Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்ரேலியரின் தீரமிகு விமானக் கடத்தல் பணய அதிரடி மீட்பு நடவடிக்கை

Featured Replies

நேரம் மிக விரைவாகக் கடந்து கொண்டிருந்தது.

.

மேலும் புலனாய்வுத்துறையினர், உகண்டாவின் புதிய, மற்றும் பணயக் கைதிகள் வைக்கப் பட்டிருக்கும் பழைய Terminals' கட்டிடங்கள் இஸ்ரேலில் பிறந்து இன்னுமொரு நாட்டில் வாழும் யூதர் ஒருவராலே கட்டப் பட்டது என கண்டுகொண்டனர்.

உகண்டாவின் விமான நிலையம் மற்றும் விமான நிலைய கட்டடங்களுக்கான வரைகலை நிபுணர்(ஆர்க்கிடெக் )யூதர் என்றும் இடி அமீன் யூதர்கள் எல்லோரையும் உகண்டாவை விட்டு வெளியேற்றும் போது இவரும் வெளியேறி இருந்தார் வெளியேறும் போது தன்னுடன் அந்த drawings எடுத்து சென்று இருந்தார் என்று எங்கேயோ படித்த நினைவு ... இது சரியான தகவலா :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியானது தான்.

இடி அமினின் முட்டாள் தனமான செயல்களில் ஒன்று ஒருவர் அவர் கேட்பதனை மறுத்தால், அவரை அல்ல, அவர் சார்ந்த சமுகத்தினையே தண்டிப்பதனை வழக்கமாக வைத்திருந்தார்.

தன்னை நிராகரித்த இந்திய வம்சாவளிப் பெண்ணுக்காக இந்தியர்களையும், ஆயுதங்கள் தர மறுத்த இஸ்ரேலுக்காக, இஸ்ரேலியர்களையும் (பின்னர் இந்த விமானக் கடத்தல் மூலமும்) தண்டனையாக வெளியேற்றினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே youtube வீடியோ இணைக்கும் வழி குறித்து யாராவது உதவ முடியுமா?

நன்றி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நீங்கள் இணைக்க வேண்டிய 'youtube' வீடியோவை, இன்னொரு புதிய விண்டோவில் திறவுங்கள்!

அப்போது உங்கள், browser இல் தெரியும் link ஐ, பிரதி செய்து பின்பு , தேவையான இடத்தில் paste பண்ணி விடுங்கள்!

பின்பு post பண்ணும்போது, அந்த இணைப்பு படத்துடன் வரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 2, வெள்ளிக்கிழமை

அதிகாலை முதல் பாதுகாப்பு படைகளின் பிரதம தளபதி General Motta Gur (குர்) சிலவிடயங்களில் இன்னும் திருப்தி இல்லாது இருந்தார். மிக வேகமாகத் தயாராகும் திட்டம் எங்கேயாவது ஓட்டை உள்ளதாக இருக்கக் கூடும் என கருதி, இறுதி அங்கீகாரம் கொடுக்காமல் இருந்தார்.

இரவு நேரத்தில் ஓடுபாதை விளக்குகள் இல்லாமல் தரை இறங்குவதில் உள்ள பிரச்சனைகளால், என்டபேயில் இருந்து வழக்கமாக கிளம்பும் ஒரு சரக்கு விமானம் கிளம்பும் போது போடப்பட்டிருக்கும் ஓடுபாதை விளக்குகள் அணைக்கப் படுவதற்கு முன் விரைவாக இறங்கும் முதல் விமானம், கொண்டு செல்லும் விளக்குகள் கொண்ட நீண்ட கயிறு சுருளை ஓடுபாதையில் விரியும் படி செய்தால் பின்னர் வரும் விமானங்கள் அதனைக் கொண்டு தரை இறங்கலாம் என்பது திட்டம் .

அனுபவம் மிக்க ஜெனரல் குர், திட்டம் பிறிதொரு விடயத்தில் தங்கி இருப்பது ஆபத்தானது என கருதினார்.

பிரச்சனைக்கு உரிய விமான நிலையத்தில் இருந்து ஒழுங்கான சேவை ஒன்று சரியாக நடை பெறமுடியாது எனவும், 'கட்டுப்பாட்டுக் கோபுர உதவி இன்றி, சரக்கு விமானம் கிளம்பும் சரியான நேரத்தினை கணித்து வானில் இருக்கும் இன்னும் ஓர் விமானம் பதட்டத்துடன் இறங்க முடியாது என கருதிய ஜெனரல் குர், ஓடுபாதை விளக்குகள் இல்லாமல் தரை இறங்குவதில் ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என உத்தரவு இட்டதுடன் தானும் அந்த விமானத்தில் இருந்து அவதானிக்கப் போவதாயும் தெரிவித்தார்.

காலை பத்து மணிக்கு, Joni Netanyahu, Muki மற்றும் அவர்களது குழு வீரர்கள், பயணிகள் வைக்கப் பட்டிருக்கும் பழைய கட்டிடம், புதிய கட்டிடம், எண்ணைக்குதம், கட்டுப்பாட்டுக் கோபுரம், உகண்டா விமானப் படை விமானங்கள் தரிப்பிடம் ஆகிய மாதிரிகளில், தமக்குரிய பங்குகள் குறித்த கடும் பயிற்ச்சியில் இருந்தார்கள்.

அதேவேளை முகி தலைமையிலான குழுவோ, விமானங்களை தயார் படுத்தும் வேலையில் இருந்தார்கள்.

பல Hercules விமானங்கள் கொண்டு செல்லும் திட்டம் இருந்தாலும், முகி அதனை நிராகரித்து, தரை இறங்க மூன்று Hercules விமானங்கள் உடன் மேலதிகமாக ஒரு Hercules விமானமும் இரண்டு போயிங் 707 விமானங்களும், அவற்றில் ஒன்று மருத்துவ வசதிகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என தீர்மானித்தார்.

பகல் பனிரெண்டு மணிக்கு, எல்லோரும் தமது உயர் அதிகாரிகளுக்கு தமது பங்கு குறித்த 'தயார் நிலை மற்றும் பயிற்சி' குறித்து விளக்கம் அளித்தனர்.

இருப்பினும் ஒரு பிரச்சனை அவர்களை சிந்திக்க வைத்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எதிரியை திகைப்பில் ஆள்த்துவதே வெற்றியின் முதல் படி.

ஆனால், திடீரென இறங்கும் விமானத்தில் இருந்து வெளியேறும் ராணுவ வாகனங்கள் மிகத் தூரத்தில் உள்ள பயணிகள் வைக்கப் பட்டிருக்கும் பழைய கட்டிடம் நோக்கிப் பயணிக்கையில் ஆச்சரியதிற்குப் பதில் எதிர்த் தாக்குதலுக்கு தயாராகும் அவகாசத்தினைக் கொடுத்து விடும் அதேவேளை பயணிகள் உயிருக்கும் ஊறு விளைவிக்கும்.

என்ன செய்வது?

திடீரென பிரிகேடியர் முகிக்கு ஒரு திட்டம் உதித்தது.

இரு Land Rover முன்னும் பின்னும் வர கறுப்பு நிற Mecedes காரில் வரும் இடி அமின் பாணியில் சென்றால், இடி அமின் தான் வருகிறார் என குழப்பத்தில் உகண்டா வீரர்கள் தாக்க மாட்டார்கள் என அவர் சொன்னதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இரவு பத்து மணிக்கு பிரதம தளபதி General Motta Gur கண்காணிப்பில், வெளிச்சம் இல்லா ஓடுபாதை விமானத் தரை இறக்கம் பயிற்சி நடந்தது.

உலகையே மூக்கில் விரலை வைக்கச் செய்யப் போகும் ஒரு வரலாற்றுச் சம்பவத்திக்கான அணைத்தும் தயார்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Advise from Idi Amin on Alcohol

https://www.youtube.com/watch?v=XK2W0hSZxxI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 3, சனிக்கிழமை

அதிகாலை 1 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் சைமன் பெராஸ் அவர்களுக்கு பிரதம தளபதி குர் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது. சிறப்பான பயிற்சிகளுடன் தேவையான ஆயுதங்கள் மற்றும் தயார் நிலையில் தனது வீரர்கள் இருப்பத்தையும் தெரிவித்தார்.

முதல்நாள் முழுவதும், பிரான்ஸ் மற்றும் நேச நாடுகள் மூலமான ராஜதந்திர செயல்பாடுகள் தோல்வியில் முடிந்து இருந்தன.

அதே வேளை, பயணிகள் நிலை குறித்தும், இஸ்ரேல் அரசு செய்வது அறியாது, தடுமாறி நிற்பதாக மீடியாக்களும், மக்களும் விரக்தியுடன் பேச தொடங்கினர். இடி அமினும், கடத்தல் தீவிரவாதிகளும் எந்த வித சமரசத்துக்கும் இடம் கொடாமல், இஸ்ரேலினை மண்டியிட வைத்து தமது நோக்கத்தினை நிறை வேற்றுவதில் மிகவும் கவனமாக இரு[size=5]ந்[/size]தனர்.

இப்போது அவர்கள் முன் இருந்த வழி, ஒரே வழி: அதிரடி தான்.

காலை 11 மணிக்கு சில அமைச்சர்கள் மட்டுமே கொண்ட அவசர கூட்டத்தில், பிரதம அமைச்சர் ராபினுக்கு, தளபதி குர் தமது திட்டத்தினை விபரிக்கின்றார். ராணுவ பின்புலத்தில் இருந்து வந்த பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் அங்கே இருந்ததால், குர் இன் வேலை கடினமாக இருக்கவில்லை. மாறாக இடர் (risk) குறித்தே ஆய்வு நடந்தது.

கூட்டம் முடிந்த போது, 'எவ்வாறு' என்ற கேள்வி முடிந்து, 'எப்போது' என்ற கேள்வியே முன் நின்றது.

இஸ்ரேலிய நேரம் முற்பகல் சரியாக 1.20 ற்கு முதலாவது விமானம் மத்திய இஸ்ரேல் பகுதியில் இருந்து மேலே ஏறிய போது உகண்டா வில் சூரியன் மறையத் தொடங்கி இருந்தது.

இடி அமினுக்கு நல்லதோர் பாடம் தரப் போகும் 'Operation Thunderball' தனது நடவடிக்கையின் முதல் பாகத்தில் இருந்தது.

விமானத்தின் உள்ளே தமக்கான உத்தரவுகளை மீளாய்வு செய்தவாறு, கட்டளைத் தளபதிகளும், அமைதியாக ஆனால் உறுதியுடன் அதிரடி வீரர்களும் இருந்தார்கள்.

அதேவேளை சைமன் பெராஸ் அவர்கள், முன்னே இருக்கும் மிக நீண்ட இரவுக்கு தயாராவதற்காக சிறிது ஓய்வு எடுக்கச் சென்றார்.

பிரதமர் ராபினோ, பிரான்ஸ் உடன், கைதிகள் பரிமாறலுக்கு தனது அமைச்சரவையின் முழு அங்கீகாரம் கிடைக்கும் வரை மேலும் கால அவகாசம் வாங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

அவரது தலைமையில் மாலை நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகை ஆசிரியர் கோபத்துடன் கேட்டார். IDF எனும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் இருக்கிறார்களா, இல்லையா? அவர்களை என்ன அழகு பார்க்கவா வைத்து இருக்கின்றோம். அனுப்ப வேண்டியது தானே' என்றார்.

அங்கிருந்த புலனாய்வுத் துறை உயர் அதிகாரி ஜெனரல் கசிட், 'ஐயையோ, இது எவ்வளவு முட்டாள் தனமான, ஆபத்தான ஆலோசனை' என அலறினார். பிரதமர் ராபினோ, செய்வது அறியாதவர் போல் கைகளை பிசைந்த்தவாறு முகட்டினையும், நிலத்தினையும் மாறி, மாறிப் பார்த்துக் கொண்டார்.

ராடர்களுக்கு பிடிபடா வாறு மிகத் தாழ்வாக பறந்த விமானங்கள் எத்தியோபியாவின் வான் வெளிக்குள் நுழைந்தன.

காலநிலை சீராக இருக்கவில்லை.

கட்டளைத் தளபதி Dan Shomron முதல் விமானத்தில் இருந்த 86 வீரர்களுக்கும் இலக்கு நெருங்குவதனையும் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவித்தார்.

பாய்ச்சல் தொடங்கும்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகத் துல்லியமான கணக்குப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

சீர் இல்லா காலநிலையும் ஒருவகையில் நல்லதாகவே இருந்தது. ஏனெனில் பதிவாக செல்லும் போது, வருபவை இஸ்ரேலிய விமானங்கள் என ராடர்கள் கண்டு கொள்வது கடினம்.

விமானத்தின் ரேடியோ தொடர்புகள் முன்னரே திட்டம் இட்டவாறு துண்டிக்கப் பட்டிருந்தன.

திட்டமிடப்பட்ட குறித்த நேரங்களில் மட்டும் இருக்கும் இடத்தினை கட்டளைத் தலைமையகத்துக்கு அறிவிக்கும் பொருட்டு ரேடியோ இயக்கப்படும்.

சைமன் பெராஸ் அலுவலகத்தில் இருந்த பிரதமர் ராபினும் சிறிது பதட்டத்துடன் கையில் இருந்த மணிக்கூட்டில் நேரத்தினை பார்த்துக்கொண்டார்.

இரவு 11 மணி ஆக சில நிமிடங்கள் இருக்கையில் இயங்கிய ரேடியோவில் வந்த குட்டி அடம் விக்டோரியா ஏரி மேலாக இருப்பதனை 'over jordan' என்ற சங்கேத வார்த்தையில் சொல்லி தொடர்பினைத் துண்டித்துக் கொண்டார்.

கென்யா ஊடகப் பறந்து விக்டோரியா ஏரி மேலாகத் தாழப் பறந்து இலக்கு நோக்கி சென்ற முதல் விமானம் தரை இறங்கும் வரை ஏனையவை மேலே சுற்றி வந்து கொண்டிருந்தன.

தென் மேற்கு திசை ஊடாக ஓடு பாதையினை நெருங்கிய விமான ஓட்டி Lt S, ஓடுபாதையில் வெளிச்சம் இருப்பதனை கண்டு கொண்டார்.

Joni யும் அவரது வீரர்களும் ஏற்கனவே இரு Land Rover மற்றும் mercedes காரினுள் தயாராக இருந்து கொண்டனர். விமானத்தின் பின் கதவினை திறக்க விமான சிப்பந்திகளும் தயார்.

உகண்டா என்டபே விமான நிலையத்தினை, முதலாவது இஸ்ரேலிய விமானம் தரையை தொட்டபோது நேரம் இரவு 11 மணி 01 நிமிடம்.

சரியாக 30 செக்கன்கள் தாமதம் ஆக தரையை தொட்டதும், ஒரு கணப் பொழுது ரேடியோவினை இயக்கி 'நான் சொஸ்நாவில் இருக்கின்றேன்' என சொல்லி தொடர்பினைத் துண்டித்தார் விமான ஓட்டி.

அதேவேளை விமான ஓடு பாதையில் வெளிச்சம் தரக் கூடிய becons களை, பின்னால் தரை இறங்கும் விமானங்களுக்காக இன்னுமோர் குழு, யன்னல் வழியே விதைத்தது. சிலவேளை சந்தேகம் கொண்டு விளக்குகள் அணைக்கப் படலாம் என்பதால் இந்த ஏற்பாடு.

தகவல் கிடைத்ததும் கண்ணை மூடி ஒரு கணம் தனது இறைவனை வேண்டினார், பிரதமர் ராபின்.

அதே வேளை இடி அமினோ படுக்கைக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்...

Edited by Nathamuni

சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தின் பின் கதவு திறக்கப் பட விரைவாக கீழே இறக்கப் பட்ட இணை பாலத்தின் ஊடாக சீறிக் கொண்டு மூன்று வாகனங்கள் வெளியே வந்து பழைய விமான நிலையக் கட்டிடம் நோக்கி முன்னேறின.

எதிர்ப் பட்ட முதல் காவல் அரணில் நின்றிருந்த இரு உகண்டா வீரர்கள், இடி அமின் வருவதாகக் கருதி விறைப்பாக நின்றவாறு தமது துப்பாக்கியினை உயர்த்தினர்.

அது உகண்டா வீரர்கள் வழக்கமாகச் செய்யும் 'salute' முறை என தெளிவாகச் சொல்லப் பட்டிருப்பினும், இஸ்ரேலியர்கள் அவர்களை சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.

சைலேன்சர் பொருத்தப் பட்ட பிஸ்டல் ஒன்று காரினுள் இருந்த இயங்கியது. ஒருவர் விழ, அடுத்தவர் ஓட்டம் பிடித்தார். வேறு வழி இன்றி கார் நிறுத்தப் பட, அதிலிருந்து வெளியேறிய Joni குழுவினர் AK47 மூலம் இருவரையும் விழுத்தினர்.

சைலேன்சர் இல்லாத AK47 துப்பாக்கி சத்தம், விமான நிலையத்தினை அதிர வைக்க, உகண்டா வீரர்கள் என்ன நடக்கின்றது என முன்னேறி வந்தனர்.

Joni குழுவினர் அவர்களை எதிர் கொள்ள தயாரான போது, வாகனங்களில் இருந்து வெளியேறிய முகி தலைமையிலான குழுவோ இறுதி 40 யார் தூரத்தினை ஓடிக் கடந்து கட்டிட முதலாவது கதவினை அடைந்தது.

அது பூட்டி இருக்கவே, இரண்டாவது கதவினை நோக்கி ஓடினர். வழக்கமாக அதிகாரிகள் பின்னால் இருந்து உத்தரவு தர வீரர்கள் நகர்வர். ஆனால் இலக்கின் மத்தியில் மீட்கப் பட வேண்டிய பயணிகள் இருந்ததால், நிலைமை அறிந்து உத்தரவு கொடுக்க வேண்டும் என முகி முதல் ஆளாக உள்ளே செல்ல ஏனையோர் பின்னால் சென்றனர்.

பக்கத்தில் இருந்து உகண்டா வீரர் எதிர்ப் பட்டார். முகியின் துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டு அவரை வீழ்த்தியது.

ஒரு தீவிரவாதி என்ன நடக்கின்றது எனப் பார்க்க வெளியே வந்து, இமை பொழுதில் வந்த வழியே திரும்பி விட்டார்.

அந்த தீவிரவாதி மீது குறி வைத்து, விசையை அழுத்திய போது தான், தோட்டா இல்லை என முகி புரிந்து கொண்டார்.

வழக்கமாக இது போன்ற வேளைகளில் பின்னே வரும் வீரரை முன்னே செல்லுமாறு உத்தரவிட வேண்டும். மாறாக ஓடிக்கொண்டே அடுத்த மகசினை மாத்திக் கொண்டார் முகி.

நடப்பதனை விரைவாக புரிந்து கொண்டு தோளோடு தோளாக ஓடினார் பின்னே வந்த இளம் வீரர் அமன் . இவர்களுடன் விரைவாக இணைந்து கொண்ட மேலும் ஒரு வீரர் உடன் மூவருமாக திறந்திருந்த கதவினூடு உள்ளே பாய்ந்தனர்.

அதேவேளை, எதிர்பார்த்தது போல் ஓடு பாதை விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்க, விதைக்கப் பட்டிரிந்த becons உதவியுடன் கச்சிதமாக, ஒன்றன் பின் ஒன்றாக இரு விமானங்களும் தரை இறங்கின.

இரண்டாவது விமானத்தில் இருந்து சீறிக் கொண்டு வெளியே வந்த இஸ்ரேலிய இராணுவ கவச வாகனங்கள் தமக்குரிய இலக்குகள் நோக்கி வேகமாக நகர்ந்தன.

மூன்றாவது விமானம் பழைய விமான நிலையக் கட்டிடம் நோக்கி மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

400px-Entebbe-international-airport-2009-002.jpg

[size=5]The old terminal building of the Entebbe International Airport.[/size]

பாய்ச்சல் தொடரும்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வவ்................................................. சுப்பர் இப்படியான அதிரடிகளை எம்மவர்களும் நிகழ்த்தியிருக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடதுபுறம் அமனும், வலது புறம் மற்றைய வீரருமாக, கதவின் ஊடாகப் புயல் போல் வந்த முகி குழுவினர், கதவின் இடது பக்கத்தில், குழப்பத்துடன் நின்ற வெளியே தலை காட்டி இருந்த தீவிரவாதியினை வீழ்த்தினர்.

வந்திருப்பது எதிரிகள் என தாமதமாக புரிந்து கொண்ட, நிலத்தில் படுத்து இருந்த இன்னுமோர் தீவிரவாதி, திடீரென எழுந்து பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்.

முகியின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரு குண்டுகள் அவரை வீழ்த்தின.

வலது புறத்தில் இருந்து நாலாவது தீவிரவாதி திடீரென கைக்குண்டு ஒன்றை வீசி, துப்பாக்கியால் சுட்டார். எனினும் பதட்டத்தில் அவரது குண்டுகள் மேலே யன்னலை தாக்கியது.

மீண்டும் குறி பார்பதற்கு முன்னர் மூன்றாவது வீரரின் துப்பாக்கி அவரை வீழ்த்தியது.

அதே கணம் அமன், இடது பக்கமாக அப்பாவி பயணி போல் நின்றிருந்த Ortega எனும் பெண் தீவிரவாதியினை அடையாளம் கண்டு வீழ்த்தினர்.

அதேவேளை பயமும் குழப்பமும் ஒன்று சேர, என்ன செய்வது என பதட்டத்தில் எழுந்து ஓட சில பயணிகள் முனைந்த போது, திடீரென தேனாய் அந்த வரிகள் காதில் வந்து விழுந்தன....

பின்னால் ஓடி வந்த ஒருவர் கையில் இருந்த 'ஒலி பெருக்கி' மூலம், இது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், படுத்தே இருங்கள்'. என அறிவித்தார். (This is IDF!, stay down!")

அருகிலே ஒரு மெத்தை ஒன்றில், யார் தாக்குகின்றனர், என்ன இழவு நடக்கின்றது என புரியாது, எல்லாம் முடியட்டும், பார்க்கலாம் என சாகவாசமாக படுத்திருந்த கடைசி தீவிரவாதி, இதனை கேட்டவுடன் பாம்பினை கண்டவர் போல் பக்கத்தில் இருந்த துப்பாக்கியை தூக்கி கொண்டு விரைவாக எழுந்தார்.

எழுந்த வேகத்தில் மீண்டும் மெத்தையிலே சுருண்டு விழுந்தார்.

'Too Late My Friend' என சத்தமாக சொன்னார் முகி. பக்கத்தில் இருந்த கழிவறைகளில் சோதனை நடத்தி எதிரிகள் யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டனர்.

அதே வேளை மேலும் ஒரு அதிரடிக்குழுவினர், தீவிரவாதிகள் ஓய்வு எடுக்கும் இடம் நோக்கி சென்றனர். அங்கே மேலும் மூவர் இருந்தனர்.

அவர்கள் தீவிரவாதிகளா அல்லது பயணிகளா என குழப்பிய வீரர்கள் சில கணம் தயங்கினர். அந்த இடைவெளியில் ஒருவர் பக்கத்தில் இருந்த கைக்குண்டினை எடுக்க முனைய, மூவரும் வீழ்த்தப் பட்டனர்.

மூன்று நிமிடங்களில் அதிரடி அங்கே முடிந்தது.

பயணிகளை அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த அதே வேளை கட்டிடத்துக்கு வெளியே உடனடியாக வருமாறு முகிக்கு அழைப்பு வந்தது.

அங்கே.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேகமாக வெளியே வந்த முகி, அங்கே குண்டு அடிபட்டு வீழ்த்தப்பட்டிருந்த Lt. Col. Joni Netanyahu மருத்துவர் ஒருவரால் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டார்.

மூன்று அதிரடிக் குழுக்களை இயக்கிக் கொண்டிருந்த ஜொனி மீது பின்பக்கமாக, கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் ஒளிந்திருந்த உகண்டா வீரர் தாக்கி இருந்தார்.

அதே வேளை விரைவாக இயங்கிய அதிரடிக் குழுக்கள் கட்டுப்பாட்டுக் கோபுரம், புதிய, பழைய கட்டிடங்கள், விமான நிலையத்திற்கான பாதைகள் எல்லாவற்றினையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

காயப்பட்ட பயணிகள், படையினர் மற்றும் தாமாக நடக்க கூடிய பயணிகள் எல்லோரும் விமானத்தில் ஏற்றப் பட்டனர்.

எண்ணெய் குதங்களுக்குள் புகுந்த விமான படை பொறியியலாளர்கள் பெரும் பசியில் இருந்த எல்லா விமானங்களுக்கும் எண்ணெய் நிரப்பத் தொடங்கினர்.

எனினும் இது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகக் கூடிய வேலை. இந்த நேரம் இடி அமின் பெரும் தாக்குதல் படைகளை அனுப்பி வைக்கப் போதுமானது.

அதே வேளை, பறக்கும் மருத்துவமணை ஆக செயல் பட்ட விமானம் கென்யாவின் நைரோபி விமான நிலையத்தில் தரை இறங்கி இருந்தது. அந்த விமானத்திலேயே குட்டி அடமும் இருந்தார்.

கென்யா அதிகாரிகளிடம், இஸ்ரேலிய அதிகாரிகள் நடாத்திய அவசர பேச்சுவார்த்தையினை தொடர்ந்து, சகல விமானங்களும் இருக்கும் எண்ணையுடன் உடனடியாக கிளம்பி நைரோபியில் பெட்ரோல் நிரப்ப உத்தரவு வந்தது.

முதலாவது, மூன்றாவது (பயணிகள்) விமானங்கள் கிளம்ப, இரண்டாவது விமானம் தயார் நிலையில் நிற்க, விமானத்தினுள் செல்வதற்க்கு தயாரான இராணுவ கவச வாகனங்களுக்கு குட்டி அடம் இடம் இருந்து புதிய உத்தரவு கிடைத்தது.

திரும்பிச் சென்று, இடி அமின் ஆசை ஆசையாய் வாங்கி சேர்த்து வைத்திருந்த ஆறு மிக் விமானப் படை விமானங்களை துவம்சம் செய்து விட்டு வந்து விமானத்தில் ஏறின.

பின்னால் திரத்தி வந்து தாக்கக் கூடும் என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமது நடவடிக்களை வெற்றிகரமாக முடித்து இஸ்ரேலியர்கள், என்டபே யில் இருந்து கிளம்பினர்.

அதே வேளை, பெரும் புகை சுவாலையுடன் வெடிச் சத்தங்கள், விமான நிலையத்தில் இருந்து மேல் எழ , அடங்காச் சினத்தில் துடித்தார் இடி அமின்....

இன்னும் துடிப்பார்...

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் மூன்றாவது விமானத்தில் ஏறிக்கொள்ள எடுத்துக் கொண்டது ஏழு நிமிடங்கள்.

ஒவ்வொரு குடும்பத் தலைவரும், தமது குடும்பத்தவர் எல்லோரும் இருகிறார்களா என கேட்கப்பட்டே உள்ளே விடப் பட்டனர். அதேபோல் விமான pilot Captain Bacos கூட தனது 'குடும்பத்தினை' (Air France139 சிப்பந்திகள்) கவனித்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டார்.

அங்கே பழைய விமான நிலையத்தில் கொல்லப்பட்ட ஆறு தீவிரவாதிகளின் உடல்கள், இடி அமினுக்கு அன்பளிப்பாக விடப் பட்டிருந்தன.

இடி அமின் அடங்காச் சினம் கொண்டு துடித்தார்.

பயணிகளில் ஒருவர் மிக கடுமையான சுகவீனம் அடைந்திருந்தார். அவர் உகண்டா தலை நகர் கம்பலாவில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார்.

இடி அமினின் உத்தரவில் வைத்தியசாலை சென்ற இராணுவ கொலை வீரர்கள், அந்த நோயாளியை மனிதாபிமானம் எதுவும் இன்றி காலைப்பிடித்து தர தர என இழுத்துச் சென்று வைத்திய சாலைக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.

மனிதாபிமானத்துடன் தடுக்க முனைந்த டாக்டரும், சில தாதிகளும் கூட சுடப்பட்டனர்.

கொல்லப் பட்ட நோயாளியின் உடல் ஒரு காரின் பின்னால் தூக்கிப் போடப்பட்டு, அக்கார் கம்பாலாவின் வெளிப்புறமாக ஒரு ஆள் அரவம் இல்லா இடத்தில் கை விடப் பட்டு இருந்தது. மூன்று ஆண்டுகள் பின்னர் இடி அமின் ஆட்சி முடிந்த பின்னர் காரில் இருந்த எஞ்சிய உடல் பாகங்கள் எடுக்கப் பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப் பட்டன.

அதே வேளை கென்யா செய்த 'துரோகத்துக்காக' பழிவாங்க கம்பலாவில் தேடித் பிடித்து, அப்பாவி கெனியர்கள் சுமார்15 பேரும் சுட்டுக் கொல்லப் பட்டு இருந்தனர்.

மறுநாள் ஜூலை 4 அன்று....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பராய் போகுது நாதமுனி தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலை 4 ஞாயிற்றுக்கிழமை

கடைசி இஸ்ரேலிய விமானம் என்டபேயில் இருந்து புறப்பட்ட நேரம் அதி காலை 12 மணி 40 நிமிடம்.

சரியாக 30 நிமிடங்களில் கென்யா, நைரோபி விமான நிலையத்தில் ஒதுக்குப் புறமாக எல்லா விமானங்களும் எரிபொருள் நிரப்ப சாவகாசமாக நின்றன.

இறந்தவர்களில் ஒருவர் ஜொனி. என்டபேயில் இறந்திருந்தார். 'Killed in Action by enemy fire'

நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது எதிரியின் தாக்குதலில் கொல்லப் பட்டிருந்தார். இவரது நினைவாக 'Operation thunderball' எனும் பெயர் 'Operation Jonathan' என பெயர் மாற்றப்பட்டது.

காயமடைந்த பயணிகள், மருத்துவ விமானத்திற்கு அனுப்பப் பட்டிருந்தனர். அவர்களில் இருவர் மிகவும் காயமடைந்திருந்ததால், நைரோபியில் இருந்த வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டனர். ஒருவர் வழியில் இறந்து விட்டார்.

கென்யா அரசுக்கு, விமானங்கள் எங்கிருந்து வருகின்றன என சொல்வதில்லை என பிரதமர் ராபின் முன்னரே முடிவு செய்து இருந்தார்.

இடி அமினுடன் ஏற்கனவே பிரச்னை இருந்ததால் எதற்க்கு வம்பை இழுப்பது என ஒத்துழையாமல் இருக்கலாம் என நினைத்தே இந்த முடிவு எடுக்கப் பட்டது.

விமான நிலையத்தில் இறங்கும் அனுமதி குட்டி அடம் போன்ற அதிகாரிகளினால், நைரோபி விமான நிலைய அதிகாரிகள் உடன் சாதாரணமாக பேசி எடுக்கப் பட்டிருந்தது.

அதே போல் விமான நிலையத்தில் ஒருவருமே வித்தியாசமான விமானங்கள் குறித்து கேள்விகளும் கேட்கவில்லை.

அதிகாலை இரண்டு மணி நான்கு நிமிடம் அளவில் எல்லா விமானங்களும் கென்யாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி கிளம்பின.

இஸ்ரேலில் பயணிகள் மீட்பது தொடர்பில் அவர்களது உறவினர்கள் அரசாங்கத்துடனும் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உடனும் தொடர்பு கொள்ளவும், அழுத்தத்தினை பிரயோகிக்கவும் ஒரு அமைப்பினை உருவாக்கி அதற்கு ஒரு தலைவரையும் தேர்ந்து எடுத்து இருந்தனர்.

முதல் நாள் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு ஒரு தீர்க்கமான முடிவு எதனையும் தராது முடிந்தது குறித்தும், செயல் இல்லாத பிரதமர் குறித்தும் அன்று முழுவதும் பயணிகள் உறவினர்களுக்கு பதில் கூறி களைத்து போய் நள்ளிரவுக்கு பின் நித்திரைக்கு போய் இருந்தார், தலைவர்.

விமானங்கள் இஸ்ரேல் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பாதுகாப்பு அமைச்சில் இருந்து அந்த தலைவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சலிப்புடன் எடுத்த தலைவர் கிடைத்த செய்தியால், மகிழ்வில் அலறிய சத்தத்தில், சிறிது நேரத்தில் அயலவர்கள் அவர் வீடு முன் குவிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சு செய்தியினை அவருக்கு தெரிவித்தற்கு ஒரு காரணம் இருந்தது. உகண்டாவில், கம்பாலாவில் இருந்த AFP, BBC செய்தி நிறுவனங்கள் விமான நிலையப் பகுதியில் கேட்கும் வெடிச் சத்தங்கள் குறித்து செய்தி அனுப்பி இருந்தன.

இந்த செய்திகளுடன் தீவிர வாதிகள் பயணிகளை கொல்லத் தொடங்கி இருக்கலாம் போன்ற பல அனுமானங்களும், வந்திருந்தன. இது விரும்பத் தகாத விளைவுகளைத் தரலாம் என்பதாலேயே தகவல் வெளியிடப் பட்டது.

அதே வேளை விமானங்களின் உள்ளே இருந்த பயணிகள் எவருமே மகிழ்வாக இருக்கவில்லை. தமக்காக ஒரு வீரர் உயிர் இழந்ததும், ஒரு வாரமாக அனுபவித்த நரக வேதனையும் அவர்களை இன்னும் சுய நிலைமைக்கு கொண்டு வர வில்லை.

ஐக்கிய அமெரிக்க நாடு தனது இருநூறாவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய அதே தினமாகிய ஜூலை 4 ம் திகதி அதிகாலை, அதாவது இன்றைய தினத்தில் இருந்து 36 வருடங்களுக்கு முன்னால், முதலாவது விமானம், தெற்கு இஸ்ரேல் இலட் விமான நிலைய ஓடு பாதையினை அண்மித்த போது, விமானத்தின் ஓட்டுனர், விமான நிலையத்தினை சூழ்ந்து நின்று மகிழ்வுடன் கை அசைத்து நின்ற பெரும் மக்கள் கூட்டத்தினை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

அதே தினம் மதிய வேளை தலை நகர Ben Gurion International Airport இல் தரை இறங்கிய மூன்றாவது விமானத்தில் இருந்து வெளியே ஓடிவந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தமை எதிர்பார்த்து காத்திருந்த உறவுகள் கரங்களுக்குள் ஓடிச் சென்றனர்.

அதே வேளை பின்னால் வந்த இரண்டாவது விமானம் இலட் விமான நிலையத்தினை அடைந்து எல்லா வீர்களும் தாம் செய்து முடித்து மீண்ட மகத்தான சாதனை, இஸ்ரேலில் மட்டும் அல்ல, உலகெங்கினும் எப்படிப்பட்ட ஆச்சரியத்தினை ஏற்படுத்தி விட்டது என அறியாது, சக வீரர் Joni நினைவுடன் வெளியேறி தமது தளம் திரும்பினர்.

நண்பகல் அளவில் இஸ்ரேல் நாட்டில் பெரும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி இருந்தன.

இன்று ஜூலை 4. மனித சரித்திரத்தின் மகத்தான நிகழ்வு ஒன்றின் 36 வது நினைவு தினம் .

நன்றி

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.