக நிச்சயம் அதுவும் பெரும்பங்கு வகிக்கும்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

Part II—Table 4: Percent Representation of Brahmins and other Upper Caste Members to the elite all-India Services: Indian Administrative Service (IAS), Indian Foreign Service (IFS), Indian Police Service (IPS) during the period when Reservations Policy did not make an impact:

Services: 1947-56, 1957-63

IAS: 34%, 36%

IFS: 22%, 22%

IPS: 31%, 21%

Other services: 38%, 29%

Source: V. Subramaniam, ‘Social Background of India’s Administrators’. Reproduced from H. Mehta and H. Patel (eds.), Dynamics of Reservations Policy (New Delhi, 1985), p. 99.

Exhibit 2:

Part II—Table 8: Table Showing Castewise Representation in Managerial Cadre (non-Government Sector)—1971

Percentage in the cadre of manager

Brahmins: 41.4%

Source: Jain Sagar C., Indian Manager: His social origin and career, 1971. Reproduced from H. Mehta and H. Patel (eds.), Dynamics of Reservations Policy (New Delhi, 1985), p. 98.

http://hdr.undp.org/docs/publications/background_papers/2004/HDR2004_DL_Sheth.pdf

[size="4"][size="4"]Caste, Ethnicity and Exclusion in South Asia: The Role of[/size][/size]

[size="4"][size="4"]Affirmative Action Policies in Building Inclusive Societies[/size][/size]

D.L. Sheth

The kind of social inequality and exclusion that exists in different South Asian societies,

exhibits some common cultural and social structural characteristics, in some respects

quite distinct from many other societies in the world. The distinctiveness is on account of

the stratificatory system of caste that prevailed, in one form or the other, in these societies

for centuries. Despite some basic differences in the political and religious organization of

these societies, caste or caste-like institutional practices survive in them even today—in

diluted or even transmuted form in some, while manifesting greater continuity in

others—with their corresponding structures of social exclusion.

I

The Caste-ethnic Dimension of Exclusion

Caste is the most intensively and widely studied South Asian institution and there

is no need to reiterate the established wisdom here. I however wish to focus on, rather

attempt to reformulate, some propositions on caste in terms that can facilitate a more

direct and precise understanding of the contemporary structures of social exclusion in

South Asia, the structures which indeed have emerged from the core of the caste system.

Single-Photo-.jpgSingle-Photo-.jpg
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.