Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................

Featured Replies

அன்பானவர்களே இந்தத்திரியின் மூலம் நானும் நீங்களும் கொஞ்சம் சிரிக்க முயற்சிப்போமா.....ஏற்கனவே பல உறவுகள் பல அற்புதமான நகைச்சுவைகளை இந்த தலைப்பின் ஊடாக தந்துள்ளீர்கள் ,அதைபோல் நானும் இப்படியொரு திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன். ஏனனில் புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இயந்திர வாழ்க்கையோடு ,வேலைப்பளு ,நிதிப்பளு,வாழ்க்கைப்பளு, என்று ஆயிரமாயிரம் பளுக்களுடன் ,கடுங்குளிர் மத்தியிலும் விரக்திய்டைந்தவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................இங்கே நீங்கள் அனைவரும் .உங்கள் கற்பனையில் வரும் நகைச்சுவை ஆக்கங்களை, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சிரிப்பு அனுபவங்களை, தாராளமாய் இங்கே இணைக்கலாம் .தயவு செய்து சினிமாக்களில் வரும் சிரிப்பு காட்சிகளை தவிர்த்தால் நல்லது உறவுகளே .................ஆகவே நான் ஆரம்பிக்கிறேன் ..........முடியுங்கள் ................

அண்மையில் நான் என் நண்பனுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன் ...........உள்ளே போனதும் அன்பான உபசரிப்பு சோபாவில் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கே ஆறு ,ஏழு சிறுவர், சிறுமியர் உள்ளே வந்தனர் . அப்பொழுது நான் நினைத்தேன் பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் சேர்ந்து விளையாட வந்துள்ளார்கள் ...............ஒரே சத்தமும் .சண்டையுமாக வீடு அல்லோல கல்லோலப்பட்டது ............சாரத்துடன் வீற்றிருந்த அந்த வீட்டின் தலைவர் அவர்களை கண்டித்து வெளியே மீண்டும் அனுப்பிவிட்டார் ............அவர் சொன்னார் இவங்களைப்பெத்து பெரிய கஷ்டப்படவேண்டியுள்ளது............. எனக்கு திக்கென்றது ...அந்த ஏழு குழந்தைகளும் அவருடையது என்றும் தெரிந்து கொண்டேன் .....அவர் எழுந்து மேலே ஓர் அலுவலாய் சென்ற தருணம் என் நண்பனிடம் கேட்டேன் ,,, டே மச்சி இவருக்கு வேலை வெட்டி இல்லையா ..........................அவன் சொன்னான் ஓம் மச்சி அவர் 24 மணி நேரமும் .........சாரத்துடந்தான் நிற்பார்....................

யாவும் கற்பனையே [ சத்தியமாய் இந்த கற்பனைக்கு சொந்தக்காரன் நான் இல்லைங்கா ...........]

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

யாராவது சிரியுங்கோ .................இல்லாட்டி நான் அழுதிடுவேன் ............. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.. ஹி.. ! ஹா.. ஹா..!! ம்.. சிரித்துத் தொலைக்கிறேன்!

ஆனால் அப்பப்போ எம்மை கவனியுங்கோ! deal ok yaa?

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்

ஹி.. ஹி.. ! ஹா.. ஹா..!! ம்.. சிரித்துத் தொலைக்கிறேன்!

ஆனால் அப்பப்போ எம்மை கவனியுங்கோ! deal ok yaa?

ரொம்ப நன்றி தோழரே சிரிப்புக்கு,.............

என்ன தோழரே சிரிப்பதற்கும் deal ஆ .........ரொம்ப கஷ்டமாய் இருக்கு சார்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்

சிரிப்புக்கு நன்றி ராதியக்கா............உங்கள் விருப்புள்ளிக்கும் சேர்த்து..........

அகூதாவிற்கும் நன்றி....................

நண்பர்களே

, நண்பிகளே உங்களால் சிரிக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை , ஏதாவது சிரிக்க கூடியதாய் சங்கதி இருந்தால் போடுங்கோ............எனக்கு சிரிக்கவேனும்போல் உள்ளது ..............அதற்காக நல்ல வைத்தியரிடம் போய் காட்டுங்கோ என்று மட்டும் எழுதி விடாதீங்கோ ............ :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ சூரியன்.. :D நாங்களும் ஏதாவது யோசிச்சு எழுதிறம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி இவருக்கு வேலை வெட்டி இல்லையா ..........................அவன் சொன்னான் ஓம் மச்சி அவர் 24 மணி நேரமும் .........சாரத்துடந்தான் நிற்பார்....................

கால்சட்டை கழட்டுறதுக்கிடையிலை.. மூட் மாறீடும், எண்ட முன் யோசனையாக, சாரத்தை நெடுக அணிந்துள்ளார் போலுள்ளது. :D:lol::icon_mrgreen:

  • தொடங்கியவர்

கால்சட்டை கழட்டுறதுக்கிடையிலை.. மூட் மாறீடும், எண்ட முன் யோசனையாக, சாரத்தை நெடுக அணிந்துள்ளார் போலுள்ளது. :D:lol::icon_mrgreen:

:D :D :D:icon_idea:

:lol: :lol: :lol: :lol: :lol: :lol:
  • தொடங்கியவர்

குடலற சிரிக்கக்கூடிய நகைச்சுவைகளை உங்களிடம் இருந்து எதிர் பார்த்தேன் .அட சீய் போங்கப்பா யாரும் எழுதவில்லை .அதனால் மீண்டும் நானே தொடர்கிறான் ...... சகிப்பதது தான் உங்கள் தலை எழுதென்றால் யாரால் மாற்றமுடியும்.

இந்தப்பிரபல்யமான நகைச்சுவை பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக எழுதுகிறேன்.

ஒரு நாடகம் மேடையில் அரங்கேறிக்கொண்டிருந்தது....நாடகம் முடியும் தருவாயில் வந்துவிட்டது..வில்லனுக்கும் ,கதாநாயகனுக்கும் வாள்சண்டை பொறிபறக்க நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் ஆர்வமிகுதியால் கத்திக்குளறி தங்கள் மகிழ்ச்சியை காட்டிய வண்ணம் இருந்தனர் . இதனால் வாள் சண்டையில் மூழ்கிப்போயிருந்த வில்லன் [சிங்கன்] மிகுந்த உற்சாகமடைந்தான் ....கதாநாயகன் குத்த குத்த தடுத்து தடுத்து சண்டையை தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் சாக வேண்டிய பொழுதிலும் சாகாமல் சண்டை தொடர்ந்தது.இதனால் பொறுமையிழந்த நாடக இயக்குனர் மேடையின் திரைச்சீலையை இழுத்து மூடிவிட்டு ஒலி வாங்கி மூலம் ஒலி பெருக்கியில் பின்வருமாறு அறிவித்தார். அன்பான ரசிகப்பெருமக்களே இவ்வாறே நடை பெற்ற சண்டையில் வில்லனாகிய சிங்கன் செத்துவிட்டான் ........ அப்போது திரைச்சீலையை வாளால் கிழித்துக்கொண்டு மேடைக்கு முன் சென்ற சிங்கன் சொன்னானாம் யாரடா சொன்னது மசிரைச்செத்தான் சிங்கன் ............

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/HjcyN6L-ypc

[size=3]

சிரிப்பு வருது சிரிப்பு இதன் சிறப்பை

[/size]

[size=3]

சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு

[/size]

[size=3]

கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும்

[/size]

[size=3]

கண்ணாடி சிரிப்பு மனம்

[/size]

[size=3]

கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்

[/size]

[size=3]

கண்ணாடி சிரிப்பு இது

[/size]

[size=3]

களையை நீக்கி கவலையைப் போக்கி

[/size]

[size=3]

மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு

[/size]

[size=3]

துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை

[/size]

[size=3]

புரிவது சிரிப்பு -- இதைத் துணையாய்க் கொள்ளும்

[/size]

[size=3]

மக்கள் மனதில் துலங்கிடும் தனி செழிப்பு

[/size]

[size=3]

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு -

[/size]

[size=3]

அதன் பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது

[/size]

[size=3]

காதறுந்த பழஞ்செருப்பு

[/size]

[size=3]

காதறுந்த பழஞ்செருப்பு

[/size]

[size=3]

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே

[/size]

[size=3]

சொந்தமான கையிருப்பு

[/size]

[size=3]

வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத

[/size]

[size=3]

செயலாகும் இந்த சிரிப்பு

[/size]

[size=3]

இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு

[/size]

[size=3]

இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு

[/size]

[size=3]

இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு

[/size]

[size=3]

இது சங்கீதச் சிரிப்பு....

[/size]

  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி தமிழரசு.சிரிப்பின் வகைகள் 1000..1000..........உண்மை ... :D

நான் கேட்பது மனித மனங்களில் இருந்து ஊற்றெடுக்கும் உண்மையான ஆரோக்கியமான சிரிப்பு ...........

ஏதாவது சிரிக்க கூடியதாய் எழுதுங்கோ ........... :icon_idea::D

  • தொடங்கியவர்

அடிக்கடி என்னைப்போலவே நீங்களும் கடந்தகால வாழ்க்கையை திரும்பிப்பார்ப்பீர்கள்தானே .......அப்போது அங்கு ஏற்பட்ட நகைச்சுவையான சம்பவங்களை நினைத்து சிரிப்பீர்கள் தானே .......தாயகத்தில் நான் வாழ்ந்த காலம் என்னிடம் எனது நண்பர் ஒருவர் கேட்டார் உலகத்திலேயே சந்தோசமான விடயம் என்னடா என்று.......நானும் எதை எதையோ எல்லாம் சொன்னேன்.......அதற்குரிய சரியான விடையை அவன் கூறினான்.........எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை ........சரி விடை என்ன என்பதை நீங்களே கூறி விடுங்கள் ..................

சம்பவம் 2

நான் இந்த புலம்பெயர் நாட்டிற்கு வந்ததும் என்னை முதலில் அகதிகளுக்கான முகாம் ஒன்றிலேயே தங்க வைத்தனர்..........என்னுடன் இன்னும் சில தமிழ் உறவுகளும் அங்கிருந்தனர். அத்துடன் ஆப்ரிக்கன்,ஈராக்,சோமாலி,அல்ஜீரிய குர்திஸ்,என்று பல்லின மக்களும் அங்கு இருந்தனர். ஒரே கூத்தும்,கும்மாளமும்தான்.........சண்டைகளுக்கும்,சச்சரவுகளுக்கும் எந்தக்குறையுமில்லை. சண்டைகள் என்பது நாடுகளுக்கு எதிராகவும்,இனங்களுக்கு எதிராகவும்........சொல்லி வேலையில்லிங்கோ..........எங்களுக்கும் சொமாளியாவிற்குமே அடிக்கடி சண்டை வருவதுண்டு...........ஒரு நாள் எம் தமிழ் உறவு ஒருவர் காலைக்கடனை முடிப்பதற்காக கழிவறைப்பக்கம் சென்றார். அந்த அறைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன .........இவருக்கு அடக்க முடியாமலும்,செய்வது தெரியாமலும் காத்துக்கொண்டிருந்தார்.இறுதியாக சோமாலியா நபர் ஒருவர் முடித்துக்கொண்டு வெளியே வந்தார்.....இவரும் அப்பாடா என்று அடித்து விழுந்து உள்ளே சென்றார்[ஓடினார்] அனால் இவரால் போக முடியவில்லை,மணம்,குணம்,அதை விட சுத்தமாக்கப்படாமல்[ தண்ணி அடிக்கப்படவில்லை] ..........இவருக்கு கோபம் போத்திக்கொன்டுவர ஆரம்பித்தது பாருங்க வாய்த்தர்க்கம்[ அவர் சுமாராக ஆங்கிலம் பேசுவார்] நாம் எல்லாம் என்னடா ஒரே சத்தமாய் இருக்குது என்று அங்கே ஓடிப்பார்த்தால் நடந்து கொண்டிருந்தது திருவிழா........இவர் சோமாலியா நபரையும்,அவர் நாட்டையும் இழிவாகப்பேச அவரும் படு மோசமாக பேச வாக்குவாதம் கைகலக்கும் அளவுவரை போகப்பர்த்தது.........ஒருவாறு நாம் எல்லோரும் தடுத்து நிறுத்திவிட்டோம்.....அவர்களிடையில் நடந்த வாய்ச்சமரில் எனக்கு இன்னும் நினைவில் நிற்பதை [அடிக்கடி நினைத்து சிரிப்பதை ] உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...................தமிழ் உறவு அவனிடம் அவரிடம் சொன்னார் உங்கள் நாட்டில் இப்படியான கழிவறைகள் இருந்தால்தானே எப்படி சுத்தமாக்குவது என்று உங்களுக்கு தெரியும் என்றார். அதற்கு அவர் உங்கள் நாட்டில் என்ன திறமா,கடற்கரைப்பக்கம் தானே உங்கள் கழிப்பு என்றார். உடனே இவர் கூறினார் நோ.... we have use only rolling toilets ...........[சுழல் மலசல கூடம்].................பின் அவரிடம் நான் கேட்டேன் அண்ணா நீங்கள் இப்படி வசதியானவராய் நாட்டில் இருந்தீர்களா.......சுழல் மல............எல்லாம்......

நான் ஒரு நாளும் அதை பார்க்கவேயில்லை எப்படியிருக்கும் றன்று அவரிடம் கேட்டேன். அவர் கூறினார் அடே அதடா பனையின் கீழ் குந்துவதடா.........இருக்கும் பொது யாராவது வந்துவிட்டால் சுத்தி சுத்தி இருபதடா என்றார்................எனக்கு வயிறு நோ தாங்கமுடியாமல் சிரித்தேன்...................

:unsure::lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

நாங்கள் ஊரில் இருக்கும்போது காலை விடியும் முன்னம் எங்காவது போக நேர்ந்தால், அவ்வப்போது பனைமரங்களுக்கு இடையில் ரோச் லைட் ஒளியைக் காணலாம்.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.