Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதுரங்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி

Featured Replies

[size=5]சதுரங்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி செம்பியன்[/size]

[size=4]வட மாகாண கல்வித் தினைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையேயான 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.[/size]

[size=4]9(767).jpg[/size]

[size=4]மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில நேற்று புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் மூன்றாம் இடத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன. [/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/43235-2012-06-21-04-17-32.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]சதுரங்கப் போட்டியில் யாழ். மாவட்டத்திற்கு அதிக இடங்கள்[/size]

[size=4]வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டம் அதிக இடங்களை கைப்பற்றியதுடன் ஒரு போட்டியில் மாத்திரம் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண கல்வித்திணைக்களத்தின் மாணவர் அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவித்தார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டி முடிவுகள் வருமாறு,

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

முதலாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த காட்லிக்கல்லூரி, இரண்டாமிடம் - யாழ்ப்பாண வலயத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, மூன்றாமிடம் - வலிகாமம் வலயத்தை சேர்ந்த மகாஜனாக்கல்லூரி.

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

முதலாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த காட்லிக்கல்லூரி, இரண்டாமிடம் - யாழ்ப்பாண வலயத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, மூன்றாமிடம் - கிளிநொச்சி வலயத்தை சேர்ந்த கிளிநொச்சி மகாவித்தியாலயம.;

19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாண வலயத்தை சேர்ந்த யாழ். இந்துமகளிர் கல்லூரி, இரண்டாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த மெதடிஸ்ட் பெண்கள் உயர் பாடசாலை, மூன்றாமிடம் - வலிகாமம் வலயத்தை சேர்ந்த மகாஜனாக்கல்லூரி.

15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு

முதலாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த மெதடிஸ்ட் பெண்கள் உயர் பாடசாலை, இரண்டாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி, மூன்றாமிடம் - வடமராட்சி வலயத்தை சேர்ந்த வடமத்திய பெண்கள் கல்லூரி.[/size]

[size=4]a2(1202).jpg

a3(606).jpg[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/43202-2012-06-20-10-53-21.html[/size]

  • தொடங்கியவர்

[size=4]முடிந்தவரை சகல தாயக பாடசாலைகளிலும் சதுரங்க கல்வியை, குறிப்பாக மிக ஆரம்ப கல்வியில், அறிமுகப்படுத்தல் வேண்டும். காரணம் மூளை வளர்ச்சிக்கும் கடினமான நேரங்களில் வெற்றிகரமாக சிந்திக்கும் ஆற்றலையும் (critical thinking) வளர்க்கும் சக்தியை தருவதாகும்.[/size]

[size=4]அத்துடன் இவை அதிக பண முதலீடும் இல்லாத ஒன்று.[/size]

[size=4]சில நாடுகளில் பல பூங்காக்களிலும் கூட சதுரங்கம் விளையாடக்கூடிய வசதிகள் உள்ளன.[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பிரிவுகளிலும் வடமாகாண சம்பியன்களாக வந்த ஹாட்லியின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று முதல் இன்றுவரை காட்லி கல்லூரி மாணவர்கள் பயங்கர சுழியங்கள் ...வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹார்ட்லிக் கல்லூரியின் மைந்தர்களின் வெற்றியை, மனதாரப் பாராட்டுவதுடன், விட்டுக் கொடுத்த யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களுக்கும், பாராட்டுக்கள்! :D

விட்டுக்குடுக்காமல் விளையாடிய எனது ஹாட்லி கல்லூரிக்கு வாழ்த்துகள். :)

அதோடு எமது சகோதர பாடசாலையான மெதொடிஸ்ட் கல்லூரிக்கும் வாழ்த்துக்கள்.

Edited by Gajen

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு பாராட்டக்கள்

அதே நேரம் ஊக்கக்குறைவால் பின்னணியில் நிற்கும் பாடசாலைகளிலும் சதுரங்க விளையாட்டு ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.