Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி : என்ன நண்டு ஜி உங்க வாயால ஒரு அழகான கவிதை கேட்டு ரொம்ப நாளாச்சு ஒண்ட எடுத்து விடுங்களன் .....

நண்டு ஜி:....

சரி நீ ஆசைப்பட்டு கேட்டிட்டே இந்தா பிடி வைச்சுக்கோ......

அடடா அடடா அண்ணாமலை

அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்லை

போகப் போக ஜவுளிக்கடை

போய்ப் பாத்தா இட்லிக் கடை

இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்

பத்துக்ககாசு வாழப்பழம் வாழுக்கி விழுந்துச்சாம்

சுண்டல் ஜி: எங்கடா அந்த கல்லு இங்க தானே இருந்திச்சு......

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நண்டு ஜி பாடசாலையில படிக்கும் போது அவரிட்ட கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில்கள்.....

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...

...

2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?

பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?

பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?

பதில்: இன்னொரு பாதி?

5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?

பதில்: கல் ஈரமாகி விடும்.

6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?

பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?

பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?

பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: திருமணம் தான்.

10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: தேர்வு தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் உலக திரை அரங்குகளில் புத்தம் புதிய திகில் தமிழ் திரைக்காவியம்

"eurostar "

லண்டன் இல் இருந்து பிரான்ஸ் செல்லும் போது தனக்கு ஏற்ப்பட்ட திக் திக் திகில் அனுபவங்களை பக் பக் என்று பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு படமாக்கி இருக்கின்றார் பிரபல இயக்குனர் மெசோ அவர்கள்.....

இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரயிலில் கச்சான் விக்கும் பாத்திரத்தில் உங்கள் நகைச்சுவை மன்னன் லண்டன் நண்டு ஜி....

ரயிலின் பக்கத்து seat பார்வதமாக கனடாவின் நகைச்சுவை ராணி அலை மகள்

மற்றும் முக்கிய வேடத்தில் பிரான்ஸ் இன் கோமு என்கின்ற கோமகன்.....

இவர்களுடன் இன்னும் பல கலைஞர்கள் நடிக்கும்

euro star

வெகு விரைவில் உலக திரை அரங்குகளில் புத்தம் புதிய திகில் தமிழ் திரைக்காவியம்

"eurostar "

லண்டன் இல் இருந்து பிரான்ஸ் செல்லும் போது தனக்கு ஏற்ப்பட்ட திக் திக் திகில் அனுபவங்களை பக் பக் என்று பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு படமாக்கி இருக்கின்றார் பிரபல இயக்குனர் மெசோ அவர்கள்.....

இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரயிலில் கச்சான் விக்கும் பாத்திரத்தில் உங்கள் நகைச்சுவை மன்னன் லண்டன் நண்டு ஜி....

ரயிலின் பக்கத்து seat பார்வதமாக கனடாவின் நகைச்சுவை ராணி அலை மகள்

மற்றும் முக்கிய வேடத்தில் பிரான்ஸ் இன் கோமு என்கின்ற கோமகன்.....

இவர்களுடன் இன்னும் பல கலைஞர்கள் நடிக்கும்

euro star

 

 

அடபாவி!!

எங்கடா அந்த கல்லு இங்க தானே இருந்திச்சு...... 

:lol:

  • கருத்துக்கள உறவுகள்
பெப்ரவரி 21 -> சர்வதேச தாய்மொழி தினம்

தமிழ்மொழி பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களில் சிலவும், தமிழறிஞர் சிலரின் கருத்துக்களும் வருமாறு…!

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்...

எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்! - பெரியபுராணம்.

நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்! – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?
– திருவிளையாடற் புராணம்

கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்? - மதுரைக் கலம்பகம்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். - தமிழ்விடு தூது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ். - தண்டியலங்காரம்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணீயம்

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் - புறநானூறு

ஆடல் பாடல் இசையே தமிழே - சிலப்பதிகாரம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்! - பாரதியார் பாடல்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! – பாவேந்தர் பாடல்கள்

தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும்… தமிழ் வடக்கே போய் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறியது. அந்த ஆரியத்திலே ஒருபகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒருமொழி பேசிய ஒருதொகுதி ஆரியர் இந்தியாவிற்கு வந்தனர். - தேவநேயப்பாவாணர்

தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும். – பி.டி. சீனிவாசஅய்யங்கார்

இங்கிருந்து (பழந் தமிழகத்திலிருந்து) போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள். – இராமச்சந்திரதீட்சிதர்.
 
 
படித்ததில் பிடித்தது....சுட்ட இடம் சொல்ல மாட்டேனே...
 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் உலக திரை அரங்குகளில் புத்தம் புதிய திகில் தமிழ் திரைக்காவியம்

"eurostar "

லண்டன் இல் இருந்து பிரான்ஸ் செல்லும் போது தனக்கு ஏற்ப்பட்ட திக் திக் திகில் அனுபவங்களை பக் பக் என்று பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு படமாக்கி இருக்கின்றார் பிரபல இயக்குனர் மெசோ அவர்கள்.....

இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரயிலில் கச்சான் விக்கும் பாத்திரத்தில் உங்கள் நகைச்சுவை மன்னன் லண்டன் நண்டு ஜி....

ரயிலின் பக்கத்து seat பார்வதமாக கனடாவின் நகைச்சுவை ராணி அலை மகள்

மற்றும் முக்கிய வேடத்தில் பிரான்ஸ் இன் கோமு என்கின்ற கோமகன்.....

இவர்களுடன் இன்னும் பல கலைஞர்கள் நடிக்கும்

euro star

 

 

அப்பாடா

என்னுடைய  பெயர் இல்லை

தப்பிட்டன்...

நன்றி    ராசா..... :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.

கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க

"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.

கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,

மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..!".

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின் தத்தக்க பித்தக்க #2014

மச்சி சுண்டு இந்த பொண்ணுங்க இருக்காங்களே பொண்ணுங்க .... இவளுங்க அழகா தெரியனும் எண்டா ஒண்டு அவளுங்க make up போடணும்...... இல்லது நாம 3 பெக் போடணும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அத்தே ஞானசார தேரரின் மகளை மடக்கிய சுண்டல்  டூயட் பாடுகிறார்?  :huh:

 

அத்தேக்கு பிறந்தவளே.. ஆளாகி நின்றவளே..  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்;
 
        இன்டைக்கு செத்தால் நாளைக்குப் பால்
        நடுவில எதற்கு இன்னொரு ஆள் :rolleyes:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் தாங்கள் வெளியில் விடுதலை ஆகி வரும் வரை அறிக்கைகளோ பேட்டிகளோ பத்திரிகைகளுக்கு கொடுக்காமல் இருப்பது தான் அவர்களின் விடுதலைக்காக உழைக்க கூடியவர்களுக்கு அவர்கள் செய்யும் கைமாறாக இருக்கும் மாறாக ஒட்டு மொத்த தமிழினமும் எங்களுக்கு பின்னால் இருகின்றது போன்ற சீண்டி பாக்கும் கருத்துக்கள் மத்தியில் இருப்பவர்களை இன்னும் ஆத்திரம் அடையவே செய்யும் ஆகவே வெளியில் வரும் வரை அமைதி காத்திட சம்மந்தப்பட்டவர்கள் ஆலோசனை வழங்கிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?
இவன்: 49
அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?
இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.
அவள்: அப்ப மானை?
இவன்: யானைய எடுத்துட்டுதான்.
அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு மிருகம் மட்டும் போகல, எது?
இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.
அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி ஈஸியா கடந்தாள்?
இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.
அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள். ஏன்?
இவன்: ஏன், தெரியலையே…
அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.

நீங்க முடியல்லன்னு சொல்றது காதுல விழுது..
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kanav_zps3ff58a10.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்

சுண்டல்: அப்போ இனி இலங்கையில இருந்து வார பொண்ணுங்க கூட கடலை போடா முடியா.....

மச்சான் வைச்சிட்டாரு மகிந்தா ஆப்பு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நல்ல அழகான நிகழ்ச்சி தொகுப்பாளினிங்க எண்டா அது சன் டிவி ல தான் ஆனா இப்போ அது ஆன்டிங்க வேலை செய்யும் தொலைக்காட்சியா மாறிடிச்சு .... அர்ச்சனா போன்றவர்களுக்கு எல்லாம் சன் டிவி VSR கொடுத்து அனுப்பலாமே..... புதிய தலைமுறை தொலைக்காட்சியை பார்த்து suntv பாடம் படிக்கட்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியா விடையத்தில் ரஷ்யா அமெரிக்கா க்கு போக்கு காட்ட உக்ரைன் விஷயத்தில் அமெரிக்கா ரஷ்யா க்கு போக்கு காட்டுது.....

இது எப்புடி

இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

சிரியா விடையத்தில் ரஷ்யா அமெரிக்கா க்கு போக்கு காட்ட உக்ரைன் விஷயத்தில் அமெரிக்கா ரஷ்யா க்கு போக்கு காட்டுது.....

இது எப்புடி

இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

 

சிரிய விவகாரத்தில் ஒபாமா முழு சறுக்கலை சந்திக்க நேர்ந்தது அமெரிக்க காங்கிரசால். எல்லாவற்றையும் ஒட்டு பார்க்கும் இந்த நாடுகளுக்கு ஒபாமா மேலே போக முடியாது என்பது நன்றாக தெரியும். அதனால் அவரின் பேச்சை பெட்டை நாய் குலைப்பது அள்வுக்கு தன்னும் மதிக்க மாட்டார்கள். இவர் பாரசிய குடாவுக்கு விமான தாங்கியை அனுப்பிவிட்டு ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால் ஈரானும் இவரின் கடலோரங்களுக்கு தன் கப்பல் ஒன்றை அனுப்பியது. கிழண்டிப்போன கடிக்காத நாயை கண்டால் குழந்தை கூட கல்லை தூக்கி எறியும். தவறுவிட்டது புஸ். காங்கிரசியால் முடக்கப்படுவது ஒபாமா.

 

இருந்தாலும் கையும் கணக்கும் சரி. இவருக்கு தனே இவர் பதவிக்கு வந்தவுடன் நோர்வே பாரம்பரியங்களை தூக்கி எறிந்துவிட்டு அசரமாக நோபல் பரிசு கொடுத்தது. அதனால் அவர் சண்டைக்கு போகாமல் விடையங்களை கையாள தெரிந்து கொள்ளட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Super

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா வில் இனி அகதி அந்தஸ்த்து கோருபவர்களை கம்போடியாவில் வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ஆஸ்திரேலியா அரசு நடாத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து கம்போடியா அரசு இணக்கம் தெரிவித்து இருக்கின்றது.......

புதிதாக பொறுப்பெடுத்து இருக்கும் டோனி அபோட் தலைமையிலான அரசு கட்டுகடங்காமல் வந்து கொண்டிருந்த அகதிகளின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபடுத்த தொடங்கி தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இந்த

விடையத்தில் நிறைவேற்றி விட்டதாகவே சொல்லலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் face book இருந்தாலும் நமது யாழ் சில மணி நேரம் வேலை செய்ய வில்லை என்றாலும் எதையோ இழந்த மாதிரி ஒரு எண்ணம்.... அந்தளவிற்கு யாழ் எம்மில் ஒருவனாக எமக்கு உலகம் பூரா பல உறவுகளை தந்த உறவுப்பாலமாக .... எங்களுடை எழுத்துக்களின் ஆசானாக இன்றும் எங்களை தமிழோடு இணைத்து வைத்திருக்கும் ஒருவனாக இருந்து இருக்கின்றான் இந்த யாழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு எடுத்தாலும் ஆண்கள் பெண்களை

அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் எனக்

கூறும் தாய்மார்களே முதலில் ஒன்று

புரிந்து கொள்ளுங்கள்.

சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.

ஆக இதுல எதையுமே பெண் கண்டு பிடிக்கல.

ஏன்னா...

கஷ்டப்படர ஒருத்தன்தான் தன் வேலையை

சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்.

ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளை ஆணாதிக்க ஜென்மம்னு சொல்லுவாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா 40 தொகுதிக்கும் அறிவிச்சு இருக்கிறத பாத்தா 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ம தி மு க விற்கு ஆப்படிச்சத போல இந்த முறை கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஆப்படிக்க போறா போல இருக்கு....

ஒண்டில் கொடுக்கிறத வாங்கிக்கணும் இல்லது பேசாம இருக்கணும் என்ற இரண்டு தெரிவுகள் இப்போ கம்யூனிஸ்ட் பக்கம்......ஆனாலும் கிட்டத்தட்ட அ தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்ப்படும் தா பாண்டியன் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் தலைவரா இருக்கும் மட்டும் தோழர்களுக்கு எதையும் தாங்கும் இதயம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..சொன்னா நம்ப மாட்டீங்க.. இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..

எலிக்கு பூனையக் கண்டா பயம்..

பூனைக்கு நாயக் கண்டா பயம்..

நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..

மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..

அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..

இப்ப நம்பிறீங்களா...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..சொன்னா நம்ப மாட்டீங்க.. இங்க பாருங்க.

கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..

எலிக்கு பூனையக் கண்டா பயம்..

பூனைக்கு நாயக் கண்டா பயம்..

நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..

மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..

அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..

இப்ப நம்பிறீங்களா...?

-----------------------------------

பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாட ஆசை - ஸ்ரீதேவி ''

அப்போ கட்டி வைக்கிறது

‪#‎கல்யாணத்த‬

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம காதல விட நண்பனோட காதலுக்கு ஹெல்ப் பண்ண போயி நாயா பேயா உழைச்சா...... பொண்ணோட அப்பன் நமக்கு தார பேர் தான்

‪#‎உருப்படாத‬ ஜென்மங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.