Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

சரிதான் வெளியில் போகும் வழிகள் எத்தனை? ஒன்றில் காவல் இருந்து பார்க்கலாமே யாரவாது கனவான்கள் Show time முடிய வெளியே போகிறார்களா என்று. அப்போ கடைக்கு காசு கொடுக்கத் தேவை இல்லை. :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என்மீது விழுந்தது

.

.

எனக்கு பயங்கர சந்தோசம்

.

.

.

வண்டி துடைக்கதுணி கிடைத்து விட்டதுஎன்று

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?"

"கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? "

"கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்."

"கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். "

"அப்போ பின்னாடி."

" அட அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை."

:(

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்துகள் ஏன் ஏற்படுகின்றன என்பதன் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன் என்றான் என் நண்பன் !

என்ன என்று ஆவலுடன் கேட்டேன் .

விவாகம்தான்  என்றான் அவன் . :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹஹஹஹா..... :D :d :D

டீச்சர்:முதல் மாசம் ஜனவரி !
ரெண்டாவது மாசம் பெப்ரவரி !
பத்தாவது மாசம் என்ன? 
ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர் 
 

திறமான திரி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே

வர மாட்டேங்குது..!

-

எதை வச்சு சொல்றே?

-

பூரிக்கட்டையை இரும்புல வாங்கிட்டு வந்திருக்காருன்னா

பாரேன்...!

எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே

வர மாட்டேங்குது..!

-

எதை வச்சு சொல்றே?

-

பூரிக்கட்டையை இரும்புல வாங்கிட்டு வந்திருக்காருன்னா

பாரேன்...!

 

பூரி சரியாக தட்டுப்பட்டால் இந்த நேரம் பூரி சுட்டு முடிந்திருக்குமே என்று கவலைப்படுகிறார் போலும்.

 

பூரியை சரியாகத் தட்டினால் நேரத்திற்கே சுடவும் வேணும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..

"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"

"சரி மொதல்ல bad news சொல்லு"

"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"

"good news என்னடா?"

"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்"

# இனிமே நல்லா வெயிட் தூக்கி பழகணும் ;-)

:(:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண பாடசாலைகளுக்கான மெய்வல்லுனா் போட்டியில் பதக்கம் பெற்ற மகாஜனா மைந்தர்கள்

1.அனித்தா 17 வயது ஈட்டி எறிதல் 1ம் இடம்

17 வயது கோலுன்றிப்பாய்தல் 1ம் இடம் 2.கலைவானி 17 வயது தட்டெறிதல் 1ம் இடம்

3.திலகஸன் 17 வயது கோலுன்றிப்பாய்தல் 1ம் இடம்

4.ஜனந்தன் 19வயது 400m தடைதாண்டல் 1ம் இடம்

19வயது 110m தடைதாண்டல் 1ம் இடம்

5.தரன்யா 15 வயது குன்டு பொடல் 2ம் இடம்

6.சுவிஸ்சாந் 17 வயது தட்டெறிதல் 2ம் இடம்

7.லக்ஸ்மன் 17 வயது கோலுன்றிப்பாய்தல் 2ம் இடம்

8.டன்சிகா 19வயது 100m தடைதாண்டல் 2ம் இடம்

19 வயது கோலுன்றிப்பாய்தல் 3ம் இடம்

9.அன்ரனிபிரசாந் 19வயது 200m 2ம் இடம்

10.டினுசன் 21 வயது கோலுன்றிப்பாய்தல் 2ம் இடம்

11.மேரி 19 வயது கோலுன்றிப்பாய்தல் 3ம் இடம்

4x 100m 19 வயது ஆண்கள் 1ம் இடம்

4x 400m 19 வயது ஆண் கள் 2ம் இடம்

வடமாகாண பாடசாலைகளுக்கான மெய்வல்லுனா் போட்டியில் மகாஜனாக் கல்லுாரி 7 முதலாம் இடங்களையும் 7 இரண்டாம் இடங்களையும் 2 மூன்றாம் இடங்களையும் மொத்தமாக 16 பதக்கங்களை பெற்றுள்ளது

வடமாகாண பாடசாலைகளுக்கான மெய்வல்லுனா் போட்டியில் மகாஜனா மாணவா்கள் இதுவரை 5 சாதனைகளை நிலைநாட்டியுள்ளனா்

கோலுன்றிப்பாய்தல் 17 வயது ஆண். பெண்

ஈட்டி எறிதல் 17 வயது பெண்

400m தடைதாண்டல் 19 வயது ஆண்

4x 100m 19 வயது ஆண்

மகாஜனன்களுக்கு வாழ்த்துக்கள்!

 

சுவிஸ்சாந், டன்சிகா, டினுசன். திலகஸன் ---- தமிழா நீ வைப்பது தமிழ் பெயரா????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.."

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.."

புலியாக  இருப்பது என்பது வேறு

புலியாக பிறப்பது என்பது வேறு ராசா :icon_idea:  

 

இதற்கான விடை தெரிந்தால்

புலி  பலிதான்

எலி  எலி தான்.... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பஞ்சாபி, ஒரு மலையாளி, ஒரு ஆந்திராகாரு அப்புறம் நம்ம மிஸ்டர் X இவங்க நாலு பேரும் ஒரே கம்பெனில வேலை பாக்குறாங்க. நாலு பேரும் ஒண்ணா உக்காந்துதான் சாப்பிடுவாங்க. அதுல பாத்தா.............

பஞ்சாபி தினமும் சப்பாத்தி தான் லஞ்சுக்கு...............

மலையாளி தினமும் நேந்திரம் பழமும் புட்டும் தான் லஞ்சுக்கு...............

ஆந்திராகாரு தினமும் கொங்குரா ரைஸ் தான் லஞ்சுக்கு...............

நம்ம மிஸ்டர் Xக்கு எப்பவும் பருப்பு சாதம் தான் லஞ்சுக்கு.................

இது அவங்களுக்கு ரொம்ப வேதனையாப் போச்சு. என்னடா நாம தினமும் கஷ்டப்பட்டு வேலை பாக்குறோம். ஆனா தினுசு தினுசா கொடுக்காம தினமும் ஒரே மாதிரியே சாப்பாடு கொடுக்கறாங்களேன்னு ஒரே வருத்தம். ஒரு நாள் லஞ்ச் டைம்ல எல்லொரும் இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கும் போது இனி நாளைக்கும் இதே சாப்பாடு இருந்தா நாம சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

அடுத்த நாள் லஞ்ச் அவர்ல டிபன் பாக் ஸ் திறந்து பாத்தா திரும்பவும் எல்லாருக்கும் அதே சாப்பாடு. அதனால முன்னாடியே முடிவு பண்ணின மாதிரி காரணத்தை ஒரு லெட்டர்ல எழுதி வச்சுட்டு எல்லொரும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. அவங்க நாலு பேரும் ஒண்ணா சூசைட் பண்ணிக்கிடதுனால எல்லாரோட பாடியையும் ஒரே இடத்துல வச்சுருக்கு. அவங்க அவங்க மனைவி எல்லாம் அந்த லெட்டர படிச்சுட்டு ஒரே அழுகை. என்கிட்ட சொல்லி இருந்தா நான் வித விதமா சமைச்சுக் கொடுத்துருப்பேனே அப்படின்னு எல்லாம் அழுகை. ஆனா நம்ம மிஸ்டர் X-ட மனைவி மட்டும் வெறிச்சுப் போய் உக்காந்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஒருத்தர் போய் அவர் மனைவிகிட்ட கேட்டாங்க.........

"ஏங்க இப்படி இருக்கிங்க? ஒரு குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்கேன்னு" கேட்டார்.

அதுக்கு மிஸ்டர் X-ட மனைவி சொன்னாராம்...............

.

.

.

.

.

.

.

.

.

.

.

"இவர் எதுக்கு இந்த விஷயத்துக்காக சூசைட் பண்ணிக்கிட்டாருனு புரியல. ஏன்னா தினமும் சமைக்கிறதே அவருதானே".

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழகமாகினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை ,சீராகுங்கள்

கணவன் தலை முடியை சீராகிணன்

சில மாதங்களுக்கு பிறகு

.

.

.

.

.

.

.

.

மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறீடிங்க

கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பா

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது..

..தூங்கப்போரியா ?

[இல்லை தூக்குல தொங்கப்போறேன்]

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப்

பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?

[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல்

ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால்

பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?

[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட

தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது.....

குளிச்சியா?

[ இல்லை கும்மி அடிச்சேன் ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும்

போது... மேலே மாடிக்கி போறியா?

[ இல்லை அமெரிக்கா போறேன் ]

6. அழகான

பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும்

போது..... இது என்ன பூவா?

[ இல்லை புளியம்பழம் ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில்

நிக்கிம்போது,

அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?

[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது,

நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?

[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்....

மச்சி எழுதிட்டிருக்கியா?

[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு

இருக்கேன் ]

10. தடுக்கி தரையில்

விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன

மச்சி விழுந்துட்டியா?

[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

:(:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எரிச்சல் தந்த சில........

 

கல்யாணவீட்டில் கை  கொடுத்துவிட்டு

கல்யாணவீட்டுக்கு வந்தீர்களா??

 

சந்திக்கவேண்டி  வந்தவர் வராதது கண்டு

 தொலைபேசி அழைப்பு எடுத்தால்

எங்கயப்பா  நிற்கிறாய்

ரெயினில்  அண்ணை

நான் யாழ் தேவியிலையோ.......

 

இரவு மனைவியுடன் ஒன்றாக இருக்கும்போது

தொலைபேசி  எடுத்து

படுத்தாச்சோ............. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hhahaha சூப்பர் அத விட கொடுமை என்னானா சாப்பாட்டு கடையில பாத்திட்டு என்ன சாப்பிடவா ..... பள்ளிக்கூட uniform ஓட பாத்திட்டு என்ன படிக்கவா எண்டு கேப்பாங்க பாருங்க.... :D

சுண்டல் அண்ணா ஒவ்வொருவராய் கலாய்க்கும் உங்களின் நகைச்சுவை நிறைந்த கருத்துக்களை நீண்ட நாட்களாக காணவில்லை . நான் உங்களின் நகைச்சுவை கருத்துக்களுக்கு நீண்ட நாள் வாசகியும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.... அண்ணாவா? :rolleyes:

 

அதுக்குள்ளேயா? :D

 

காலம் தான், எவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி மீனு ஒண்ணுதானா வந்து தூண்டில கவ்வுது விட்டுறாத  :D

[quote name="புங்கையூரன்"

சுண்டல்.... அண்ணாவா? :rolleyes:

அதுக்குள்ளேயா? :D

காலம் தான், எவ்வளவு வேகமாக நகர்ந்து செல்கின்றது?

புங்கையூரன் அண்ணா இதில் என்ன சந்தேகம் . யாழ் களத்தில் எல்லோரும் அண்ணா , தம்பி ,அக்கா , தங்கை உறவுகள் தானே .அண்ணாவ அண்ணானு சொல்லாம எப்படி அழைப்பது . எனக்கு தமிழ்ல தெரிந்தது இது தானுங்க .

நந்தன் அண்ணா மீனுக்கு நீந்த கத்துக்குடுக்க வேண்டிய அவசியமில்லைங்க . எல்லா வலையிலயும் எல்லா மீனும் மாட்டாது .கவலை வேண்டாம் .ha ha ...

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அண்ணா இதில் என்ன சந்தேகம் . யாழ் களத்தில் எல்லோரும் அண்ணா , தம்பி ,அக்கா , தங்கை உறவுகள் தானே .அண்ணாவ அண்ணானு சொல்லாம எப்படி அழைப்பது . எனக்கு தமிழ்ல தெரிந்தது இது தானுங்க .

நம்ம சுண்டல், வாய்க்குள்ள விரலை வைச்சாக்கூட கடிக்கத் தெரியாத, சின்னப் பையன்! அதனால், அவரை இடைக்கிடை சீண்டிப் பார்ப்பதுண்டு!

 

பயலுக்குக் கோபமே வராது என்றால் பாருங்களேன்! :D

 

நீங்கள் உங்களுக்கு விருப்பமான முறையில் அழையுங்கள், அன்புத் தங்கையே! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.