Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலித் வாலிபருடன் காதல்: மகளை கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்த இஸ்லாமியர்////

யாருப்பா சொன்னது இஸ்லாமியர்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று ?

என்னமோ இந்து சமயத்தில் இருக்கின்ற ஜாதி கொடுமைகளால் தான் மதம் மாறுகின்றார்கள் என்று சொன்னவங்க எல்லாம் வரிசையா வா

 

அந்த.... தலித் வாலிபர், முதலில் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறிய பின்...

காதலித்து இருந்தால், அவரது மகளை கழுத்து நெரித்து கொன்றிருக்க மாட்டார்.

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் முசுலீமா என்பதைப் பொதுமக்கள் எப்படி அறியமுடியும்?. பழனியாண்டவரையும் கோமணம் இல்லாது பார்க்கமுடியாதே..!!  :o . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு விடுதலை புலிகள் அச்சுறுத்தல் நீங்கவில்லை: கோத்தபய ராஜபக்சே பிரச்சாரம்/////

இவங்களுக்கு புலி இருக்கும் போதும் அரசியல் செய்ய புலி தேவையா இருந்திச்சு இப்பொழுது புலிகளை இவர்கள் அழித்து விட்டதாக சொல்லி 5 வருடம் கழித்தும் அரசியல் செய்ய புலி தேவையா இருக்கு..... இப்பிடியே எம்புட்டு காலம் தான் புலி பூச்சாண்டி காட்டி அரசியலில் நீடிக்கும் திட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு விடுதலை புலிகள் அச்சுறுத்தல் நீங்கவில்லை: கோத்தபய ராஜபக்சே பிரச்சாரம்/////

இவங்களுக்கு புலி இருக்கும் போதும் அரசியல் செய்ய புலி தேவையா இருந்திச்சு இப்பொழுது புலிகளை இவர்கள் அழித்து விட்டதாக சொல்லி 5 வருடம் கழித்தும் அரசியல் செய்ய புலி தேவையா இருக்கு..... இப்பிடியே எம்புட்டு காலம் தான் புலி பூச்சாண்டி காட்டி அரசியலில் நீடிக்கும் திட்டம்?

 

 

புலிகளின் வலிமையை தமிழர்கள் உணர்ந்ததைவிட

எதிரி உணர்ந்துள்ளதையே இது காட்டுகிறது

இன்னம் பல யுகங்களுக்கு இது நிலைக்கும் என்றே தெரிகிறது

அந்தளவுக்கு புலிகளது தியாகங்கள் பெறுமதியும் ஆளுமையுமானவை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க விஜய் டிவி காரரே ........அது இது எது ல சிரிச்சா போச்சு டீமுக்கு ஒவ்வொரு வாரமும் நளாஸ் ஆப்பக்கடை வழங்கும் வவுச்சர தான் கொடுக்குறீங்க.....அவிங்க தினமும் ஆப்பம் மட்டும் தான் திங்கணுமா .....

‪#‎டவுட்டு‬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி எண்டு பேர சொன்னாலே கொஞ்சமாவது பயந்திட்டு திரிஞ்சாங்க இப்போ நம்ம

விஜய் அண்ணா படத்துக்கு புலின்னு பேரு வைச்சதால எவன்யா இனி புலிய பாத்து பயப்படுவான்? இனி புலின்னு சொன்னாலே காமடியா பாக்க போறானுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னது 7 ஆயிரம் வருஷம் முன்னாடியே இந்தியர்கள் விமானத்தை கண்டுபிடிச்சாங்களா?///////

இப்பிடிலாம் பெருமை பேசிக்கிட்டு என்ன பிரயோஜனம்? இன்னும் யுத்த விமானங்கள் உட்பட பல விமானங்கள் வாங்க பிரான்ஸ் , ரஷ்யா, இஸ்ரேல்,அமெரிக்கா போன்ற நாடுகளை தான் சார்ந்திருக்க வேண்டி இருக்கு அதையும் மீறி இந்தியாவில் தயாரித்தால் ஒன்றில் ஒழுங்கா

பறக்குதில்ல....இல்லது தொழில்நுட்பப கோளாறுகளால் விமானம் தயாரிக்கும் திட்டங்களையே கைவிட வேண்டி இருக்கு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்......

அதனால..... இனி .......,இனி.......

கைகட்டாம வேடிக்கை பாக்கலாம் என்று இருக்கிறன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய நண்பன் ஒருவனின் முகநூல் பக்கத்தில் கண்ணகி மதுரையை எரித்தது சரியா என்கின்ற ஒரு கேள்வி விவாதப்பொருளாகி போய்க்கொண்டிருக்கின்றது........பாண்டிய மன்னன் தவறு செய்தால் அவன் மட்டும் தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில் எப்பிடி கண்ணகி ஒட்டுமொத்த மதுரையையும் பழி வாங்கினாள்? என்ற கேள்வி அவருடைய கேள்வியாக இருக்கின்றது .......

-இங்கு கண்ணகி

-செல்வந்தரின் மகள்

-பல கனவுகளுடன் வாழ ஆரம்பிக்கின்றாள்

-மாதவி வந்து வாழ்க்கையை பிடுங்கிக்கொள்கிறாள்

-பொறுமை காக்கிறாள்

-செல்வம் போகின்றது

பொறுமை காக்கிறாள்

-கணவன் மீண்டும் திரும்பிவருகிறான்

வாழ்க்கை கிடைத்ததை எண்ணி மகிழ்கிறாள்

-உறவினர்கள் ,பிறந்த ஊர், அனைத்தையும் பிரிந்து ,கணவனே கதி என்று காடு மேடு ....நடந்து ...நடந்து ....நடந்து .....நடந்து ....நடந்து ...

வாழ வந்த இடத்தில் .....மொத்த வாழ்க்கையும் ...இல்லாமல் ஆக்கப்படும் போது

-அதற்க்கு காரணமானவர் ,அவரை சார்ந்தவர் ,என்று ...அனைத்தின்மீதும் கோபம் எழுவது ...இயல்பானதே .......அந்த கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாட்டின் விளைவாக அவள் மதுரையை எரித்திருக்கலாம் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TURKISH Airlines, the last remaining foreign carrier offering flights to Libya, said it is suspending all flights to the conflict-wracked country amid the worsening security situation.///////

எல்லா வெளிநாட்டு விமானங்களும் லிபியாவுக்கான தங்கள் சேவைகளை நிறுத்திய நிலையில் தற்பொழுது வரை சேவை வழங்கி கொண்டிருந்த துருக்கி ஏர்லைன்ஸ் தங்கள் சேவைகளையும் இனி லிபியாக்கு வழங்க போவதில்லை என்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உள்நாட்டு கலவரங்களும் காரணம் என்றும் அறிவித்திருக்கின்றது...........

கடாபியின் கீழ் எப்பிடி இருந்த லிபியா இன்று தினமொரு கலவரங்களால் அவதியுற்றுக்கொண்டிருக்கின்ற்றது.......... தற்பொழுதை ஆட்சியாளர்களால் கலவரக்காரர்களையும் மக்களையும் கட்டுபடுத்த முடியாமல் தினறிக்கொண்டிருக்கின்றார்கள்..........

சில நாடுகளுக்கு கடாபி போன்றவர்கள் பதவியில் இருப்பது அவசியம்..........

இன்றைய லிபியாவின் இந்த நிலைமைக்கு காரணம் பிரான்ஸ் ,அமெரிக்கா, பிரித்தானியா....... இந்த நாட்டின் ஆட்சியில் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் தேர்தல் செலவுகளுக்காக கடாபியிடம் கை நீட்டி காசுவாங்கி கடைசியில் அவருக்கே ஆப்படித்தவர்கள்...... அதுவும் குறிப்பா பிரான்ஸ் ஜனாதிபதியாக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”பிளைட் டாய்லெட்ல சீட் போடுங்க” – வித் அவுட்டில் விமானத்தில் போக வந்த சென்னை இளைஞர்////

ஹா ஹா டேய் எங்க இருந்திடா வர்றீங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இனியாவது மகிந்தாக்கு கை கொடுப்பாரா.... இல்லை வழமை போல் கையெடுத்து கும்பிட்டு நழுவுவாரா என்பது தான் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் காட்சியாகும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Melbourne இல் நடை பெற்ற ஆசிய கோப்பை கால்பந்து A பிரிவு முதலாட்டத்தில் Kuwait அணியை எதிர் கொண்ட Australia 4-1 கணக்கில் Kuwait அணியை தோற்கடித்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எம்புட்டு முன்னேறி இருந்தா 5000 ரூபாய்க்கு கூட தாள் அடிச்சு விடுறானுங்க இந்த ஆஸ்திரேலியா இருக்கே 100 டாலர்ஸ் க்கு மேல போகவே மாட்டேன்குறாங்க இப்போ சொல்லுங்களே யாரு முன்னேறிய நாடு........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எம்புட்டு முன்னேறி இருந்தா 5000 ரூபாய்க்கு கூட தாள் அடிச்சு விடுறானுங்க இந்த ஆஸ்திரேலியா இருக்கே 100 டாலர்ஸ் க்கு மேல போகவே மாட்டேன்குறாங்க இப்போ சொல்லுங்களே யாரு முன்னேறிய நாடு........

 

தம்பியர்  துருக்கி/கானா நாடுகளுக்கு இன்னும் போகேல்லை போலை....துருக்கியிலை ஆயிரம் அமெரிக்க டொலரை மாத்தினியளெண்டால் லொறியிலை போய்த்தான் ஏத்திக்கொண்டு வரோணுமாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் வருங்கால தலைவர் ஸ்டாலின் தான்: அன்பழகன் பேச்சு/////

அந்த வரும் காலம் எப்பண்ணே வரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவின் வருங்கால தலைவர் ஸ்டாலின் தான்: அன்பழகன் பேச்சு/////

அந்த வரும் காலம் எப்பண்ணே வரும்.......

 

சுண்டல் அவர்களின் ஆதங்கத்தைப் பார்த்தால் சுண்டலின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாமே தவிடுபொடியாகி விட்டதுபோல் தெரிகிறதே.... :(  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் லிங்கா படத்தால் நஷ்டம் வந்ததற்காக சீமானும் வேல்முருகனும் அந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிப்பது சரியா? அது தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் நடக்க வேண்டிய வியாபாரத்தில் இவர்கள் ஏன் தலையிடனும்?

சும்மா ரஜனியை எதிர்ப்பதாக கூறி தங்கள் தலையிலையே மண்ணை அள்ளி கொட்டிக்கொள்கின்றார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்பேசியை மாற்றிக் கொளவது போல் மின்சாரம்வழங்கும் நிறுவனத்தையும் மாற்றி கொள்ளலாம்-மோடிப்பேச்சு/////

மின்சாரத்த மாத்தலாம்னு சொன்ன மோடி சம்சாரத்தையும் மாத்திக்கலாம் எண்டு சொன்னா அடுத்த பிரதமரும் அவரு தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசாத் சாலி......

மகிந்தவால் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை எல்லாம் நிராகரித்து மற்றைய தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் மௌனமாக மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போதும் கூட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மகிந்தா ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகவும் மரண அச்சுறுத்தல்களை கூட பொருட்படுத்தாது தமிழ் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்தவர்..... ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா மாமாக்கு இம்புட்டு நாளும் ஜால்ரா போட்டிட்டிருந்த தினமலர் இப்ப அப்பிடியே அந்தர்பல்ட்டி அடிச்சு அவருக்கு எதிரா செய்தி போட்டிட்டு இப்போ மைத்திரி பக்கம் தாவ தயாராகிட்டு இருக்கு.......

ஆனா என்றைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா செய்திகள் போட்டது கிடையாது.... அம்புட்டு சிங்கள விசுவாசம்.....

ஹா ஹா போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும் நடு நிலைமையும்......

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா மாமாக்கு இம்புட்டு நாளும் ஜால்ரா போட்டிட்டிருந்த தினமலர் இப்ப அப்பிடியே அந்தர்பல்ட்டி அடிச்சு அவருக்கு எதிரா செய்தி போட்டிட்டு இப்போ மைத்திரி பக்கம் தாவ தயாராகிட்டு இருக்கு.......

ஆனா என்றைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா செய்திகள் போட்டது கிடையாது.... அம்புட்டு சிங்கள விசுவாசம்.....

ஹா ஹா போங்கடா நீங்களும் உங்க பத்திரிக்கை தர்மமும் நடு நிலைமையும்......

தினமலர் தமிழர்களுக்கு எதிரான ஊடகம். அதைத்தான் தமிழர்கள் விரும்பி வாங்கிப் படிப்பார்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லாலி பாப் சாப்பிட்டு விளாடிட்டு இருக்க வேண்டிய குழந்தைங்கள எல்லாம் கொண்டான்ந்து பாடுங்க எண்டா என்னத்தடா பாடும்.....

#சன் சிங்கர் 2015

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.