Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் அதன் விளைவுகள் பயங்கரமா இருந்தாலும் அவற்றிலும் சில காமடி இருக்கும்....அதுவும் நம்ம தமிழங்க கிட்ட இந்த காமடி உணர்வு சற்று கூடுதலா இருக்கும்.....இப்பிடி தான் பாருங்க இந்தியாக்கு போய் இருந்த போது பஸ்ல ஒரு இடத்திக்கு சுண்டல் போயிட்டு இருக்கான்....திடிர்னு முன் சீட்ல இருந்து ஒரு குரல்......

"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு

அதுக்கு கண்டக்டர்: சும்மா இருய்யா கண்ட இடத்தில விசில் அடிச்சா டிரைவர் என்ன திட்டுவாரு.....

அதுக்கு அவர்: யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தாய்யா......

இப்ப நினைச்சா இது காமடியா இருந்தாலும் சுண்டலுக்கு அந்த நேரம் எப்பிடி இருந்திருக்கும் நினைச்சு பாருங்கா......

அப்பிடியே இறங்கி ஆட்டோ எடுத்தவன் தான் பஸ்ஸ திரும்பி கூட பாக்கல அதுக்கப்புறம்....

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் ஒரு பெண்

இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்

வெவ்வேறு வயதுகளில்:

1ம் வகுப்பில்:

பெண்: "பென்சில் தருவியா..?"

பையன்: "மிஸ்கிட்ட சொல்லிடுவேன்..!"

5ம் வகுப்பில்:

பெண்: "பென்சில் தருவியா..?"

பையன்: "இந்தா..!"

10ம் வகுப்பில்:

பெண்: "பேனா இருந்தா கொடுக்க முடியுமா..?"

பையன்: "ஓ மை காட்... ப்ளாக் வேணுமா., ரெட் வேணுமா., ப்ளூ வேணுமா., க்ரீன் வேணுமா.?"

12ம் வகுப்பில்:

பெண்; (ஒன்றுமே கேட்கவில்லை)

பையன்: "2உன்னோட பென் சரியா எழுதலைனு நெனைக்கிறேன். இந்தா என்னோட பென்... இதை யூஸ் பண்ணிக்க..!"

யூனியில்:

பையன்: "புதுசா ஒரு பென் வாங்கினேன்... எழுதிப் பாத்துட்டுக் குடு...!".

"எப்படி இருந்த பயலை

இப்படி மாத்திட்டாளுக பாத்தீங்களா..?" :(

எல்லோருடைய சொந்த அனுபமும் இப்படித்தான் முடியுது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஷ் படிப்பில படு சுட்டி அதுவும் வரலாறுன்னா சொல்லி வேலையில....

வரலாற்று வகுப்பு....,,,ஆசிரியர் சுபேஷ் இடம் கேள்வி கேக்கிறார்....

கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார்.....சாஜகான் தாஜ்மகால் கட்டினார்.......

சுபேஷ் மனசுக்குள்ள ( யோவ் போர் அடிக்காம கேள்விய கேளுய்யா)

ஆசிரியர்: சோழ ராஜ என்ன கட்டினார்?

சுபேஷ்: வேஷ்டி சார் :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணாவும் தப்பிலி

அண்ணாவும் வெளில நிண்டு அரசியல் கதைச்சிட்டு இருந்திச்சினம் அப்ப accident ஆனா ஒரு லாரிய கயிறு கட்டி வேற ஒரு லாரி மூலம் கொண்டு போறாங்க......

அப்ப நம்ம தப்பிலி அண்ணா நந்தன் அண்ணாவ பாத்து கேக்குறார்.....

ஒரு கயிறு கொண்டு போக ரெண்டு லாரியா?

இந்த கேள்விக்கு அப்புறமும் நந்து அண்ணா அங்க நிண்டிருப்பார் எண்டு நினைகிறிங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சுண்டல் உங்களின் கற்பனை அபாரம் சூப்பரோ சூப்பர் தொடருங்கள் ....... :lol: :lol:[/size] :lol:

  • கருத்துக்கள உறவுகள்

-----

அப்ப நம்ம தப்பிலி அண்ணா நந்தன் அண்ணாவ பாத்து கேக்குறார்.....

ஒரு கயிறு கொண்டு போக ரெண்டு லாரியா?

இந்த கேள்விக்கு அப்புறமும் நந்து அண்ணா அங்க நிண்டிருப்பார் எண்டு நினைகிறிங்களா? :D

நல்லதொரு நகைச்சுவை, சுண்டல். தொடர்ந்து... கலாயுங்கள். :rolleyes::D

:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்
:) :)
:D :D :D :D :D :D :D

சுண்டல் - எனக்கொரு girl friend வேணுமடா டா டா டா .

சுபேஸ் - டேய் நீ திருந்தவே மாட்டியாடா?

சுண்டல் - மச்சி... யாருமே மாட்டுப்படலை டா , வாடா ரெண்டு பெரும் சேர்ந்து தேடலாம், ப்ளீஸ்...

சுபேஸ் - நோ சான்ஸ்.... நானா போய் படுகுழிக்குள் விழ நான் தயாரா இல்லை. :(

சுண்டல் - உனக்கு யார் தேட சொன்னா? எனக்கு தான் ரெண்டுபேரும் சேர்ந்து தேடலாம் எண்டு சொன்னன். :D

சுபேஸ் - என்ன இருந்தாலும் என் நண்பனுக்கொரு கவலை என்றால் நானும் சேர்ந்து தானே அழணும். அது தான் யோசிக்கிறன்.. :(

சுண்டல் - நான் அழும்போது சொல்லி அனுப்புறன், இப்ப நாயையும் அழைச்சுக்கிட்டு வா... :D

சுபேஸ் அண்ணா நாயை சங்கிலியில் பிடித்து இழுத்து வர...

சுண்டல் - என்ன இருந்தாலும் நீ மட்டும் பிரவுன் பொண்ணு வேணும்னு தேடலாம். நான் மட்டும் தேடக்கூடாதாக்கும்.

சுபேஸ் - டேய் அது சும்மா ரசிக்கிறதுக்கு தான். கட்டிக்கிறதுக்கு இல்லைடா..

சுண்டல் - ஹா... ஹா.... சும்மா சமாளிக்காதை மச்சி...... சரி சரி,,,, வாடா முயல் வேட்டைக்கு கிளம்புவம்...

சுபேஸ் - முயலுக்கா தாலி கட்டப்போறா? அப்ப உனக்கு பொண்ணே கிடைக்காதென்று முடிவே பண்ணிட்டியா? :o

இதை கேட்டதும் சுண்டல் அண்ணாக்கு வந்த கோபத்தில் சுபேஸ் அண்ணாவை அடிக்க துரத்த சுபேஸ் அண்ணா ஓட, தூரத்திலிருந்து இவர்கள் உரையாடலை ஒட்டுக்கேட்ட இசை அண்ணா தன்னை கண்டுட்டு தான் இவர்கள் நாயுடன் ஓடி வருகிறார்கள் என்று நினைத்து அப்பிடியே பக்கத்திலிருந்த வீட்டு மதிலை ஒரே தாவில் தாவி பூச்சாடியளையும் உடைச்சுக்கொண்டு விழுந்தார். :lol:

சுபேஸ் அண்ணாவும் அதற்குள் எங்கோ ஒளிந்து விட....

நீயாவது என்கூட வா என்று கோபத்துடன் நாயை பிடித்து இழுத்தபடி மீண்டும் "எனக்கொரு girlfriend வேணுமடா" என்ற பாடலை முணுமுணுத்த படி சுண்டல் அண்ணா செல்கிறார்.... :D

இது தான் சுண்டல் அண்ணா முணுமுணுத்த பாடல்.... :D

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D nice
:lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி இம்புட்டு நாளும் ஜோக்ஸ் படிசிங்கலாம்..... இனைக்கு சுண்டலின் பா கே ப ல நான் அண்மையில் படிச்சிருந்த அதில பிடிச்சிருந்த சில தகவல்கள் தர போறன்......

கண்ணதாசன், தன் 14 பிள்ளைகளையும் ஒரே ஸ்கூலில் தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960ல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு பிள்ளை ஒரு வருடம் பெயிலாகி விட்டான். அந்த வருடம் எல்லாருக்கும் 100 ரூபாய் கொடுத்தார். பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். மற்றவர்கள் எல்லாரும், "எப்படி அது சரியாகும்?' என்று கேட்டனர்.

சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும், அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மனநிலையில் இருப்பவர்களைத் தேற்றுவது கடினம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்' என்றார்.

என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ, தெரியவில்லை. ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்த பிள்ளை இன்று டாக்டராக இருக்கிறார்.

தேங்க்ஸ் டு அங்கு ராசு

சோ கள உறவுகளே உங்கள் வீட்டிலும் குழந்தைகள் புத்திசாலியாகவும் சில குழந்தைகள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் விளையாட்டு தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் ஆர்வத்தோடு இருக்கலாம் நீங்கள் ஒரு பிள்ளைக்கு பரிசு கொடுத்து மற்ற பிள்ளைக்கு தண்டனை கொடுக்காம இந்த வழிமுறையை கையாண்டு பாருங்களேன்

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளே பாம்பு கடிச்சா அது விஷப்பாம்பாக இருந்தா மனுஷன் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கு உடனடி சிகிச்சை எடுக்கா விட்டா பட் பாம்பு கடிச்சா பன்றி மட்டும் இறப்பதே இல்லையாம் என் தெரியுமா?

பாம்புகள், விஷப் பற்களை உட்பக்கம் வாயில், மடக்கி வைத்திருக்கும். கடிக்கும் போது, அவைகளை வெளிப்பக்கம் நீட்டி, எதிரியின் உடம்பில் குத்தும். பற்கள் உடலில் நுழைந்தவுடனே விஷ சுரப்பிகள் சுரக்கும். அப்போது விஷம், நாளத்தின் வழியாக பற்களின் துவாரத்திலிருந்து, எதிரியின் பக்கம் பாய்ந்து விடும். இஞ்ஜெக்ஷன் கொடுக்கும் ஊசியில் உள்ள துவாரம் போலவே, ஒவ்வொரு பற்களிலும் விஷம் வெளியேறுவதற்கு துவாரம் உண்டு.

பாம்பின் விஷம், ரத்தத்தில் கலந்தால்தான், உயிருக்கு ஆபத்து. பன்றியை பாம்பு கடித்தால், விஷம் உடனே அதன் ரத்தத்தில் கலப்பதில்லை. ஏனெனில், பன்றிக்கு உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். கொழுப்பில், அந்த விஷம் தங்கி, சக்தியில்லாமல் போய் விடும். இக்காரணத்தால் தான் பன்றிகள், பாம்புக் கடியினால் இறப்பதில்லை.

எனக்கும் கொழுப்பு அதிகமா இருக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மு, நாயக்கர் (தெலுங்கு) வம்சத்தைச் சேர்ந்தவர். "தொட்டிய நாயக்கர்' எனப்படும் இவர்கள், "தொட்டி நாயக்கர்' என்றும் மருவி வழங்குவர். இன்றும் இவ்வினத்தார் சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை முதலிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த, "கம்பிலி' எனும் பகுதியிலிருந்து, இவர்கள் தமிழகம் வந்தமையால், கம்பல நாயக்கர் என்றும், "கம்பளத்து நாயக்கர்' என்றும் அழைக்கப்படுவர்.

இப்படி வந்தவர்களில் ஒருவன் பொம்மு. 16 வயது இளைஞன். மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள, சாலிக்குளம் என்ற இடத்தில், இவர்கள் குடும்பம் வாழ்ந்தது.

ஒருநாள் இரவு, கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த திருடர்களை, பொம்மு ஒருவனாகவே எதிர்த்து நின்று தாக்கி, வென்று, பொருட்களை மீட்டான். அப்போது சாலிக்குளத்தருகே, வீரபாண்டியபுரத்தை ஆண்டு வந்த, ஜகவீர பாண்டியன் என்ற மன்னன், அச்செய்தியைக் கேள்வியுற்று, பொம்முவை தன் அவைக்கு அழைத்து, அவன் வீரத்தைப் பாராட்டி, பொம்மு கெட்டிக்காரன் என்ற பொருள் பட, "கெட்டி பொம்மு' என்ற பட்டத்தை வழங்கினான். கெட்டி பொம்மு மருவி, "கட்டபொம்மு' ஆயிற்று.

ஜகவீர பாண்டியன், அக்காலத்தில் தனக்குப் பகைவராயிருந்த விஜயராமன், உக்கிரசிங்கன் என்ற இரண்டு அரசர்களை வென்று வருமாறு, கட்டபொம்முவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான்.

இந்தக் கன்னிப் போரை வெற்றிகரமாக முடித்து வந்த கட்டபொம்முவுக்கு, மன்னன், "வீர பாண்டியன்' என்ற தன் பெயரின் ஒரு பகுதியைப் பட்டம் போல அளித்து, சிறப்பித்ததோடு, அவனைத் தம்முடனேயே இருக்கச் செய்தான். தனக்குப் பின், தன் அரசை ஆள்வதற்கு ஆண் மகவு இன்மையால், மன்னன், வீரபாண்டிய கட்டபொம்முவையே அரசுக்கு உரிமையாக்கி விட்டு காலமானான்.

இந்த ஆதி கட்ட பொம்மு, இவ்வாறாகத் தன் அரச வம்சத்தை, கி.பி.1148 முதல் தோற்றுவித்தார். அரசுரிமை பெற்றதும், தன் இனத்தவர் பலரை, ஆந்திர நாட்டிலிருந்து அழைத்து, தென்நாட்டில் குடியேறச் செய்தார். இப்போது ஒட்டப் பிடாரம் என வழங்கும் ஊரின் அருகே, தகுதியான தோட்டம் ஒன்றில் கோட்டை அமைத்து, அதைத் தன், தலைநகராக்கிக் கொண்டார்.

இவ்வாறு அமைத்த நகருக்கு, தம் முன்னோர்களில் ஒருவனாகிய, "பாஞ்சாலன்' என்பவனது நினைவாக, "பாஞ்சாலங்குறிச்சி' (குறிச்சி என்றால் வாழும் இடம் என்று பொருள்.) என்று பெயரிட்டார். ஆதி கட்டபொம்முவுக்குப் பின், பட்டம் ஏற்ற அனைவரும், "பொம்மு' என்ற மரபுப் பெயரைச் சூட்டி, 700 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

— ஆர்.சி.சம்பத் எழுதிய, "வீரபாண்டிய கட்டபொம்மு' நூலில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

பேபின்ட கதை தான் நல்லா இருந்திச்சு....அதுக்கு பிறக்கு சொன்ன கதை சுத்தமாய் பிடிக்க்க வில்லை சுன்டல் மச்சான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் வெற்றி இலக்கை நோக்கி வேகமாய் முன்னேறிக்கொண்டு இருந்ததை அமெரிக்காவால், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது ஜப்பானின் வேகத்தை முடக்க வேண்டும் என்று நினைத்து, அமெரிக்கா அவசரமாக அணுகுண்டை கையில் எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் (1945) அமெரிக்காவிடம் மட்டுமே அணுகுண்டு இருந்தது.

அமெரிக்கா அணுகுண்டை முதலில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தான் போட நினைத்தது. ஆனால், அமெரிக்க தளபதிகள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்ட நகரம், "ஹிரோஷிமா'

"ஹிரோஷிமா' தேர்ந்தெடுக்கப் பட்டதற்குக் காரணம் அது ஒரு துறைமுக நகரம். ஜப்பானின் போர்க் கப்பல்கள் அங்கிருந்துதான் புறப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டன. ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவாக இருந்தாலும், ஹிரோஷிமாவில்தான் மக்கள் தொகை அதிகம். உயிர் சேதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஹிரோஷிமா தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், போர் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அதைப் பற்றி ஆலோசனை செய்யவும், "ஹிரோஷிமா' ஒரு முக்கிய ராணுவ கேந்திரமாய் இருந்தது.

1945 ஆகஸ்டு 6ம் தேதி காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெர்ரி-பீ என்ற அமெரிக்க ராணுவத் தளபதி, விமானத்தில் அணு குண்டை எடுத்துப் போய் 30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து வீச, அது 40 விநாடிகளில் கீழே விழுந்து, சத்தம் இல்லாமல் வெடித்தது. வெளிப்பட்ட வெப்பம் 4 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு. இந்த வெப்பத்தில் இரண்டு லட்சம் பேர் வெந்து செத்தனர். இரண்டு கிலோ மீட்டர் சதுர பரப்பளவுக்கு சாம்பல் பறந்தது.

Thanks to ankurasu

இந்த அணுகுண்டு, விழுந்தபோது... அயலில் உள்ள மக்களுக்கு.. இரண்டு நாளாய்.. என்ன நடந்தது.. என்று தெரியவில்லை.

குளத்தில்... மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஆற்று நீரே.... 60 பாகை வெப்பம் என்று உணர்ந்தார்கள்.

சும்மா.. இருந்த கோலாப் போத்தில். உருகிவிட்டது, இப்படி எத்தனையோ...

இருந்தும்...

இந்தியாவும், யப்பானும்... எம்மை அழித்தை.. நான்... வாழ் நாழில் என்றும்... மறவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் அண்ணா பல லட்சக்கணக்கான மக்களை சீனாவில் கொன்று குவித்தது இந்த Japan அந்த அணுகுண்டு மட்டும் போட்டிருக்கா விட்டால் ஜப்பானுடையா ஆளுகையின் கீழ் இந்த உலகம் வந்திருக்கும்..... பார்பதற்கு மென்மையானவர்களாக இருந்தாலும் ஜப்னியார்கள் செய்யாத கொடுமைகளே இல்லை.... அவர்கள் சிறைப்பட்ட போர் கைதிகளை சிறைக்கூடங்களில் உயோரோடு வைத்து செய்யாத ஆராய்சிகளே இல்லை கைகளை வேட்டி கால்களை வெட்டி எத்தினை நாள் உயிர் வாழ்கின்றார்கள் என்றெல்லாம் பாத்திருக்கின்றார்கள் இன்று தான் அடங்க்கி போய் இருக்கின்றர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.