Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற கட்டளையை கிழித்தெறிந்த சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு : சமன் சிகேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

saman.jpg

[size=2][size=4]யாழ். நீதிவான் நீதிமன்றக் கட்டளையைக் வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு முடிந்த பின்னர் ஊடகவியலாளரிடம் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

"நிலம் சுவீகரிப்பு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டு இருந்தது

இந்த நீதிமன்ற தடை உத்தரவு தாங்கிய கடிதத்தை வீதியில் வைத்து மாவை சேனாதிராசா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் வாசித்தனர். அதன் பின்பு தங்களைக் கைது செய்தாலும் பரவாயில்லை இது தான் இந்த அரசுக்கு தாம் சொல்லிவைக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக் கூறி நீதிமன்றக் கட்டளையை சிவாஜிலிங்கம் கிழித்து எறிந்துள்ளார்" என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக சிவாஜிலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த வழக்கையும் எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தனது சட்டத்தரணியுடன் இந்த விடயம் தொடர்பாக தான் ஆராய்ந்துள்ளதாக அவர் கூறினார்.[/size][/size]

[size=2][size=4]

http://www.tamilmirr...3-12-35-03.html[/size][/size]

யாழ்ப்பாணத்து ஒவ்வொரு தமிழனும் அங்கேயுள்ள் அநீதி மன்றங்களின் ஆணைகளை கிழித்தெறிந்து சிவாஜிலிங்கத்துடன் சிறை போக வேண்டும். இது சிவாஜிலிங்கத்தை உள்ளே தள்ளுவதால் ஜனாநாயக போராட்டங்களை முடக்கும் முயற்சி. வேண்டுமென்றே தமிழ் நீதிபதி கையால் போராடத்தை ஒடுக்க போலிஆணை எழுதப்பட்டது. ஜனநாயக போராட்டங்களை இலங்கை ஒடுக்குவதாக பலதடவை இலங்கையை ஐ.நா. கண்டித்துவிட்டது.

வாழ்க சுதந்திர புருஷன் ஈழத்து சிவாஜி

வெல்க தமிழ்மண் பெற்ற தன்மான தமிழன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்வதால் மற்றைய போராட்ட முன்னெடுப்பாளர்களை

அச்சுறுத்தலாம் எனச் சிங்கள அரசு நினைக்கின்றது.

மக்கள் அவருக்காகக் குரல் கொடுக்க முதல் ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் சேர்ந்து

அவருக்காகக் குரல் கொடுக்க முன் வரவேண்டும்.

குறிப்பாகத் த தே கூட்டமைப்பு முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பா அப்பிடியெண்டா அது என்ன! ஓ.. சுமந்திரன் & கொம்பனியா? கிழிஞ்சுதுபோ.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

40 வருடத்திற்க்கு முதல் இப்படி செய்திருந்தால் பொலிஸ்காரர் அந்த நபரை சுட்டுத்தள்ளியிருப்பார்கள் இப்ப வழக்கு போடும் அளவுக்கு கவனமாக செயல் பட்டிருக்கிறார்கள் காரணம் ...யான்யறியேன் .....

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஈழ தமிழர்களின் அரசியல் தலைமைக்குரிய தகமை பண்பு அனைத்து சிவாஜி லிங்கம அவர்களிடத்தில் காணபடுகிறது..

:) :) :)

[size=4]யாழில் உள்ள சிங்கள காவல்துறை, அத கடமைகளில் மிக முக்கியமானது - 'மகிந்த' சிந்தனையை முன்னெடுப்பது, அடுத்தது ஊழல், சாதாரண மக்களுக்கு உதவுவது .. பட்டியலில் கடைசியானது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.