Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதுக்கு இனிமையான பல மெலோடி பாடல்களை 1980 களில் தந்த ஜென்சியை இந்த வார சன் சிங்கர் இல் அழைத்து கௌரவ படுத்தி இருந்தார்கள்.... நன்றி sunsinger :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியர்:ம் எங்கே நீ சொல்லு பார்க்கலாம் , முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம் !

மாணவன் :  நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சேர் , நீங்க மட்டும் அடிக்கிறதால்  அடிமுட்டாள் சேர் !! :lol:

பேச்சாளர் : காதலிக்கும்,கள்ளக் காதலிக்கும் வித்தியாசம் உண்டு !

ஒருவர் :    ஆமாம்;   பெத்தவங்களை விட்டுட்டு ஓடிவந்தாள் அவள் காதலி . பெத்ததுகளை விட்டிட்டு ஓடிப்போனால் அவ கள்ளக் காதலி !! :lol:

“தமிழ் மொழியை விட அழகான மொழி எது?”
“உங்க பொண்ணு தேன் மொழி சார்!

“அமைச்சரே! நமது நாட்டின் ‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”

“போதையில்தான் மன்னா!”

 “மன்னா, எதிரி நாட்டு மன்னனிடமிருந்து போர்ச் செய்தி வந்துள்ளது… என்ன பதில் அனுப்புவது…?”

“நீங்கள் அனுப்பிய ஓலை எமக்கு கிடைக்கவில்லை, என்று பதில் ஓலை அனுப்பிவிடலாமா…?”

 “டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க…?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க…”

“தலைவர் ஒரு துறவி மாதிரின்னு எப்படி சொல்றே?”

“ஆமா… நேர்மை, நாணயம், மனசாட்சி எல்லாத்தையும் துறந்துட்டாரே”

 “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே…?”

“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே…!” :lol: (அவர் சாதாரண சினிமா ரசிகன் அல்ல. கலை அழகை ரசிக்கும் சீமான். பாடிப்போட்டு வீட்டை போக அங்கையும் கச்சேரிதான்)

“நான் லவ் பண்றது தெரிஞ்சா, அப்பா என் கையில சூடு வைப்பார்!”
“இப்படி கூட செய்வாங்களா?”
“இங்க பாருங்க… ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றி ருந்தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

:D:( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தம்பதியினர் தம் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். எல்லோரும் சென்றபின் கணவன் மனைவியிடம் சொன்னார் , அன்பே , நமது குடும்பம் அளவோடு இருந்தால் நல்லது . நமக்கு ஒரு குழந்தை போதும், உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் வாசெக்டமி செய்யலாம் என்றிருக்கிறேன் !

மனைவி: உங்கள் இஷ்டம்போல் நீங்கள் இப்போது வாசெக்டமி செய்து கொள்ளுங்கள், நான் இன்னும் இரு குழந்தை பெற்றுவிட்டு ஹிஸ்டரெக்டமி  செய்து கொள்கிறேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன்

.தனி அறை எதுவும் இல்லை. இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர்.

வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான்.

அடுத்த பத்தாவது நிமிடம் அவன் அலறியடித்துக் கொண்டு கீழே வந்தான்.

‘அந்தப் பெண் செத்தல்லவா போய்விட்டாள் என்றான்.

“அது எனக்கு தெரியும். உனக்கு எப்படி அது தெரிய வந்தது? :(:D :d

ஒரு தம்பதியினர் தம் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். எல்லோரும் சென்றபின் கணவன் மனைவியிடம் சொன்னார் , அன்பே , நமது குடும்பம் அளவோடு இருந்தால் நல்லது . நமக்கு ஒரு குழந்தை போதும், உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் வாசெக்டமி செய்யலாம் என்றிருக்கிறேன் !

மனைவி: உங்கள் இஷ்டம்போல் நீங்கள் இப்போது வாசெக்டமி செய்து கொள்ளுங்கள், நான் இன்னும் இரு குழந்தை பெற்றுவிட்டு ஹிஸ்டரெக்டமி  செய்து கொள்கிறேன் .

நல்ல பொறுப்பான மனைவியாக இருக்கிறா. சிலது உடனே "நீ அதுக்கு போனீ என்டால் நானும் போப்போறன், என்ன உனக்குத்தான் அது எல்லாம் தெரியும் என்ட நினைப்போ" என்டு போட்டா போட்டிக்கு நிக்குங்கள். கணவன் குழப்பி அடிச்சாலும், குடும்பதுக்கு, ஒன்று தவறினால், இன்னும் ஒன்று இரண்டு வேண்டும் என்று உணர்ந்து வைத்திருக்கிறா. :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தவங்களை விட்டுட்டு

ஓடி வந்தால் அவள் காதலி...!

பெத்ததையெல்லாம் விட்டுட்டு

ஓடி வந்தால் அவள் கள்ளக்காதலி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,

''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.

:( :( :D

மச்சி மீனு ஒண்ணுதானா வந்து தூண்டில கவ்வுது விட்டுறாத  :D

அட இங்கு இவ்வளவும் நடக்குதா? அது சரி  சுறாவா இல்லை சூடையா?

ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனையைக் கண்டாலே ஆகவில்லை.அதை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.ஒரு நாள் அப்பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தான். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தான். அன்றும் பூனை அவனுக்கு முன்னாள் வந்து மாடியில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.வெறுப்படைந்த அவன் அடுத்தநாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தான்.சிறிது நேரம் கழித்து கணவனிடமிருந்து மனைவிக்கு போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?''ஆம் என்று மனைவி சொல்ல கணவன் சொன்னான்,

''போனை பூனையிடம் கொடு.எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை.

:( :( :D

அட நண்டனுக்கு நேர்ந்த கெதியைப் பாருங்கோவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது எல்லாம் தமிழர்களின் மீட்பர்கள் என்று யார் வந்தாலும் யாரை சொன்னாலும் நம்ப முடிவதில்லை........

Maybe தமிழர்களின் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்ற போராட்டங்களின் ஏமாற்றங்களாக இருக்கலாம்.....

மீட்பர்கள் என்றும் புத்தி ஜீவிகள் என்றும் மேதைகள் என்றும் சொல்லப்பட்டவர்கள் எல்லாம் எம்மாதிரி சென்றதாலும் இருக்கலாம்......

சேர் பொன் ராமநாதனில் இருந்து அருணாசலம் , நீலன் திருச்செல்வம்....., கதிர்காமர் என்று தமிழர் தரப்பின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கின்றது......

இடையில் தெரிந்த ஒரு நம்பிக்கை கீற்றும் 2009ஆம் ஆண்டுடன்.....சிதறிப்போனது.........

மீண்டும் தமிழர் போராட்டம் பழைய இடத்தில் இருந்து ஆரம்பமாகின்றது......

பார்போம்.... மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதற்கினங்க பொறுத்திருந்து பார்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. எல்லா ஆம்பளைகளுக்கும் கல்யாணமான பின்னாடிதான் தெரியுது...இந்த "லவ் செண்டிமெண்ட்" எல்லாம் எவ்வளவு கேனத்தனம்'னு.

2.யார் கூட இருந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...

யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது பசங்க மனசு...

3.”காதலிக்க யாரும் கற்றுக்கொள்வதில்லை!.. காதலித்த பின்புதான் கற்றுக்கொள்கிறார்கள்.... தக்காளி இனி காதலிக்கவே கூடாது ...

4.உலகத்துலேயே நல்ல அம்மா நம்மகிட்ட இருக்காங்க.. ஆனா அழகான காதலி மட்டும் அடுத்தவன் கிட்ட தான்இருக்கு..

5.கை நெறைய பணமும் எப்பவும் சுத்தி பொண்ணுகளும் இருக்க பணக்காரனா இருக்கணும்னு அவசியம் இல்ல பஸ் கண்டக்டரா இருந்தா போதும்.. :(:D :d

  • கருத்துக்கள உறவுகள்

1. எல்லா ஆம்பளைகளுக்கும் கல்யாணமான பின்னாடிதான் தெரியுது...இந்த "லவ் செண்டிமெண்ட்" எல்லாம் எவ்வளவு கேனத்தனம்'னு.

2.யார் கூட இருந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...

யார் கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது பசங்க மனசு...

3.”காதலிக்க யாரும் கற்றுக்கொள்வதில்லை!.. காதலித்த பின்புதான் கற்றுக்கொள்கிறார்கள்.... தக்காளி இனி காதலிக்கவே கூடாது ...

4.உலகத்துலேயே நல்ல அம்மா நம்மகிட்ட இருக்காங்க.. ஆனா அழகான காதலி மட்டும் அடுத்தவன் கிட்ட தான்இருக்கு..

5.கை நெறைய பணமும் எப்பவும் சுத்தி பொண்ணுகளும் இருக்க பணக்காரனா இருக்கணும்னு அவசியம் இல்ல பஸ் கண்டக்டரா இருந்தா போதும்.. :(:D :D

5- .கை நெறைய பணமும் எப்பவும் சுத்தி பொண்ணுகளும் இருக்க பணக்காரனா இருக்கணும்னு அவசியம் இல்ல   யாழில் சுண்டலா  இருந்தா போதும்.. :D  :D  :D 

4.உலகத்துலேயே நல்ல அம்மா நம்மகிட்ட இருக்காங்க..

மனிதனுக்கு இறைவன் கொடுத்திருப்பவை இப்படிதான்

ஆனா அழகான காதலி மட்டும் அடுத்தவன் கிட்ட தான்இருக்கு..

ஆனால் அதற்கும் மேல் மனிதன் பேற்றுக்கொள்ள ஆசைப்படுவது இப்படித்தான்

கண்ணிருந்தும் குருடாக வாழட்டும் என்று சபிக்கப்பட்டிருக்கும் மனித வாழ்க்கை....

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதற்கினங்க பொறுத்திருந்து பார்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தீர்வுக்கு புலிகளே தடை.....

புலிகளின் செயற்பாடுகளால் தான் தமிழர்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்விற்கும் சர்வதேசம் செவி சாய்க்காமல் இருக்கு என்று புலம்பியவர்களுக்கு......

இன்று புலிகளும் இல்லை தடையும் இல்லை....

ஆனால் 5 வருடங்கள் ஆகி விட்டது இவர்கள் என்ன தீர்வை பெற்றுகொடுத்தார்கள்?

இருந்த நிலங்களையும் பிரதேசங்களையும் சிங்களவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது தான் இவர்கள் இந்த காலபகுதியில் செய்தது.....

இப்போது தடை புலம்பெயர் தமிழர் தான் தடையாக இருக்கினம். இல்லாவிடின் தமிழர்களுக்கு எப்பவோ உரிமை கிடைச்சிருக்கும்  :o 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தீர்வுக்கு புலிகளே தடை.....

புலிகளின் செயற்பாடுகளால் தான் தமிழர்களின் விடுதலைக்கும் அரசியல் தீர்விற்கும் சர்வதேசம் செவி சாய்க்காமல் இருக்கு என்று புலம்பியவர்களுக்கு......

இன்று புலிகளும் இல்லை தடையும் இல்லை....

ஆனால் 5 வருடங்கள் ஆகி விட்டது இவர்கள் என்ன தீர்வை பெற்றுகொடுத்தார்கள்?

இருந்த நிலங்களையும் பிரதேசங்களையும் சிங்களவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது தான் இவர்கள் இந்த காலபகுதியில் செய்தது.....

100 % உண்மை, 
நானும் உங்களின் இந்த கூற்றை ஏற்று கொள்கின்றேன். 
 
இருந்தாலும் சும்மா ஒரு பேச்சுக்கு அவர்கள் சொன்னதை இவ்வளவு சீரியஸ்சாக எடுக்கக்கூட்டது சுண்டல்  :D   
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த கூட்டமைப்பின்ர முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் ஐயா மேல சரியான சந்தேகம். இவர் எங்க கட்சி தாவி ஓடிவிடுவாரோ எண்டு... ஏனெண்டா இவற்ர ஒரு மகனை அமைச்சர் வாருதேவ நாணயக்கார மருமகளுக்கும், இன்னொரு மகனை சிங்கள பிரபல அப்பியாச கொப்பி வெளியிடும் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கு கலியாணம் கட்டி கொடுத்திருக்கிறாராம். அதைவிட கிட்டடியில இந்தியாவின்ர தினமலர் பேப்பர்ல ஒரு பேட்டியும் குடுத்திருக்கிறார். அதுல நான் சிங்களவனுக்கு எதிரானவன் அல்ல. அரசாங்கத்தோட இணைஞ்சு செயற்படுவன் எண்டு சொல்லிப்போட்டார். பாப்பம் இந்த மனுசன் என்னத்த புடுங்க போகுது எண்டு???

- சின்ன கவுண்டர் -

J A F F N A T O D A Y

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம்கேட்டது.

அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல்

அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய்

அமைதியானது.

மாணவன் ஒருவன் சொன்னான் ஐயா,

நாய் நிறுத்தி விட்டது 'நீங்கள்' ஆரம்பியுங்கள்...

சுண்டல் எப்படி உங்களால் சலிக்காமல் பலதும் எழுத முடிகிறது நகைச்சுவையான திரி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த கூட்டமைப்பின்ர முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் ஐயா மேல சரியான சந்தேகம். இவர் எங்க கட்சி தாவி ஓடிவிடுவாரோ எண்டு... ஏனெண்டா இவற்ர ஒரு மகனை அமைச்சர் வாருதேவ நாணயக்கார மருமகளுக்கும், இன்னொரு மகனை சிங்கள பிரபல அப்பியாச கொப்பி வெளியிடும் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கு கலியாணம் கட்டி கொடுத்திருக்கிறாராம். அதைவிட கிட்டடியில இந்தியாவின்ர தினமலர் பேப்பர்ல ஒரு பேட்டியும் குடுத்திருக்கிறார். அதுல நான் சிங்களவனுக்கு எதிரானவன் அல்ல. அரசாங்கத்தோட இணைஞ்சு செயற்படுவன் எண்டு சொல்லிப்போட்டார். பாப்பம் இந்த மனுசன் என்னத்த புடுங்க போகுது எண்டு???

- சின்ன கவுண்டர் -

J A F F N A T O D A Y

அவர் எதையாச்சும் புடுங்குராரோ இல்லையோ ......., தமிழ் சிங்கள கொலாப்பிறேசனில் உருவான பேரக்குழந்தைகளை தூக்கி கொஞ்சுவார்  :D
 
பாவம் ஏமாளித் தமிழன் 

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம்கேட்டது.

அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல்

அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய்

அமைதியானது.

மாணவன் ஒருவன் சொன்னான் ஐயா,

நாய் நிறுத்தி விட்டது 'நீங்கள்' ஆரம்பியுங்கள்...

அப்ப ... , எப்போது அவரிடம் கல்வி கற்ற குட்டி நாய் தொடங்கப்போகுது  :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எதையாச்சும் புடுங்குராரோ இல்லையோ ......., தமிழ் சிங்கள கொலாப்பிறேசனில் உருவான பேரக்குழந்தைகளை தூக்கி கொஞ்சுவார்  :D
 
பாவம் ஏமாளித் தமிழன் 

தமிழர்கள்

தேர்தல்   காலங்களின் தமது வலு அறிந்து

தேவையறிந்து

தாயக  இலட்சியம் சார்ந்து

இதுவரை  சரியான  முடிவுகளையே  எடுத்துள்ளனர்.

இன்றைய  நிலையில் தமிழரின் தேவை  இது.

பொறுப்புடன் விமர்சிப்போம்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் வாலிக்கும் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் இருவரும் அன்போடு பழகிய நாட்கள் நிறைய உண்டு. புரட்சித்தலைவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்த நேரம், தமிழகத்தில் திரும்புகிற திசையில் எல்லாம் ஒரு பாடல்தான் ஒலித்தது. அது..? ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல். ஒளிவிளக்கு படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை எழுதியவர் வாலி.

இந்த பாடலும் தமிழக மக்களின் பிரார்த்தனையும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை மீண்டும் இந்த மண்ணுக்கு உயிரோடு கொண்டு வந்து சேர்த்தது. அதற்கப்புறம் எம்ஜிஆரை சந்திக்க அழைக்கப்படுகிறார் வாலி.

அந்த சந்திப்பின் போது திருமதி ஜானகி அம்மையார் இந்த பாடலை குறிப்பிட்டு சொன்னாராம். என் கணவர் பிழைச்சது என் தாலி பாக்கியம் மட்டுமில்ல. அது இந்த வாலி பாக்கியத்தாலும்தான்!

----------------------------------------------------------------------------------------------------

இன்னொரு சம்பவம். இராம நாராயணன் இயக்கிய துர்கா திரைப்படம் வெளிவந்த சில தினங்களிலேயே தைப்பூசம் என்ற படத்தை துவங்கினார் அவர். பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாலிக்கு பாடலின் சுச்சுவேஷனை சொன்னார் இராம.நாராயணன்.

நல்ல பாம்பு ஒன்று ஒரு கடிதத்தை எடுத்து வருகிறது. அதில் மனைவி கர்ப்பமாக இருக்கிற தகவல் எழுதப்பட்டிருக்கிறது. அதை படிக்கிற ஹீரோ சந்தோஷப்படுகிறார். இந்த இடத்தில் ஒரு பாட்டு வேணும்ணே என்றார்.

அந்த நேரத்தில் சென்னை நகர விநியோகஸ்தர் நாகராஜன் கதவை தட்டிவிட்டு உள்ளே வருகிறார். வந்தவர் இராம.நாராயணனிடம் 'சார்... துர்கா படம் செம ஹிட்டு' என்கிறார். அவ்வளவுதான். 'பல்லவியை எழுதிக்கங்க' என்று பேச ஆரம்பிக்கிறார் வாலி.

அண்ணே அண்ணே

அன்பு அண்ணே

நாகராஜனே...

நல்ல செய்தி

கொண்டு வந்த

நல்ல அண்ணனே...

----------------------------------------------------------------------------------------------------

ஒரு முறை வாலியிடம் கேட்டார்களாம். வாலின்னு பேரு வச்சுருக்கீங்க. அப்படின்னா நீங்க பெரிய பலசாலியாக அல்லவா இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் எதிராளியின் பலத்தை பாதி ஈர்த்துக் கொள்கிற சக்தி பெற்றவரல்லவா வாலி?

இதற்கு கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் வாலி. 'நான் சந்தித்தவர்கள் யாரும் பயில்வான் இல்லையே!'

வாலி அப்படி அடக்கமாக சொல்லிக் கொண்டாலும் இலக்கிய உலகின் எழுத்துலகின் பலசாலி எங்கள் வாலிதான். இப்போதும்... எப்போதும்!

----------------------------------------------

சூரிய சந்திரன், தமிழ் அரசு அண்ணா , விசு அண்ணா ஆகியோரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் ...:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் என் யாழ் கள உறவுகளே,

சுண்டலின் பாத்தது கேட்டது படித்தது என்ற இந்த திரி தொடங்கப்பட்டு ஒருவருடங்களும் சில நாட்களும் ஆகின்றன..... 19/07/2012........

உங்களின் அமோக ஆதரவுடன் இந்த திரி கிட்டத்தட்ட 23000 தடவைகளுக்கு மேலாக பார்க்கப்பட்டு இருப்பதை நீங்கள் இந்த திரியையும் வந்து படிகின்றீர்கள் என்பதனை சொல்லி இருகின்றது......

நான் பார்த்தவற்றை கேட்டவற்றை படித்தவற்றை பகிர்ந்து கொள்ளும் அதே நேரம் என்னுடைய சுய எழுத்துகளும் அவப்போது இந்த திரியில் இடம்பெற்று இருகின்றது ..... இவைகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கின்றதோ இல்லையோ என்னை நீங்கள் உறசாகபடுத்த தவறுவதில்லை......

யாழ் களத்தின் இனிய பொழுதுகள் பகுதி என்பது பலத்த போட்டி நிறைந்தது.... அந்த பகுதியில் தொடர்ந்தும் நீடித்து நிலைப்பதற்கு காரணம் நீங்கள் தான்.

நன்றிகள் உறவுகளே....

யாழ் களத்தின் உலகெல்லாம் இருக்க கூடிய வாசகர்கள் இதையும் படிகின்றார்கள் என்பது எனக்கு பெருமையே.....

இப்பிடி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்த யாழ் கள நிர்வாகத்தினருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.