Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eega - நான் ஈ

Featured Replies

Eega - நான் ஈ

wp-2eega800.jpg

ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.

கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன். காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில்தான் மனுஷன் நின்று ஜெயித்திருக்கிறார். திரைக்கதையில், மேக்கிங்கில், எனறு ஆரம்பித்து ஒவ்வொரு டிபாட்மெண்டிலும் மனுஷனின் உழைப்பு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

wp-9eega800.jpg

காதலனாய் நானி. இதுவரை இவரின் நடிப்பை பார்த்தவரையில் இவ்வளவு எனர்ஜிடிக்காய் நடித்துப் பார்த்ததில்லை. இவருக்கும் சமந்தாவுக்குமான காதல் காட்சிகள் ஹாப்வேயில் ஆரம்பித்து சட்டென முடிந்துவிடுகிறது என்றாலும், படம் நெடுக நானியின் ப்ரெசென்ஸ் இருப்பதைப் போலவே உணர வைத்ததில் இயக்குனரின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு நானியின் பங்கும் இருக்கிறது. காதல் காட்சிகளில் சமந்தா அலைய விடும் போதெல்லாம் அதை பாசிட்டிவான விஷயமாய் மாற்றி பேசும் இடங்களில் எல்லாம் காதல் இயல்பாக நிகழ்கிறது. சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து கரண்ட் கட்டின் போது லைட் கொடுக்கும் ஐடியாய் சினிமாத்தனமாய் இருந்தாலும், க்யூட். அது போல ரெண்டு வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை காதலிக்கவேயில்லை என்று நண்பன் சொல்ல, அதற்கு நானி, இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி என்னையும் தூங்கச் சொல்லுறா என்று சொல்வதும், அதை சமந்தா படுத்தபடியே கேட்டு புன்னைகைப்பதும் அதை விட செம க்யூட்.

சமந்தா படம் நெடுக மலர்ந்த பூவைப் போல ப்ரெஷ்ஷாக இருக்கிறார். அதிலும் நானியின் காஉலதலை டீஸ் செய்யும் காட்சிகளில் அவர் கண்களில் தெரியும் குறும்பும், காதலும் நன்றாக இருக்கிறது.

wp-6eega800.jpg

இவர்களை விடவும் பாராட்டப்படவேண்டிய ஒருவர் யாரென்றால் படத்தின் வில்லனாய் இருந்தாலும், ஹீரோவாக வலம் வந்து தன் சிறந்த நடிப்பால் நம்மை கட்டிப் போடும் சுதீப்தான். கண்களில் தெரியும் வில்லத்தனம், காமம், அடையத் துடிக்கும் வெறி, ஈயினால் பாதிப்பு வந்துவிடுமோ என்று கண்களில் தெரியும் பயம், என்று மனுஷன் பிய்த்து உதறியிருக்கிறார். அதிலும் முழுக்க முழுக்க, சிஜியில் ஈ எங்கேயிருக்கிறது என்று உத்தேசமாய் நடித்து ரியாக்ட் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. க்ரேட் பர்பாமென்ஸ்.

wp-8eega800.jpg

படத்தின் முக்கிய ஹீரோக்கள் மூன்று பேர், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, சிஜி செய்த மேக்ஸிமா குழுவினர். அற்புதமான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார் செந்தில். அதே போல இரண்டே பாடல்கள்தான் படத்தில் முழுவதுமாய் வருகிறது. மற்ற பாடல்கள் பின்னணியிசையாய் உபயோகித்திருப்பது சுவாரஸ்யம். செகண்ட் ஹாப்பில் நானி ஈயாய் மாறி சுதீப்பை துறத்த ஆரம்பித்ததும், வரும் பின்னணி இசை அட்டகாசம். அதே போல ஆரம்பக்காட்சியில் ஈ யின் சிஜி கொஞ்சம் ப்ளாஸ்டிக்காய் தெரிந்தாலும், போகப்போக, அது ஒரு கேரக்டராய் மாறி ஹீரோயினிடம் வசனமாய் இல்லாமல் ஆக்‌ஷனிலேயே பேசும் போது நாமும் இன்வால்வ் ஆவதிலேயே அவர்களின் வெற்றி தெரிந்து விடுகிறது. எனக்கு தெரிந்து சமீபத்தில் முழுக்க முழுக்க, சிஜியிலேயே எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நல்ல உழைப்பு என்று சொல்லக்கூடிய படங்களில் சிறந்ததாய் ஈகா இருக்கும்.

எஸ்.எஸ்.ராஜமெளலி தான் ஒர் மாஸ் எண்டர்டெயினர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். சின்னச்சின்ன வசனங்களாலேயே படத்தில் வரும் கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. “நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க?' “உங்க டைமுக்கு” என்பது போன்றவை உதாரணங்கள். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் கேரக்டர்களின் ப்ரச்சனைகளைச் சொல்லி, அடுத்தடுத்து நம்மை ஆகர்ஷிக்க, சுவாரஸ்ய பின்னல்களை முடிக்கிவிட்டபடியே இடைவேளையின் போது நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். மிக சாதாரணக்கதையை எப்படி சுவாரஸ்யமாய் சொல்வது என்பது அவருக்கு கை வந்த கலை. அதை இதில் இன்னும் மெருகோடு செய்திருக்கிறார். ஒரு ஈயை வைத்து எப்படி ஆறடி மனிதனை அழிக்க முடியும் என்பதை பற்றி கொஞ்சம் லாஜிக்கலாய் யோசித்தால் சப்பென்று இருக்கும். ஆனால் அதை வித்யாசமான ஐடியாக்களோடு நம்மை சில இடங்களில் சீட்டு நுனிக்கே கொண்டு வரும் காட்சிகள் சூப்பர். அதே தமிழில் சந்தானம் செய்திருக்கும் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் தெலுங்கில் செய்திருக்கிறார். அந்த சின்ன காமெடி ட்ராக்கை படம் முடிந்து டைட்டில் கார்டில் முடித்திருப்பது சுவாரஸ்மான காமெடி. அதே போல சமந்தாவை எதற்காக மினியேச்சர் ஆர்டிஸ்ட் கேரக்டராய் வடிவமைத்தார் என்று யோசிக்கும் போது அதை பயன்படுத்திய விதத்தைப் பார்த்ததும் அட என்று கைதட்ட வைக்கிறார்.

wp-7eega800.jpg

மைனஸ் என்று பார்த்தால் நானி, சமந்தாவின் காதல் இன்னும் கொஞ்சம் டெப்தாய் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.மீண்டும் ஈயாகவே பிறப்பெடுப்பது, என்பது போன்ற விஷயங்கள்.அது மட்டுமில்லாமல் இரண்டாவது பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் லேக் இருந்தாலும், அதைல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல க்ளைமேக்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கும் இபப்டம் நிச்சயம் தென்னிந்திய சினிமாவைத்தாண்டி வெற்றியடையப் போவது உறுதி.

http://www.cablesankaronline.com/2012/07/eega.html?spref=fb

இந்தப் படத்தை பார்த்தே தீருவன் என்று என் மகன் ஒற்றைக் காலில் நிற்கின்றான்... அநேகமாக நாளை பார்ப்பேன்

நேற்று இரவு குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. Graphical fantasy !! ஈ படுத்தும் பாட்டை பார்த்து சிரித்து சிரித்து குரலே அடைத்து விட்டது. ஈ பழிவாங்கும் செயல்கள் எல்லாம் நம்பக்கூடிய விதத்தில் எடுத்திருப்பது தான் இந்தப் படத்தில் பிடித்த அம்சம். ஒரு ஈ தன் வாழ்வில் படும் பாட்டை ஈயாக பிறந்து வெளிவரும் 10 நிமிடக் காட்சிகளில் அருமையாக காட்டினார்கள். என் மகனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போய் தியேட்டரில் காட்ட வேண்டிய படம். ஆர்ட் படங்கள், யமுனா ராஜேந்திரன் போன்ற விசுக்கோத்துகளின் விமர்சனங்களைப் படிப்பவர்கள் எல்லாம் பார்க்க வேண்டாம்

எனக்கு படத்தின் கதாநாயகி சமந்தா வை மிகவும் பிடித்திருந்தது. Angel !!

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டையாய் பிடித்திருக்கு என்று எழுதினால் எப்படி?

"எந்த பாகம்" படத்தில் பிடித்துள்ளது என்று எழுத கூடாதா?

  • தொடங்கியவர்

நேற்று பார்த்தேன் எனக்கு பிடிதிருந்தது நான் பார்த்த தமிழ் படங்களில் சிறந்த சி‌ஜி works

அடுத்த பிரகாஷ் ராஜ் ரெடி வில்லன் அமர்க்களம்

சமந்தா பற்றி நிழலி அண்ணா சொல்லிட்டாரே ..ஏஞ்சல் :lol:

மூன்று பாசைகளிலும் வேழுத்து வாங்குவதாக கேள்வி .முடிந்தால் நாளை அரை ரிக்கேட்டில் பார்க்க உத்தேசம் .

சினிமா என்று வரும் போது நல்லபடம் ,கூடாத இரண்டுவகைதான் .

அன்பே சிவத்தையும் ரசிக்கவேண்டும் ,லயன் கிங் கையும் ரசிக்க வேண்டும் ,பாரன் (ஈரானிய படம் ) பார்த்தும் ரசிக்க வேண்டும் ,கோல்ட் பிங்கரையும் பார்த்து ரசிக்கவேண்டும். அவன்தான் உண்மையான சினிமா ரசிகன் .

இவர்கள் இதுமட்டும்தான் பார்ப்பார்கள என்று மற்றவனுக்கு வட்டம் போட கூடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று பாசைகளிலும் வேழுத்து வாங்குவதாக கேள்வி .முடிந்தால் நாளை அரை ரிக்கேட்டில் பார்க்க உத்தேசம் .

சினிமா என்று வரும் போது நல்லபடம் ,கூடாத இரண்டுவகைதான் .

அன்பே சிவத்தையும் ரசிக்கவேண்டும் ,லயன் கிங் கையும் ரசிக்க வேண்டும் ,பாரன் (ஈரானிய படம் ) பார்த்தும் ரசிக்க வேண்டும் ,கோல்ட் பிங்கரையும் பார்த்து ரசிக்கவேண்டும். அவன்தான் உண்மையான சினிமா ரசிகன் .

இவர்கள் இதுமட்டும்தான் பார்ப்பார்கள என்று மற்றவனுக்கு வட்டம் போட கூடாது .

இந்த விசயத்தில் நானும் உங்கள் கட்சிதான் அர்ஜுன்...

  • தொடங்கியவர்

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த அப்பாக்களுக்கு கதை சொல்லும் திறன் சிறப்பாக இருந்திருக்கிறது. இப்போது என் குழந்தைகளுக்கு சொல்ல என்னிடம் கதை எதுவும் உருப்படியாக கிடையாது. சுவையாக சொல்லவும் தெரியாது. என் அப்பா நல்ல கதை சொல்லி. இராமாயண, மகாபாரதக் கதைகளையும் எனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்திருக்கிறார். திராவிட இனமான வரலாற்றையும் கதைவடிவில் சொல்லியிருக்கிறார்.

எழுபதுகளில் அப்படித்தான் தன் மகனுக்கு ஒரு அப்பா கதை சொன்னாராம்.

raja+prasad.jpg“ஒரு ஊர்லே ஒரு ராஜா..”

“இந்த கதை போர் அடிக்குதுப்பா. வேற கதை சொல்லு”

“ஒரு ஊர்லே ஒரு ஈயாம். அதே ஊர்லே ஒரு பேட் பாயாம்”

கதை கேட்ட பையன் ராஜமவுலி. கதை சொன்ன அப்பா விஜயேந்திர பிரசாத். அந்த இரவில் தான் பையனுக்காக புனைந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஃபேண்டஸி கதை அடுத்த நாற்பதாண்டுகளில் இந்திய சினிமாவையே கிடுகிடுக்க வைக்கப் போகிறது என்பது அந்த அப்பாவுக்கு தெரியாது. ஈகா என்று தெலுங்கிலும், நான் ஈ என்று தமிழிலும் வெளிவந்திருக்கும் சினிமாவின் ஒரிஜினல் கதை இதுதான். படத்தின் டைட்டிலே இந்த கதைதான்.

‘நான் ஈ’ படத்தின் கதையை விட, அதன் இயக்குனர் ராஜமவுலியின் கதை சுவாரஸ்யமானது. புதிய தலைமுறை பத்திரிகையில் தன்னம்பிக்கைக் கட்டுரையாக வெளியிட தகுதியானது. தெலுங்கின் தடாலடி இயக்குனரான ராகவேந்திரராவின் அசிஸ்டண்ட் இவர். ஹீரோயின்களை அஜால் குஜாலாக அறிமுகப்படுத்தும் ட்ரெண்டை தொடங்கியவர் ராகவேந்திரராவ். தெலுங்கின் அத்தனை முன்னணி நாயகர்களுக்கும் ஹிட் கொடுத்தவர். நம்மூர் எஸ்.பி.முத்துராமன் மாதிரி. கிட்டத்தட்ட நூற்றி சொச்சம் படங்கள் எடுத்து முடித்து ‘ரிட்டையர்’ ஆகும் ஸ்டேஜில் இருந்தவரிடம் வந்து சேர்ந்தார் ராஜமவுலி. தொண்ணூறுகளில் டிவி சீரியல்கள் பிரபலமாக, சில டிவி சீரியல்களை செய்துத்தருமாறு ராகவேந்திரராவிடம் நிறைய பேர் கேட்டுக் கொண்டார்கள். ராஜமவுலியை இயக்க வைத்து ராகவேந்திரராவ் எடுத்த சீரியல்கள் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது.

2000ங்களின் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த ஜூனியர் என்.டி.ஆரை ஹீரோவாக்கி, பிரம்மாண்டமான திரையுலகப் பிரவேசத்தை நிகழ்த்த, அவரது அப்பா ஹரிகிருஷ்ணா முயற்சித்துக் கொண்டிருந்தார். ஜூனியர் நடிக்க ‘ஸ்டூடண்ட் நெ.1’ திரைப்படத்தை ராகவேந்திரராவ் தயாரிக்க, சிஷ்யன் ராஜமவுலி களமிறங்கினார். படம் தாறுமாறு ஹிட். ஓவர் நைட்டில் ஆந்திராவின் மாஸ் ஸ்டார் ஆனார் ஜூனியர். துரதிருஷ்டவசமாக படத்தின் இயக்குனருக்கு எந்த நற்பேரும் இல்லை. படத்தை ராகவேந்திரராவ்தான் இயக்கினார், ராஜமவுலி ஒப்புக்குச் சப்பாணி என்று ஊடகங்கள் பேச, அதை சினிமாத்துறையினரும், மக்களும் நம்பினார்கள். அடுத்த படவாய்ப்பின்றி ராஜமவுலி திணறிக் கொண்டிருந்தார்.

ஸ்டூடண்ட் நெ.1-க்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ‘நாகா’ சோதனையைத் தந்தது. அரசியல் விமர்சனங்கள் கொண்ட இப்படம், வெளிவந்த வேகத்திலேயே பெட்டிக்குள் முடங்க மீண்டும் ஒரு பிளாக் பஸ்டருக்காக ராஜமவுலியை நாடிவந்தார். அந்தப் படம்தான் ‘சிம்மாத்ரி’. ராஜமவுலி இப்படத்தின் வரலாற்று வெற்றி மூலமாக தனக்கே தனக்காக உருவாக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்தார். இன்றுவரை அவரது சிம்மாசனத்துக்கு தெலுங்கில் போட்டியே இல்லை. இவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே பிளாக் பஸ்டர் ஹிட். கடந்த ஆண்டு நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்த ராஜண்ணா மட்டும் ஃப்ளாப். ஆனாலும் அதில் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே ராஜமவுலி இயக்கியிருந்தார். முழுப்படத்தையும் இயக்கியவர் அவரது அப்பா விஜயேந்திர பிரசாத். அப்படத்தில் பெரிதும் பேசப்பட்டவை ஆக்‌ஷன் காட்சிகள் மட்டும்தான்.

மகாதீரா இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியிருந்த நேரம். மாஸுக்காக பிறப்பெடுத்த ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், நிதின், ரவிதேஜா, ராம்சரண் தேஜா என்று ஓடுகிற குதிரைகளை மட்டுமே வைத்து விளையாடுகிறார். அதனால்தான் இவருக்கு தொடர்வெற்றி சாத்தியமாகிறது என்கிற விமர்சனத்தை சந்தித்தார் ராஜமவுலி. இப்படியொரு விமர்சனம் கிளம்பியதுமே தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள முடிவெடுத்தார். “ஹீரோக்களால்தான் தான் ஜெயிக்கிறோமோ?” என்கிற சந்தேகம் அவருக்கே இருந்திருக்கக் கூடும். வித்தியாசமான புது ஹீரோக்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் தன்னை எப்போதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்கும் ராம்கோபால் வர்மாவை சந்தித்தபோது, விளையாட்டாக ஒரு கதையை சொன்னார். ஹீரோவே இல்லாத ஹீரோயிஸக் கதை. சின்ன வயசில் அப்பா சொன்ன அதே ‘ஈ’ கதை. ‘ஈ’ தான் ஹீரோ என்று ஆரம்பித்து அவர் சொன்ன கதை வர்மாவை மிகவும் கவர்ந்தது. “இதுதான்யா நீ எடுக்க வேண்டிய படம். மத்ததையெல்லாம் மூட்டை கட்டிட்டு இதை ஆரம்பி” என்றார். வர்மா தன்னை கிண்டல் செய்கிறாரோ என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார் மவுலி. ஆனால் தொடர்ச்சியாக ‘ஈ என்னாச்சி?’ என்று அவர் வற்புறுத்திக் கொண்டிருக்க, சீரியஸாகவே இந்தக் கதையின் மீது வர்மாவுக்கு நம்பிக்கையிருக்கிறது என்பதை உணர்ந்தார். இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. பெரிய ஹீரோ இல்லாமல் ஒரு வெள்ளோட்டம் பார்க்க நினைத்தார்.

தெலுங்கில் காமெடியனாக (நம்மூர் விவேக், சந்தானம் ரேஞ்சில்) கலக்கிக் கொண்டிருந்த சுனிலை ஹீரோவாக்கி ஒரு மாஸ்ஹிட் கொடுக்க முடியுமா என்று ‘மரியாதை ராமண்ணா’வைத் தொடங்கினார். படம் வெளியாகி முப்பது கோடி வசூலித்ததுடன் இந்தி, கன்னடா, பெங்காலி மொழிகளிலும் ரீமேக் ஆனது. மாஸ் ஹீரோ இல்லாமலேயே நாம மாஸ்தான் என்பதை புரிந்துகொண்டவர் தன்னுடைய கனவுப்படைப்பை தூசிதட்டி செதுக்க ஆரம்பித்தார்.

படத்தின் தொடக்கத்திலிருந்தே ராம்கோபால் வர்மா கிட்டத்தட்ட அசிஸ்டெண்ட் டைரக்டர் மாதிரி, ராஜமவுலியோடு இணைந்து ஈகாவுக்காக யோசிக்கத் தொடங்கினார். “படத்துலே ஈ தான் ஹீரோ. ரொம்ப வீக்கான ஹீரோ என்பதால், வில்லன் செம வெயிட்டா இருக்கணும். சுதீப் கிட்டே பேசு” என்றார். “ஈ-க்கு நீங்க வில்லனா நடிக்கணும்” என்று ஒரு சூப்பர் ஸ்டாரிடம் கேட்க செம தில் வேண்டும். ராஜமவுலிக்கு அந்த தில் இருந்தது. இந்தக் கதையை முதலில் கேட்கும் யாருக்குமே பைத்தியக்காரத்தனமாகதான் தெரியும். சுதீப்புக்கு அப்படிதான் தெரிந்தது. ஆனால் திரும்பத் திரும்ப வற்புறுத்த, ஒருக்கட்டத்தில் ராம்கோபால் வர்மாவே தலையிட்டு சிபாரிசு செய்ய சுதீப் களமிறங்கினார். சுதீப்பின் சுபாவமே இதுதான். எதையும் சுலபமாக ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் ஒப்புக் கொண்டபின் அதற்காக உயிரையும் கொடுப்பார்.

படம் வளர, வளர ராஜமவுலிக்கு டென்ஷன் இருந்ததோ என்னவோ, ராம்கோபால் வர்மாவுக்கு பயங்கர டென்ஷன். அழகான பெண்ணை பெற்றெடுத்து, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் அம்மா மாதிரியான மனநிலை. இந்தப் படம் குறித்து தொடர்ச்சியாக நல்லவிதமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். தெலுங்கில் நூறு கோடி சம்பாதிக்கக் கூடிய திறன், ஈகாவுக்கு உண்டு என்று தெகிரியமாக அடித்துப் பேசினார்.

raja+prasad-1.jpg

இரண்டு வருட தவத்துக்குப் பிறகு ‘ஈகா’ திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட். இவ்வருட கிறிஸ்துமஸுக்கு 3-டியில் இந்தியில் திரைக்கு கொண்டுவரப் போகிறார்கள். எல்லாத் தரப்பும் தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாட, “நான்தான் அப்பவே சொன்னேனே?” என்று ராம்கோபால் வர்மா காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். “எல்லோருக்கும் நன்றி. எனக்கு உடனடி தேவை ஓய்வு. அடுத்த படத்தில் சந்திப்போம்” என்றுகூறி, தன் கழுத்துக்கு விழும் புகழ்மாலைகளை புறந்தள்ளிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இப்படம் குறித்து போதுமான அளவுக்கு வெளிவருவதற்கு முன்பே பேசியாயிற்று. இனியும் பேச ஒன்றுமில்லை. மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது கருத்து. தன் அப்பாவுக்கு ஒரு மகன் அளிக்கக்கூடிய தலைசிறந்த பரிசை அளித்துவிட்ட மனநிறைவு இப்போது ராஜமவுலிக்கு ஏற்பட்டிருக்கிறது.

இப்போது படத்தின் மாபெரும் வெற்றியைப் பற்றி ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டால், உலகெங்கும் கூட ஹிட் அடிக்கும் என்கிறார்கள். இதன் வெற்றிக்கான காரணம் எதுவென்று ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றும் ஒவ்வொரு காரணத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தோன்றுவது ஒரே ஒரு காரணம்தான். இப்படம் குழந்தைகளுக்குப் பிடித்திருக்கிறது. விஜயேந்திர பிரசாத் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னபோது, குழந்தையாக இருந்த ராஜமவுலியை இக்கதை எப்படி கவர்ந்ததோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக சினிமாவாக பார்க்கும்போது இப்போதைய குழந்தைகளை நிரம்பவும் கவர்கிறது. பெரியவர்களுக்கும் பிடித்திருக்கிறது. ஏனெனில் பெரியவர்களும் சில பல ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளாக இருந்தவர்கள்தானே?

http://www.luckylookonline.com/2012/07/blog-post_09.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்க்க வசதிப்பட்டது. படமெடுத்த விதம் மிக அருமை. குறிப்பாக 'வரைகலை'யென்றே தெரியாதவகையில் படத்தில் புகுந்து விளையாடுவது. காட்சிகளின் கோர்வையும் விறுவிறுப்பாக உள்ளது. நானி-பிந்து இளமைக் குறும்புகள் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. விரசமில்லாமல் அனைவரையும் கவரும் வண்ணம் படமெடுத்திருப்பது படத்தின் பல சிறப்பம்சங்களில் ஒன்று.

மனதில் பதிந்த சில பாடல் வரிகள்:

'நுண்சிலை செய்யும் பொன்சிலையே

பென்சிலை சீவும் பெண்சிலையே'

'ஏ.. கஞ்ச வஞ்சியே,

உன் நெஞ்சில் ஏன் தடை?

இப்போலி வேலியை

இன்றாவது உடை!

என் இதயக் கூட்டிலே,

உன் இதயம் கோர்க்க வா!

ஈருயிரை சேர்க்க வா!!

மறுபடியும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டும் படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.