Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயே பேசாத பாப்பா... தங்கச்சி பாப்பா கேட்டானாம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

teenage-abortion.jpg

வேலைக் களைப்பில் அவன்

தேவைக் களைப்பில் அவள்...

நாலு சுவருக்குள்

நடத்தும்

நள்ளிரவுக் கூத்துக்கு

சாட்சி யாரு...

வாயே பேசாத பாப்பா

தங்கச்சி பாப்பா கேட்டானாம்...!

அருமையான பூமிப் பந்தில்

அனுதினம் நிகழும்

கருக்கலைப்புக்கும்

அவனே

சாட்சி...!

கன்னத்தில்

ஒரு முத்தம் தந்து

அம்மா சொல்லுறா...

"அப்பாக்கு

இந்த தங்கச்சி பாப்பா வேணாமாம்

பிள்ளைக்கு

அடுத்த முறை

பெத்துத் தாறன்..!"

கருவறை எல்லாம்

கழிவறையாக..

இரத்தக் கட்டிகளாய்

பிறக்குது

உயிரற்ற கலக்கூட்டம்..!

உனக்கும் ஆபத்து

உயிர்க்கும் ஆபத்து

இருந்தும் தொடருது

உறைகளற்ற

உறவுகள்..!!!

தொடர்ந்தும்..

வேலைக் களைப்பில் அவன்

தேவைக் களைப்பில் அவள்..!

Edited by nedukkalapoovan

வேலைக் களைப்பில் அவன்

தேவைக் களைப்பில் அவள்...

[size=5]நல்ல கவிதை , [/size]

[size=5]கவிதை மூலமான தகவலுக்கும் நன்றி .[/size]

[size=5]ஆனால் கொஞ்சம் பெண்களை சாடாமல் இருந்திருக்கலாம் .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பு என்பது உலகெங்கும் சட்டவிரோதமானது

என சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா இப்படி கவிதை எழுதுவார் என்று எதிர் பார்க்க இல்லை..என்ன வளமையாக நடப்பது தான் பெண்களை சாடுவதோடு தான் நிற்கிறார்.இதை ஒரு கருத்தாடலாக கூட எடுத்து கொள்ளலாம்..அப்படி வரும் போது நிறைய,நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்..ஒரு பிறப்புக்கு உருவாதற்கு தனித்து பெண் மட்டும் காரணமாகி விட முடியாது.ஆண்,பெண் இருபாலருக்கு சம பங்கு உண்டு என்றே சொல்லலாம்.நெடுக் வந்தார் எழுதினார் போய்ட்டார். யாயினிக்கு என்னாச்சு என்று நினைக்காதீங்கள்..எனக்கும் மனத்தில் எழும் விடையங்களை சொல்லவேணும் போல் இருந்தால் இங்க தானே சொல்ல முடியும்..பெற்றோர் தங்களின் ஆர்வபசிக்கு தெரிந்தோ தெரியாமலோ தேவை இல்லாத ஒன்றை செய்ய முற்படும் பொது அது சிலவேளைகளில் முழுவதுமாக வெற்றி அளிப்பதில்லை...இப்படியான செயல்களில் நூறில் ஒன்றாகவோ இல்லை ஆயிரத்தில் ஒன்றாகவோ பிறக்கும் பிள்ளைகள் உடல் ரீதியிலான சுமக்க முடியாத பாதிப்புக்களோடும் பிறக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அப்படி ஒரு பாதிப்போடு பிறக்கும் பிள்ளையின் நிலையை யோசிச்சு பாருங்கள்..எனக்கு இரண்டு விடையங்கள் அறவே பிடிக்காதவை ஒன்று கரு கலைப்பு.இரண்டாவது First-cousin marriage என்று சொல்லப்படுகின்ற மச்சான்,மச்சாள் உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்வது..ஆனால் எல்லாரது உறவு முறைத் திருமணத்திற்குள்ளும் இப்படி நடப்பது என்று இல்லை..ஏன் மருத்துவ ரீதியாகவே சில பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..உமது பின்னணி இப்படி இருந்து வந்தது ஆகவே நீர் இதிலிருந்து விடுபடுவது கஸ்ரம்.பெற்றோருக்கு ஒன்றும் இல்லை.அவர்கள் அரைகுறையாக பெற்று விட்டுட்டு தங்கட காலம் வர நடையைக் கட்டிருவீனம்... வளர்ந்து கொண்டு வரும் பிள்ளைகள் என்றால் மற்ற எல்லாரையும் போல் அவர்களுக்குள்ளும் ஆயிரம் கனவுகள் இருக்கும்..அதில் ஒரு கனவு கலைந்துட்டாலும்..வாழ்வு குலைந்து விடும்..கவிதைப் பகுதியில் இப்படி ஒரு நீண்ட விமர்சனம் வைப்பது கொஞ்சம் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.. இப்படி கவிதை வந்த காரணத்தினால் என் கருத்தை கூறினேன்.

வேலைக் களைப்பில் அவன்

தேவைக் களைப்பில் அவள்..!

இப்படி வரணும்

[size=5]வேலைக் களைப்பில் அவள்[/size]

[size=5]தேவைக் களைப்பில் அவன்..![/size]

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு மருத்துவர்.

அது, சம்பந்தமான... விடயங்களை, வெளியில் கொண்டு வருவது....

மருத்துவததையே... பலருக்கு, வெறுக்க வைக்கும்.

நெடுக்ஸ் ஒரு மருத்துவர்.

அது, சம்பந்தமான... விடயங்களை, வெளியில் கொண்டு வருவது....

மருத்துவததையே... பலருக்கு, வெறுக்க வைக்கும்.

[size=5]மருத்துவராக ஆசைப்பட்டது உண்மைதான் ஆனால் அவ்வளவுக்கு சிமாட்டாக இருக்கலை, இருக்கலை, இருக்கலை!!!!!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மருத்துவராக ஆசைப்பட்டது உண்மைதான் ஆனால் அவ்வளவுக்கு சிமாட்டாக இருக்கலை, இருக்கலை, இருக்கலை!!!!!![/size]

என்னவோ... தெரியாது,

நெடுக்ஸ்சின், சாத்திரம்...

உங்கள், கையில் எப்படி வந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் அண்ணா இப்படி கவிதை எழுதுவார் என்று எதிர் பார்க்க இல்லை..என்ன வளமையாக நடப்பது தான் பெண்களை சாடுவதோடு தான் நிற்கிறார்.இதை ஒரு கருத்தாடலாக கூட எடுத்து கொள்ளலாம்..அப்படி வரும் போது நிறைய,நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு இலகுவாக இருக்கும்..ஒரு பிறப்புக்கு உருவாதற்கு தனித்து பெண் மட்டும் காரணமாகி விட முடியாது.ஆண்,பெண் இருபாலருக்கு சம பங்கு உண்டு என்றே சொல்லலாம்.நெடுக் வந்தார் எழுதினார் போய்ட்டார். யாயினிக்கு என்னாச்சு என்று நினைக்காதீங்கள்..எனக்கும் மனத்தில் எழும் விடையங்களை சொல்லவேணும் போல் இருந்தால் இங்க தானே சொல்ல முடியும்..பெற்றோர் தங்களின் ஆர்வபசிக்கு தெரிந்தோ தெரியாமலோ தேவை இல்லாத ஒன்றை செய்ய முற்படும் பொது அது சிலவேளைகளில் முழுவதுமாக வெற்றி அளிப்பதில்லை...இப்படியான செயல்களில் நூறில் ஒன்றாகவோ இல்லை ஆயிரத்தில் ஒன்றாகவோ பிறக்கும் பிள்ளைகள் உடல் ரீதியிலான சுமக்க முடியாத பாதிப்புக்களோடும் பிறக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அப்படி ஒரு பாதிப்போடு பிறக்கும் பிள்ளையின் நிலையை யோசிச்சு பாருங்கள்..எனக்கு இரண்டு விடையங்கள் அறவே பிடிக்காதவை ஒன்று கரு கலைப்பு.இரண்டாவது First-cousin marriage என்று சொல்லப்படுகின்ற மச்சான்,மச்சாள் உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்வது..ஆனால் எல்லாரது உறவு முறைத் திருமணத்திற்குள்ளும் இப்படி நடப்பது என்று இல்லை..ஏன் மருத்துவ ரீதியாகவே சில பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..உமது பின்னணி இப்படி இருந்து வந்தது ஆகவே நீர் இதிலிருந்து விடுபடுவது கஸ்ரம்.பெற்றோருக்கு ஒன்றும் இல்லை.அவர்கள் அரைகுறையாக பெற்று விட்டுட்டு தங்கட காலம் வர நடையைக் கட்டிருவீனம்... வளர்ந்து கொண்டு வரும் பிள்ளைகள் என்றால் மற்ற எல்லாரையும் போல் அவர்களுக்குள்ளும் ஆயிரம் கனவுகள் இருக்கும்..அதில் ஒரு கனவு கலைந்துட்டாலும்..வாழ்வு குலைந்து விடும்..கவிதைப் பகுதியில் இப்படி ஒரு நீண்ட விமர்சனம் வைப்பது கொஞ்சம் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.. இப்படி கவிதை வந்த காரணத்தினால் என் கருத்தை கூறினேன்.

அண்மையில் ஒரு தம்பதி கைக்குழந்தையோடு.. வைத்தியசாலைக்கு வந்தார்கள். குறுகிய காலத்திலேயே அடுத்த குழந்தை.. வேண்டாத கர்ப்பம்.. உருவாகி விட்டதாக சொன்னார்கள். அப்புறம் என்ன.. கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது..!!!

வேண்டாத கர்ப்பம்.. யாரின் தவறு... கருவின் தவறா.. திட்டமிடாமல் நடந்து கொண்டவர்களின் தப்பா...????! எனக்கு ஒரு பயங்கர சந்தேகம் முளைத்தது..!!

நான் இங்கே ஆண் - பெண் இருவரின் பங்களிப்பையும் நிகழ்வுக்கு ஏற்ப சொல்லி இருக்கிறேன்...!

வேண்டாத கர்ப்பம்.. குடும்பக் கட்டுப்பாடு.. பாதுகாப்பான உடலுறவு.. இவை குறித்து எம்மவர்கள் பேசுவது குறைவு. ஏதோ ரகசியம் என்று நினைக்கிறாங்க. ஆனால்.. செய்யுறாங்க.. தவறுகள் நிகழ்கின்றன... கருக்கலைப்புக்கள் நடக்கின்றன. இவை இயன்றவரை தடுக்கப்படுதல் அவசியம்...!

அதற்கு planned baby.. family planning.. contraception இவை 3 பற்றிய அறிதலும் வயது வந்த ஆண் - பெண் இருபாலாருக்கும் அவசியம்..!

இங்குள்ள பள்ளிகளில் இவற்றை சொல்லிக் கொடுத்தாலும்.. teenage கர்ப்பம் என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல்.. வளர்ந்தவர்களிடமும்... unplanned baby உருவாகிக்கிட்டே வருது. அது குடும்ப உறவுகளை பாதிக்கச் செய்யுற விடயமாகக் கூட அமையுது. ஏன் விவாகரத்து வரை போவதும் உண்டு..! :icon_idea:

இது சமூகப் பிரச்சனை. எனது பிரச்சனை அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ... தெரியாது,

நெடுக்ஸ்சின், சாத்திரம்...

உங்கள், கையில் எப்படி வந்தது?

அவங்களால கற்பனையில்... சாத்திரம் மட்டும் தான் சொல்ல முடியும். உண்மையை அல்ல...! :lol::D:icon_idea:

நாங்க.. இதைப் பற்றி எல்லாம் அலட்டிக்கிறதே இல்ல.

ஆனால்.. நீங்கள் குறிப்பிட்டது போல நான் பொது மருத்துவர் கிடையாது. முன்னரும் இது தொடர்பாக எழுதி இருக்கிறேன். நான் பொது மருத்துவராக விரும்பவும் இல்லை..! ஆனால் என்னுடைய professionalism மருத்துவமும் சார்ந்துள்ளது. :icon_idea:

உனக்கும் ஆபத்து

உயிர்க்கும் ஆபத்து

இருந்தும் தொடருது

உறைகளற்ற

உறவுகள்..!!!

[size=4]ஒரு குட்மாற்ரர் சொல்லியிருங்கீங்க அண்ணன் எல்லா பசங்களும் காண்டம் போடணுன்னு :) . பட் ஆருங்க கேக்கிறாங்க ? கருக்கலைப்பு ஒரு கொடுமைங்க :( . எங்க ஊரில கள்ளி பாலை விடுவாங்க நெல்லு போடுவாங்க . ஆனா இதுக்கு பெண்ணுங்க மட்டும் காரணமிலீங்க . உங்கள போல ஆம்பிளைய்ங்க செமன் பட்டுத்தானே பேபி வருது . இல்லாம வானத்தால குதிக்கிதா :o ? ஃபைனலா எங்கமேல குத்தம் சொல்றதே உங்க மாதிரி ஆம்பிளைய்ங்களுக்கு பொழப்பா போச்சுதுங்க ^_^ . ஆனா இந்த மாற்றருக்கு உங்க வரிய லைக் பண்றேங்க :) . பெண்ணுங்கள கலாய்காம கொண்ரினியு பண்ணுங்க அண்ணன் :icon_idea: .[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொப்னா.. நாங்க பொண்ணுங்கள மட்டும் கலாய்க்கல்ல. ஆணுங்க மேலயும் தப்புன்னு சொல்லுறமில்ல..! நன்றி சொப்னா.. உங்க கருத்துக்கு..! :):icon_idea:

[size=5]மருத்துவராய் வரமுடியவில்லை .......... Science ல் PhD செய்தால் Dr பட்டம் கிடைக்குமல்லா ஆசைக்குப் பெயருக்கு முன் எழுத[/size]. [size=5]இதுக்கே இவ்வளவு கஸ்டம் அதுக்கை வேறை வைத்தியர்! சனத்தைக் கொல்லவா??? மெய்யே டமிழ்[/size]

[size=5]இதுகளுக்கெல்லாம் ஏன் சாதகம்????[/size]

[size=5]உப்பிடிக் கேசுகளை கண்ட ஆட்கள் தான் நாங்கள் ![/size]

:lol: :lol: :lol:

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க சிலருக்கு நம்மள நோண்டிறதே வேலையாப் போச்சுது. வேணுன்னா... நேரடியா கேட்கிறது.. உங்களைப் பிடிச்சிருக்கு... சாதகத்தை தாங்கன்னு...! அதைவிட்டிட்டு... சும்மா சும்மா கற்பனை பண்ணிக்கிட்டு உங்க மனச நீங்களே கஸ்டப்படுத்திக்கிட்டு.. இருக்கக் கூடாது...! :lol::D

(சும்மா பகிடிக்கு எழுதி இருக்கிறன். அப்புறம் இதையே சாட்டா வைச்சு சாதகத்தை தா என்று யாரும் கேட்டக் கூடாது. சொல்லிட்டன்.)

இந்தத் தலைப்பிற்கும்.. நமக்கும்.. படிப்புக்கும்.. சாதகத்திற்கும் (தமிழ்சிறி எழுதினது.. சாத்திரம் என்று. அதை ஒரு ஆள் எழுதுது சாதகமுன்னு...அப்ப அந்த ஆள் என்ன நினைக்குது.... :D:lol: ) என்ன சம்பந்தம்..????????! கடவுளே..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் அண்ணா இந்த கவிதை கூறும் விடயம் நல்லது. அதாவது தேவையில்லாமல் கர்ப்பத்தை உருவாக்க கூடாது. உருவாக்கினால் கருக்கலைக்க கூடாது. கருக்கலைப்பினால் அந்த பெண்ணுக்கும் ஆபத்து. உருவாகிய கருவுக்கும் ஆபத்து.

ஆனால் ஏதோ வேலைக்களைப்பில் ஆண்கள் வந்தாலும் பெண்கள் தான் கட்டாயப்படுத்தி அவர்களுடன் உடலுறவு கொள்வது போல் அல்லவா இருக்கிறது? ஆனால் யதார்த்தம் என்ன? வேலை முடிந்து வந்தாலும் பொதுவில் ஆண்களுக்கு தான் உடலுறவு தேவைப்படுகிறது.

அதே போல் கரு உருவாகாத வகையில் பாதுகாப்பாக உடலுறவு கொண்டிருக்க வேண்டும்... அப்படி எதுவும் செய்யாமல் கரு உருவாகிய பின் அதனை அழிக்க சொல்வது அதிகம் ஆண்கள் தானே? இந்த கவிதையிலும் அதை தானே சொல்லியிருக்கிறீர்கள்?

பின்னர் எதற்கு உனக்கும் ஆபத்து என்று கூறினீர்கள்? "உனக்கும் ஆபத்து" என்று தெரிந்தும் நீ செய்கிறாய் என்று பெண்ணை வசைபாடுவது போல் அல்லவா அர்த்தப்படும். இங்கும் பெண்களுக்கு குறை சொல்வது போல் எழுதியுள்ளீர்கள். அது "அவளுக்கும் ஆபத்து" என்று வர வேண்டும். அப்பொழுது தான் அது ஆண்களுக்கு அல்லது பொதுவாக சொல்வது போல் அமையும்.

அத்துடன் வாய்பேசாத பிள்ளையுடன் கதைப்பது தாய் மட்டுமல்ல தந்தையும் தான். பிறகு ஏன் பெண்ணை குற்றவாளிபோல் நிறுத்துகிறீர்கள்?

நெடுக்ஸ் அண்ணா உங்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் உள்ளது. நல்ல நல்ல கவிதைகளை எழுதியுள்ளீர்கள். ஆனால் உங்கள் கவிதைகளை பெண்களை வசைபாடும்படி எழுதாமல் பொதுவாக எழுதலாமே..... இதிலும் சிலவற்றை தவிர்த்திருந்தால் இது ஒரு நல்ல கவிதை.

ஆனாலும் நல்ல அர்த்தத்தை கூறியதற்கு நன்றி. :)

Edited by துளசி

ஊசி இடம் கொடாது நூலு நுழையாதுன்னு.. பெரியவா சொல்லுவா. :lol:

நன்றி உங்க கருத்துக்கு துளசி..! :)

ஊசி இடம் கொடாது நூலு நுழையாதுன்னு.. பெரியவா சொல்லுவா. :lol:

அதை தான் நான் சொல்கிறேன். இருவரிலும் பிழை எனும்போது எதற்கு பெண்களை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள்? பொதுவாக எழுத வேண்டிய கவிதை இது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட இதை பொதுவா எழுத முடியல்ல. சமூக.. யதார்த்தத்தையும் பிரதிபலிக்க வேண்டிய தேவை உண்டு. :):icon_idea:

[size=5]"விழுந்தவன் மீசையில மண்படேலை" என்றது தான் வந்து தொலையுது[/size]! :icon_idea::lol::icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே கற்பனை பண்ணிக்கிட்டு.. தங்களுக்க தாங்களே சிரிச்சிக்கிட்டு.. திருப்திப்பட்டுக்கிட்டு.. வாழ வேண்டியான். :D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

condom -14%

female contraceptive device - 4%

குழந்தை பிறக்கும் வாய்ப்புக்கள் உள்ளன..

நெடுக்ஸ் அண்ணா அதிகம் பேசாப்பொருளாய் இருக்கிற ஒரு விடையத்தை கவிதையாய் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.. :)

"வேலைக் களைப்பில் அவன்

தேவைக் களைப்பில் அவள்..![size=4] "[/size]

அதே வேளை இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல ஊசி இடம் கொடுத்து மட்டும் பல வேளைகளில் நூல் நுழைவதில்லை,

கட்டினவள் கட்டிலுக்கு வரவேணும் என்று மிருக்த்தனமாய் நடக்கும் ஆண்களும் உண்டு,

அதே போல் ஒரு பெண்ணின் இயலாமையைப்படுத்தி வண்புணர்ந்த மிருகங்களால் உருவான கருவைச்சுமந்த பெண்களும்,

ஒரு பெண்ணின் மென்மையைப்பயன்படுத்தி மயக்கும் வார்த்தைகளைப்பேசி தம் வலையில் சிக்க வைத்து நாசம் செய்யும் ஆண்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும். இங்கெல்லாம் ஊசி இடம் கொடுத்து நூல் நுழையவில்லை என்பதையும் கருத்தில் எடுங்கள். :icon_idea:

ஆண்களுக்கு வேலைக் களைப்பை போக்க பெண்ணும்... பெண்ணின் தேவைக் களைப்பை போக்க ஆணும் பயன்படுத்தப்படுவது இயல்பு தானே. இல்லையா..?????! :icon_idea:

ஆண்கள் கட்டாயப்படுத்தி பெண்களோடு வன்புணரும் அதேவேளை.. பெண்களும்.. சும்மா சிவனேன்னு.. இருக்கிற.. ஆண்களை புணர்வுக்கு அழைக்கிறாங்க தானே.. அப்படி நிகழ்வதில்லையா..????! நிகழ்கின்றன தானே. எத்தனை சினிமால காட்டுறாங்க..!

வன்புணர்வு சட்டப்படி குற்றம். அது ஆண் செய்யலாம். பெண் செய்யலாம்..!

இதைத்தவிர பிற கருத்துக்களில் உங்களோட உடன்படுவதில் ஆட்சேபனைகள் ஏதுமில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.