Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லெண்ணை உடலுக்கு நல்லதா?

Featured Replies

நான் இப்பவெல்லாம் தேங்காய் எண்ணெய் நல்லதா இல்லை கூடாதா என்ற ஆட்டத்துக்கே போவதில்லை. எதைப் பொரிப்பது என்றாலும் நல்லெண்ணையையே பாவிக்கின்றேன். நல்லெண்ணை (Sesame oil) என்பது processed எண்ணெய் இல்லை என்பதால் அதன் மேல் நம்பிக்கை அதிகம்.

ஆனாலும் என் ஜமெய்க்கா நண்பனுடன் (ஒலிம்பிக்கில் ஜமெய்க்கர்கள் தான் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வருவார்கள் என்று பலர் சொல்லினம். ஓட்டப் போட்டி என்று நான் சொல்வது ஒலிம்பிக்ஸ் மரதன் ஓட்டத்தை) கதைக்கும் போது அவன் சொன்னது, தேங்காயில் இருந்து அப்படியே எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் (extra virgin) நல்லெண்ணையை விட நல்லதாம் அதனால் தான் தமக்கு இருதய நோய் இல்லையாம்.

என் மண்டைக்குள் சில கேள்விகள் ஒரே குடைச்சல் தருகின்றன

1. நல்லெண்ணைய் நல்லதா இல்லையா

2. Extra virgin இற்கும் சாதாரண எண்ணெய்க்கும் என்ன வித்தியாசம் (என் காவாலி நண்பன் சொன்ன வேறுபாட்டை இங்கு எழுத முடியாது)

உங்கள் பதில்களுக்காக காத்திருக்கின்றேன்.............

[size=4]எந்தவித இராசாயன பதங்களும் சேர்க்காமல் உருவாக்கப்படுவது - 'எக்ஸ்ரா வெர்ஜின்' தேங்காய் எண்ணெய்.[/size]

[size=5]Virgin coconut oil is normally referred to coconut oil that is prepared using mechanical means without the addition of any chemicals. [/size]

http://www.organicfacts.net/organic-oils/organic-coconut-oil/what-is-extra-virgin-coconut-oil.html

http://www.tropicaltraditions.com/what_is_virgin_coconut_oil.htm

[size=4]அண்மையில் கனடாவில் அப்பம் ஒரு நிகழ்வில் சாப்பிட்டேன். அவர்கள் எந்த எண்ணெயையும் போடாமல் தயாரித்தார்கள்.அப்பொழுது கூறினார்கள் தமிழர்களின் பூர்வீக உணவில் ஒன்று தோசை மற்றையது அப்பம். இரண்டையும் எந்த எண்ணையும் இல்லாமல் சமைத்து உண்ணலாம் என்று. [/size]

2. Extra virgin இற்கும் சாதாரண எண்ணெய்க்கும் என்ன வித்தியாசம்

virgin எண்ணெய் எனும் பொது இரசாயன் பதார்த்தங்கள் எதுகும் பயன் படுத்தாது , எண்ணெய் தரும் விதையை குளிர் நிலையில் அழுத்தி பெறப்படுவது. உதாரணமாக செக்கில் எண்ணெய் எடுப்பதை கூறலாம்.

பெரும் தொழில் முறை எண்ணெய் பிரித்தெடுப்பில் கூட மின்சார இயந்திரங்களை பாவித்து அழுத்தி எண்ணெய் எடுக்கலாம். ஆனால் எண்ணெய் பிரித்தேடுப்பை அதிகரிக்க (hexane) போன்ற சேதன கரைப்பான்கள் பயன்படுத்துவார்கள். அத்துடன் எண்ணெய் எடுக்க முதல் விதைகளை வெப்பப்படுத்தி மேலதிக நீரை ஆவியக்குவர்கள்.

கனடாவில் அதிகம் பாவிக்கும் கனோலா எண்ணெய் பிரித்தெடுப்பு, விரும்பினால் பார்க்க : http://www.canolacou....org/meal3.aspx

தேங்காய் எண்ணெய் பலவருடங்களாக பிரசாரப்படுத்தியது போல் அவ்வளவு கெட்டதல்ல என சில ஆய்வுகள் சொல்கிறன.

கேட்டது என பிரச்சாரப்படுத்த முக்கிய கரணம்: அதிக அளவில் நிரம்பிய கொழுப்பமிலங்களை கொண்டது , எனவே நிரம்பிய கொழுப்பான மிருக கொழுப்பை போல இதய வருத்தம், கொலஸ்திரோல் போன்றவற்றுக்கு காரணம் ஆகலாம் என்பதே முக்கிய கரணம்.

ஆனால்

தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட ஆய்வுகள் ஐதரசன் ஏற்றம் செய்யப்பட்ட (மாஜரீன்) இலேயே பெரிய அளவில் செய்யபட்டுள்ளன. ஐதரசன் ஏற்றும் பொது trans-fatty acid உருவாகும் . எனவே ஆய்வில் கிடைத்த பாதகமான விளைவுகளுக்கு அது கூட காரணமாக இருக்கலாம்.

முக்கியமாக தேங்காய் எண்ணெயில் இருப்பது குறுகிய நீளம் உடைய கொழுப்பமிலங்கள் ( short chain fatty acids) . இவை உடலில் இலகுவாக சமிபாடடைந்து, உடலால் சக்தி தேவைக்காக இலகுவில் பாவிக்கப்பட கூடியவை. இதனால் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட சந்தர்ப்பம் குறைவு என சொல்லப்படுகிறது. அத்துடன் இலங்கை, பொலினேசிய நாடுகள், மற்றும் தேங்காய் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இப்போது போல் இல்லது, மக்கள் நவீன , processed உணவுகளை அதிமாக பாவிக்காது, தேங்காய் சார்ந்த உணவுகளை உண்ட பொது இதய நோய்கள் மிகவும் குறைவு என்றும் சொல்லபடுகிறது. மக்கள் தேங்காய் ஐ விட்டு, processed உணவுகளை அதிகம் உண்ண தொடங்க இதய நோய்களும் அதிகரித்தாக சொல்லபடுகிறது.

இதைப்பற்றி இந்த தலைப்பில் : http://www.yarl.com/...howtopic=104691

அதிகம் இருக்கிறது. மேலே சொன்னது அதன் சுருக்கம் மட்டுமே: பொறுமையாக அந்த திரியில் தேங்காய் பற்றி அறிய முடியும். சில விஞ்ஞான ஆய்வு கட்டுரைகள். சில அவற்றை அடியொற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகள்.

நல்லெண்ணெயை பற்றி சொன்னால் : அது அதிக அளவில் நிரம்பாத கொழுப்பமிலங்களை கொண்டிருக்கிறது. முக்கியமாக தனி நிரம்பலடையாத கொழுப்பமிலங்களும் , பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்களும் (mono and poly unsaturated fatty acids) சம அளவில் இருக்கிறது. நிரம்பாத கொழுப்பமிலங்கள் உடலுக்கு தேவை. அவை உடலில் கேட்ட கொலஸ்திரோல் அளவை குறைக்க உதவும்.

22211801.jpg

http://en.wikipedia....wiki/Sesame_oil

நல்லெண்ணெயில் மனித உடலால் தயாரிக்க முடியாத lenoleic or LA (18:2) அமிலம் மிக அதிக அளவில் இருக்கிறது. ஆனால் மனித உடலால் தயாரிக்க முடியாத இரண்டாவது கொழுப்பமிலமான Linolenic அமிலம் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது.

ஆனால் மனித உடலுக்கு lenoleic or LA (18:2) அமிலம், (நல்லெண்ணெயில் அதிகம் இருப்பது) சராசரியாக 17 கிராமும்

Linolenic அமிலம்: 1.6 கிராமும் தேவை. (http://en.wikipedia....eference_Intake) நல்லெண்ணெயில் இந்த கொழுப்பமிலம் குறைவாக இருந்தாலும் ஏனைய உணவுகளில் இருந்தும் சிறிதளவு கிடைக்கலாம், எனவே உடலுக்கு தேவையான Linolenic அமிலம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது.

மிக முக்கியமான இன்னொரு விடயம் நல்லெண்ணெயில் இயற்கையிலேயே விற்றமின் ஈ (Vitamin E) இருக்கிறது, இது ஒரு antioxidant , உடலுக்கு அத்தியவசியமனதுடன் இரத்தத்தில் கொலஸ்திரோலை குறைப்பதில் பங்கெடுக்க கூடியது.

எனவே நல்லெண்ணெய் பாவிப்பது பலன் தரும். அத்துடன் நல்லெண்ணெய் அதிக இராசயன்கள் பாவிக்காது எள்ளில் இருந்து பிரித்தேடுக்கப்பட்டால் வேறும் பல உடலுக்கு நன்மைதரும் antioxidant களை கொண்டிருக்கலாம்.

சாதாரண நிறமுடைய நல்லெண்ணெய் (மஞ்சள் ) வெப்பத்தை தங்கும் வல்லமை உடையதால் , (புகை ஏற்படுத்த அதிக வெப்ப நிலை வேண்டும் high smoke point ) பொரிக்கவும் பாவிக்க முடியும்.

http://en.wikipedia....iki/Cooking_oil

மிகுதி பின்னர்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மிக ஆர்வமாக இதை வாசிக்கிறேன்!

எனக்கும் மனுசி நல்லெண்ணெய் தான் வேணுமெண்டு. தலைகீழாய் நிக்குது!

அதுவும் 'மகாலிங்கம்' மார்க் தான் வேணுமாம்!

மகாலிங்கமும், போத்திலால. சின்னனாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்!

விலை மட்டும் அப்படியே இருக்கிறது!

இந்தப் பதிவையாவது, காட்டிப் பாப்பம் என்று யோசிக்கிறேன்!

தேவையானதொரு பதிவு. ஊரில் தேங்காய்த் துருவலை வறுத்து தேங்காய் எண்ணெய் எடுப்போம். வேறு எந்தவிதமான பொருட்களும் சேர்ப்பதில்லை.

நானும் இந்த தேங்காய் நல்லதா கேட்டதா என்ற ஆராய்ச்சி தொடங்கிய பின், தேங்காய் தொடர்பான உணவுகளை உற்கொள்வதைக் கூடியளவு தவிர்த்து வருகிறேன். தெரிந்தவர்கள் நல்லெண்ணெய் நல்லது என்று சொல்லி பொரித்துச் சாப்பிடுகிறார்கள். நான் வீட்டில் எண்ணெய் பாவிப்பதை அதிகம் தவிர்ப்பேன். இருந்து போட்டுதான் பொரிப்பது.

'ஒலிவ்' எண்ணையில் மீன் பொரிக்க நன்றாக இருக்கும். 'ஒலிவ்' எண்ணெய்யை பொரிப்பதற்கு பாவிக்கலாமா எனத் தெரிந்தவர்கள் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

KATPAKAM_Gingell_4e4a0b61da524.jpg725-oel-sonnenblumenoel-kaltgepresst.jpg

நாங்கள் தோசை சுடும் போது, ஆனைகோட்டை நல்லெண்ணை பாவிப்போம்.

மற்றும் படி சமையலுக்கு, சூரியகாந்தி எண்ணெய்தான்...

தேங்காய் எண்ணையை, மருந்துக்கும் பாவிப்பதில்லை.

பலவருடங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்த போது.... சுத்தமான பசு நெய் ஒரு போத்தல் சித்தப்பா தந்தவர்.

கொஞ்சம் பாவித்தபடி... இன்னும் அப்படியே... இருக்குது.

பசு நெய்யை... குறிப்பிட்ட காலத்துக்குள், பாவிக்க வேண்டும் என்று வரைமுறை உண்டா? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

குத்து மதிப்பா, ஒரு பத்து வருஷம் இருக்குமா. தமிழ் சிறி?

மற்றது, பசுவின் 'மெடிக்கல் ரெகொர்ட்ஸ்' ஐப் பொறுத்தது!

எதற்கும், வீணாக்காமல், சாமிக்கு விளக்கெரிக்கப் பாவியுங்கள்!

போற வழிக்குப் புண்ணியமாவது, கிடைக்கும்! :D

ஓம்... புங்கையூரான்,

ஒன்பது வருசம் ஆச்சுது :) .

நெய் தந்த பசு, இப்ப இருக்குதோ... தெரியாது.

அதை, வைச்சு... "மெடிக்கல் ரிப்போட்" எடுக்கிறது கஸ்ரம்.

நீங்க சொன்ன.. மாதிரி, சாமிக்கு விளக்கு எரிக்கத்தான் சரி போலை இருக்கு.

ஹ்ம்ம்.... ஆசையாய் வைத்திருந்தோம்... பிரயோசனமில்லாமல் போய்விடும் போலுள்ளது.

ஓம்... புங்கையூரான்,

ஒன்பது வருசம் ஆச்சுது :) .

பொறுத்ததோட பொறுத்ததா இன்னும் கொஞ்சக் காலம் வைத்திருந்தீங்கள் எண்டால் 'Antics' கடைகளில் நல்ல விலைக்கு விற்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேவையானதொரு பதிவு. ஊரில் தேங்காய்த் துருவலை வறுத்து தேங்காய் எண்ணெய் எடுப்போம். வேறு எந்தவிதமான பொருட்களும் சேர்ப்பதில்லை.

நானும் இந்த தேங்காய் நல்லதா கேட்டதா என்ற ஆராய்ச்சி தொடங்கிய பின், தேங்காய் தொடர்பான உணவுகளை உற்கொள்வதைக் கூடியளவு தவிர்த்து வருகிறேன். தெரிந்தவர்கள் நல்லெண்ணெய் நல்லது என்று சொல்லி பொரித்துச் சாப்பிடுகிறார்கள். நான் வீட்டில் எண்ணெய் பாவிப்பதை அதிகம் தவிர்ப்பேன். இருந்து போட்டுதான் பொரிப்பது.

'ஒலிவ்' எண்ணையில் மீன் பொரிக்க நன்றாக இருக்கும். 'ஒலிவ்' எண்ணெய்யை பொரிப்பதற்கு பாவிக்கலாமா எனத் தெரிந்தவர்கள் எழுதவும்.

ஒலிவ் ஒயிலில் பொரிக்க கூடாதென்று சொல்வார்கள் ...பொரித்தால் இரு மடங்கு கொழுப்பென்று சொன்னார்கள் உண்மை,பொய் தெரிந்தவர்கள் சொல்லட்டும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிவ் ஒயிலில் பொரிக்க கூடாதென்று சொல்வார்கள் ...பொரித்தால் இரு மடங்கு கொழுப்பென்று சொன்னார்கள் உண்மை,பொய் தெரிந்தவர்கள் சொல்லட்டும் :unsure:

இதுக்குத்தான் நாலும் தெரிஞ்ச ஆக்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறவை.. :icon_idea:

அலிவ் இல் இரண்டு வகை இருக்கு, ஒன்று virgin , மற்றது Virgin அல்லாதது..

அவை இரண்டுக்கும் வித்தியாசம் பார்ந்தால் Virgin இல் உந்த .............எதோ ஒன்று இல்லை. அதனால் அதனுடைய கொதிநிலை குறைவு..(திரவம் ஆவியாக வரும் வெப்பநிலை) எனவே அதில் பெரியல், கரியல் செய்தால்...மீன் பெரிவதர்ற்கு முன் மீன், கருகி விடும். ஆனால் மற்றது அப்படி அல்ல. அதில் உந்த பொரியல் செய்யலாம். பிறகு வடை சுடலாமோ என்று கேக்க கூடாது, ஏனென்டால் மேரி அது செய்து பார்கவில்லை..பொன்னம்மாவுக்கு அலிவும் கிடைக்கவில்லை. இதே போலத்தான் நல்லெண்ணையும் தேங்காய் எண்ணையும். நல்லெண்ணெயில் முட்டை பெரிக்கலாம். கத்தரிக்காய் பெரிக்கலாம், வடை சுடலாமோ?

இந்த வகையில், திறமான பொருள்...கொஞ்சம் பட்டர் ---சுகாதார கதைகள் இருக்கபடாது- ஒரு கொஞ்சம் பட்டர் போட்டு விட்டு சிக்கன்/ உருளைக்கிழங்கு பெரித்து/வதக்கி பாருங்கள் கருகவே கருகாது, நல்ல சுவையாக இருக்கும்..ஏனெனில் பட்டர் இன் கொதிநிலை அதிகம், கருகாமல் நன்றாக அவிந்து வரும்..பக்கத்தில் ஒரு simvastatin ஐயும் கையில வைத்திருந்தால் ஒரு பாதுகாப்பு :):rolleyes:

  • தொடங்கியவர்

virgin எண்ணெய் எனும் பொது இரசாயன் பதார்த்தங்கள் எதுகும் பயன் படுத்தாது , எண்ணெய் தரும் விதையை குளிர் நிலையில் அழுத்தி பெறப்படுவது. உதாரணமாக செக்கில் எண்ணெய் எடுப்பதை கூறலாம்.

பெரும் தொழில் முறை எண்ணெய் பிரித்தெடுப்பில் கூட மின்சார இயந்திரங்களை பாவித்து அழுத்தி எண்ணெய் எடுக்கலாம். ஆனால் எண்ணெய் பிரித்தேடுப்பை அதிகரிக்க (hexane) போன்ற சேதன கரைப்பான்கள் பயன்படுத்துவார்கள். அத்துடன் எண்ணெய் எடுக்க முதல் விதைகளை வெப்பப்படுத்தி மேலதிக நீரை ஆவியக்குவர்கள்.

கனடாவில் அதிகம் பாவிக்கும் கனோலா எண்ணெய் பிரித்தெடுப்பு, விரும்பினால் பார்க்க : http://www.canolacou....org/meal3.aspx

தேங்காய் எண்ணெய் பலவருடங்களாக பிரசாரப்படுத்தியது போல் அவ்வளவு கெட்டதல்ல என சில ஆய்வுகள் சொல்கிறன.

கேட்டது என பிரச்சாரப்படுத்த முக்கிய கரணம்: அதிக அளவில் நிரம்பிய கொழுப்பமிலங்களை கொண்டது , எனவே நிரம்பிய கொழுப்பான மிருக கொழுப்பை போல இதய வருத்தம், கொலஸ்திரோல் போன்றவற்றுக்கு காரணம் ஆகலாம் என்பதே முக்கிய கரணம்.

ஆனால்

தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட ஆய்வுகள் ஐதரசன் ஏற்றம் செய்யப்பட்ட (மாஜரீன்) இலேயே பெரிய அளவில் செய்யபட்டுள்ளன. ஐதரசன் ஏற்றும் பொது trans-fatty acid உருவாகும் . எனவே ஆய்வில் கிடைத்த பாதகமான விளைவுகளுக்கு அது கூட காரணமாக இருக்கலாம்.

முக்கியமாக தேங்காய் எண்ணெயில் இருப்பது குறுகிய நீளம் உடைய கொழுப்பமிலங்கள் ( short chain fatty acids) . இவை உடலில் இலகுவாக சமிபாடடைந்து, உடலால் சக்தி தேவைக்காக இலகுவில் பாவிக்கப்பட கூடியவை. இதனால் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட சந்தர்ப்பம் குறைவு என சொல்லப்படுகிறது. அத்துடன் இலங்கை, பொலினேசிய நாடுகள், மற்றும் தேங்காய் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இப்போது போல் இல்லது, மக்கள் நவீன , processed உணவுகளை அதிமாக பாவிக்காது, தேங்காய் சார்ந்த உணவுகளை உண்ட பொது இதய நோய்கள் மிகவும் குறைவு என்றும் சொல்லபடுகிறது. மக்கள் தேங்காய் ஐ விட்டு, processed உணவுகளை அதிகம் உண்ண தொடங்க இதய நோய்களும் அதிகரித்தாக சொல்லபடுகிறது.

இதைப்பற்றி இந்த தலைப்பில் : http://www.yarl.com/...howtopic=104691

அதிகம் இருக்கிறது. மேலே சொன்னது அதன் சுருக்கம் மட்டுமே: பொறுமையாக அந்த திரியில் தேங்காய் பற்றி அறிய முடியும். சில விஞ்ஞான ஆய்வு கட்டுரைகள். சில அவற்றை அடியொற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகள்.

நல்லெண்ணெயை பற்றி சொன்னால் : அது அதிக அளவில் நிரம்பாத கொழுப்பமிலங்களை கொண்டிருக்கிறது. முக்கியமாக தனி நிரம்பலடையாத கொழுப்பமிலங்களும் , பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்களும் (mono and poly unsaturated fatty acids) சம அளவில் இருக்கிறது. நிரம்பாத கொழுப்பமிலங்கள் உடலுக்கு தேவை. அவை உடலில் கேட்ட கொலஸ்திரோல் அளவை குறைக்க உதவும்.

22211801.jpg

http://en.wikipedia....wiki/Sesame_oil

நல்லெண்ணெயில் மனித உடலால் தயாரிக்க முடியாத lenoleic or LA (18:2) அமிலம் மிக அதிக அளவில் இருக்கிறது. ஆனால் மனித உடலால் தயாரிக்க முடியாத இரண்டாவது கொழுப்பமிலமான Linolenic அமிலம் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது.

ஆனால் மனித உடலுக்கு lenoleic or LA (18:2) அமிலம், (நல்லெண்ணெயில் அதிகம் இருப்பது) சராசரியாக 17 கிராமும்

Linolenic அமிலம்: 1 .6 கிராமும் தேவை. (http://en.wikipedia....eference_Intake) நல்லெண்ணெயில் இந்த கொழுப்பமிலம் குறைவாக இருந்தாலும் ஏனைய உணவுகளில் இருந்தும் சிறிதளவு கிடைக்கலாம், எனவே உடலுக்கு தேவையான Linolenic அமிலம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது.

மிக முக்கியமான இன்னொரு விடயம் நல்லெண்ணெயில் இயற்கையிலேயே விற்றமின் ஈ (Vitamin E) இருக்கிறது, இது ஒரு antioxidant , உடலுக்கு அத்தியவசியமனதுடன் இரத்தத்தில் கொலஸ்திரோலை குறைப்பதில் பங்கெடுக்க கூடியது.

எனவே நல்லெண்ணெய் பாவிப்பது பலன் தரும். அத்துடன் நல்லெண்ணெய் அதிக இராசயன்கள் பாவிக்காது எள்ளில் இருந்து பிரித்தேடுக்கப்பட்டால் வேறும் பல உடலுக்கு நன்மைதரும் antioxidant களை கொண்டிருக்கலாம்.

சாதாரண நிறமுடைய நல்லெண்ணெய் (மஞ்சள் ) வெப்பத்தை தங்கும் வல்லமை உடையதால் , (புகை ஏற்படுத்த அதிக வெப்ப நிலை வேண்டும் high smoke point ) பொரிக்கவும் பாவிக்க முடியும்.

http://en.wikipedia....iki/Cooking_oil

மிகுதி பின்னர்.

விரிவான தகவலுக்கு நன்றிகள் குளக்கட்டான். மிகுதியையும் தொடருங்கள்

தமிழ் சிறி, பசு நெய்யில் தண்ணி கலந்து இல்லாவிடின் பல ஆண்டுகள் வைத்திருக்கலாம் என கேள்விப் பட்டுள்ளேன். Cheese உம் கன காலம் வைத்திருக்கலாமாம். சரியாகத் தெரியாது

என் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒருவர் 2 வருட nutrition course படித்து holistic nutrition ஆகியுள்ளார். எம் அலுவலகத்தில் மாதாந்தம் நடக்கும் Wellness committee கருத்தரங்கில் கலந்து கொண்டு அடிக்கடி உரையாற்றினார். அதில் அவர் சொன்ன விடயங்களில் முக்கியமானது இரசாயன முறையில் பதப்படுத்தப்படும், உருவாக்கப்படும் உணவுவகைகளை (Processed food) கூடியவரைக்கும் தவிர்க்கச் சொல்லி. இதில் முக்கியமானது இத்தகைய எண்ணெய் வகைகள் என்றார். அதுவும், மரக்கறி எண்ணெய் (vegetable oil), சூரியகாந்தி எண்ணெய், கனோலா எண்ணெய் போன்றவை மிக மோசமானவை என்றும், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை என்பன மிகவும் சிறந்தது என்றும் சொன்னார். தேங்காய் எண்ணெய் பற்றி மாறுபட்ட இரு கருத்துகள் நிலவுவதால், நான் நல்லெண்ணையையே பாவித்து வருகின்றேன்.

சின்ன வயதில் அம்மா, எள்ளை துவைத்து சர்க்கரை போட்டு குழைத்து உருளையாக தருவார். அதை சாப்பிட்டு விட்டு ஆட்டுப் பால் குடித்து வளர்ந்த உடம்பு என் உடம்பு. இன்று என் பிள்ளைகள் அதிகம் processed உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க என்னாலான அனைத்தையும் செய்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் குளிர் காலத்தில் எல்லா விதமான எண்ணெயையும் எடுத்து கொஞ்சம் கொஞ்சம் போத்தலில் விட்டு நல்ல குளிருக்குள் வைத்துப் பாருங்கள்.

உறையாமல் எது இருக்குதோ அதைப் பாவியுங்கள்.

சாதாரண நிறமுடைய நல்லெண்ணெய் (மஞ்சள் ) வெப்பத்தை தங்கும் வல்லமை உடையதால் , (புகை ஏற்படுத்த அதிக வெப்ப நிலை வேண்டும் high smoke point ) பொரிக்கவும் பாவிக்க முடியும்.

http://en.wikipedia....iki/Cooking_oil

மிகுதி பின்னர்.

இதில் ஒரு திருத்தம்

சாதாரண, செக்கு, அல்லது மின்னழுத்தி மூலம் பிரித்தெடுத்த நல்லெண்ணெயின் வெப்பம் தாங்கும் வல்லமை குறைந்தது. அதானால் விரைவில் புகைக்க தொடங்கும். எனவே deep fat frying செய்வதற்கு பகுதியாக சுத்திகரிக்கபட்ட (semi refined ) நல்லெண்ணெய் பாவிப்பது பொருத்தம். Semi refined நல்லெண்ணேயே high smoke point உடையது. ஆனால் shallow fat frying அதாவது முட்டை, கத்தரிக்காய் போறவற்றை பொரிப்பதற்கு சாதாரண, செக்கு, அல்லது மின்னழுத்தி மூலம் பிரித்தெடுத்த நல்லெண்ணெய் பொருத்தமானது.

அடுத்து வரும் குளிர் காலத்தில் எல்லா விதமான எண்ணெயையும் எடுத்து கொஞ்சம் கொஞ்சம் போத்தலில் விட்டு நல்ல குளிருக்குள் வைத்துப் பாருங்கள்.

உறையாமல் எது இருக்குதோ அதைப் பாவியுங்கள்.

சுத்தமான நல்லெண்ணெய் குளிரூட்டியில் வைத்தால் உறையாது. ஆனால் திருட்டு வியாபாரிகள் நல்லெண்ணெயில் கலப்படம் செய்தால் கண்டுபிடிக்க இலகு சோதனை குளிரூட்டியில் வைத்து பார்ப்பது.

ஒலிவ் ஒயிலில் பொரிக்க கூடாதென்று சொல்வார்கள் ...பொரித்தால் இரு மடங்கு கொழுப்பென்று சொன்னார்கள் உண்மை,பொய் தெரிந்தவர்கள் சொல்லட்டும் :unsure:

இதைத்தான் நானும் கேள்விப்பட்டேன். உறுதிசெய்ய முடியவில்லை. நான் தாளிப்பதற்கு 'வேர்ஜின் ஒலிவ்' எண்ணைதான் பாவிப்பேன். அதையும் நிறுத்த வேண்டுமோ தெரியாது.

ஒலிவ் எண்ணையை... சலாட்டுக்கு மேலே தெளித்து சாப்பிடலாம் என்றும்..

சமையலில் பொரிக்கவோ, தாழிக்கவோ கூடாது என்று எங்கோ... வாசித்த ஞாபகம்.

பொறுத்ததோட பொறுத்ததா இன்னும் கொஞ்சக் காலம் வைத்திருந்தீங்கள் எண்டால் 'Antics' கடைகளில் நல்ல விலைக்கு விற்கலாம். :lol:

:D :D

தமிழ் சிறி, பசு நெய்யில் தண்ணி கலந்து இல்லாவிடின் பல ஆண்டுகள் வைத்திருக்கலாம் என கேள்விப் பட்டுள்ளேன். Cheese உம் கன காலம் வைத்திருக்கலாமாம். சரியாகத் தெரியாது

------

உங்களை நம்பி, வாற வெள்ளிக்கிழமை பருப்புக்கு மேல்... கொஞ்ச நெய் ஊத்தி சாப்பிடலாம் என்று யோசிக்கின்றேன்.

நான் மண்டையை... போட்டால், நீங்க தான் பொறுப்பு. ஓகேயா... நிழலி. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்களை நம்பி, வாற வெள்ளிக்கிழமை பருப்புக்கு மேல்... கொஞ்ச நெய் ஊத்தி சாப்பிடலாம் என்று யோசிக்கின்றேன்.[/size]

[size=4]நான் மண்டையை... போட்டால், நீங்க தான் பொறுப்பு. ஓகேயா... நிழலி. [/size] :icon_idea:

,

[size=4]ஒரு புதுத்திரியில், விவாதம் தொடருமென நினைக்கிறேன்! :icon_mrgreen:[/size][size=4] [/size][size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

,

[size=4]ஒரு புதுத்திரியில், விவாதம் தொடருமென நினைக்கிறேன்! :icon_mrgreen:[/size]

"துயர் பகிர்வோம்" திரியா அது :icon_mrgreen::lol: ?

  • கருத்துக்கள உறவுகள்

"துயர் பகிர்வோம்" திரியா அது :icon_mrgreen::lol: ?

இல்லை, தமிழ் சிறி!

அப்படியெல்லாம் நினைப்பேனா?

'நெய்யை' நீண்ட காலம், வைத்திருப்பது சரியா? என்ற விவாதம் தான்! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.