Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லவராவது தவறா...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

117wa2t.jpg

ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள்

ஆனால், அந்தோ பரிதாபம்...!

பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...!

கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நடத்துனரின் வாதத்தில் திருப்தியடையாமல், கடமையில் அசிரத்தை காட்டி அழகான பெண்ணைக் கொன்ற குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்து தீர்ப்பு கூறினார்.

சிறையதிகாரிகள் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற, ஒரு அறையின் நடுவே ஒரேயொரு மின்சார நாற்காலியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாற்காலியைச் சுற்றி அதியுயர் மின்னழுத்தக் கம்பிகளை பிணைத்தனர். அதே சமயம், அறையின் ஒரு மூலையில் உரித்த வாழைப்பழத் தோலை தவறுதலாக விட்டுவிட்டனர். மரண பயத்திலிருந்த நடத்துனரை நாற்காலியில் உட்காரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்.

அட..., என்ன அதிசயம்...!

கடுமையான மின்சாரம், நாற்காலியில் பாய்ந்தும் அவர் இறக்கவில்லை..!!

நீதிபதியும் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மரணத்திலிருந்து மீண்ட நடத்துனர் மறுபடியும் தன் வேலையை தொடர்ந்தார்.

சில மாதங்கள் கழிந்தன...

நடத்துனரின் மோசமான குணம் மாறவே இல்லை... !

இம்முறை, ஒரு நடுத்தர வயதுடைய மிதமான அழகுடைய மாது பேருந்தில் ஏற முற்பட்டார்.

என்னே சோதனை..?

நடத்துனரின் கவனக்குறைவால் அந்த மாதுவும் பேருந்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே மாண்டுபோனார். ஆத்திரமடைந்த பயணிகள் தப்பிக்க எத்தனித்த அந்த மோசமான நடத்துனரை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களும் நடத்துனரை நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதியும் சீற்றமுற்று நடத்துனருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார்.

தன் விதியை நொந்த நடத்துனரை, காவலர்கள் இழுத்துச் சென்று அதே அறையில், அதே நாற்காலியில் மின் கம்பிகளோடு பிணைதனர்...இம்முறையும் சிறையதிகாரிகள் அறையின் மூலையிலிருந்த அந்த வாழைப் பழத் தோலை கவனிக்க மறந்தே விட்டனர்... !

நாற்காலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது...!

அடடா....அனைவருக்கும் வியப்பு!

இம்முறையும் நடத்துனருக்கு ஒன்றும் ஆகவில்லை..! தப்பிப் பிழைத்தார்..!!

பிறகென்ன..?

நீதிபதியின் உத்தரவால் மறுபடியும் விடுதலை..! அதே வேலையில் தொடர்ந்தார் நடத்துனர்..ஆனால் மனதிற்குள் செய்த தவறை உணர்ந்து திருந்தி, இனி சரிவர நடக்கவேண்டுமென எண்ணினார்.

மாதங்கள் உருண்டோடின...

இம்முறை வயதான முதியவர் பேருந்தில் தட்டுத் தடுமாறி ஏற முயன்றார்... நடத்துனரும் முந்தைய அனுபவத்தால் சுதாரித்து பேருந்தை உடனே நிறுத்தினார்.

விதியின் சதியயை, யார் வெல்லுவார்..?

அந்த முதியவர் நிலைதடுமாறி, தவறி விழுந்து காயத்தால் இறந்தார்...!

பிறகென்ன?

அதே காவலர்கள்...அதே நீதிபதி...! ஆனால் இம்முறை நீதிபதி கடுங்கோபங்கொண்டு நடத்துனருக்கு படிப்பினையாக இருக்கட்டுமென மரண தண்டையை உடனே உறுதி செய்தார். காவலர்கள் அவரை இழுத்துச் சென்றனர்.

எந்த தவறும் செய்யாமல் நல்லவனாக மாறியும் எனக்கேன் இந்த நிலை..? என வருந்தினார், நல்லவரான நடத்துனர்..!

அதே அறை..! அந்த ஒரு மின்சார நாற்காலி...!!

மூலையிலும் ஒரு வாழைப்பழத் தோல் எடுக்காமல், அப்படியே..!!!

சிறையதிகாரிகள், அந்த மனந்திருந்திய நல்ல நடத்துனரை, மின்கம்பிகளால் நாற்காலியில் பிணைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்...

நம் தோழர்....அந்த திருந்திய நல்ல நடத்துனர், உடனே...அடுத்த நொடியிலேயே உடல் கருகி தூள்தூளாய் பொடிந்து, சாம்பலானார்..!

[size=5]இனி, நம் நற்சிந்தனைக்கு...[/size]

smiley4193.gifஎனக்கு இன்னமும் மனதிலும், மூளையிலும் ஒரே நெருடல்...! இரவில் தூக்கமே இல்லை...!! ஏனிந்த நிலை...?

மிக மோசமான நடத்துனராயிருந்து, மனந்திருந்தி வாழ நினைத்த அந்த நல்ல நடத்துனரை...ஏனிந்த இரக்கமில்லா இறைவன் தண்டித்தான்?

மோசமாயிருந்த நிலையில், முதல் இரண்டுமுறை ஏன் அவர் மரணிக்கவில்லை?

யாழ்கள உறவுகளே, நீங்களும் ஒருகணம் சிந்தியுங்கள்....! என் மன உளைச்சலுக்கு விடை தெளியுங்கள்..!

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

smiley3591.gifதெளிந்துணர்ந்தேன்... புதிருக்கான விடை, இக்கதையிலே உள்ளது!

கண்டுபிடியுங்கள்...! :lol:

[size=5]A[/size] புதிரா இல்ல இருக்கு.

மிக அழகான இளம் நங்கை -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

மிதமான அழகுடைய மாது -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

வயதான முதியவர் -- Old வாழைப்பழத் தோல் -- மின்சாரம் Attack

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]A[/size] புதிரா இல்ல இருக்கு.

மிக அழகான இளம் நங்கை -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

மிதமான அழகுடைய மாது -- New வாழைப்பழத் தோல் -- No மின்சாரம் Attack

வயதான முதியவர் -- Old வாழைப்பழத் தோல் -- மின்சாரம் Attack

ஓ..! கலக்கிட்டீங்க ஈசன்... நல்ல சமன்பாட்டு முயற்சி... ஆனால் விடைதான் தவறு...!

மறுபடியும் முயலுங்களேன்!

ஓ..! கலக்கிட்டீங்க ஈசன்... நல்ல சமன்பாட்டு முயற்சி... ஆனால் விடைதான் தவறு...!

மறுபடியும் முயலுங்களேன்!

முதல் இரண்டிலும் ஓட்டுணர் தவறு.

கடைசி நடத்துணர் தவறு.. இதுவா..? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், பவர் கட்!

மூன்றாவது தடவை, ஜெய் ஹிந்த்! :D

நீதி: இந்தியாவில், குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்!

நிரபராதிகள், தண்டிக்கப் படுகின்றார்கள்! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டிலும் ஓட்டுணர் தவறு.

கடைசி நடத்துணர் தவறு.. இதுவா..? :D :D

இல்லை... இல்லவே இல்லை..!

மூன்று முறையும் ஓட்டுனர் நடத்துனரின் ஊதல் ஒலி கொடுத்த பின்னரே பேருந்தை கிளப்பினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், பவர் கட்!

மூன்றாவது தடவை, ஜெய் ஹிந்த்! :D

புங்கை வடிவா நோக்குங்கள்...!

மூன்று நிகழ்விலும் மின்சாரம் பாய்ந்துள்ளதே?

அய்புவான்!

நீதி: இந்தியாவில், குற்றவாளிகள் தப்பி விடுகிறார்கள்!

நிரபராதிகள், தண்டிக்கப் படுகின்றார்கள்! :icon_idea:

நீங்கள் பேசுவது அரசியல்...!

நான் கேட்பது பொறியியல்! :D

.

1.

அந்த நாற்காலியைச் சுற்றி அதியுயர் மின்னழுத்தக் கம்பிகளை பிணைத்தனர். மரண பயத்திலிருந்த நடத்துனரை நாற்காலியில் உட்காரவைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்.

2. நாற்காலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது...!

3.சிறையதிகாரிகள், அந்த மனந்திருந்திய நல்ல நடத்துனரை, மின்கம்பிகளால் நாற்காலியில் பிணைத்து மின்சாரத்தை பாய்ச்சினர்...

Also,

ஒரு சின்ன டவுட்டு.. அந்த அறையில் குரங்கு ஏதாச்சும் இருந்திச்சா ??? :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகான இளம் நங்கை

மிதமான அழகுடைய மாது

வயதான முதியவர்

எனக்கு விளங்கிட்டு ஏன் என்று.. ஆனால் சொன்னால் நீங்கெல்லாம் திட்டுவீங்க..!

இருந்தாலும்.. சொல்லாமல் இருக்க முடியல்ல.

முதல் இரண்டும் பெண்கள்... அவர்கள் அந்த நடத்துனரை விட கொடியவங்க. அதனால செத்துட்டாங்க.அவர்களைக் கொன்றதற்காக நடத்துனர் தர்மத்தால் தண்டிக்கப்படல்ல.. தப்பித்திட்டார்.

மூன்றாமவர்.. முதியவர். அவர் நடத்துனரை விட நல்லம். அதனால அவரை கொன்றதனால.. நடத்துனர் கெட்டவராகிட்டார். அதனால தர்மம் தண்டிக்க.. அவர் இறந்திட்டார்..!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால்..................... பெண்கள் தர்மத்தின் முன்...............கெட்டவங்க........................... !!! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன டவுட்டு.. அந்த அறையில் குரங்கு ஏதாச்சும் இருந்திச்சா ??? :D

இல்லை...

குரங்கிலிருந்து வந்த மனிதர்களே இருந்தனர்..!

மிக அழகான இளம் நங்கை

மிதமான அழகுடைய மாது

வயதான முதியவர்

எனக்கு விளங்கிட்டு ஏன் என்று.. ஆனால் சொன்னால் நீங்கெல்லாம் திட்டுவீங்க..!

இருந்தாலும்.. சொல்லாமல் இருக்க முடியல்ல.

முதல் இரண்டும் பெண்கள்... அவர்கள் அந்த நடத்துனரை விட கொடியவங்க. அதனால செத்துட்டாங்க.அவர்களைக் கொன்றதற்காக நடத்துனர் தண்டிக்கப்படல்ல.. தப்பித்திட்டார்.

மூன்றாமவர்.. முதியவர். அவர் நடத்துனரை விட நல்லம். அதனால அவரை கொன்றதனால.. நடத்துனர் கெட்டவராகிட்டார். அதனால அவர் இறந்திட்டார்..!

இதில் இருந்து தெரிவது என்னவென்றால்..................... பெண்கள்........................... !!! :lol::D

உங்களின் "தனி முத்திரை" முயற்சி நெடுக்ஸ்...

துரதிர்ஷ்டவசமாக இது சரியான விடை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை கொன்றால்... கடவுள் தண்டிப்பார். :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரண்டு தடவையும், வாழைப் பழத்தோல் பச்சையாகக் கிடந்தது! இதனூடாக மின்சாரம் பாய்ந்து பியூஸ் ஏற்பட்டிருக்கலாம்! மூன்றாம் தடவை தோல் காய்ந்துவிட்டது போலும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. நடத்துனர் சப்பாத்து அணிந்து சென்றிருப்பார். அதனால் மின்சாரம் தாக்காது.... தப்பித்தார்..!

3ம் தடவை.. இழுத்துச் சென்ற போது.. செருப்பு அணிந்திருப்பார். அது (சப்பாத்து அல்ல) கழன்றிருக்கும். அதனால மின்சாரம் தாக்கி இறந்தார்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை கொன்றால்... கடவுள் தண்டிப்பார். :D:lol::icon_mrgreen:

நல்ல சாபம் சிறியானந்தா! :lol: மேடருக்கு வாங்க..!

முதலிரண்டு தடவையும், வாழைப் பழத்தோல் பச்சையாகக் கிடந்தது! இதனூடாக மின்சாரம் பாய்ந்து பியூஸ் ஏற்பட்டிருக்கலாம்! மூன்றாம் தடவை தோல் காய்ந்துவிட்டது போலும்! :icon_idea:

புங்கை நெருங்கி பின் விலகிட்டார்!

முதல் இரண்டு தடவையும்.. நடத்துனர் சப்பாத்து அணிந்து சென்றிருப்பார். அதனால் மின்சாரம் தாக்காது.... தப்பித்தார்..!

3ம் தடவை.. இழுத்துச் சென்ற போது.. செருப்பு (சப்பாத்து அல்ல) கழன்றிருக்கும். அதனால மின்சாரம் தாக்கி இறந்தார்..! :lol::)

இல்லையே, நாற்காலியில் அவரை உட்காரத்தானே வைத்தார்கள்..!

நாற்காலியில் ஏதும் சப்பாத்துகள் இல்லை.. :)

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. வாழைப்பழத் தோல் ஈரலிப்பு என்பதால்.. Short circuit தோன்ற.. மின்சாரம் அதற்கூடாகப் பாய...நடத்துனர் தப்பித்தார்.

மூன்றாம் தடவை வாழைப்பழத் தோல் காய்ந்துவிட்டதால்.. Short circuit தோன்ற வாய்ப்பில்லாததால்.. மின்சாரம் நடத்துனரை தாக்க.. கருகி.. இறந்து போனார். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது, மதுரையால் வந்த சோதனை?

முதல்இரு தடவைகளும். நாட்காலியைச் சுற்றி மின்கம்பிகள் பொருத்தப்பட்டன!

மூன்றாம் தடவை நாட்காளியுடன் மின்கம்பிகள், பொருத்தப் பட்டன!

இசை வரமுந்திச் செய்ய வேணும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு தடவையும்.. வாழைப்பழத் தோல் ஈரலிப்பு என்பதால்.. Short circuit தோன்ற.. மின்சாரம் அதற்கூடாகப் பாய...நடத்துனர் தப்பித்தார்.

மூன்றாம் தடவை வாழைப்பழத் தோல் காய்ந்துவிட்டதால்.. Short circuit தோன்ற வாய்ப்பில்லாததால்.. மின்சாரம் நடத்துனரை தாக்க.. கருகி.. இறந்து போனார். :lol::icon_idea:

இல்லை நெடுக்ஸ்... தோல் ஒரு மூலையில்தானே இருந்தது...?

புங்கை சொன்னதில் ஒரு உட்பொதிந்துள்ள சூத்திரம் சிறிதே பொருந்தும்...

நான் விடையை சொல்லிடுவேன்...அதற்கு முன் அந்த "வேடிக்கையான பொறியியல் தத்துவத்தை" எப்படி கள உறவுகள் அணுகுகிறீர்கள்? என பார்க்க ஆசை. ..smiley7283.gif

என்னடா இது, மதுரையால் வந்த சோதனை?

முதல்இரு தடவைகளும். நாட்காலியைச் சுற்றி மின்கம்பிகள் பொருத்தப்பட்டன!

மூன்றாம் தடவை நாட்காளியுடன் மின்கம்பிகள், பொருத்தப் பட்டன!

இசை வரமுந்திச் செய்ய வேணும்!

இசைக்கு நரி மூளை.. ! கண்டுபிடிக்கலாம்... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான விடையை என்னுடைய அலுவலகத்திலுள்ள அரபி உயரதிகாரியிடம் சொன்னேன்...

அவர் பார்த்த பார்வை இருக்கே...?

அடிக்காத குறைதான்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்ஸ்... தோல் ஒரு மூலையில்தானே இருந்தது...?

நானும் யோசிச்சனான்.. ! இருந்தாலும்.. சிலர் புதிர்கள்.. கேணத்தனமா விடை எதிர்பார்க்கிற படியால்.. எழுதிப் பார்த்தன்..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவை நாற்காலி live wire - live wire ரோடு பிணைக்கப்பட்டிருந்தும்.... இரண்டாம் தடவை neutral wire - neutral wire என்று பிணைப்பட்டிருந்தும்.. மின்சாரம் பாய்ச்சப்பட்டதால்..நடத்துனர் ஒரு கடத்தியாக இருந்து.. தப்பினார். இறுதித் தடவை.. கதிரையின் ஒரு பக்கம்.. live wire - மறுபக்கம் neural wire பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் நடத்தினர் ஒரு component ராக.. மின்சாரம் தாக்கி கருகி இறந்திருப்பார். :)

உ+ம்= வீதியில் உள்ள மின்சாரக் கம்பியில் இருக்கும் குருவி இறப்பதில்லை. ஆனால் Live - Neutral க்கு இடையில் தொங்கு வெளவால் மடிந்துவிடும்..! இங்கு 3ம் தடவை.. நடத்துனர் வெளவால் ஆகிவிட்டார். முதல் இரண்டு தடவையும்.. Live வயரில் இருந்த குருவி போலவும்.. Neutral வயரில் இருந்த குருவி போலவும் நாற்காலி பிணைக்கப்பட்டிருந்ததால்.. தப்பிவிட்டார்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் தடவை நாற்காலி live wire - live wire ரோடு பிணைக்கப்பட்டிருந்தும்.... இரண்டாம் தடவை neutral wire - neutral wire என்று பிணைப்பட்டிருந்தும்.. மின்சாரம் பாய்ச்சப்பட்டதுல்..நடத்துனர் ஒரு கடத்தியாக இருந்து.. தப்பினார். இறுதித் தடவை.. கதிரையின் ஒரு பக்கம்.. live wire - மறுபக்கம் neural wire பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் நடத்தினர் ஒரு component ராக.. மின்சாரம் தாக்கி கருகி இறந்திருப்பார். :)

பேஷ், பேஷ்... நல்ல முயற்சி...!

நீங்களும் சற்றே நெருங்கிவிட்டீர்கள். ஆனால் சிறையதிகாரிகள் இதைக்கூடாவா தெரியாமலிருப்பார்கள் நெடுக்ஸ்..?

அவர்கள் சிங்கள போலீஸ் மாதிரியல்ல.. :lol:

பெருமையாக சொல்லவேணுமென்டால், "இன்டர்போலு"க்கே சவால் விடக்கூடிய தமிழக காவல்துறை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுவும் இல்லையா.. அப்ப....

முதல் இரண்டு தடவையும் நடத்தினர் கதிரையின் குசனின்.. (மின்கடத்தாப் பொருள்) தொடுகையோடு மட்டும் இருந்திருப்பார். 3ம் தடவை அவரின் கைகள்.. அல்லது கால்கள்.. அல்லது உடல்.. கதிரையின் உலோகப் பகுதிகளோடு தொடுகையுற்ற நிலையில் இருந்திருந்தால். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கக் கூடும்..! :icon_idea::)

(இதோட என் முயற்சிகளை.. முடிச்சிக்கிறன். அப்புறம்.. புது ஐடியா வந்தா எழுதிக்கிறன்.) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட அதுவும் இல்லையா.. அப்ப....

முதல் இரண்டு தடவையும் நடத்தினர் கதிரையின் குசனின்.. (மின்கடத்தாப் பொருள்) தொடுகையோடு மட்டும் இருந்திருப்பார். 3ம் தடவை அவரின் கைகள்.. அல்லது கால்கள்.. அல்லது உடல்.. கதிரையின் உலோகப் பகுதிகளோடு தொடுகையுற்ற நிலையில் இருந்திருந்தால். அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கக் கூடும்..! :icon_idea::)

இல்லை நெடுக்ஸ்... நடத்துனரை உட்கார வைத்ததிலோ, இல்லை, மின் கம்பிகளின் இணைப்பு அமைப்பிலோ(electrical circuit) குறைகள் எங்கும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது 'உண்மைக் கதை' என்று எனக்கு சொல்லியவரை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்..!. நீங்களும் என்னோடு சேர்ந்து வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...!

ஏனெனில், நம்பிக்கைதானே வாழ்க்கை...? (ஓ.. சமூக நீதி கிட்டியாயிற்று!) :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.